"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 135
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 135 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?"
புத்தர் என்பது அனைத்துலக மக்களாலும் மரியாதை செய்யப்படும், கருணையும், அன்பும் நிறைந்த சிறந்த முனிவர் ஆகும். 29 வயதில் இளம் மனைவியையும், புதிதாக பிறந்த மகனையும் விட்டுவிட்டு அரச வாழவைத் துறந்தவர். வாழ்க்கையின் துன்பங்களைப் பார்த்து அதற்கான விடியலைத் தேடி புறப்பட்டவர். இவரைப் பற்றிய இந்த உயர்ந்த பார்வைக்கு முற்றிலும் முரணாக, இலங்கையின் புராண நூல்களான தீபவம்சம் (Dipavamsa) மகாவம்சம் (Mahavamsa) மற்றும் இரசவலிய புத்தரை இதற்கு மாறாக வர்ணிக்கின்றன. இந்த நூல்கள், புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் உருவமற்ற, மனிதரல்லாத இயக்கர்கள் (Yaksha) மனித மாமிசத்தை உண்ணும் கொடூரமான, கோபக் குணமும், வடிவமற்ற பிசாசுகள் [Pisacas], அரக்கர்கள் அல்லது அசுரர்கள் [Rakkhasas] போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட மனிதரல்லாத உருவங்கள் அல்லது உயிரினங்கள் வாழ்ந்ததாகக் கூறுகின்றன. ஆனால் இவர்கள் எல்லோரும் இந்நாட்டின் மூலப் பழங் குடியினர் [original inhabitants of Lanka] என்பதே உண்மை. இவர்கள் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம், அவர்களை "மனிதர்கள் அல்ல" எனக் கூறி பாரம்பரிய நிலங்களை கைப்பற்றும் முயற்சியாக இது இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
தீபவம்சம் 1.51 : புத்தர் இலங்கைக்கு மூன்று முறை பறந்து வந்தார் என்றும், ஒருமுறை அங்கே கூடியிருந்த இயக்கர்களின் கூட்டத்தினர் சம்புத்தர் அங்கே நிற்பதைக் கண்டார்கள் என்றும், ஆனால் அவர் புத்தர் என்று அவர்கள் நினைக்கவில்லை; அவரை வேறொரு இயக்கர் என்று நினைத்தார்கள் என்றும் கூறுகிறது. அதனால்த்தான் "இவர் நம்மவர்" என்று நினைத்தனர். இது இயக்கர்களும் புத்தரும் மனித வடிவில் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது. ஆனால், பிறகு புத்தர் அவர்களை பயமுறுத்த பலத்த மழை, குளிர் காற்று, கடுமையான வெப்பம் மற்றும் இருள் போன்றவற்றை ஏற்படுத்தினார். அன்பினதும் கருணையினதும் மொத்த வடிவான புத்தர், மேலே கூறியவாறு, இலங்கை நாட்டின் சொந்த மக்களை, பழங்க்குடியினரை அடக்குமுறையில் பயமுறுத்தி விரட்டும் செயல்கள் செய்தார் என்பது அவரின் இயல்புக்கு முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது?
தீபவம்சம் 1.78: கோடையில் தாகம் கொண்டவர்கள் நதியை நோக்கி ஓடுவது போல, இயக்கர்கள் 'கிரிதீபத்திற்கு' [Giridipa] ஓடினார்கள்; அவர்கள் அனைவரும் ஒருபோதும் திரும்பி வராமல் அங்கே அதில் நுழைந்தனர்; முனிவர் (பின்னர்) தீவை அதன் முந்தைய இடத்திற்கு மீட்டெடுத்தார் என்கிறது. இது புத்தரின் அகிம்சை (nonviolence) மற்றும் கருணை என்ற தத்துவங்களுக்கு மீண்டும் இது எதிரானது ஆகும். இப்படியான கதைகள், புத்தரை அதிமானுட ஆற்றல்கள் கொண்டவர் போலவும், பிறரை வன்முறையால் விரட்டும் பயங்கரவாதி போலவும் காட்டுகின்றன. இது புத்தரின் உண்மையான உருவத்துக்கு கேடாக உள்ளது. இதனால் இலங்கை வரலாற்று புராணங்களை எழுதிய பௌத்த பிக்குகள், புத்தருக்கு துரோகம் செய்துள்ளனர். அவரின் புனித உருவத்தை அழித்துள்ளனர் என்பதே உண்மை. உதாரணமாக அங்கு வாழும் மக்கள் தமிழ் பேசும் மக்களாகவும், புத்த சமயத்தை சேராதவர்களாகவும் இருக்கும் பொழுதும், அவர்கள் வழிபாடும் சைவ ஆலயங்களுக்கு இடையூறாக அல்லது அவர்களுக்கு சொந்தமான காணியிலேயே பலவந்தமாக புத்தர் சிலை வைப்பதும் பின் விகாரை காட்டுவதும் பின் சிங்கள குடியேற்றத்தால் ஆக்கிரமிப்பு செய்வதும் 2009 க்குப் பின் அதிகரித்துக்கொண்டு போவது ஒரு சாதாரண விடயமாகி விட்டது. எந்த அரசாங்கம் வந்தாலும் அது நின்றபாடில்லை. இன்றும் மே 25, 2025, இலும் இப்படியான வன்முறைச் செயல்கள் தொடர்வதைக் காணலாம். உதாரணமாக, திடீரென அம்பாறை மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலையைக் எடுத்துக் காட்டலாம். இது என்ன கொடுமை என்றால், தாங்கள் புத்தரை போற்றுகிறோம், பின்பற்றுகிறோம் என்று வாய்க்கு வாய் சொல்லும் அவர்கள் செய்யும் செயல்கள் தான் இவை!
இது தான் சிங்கள அரசியல்வாதிகளும், பிக்குகளும் பல நாட்களாக முயற்சி செய்து கொண்டிருப்பது — வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டுவதுதான். அவர்கள் இதில் பெரிதளவில் வெற்றி பெற்று விட்டார்கள். தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டோர் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள், அல்லது இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாகச் சென்று விட்டார்கள். எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஆயுதம் தரப்பட்ட சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டனர்.
கல் ஓயா, மகாவலி திட்டம் போன்ற பல பெரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் தமிழர் நிலங்களை அபகரிக்க பயன்படுத்தப் பட்டன. இவை அனைத்துக்கும் உலகத் தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி வழங்கியுள்ளன. ஆனால் அவர்கள் இந்த அநியாயங்களைக் கண்டும் காணாதது போல நடந்து கொண்டனர்.
இதே நேரத்தில், தமிழர்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தனர். தேர்தல் எல்லைகள் மாற்றப்பட்டு, அரச ஆதரவுடன் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டதால், தமிழர் வாக்குரிமையும் குறைக்கப் பட்டது.
Part: 135 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?"
Buddha is understood to be a very kind person who renounced the royal comforts, his just born son and his young wife when he was 29 years of age. He was saddened by the misery of this worldly life and wanted to find a way out of this misery. Dipavamsa describes Buddha as; the chief among Sages, the bringer of Happiness, the compassionate, and merciful grate Sage. Buddha was born more than 2400 years ago, and the Ceylon chronicles wanted us to believe that there were non- humans; blood thirsty Yakkhas, savage Pisacas and Rakkhasas during his life time in Lanka. The monkish authors branded the original inhabitants of Lanka as above to misappropriate their traditional land. The Buddha wanted to clear Lanka of the above sub-humans to make way for his chosen followers yet to come to Lanka from Vanga, and he came, flying to Lanka thrice. Buddha is a Human, and couldn’t have flown, and his flying is a plagiarism from the Epic Ramayana. When he came he was hovering over the heads of Yakkhas in mid air! Yakkahs mistook Buddha as one of theirs, the Dipavamsa, 1- 51. Both, the Buddha and the Yakkhas, must have been humans to look similar. The Buddha then terrorized Yakkhas by sending heavy rain, cold wind, darkness and extreme heat etc. The first terrorist of the world, one may say! In the end, the merciful Buddha, made the Yakkhas run away to another island, Giridipa; never to return, Dipavamsa 1-78. What kind of merciful and compassionate Buddha was he to indulge in these cruelties? The monkish chroniclers betrayed the Buddha by ascribing these sorts of uncivilized and criminal acts to the Buddha, shame on them.
This is what the Sinhala politicians and the monks want to do with the Tamils, to drive them away from their ancestral homeland. They succeed in this about more than fifty percentage by driving the Tamils to India, and to the western world. They also brutally massacred Tamils in many pockets of border area, and replaced them with armed Sinhalese militia. Vast tracks of Tamils home lands were forcefully appropriated under various irrigation schemes, with the help of the major World Donor agencies. These Donor agencies are also the silent partners in the murder, mayhem and robbing of Tamils. Tamils’ lost their representations in the parliament while Sinhalese were increasing their representation in the Parliament.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 136 தொடரும் / Will follow
எனது அறிவார்ந்த தேடல்: 1514
துளி/DROP: 2098 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 135]

துளி/DROP: 2098 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 135
https://www.facebook.com/groups/978753388866632/posts/34348151934833348/?
By
kandiah Thillaivinayagalingam ·