Jump to content

இலங்கை சுற்றுலா: குறைந்த செலவில் செல்ல விரும்புவோர் அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

58 நிமிடங்களுக்கு முன்னர்

பண்பாட்டு-கலாசார ரீதியாக தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான நாடாக இலங்கை விளங்குகிறது. இந்தக் காரணத்திற்காகவும் அதன் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் இந்தத் தீவு நாட்டுக்குச் செல்ல தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஆர்வம் காட்டுகின்றனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மலைப் பிரதேசங்கள், கடற்கரைகள், காட்டுயிர் சரணாலயங்கள், தனித்துவமான-சுவையான உணவுகளுக்காக உங்களின் பயண ‘லிஸ்ட்டில்' இலங்கை நிச்சயமாக இருக்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில், 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்தது. 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியது.

தங்கள் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுலாத் துறையைப் பெரிதும் சார்ந்திருக்கிறது இலங்கை. 2023ஆம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களிலும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஷ்யாவில் இருந்தே 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இந்தியாவிலிருந்தே அதிகளவிலானோர் வருகை தந்துள்ளனர். இந்தத் தகவலை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் இந்தியாவிலிருந்து அதிகளவிலானோர் இலங்கைக்குப் பயணிப்பது தெளிவாகிறது. குறைந்த செலவில் பயணம், இ-விசா சலுகை போன்ற வசதிகளும் இந்தியர்கள் இலங்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.

குறைந்த செலவில் எப்படி இலங்கைக்குச் செல்லலாம், இந்தியர்களுக்கு இலங்கையில் உள்ள வசதிகள் என்னென்ன, அங்கு நிச்சயம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்பதை இங்கே காணலாம்.

 

இ-விசா சலுகை

குறைந்த செலவில் இலங்கை செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவிலிருந்து சுற்றுலா செல்லும் நோக்கத்திற்காக இலங்கை செல்பவர்கள், https://www.srilankaevisa.lk/ எனும் இணையதளத்தில் பயண ஆவணங்களைப் பதிவேற்றி, இ-விசா பெற்று இலங்கை செல்லலாம்.

சுற்றுலா துறையை மேம்படுத்தும் பொருட்டு, இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இ-விசா வசதியை அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர், 2023இல் அறிவித்தது.

அதன்படி, இலங்கை செல்வதற்கு முன்பு, குறிப்பிட்ட இணையதளத்தில் விவரங்களைப் பதிவிட்டு இ-விசா பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-விசா மூலம் இலங்கையில் அதிகபட்சம் 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்.

இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறைந்த பயண செலவு

தமிழ்நாட்டிலிருந்து இலங்கை செல்வதற்கு ஏராளமான விமான வசதிகள் உள்ளன. அதிலும் குறைவான பயண செலவிலேயே இலங்கை சென்று வர முடியும்.

சென்னையைச் சேர்ந்த ‘வேண்டர்லஸ்ட்' எனும் பயண நிறுவனத்தின் நிறுவனர் பாலாஜி கண்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு மிகவும் அருகில் இருப்பதாலும் விமான கட்டணம் குறைவாக இருப்பதாலும் இங்குள்ள மக்கள் சுற்றுலாவுக்காக இலங்கையை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.

இலங்கை செல்வதற்கான நடைமுறை எளிதானது. விசா தேவையில்லை. இ-விசாவை ஆன்லைன் மூலமாகவே பெறலாம். ஒருவர் இலங்கை சென்றுவர 15,000-18,000 ரூபாய் இருந்தாலே போதுமானது," என்கிறார்.

விமானப் போக்குவரத்து மட்டுமின்றி, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து அவ்வப்போது பயணப்படகு ஒன்றையும் அரசு இயக்கி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், சென்னையிலிருந்து தனியார் கப்பல் மூலமாகவும் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு பயணிக்கலாம் என பாலாஜி கண்ணன் தெரிவித்தார். கடல்வழிப் போக்குவரத்து எப்போதும் இருக்காது என்பதால், விமானப் பயணமே இலங்கை செல்ல ஏற்றது என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

 

இந்திய ரூபாயை பயன்படுத்த முடியுமா?

குறைந்த செலவில் இலங்கை செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எந்தவொரு வெளிநாட்டுக்குச் செல்லும்போதும் இந்திய ரூபாயை அந்த நாட்டுப் பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்றினால்தான் நாம் அதைச் செலவுகளுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இதிலும் இலங்கை அரசு சலுகை வழங்கியிருக்கிறது.

அதாவது, இந்திய ரூபாயை அப்படியே யூபிஐ மூலமாக இலங்கையில் நாம் பயன்படுத்த முடியும். அதற்கென பெரும்பாலான இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதை நாம் ஸ்கேன் செய்தால், இந்திய ரூபாய் மதிப்பு, இலங்கை ரூபாய் மதிப்புக்கு மாற்றி அப்படியே பணத்தைச் செலுத்திவிடலாம்.

இதுதொடர்பாக பிபிசி தமிழுக்காக இலங்கை செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகத்திடம் பேசியபோது, “இது இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இலங்கை அரசு செய்துள்ள சலுகை. இதற்கென பல்வேறு இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா - குறைந்த செலவில் செல்ல அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதன்மூலம் எளிதாக பணத்தைச் செலுத்தலாம். இதனால், சுற்றுலாப் பயணிகள் இலங்கை பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்ற வேண்டிய அவசியம் இல்லை,” எனத் தெரிவித்தனர்.

ஆனால், இந்திய ரூபாயை கரன்சியாக அங்கு பயன்படுத்த முடியாது. எனினும், சில இடங்களில் யூபிஐ வசதி இல்லாமல் இருந்தால், அசௌகரியங்களைச் சமாளிக்க கொஞ்சம் பணத்தை இலங்கை ரூபாயாகவோ அமெரிக்க டாலர்களாகவோ மாற்றி வைத்திருப்பது நல்லது என்கிறார் பாலாஜி கண்ணன்.

மற்ற செலவுகள் எப்படி இருக்கும்?

இலங்கையில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ரூ.3,000-3,500 செலவிலேயே நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும் என, பாலாஜி கண்ணன் தெரிவித்தார்.

“பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மீண்டு வருவதால், இன்னும் சில இடங்களில் சுற்றுலா வசதிகளுக்கான சேவைகள், பொருட்களின் விலை அதிகமாகத்தான் இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு இலங்கை பணத்தைவிட அதிகம் என்பதால், அதிக செலவு இருக்காது," என்றார் பாலாஜி.

 

தவறவிடக்கூடாத இடங்கள்

இலங்கை சுற்றுலா

பட மூலாதாரம்,SAIKO3P/GETTY IMAGES

கொழும்புவில் இருந்து பதுல்லாவுக்கு செல்லும் ரயில் பயணம் நிச்சயம் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டிய பயணம். அந்த ரயில் செல்லும் வழி மிக அழகு நிறைந்தது. மிகவும் மெதுவாக, 10 மணிநேரம் செல்லக்கூடிய இந்தப் பயணம், சிலருக்கு அசௌகரியமாக இருந்தாலும் இந்தப் பயணத்தின்போது நாம் பார்க்கக்கூடிய இடங்கள் மனதுக்கு மிக இனிமையாக இருக்கும்.

இலங்கை அழகிய கடற்கரைகளுக்குப் பெயர் போன நாடு. கடல் சார்ந்த சாகசங்களில் ஆர்வம் உள்ளவர்கள், மிரிசா, பென்டோடா போன்ற கடற்கரைகளுக்குச் செல்லலாம்.

காட்டுயிர்கள் மீதான ஆர்வம் கொண்டவர்கள் யாலா, உடவலவே போன்ற தேசிய காட்டுயிர் பூங்காக்களுக்குச் செல்லலாம். இங்கு, யானை, சிறுத்தை மற்றும் பலவகையான பறவைகளைக் காண முடியும்.

இலங்கையில் நிச்சயம் காண வேண்டிய மலைப்பிரதேசங்களும் உண்டு. தேயிலைத் தோட்டங்களால் நிரம்பிய எல்லா, நுவரெலியா போன்ற மலைப் பகுதிகளின் அழகை அவசியம் காண வேண்டும்.

இலங்கையின் கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படும் சிகிரியா கோட்டை, தம்புள்ளை குகை கோவில், அனுராதபுரம் போன்றவற்றுக்கு இலங்கையின் கலை அழகை ரசிக்கச் செல்லலாம்.

https://www.bbc.com/tamil/articles/cd1vm1rgrrjo

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தகவல்கள்........!   👍

நன்றி ஏராளன் .........!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/ilanchellian

சுற்றுல்லா பயணிகளுக்கு விருந்தினர் விசா வழங்கும் சேவை SLT Mobitel PLC நிறுவனத்திடமிருந்து VFS Global எனும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு கைமாற்றி உள்ளார்கள்
அதாவது Mobitel எந்த இலாபமன்றி 12 ஆண்டுகளாக வழங்கிய online visa சேவையை VFS Global க்கு கைமாற்றி உள்ளார்கள்
இது தொடர்பில் Tiran Alas முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு திரு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது
இதன் காரணமாக விசா சேவை கட்டணம் 2477% அதிகரிக்கப்பட்டள்ளது
அதாவது வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு விசா சேவை கட்டணம் 1 டொலரிலிருந்து 25.77 டொலராக அதிகரித்துள்ளது ($18.5 + convenience)
இதனூடாக VFS Global என்கிற வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சுற்றுல்லா பயணிகளிடம் ஆண்டு ஒன்றுக்கு 12.76 பில்லியன் ரூபா வருமானம் உழைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
அரச நடைமுறைகளுக்கு மாறாக குறிப்பாக எவ்விதமான கேள்விப்பத்திர நடைமுறைகளை பின்பற்றமால் இவ மாற்றங்களை செய்துள்ளார்கள்
மேற்படி விசா சேவையை வழங்க VFS Global ரூபா 60 பில்லியன் முதலீடு செய்திருப்பதாக சொல்லப்படுகின்ற போதும் விசா சேவைக்காக 24 கரட் தங்கத்தில் கணினி வலைஅமைப்புகளை பயன்படுத்தினாலும் கூட ரூபா 60 பில்லியன் முதலிட வேண்டியதில்லை என்பதை நிபுணர்கள் அம்பலப்படுத்தியுள்ளார்கள்
மறுபுறம்மேற்படி மாற்றங்கள்காரணமாகவெளிநாட்டு சுற்றலாபயணி ஒருவர் சுற்றலா விசா ஒன்றுக்கு 100.77 அமெரிக்கா டொலர் செலவழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது
இதனால் 4 பேர்குடும்பம் விசாவிற்காக மட்டும் 400 அமெரிக்கா டொலர் செலவழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது
பொருளாதார சீரழிவிற்க்கு பிறகுஇலங்கை பொருளாதாரம் கடன், புலம்பெயர் இலங்கையர் அனுப்பும் பணம்
மற்றும் சுற்றுல்லா பயணிகளிடம் மட்டுமே தங்கி இருக்கின்றது
இவ் ஆண்டு 2.4 மில்லியன் சுற்றுல்லா பயணிகளை எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த மோசடியுடாக சுற்றுலா பயணிகளிடம் விசா சேவை கட்டணம் என்கிற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதால் சுற்றுலா துறையை ஆபத்தில் தள்ளியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது
கெஹலிய ரம்புக்வெல்ல ரூபா 130 மில்லியன் பெறுமதியான தரமற்ற மருந்து இறக்குமதியில் சிக்கிய பொது அவரை காப்பாற்ற ரணில் விக்ரமசிங்கே முயற்சித்தார்
ஜப்பான் நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட நிமல் ஸ்ரீ பால டி சில்வா வை காப்பாற்றினார்
டக்ளஸ் தேவானந்தாவின் கடற்தொழில் அமைச்சு எவ்வித முறையான கொள்முதல் நடவடிக்கையின்றி 12,000 கிலோவுக்கும் அதிகமான மீன்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்த பொது அமைகியாக இருந்தார்
தற்போது அமைச்சர் Tiran Alas மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு இணையான 12.76 பில்லியன் ரூபா விசா மோசடியில் சிக்கியுள்ளார்
இதற்கு திரு ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது
இலங்கை தீவில் மோசடிகள் Normalize செய்யப்பட்டுள்ளது .
இதனால் தான் பொருளாதார சீரழிவிற்கு பின்னரும் கூட கூச்சமில்லாமல் திருடுகின்றார்கள்

நன்றி-இனமொன்றின் குரல் 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

VFS Global என்கிற வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சுற்றுல்லா பயணிகளிடம் ஆண்டு ஒன்றுக்கு 12.76 பில்லியன் ரூபா வருமானம் உழைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

சூப்பர் சூப்பர் ....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2024 at 01:30, ஏராளன் said:

இலங்கையில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ரூ.3,000-3,500 செலவிலேயே நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும் என, பாலாஜி கண்ணன் தெரிவித்தார்.

இது எங்கடா சாமி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மௌனம் கலைந்த VFS Global: குற்றச்சாட்டுக்களுக்கு அறிக்கை மூலம் பதில்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை தரும் விசா வழங்குவது தொடர்பான சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள VFS Global நிறுவனம், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

VFS Global 2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வருவதாகவும், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, நோர்வே, ஒஸ்திரியா¸ லட்வியா, ஹங்கேரி, குரோசியா, மோல்டா மற்றும் கிரீஸ் உட்பட 23 அரசாங்கங்களுக்கு விசா விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆறு விசா மையங்களை நடத்தி வருவதாகவும், தமது நிறுவனத்தில் 123க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு

 

2004 ஆம் ஆண்டு முதல், VFS Global சிறிலங்கா 3.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களைச் செயலாக்கியுள்ளது.

இந்தநிலையில் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை அரசாங்கத்தின் புதிய E-Visa தீர்விற்கான (www.srilankaevisa.lk )பிரதான ஒப்பந்தக்காரராக GBS தொழில்நுட்ப சேவைகள் மற்றும் IVS Global FZCO மற்றும் தொழில்நுட்ப பங்காளியாக VFS Global ஆகியவற்றுடன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மௌனம் கலைந்த VFS Global: குற்றச்சாட்டுக்களுக்கு அறிக்கை மூலம் பதில் | Vfs Global Responds To Allegations With Statement

இதன்படி VFS Global  விண்ணப்ப செயல்முறை தொடர்பான நிர்வாகப் பணிகளை மட்டுமே நிர்வகிப்பதாகக் கூறியுள்ளது.

விசாவை வழங்குவது அல்லது நிராகரிப்பது என்பது இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தனிப்பட்ட விருப்பத்திற்கு உட்பட்டது என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த திட்டத்தில் தற்போது மொத்தம் 66 இலங்கையர்கள் பணிபுரிகின்றனர், விரைவில் இந்த எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசா முறையின் டிஜிட்டல் மாற்றம்

ஏற்கனவே தாய்லாந்து, துபாய், ஈக்குவடோரியல் கினியா, அஜர்பைஜான் மற்றும் சுரினாம் உள்ளிட்ட 12 அரசாங்கங்களுக்கு தனது டிஜிட்டல் இ-விசா தளத்தை வழங்கிய அனுபவம் இருப்பதாக VFS Global கூறியுள்ளது.

இதற்கிடையில் விசா முறையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கம் அதன் E-Visa மற்றும் வருகைத்தரு வீசா செயல்முறைக்கு VFS Global இன் டிஜிட்டல் தளத்தை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது.

மௌனம் கலைந்த VFS Global: குற்றச்சாட்டுக்களுக்கு அறிக்கை மூலம் பதில் | Vfs Global Responds To Allegations With Statement

அதிகரித்த சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்காக, இந்த செயல்முறையை தடையின்றி மேற்கொள்வதே இதன் நோக்கமாக அமைந்திருந்தது.

பயணிகள் அதாவது வீசா விண்ணப்பதாரர்கள், ஒரு மாதம் முதல் 10 ஆண்டுகள் வரையிலான 17 குடியுரிமை இல்லாத விசா வகைகளில் இருந்து வீசாக்களை தேர்வு செய்யலாம்.

இதன் செயல்முறை இணையத்தில் உள்ளது. இது விண்ணப்பதாரர்களுக்கு வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. கூடுதலாக, பயணிகள் ஆங்கிலம், தமிழ், ரஷ்யன், மாண்டரின்-கான்டோனீஸ் மற்றும் ஜெர்மன் ஆகிய ஐந்து மொழிகளில் 24 மணிநேரமும், பிரத்யேக தொடர்பு மையத்தைப் பயன்படுத்தலாம்.

அதேநேரம் தேவையின் அடிப்படையில் இது மற்ற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று VFS Global தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எந்த செலவும் இல்லாமல், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் தொடர்பான அனைத்து முதலீடுகளும் நிறுவனத்தால் ஏற்கப்படுகின்றன.

அனைத்து விசா வகைகளிலும் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட மொத்த சேவைக் கட்டணம் 18.50 டொலர்களாக அறவிடப்படுகிறது

கட்டணச் செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய உள்ளூர் வரிகள் ஆகியவை சேவைக் கட்டணத்துடன் கூடுதலாக அறவிடப்படுகிறது என்று VFS Global நிறுவனம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

https://tamilwin.com/article/vfs-global-responds-to-allegations-with-statement-1715022309

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.