Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.
இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் கொரோனா காலத்தில் இந்த தடுப்பூசி தான் போடப்பட்டது.

இதற்கிடையே, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் என்ற பக்க விளைவை ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்டது.

கோவிஷீல்ட் தடுப்பூசியானது லேசாக பக்க விளைவுகளை தரும் என அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் ஆய்வு மற்றும் மருத்துவ நிபணர் குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனகா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இரத்த உறைவு, ரத்த பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்ப வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/301141

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஏராளன் said:

இந்நிலையில், உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனகா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

லட்சோப லட்சம் மக்கள் ஏற்கனவே ஊசி போட்டாச்சு.

இனி தடை செய்தென்ன விட்டென்ன?

மக்களுக்கு கொஞ்ச கொஞ்ச பணமா கொடுத்து கணக்கை முடியுங்க.

இறந்தவர்களுக்கு நஸ்டஈடு கொடுங்க.

வழக்கம் போன்று பொறுப்பற்ற முறையில் தமிழ் ஊடகம், முக்கியமாக தினக்குரல் செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளது.

அஸ்ராசெனிகா உலகளவில் கொவிட் தடுப்பூசிக்கான தேவை குறைவடைந்து செல்வதனாலும், சந்தையில் வேறு பல கொவிட் தடுப்பூசிகள் இருப்பதனாலும், தன் தடுப்பூசியை திரும்பப் பெறுவதுடன், தயாரிப்பதையும்
நிறுத்துவதாகவே அறிவித்துள்ளது. தன் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுவதால், திரும்பப் பெறுவதாக அந் நிறுவனம்அறிவிக்கவில்லை.

மேலும்:

May 7 (Reuters) - AstraZeneca (AZN.L), opens new tab said on Tuesday it had initiated the worldwide withdrawal of its COVID-19 vaccine due to a "surplus of available updated vaccines" since the pandemic.
The company also said it would proceed to withdraw the vaccine Vaxzevria's marketing authorizations within Europe.
"As multiple, variant COVID-19 vaccines have since been developed there is a surplus of available updated vaccines," the company said, adding that this had led to a decline in demand for Vaxzevria, which is no longer being manufactured or supplied.
 
 
LondonCNN — 

AstraZeneca is withdrawing its highly successful coronavirus vaccine, citing the availability of a plethora of new shots that has led to a decline in demand.

The vaccine — called Vaxzevria and developed in partnership with the University of Oxford — has been one of the main Covid-19 vaccines worldwide, with more than 3 billion doses supplied since the first was administered in the United Kingdom on January 4, 2021.

But the vaccine has not generated revenue for AstraZeneca since April 2023, the company said.

https://www.cnn.com/2024/05/08/business/astrazeneca-covid-vaccine-withdrawal/index.html

 

https://www.bbc.com/news/health-68977026

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொவிட் தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்!

08 MAY, 2024 | 11:14 AM
image

உலக சந்தையில் இருந்து தங்களது கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது பிரிட்டன் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம். வர்த்தக ரீதியான காரணங்களால் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட்  பெருந்தொற்று நெருக்கடியின்போது அஸ்ட்ராஜெனகா மற்றும் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 பாதிப்புக்கு தடுப்பூசியை உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கொரோனாவுக்கானதடுப்பூசியாக ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலக நாடுகளை சேர்ந்த பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்த சூழலில் அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சொல்லி பிரிட்டன் நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குக தொடரப்பட்டது. இது அந்த நாட்டில் தற்போது விசாரணையில் உள்ளது.

இந்த சூழலில் அண்மையில் இது தொடர்பான வழக்கில் பதிலளித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தது. இது அந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தடுப்பூசியை சர்வதேச சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இனி அந்நிறுவனம் கோவிட் தடுப்பூசியை தயாரிப்பதையும் விநியோகம் செய்வதையும் நிறுத்திக் கொள்கிறது. இதனை பிரிட்டன் நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இந்த முடிவு முற்றிலும் தற்செயலானது என்ற விளக்கமும் தரப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியிலான காரணங்களுக்காக இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல். கடந்த மார்ச் மாதம் தடுப்பூசியை திரும்பப் பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை ஐரோப்பிய ஆணையத்தின் வசம் அஸ்ட்ராஜெனெகா சமர்ப்பித்துள்ளது. இது நேற்று (மே 7) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

https://www.virakesari.lk/article/182951

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தமிழ் ஊடகங்கள் இந்தியன் எக்ஸ்ப்றஸ் போன்ற இந்திய ஊடகங்களில் இருந்து இந்த செய்தியைப் பிரதி செய்து போட்டிருக்கின்றன. இந்திய ஊடகங்களில் "பக்க விளைவை இப்போது தான் AZ ஒப்புக் கொண்டிருப்பது போலவும், அதனால் மக்கள் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும்" எழுதுகிறார்கள்😂.

இந்த AZ Vaccine பக்கவிளைவுகள்  பற்றி யாழிலேயே விவாதித்த பழைய திரிகள் இருக்கின்றன. அரிதான குருதியுறையும் பக்க விளைவை முதலில் கண்டறிந்து வெளியிட்டதே AZ இன் கண்காணிப்பு சிஸ்ரம் தான். அதன் பின்னரும், இது வரையில் இளம் பெண்கள் தவிர்த்த ஏனையோரில் இந்த தடுப்பூசி பாவிக்கப் பட்டே வந்தது. இப்போதுள்ள பிரச்சினை, AZ தடுப்பூசி ஒரிஜினலாக தயாரிக்கப் பட்ட வைரசை விட திரிபடைந்த வைரசு தான் இப்போது பரவி வருகிறது. ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் போல உடனடியாக இந்த AZ தடுப்பூசியை மீள வடிவமைக்க முடியாது. எனவே, பாவனையும் குறைந்து விட்டது. உற்பத்தியும் நிறுத்தப் படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கும் 300 கோடி டோஸ் செலுத்தப்பட்ட பிறகு 'கோவிஷீல்டு' தடுப்பூசி வாபஸ் - என்ன காரணம்?

கோவிட் தடுப்பூசியைத் திரும்பப் பெற்ற அஸ்ட்ராஜெனெகா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜேம்ஸ் கலாகர்
  • பதவி, ஆரோக்கியம் மற்றும் அறிவியல் செய்தியாளர்
  • 13 நிமிடங்களுக்கு முன்னர்

உலகெங்கிலும் 300 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டப் பிறகு, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசி (இந்தியாவில் கோவிஷீல்டு) திரும்பப் பெறப்படுகிறது.

அஸ்ட்ராஜெனெகா இந்தத் தடுப்பூசியைப் பற்றி 'மிகவும் பெருமையாக உணர்வதாகக்' கூறியது. ஆனால் அந்த நிறுவனம் இந்த வணிக முடிவை எடுத்துள்ளது.

கொரோனா வைரசின் புதிய மாறுபாடுகள் அதிகரித்து வருவதால் புதிய, மேம்பட்ட தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது என்று அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

கோவிட் பெருந்தொற்றின்போது அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்டு தடுப்பூசி பல லட்சம் பேரின் உயிரைக் காப்பாற்றியதாக மதிப்பிடப்பட்டது. ஆனால் அரிதான சில சந்தர்ப்பங்களில் அது ஆபத்தான இரத்தம் உறைதலையும் ஏற்படுத்தியது. இதனால் சில மரணங்களும் நிகழ்ந்தன.

 
கோவிட் தடுப்பூசியைத் திரும்பப் பெற்ற அஸ்ட்ராஜெனெகா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,10 வருடங்கள் எடுக்கும் இந்தச் செயல்முறை சுமார் 10 மாதங்கள் வரை துரிதப்படுத்தப்பட்டது

மிகத் துரிதமாக உருவாக்கப்பட்ட தடுப்பூசி

கோவிட் தொற்றுநோய் பொதுமுடக்கத்திலிருந்து உலகை மீட்டெடுக்கும் பணியில், கோவிட் தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மிகத் துரிதமாக உருவாக்கினர். பொதுவாக 10 வருடங்கள் எடுக்கும் இந்தச் செயல்முறை சுமார் 10 மாதங்கள் வரை துரிதப்படுத்தப்பட்டது.

இது மற்ற கோவிட் தடுப்பூசிகளை விட மிகவும் மலிவானது மற்றும் சேமிக்க எளிதானது என்பதால் இது 'உலகத்திற்கான தடுப்பூசி' என்று கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அறிவிக்கப்பட்டது. மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா அதை வெகுஜனப் பயன்பாட்டுக்காகத் தயாரிக்க ஒப்புக்கொண்டது.

இங்கிலாந்து பொது முடக்கத்தில் இருந்து வெளிவரும் திட்டத்திற்கு இந்தத் தடுப்பூசியே அடித்தளமாக இருந்தது.

"உண்மையில் இது ஒரு மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது. ஃபைசரின் மற்றொரு தடுப்பூசியுடன் சேர்ந்து அந்தப் பேரழிவிலிருந்து நம்மை மீட்டெடுத்தது," என்கிறார் இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆடம் ஃபின்.

 
கோவிட் தடுப்பூசியைத் திரும்பப் பெற்ற அஸ்ட்ராஜெனெகா

பட மூலாதாரம்,PRESS ASSOCIATION

படக்குறிப்பு,'சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் மட்டும் 65 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன'

ரத்தம் உறைதலும் மரணங்களும்

இருப்பினும், தடுப்பூசியின் அரிதான பக்க விளைவாக அசாதாரண இரத்தக் கட்டிகள் தோன்றியதால் அதன் நற்பெயர் சிதைந்தது. இதனால், இங்கிலாந்து மாற்று வழிகளுக்கு திரும்பியது.

அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தனது ஒரு அறிக்கையில், "சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் மட்டும் 65 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன," என்று கூறியது.

மேலும் அந்த அறிக்கையில் "எங்கள் முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் உலகளாவிய தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஒரு முக்கிய அங்கமாக பரவலாகக் கருதப்படுகிறது," என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.

 
கோவிட் தடுப்பூசியைத் திரும்பப் பெற்ற அஸ்ட்ராஜெனெகா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,'கொரோனா வைரஸ் மிகவும் சுறுசுறுப்பானது என்பதும், அது அசல் தடுப்பூசிகளிலிருந்து மாறி மிகத்தொலைவாகச் சென்றுவிட்டது என்பதும் தெளிவாகிவிட்டது

புதிய வைரஸ் பிறழ்வுகள், புதிய தடுப்பூசிகள்

இப்போது பரவலாக இருக்கும் கொரோனா நுண்கிருமியின் பிறழ்ந்த வடிவங்களுடன் மிகவும் நெருக்கமாகப் பொருந்தக்கூடிய புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டதாக அவ்வறிக்கை தெரிவித்தது. இதனால், 'நமக்கு அதிகளவிலான புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள் கிடைத்தன' என அந்த அறிக்கை கூறுகிறது. இது அதன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கான (கோவிஷீல்டு தடுப்பூசி) 'தேவை குறைவதற்கு' வழிவகுத்தது. இது 'இந்த தடுப்பூசி இனி உற்பத்தியோ அல்லது சப்ளையோ செய்யப்பட மாட்டாது' என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

இதுகுறித்து பேசிய பேராசிரியர் ஃபின், "இந்தத் தடுப்பூசி திரும்பப் பெறப்படுவது, அது இனி பயனற்றது என்பதையே சொல்வதாக நான் நினைக்கிறேன்," என்றார்.

"கோவிட் வைரஸ் மிகவும் சுறுசுறுப்பானது என்பதும், அது அசல் தடுப்பூசிகளிலிருந்து மாறி வெகு தொலைவாகச் சென்றுவிட்டது என்பதும் தெளிவாகிவிட்டது. எனவே அந்தத் தடுப்பூசிகள் ஒரு வகையில் பொருத்தமற்றதாகிவிட்டன. புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள் மட்டுமே இப்போது பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது," என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/c0deywlpknxo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மருத்துவ வணிகம் பற்றி எழுதியதை நிர்வாகம் நிர்வாகம் அகற்றி விட்டது.
இருந்தாலும் பரவாயில்லை.

https://www.mdr.de/wissen/medizin-gesundheit/astrazeneca-nicht-mehr-zugelassen-100.html#:~:text=Der Corona-Impfstoff des schwedisch,Dokument der EU-Kommission hervorgeht.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

நான் மருத்துவ வணிகம் பற்றி எழுதியதை நிர்வாகம் நிர்வாகம் அகற்றி விட்டது.
இருந்தாலும் பரவாயில்லை.

https://www.mdr.de/wissen/medizin-gesundheit/astrazeneca-nicht-mehr-zugelassen-100.html#:~:text=Der Corona-Impfstoff des schwedisch,Dokument der EU-Kommission hervorgeht.

உங்களது இணைப்பு மொழி ஜேர்மைனில் உள்ளது என நினைக்கிறேன், கோவிட் தடுப்பூசிகளுக்காக பல நாட்டரசுகள் தமது வரிப்பணத்தினை இந்த நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்கள், இதில் அஸ்ரா செனிக்கா மட்டுமே தனது உற்பத்தி செலவுடன் தடுப்பூசியினை வழங்க பைசர் போன்ற நிறுவனங்கள் இலாபமீட்டியிருந்தனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.