Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

ஒன்றுமே தெரியாமலா கருத்துக் கூறுகிறீர்கள்? 

உங்களுக்குத் தெரிந்ததை இங்கே பகிருங்கள் என்றால் உனக்குத் தெரியாமலா கருத்துக் கூறுகிறாய் என்கிறீர்கள்? ஜின்னாவை விடுங்கள், தமிழ்த் தலைவர்கள் விட்ட தவறுகளைப் பட்டியலிடுங்களேன், படிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

நல்ல கலந்துரையாடல். தமிழில் வரவேண்டும்.

என்ன சொன்னார்கள் என்பதை தமிழில் தந்ததிற்கு நன்றி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

உங்களுக்குத் தெரிந்ததை இங்கே பகிருங்கள் என்றால் உனக்குத் தெரியாமலா கருத்துக் கூறுகிறாய் என்கிறீர்கள்? ஜின்னாவை விடுங்கள், தமிழ்த் தலைவர்கள் விட்ட தவறுகளைப் பட்டியலிடுங்களேன், படிக்கலாம். 

ஜின்னாவை யார் என்று தெரிந்துகொண்ட உங்களுக்கு, யார் யாரெல்லாம்  தமிழ்த் தலைவர்கள் என்றும்,  அவர்கள் விட்ட தவறுகள் எவை என்றும் தங்களுக்குத் தெரியாமல் இருப்பது கவலையளிக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

உங்களுக்குப் புரிந்த இந்த காலம் காலமாக விட்ட தவறுகளை இங்கு பட்டியலிடலாமே?

நாமும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

சசி,

அருமையான காணொளி. இதனை இங்கு எத்தனை பேருக்குப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை. ஆனால், கல்விகற்ற சிங்கள மக்களில் சிலரிடம் தெரியும் மாற்றம் இது. சிங்களம் தெரிந்தவர்கள் நிச்சயம் இதனைக் கேட்க வேண்டும். தமது இனத்தில் சமூகமாக தாம் செய்யும் விடயங்களைத் தமிழ் மக்கள் செய்யும்போது தடுக்கும் தமது அரசின் கொடூரத்தைக் கேள்விகேட்கும் பெண்மணி. முள்ளிவாய்க்கால் நோக்கிய இறுதி யாத்திரையில் தமிழ் மக்கள் சென்ற வழிகளில் தானும் சென்ற தெற்கின் சகோதரன். 

இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

நன்றி !

நன்றி ரஞ்சித் உங்கள் மொழிபெயர்ப்பிற்கு, ஆங்கிலத்தில் உரையாடப்பட்ட காணொளியில் ஒரு பகுதியினை பார்த்தேன் மிக  நீளமாக இருப்பதனால் மிகுதியினை பிறகு பார்க்க முடிவு செதுள்ளேன்.

இலங்கையில் கல்விகற்ற பெரும்பான்மை சமூகம் கூட புரிந்துணர்வற்ற நிலையிலேயே இருக்கிறார்கள், இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்கள் (சில பெரும்பான்மை மக்களும் இதற்குள் விதிவிலக்காக அடங்ககூடும்) போர் முடிந்தபின்னரான இக்காலத்திலும் அநீதியான முறையில் இலங்கயின் சட்டத்திற்குட்பட்ட முறையில் துன்புறுத்தப்படுகின்ற பாதுகாப்பற்ற நிலையில்தான் உள்ளார்கள், இதற்கு காரணம் இலங்கை எனும் நாட்டில் ஒரு பொதுவான சட்டம் இல்லை, இந்த காணொளியில் கூறுவது போல பெரும்பான்மை சமூகம் தான்  நினைத்த மாத்திரத்தில் புத்த ஆலயங்கள், காணி அபகரிப்புகள் என எதை வேண்டுமானாலும் செய்யலாம் அதனை எதிர்ப்பவர்களை கைது ஆணைப்பத்திரம் (அரஸ் வாரண்ட்) இல்லாமல் கைது செய்து காலவரையற்று தடுத்து வைக்கும் அவசரகால சட்டம் என்பவை உள்ளது.

அரகலய நிகழ்வு பொருளாதார சீர்கேட்டினாலேயே உருவானது, பெரும்பான்மை வாதம் போரினால் சிறுபான்மையின தமிழ் மக்களை வென்றதன் பரிசாக அது நிகழ்ந்தது, பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்தால் உலகம் இருண்டுவிடும் என்பது போல இலங்கையின் பொருளாதார பிரச்சினை முடிவடைந்து விட்டதாக நினைக்கிறார்கள், அதனால் இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கை மக்களின் பாதுகாப்பிற்காக சட்டம் பேணப்படவேண்டும் என்பதனை அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை. 

கடந்தகாலத்தில் தவறுகள் நிகழ்ந்துவிட்டது என்பதனை ஏற்று சிறுபான்மை மக்கள் ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு நிகழாது எனும் நம்பிக்கையுடன் ஒன்றித்து பயணிக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டாலே இலங்கை இந்த புதை மணலிற்குள்ளிருந்து மீழ முடியும், அதற்கான அரசியல் தீர்வுகள் காணப்படவேண்டும். 

இலங்கை 2032 இல் தனது கடனினை மொத்த தேசிய வருமானத்தில் 95% கொண்டுவரமுடியும் என நம்புகிறது (தற்போது 104%) அதாவது ஆண்டொன்றிற்கு கிட்டதட்ட 1%, இலங்கை தொடர்ச்சியாக ஒரு விளிம்பு நிலையிலேயே நீண்டகாலத்திற்கு இருக்கும், கடந்தகாலத்தில் பொருளாதார வங்குரோத்தான நாடுகள் மீண்டும் வங்குரோத்தாகும் பொதுவான காரணி ஊழல், பாதுகாப்பான சட்டம்ற்ற சூழல், உள்நாட்டுப்பிரச்சினை காரணமாகிறது, இந்த அனைத்துப்பண்புகளூம் ஒருங்கே கொண்டதுதான் இலங்கை, அதனால் இவற்றிற்கான தீர்வு எட்டப்படாவிட்டால் இலங்கை மீண்டும், மீண்டும் வங்குரோத்தாகும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது.

பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்தால் உலகம் இருண்டுவிடும் எனும் மனப்பாண்மையில் இருந்து இலங்கையர்கள் வெளிவரவேண்டும், அதனால் எந்த இலாபமும் இராது நட்டம்தான் ஏற்படும்.

மொழிபெயர்ப்புக்கு நன்றி ரஞ்சித்.

இலங்கையின் இன்றைய பொருளாதார நிலமைதான் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை ஒரு பகுதி சிங்களவரையாவது சிந்திக்க வைக்கிறது. இது புதிய சிந்தனை அல்ல. விஜய குமாரதுங்க போன்றவர்களும் முன்னெடுத்ததுதான். இன்று இச் சிந்தனையானது தமிழர்களுடன் சமாதானமாகப் போனால் நாட்டை அபிவிருத்தி செய்வதன் மூலம் அனைவரும் முன்னேற்றமடையலாம் என்பதைச் சிங்களவர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் உரிமைக்காகப் போரடியது முடிவுக்கு வந்து பல வருடங்களின் பின் சிங்களவர் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுடன் எம்மை நோக்கி வரக் கூடிய நிலை ஏற்படலாம். அரசியல் போராட்டங்கள் மூலம் இரண்டு தரப்பினரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கலாம். இதற்கு முக்கிய இடைஞ்சலாக இருக்கப் போவது இலங்கையின் பௌத்த பீடங்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2024 at 02:03, நன்னிச் சோழன் said:

ஆங்கிலத்தில் சிங்களவர் கதைத்தது பயனுள்ளதாக உள்ளது...

கொடூர மனங்களில் (பெரும்பாலான சிங்களவர் தமிழருக்கு உரிமையே கொடுக்கக் கூடாது என்றும் தமிழர் கொல்லப்படவில்லை என்று கூறியே கேட்டுள்ளேன்/ பார்த்துள்ளேன்) இவ்வாறான கசியும் இதயங்களும் (தமிழருக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்று வாயால் கூறும் சிங்களவர்) வாழ்வது வியப்பாக உள்ளது.

 

 

அந்த‌ காணொளி யூடுப்பில் ப‌திவேற்ற‌ம் செய்து மூன்று நாள்

ஆனால் பார்த்த‌வ‌ர்க‌ளின் என்னிக்கை 4000க்கு குறைவு...................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

அந்த‌ காணொளி யூடுப்பில் ப‌திவேற்ற‌ம் செய்து மூன்று நாள்

ஆனால் பார்த்த‌வ‌ர்க‌ளின் என்னிக்கை 4000க்கு குறைவு...................................

மிகவும் குறைவு தான் உறவே.அந்த விடியோவை பார்த்து விளங்க வேண்டிய சிங்களவர்கள் பார்க்கவில்லை . நான் யாழ்களத்தில் அந்த விடியோவை கிளிக் பண்ணினேன் அஜர்பைஜான்காரர்கள் பேசுவது போன்று இருந்தது எதுவும் தெரியவில்லை அதனால் நிறுத்தி விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மிகவும் குறைவு தான் உறவே.அந்த விடியோவை பார்த்து விளங்க வேண்டிய சிங்களவர்கள் பார்க்கவில்லை . நான் யாழ்களத்தில் அந்த விடியோவை கிளிக் பண்ணினேன் அஜர்பைஜான்காரர்கள் பேசுவது போன்று இருந்தது எதுவும் தெரியவில்லை அதனால் நிறுத்தி விட்டேன்.

நான் மேல் ஓட்ட‌மாய் பார்த்தேன் உற‌வே ஆனால் சிங்க‌ள‌வ‌ங்க‌ளுக்கு எப்ப‌வும் த‌மிழ‌ர்க‌ள் மீது அதிக‌ வெறுப்பு 

2009க‌ளில் வெடி கொழுத்தி கொண்டாடின‌ கூட்ட‌ம் சிங்க‌ள‌ கூட்ட‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமையாக கேட்டு கலந்துரையாடலில் பேசப்பட்ட கருத்துக்களை தமிழில் பிசகாமல் மொழிபெயர்த்து எழுதியமைக்கு மிக்க நன்றிகள் ரஞ்சித்.   🙏

On 18/5/2024 at 21:06, Kapithan said:

ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 

இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 

நாங்களும் தான் சற்று தெரிந்து, தெளிந்து கொள்கிறோம் கப்பிதான் எமது தமிழ் தலைவர்கள் ராமநாதன் அருணாசலம் காலத்தில் செய்த தவறுகளை பட்டியலிடுங்கள் பார்ப்போம். அவர்களின் தவறுகள் பற்றி தெரிந்த உங்களுக்கு D.S சேனநாயக்கா போன்ற சிங்கள தலைமைகளின் "தேசாபிமானம்" பற்றியும் தெரிந்திருக்கும் என்றும் நம்புகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Sasi_varnam said:

பொறுமையாக கேட்டு கலந்துரையாடலில் பேசப்பட்ட கருத்துக்களை தமிழில் பிசகாமல் மொழிபெயர்த்து எழுதியமைக்கு மிக்க நன்றிகள் ரஞ்சித்.   🙏

இந்தக் கலந்துரையாடலினை முழுவதுமாகக் கேட்டு மொழிபெயர்க்கலாம் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், நேற்று சிறு வேலை காரணமாக வெளியே செல்ல வேண்டியதாகிவிட்டது. அதனால் தொடரமுடியவில்லை. இவர்கள் பேசுவதுகுறித்து அறிய எவராவது விரும்பினால் மீதியையும் மொழிபெயர்க்கலாம், பார்க்கலாம்.

Edited by ரஞ்சித்
வேலை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.