Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசாரதேரருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - ஜனாதிபதிக்கு பௌத்த மததலைவர்கள்கடிதம்

20 May, 2024 | 11:12 AM

image

வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் என பௌத்த மததலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேசிய ஐக்கியம் சமூக ஆதரவு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் ஞானசார தேரர் வழங்கியபங்களிப்பை கருத்தில் கொண்டு மன்னிப்பு வழங்கவேண்டும் என பௌத்தபீடங்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றைஎழுதியுள்ள பௌத்தமததலைவர்கள் மார்ச்28 ம் திகதி ஞானசாரதேரருக்கு நான்குவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமூகத்தில் தீவிரவாதசக்திகளின்செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கும் நடவடிக்கையில் ஞானசாரதேரர் ஈடுபட்டுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ள பௌத்தமததலைவர்கள் பாதுகாப்பு படையினருக்கு ஆதரவளித்தார் இலங்கையில் சில தீவிரவாத சக்திகள் தங்கள் நடவடிக்கைகளை விஸ்தரிப்பதை தடுக்க உதவினார் இதன் காரணமாக தீவிரவாதிகள் தொடர்பான பல சம்பவங்கள் தடுக்கப்பட்டன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
https://www.virakesari.lk/article/184015

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8A%E0%

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு தொடர்பில் அறிவிப்பு!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதான மதகுருக்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இலங்கையில் சிங்கள பௌத்த தேசியத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியதாகவும் அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி, வெசாக் போயா தினத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக ஆதரவுடன் செயற்பட்ட ஞானசாரஹிமிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதேவேளை 2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1383133

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஞானசாரதேரருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - ஜனாதிபதிக்கு பௌத்த மததலைவர்கள்கடிதம்

இது ஒன்றும் புதியவையல்ல. முகமாலையில் அப்பாவிகளைப் படுகொலைசெய்த சிங்களப் படையினனையே விடுவித்த சிங்களர் அரசு, இதனைச் செய்யாது விட்டால் மட்டுமே ஆச்சரியமாகும். சிங்கள பௌத்த தேசியவாதத்தின்கூறுகளைப் புரியாது தமிழர்கள் இனியும் இருந்தால் அறியமையென்பதா? மடமையென்பதா?

  • கருத்துக்கள உறவுகள்

ganasara-thero.jpg?resize=600,375&ssl=1

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு இந்து சம்மேளனம் கோரிக்கை!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது

2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, இன, மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். சமூகத்தில் தீவிரவாதசக்திகளின் செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கும் நடவடிக்கையில் ஞானசார தேரர் ஈடுபட்டதாகவும் பாதுகாப்பு படையினருக்கும் ஆதரவளித்தாகவும் மகாநாயக்க தேரர்கள் அவர்களின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் சிங்கள – பௌத்த தேசியத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, வெசாக் போயா தினத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக ஆதரவுடன் செயற்பட்ட ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் தற்போது கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1383462

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் தற்போது கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vadivelu memes Comedy | Best of Vadivelu memes Collecton #vadivelu # ...

ஆரப்பா இது?

  • கருத்துக்கள உறவுகள்

வெசாக் தினத்தில் ஞானசார தேரருக்கு விடுதலை இல்லை

வெசாக் போயாவை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மகா சங்கத்தினர் மற்றும் பௌத்த சபையின் பீடாதிபதிகள் வெசாக் போயா தினத்தில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் ஞானசார தேரர் உள்ளடக்கப்படவில்லை.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 பேர் மற்றும் மஹர சிறைச்சாலையில் இருந்து 37 பேர் உட்பட நாடு முழுவதும் உள்ள சில சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெறவுள்ளவர்களில் பத்து பெண் கைதிகளும் அடங்குவர்.

https://thinakkural.lk/article/302268

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனவெறியன் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு ஈழத்திலுள்ள இந்துக்களை பிரதிபலிக்காத மோடியின் குழு கோரிக்கை

Vhg மே 23, 2024
1000247381.jpg

மோடியுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கும் RSS அமைப்பின் இலங்கை கிளையின்  ஒரு பிரிவாக  இலங்கை இந்து சம்மேளனம் என்ற பெயரில் இயங்கி வரும் அமைப்பு மதவெறியன் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் என்று கோரி வருகிறது. 

இனவாதியான தேரர் பொதுபலசேனா என்ற அமைப்பின் செயலாளராக கடந்த காலத்தில் ஏனைய மதங்களை குறிப்பாக இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டும் போலீஸ் அதிகாரியை தாக்கியும் நீதிமன்றத்தை அவமதித்தும், இனக்கலவரங்களை தூண்டி இஸ்லாமியர்களின் உடைமைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உயிர்களுக்கு சேதம் ஏற்படுத்துவது மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்  உட்பட பலவித அதர்ம செயல்களில் ஈடுபட்டுள்ளதுடன்  அடாவடி குற்றங்களையும்  புரிந்து வந்துள்ளார்.

புலிகளுக்கு எதிரான போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக .கருத்து தெரிவித்த நிலையில் 2010 இல் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மறைவுக்கு நீதி கேட்டு போராடிய அவருடைய மனைவி சந்தியாவை அச்சுறுத்திய தேரர் youtube தளம் மூலம் தொடர்ச்சியாக பௌத்த சிங்கள இனவாத மதவாத கருத்துக்களை பரப்பி வந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் 2019 பதவிக்கு வந்த சக இனவாதியான கோத்தபாயவினால் ஜனாதிபதி மன்னிப்பு என்ற பெயரில் விடுவிக்கப்பட்டதோடு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் தலைவராகவும் நியமிக்கப்பட்டு இனவெறி கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு இருந்தார். 

இந்த நிலையில் இலங்கையில் ஆயுதப்படையினர் மற்றும் இனவெறிக் கும்பல்களினால் அழிக்கப்பட்ட பல சைவ மற்றும்  இந்துக் கோவில்களுக்கு எந்தவித ஆதரவையும் வழங்காத மோடியின் மதவாதக் குழு இலங்கையில் உட்புகுந்து இன வெறியன்  ஞானசார தேரரின் விடுதலையை கோரி நிற்பது குறித்து  ஈழத்தமிழர்களும் சைவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். 

இதேவேளை ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தில் இருந்து பல்டி அடித்து தேரர்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ள உலக தமிழர் பேரவை மற்றும் கனடிய தமிழர் காங்கிரஸ் ஆகியவற்றின் தற்போதைய கூட்டாளிகள் ஆகியுள்ள மகாநாயக்கர்களும் தேரர்களும்  கூட தேர்தலுக்கு முன்னர் ஞானசார தேரரின் விடுதலையை கோரி நிற்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த காலத்தில் செய்த எந்த ஒரு கொடுஞ் செயலுக்கும் தவறுகளுக்கும் வருந்தாத மன்னிப்பு கோராத இவரை விடுதலை செய்வது பொருத்தமானதா? 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகெலாம்! 

Dr முரளி வல்லிபுரநாதன் 
 
https://www.battinatham.com/2024/05/blog-post_202.html

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2024 at 04:54, தமிழ் சிறி said:

ganasara-thero.jpg?resize=600,375&ssl=1

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு இந்து சம்மேளனம் கோரிக்கை!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது

2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, இன, மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். சமூகத்தில் தீவிரவாதசக்திகளின் செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கும் நடவடிக்கையில் ஞானசார தேரர் ஈடுபட்டதாகவும் பாதுகாப்பு படையினருக்கும் ஆதரவளித்தாகவும் மகாநாயக்க தேரர்கள் அவர்களின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் சிங்கள – பௌத்த தேசியத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, வெசாக் போயா தினத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக ஆதரவுடன் செயற்பட்ட ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் தற்போது கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1383462

சாயம் வெளுக்கிறது. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

சாயம் வெளுக்கிறது. 

😁

இந்த குரூப்பை இயக்குவது  இந்தியா. 
அவர்களுக்கு சிங்களத்தின் நலனைவிட தமிழர்கள் ஒரு பொருட்டே அல்ல.
எத்தனையோ... கோவில்களை இடித்து விகாரை கட்டும் போதெல்லாம் இவர்கள் எங்கே போனவர்கள்? இப்ப வந்து...   ஞானசார தேரருக்கு மன்னிப்பு கொடுக்கட்டாம் என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்கிறார்கள். வெட்கம் அற்றவர்கள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த குரூப்பை இயக்குவது  இந்தியா. 
அவர்களுக்கு சிங்களத்தின் நலனைவிட தமிழர்கள் ஒரு பொருட்டே அல்ல.
எத்தனையோ... கோவில்களை இடித்து விகாரை கட்டும் போதெல்லாம் இவர்கள் எங்கே போனவர்கள்? இப்ப வந்து...   ஞானசார தேரருக்கு மன்னிப்பு கொடுக்கட்டாம் என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்கிறார்கள். வெட்கம் அற்றவர்கள். 

இந்தியா என்று சொல்வது சரியானதுதான். ஆனால் எங்கள் ஆட்களில் உயர்மட்டங்களில்(சாதி, சமய, அரசியல், பொருளாதா, சமூக  மட்டங்களில்  இருப்பவர்களில்)  ஒருபகுதியினரின் ஆதரவு அவர்களுக்கு (இந்திய +இலங்கை அரசுகளுக்கு) எப்போதும் இருந்துகொண்டே இருப்பது மறுக்க முடியாத உண்மை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.