Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை! பிரதமர் மோடி பரபரப்பு தகவல்…
MAY 22, 2024

டெல்லி: என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பரமாத்மாதான்,  ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என பிரதமர் மோடி கூறினார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

18வது மக்களவையை அமைப்பதற்காக நாடு முழுவதும் தேர்தல் பிரசார பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 5 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே நடைபெற உள்ளது. இதையடுத்து, ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்கிடையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் கடுமையாக போராடி வருகின்றன.

இநத் நிலையில், தனியார் ஊடகத்துறையினருடன், நாட்டின் தற்போதைய நிலைமை, பாஜகவின் வளர்ச்சி, அரசியல் மற்றும் ஆன்மிகம்  தொடர்பாக  பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, நான் பயாலிஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை, என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பராம்த்மாதான் என்றவர், அனைத்து இந்தியர்களுக்கும் சேவை செய்யவே நான் வந்துள்ளதாக தெரிவித்தவர், பாஜக அல்லாத மாநிலங்கள் மற்றும் தென்னிந்தியாவில் பாஜகவின் செயல்பாடு குறித்து பேசியதுடன்,  தென் மாநிலங்களில் ஊழல் மற்றும் வம்ச அரசியலை விமர்சிக்கிறார், மாற்றத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

தனது வாழ்க்கை குறித்து பேசிய பிரதமர் மோடி, என் தாயார் உயிரோடு இருந்தவரை,  இந்த உலகிற்கு நாள் என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந் தேன். ஆனால், என் தாயின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்து பார்த்தேன், அதில் கிடைத்த தெளிவுகளைத் தொடர்ந்து, இப்போது நான் பலவற்றை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன் என்றார். சிலர் எனது கருத்துக்கு எதிராக பேசலாம், ஆனால், நான் இதை முழு மனதாக நம்புகிறேன், என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பரமாத்மாதான் என்றவர், நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றார். எந்தவொரு விஷயத்தையும் நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காகவே கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருப்பதாகவும், நான் என்ன செய்தாலும் தெய்வீக சக்தியால் ஈர்க்கப்பட்டு, இந்த வேலையைச் செய்ய கடவுள் என்னை அனுப்பியுள்ளார், நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருப்பது கிடையாது கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/political-news/prime-minister-modi-said-am-not-human-being-not-born-biologycally/

https://patrikai.com/god-sent-me-to-this-world-prime-minister-modi-sensational-information/

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரசோதரன் said:

டெல்லி: என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பரமாத்மாதான்,  ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என பிரதமர் மோடி கூறினார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆமா ஆமா

அதுதான் குஜராத்தில் நடத்தி காட்டியாச்சே.

இன்னுமா அடங்கல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆமா ஆமா

அதுதான் குஜராத்தில் நடத்தி காட்டியாச்சே.

இன்னுமா அடங்கல.

எவ்வளவு கிறுக்கர்களாக இருக்கின்றார்கள் இவர்கள்....... இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இவர் தான் எங்கள் தலைவரென்றும் சொல்லுகின்றார்கள் என்றால், மனித மூளை வர வர சின்னதாகப் போகின்றது என்ற அந்தஆராய்ச்சி முடிவில் ஏதோ பிழை இருக்க வேண்டும்.....மூளையே வெறும் கபாலம் ஆகுது போல. 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

கடைஞ்செடுத்தா ***.  மீடியாவை நேரடியாகச் சந்திக்க வக்கில்லை. அதுக்குள்ளை வந்திட்டார் தானும் ஒரு ஆள் எண்டு.  இந்தியாவின் இங்லிஷ் தெரியாத ஒரேயொரு பிரதமர் என்ற பெருமை வேறு! இந்த *** பரமாத்மா அனுப்பினாரெண்டால் பாருங்கவன் பரமாத்மாவின் நிலைமையை!

Edited by இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, வாலி said:

கடைஞ்செடுத்தா ***.  மீடியாவை நேரடியாகச் சந்திக்க வக்கில்லை. அதுக்குள்ளை வந்திட்டார் தானும் ஒரு ஆள் எண்டு.  இந்தியாவின் இங்லிஷ் தெரியாத ஒரேயொரு பிரதமர் என்ற பெருமை வேறு! இந்த *** பரமாத்மா அனுப்பினாரெண்டால் பாருங்கவன் பரமாத்மாவின் நிலைமையை!

🤣....

ஓங்கி ஒரே போடாகப் போட்டு விட்டீர்கள்..........

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள்தான் என்னை அனுப்பி வைத்தார் - மோடி பேட்டி

23 MAY, 2024 | 02:51 PM
image
 
கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார். நான் சோர்வடையாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு கடவுள் அளித்த சக்திதான் காரணம் என்று இந்திய பிரதமர்பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்திய பிரதமர்பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது எப்போதும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவது எப்படி என்று பிரதமர் மோடியிடம், செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில்: நான் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றி வருகிறேன். நான் கடவுளால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டவன். நான் சோர்வடையாமல் பணியாற்றுவதற்கு கடவுள் கொடுத்த பரிசுதான் அந்த சக்தி. என் தாயின் மரணத்துக்குப் பின்னர் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். ரத்தமும் சதையும் கலந்த உடல்ரீதியான சக்திதான் அனைவரையும் இயக்குவதாக நினைத்திருந்தேன்.

அப்படி இல்லையென்பதை இப்போது உணர்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன். என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த கடவுள்தான்.

ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி அதில் கூறியுள்ளார். பிரதமரின் இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் நேற்று மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கான வாகனப் பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது. இதனால் அந்த நாட்டுக்கு நாம் பயப்படவேண்டும் என்று இங்குள்ள கட்சித் தலைவர்கள் பயந்து கொண்டு இருந்தனர்.

ஆனால் எதிரிகள் நம் நாட்டை சீண்ட முயன்றபோது அவர்களது நாட்டுக்குள்ளேயே நுழைந்து அவர்களைத் தாக்கி அழித்தோம். பாகிஸ்தானுக்காக சமாஜ்வாதியும், காங்கிரஸ் கட்சியும் இன்னும் அனுதாபப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

உ.பி.யில் 79 தொகுதிகளை இண்டியா கூட்டணி வெல்லும் என்று அகிலேஷ் யாதவ் கூறுகிறார். ஆனால் அது நடக்கப் போவதில்லை. நாட்டு நலனுக்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. மறுபக்கம், நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த இண்டியா கூட்டணி முயற்சிக்கிறது. நாடு வளம் பெற மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

https://www.virakesari.lk/article/184314

  • கருத்துக்கள உறவுகள்

ஏவாளுக்கு தொப்புள் (belly button) இல்லாதது போலவே, மோடி ஜீக்கும் தொப்புள் இருக்காதென நினைக்கிறேன்😂.

கொசுறு தகவல்: "வானில் இருந்து குதித்த நீலக்கண் தேவதையான" கரோலினா குர்க்கோவா என்ற அழகிக்கும் தொப்புள் இல்லை என்கிறார்கள்!  

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6515.jpeg.bf8b5fca578fed485ca1

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் கலவரத்தை தூண்டக் கூடாது’’ - மோடியின் பேச்சுக்கு மம்தா எதிர்வினை

29 MAY, 2024 | 03:38 PM
image
 
கொல்கத்தா: கடவுள்தான் தன்னை அனுப்பி வைத்ததாக இந்திய பிரதமர்பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், நரேந்திர மோடி கடவுள் என்றால் அவர் அரசியலில் ஈடுபடக் கூடாது; கலவரத்தை தூண்டக் கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் அவர் பேசியது. “ஒருவர் சொல்கிறார் அவரை கடவுளுக்கு எல்லாம் கடவுள் என்று. மற்றொருவர் சொல்கிறார் புரி ஜெகந்நாதரே அவருடையே பக்தர் என்று. அவர் கடவுள் என்றால் அரசியலில் ஈடுபட கூடாது. கடவுள் கலவரத்தை தூண்டக் கூடாது.

அவருக்கு கோயில் கட்டுவோம். பிரசாதம், பூக்கள் போன்றவை வழங்குவோம். நான் பல்வேறு பிரதமர்களுடன் பணியாற்றி உள்ளேன். வாஜ்பாய், மன்மோகன் சிங், ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ், தேவகவுடா ஆகியோருடன் பணியாற்றி உள்ளேன். ஆனால், இவரைப் போன்ற பிரதமரை நான் பார்த்தது இல்லை. அந்த மாதிரியான பிரதமர் நமக்கு வேண்டவே வேண்டாம்” என மம்தா கூறினார்.

மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி அண்மையில் பேட்டியளித்தார். அப்போது எப்போதும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவது எப்படி என்று பிரதமர் மோடியிடம், செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில்: நான் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றி வருகிறேன். நான் கடவுளால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டவன். நான் சோர்வடையாமல் பணியாற்றுவதற்கு கடவுள் கொடுத்த பரிசுதான் அந்த சக்தி. என் தாயின் மரணத்துக்குப் பின்னர் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். ரத்தமும் சதையும் கலந்த உடல்ரீதியான சக்திதான் அனைவரையும் இயக்குவதாக நினைத்திருந்தேன். அப்படி இல்லையென்பதை இப்போது உணர்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன். என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த கடவுள்தான் என தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/184791

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2024 at 11:54, ரசோதரன் said:

நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை! பிரதமர் மோடி பரபரப்பு தகவல்…
MAY 22, 2024

டெல்லி: என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பரமாத்மாதான்,  ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என பிரதமர் மோடி கூறினார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

18வது மக்களவையை அமைப்பதற்காக நாடு முழுவதும் தேர்தல் பிரசார பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 5 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே நடைபெற உள்ளது. இதையடுத்து, ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்கிடையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் கடுமையாக போராடி வருகின்றன.

இநத் நிலையில், தனியார் ஊடகத்துறையினருடன், நாட்டின் தற்போதைய நிலைமை, பாஜகவின் வளர்ச்சி, அரசியல் மற்றும் ஆன்மிகம்  தொடர்பாக  பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, நான் பயாலிஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை, என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பராம்த்மாதான் என்றவர், அனைத்து இந்தியர்களுக்கும் சேவை செய்யவே நான் வந்துள்ளதாக தெரிவித்தவர், பாஜக அல்லாத மாநிலங்கள் மற்றும் தென்னிந்தியாவில் பாஜகவின் செயல்பாடு குறித்து பேசியதுடன்,  தென் மாநிலங்களில் ஊழல் மற்றும் வம்ச அரசியலை விமர்சிக்கிறார், மாற்றத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

தனது வாழ்க்கை குறித்து பேசிய பிரதமர் மோடி, என் தாயார் உயிரோடு இருந்தவரை,  இந்த உலகிற்கு நாள் என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந் தேன். ஆனால், என் தாயின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்து பார்த்தேன், அதில் கிடைத்த தெளிவுகளைத் தொடர்ந்து, இப்போது நான் பலவற்றை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன் என்றார். சிலர் எனது கருத்துக்கு எதிராக பேசலாம், ஆனால், நான் இதை முழு மனதாக நம்புகிறேன், என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பரமாத்மாதான் என்றவர், நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றார். எந்தவொரு விஷயத்தையும் நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காகவே கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருப்பதாகவும், நான் என்ன செய்தாலும் தெய்வீக சக்தியால் ஈர்க்கப்பட்டு, இந்த வேலையைச் செய்ய கடவுள் என்னை அனுப்பியுள்ளார், நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருப்பது கிடையாது கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/political-news/prime-minister-modi-said-am-not-human-being-not-born-biologycally/

https://patrikai.com/god-sent-me-to-this-world-prime-minister-modi-sensational-information/

மோதியை ஒரு பக்கம் வைப்போம். மோதியின் அதிகாரம் எமக்கு கிடைத்தால் மோதியின் இடத்தில் நாம் நின்றால் என்ன சொல்வோம்?

ஒரு கற்பனை:

நான் தான் கடவுள்

நான் கடவுள்

நான் தான் கடவுள் என்று சொன்னாலும் சொல்ல மாட்டோமா என்ன? 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நியாயம் said:

மோதியை ஒரு பக்கம் வைப்போம். மோதியின் அதிகாரம் எமக்கு கிடைத்தால் மோதியின் இடத்தில் நாம் நின்றால் என்ன சொல்வோம்?

ஒரு கற்பனை:

நான் தான் கடவுள்

நான் கடவுள்

நான் தான் கடவுள் என்று சொன்னாலும் சொல்ல மாட்டோமா என்ன? 😁

நீங்க நியாயமா

அநியாயமா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க நியாயமா

அநியாயமா?

அதிகாரம் ஒரு போதை.

போதையை அடிக்க அடிக்க அது இன்னும் இன்னும் அதிகளவில் தேவைப்படும். அதிகாரத்தின் தாக்கமும் அப்படித்தானே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நியாயம் said:

மோதியை ஒரு பக்கம் வைப்போம். மோதியின் அதிகாரம் எமக்கு கிடைத்தால் மோதியின் இடத்தில் நாம் நின்றால் என்ன சொல்வோம்?

ஒரு கற்பனை:

நான் தான் கடவுள்

நான் கடவுள்

நான் தான் கடவுள் என்று சொன்னாலும் சொல்ல மாட்டோமா என்ன? 😁

😀.....

நீங்கள் சொல்வது போலவே அதிகாரம் கிடைத்தால் நானே கடவுள் என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள், எப்போதும் இருப்பார்கள்.

அதிகாரங்கள் கிடைத்த பின், இன்னும் அமைதியாகவும், எளிமையாகவும் நடப்பவர்களும் எப்போதும் உண்டு.

உள்ளே ஒரு சக்கரவர்த்தி என்ற நினைப்பு இருந்தாலும், வெளியே அநியாயத்திற்கு அடக்கமாக இருப்பவர்களும் உண்டு. இந்த வகையினர் இப்பொழுது கொஞ்சம் அதிகம் என்றே நினைக்கின்றேன்.

பறவைகள் பல விதம் என்பார்கள். அதை விட மனிதர்கள் அதிக விதம்.

எது என்னவாயினும், ஒருவர் எந்த நிலையிலும் ஏதாவது 'உளறிக் கொட்டி விட்டால்' அதை மற்றவர்களால் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஜீ இப்போது அதிகமாக 'உளறுகின்றார்'. இந்த வாரம் இன்னும் ஒரு பேட்டியில், 'நான் புகழுக்காக எதையும் செய்வதில்லை. என்னுடைய புகழை அளக்கவே முடியாது....' என்று ஏதேதோ சொல்லிக் கொண்டே போனார்..........🫣 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.