Jump to content

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நிழலி said:

இன்று போரைத் தாங்கி, எல்லாவற்றையும் எதிர்கொண்ட தமிழ் பொது மக்களையும் துரோகிகள் என சொல்லத் தொடங்கப் போகின்றோம்..

ஈற்றில்முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று எம்மை நாமே துரோகி என அழைத்து எம் கழுத்தை நாமே அறுத்து எம்மை கொல்வோம்.

யாழ்ப்பாணத் தமிழர்களை அரசியலில் இருந்து ஒதுங்கவைத்திருப்பது இன்றைய அரசியல்வாதிகளின் செயற்பாடுகள்தான் என்று நான் எழுதும்போது, நான் அவர்களைத் துரோகிகள் என்று கூறுகிறேன் என்று நீங்கள் கருதினால் நான் என்ன செய்வது? 

முள்ளிவாய்க்காலில் இனவழிப்பிற்கு நீதிகேட்டு அழும் தமிழர்களையும், நாகவிகாரையில் வேடிக்கை பார்க்கும் தமிழர்களையும் நான் ஒப்பிட்டால், நான் அவர்களைத் துரோகிகளாகப் பார்க்கிறேன் என்று நீங்கள் நினைப்பது உங்களின் விருப்பம், அதிலும் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை.

தமிழர்களாக ஒன்றிணையுங்கள், சேர்ந்தே போராடலாம் என்று நானழைப்பது உங்களைப்பொறுத்தவரையில் அவர்களை நான் துரோகிகளாக பார்க்கிறேன் என்று பட்டால், மன்னித்துக்கொள்ளுங்கள், அது எனது நோக்கமில்லை.

மேய்ப்பாரின்றி அநாதைகளாக நிற்கிறோம். இதுதான் எனது ஆதங்கம். முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள். எனக்கு நேராகவே எழுதலாம், மூன்றாம் மனிதர் போன்று ஏன் பொதுவாக எழுதுகிறீர்கள்?

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Justin

இது எவ்வளவு பயனுள்ளதோ தெரியாது, ஆனால் சொல்ல வேண்டும். 2020 பொதுத் தேர்தல் நேரம், சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தில் பல தரப்பினர் ஈடுபட்டிருந்தனர். முன்னாள் மூத்த போராளியான மனோகரன் (காக்கா அண்ணா

ரஞ்சித்

கொழும்பில் வேடிக்கையாக வெசாக் பார்க்கப்போவதற்கும், யாழ்ப்பாணத்தில் வெசாக் பார்க்கப்போவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரைகள் என்னைப்பொறுத்தவரை ஆக்கிரம

நிழலி

எதிர்காலத்தில் இப்படியும் எம் வரலாற்றை நாம் எழுதிக் கொள்வோம்: தொடக்கத்தில் தமிழ் அரச பிரதிநிதிகளை துரோகிகள் என்றோம், பின் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளை, தமிழ் அரசியல்வாதிகளை துரோகிகள் என்றோம

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

சகட்டு மேனிக்கு எல்லாரையும் போட்டுத் தாக்கினால், அடுத்த தலைமுறையில் "தமிழ் தேசியம்" என்று வாய் திறந்தாலே ஊரில் அடி தான் விழும்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்த கருத்து எப்படி துரோகிகள் என்ற முத்திரை குத்தலுக்குள் நகர்ந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Sasi_varnam said:

ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்த கருத்து எப்படி துரோகிகள் என்ற முத்திரை குத்தலுக்குள் நகர்ந்தது?

யாழ்ப்பாணத்தில் வெசாக் கூடுகளைப் பார்க்கப்போன தமிழர்களை முள்ளிவாய்க்காலில் அழுத தமிழர்களுடன் ஒப்பிட்டு விமர்சித்தேன். அப்படி விமர்சிப்பதால் நான் அவர்களைத் துரோகிகள் பட்டியலில் சேர்த்துவிட்டதாக நிழலி நினைக்கிறார். அவ்வளவுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

எதிர்காலத்தில் இப்படியும் எம் வரலாற்றை நாம் எழுதிக் கொள்வோம்:

தொடக்கத்தில் தமிழ் அரச பிரதிநிதிகளை துரோகிகள் என்றோம்,

பின் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளை, தமிழ் அரசியல்வாதிகளை துரோகிகள் என்றோம்,

பின் போராட போன சக தமிழ் இயக்கங்களை துரோகிகள் என்றோம்,

பின் சக போராளிகளையே துரோகிகள் என்றோம்.

இன்று போரைத் தாங்கி, எல்லாவற்றையும் எதிர்கொண்ட தமிழ் பொது மக்களையும் துரோகிகள் என சொல்லத் தொடங்கப் போகின்றோம்..

ஈற்றில்முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று எம்மை நாமே துரோகி என அழைத்து எம் கழுத்தை நாமே அறுத்து எம்மை கொல்வோம்.

யாரும் யாரையும் துரோகிகள் என்று எழுதியதாக தெரியவில்லை. 

இங்கே சிலர் இதை தவிப்பது எதிர்கால புத்தமதம் மற்றும் அதன் துணை விரிவாக்கத்துக்கு நாமே பாரிய இடங்களை ஓதுக்கவேண்டிய வழிகளை திறந்து விடுகிறோம் என்பதாக அமையும் என்று விசனம் செய்கிறார்கள். அவ்வளவு தான். நன்றி. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

நாவற்குழியில், திருகோணமலையில், தையிட்டியில் இதே இராணுவம் தான் விகாரையினைக் கட்டியது. நாவற்குழி விகாரைக்கு முதன்முதலான சமய அனுட்டானங்களை ஆரம்பித்து வைத்தவனே சவேந்திர சில்வாதான். இன்று, வடக்குக் கிழக்கில் ஆக்கிரமித்து நிற்கும் எல்லா இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலீஸ் முகாம்களுக்குள்ளும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடாத்தாக விகாரைகளைக் கட்டிவருவதும் அதே இராணுவம்தான். மாங்குளத்தில் கட்டப்பட்ட விகாரையினைச் சுற்றிச் சிங்களக் கிராமமும், நாவற்குழியில் சிங்களக் கிராமமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

சாதாரண சிங்கள வியாபாரிகளும், மக்களும் இல்லாததால்த்தான் இராணுவம் பண்டிகை நடத்தியது, மென்பானம் கொடுத்தது என்று எழுதுகிறீர்களே? ஆக்கிரமிப்பை நடத்துவது இராணுவம். அதன்பின்னரே சாதாரண மக்களும், வியாபாரிகளும் கொண்டுவந்து இறக்கப்படுவார்கள். வடக்குக் கிழக்கு பூகோள இணைப்பை உடைத்தெறிய‌ மணலாற்றில் 80 களில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களுக்குப் பாதுகாப்பாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. பின்னர், அந்த இராணுவ முகாம்களைச் சுற்றி மென்மேலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். முகாம்களுக்கு சிங்கள மக்கள் பாதுகாப்பு, சிங்கள மக்களுக்கு முகாம்கள் பாதுகாப்பு என்று அன்று அரசு திட்டமிட்டுக் குடியேற்றம் செய்தது, இன்றும் அப்படித்தான்.

உங்களுக்குப் புரியாது. எழுதினால், என்னை மனநலம் குறைவானவன் என்று எழுதுகிறீர்கள். ஏதோ செய்துவிட்டுப் போங்கள்.  

 

நீங்கள் கடைசியாக இலங்கைக்கு எப்போது சென்றீர்கள்? 

நீங்கள் கூறும் கருத்துக்கள் பலவற்றுடன் உடன்படுகின்றேன். ஆனால், இங்கே அங்குள்ள மக்களின் விருப்பங்கள், செளகரியங்களுக்குத்தான் நான் முதலிடம் கொடுக்கின்றேன். 

நீண்டகாலம் இயக்கத்தில் பணியாற்றி கடைசி போரின் பின் பொதுவாழ்வில் இணைந்த பலர் உள்ளார்கள். 

இலங்கை இராணுவத்தில் தமிழர்கள் சிவிலியன் பதவிகளில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். 

அங்குள்ள சிறார்கள், சிறுமிகளுடன் எதிர்காலம் பற்றி பேசும்போது உங்களுக்கு வளர்ந்து என்னவாக விருப்பம் என்றால் போலிஸ் அதிகாரியாக வர விருப்பம் எனும் பதில்களும் வருகின்றன.

திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கள், ஓரம் கட்டலை மறுப்பதற்கு இல்லை. ஆனால், அங்கே மக்களுக்கு அவரவர் பிரச்சனை. தனிநபர்களாகவே சமூகத்தில் தமக்குரிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

அப்பா என்னை வெசாக் கூடு பார்க்க கூட்டிக்கொண்டு போ என பிள்ளை கேட்டால் அதற்கு “ஆமி மாமா பொல்லாதவர் அங்கை நாங்கள் போகக்கூடாது” என விளக்கம் கொடுக்க முடியுமா? 

இலங்கை சென்ற சமயங்களில் பல்வேறுபட்ட அனுபவம் உள்ளவர்களுடன் பேசினேன். ஆறு, ஏழு வயதில் இராணுவ காப்பரண்களில் இராணுவம் கொடுத்த தானத்தை உட்கொண்ட இருபது வயது பிள்ளைகளிடம் எமது அனுபவத்தை எதிர்பார்க்க முடியாது. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்ககாலில் தமது குடும்ப உறவுகளை நினைத்து அழுத தமிழர்களையும் வெசாக் கூடுகளை ரசித்த தமிழர் களையும் இரு வேறுபட்ட தமிழராக நினைத்து ஒப்பிட்டு பார்ப்பதே சுத்த அபத்தம்.   இவர்களில் இருவரும்  ஒருவராக இருக்கும் சாத்தியமும் உண்டு. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

எதிர்காலத்தில் இப்படியும் எம் வரலாற்றை நாம் எழுதிக் கொள்வோம்:

தொடக்கத்தில் தமிழ் அரச பிரதிநிதிகளை துரோகிகள் என்றோம்,

பின் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளை, தமிழ் அரசியல்வாதிகளை துரோகிகள் என்றோம்,

பின் போராட போன சக தமிழ் இயக்கங்களை துரோகிகள் என்றோம்,

பின் சக போராளிகளையே துரோகிகள் என்றோம்.

இன்று போரைத் தாங்கி, எல்லாவற்றையும் எதிர்கொண்ட தமிழ் பொது மக்களையும் துரோகிகள் என சொல்லத் தொடங்கப் போகின்றோம்..

ஈற்றில்முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று எம்மை நாமே துரோகி என அழைத்து எம் கழுத்தை நாமே அறுத்து எம்மை கொல்வோம்.

இந்தக் கருத்தில் சாதாரணப் பொதுமக்களை சேர்த்தது அநாவசியமானது. அதுவும் இந்த திரியில் அப்படி கருத்துப்பட எழுதாத போது, மக்களைப் பற்றி தேவையற்று கூறப்பட்ட சொல். 

இந்த திரியில் கூற வந்த விடயம், நிலத்தை ஆக்கிரமிக்கிறார்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கிறார்கள், பல சீரழிவுகளை கண்டும் காணாமல் போகிறார்கள். அவைகளைப் பற்றியும் கொஞ்சம் சிந்திக்கத்தான் கேட்கப்படுகிறது. அப்படி கேட்பது தவறானாதாக தோன்றவில்லை. 

 

 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, P.S.பிரபா said:

இந்தக் கருத்தில் சாதாரணப் பொதுமக்களை சேர்த்தது அநாவசியமானது. அதுவும் இந்த திரியில் அப்படி கருத்துப்பட எழுதாத போது, மக்களைப் பற்றி தேவையற்று கூறப்பட்ட சொல். 

இந்த திரியில் கூற வந்த விடயம், நிலத்தை ஆக்கிரமிக்கிறார்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கிறார்கள், பல சீரழிவுகளை கண்டும் காணாமல் போகிறார்கள். அவைகளைப் பற்றியும் கொஞ்சம் சிந்திக்கத்தான் கேட்கப்படுகிறது. அப்படி கேட்பது தவறானாதாக தோன்றவில்லை. 

 

 

யார் என்ன தான் சொன்னாலும்

விடுதலை தேசியம் என்பது மக்கள் மனங்களில் நீறு பூத்த நெருப்பாக உள்ளது.

இதைப்பற்றி ஊரில் கதைக்க எனக்கும் பயம்.அங்குள்ளவர்களுக்கும் பயம்.

திறந்தவெளி சிறைச்சாலையில் உள்ளவர்களின் மனநிலை இது தான்.

அதையும் மீறி

சாந்தனின் இறுதி ஊர்வலம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மாவீரர்தினங்களின் போது 

தம்மையும் அறியாமல் வெளிப்படுத்துகிறார்கள்.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

 

நீங்கள் கடைசியாக இலங்கைக்கு எப்போது சென்றீர்கள்? 

நீங்கள் கூறும் கருத்துக்கள் பலவற்றுடன் உடன்படுகின்றேன். ஆனால், இங்கே அங்குள்ள மக்களின் விருப்பங்கள், செளகரியங்களுக்குத்தான் நான் முதலிடம் கொடுக்கின்றேன். 

நீண்டகாலம் இயக்கத்தில் பணியாற்றி கடைசி போரின் பின் பொதுவாழ்வில் இணைந்த பலர் உள்ளார்கள். 

இலங்கை இராணுவத்தில் தமிழர்கள் சிவிலியன் பதவிகளில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். 

அங்குள்ள சிறார்கள், சிறுமிகளுடன் எதிர்காலம் பற்றி பேசும்போது உங்களுக்கு வளர்ந்து என்னவாக விருப்பம் என்றால் போலிஸ் அதிகாரியாக வர விருப்பம் எனும் பதில்களும் வருகின்றன.

திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கள், ஓரம் கட்டலை மறுப்பதற்கு இல்லை. ஆனால், அங்கே மக்களுக்கு அவரவர் பிரச்சனை. தனிநபர்களாகவே சமூகத்தில் தமக்குரிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

அப்பா என்னை வெசாக் கூடு பார்க்க கூட்டிக்கொண்டு போ என பிள்ளை கேட்டால் அதற்கு “ஆமி மாமா பொல்லாதவர் அங்கை நாங்கள் போகக்கூடாது” என விளக்கம் கொடுக்க முடியுமா? 

இலங்கை சென்ற சமயங்களில் பல்வேறுபட்ட அனுபவம் உள்ளவர்களுடன் பேசினேன். ஆறு, ஏழு வயதில் இராணுவ காப்பரண்களில் இராணுவம் கொடுத்த தானத்தை உட்கொண்ட இருபது வயது பிள்ளைகளிடம் எமது அனுபவத்தை எதிர்பார்க்க முடியாது. 

இப்போது ஒரு கேள்வி வருகிறது

எமது நிலத்தை ஆக்கிரமித்து புத்த மதத்தை புகுத்துகின்றார்கள் என்றும் ஒரு குரலும் போராட்டமும் அங்கே இருந்து வருகிறது இல்லையா? அந்த அபலக்குரலுக்கு நாம் ஆதரவு கொடுக்கிறோம் அல்லவா?

அந்த அபலக்குரலுக்கு அங்குள்ளவர்களின் இச்செயல் சாதகமானதாக இல்லையா?

இப்போது இதில் எதை நாம் ஆதரிப்பது???????

  • Confused 1
Link to comment
Share on other sites

 

On 23/5/2024 at 22:28, ரஞ்சித் said:

ஐந்து நாட்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் பலியிடப்பட்ட ஒன்றரை இலட்சம் மக்களின் நினைவினை கண்ணீர் மல்க அனுசரித்த தமிழினத்தின் இன்னொரு பகுதி, அவ்வாறு அழித்தவன் நடத்தும், அவனது சொந்த இன, மத நிகழ்வை கண்டுகளிக்க அவதிப்பட்டு ஓடுகிறது.

இலங்கையர்களாக இணைவோம், அடையாளம் துறப்போம், தேசியம் பேசோம் என்று கூவுபவர்கள் வரிசையில் வாருங்கள், வந்து வையுங்கள். 

 

ரஞ்சித்,

நீங்கள் அவர்களை துரோகிகளாக பார்க்கின்றீர்கள் என்று நேரிடையாக எழுதவில்லை. ஆனால் இந்த ஒப்பீட்டின் மூலம் என்னத்தை சொல்ல வருகின்றீர்கள்? ஒரு கூட்டம் தேசியம் சார்ந்ததாகவும், இன்னொரு கூட்டம் ஆக்கிரமிப்பு படையை ஆதரிக்கும் கூட்டமாகவும் நீங்கள் வசதியாக கணித்துள்ளீர்கள். இவ்வாறு ஆக்கிரமிக்கும் சிங்கள படையை ஆதரிக்கின்றவர்களைத் தான் நாம் ஒரு காலத்தில் துரோகிகள் என்று பெயரிட்டு, மண்டையிலும் போட்டு, அதற்கு ஆராவாரமாக ஆதரவும் கொடுத்து இருந்தோம்.

இல்லை இந்த ஒப்பீட்டின் மூலம் நான் அவர்களை துரோகிகளாக எழுதவில்லை என்று நீங்கள் சொன்னால், நான் அதை நம்பும் அதே வேளை, நான் உங்கள் எழுத்தின் மூலம் உணர்ந்து கொண்டது அதைத் தான் என்பதை மறுக்கவில்லை.  

நிற்க,

இந்த இரண்டும் வெவ்வேறு கூட்டம் என்பதே என்னைப் பொறுத்தவரைக்கும் தவறான கண்ணோட்டம். இரண்டிலும் கலந்து கொண்டவர்களும், கலந்து கொள்ள விரும்பியும் போக முடியாமல் போனவர்களும் இருக்க கூடிய சந்தர்ப்பம் தான் அதிகம்.

வெசாக் பந்தலை பார்க்க போனவர்களை ஆதரிப்பவர்கள் இலங்கையர்களாக இணைவோம், அடையாளம் துறப்போம், தேசியம் பேசோம் என்று கூவுபவர்கள் வரிசையில் வைத்து பார்பது உங்களுக்கு சரியாக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் இல்லை. 

Link to comment
Share on other sites

13 hours ago, ரஞ்சித் said:

 

மேய்ப்பாரின்றி அநாதைகளாக நிற்கிறோம். இதுதான் எனது ஆதங்கம். முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள். எனக்கு நேராகவே எழுதலாம், மூன்றாம் மனிதர் போன்று ஏன் பொதுவாக எழுதுகிறீர்கள்?

இந்த மேய்ப்பார்கள் எவரும் இல்லாமல் போனதுக்கு நாமும் ஒரு காரணம். ஏக பிரதி நிதித்துவத்தை வலியுறுத்தி, அப்படி ஏக பிரதிநிதியாக மாறுவதற்கு செய்த அரசியல் படுகொலைகளை நியாயப்படுத்தி அதை சரி என்று ஏற்றுக் கொண்டவர்கள் நாம், இன்று அதன் விளைவை பார்த்து விட்டு, கவலைப்படுகின்றோம்.

  • Like 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, விசுகு said:

இப்போது ஒரு கேள்வி வருகிறது

எமது நிலத்தை ஆக்கிரமித்து புத்த மதத்தை புகுத்துகின்றார்கள் என்றும் ஒரு குரலும் போராட்டமும் அங்கே இருந்து வருகிறது இல்லையா? அந்த அபலக்குரலுக்கு நாம் ஆதரவு கொடுக்கிறோம் அல்லவா?

அந்த அபலக்குரலுக்கு அங்குள்ளவர்களின் இச்செயல் சாதகமானதாக இல்லையா?

இப்போது இதில் எதை நாம் ஆதரிப்பது???????

உங்கள் வினா சிக்கலானது. சிந்தித்துப்பார்த்தேன். 

நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்?

எமது சமூகத்தில் மத மாற்றம் என்று பார்க்கப்போனால் வெவ்வேறு மிசனரிகளின் ஆதிக்கம்தான் கோலோச்சுகின்றது. நெருங்கிய உறவுகளுக்கே நீச்சல் தடாகத்தில் முக்கி எடுத்து புதியப்பிறப்பு கொடுக்கும்போது இப்போது நான் சாத்தான் ஆகிவிட்டேன். 

வடக்கு, கிழக்கு பகுதிகளில் புத்த விகாரைகள் புதிது புதிதாக முளைக்கும் பிரச்சனை உள்ளது. ஆனால் அதேசமயம் இலங்கையின் வேறு பகுதியில் அவை நடைபெறவில்லையா என்பது ஒரு விடயம். 

வேண்டா பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம். 

இலங்கையின் பிறபகுதிகளில் சாதாரணமாக எடுக்கப்படக்கூடிய பல விடயங்கள் தமிழர் பகுதிகளில் வரும்போது நுணுக்குகாட்டி பார்வைக்கு உள்ளாகுவதும், விமர்சனங்களினால் கிழிக்கப்படுவதும் ஒரு விதத்தில் தவிர்க்கப்பட முடியாதவையும் ஆகின்றன. இவை சந்தேகம், நம்பிக்கையின்மை, அதிகம் உணர்ச்சிகளை கிளறக்கூடிய வகையில் அமைவது இயல்பு. 

தமிழர்/சிங்களவர்/இன பிரச்சனை/முரண்பாடு ஒருபுறம் நிற்க, இலங்கையும், பெளத்தமும் ஒன்றுக்கொன்று பிரித்து பார்க்கமுடியாத விடயம் என்பது உண்மை. இந்த வகையில் பெளத்தம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தமிழர் உரிமைகள் விடயத்தில் அதிக கவனம் எடுப்பது, அக்கறை செலுத்துவது சிறந்தது என நினைக்கின்றேன். அவன் அங்க விகாரை கட்டுறான் இங்கை விகாரை கட்டுறான் என கொந்தளிப்பதை விட நமது தேவைகளை அடைவதை/பூர்த்தி செய்வதை பற்றி கவனம் செலுத்தலாமே.

எமது பிரச்சனை இலங்கையில் எமக்கு சம உரிமை கிடைக்காதமையா அல்லது பெளத்தம்/சிங்களவர் எமது வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துவதா?

நாம் பொதுவில் பெளத்த பேரினவாதம் என்றுதான் விளிக்கின்றோம். ஆனால் வரலாற்றை புரட்டி பார்த்தால் பெளத்தர் அல்லாத இலங்கையர்கள் தமிழர்களை/உரிமைகளை/பறிப்பதில்/ஒடுக்குவதில் வழங்கிய பங்கு அபரிமிதமானது. 

உங்கள் வினாவை நான் தொடர்ந்து சிந்தித்துப்பார்க்கின்றேன். 

Edited by நியாயம்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நியாயம் said:

உங்கள் வினா சிக்கலானது. சிந்தித்துப்பார்த்தேன். 

நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்?

வேண்டா பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம். 

நாம் பொதுவில் பெளத்த பேரினவாதம் என்றுதான் விளிக்கின்றோம். 

உங்கள் வினாவை நான் தொடர்ந்து சிந்தித்துப்பார்க்கின்றேன்

நான் ஒரு புலம்பெயர் தமிழன் ஒரு பிரெஞ்சுக்காரன். எனவே பலவற்றையும் கலந்து வாழ பழகிக்கொண்டவன் என்பதையும் ஆனால் எனக்கு நீதி காவல் சுதந்திரம் ஒரு பிரெஞ்சு வெள்ளை நிறத்தவருக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும். நன்றி. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரசோதரன் said:

ஓரு வெருட்டல் தான்....😀

😂 

அவரது கன்னத்தை ஒரு பேபி புலி சிலந்தியோ அல்லது ஒரு பெரிய நுளம்போ கடித்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

அவரது கன்னத்தை ஒரு பேபி புலி சிலந்தியோ அல்லது ஒரு பெரிய நுளம்போ கடித்திருக்கலாம்.

🤣.....

இந்த திரி படு சீரியஸான திரி.....இங்கு ஏதும் எழுத நினைத்தாலே கை கால் நடுங்கி, கன்னமும் அதுவா வீங்குது.........🤣.

உண்மயிலேயே அவர் அவர் நிலைப்பாடுகளில் மிக உறுதியானவர்கள் இங்கு களத்தில் பலர் உண்டு........🙏.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரசோதரன் said:

இந்த திரி படு சீரியஸான திரி.....இங்கு ஏதும் எழுத நினைத்தாலே கை கால் நடுங்கி, கன்னமும் அதுவா வீங்குது.........🤣.

உண்மயிலேயே அவர் அவர் நிலைப்பாடுகளில் மிக உறுதியானவர்கள் இங்கு களத்தில் பலர் உண்டு........🙏.

ஓம் மக்கள் அங்கே உறவுகளின் துயர் நிகழ்வுகளில் தாங்களாகவே கலந்து கொண்டபோது இங்கே திருப்தி அடைந்தார்கள். இப்போது அவர்கள் வெசாக் கொண்டாட்டங்களுக்கு போனதால் இவர்கள் படுகொதி நிலையை அடைந்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

எமது சமூகத்தில் மத மாற்றம் என்று பார்க்கப்போனால் வெவ்வேறு மிசனரிகளின் ஆதிக்கம்தான் கோலோச்சுகின்றது. நெருங்கிய உறவுகளுக்கே நீச்சல் தடாகத்தில் முக்கி எடுத்து புதியப்பிறப்பு கொடுக்கும்போது இப்போது நான் சாத்தான் ஆகிவிட்டேன். 

வடக்கு, கிழக்கு பகுதிகளில் புத்த விகாரைகள் புதிது புதிதாக முளைக்கும் பிரச்சனை உள்ளது. ஆனால் அதேசமயம் இலங்கையின் வேறு பகுதியில் அவை நடைபெறவில்லையா என்பது ஒரு விடயம்.

நீங்கள் சொன்னது உண்மை தான்.நில ஆக்கிரமிப்பு புத்த கோவில் அமைத்தல் பிரச்சரனகள் உள்ளன. ஆனால் மதத்தை புகுத்துவது என்றால் அது யேசுவை ஏற்று கொள்வது தான் நடைபெறுகின்றது நானும் அறிந்தேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

ஒரு கூட்டம் தேசியம் சார்ந்ததாகவும், இன்னொரு கூட்டம் ஆக்கிரமிப்பு படையை ஆதரிக்கும் கூட்டமாகவும் நீங்கள் வசதியாக கணித்துள்ளீர்கள்.

நிச்சயமாக இல்லை. ஒரு பகுதியினர் தமது இழப்புக்களுக்காக வருந்தும்போது, அதுகுறித்த பிரக்ஞையில்லாமல் சமூகத்தின் இன்னொரு பகுதி வளர்ந்து வருகிறது என்பதைத்தான் நான் கூற வந்தேன். அவர்களை நான் எதற்காகத் துரோகிகளாக்கவேண்டும்? அப்படி அவர்கள் என்ன துரோகம் செய்துவிட்டார்கள்? 

அவர்கள் ஆக்கிரமிப்புப் படையினை ஆதரிக்கிறார்கள் என்று நான் எழுதியதாகக் கூறுகிறீர்கள். எங்கே அப்படி எழுதினேன் என்பதைக் காட்ட முடியுமா? திருத்திக் கொள்கிறேன். நான் கூற வந்தது ஆக்கிரமிப்புப் படையின் சூட்சுமத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான். அவர்களின் இந்த அரசியல் தெளிவற்ற மனநிலையினைத்தான் நான் விமர்சிக்கிறேன். 

5 hours ago, நிழலி said:

இவ்வாறு ஆக்கிரமிக்கும் சிங்கள படையை ஆதரிக்கின்றவர்களைத் தான் நாம் ஒரு காலத்தில் துரோகிகள் என்று பெயரிட்டு, மண்டையிலும் போட்டு, அதற்கு ஆராவாரமாக ஆதரவும் கொடுத்து இருந்தோம்.

எவ்வளவு தவறான கருத்து. ஆரியகுளத்தில் விடுப்புப் பார்க்கச் சென்றவர்களை துரோகிகளாகக் காட்டி அவர்களை மண்டையில் போடவேண்டும் என்று நான் சொன்னேனா? ஏன் இப்படி எழுதுகிறீர்கள்? ஆக்கிரமிப்புப் படையினருக்கு ஆதரவாக இருந்து, சொந்த இனத்தின் இருப்பை அழித்தவர்களை மண்டையில் போட்டபோது நீங்களும், நானும் சரியென்றுதான் வாதிட்டோம். ஆனால், ஆரியகுளத்தில் வேடிக்கை பார்த்தவர்கள் ஆக்கிரமிப்புப் படைக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்று நான் எங்கு எழுதினேன்? அப்படியிருந்தால் திருத்திக்கொள்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

உங்கள் எழுத்தின் மூலம் உணர்ந்து கொண்டது அதைத் தான் என்பதை மறுக்கவில்லை.  

நீங்கள் என்னை முற்றாகத் தவறாகவே ஆரம்பத்திலிருந்து கணித்து எழுதுகிறீர்கள். எனது ஆதங்கம் யாழ்ப்பாணத்தில் இன்றிருக்கும் இளைய தலைமுறை அரசியல் மயப்படுத்தப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்குள் உருவான இந்தத் தலைமுறை எமது அவலங்கள் குறித்தோ, அரசியல்த் தேவைகள் குறித்தோ சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இன்னும் சில வருடங்களின் பின்னர் முள்ளிவாய்க்காலும் பலருக்கு மறந்துபோகும். எமது தாயகத்தில் ஆக்கிரமிப்பாளனினால் இறக்கிவிடப்படும் வானவேடிக்கைகள் மட்டுமே மனதில் நிறைந்திருக்கும். இதனைச் சுட்டிக் காட்டவே நான் இவ்வாறு எழுதுகிறேன். 

6 hours ago, நிழலி said:

இந்த இரண்டும் வெவ்வேறு கூட்டம் என்பதே என்னைப் பொறுத்தவரைக்கும் தவறான கண்ணோட்டம். இரண்டிலும் கலந்து கொண்டவர்களும், கலந்து கொள்ள விரும்பியும் போக முடியாமல் போனவர்களும் இருக்க கூடிய சந்தர்ப்பம் தான் அதிகம்.

இவர்கள் எல்லோருமே ஒரே மக்களாக இருக்கலாம். வாதிடவில்லை. எனக்கிருந்த கேள்வி, சில நாட்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் அழுது புரண்ட மக்களால் சிங்கள பெளத்த வேடிக்கை நிகழ்வையும் தரிசிக்க முடியுமா என்பதுதான். அது கடிணமாக இருக்கும் என்பதாலேயே அப்படி நினைத்து எழுதினேன். அது சரியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இதுகுறித்து வாதிடத் தேவையில்லை என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

வெசாக் பந்தலை பார்க்க போனவர்களை ஆதரிப்பவர்கள் இலங்கையர்களாக இணைவோம், அடையாளம் துறப்போம், தேசியம் பேசோம் என்று கூவுபவர்கள் வரிசையில் வைத்து பார்பது

இதுவும் தவறான கணிப்பே. வெசாக் பந்தலைப் பார்க்கப்போனவர்கள் இணக்க அரசியல் பேசுவதாகவும், தேசிய நீக்கம் செய்வதாகவும், இலங்கையராக இணைவதாகவும் நான் எங்கே கூறினேன்? அப்படிப் பேசிப்பேசியே இன்றைய தலைமுறையினை இன்றிருக்கும் அரசியல்வாதிகளும், நடுநிலைவாதிகளும், இணக்கவாதிகளும் மாற்றி வைத்திருக்கிறார்கள் என்றுதான் ஆதங்கப்படுகிறேன். மக்கள் தாமாக இணக்க அரசியலும், தேசிய நீக்கமும், சரணாகதி அரசியலும் செய்யப்போவதில்லை. அரசியல்வாதிகள் அவ்வாறு செய்வதாலேயே உங்களின் அரசியலும் வேண்டாம், நீங்களும் வேண்டாம் என்று மக்கள் ஒதுங்கிப் போகிறார்கள். இன்றிருக்கும் அரசியல் மயமற்ற தன்மையினை உருவாக்கியவர்கள் இந்த அரசியல்வாதிகள்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

இந்த மேய்ப்பார்கள் எவரும் இல்லாமல் போனதுக்கு நாமும் ஒரு காரணம். ஏக பிரதி நிதித்துவத்தை வலியுறுத்தி, அப்படி ஏக பிரதிநிதியாக மாறுவதற்கு செய்த அரசியல் படுகொலைகளை நியாயப்படுத்தி அதை சரி என்று ஏற்றுக் கொண்டவர்கள் நாம், இன்று அதன் விளைவை பார்த்து விட்டு, கவலைப்படுகின்றோம்.

80 களில் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டார்கள் என்று பல ஜனநாயக அரசியல்வாதிகளை புலிகள், டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் என்று பல அமைப்புக்கள் மண்டையில் போட்டன. மறுக்கவில்லை. . ஆனால், ஜனநாயகவழியில் எமது அரசியலைச் செய்யக் கூடிய சூழ்நிலை 2009 இற்குப் பின்னர் எமக்குக் கிடைத்தது. புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழர்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் அரசியலில் பாரிய பங்கினைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இன்று செய்துகொண்டிருப்பது என்ன? கடந்த 15 வருட காலத்தில் அவர்களால் தமிழினம் அடைந்துகொண்டவை என்ன? கடந்த 15 வருட காலத்தில் சிங்கள மயமாக்கலினை அவர்களால் எவ்வளவு தூரத்திற்குத் தடுக்க முடிந்தது? பல கட்சிகளைக் கொண்ட தமிழர்களின் ஒரே தெரிவாகவிருந்த கூட்டமைப்பு இன்று ஒற்றைக்கட்சியாகவும், அக்கட்சி இரண்டாக உடைந்து செயற்படுவதற்கே நீதிமன்றத் தடை வந்திருப்பதற்கும் யார் காரணம்? இதற்குக் கூட புலிகள் மண்டையில் போட்டதுதான் காரணம் என்கிறீர்களா? இல்லையே? கூட்டமைப்பை உருவாக்கியவர்களே புலிகள் தானே? தாமே உருவாக்கியவர்களை, தாம் அழிக்கப்பட்டு 15 வருடங்களின் பின்னரும் அவர்களால் மண்டையில் போடமுடியுமா என்ன? எமது ஜனநாயக அரசியல்வாதிகளின் கையாலாகத்தனத்தை இன்னும் எவ்வளவு காலத்திற்கு புலிகளின் மண்டையில் போடுதலால்த்தான் நான் இந்த நிலைக்கு வந்தோம் என்று கூறிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்?  

11 hours ago, P.S.பிரபா said:

இந்தக் கருத்தில் சாதாரணப் பொதுமக்களை சேர்த்தது அநாவசியமானது. அதுவும் இந்த திரியில் அப்படி கருத்துப்பட எழுதாத போது, மக்களைப் பற்றி தேவையற்று கூறப்பட்ட சொல். 

நான் பொதுமக்களைத் துரோகிகள் என்று எண்ணவுமில்லை, அப்படி எழுதவுமில்லை. அவர்களின் இனம்சார்ந்த  அரசியல் சூனியமாக்கப்பட்டு, எமது இருப்புக் குறித்த பிரக்ஞையற்ற அரசியல் ஒன்று அவர்கள் மேல் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. இதனை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் இல்லையென்பதே எனது வருத்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, P.S.பிரபா said:

இந்த திரியில் கூற வந்த விடயம், நிலத்தை ஆக்கிரமிக்கிறார்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கிறார்கள், பல சீரழிவுகளை கண்டும் காணாமல் போகிறார்கள். அவைகளைப் பற்றியும் கொஞ்சம் சிந்திக்கத்தான் கேட்கப்படுகிறது.

எனது நோக்கம் இதுதான். எம் கண்முன்னே நடக்கும் சிங்கள பெளத்த செயற்பாடுகளின் சூட்சுமத்தை நாம் பார்க்கத்தவறிவிடுகிறோம். எம்மை இன்று பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் சிலரின் இணக்க அரசியலினாலும், தேசியத் துறப்பினாலும் மக்கள் அரசியலில் இருந்து விலகிவருகிறார்கள், அல்லது நடக்கும் சூட்சுமத்தைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். நான் மக்களைத் துரோகிகளாக ஒருபோதும் நினைத்ததுமில்லை, எழுதியதுமில்லை. இது தவறாக என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 

12 hours ago, நியாயம் said:

நீங்கள் கடைசியாக இலங்கைக்கு எப்போது சென்றீர்கள்? 

25/11/2023

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 25/5/2024 at 20:08, ரஞ்சித் said:

எனது நோக்கம் இதுதான். எம் கண்முன்னே நடக்கும் சிங்கள பெளத்த செயற்பாடுகளின் சூட்சுமத்தை நாம் பார்க்கத்தவறிவிடுகிறோம். எம்மை இன்று பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் சிலரின் இணக்க அரசியலினாலும், தேசியத் துறப்பினாலும் மக்கள் அரசியலில் இருந்து விலகிவருகிறார்கள், அல்லது நடக்கும் சூட்சுமத்தைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். நான் மக்களைத் துரோகிகளாக ஒருபோதும் நினைத்ததுமில்லை, எழுதியதுமில்லை. இது தவறாக என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 

25/11/2023

ஒரு சின்ன உதாரணம் திரு சுமந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் விஜயம் செய்த போது சில பொன்(_) மொழிகளை உதிர்த்து இருந்தார்.
"எஜமான் நீங்க ரொம்ப நல்லவரு, யாழ்ப்பாண மக்கள் மீது  உங்களுக்கு சிறப்பு பிரியம் உண்டு. நீங்கள் இந்த மக்களுக்கு கடந்த வருடங்களில் நிறைய நல்லது செய்திருக்கிறீர்கள். 2004 தேர்தலில் உங்களுக்கு வாக்களிக்காமல் உங்கள் வெற்றியை அவர்கள் கேள்விக்குறியாக்கியதை இப்போது மனப்பூர்வமாக உணர்கிறார்கள்"  ...
இந்த செய்தியை சிங்கள ஊடங்கங்கள், யூ டியூபர்ஸ் வீடியோ வடிவில் வெளியிட்டு சிங்கள இனவெறி அரசியலை வெள்ளை அடிக்கிறார்கள். 
வடக்கு மக்களுக்கு என்ன பிரச்சினை? அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லையே!!  பாருங்களேன் நம்ம ஜனாதிபதிக்கு ஏன்னா ஒரு வரவேற்பு அங்கே. இந்த டயஸ்போரா தமிழருக்கு தான் இங்குள்ள சுமூக சகஜீவன வாழ்வியலை குழப்பி இனவாதத்தை தூண்டி விடும் அவசரம் தெரிகிறது. ஆகவே கவனமாக இருங்கள் மக்களே. சுமந்திரனை போல நாட்டுப் பற்றாளரை மதிப்போம், ஆதரவு வழங்குவோம் என்று செய்தி போட்டு அவர்கள் சுய இன்பம் அடைகிறார்கள். 

 முதிர்ச்சியான அரசியல்வாதியே இந்த தரம் என்றால் மக்கள் என்ன செய்வார்கள் பாவம்!!! 

பொன்(_) - தவிர்க்க வெண்டிய ஒரு வார்த்தையை பிரயோகித்தமைக்கு மன்னிப்புகோருகிறேன். திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
 

Edited by Sasi_varnam
  • Like 3
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

ஒரு சின்ன உதாரணம் திரு சுமந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் விஜயம் செய்த போது சில பொன்(ன) மொழிகளை உதிர்த்து இருந்தார்.
"எஜமான் நீங்க ரொம்ப நல்லவரு, யாழ்ப்பாண மக்கள் மீது  உங்களுக்கு சிறப்பு பிரியம் உண்டு. நீங்கள் இந்த மக்களுக்கு கடந்த வருடங்களில் நிறைய நல்லது செய்திருக்கிறீர்கள். 2004 தேர்தலில் உங்களுக்கு வாக்களிக்காமல் உங்கள் வெற்றியை அவர்கள் கேள்விக்குறியாக்கியதை இப்போது மனப்பூர்வமாக உணர்கிறார்கள்"  ...
இந்த செய்தியை சிங்கள ஊடங்கங்கள், யூ டியூபர்ஸ் வீடியோ வடிவில் வெளியிட்டு சிங்கள இனவெறி அரசியலை வெள்ளை அடிக்கிறார்கள். 
வடக்கு மக்களுக்கு என்ன பிரச்சினை? அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லையே!!  பாருங்களேன் நம்ம ஜனாதிபதிக்கு ஏன்னா ஒரு வரவேற்பு அங்கே. இந்த டயஸ்போரா தமிழருக்கு தான் இங்குள்ள சுமூக சகஜீவன வாழ்வியலை குழப்பி இனவாதத்தை தூண்டி விடும் அவசரம் தெரிகிறது. ஆகவே கவனமாக இருங்கள் மக்களே. சுமந்திரனை போல நாட்டுப் பற்றாளரை மதிப்போம், ஆதரவு வழங்குவோம் என்று செய்தி போட்டு அவர்கள் சுய இன்பம் அடைகிறார்கள். 

 முதிர்ச்சியான அரசியல்வாதியே இந்த தரம் என்றால் மக்கள் என்ன செய்வார்கள் பாவம்!!! 

இந்த திரியின் போக்கில் எனது முதற்கேள்வியின் தொடர்ச்சியாக அடுத்ததாக நான் இறுதியில் இப்படி கேட்க இருந்தேன். உங்கள் கருத்து அதற்கு அப்படியே சாட்சியாகிறது. 

கேள்வி: 

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நில ஆக்கிரமிப்பு எதிரான பேரணிகளில் அல்லது ஒன்று கூடல்களில் பத்து இருபது மக்கள் தொகையில் தான் பங்கு பெறுகிறார்கள். 

ஆனால் இவ்வாறான இராணுவ அல்லது அரச ஆதரவு மற்றும் ஒன்று கூடல்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள் என்றால் இதில் எந்த பகுதி மக்களை சிங்களவர்கள் அல்லது சர்வதேசம் ஏன் புலம்பெயர் தமிழர்கள் பைத்தியக்காரர்களாக வகைப்படுத்துவர்???

அப்படி வகைப்படுத்தினால் ஒரு பகுதி மேலும் மேலும் குறைந்து செல்வதும் மற்றப் பகுதியினர் தொடர்ந்து அதிகரித்து செல்வதும் தொடர்ந்தால் நாம் இறுதியில்????

  • Like 2
Link to comment
Share on other sites

On 25/5/2024 at 20:00, ரஞ்சித் said:

. புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழர்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் அரசியலில் பாரிய பங்கினைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இன்று செய்துகொண்டிருப்பது என்ன? கடந்த 15 வருட காலத்தில் அவர்களால் தமிழினம் அடைந்துகொண்டவை என்ன? கடந்த 15 வருட காலத்தில் சிங்கள மயமாக்கலினை அவர்களால் எவ்வளவு தூரத்திற்குத் தடுக்க முடிந்தது?  கூட்டமைப்பை உருவாக்கியவர்களே புலிகள் தானே? தாமே உருவாக்கியவர்களை,


1. புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று நீங்களும், அரசியல் கட்டுரைகளை எழுதுகின்ற பலரும் கூட தொடர்ந்து தவறாக எழுதிக் கொண்டு வருகின்றீர்கள். 

2000 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. இந்த தேர்தலில் திருகோணமலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வெல்லவில்லை. மட்டக்களப்பிலும் 2 பேர் மாத்திரமே தெரிவானார்கள். அதே போன்று, யாழ்ப்பாணத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஐ.தே,க. ஒரு இடத்தில் வென்றது. வவுனியாவில் 3 தமிழர்கள் மட்டுமே வென்று இருந்தனர்.

இந்த அரசியல் ரீதியிலான பாதக நிலையை உணர்ந்த கிழக்கிலங்கை புத்திசீவிகளும், கிழக்கு இலங்கை பத்திரிகையாளர்களும், 2001 இல் கிழக்கு பல்கலைகழகத்தில் கருத்தரங்கு ஒன்றை நடாத்தி (டி, சிவராம் தலைமை வகித்தார்), தமிழ் கட்சிகள் / தமிழ் இயக்கங்கள் கூட்டாக அணி திரண்டு ஒரு கூட்டணியாக நிற்க வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்துரைத்தனர். அதன் பின்னான தொடர்ச்சியான செயற்பாடுகளின் பின்னால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஏற்படுத்தி இருந்தனர்.

இவர்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடாத்தி, இந்த கூட்டமைப்பில் இருப்பவர்களுக்கு இனி மரண தண்டனை கொடுக்க கூடாது என்று வாய்மூல உறுதிப்பாட்டை பெற்று இருந்தனர். இந்த உறுதிப்பாடை கொடுத்தவர்கள் கிழக்கு அரசியல் பொறுப்பாளர் கரிகாலனும், கருணாவும் ஆகும். 

த.தே.கூ இன் அன்றைய தேவையை உணர்ந்தது புலிகள் அல்ல. அதே போன்று த.தே.கூ இன் உருவாக்கமும் அவர்களால் நிகழ்த்தப்படவில்லை.

த.தே.கூ சந்தித்த முதல் தேர்தலில் புலிகளின் செல்வாக்கு அதிகம் இடம்பெற்று இருக்கவில்லை வேட்பாளார் தெரிவில் கூட அவர்கள் செல்வாக்கு செலுத்தாமல் இருந்தனர். 

பின்னர் தான், பேச்சுவார்த்தை காலத்தில் அவர்கள் த.தே. கூ இற்கு தமது ஆசிர்வாதத்தை பகிரங்கமாக தெரிவித்து இருந்ததுடன், வேட்பாளர் தெரிவு வரைக்கும் தம் அழுத்தங்களை பிரயோகித்து இருந்தனர்.

ஒரு கட்டத்தில் விடுதலப் புலிகளின் அரசியல் கட்சி போன்றே த.தே.கூ வை அவர்கள் தமக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வந்தனர். தலைவர் த.தே,கூ இல் அங்கம் வகித்த தலைவர்களை வன்னிக்கு அழைத்து கைலாகு கொடுத்து வரவேற்று இருந்தார். இதில் தமிழ் மக்களை இந்திய இராணுவத்துடன் இணைந்து படுகொலை செய்த சுரேஸ் பிரேமச்சத்திரனுக்கு கைலாகு கொடுத்த கூத்து கூட நடந்து இருந்தது.

2. 2004 இன் பின் புலிகளின் இராணுவ அரசியலுக்கு சமாந்தரமாக த.தே.கூ 2009 வரைக்கும் செயற்பட்டு வந்தமையால், 2009 இல் புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு அது அரசியல் செய்வதற்கான பலத்தை இழந்து விட்டது. 

உறுதியான தீர்மானங்கள் எடுக்க கூட திறனற்ற தலைவர்களையும், மாவை, சம்பந்தன் போன்ற, விடுதலை இயக்கங்களுக்கு முன்னரான அரசியல் செய்து தோற்றுப் போன மூத்த தலைவர்களையும், இலங்கை / இந்திய இராணுவத்தினருடன் இணைந்து தமிழ் மக்களை படுகொலை செய்த டெலோ, ஈபி போன்ற அமைப்பின் தலைவர்களையும் கொண்ட த.தே,கூ எதையும் சாதித்து விடக் கூடிய அளவுக்கு திறனற்ற, அரசியல் தெளிவுள்ள ஒரு கூட்டணி யாக இருக்க வாய்ப்பில்லை.

2009 இன் பின் கையாலாகாத அரசியல்வாதிகள் மட்டும் தான் தமிழ் மக்களுக்கு மிச்சமிருக்கின்றனர். காத்திரமான அரசியல் செய்யக்கூடியவர்கள் ஒன்றில் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டார்கள், அல்லது நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.

என் பதிலில் இதற்கு புலிகள் மட்டுமே காரணம் என பொருள்பட எழுதியது என் தவறு. இதற்கு ஏனைய இயக்கங்களும், கருணா குழுவும் கூட காரணங்களாக உள்ளனர் என்பதையும் நான் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

இன்று இவ்வாறு எச்சங்களாக மிச்சம் இருப்பவர்கள் மூலம் தமிழ் மக்களுக்கு காத்திரமான தீர்வு கிடைக்கும் என்று நானும் நம்பவில்லை, தமிழ் மக்களும் இனி நம்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆகவே அவர்களுக்கு இன்று இருக்கும் ஒரே வழி, இருப்பதை தக்கவைத்துக் கொண்டு முடிந்தவரை தம்மை முன்னேற்றுவதே.

@விசுகு,தமிழ் தேசியம் சார்ந்த போராட்டங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும், ஒன்று கூடல்களுக்கு அதிகமாகவும் செல்கின்றனர் என அங்கலாய்த்து இருந்தார். இதுக்கு காரணமும் இதுவே. தமிழ் தேசியம் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்கின்றவர்களின் கையாலாகாத்தனத்தையும், செயற்திறனற்ற  நடவடிக்கைகளையும், வெற்று முழக்கங்களையும், வெற்றியளிக்காத முயற்சிகளையும் முன்னெடுக்கின்றவார்களின் நிகழ்வுகளுக்கு செல்வதை விட, அவற்றை தவிப்பது தமக்கு நன்மை பயக்கும் என நம்புவதானாலேயே.


நன்றி

16 hours ago, Sasi_varnam said:

 

 முதிர்ச்சியான அரசியல்வாதியே இந்த தரம் என்றால் மக்கள் என்ன செய்வார்கள் பாவம்!!! 

 

போகின்ற போக்கில் இப்படியெல்லாம் ஜோக் அடிக்க கூடாது சசி.😆

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣........ அசோசியேட் மெம்பர்ஸை மட்டும் தான் ஹசரங்க அடிப்பார் என்று சொல்லியிருந்தவர்கள்........ அதுவும் சரிதான், ஃபுல் மெம்பர்ஸை அடிச்சா அவர்கள் திருப்பி அதிகமா அடிக்கிறாங்களே....
    • "பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்"     "தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !"   "வில் புருவமும் கயல் கண்களும் விரிந்த இதழும் சங்குக் கழுத்தும் விந்தை காட்டும் உடல் எழிலும் வியந்து நான் வரிகளில் எழுதுகிறேன் !"   "மினுங்காத வைரத்தை மினுங்க வைக்க மிருதுவான கையை கோர்த்து பிடிக்க மிதலை பொழியும் அழகில் மயங்கிட மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன் !"   "உன்னழகை ரசிக்க வரம் கேட்டு உன்னுடலை அணைக்க தவம் இருந்து உன்சுகம் நாடி நான் வந்து உன் முணு முணுப்பை இசையாக்கிறேன் !"   "வாலிப்பதை தூண்டும் சிறு இடையும் வாட்டம் காட்டாத நிலா முகமும் வாசனை கொட்டும் கரும் கூந்தலும் வாக்கியமாய் இங்கே வரைந்து காட்டுகிறேன் !"   "பருவ பெண்ணை முழுதாக ரசிக்க பளிங்கு கன்னத்தில் முத்தம் இட பரவசம் கொஞ்சம் என்னை தழுவ பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      மிதலை - navel, கொப்பூழ், தொப்புள்
    • சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (திங்கட்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் இமெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, வெடிகுண்டுகள் கண்டறியும் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் குழுவினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையம் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் சந்தேகப்பட்ட வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “சென்னை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு வாரங்களாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ச்சியாக வருகிறது. இதுவரை தொலைபேசி மற்றும் இமெயில் மூலமாக 5 முறை மிரட்டல் வந்துள்ளன. வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகிறது. இதனால் விமான சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கி வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சமூக விரோதிகளை கண்டுபிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்றனர். சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் | Bomb threat to Chennai airport - hindutamil.in
    • அன்பு Justin  க்கு  "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன்." உங்கள் வாதத்தை பார்த்து நான் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை ?? ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்கு என ஒரு கருத்தும், வரைவிலக்கணமும் , அடிப்படை சொல்லும் [வேர் சொல்லும்] உண்டு . இப்படித்தான் சொல்லை ஏற்படுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் தான் நான் வாதாடுகிறேன். மற்றும் படி "நீங்க வேற, நாங்க வேற" என்று இல்லை.  marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும்  திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை  உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony  = matri  + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு  [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும்.   அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம்,  ஆண் ஆணுடன் சேருவது அல்லது பெண் பெண்ணுடன் சேருவது மற்றும் ஆண் பெண்ணுடன் சேருவது எல்லாம் ஒன்றா ?? வித்தியாசம் இருப்பது உங்களுக்கு தெரியாதா ? அதனாலதான்  "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்கிறேன், மற்றும் படி அவர்களை தாழ்த்தி அல்லது உயர்த்தி காட்டிட அல்ல  ஆண் பெண் சேர்தலில் ஒரு 'பிள்ளை' பிறக்கிறது அல்லது 'பிள்ளை' பிறக்க பொதுவாக வாய்ப்பு உண்டு  அந்த பிள்ளையை , பிள்ளை என்று மட்டும் கூப்பிடுவதில்லை, அவர்களின் உடல் அமைப்பை வைத்து பொதுவாக ஆண் / மகன் அல்லது பெண் / மகள் என்று வேறு வேறு சொற்களில் கூறுகிறோம் , மற்றும் படி பிள்ளையை  நீங்க வேற, நாங்க வேற" என்று அல்ல.  ஏன் ஆண் , பெண் என்று கூறுகிறோம் ? பொதுவாக மனிதன் என்றே கூறலாமே ?? எல்லாத்துக்கும் காரணம் சொல்லுக்கு என்று கருத்தும் அதிகமாக வேர்ச் சொல்லும் உண்டு,  அப்படித்தான் மனித கூட்டும் ?? வேலைக்கு போகிறவர்கள் எல்லோரும் ஊழியர் அல்லது பணியாளர் என்று கூப்பிடலாம் ?? ஏன் நாம் ஆசிரியர், மருத்துவர், பொறியியலாளர் என்று வேறு வேறாக கூப்பிடுகிறோம் ?? என என்றால் அங்கு அந்த ஊழியர்களின் தொழில் அமைப்பில் வேறுபாடு இருப்பதால்  அப்படியே இதுவும். சிந்தித்தால் இலகுவான ஒன்று !! நன்றி   
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.