Jump to content

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை : சம்பந்தன் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7

16 JUN, 2024 | 09:34 AM
image
 

ஆர்.ராம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்றார்கள் என்றால் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக எவ்விதமான விடயங்களையும் கருமங்களையும் முன்வைக்கப்போகின்றார்கள் என்பதை தமது விஞ்ஞாபனங்களில் வெளிப்படுத்த வேண்டும். 

அதன் பின்னர் எமது மக்களின் நிலைப்பாடுகளை புரிந்து நாம் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/186169

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசின் தலைவர் சம்பந்தரா, சிறிதரனா?

இதற்கு சம்பந்தரை மாறாமல் விட்டிருக்கலாமே.

எதுவுமே செய்யாமல், சொல்லாமல் காலாமாகிய சடலம் போல் கதிரையில் இருக்கவா சிறிதரன் இந்தளவு அந்தரப்பட்டு, கட்சியை உடைத்து தலைவரானார்?

சிறிதரன் லீடர் அல்ல, டீலர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

giphy.gif?cid=6c09b952zx4d9ttv9u4z0wor9j

சம்பந்தர்... பழைய  பழக்க தோசத்திலை, பெட்டி வாங்க அந்தரப்படுகின்றார். animiertes-gefuehl-smilies-bild-0048.gif
ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்று சும்மாவா சொன்னார்கள்.     animiertes-gefuehl-smilies-bild-0046.gif

பிற்குறிப்பு: நீங்கள் அந்த "சும்"மை நினைத்தால்... கம்பெனி பொறுப்பல்ல. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

Link to comment
Share on other sites

குழப்பப்பட்டுள்ள சுமந்திரனின் பெரும் திட்டமிடல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு காலமாக செய்த பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களுக்கு என்னாச்சு?

இனி புதிதுபுதிதா ஒப்பந்தங்கள் தேவையா?

ஏற்கனவே ஒரு தீர்வு எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்டு பாராளுமன்றால் அனுமதி பெற்று கிடப்பில் போடப்பட்டிருக்கிறதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிலில் கிடந்து அரசியல் செய்யும் உன்னத தலைவன். 😎

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வங்காளம், ஆஸி.யை வெளியேற்றி ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது ஆப்கான் 25 JUN, 2024 | 11:27 AM (நெவில் அன்தனி) சென். வின்சென்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற குழு 2க்கான கடைசியும் தீர்மானம் மிக்கதுமான பங்களாதேஷுக்கு எதிரான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 8 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. இதன் மூலம் முதல் தடவையாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் வரலாறு படைத்தது. ஆரம்ப வீரர் லிட்டன் தாஸ் தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்தி கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் ஆப்கானிஸ்தானின் வெற்றியை அவரால் தடுக்க முடியாமல் போனது. இந்த வெற்றியை அடுத்து 27ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதியில் தென் ஆபிர்க்காவை ஆப்கானிஸ்தான் எதிர்த்தாடவுள்ளது. அதே தினத்தன்று நடைபெறவுள்ள 2ஆவது அரை இறுதியில் இந்தியாவை இங்கிலாந்து சந்திக்கவுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றியில் ரஹ்மானுல்லா குர்பாஸின் சிறப்பான துடுப்பாட்டம் அணித் தலைவர் ரஷித் கான், நவீன் உல் ஹக் ஆகியோர் பதிவு செய்த 4 விக்கெட் குவியல்கள் என்பன பிரதான பங்காற்றின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி நடப்பு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நான்காவது தடவையாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரும் 59 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது இப்ராஹிம் ஸத்ரான் 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (10), ரஹ்மானுல்லா குர்பாஸ் (43) ஆகிய இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். கடைசி 4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அதில் அணித் தலைவர் ராஷித் கான் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ரிஷாத் ஹொசெய்ன் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆப்கானிஸ்தானின் இன்னிங்ஸ் நிறைவடைந்ததும் சிறு மழைத்துளி படர்ந்தது. ஆனால், ஆட்டம் தாமதிக்கவில்லை. 13 ஓவர்களில் 119 ஓட்டங்களைப் பெற்றால் அல்லது 12.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தால் பங்களாதேஷ் அரை இறுதியில் விளையாட தகுதிபெறும் என அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் 116 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்ளாதேஷ் 17.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் 3.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழையினால் ஆட்டம் தடைப்பட்டது.. சுமார் 30 நிமிடங்களின் பின்னர் போட்டி மீண்டும் ஆரம்பமானபோது வெற்றி இலக்கு 116 ஓட்டங்களாகவே இருந்தது. எனினும் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட பங்களாதேஷ் 11.4 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் பங்களாதேஷ் 2 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது. ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் பங்களாதேஷின் வெற்றி இலக்கு 19 ஓவர்களில் 114 ஓட்டங்களாக திருத்தப்பட்டது. 18ஆவது ஓவரில் மழை மீண்டும் பெய்ததால் 3ஆவது தடவையாக ஆட்டம் சில நிமிடங்களுக்கு தடைப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் பங்களாதேஷ் 3 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது. இறுதியில் 7 பந்துகள் மீதம் இருக்க  ஆப்கானிஸ்தான் 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. அவரை விட தௌஹித் ரிதோய் (14), சௌமியா சர்க்கார் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ரஷித் கான் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: நவீன் உல் ஹக்   https://www.virakesari.lk/article/186911
    • ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிணை – சிறையிலிருந்து வெளியேறினார். Published By: RAJEEBAN 25 JUN, 2024 | 08:11 AM     விக்கிலிக்ஸ் ஸ்தாபகர்களில் ஒருவரான அசஞ்சேயிற்கு பிணைவழங்கப்பட்டுள்ளது அவர் லண்டனின் பெல்மார்ச் உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையிலிருந்து விடுதலையான பின்னர் அவர் ஸ்டான்செட் விமானநிலையத்தில் விமானத்தில் ஏறும் படங்கள் வெளியாகியுள்ளன. மேற்கு பசுபிக்கில் உள்ள மரியனா தீவில் உள்ள சமஸ்டிநீதிமன்றில் அசஞ்சே நீதிமன்றத்தில் ஆஜராவார் .அவர் தேசபாதுகாப்புதகவலை சட்டவிரோதமாக பெறுவதற்கும் பரப்புவதற்கும்சதி செய்த உளவுத்துறை குற்றச்சாட்டில் குற்றத்தை  ஏற்றுக்கொள்வார் என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பின்னர் அவர் தனது நாடான அவுஸ்திரேலியா திரும்புவார். https://www.virakesari.lk/article/186896
    • தென் ஆபிரிக்கா தொட‌ர்ந்து இர‌ண்டு முறை ர‌க்பி க‌ப் தூக்கின‌வை ஆனால் முக்கிய‌மான‌ கிரிக்கேட் விளையாட்டில் கோட்டை விடுகின‌ம்   இந்தியா அணியில் மாற்ற‌ம் செய்ய‌னும் . கோலிக்கு ப‌தில் Yashasvi Jaiswal தொட‌க்க‌ வீர‌ரா விளைய‌ட‌ விட‌னும் ந‌ண்பா கோலி ர‌ன் அடிக்காம‌ சீக்கிர‌ம் அவுட் ஆகுவ‌தால் மிடில் வீர‌ர்க‌ள் த‌ங்க‌ளின் அதிர‌டி ஆட்ட‌த்தை அதிக‌ம் வெளிப் ப‌டுத்த‌ முடியாம‌ இருக்கு   இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஆர‌ம்ப‌த்தில் கோலிய‌ தெரிவு செய்வ‌து தில்லை என்ற‌ முடிவில் தான் இந்தியா தேர்வுக் குழு இருந்த‌து   ஜ‌பிஎல்ல‌ அதிக‌ ர‌ன் அடிக்க‌ கோலி உல‌க‌ கோப்பைக்கு தெரிவானார் ஆனால் இதுவ‌ரை 7ம‌சை விளையாடி இருக்கிறார் உல‌க‌ கோப்பையில் இதுவ‌ரை 100ர‌ன்ஸ்ச‌ கூட‌ தான்ட‌ வில்லை......................... என‌க்கு இந்தியா அணிய‌ பிடிக்காது 5புள்ளிக்காக‌ எப்ப‌டி எல்லாம் எழுத‌ வேண்டி இருக்கு ந‌ண்பா😂😁🤣.....................................
    • இன்றைய இறுதியான சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் மெதுவான ஆடுதளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.  பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணிக்கு மழை காரணமாக 19 ஓவர்களில் 114 ஓட்டங்கள் வெற்றி இலக்காக DLS முறையில் குறிக்கப்பட்டது. எனினும் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்கள் எடுத்த லிற்றன் டாஸைத் தவிர அனைவரும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் 17.5 ஓவர்களில் 105 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவிக்கொண்டது. ஆப்கானிஸ்தானின் வெற்றி, அவர்களுக்கு அரையிறுதிப் போட்டிக்குச் செல்லும் தகுதியை கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்துள்ளது! முடிவு:  ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் (DLS method) வெற்றியீட்டியது. ஆப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் வெல்லும் என ஒருவரும் கணிக்கவில்லை! எனினும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதால் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு D இல் முதலாவதாக வந்திருந்த தென்னாபிரிக்கா அணியை இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கும் புள்ளிகள் கிடையாது.   சுப்பர் 8 சுற்றின் இறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 109 2 ரசோதரன் 107 3 ஈழப்பிரியன் 103 4 கந்தப்பு 99 5 சுவி 98 6 நந்தன் 97 7 கோஷான் சே 97 8 கிருபன் 94 9 எப்போதும் தமிழன் 94 10 நீர்வேலியான் 93 11 குமாரசாமி 92 12 தமிழ் சிறி 92 13 நிலாமதி 89 14 P.S.பிரபா 89 15 வீரப் பையன்26 88 16 வாதவூரான் 88 17 வாத்தியார் 88 18 அஹஸ்தியன் 87 19 ஏராளன் 85 20 தியா 82 21 புலவர் 78 22 நுணாவிலான் 76 23 கல்யாணி 75   முதல் மூன்று நிலைகளிலும் கடைசி நான்கு நிலைகளிலும் மாற்றமில்லை!
    • படக்குறிப்பு,வட்டுவாகல் பாலம் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 24 ஜூன் 2024 இலங்கையின் இறுதிக் கட்ட போரின் போது, லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்த முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் இன்று உடைந்து வீழும் அபாயத்தில் இருக்கின்றது. இந்த பாலத்தை புனரமைத்து தருமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் ஏன் இதுவரை கவனம் செலுத்தவில்லை என்பது குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் 50/1 என இலக்கமிடப்பட்டுள்ள இந்த பாலம் (A035) இலக்க வீதியில் அமைந்துள்ளது. 410 மீட்டர் தூரத்தை கொண்டமைந்துள்ள இந்த பாலத்தை புனரமைப்பதற்காக இதற்கு முன்னர் 4,000 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், வட்டுவாகல் பாலத்தின் மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், பாலம் புனரமைக்கப்படாமை குறித்து ஆராயும் விரிவான செய்தி தொகுப்பே இது. வட்டுவாகல் பாலம் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய நகரங்களை பிரிக்கும் வகையில் நந்திக்கடல் களப்பு அமைந்துள்ளது. இந்த நந்திக்கடல் களப்பை ஊடறுத்து, முல்லைத்தீவு நகரையும், புதுகுடியிருப்பு பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 410 மீட்டர் தூரத்தை கொண்ட இந்த பாலமானது, இறுதிக் கட்ட போரின் போது மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக காணப்பட்டது. இலங்கையில் நிலைகொண்டிருந்த 30 வருட உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி மௌனிக்கப்பட்டது. போரின் இறுதித் தருணத்தின் போது, இலங்கை ராணுவம் இந்த பாலத்திற்கு மறுபுறத்தில், அதாவது முல்லைத்தீவு பக்கத்திலும், விடுதலைப் புலிகள் அமைப்பு பாலத்திற்கு அடுத்த திசையில் அதாவது புதுகுடியிருப்பு பக்கத்திலும் இருந்தவாறே இறுதி போரை எதிர்கொண்டிருந்தனர். புதுகுடியிருப்பு திசையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக கூறப்படும் முள்ளிவாய்க்கால் பகுதி அமைந்துள்ளது. புதுகுடியிருப்பு, முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளில் இறுதித் தருணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த பொதுமக்கள், இந்த வட்டுவாகல் பாலத்தை தாண்டி முல்லைத்தீவு பகுதியில் நிலைக்கொண்டிருந்த ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைத் தந்திருந்தனர். ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதல்களின் போது, வட்டுவாகல் பாலம் சேதமடைந்தது. அந்த வடுக்களை இன்றும் பாலத்திற்கு அருகில் காண முடிகின்றது. அத்துடன், சுனாமி அனர்த்தத்தின் போதும் இந்த பாலம் சேதமடைந்ததாக கூறப்படுகின்றது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் இந்த பாலத்தை அண்மித்த நந்திக்கடல் பகுதியிலிருந்தே கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அப்போது அறிவித்திருந்தது. இறுதிப் போரின் போது தமது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைத் தர, பல லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த பாலம் உதவியது என இறுதிக் கட்ட போரை சந்தித்த மக்கள் இன்றும் தெரிவிக்கின்றனர். தமது உயிரை பாதுகாத்த இந்த பாலம் இன்று உடையும் தருவாயில் உள்ளமை கவலையளிப்பதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.   வட்டுவாகல் பாலம் இப்போது எப்படி உள்ளது? படக்குறிப்பு,துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு பக்கத்தில் பாலம் ஆரம்பமாகும் இடத்தில் ஒரு ராணுவ காவலரண் அமைக்கப்பட்டுள்ளதுடன், புதுகுடியிருப்பு திசையில் பாலம் ஆரம்பமாகும் இடத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாதுகாப்பு தளங்களுக்கும் இடையில் சுமார் 410 மீட்டர் தூரத்தை கொண்ட ஒரு வாகனம் மாத்திரம் செல்லக்கூடிய அளவை கொண்டதாக இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறத்திலும் நந்திக்கடல் களப்பு அமைந்துள்ளதுடன், பாதுகாப்பு வேலிகள் இன்றியே பாலம் இன்றும் காணப்படுகின்றது. பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள சிறு எல்லை கற்களும் உடைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. பாலத்திற்கு இடையில் பல இடங்களில் வெடிப்புக்களை அவதானிக்க முடிவதுடன், பல இடங்களில் பாலம் பெரியளவில் உடைந்துள்ளதையும் காண முடிகின்றது. பாலத்தின் இடையில் உடைந்துள்ள ஓரிரு பகுதிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை தற்காலிகமாக செப்பனிட்டுள்ளதையும் காண முடிகின்றது. எனினும், இந்த பாலத்தை முழுமையாக புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கடைசி போரில் மக்களை காப்பாற்றிய பாலம் படக்குறிப்பு,செல்லையா யோகேந்திரராசா பாலம் உடைகின்ற இடங்களை மாத்திரம் தற்காலிகமாக செய்கின்ற போதிலும், அந்த இடங்களும் மீண்டும் உடைவதாக வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த செல்லையா யோகேந்திரராசா தெரிவிக்கின்றார். ''ஒவ்வொரு ஆட்சியில் வருவோரும் ஒவ்வொரு கதையை சொல்கின்றார்கள். நாங்கள் செய்வோம். நாங்கள் செய்வோம் என சொல்லிக் கொண்டு, எங்களை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்த பாலம் செய்யாததற்கு காரணம் அரசாங்கத்தின் பிரச்னை தான். இந்த பாலத்தை தனிப்பட்ட நபரினால் செய்ய முடியாது. இதை அரசாங்கத்தினால் தான் செய்ய முடியும். வாகனமொன்று போனால், பாலம் இடிந்து வீழும் அளவில் தான் இருக்கின்றது. பாலம் உடைகின்ற போது, அரசாங்கம் கற்களை கொண்டு கொட்டுகின்றது. அடுத்த மாதம் அந்த இடம் உடைந்திருக்கும். மீண்டும் அதே மாதிரி கல்லைகொண்டு வந்து போடுவார்கள். நாங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தே இதை தான் செய்கின்றார்கள். " என வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த செல்லையா யோகேந்திரராசா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். கடைசி போரில் மக்களை காப்பாற்றிய பாலம் இது என வட்டுவாகலைச் சேர்ந்த அன்னலிங்கம் நடனலிங்கம் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். ''இந்த பாலம் மிக முக்கியமான ஒரு பாலம். கடைசி யுத்தத்திலும் மக்களை காற்றிய பாலம் இது. அப்படியிருக்கையில், இந்த பாலம் உடைந்து உடைந்து போகின்றது. எந்த அரசாங்கத்திற்கு சொன்னாலும், பாலத்தை செய்வதாக இல்லை. இந்த பாலம் ஒவ்வொரு மாரியிலும் தானாகவே உடைகின்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபை கற்களை போட்டு நிரப்புகின்றார்கள். அரசாங்கம் செய்து தாறேன் என்று சொன்னாலும், அந்த பேச்சுடனேயே அது முடிந்து விடுகின்றது. கடைசி யுத்தத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பாலம் இது. இரண்டு இடங்களில் கிபீர் குண்டுகள் தாக்குதலில் உடைந்திருந்தது. கிபீர் தாக்குதலில் நான் நிற்கும் இந்த இடம் கூட பாதிக்கப்பட்டது. கிபீர் தாக்குதலில் சேதமடைந்த கற்கள் தான் இந்த இடத்தில் இருக்கின்றன. யுத்தத்தில் பாலம் பாதிக்கப்பட்டது. இப்போதும் பாலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் புனரமைக்கப்படாமைக்கு அரசாங்கத்தையே குறைகூறுவோம். நிதி இல்லை என்று கூறுகின்றார்கள்" என அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவிக்கின்றார். வட்டுவாகல் பாலத்தை புனரமைத்துக் கொடுக்கும் எண்ணம் இலங்கை அரசாங்கத்திற்கு கிடையாது என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.   படக்குறிப்பு,அன்னலிங்கம் நடனலிங்கம் ''2009ம் ஆண்டு மே 17, 18 ஆகிய நாட்களில் மக்கள் மிகுந்த வேதனையுடன் தங்களுடைய உறவுகளை இழந்த நிலையில், இந்த பாலத்தின் ஊடாக தான் வந்தார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த பாலத்தின் ஊடாக, மூடை முடிச்சுக்களுடன் சைக்கிள்களை உருட்டிக் கொண்டு தங்களுடைய பிள்ளைகளை தோள் மீது சுமந்துக்கொண்டு வருவது மிகுந்த வேதனையான காட்சியாக தான் இருந்தது. இந்த பாலம் மறக்க முடியாது. இப்படியான பாலத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கு இல்லை என்று தான் கூற வேண்டும்." என அவர் குறிப்பிடுகின்றார்.   வட்டுவாகல் பாலத்தை ஏன் புனரமைக்கவில்லை - அரசாங்கத்தின் பதில் வட்டுவாகல் பாலத்தை புனரமைக்காமல் அரசாங்கம் பின்வாங்கி வருவதாக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தனவிடம் வினவியது. ''இலங்கையிலுள்ள அனைத்து வீதிகள் மற்றும் பாலங்கள் வெளிநாட்டு கடன்களின் மூலமே செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களின் மூலமே இலங்கை முழுவதும் வீதிகள் மற்றும் பாலங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இலங்கையில் யார் அரசாங்கத்தை செய்தாலும், கடந்த 4 தசாப்தங்களிலும் அரசாங்கத்தின் செலவீனங்களை ஈடு செய்து கொள்ளும் வகையில், அரசாங்கத்திற்கு போதுமான வருமானம் கிடையாது. அதனால், இவை அனைத்தும் கடன்களின் மூலமே செய்யப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவு, ஓய்வூதிய கொடுப்பனவு, நிவாரணங்களை வழங்குதல், கடன்களுக்கான வட்டியை செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அரசாங்கத்திற்கு போதுமான கையிருப்பு இருக்காது. வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலுள்ள அனைத்து வீதிகள், பாலங்கள், வேலிகள், மின்சாரம் ஆகியன கடனை பெற்றே அமைக்கப்பட்டுள்ளது பெற்றுக்கொண்ட கடனை நாங்கள் தற்போது செலுத்துவதில்லை. அப்படியென்றால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட யாரும் எங்களுக்கு பணம் வழங்க மாட்டார்கள். அவ்வாறு கடன் கிடைக்கவில்லை என்றால், பாலங்களை நிர்மாணிக்க முடியாது." என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். ''கடனை பெற்றுக்கொண்டு வீதிகள், பாலங்களை நிர்மாணித்திருக்கின்றோம். கடனை செலுத்தி நிறைவு பெறும் போது தான் வீதி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியும். அரசாங்கத்திடம் தற்போது பணம் இல்லை. மாத இறுதியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் செலுத்துவதற்கு மாத்திரமே பணம் உள்ளது. வேறு வேலைகளை செய்ய பணம் இல்லை. சிறு சிறு வேலைகளை செய்யலாம்;. பாலங்களை நிர்மாணிக்கும் அளவிற்கு இலங்கை அரசாங்கத்திடம் பணம் இல்லை." என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார். https://www.bbc.com/tamil/articles/c99997q20dno
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.