Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அண்மையில் கலந்துரையாடிய விடயங்களும் இக்காணொளியில் உள்ளமையால் இணைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஏராளன். அனேகமாக நான் மற்றைய திரியில் சொல்ல முனைந்த தகவல்களை எளிமையாகச் சொல்லியிருக்கிறார். இதை செவி மடுத்து பதில் எழுத வேண்டியது இதற்கான எதிர் நிலையை எடுத்திருக்கும் ஏனைய உறவுகளின் தெரிவு.

ஆனால், இங்கே சுருக்கமாகச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது:

1. ஓரினக் கவர்ச்சி என்பது ஒரு நோய் நிலை (pathology) அல்ல. 1970 இற்கு முன்னர், அமெரிக்க மனநல வைத்தியர்களின் அமைப்பு (American Psychiatric Association) இது நோய் நிலை என்ற தவறான புரிதலில் இருந்த போது, ஓரினக்கவர்ச்சி உடையோருக்கு பாலுணர்வை குறைக்கும் மருந்துகள் (chemical castration) மூலம் சிகிச்சை அளிக்க முயன்றார்கள். சிகிச்சையின் பின்விளைவாகச் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். பலர் மறைந்து வாழப் பழகிக் கொண்டனர். 70 களின் பின் நிலைமை மாறியது. வெளிப்படையாக இருக்க ஆரம்பித்தனர்.

2. ஆனால் இன்னும் பல நாடுகளில், திருமணம் செய்து வாழ சட்டத்தில் இடம் இல்லை. 2015 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அமெரிக்கா முழுவதும் ஓரினத் திருமணத்தை சட்ட பூர்வமாக்கித் தீர்ப்பளித்தது. கொஞ்சம் அமெரிக்காவில் கெடு பிடி குறைந்தது இதன் பின்னர்.

3. "LGBTQ இனை சமமாக மதித்து அங்கீகரித்தால், சமூக சீரழிவு, சமநிலை குறைந்து விடும்" என்று வாதிடுவோருக்கு முகத்தில் அறையும் சாட்சிகளாக 80 களிலேயே ஓரினக் கவர்ச்சி, ஓரினச் சேர்க்கை என்பவற்றை சட்டபூர்வமாக்கிய ஸ்கண்டினேவியன் நாடுகள் விளங்குகின்றன. டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவீடன், நோர்வே ஆகிய இந்த நாடுகளின் வாழ்க்கைத் தரமும், சமூக சமநிலையும் உலகமறிந்தது. ஒரு ஒப்பீட்டிற்கு, ஓரினச் சேர்க்கையாளர்களை "பின் பக்கத்தில் உதைத்துத் துரத்தும்" 😎ரஷ்யாவில் பிறப்பு வீதமும் குறைவு, வாழ்க்கைத் தரமும் இந்த ஸ்கண்டினேவிய நாடுகளை விட மிகக் குறைவு.

4. "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன். திருமணம் என்றால் என்னவென்று மணம் செய்து கொள்ளும் நபர்கள் தீர்மானிக்க வேண்டும். அதன் அடிப்படை உண்மையான, நீடித்த, பரஸ்பர அர்ப்பணிப்புத் தான் என்றால் அது திருமணம் தான். இதை வேறு பெயர் கொண்டு அழைக்க வேண்டியதில்லை.     

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு Justin  க்கு 

"ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன்."

உங்கள் வாதத்தை பார்த்து நான் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை ??

ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்கு என ஒரு கருத்தும், வரைவிலக்கணமும் , அடிப்படை சொல்லும் [வேர் சொல்லும்] உண்டு . இப்படித்தான் சொல்லை ஏற்படுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் தான் நான் வாதாடுகிறேன். மற்றும் படி "நீங்க வேற, நாங்க வேற" என்று இல்லை. 

marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும்  திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை  உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony  = matri  + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு  [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும்.
 
அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம், 

ஆண் ஆணுடன் சேருவது அல்லது பெண் பெண்ணுடன் சேருவது மற்றும் ஆண் பெண்ணுடன் சேருவது எல்லாம் ஒன்றா ??

வித்தியாசம் இருப்பது உங்களுக்கு தெரியாதா ?

அதனாலதான்  "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்கிறேன், மற்றும் படி அவர்களை தாழ்த்தி அல்லது உயர்த்தி காட்டிட அல்ல 

ஆண் பெண் சேர்தலில் ஒரு 'பிள்ளை' பிறக்கிறது அல்லது 'பிள்ளை' பிறக்க பொதுவாக வாய்ப்பு உண்டு 

அந்த பிள்ளையை , பிள்ளை என்று மட்டும் கூப்பிடுவதில்லை, அவர்களின் உடல் அமைப்பை வைத்து பொதுவாக ஆண் / மகன் அல்லது பெண் / மகள் என்று வேறு வேறு சொற்களில் கூறுகிறோம் , மற்றும் படி பிள்ளையை  நீங்க வேற, நாங்க வேற" என்று அல்ல. 

ஏன் ஆண் , பெண் என்று கூறுகிறோம் ? பொதுவாக மனிதன் என்றே கூறலாமே ??

எல்லாத்துக்கும் காரணம் சொல்லுக்கு என்று கருத்தும் அதிகமாக வேர்ச் சொல்லும் உண்டு, 

அப்படித்தான் மனித கூட்டும் ??

வேலைக்கு போகிறவர்கள் எல்லோரும் ஊழியர் அல்லது பணியாளர் என்று கூப்பிடலாம் ??

ஏன் நாம் ஆசிரியர், மருத்துவர், பொறியியலாளர் என்று வேறு வேறாக கூப்பிடுகிறோம் ??

என என்றால் அங்கு அந்த ஊழியர்களின் தொழில் அமைப்பில் வேறுபாடு இருப்பதால் 

அப்படியே இதுவும். சிந்தித்தால் இலகுவான ஒன்று !!

இறுதியாக, இரண்டாயிரம் / இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கத்தில் மட்டும் அல்ல , ஒரு அடிப்படை கருத்தையும் கொண்ட மணம், திருமணம் போன்ற சொற்களை, அதன் உள்பொருளை விளங்காமல் கதைப்பது என்னவென்று புரியவில்லை. 

அந்த திருமணம் என்ற சொல்லின் விளைவாகத்  தான் கணவன் , மனைவி என்ற சொற்களே பிறந்தன , சில கருத்துக்களுடன் , அது மட்டும் அல்ல, அம்மா , அப்பா என்ற சொல்கூட, அதே போல 

ஆனால் அவைகள் எதையும் வழங்காத கூட்டுக்கும் அதே பெயர் ??

அப்படி என்றால், 

அது என்ன 

இலங்கைத் தமிழர், இலங்கை சிங்களவர் ?

எல்லாம் இலங்கையர் என்றால் 

justin கூட தன் பெயரை முழுதாக கூறி இருந்து இருப்பாரே ??

ஆனால், உண்மையில் என்ன அங்கு நடந்து இருக்கும் ??

ஏன் இந்து வேறு வேறு ?? 

நன்றி 

Edited by kandiah Thillaivinayagalingam

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

மிக்க மரியாதையோடு உங்களுடைய இந்த வியாக்கியானத்துடன் முரண்படுகிறேன்.

1. முதல் பிரச்சினை: கிரேக்கத்தில் உருவாகி, ஆங்கிலத்தில் இருக்கிற matrimony தான் தமிழில் இருக்கிற "திருமணம்" என்ற முடிவுக்கு நீங்கள் வர என்ன காரணம்? பாரம்பரியமான திருமணம் பற்றிய உங்கள் பார்வை தான் காரணம். "திருமணம்" என்பது ஒரு புனிதத்தின் முன்னொட்டான "திரு" சேர்ந்து இருவரின் இணைவைக் குறிக்கிறது என்பது தான் என் புரிதல். எனவே, தமிழில் கிரேக்கத்தின் Matri சொற்பிறப்பு (etymology) இணைய வேண்டிய தேவை இல்லை என்பது என் கருத்து.

2. உங்கள் வாதம் "ஆதியில் உருவான சொற்பிறப்பையொட்டியே பிற்காலத்திலும் ஒரு சொல் பயன்படுத்தப் பட வேண்டுமென்பதாக" இருக்கிறது. "திருமணம்"  போன்ற சமூகக் கட்டமைப்பு (social construct) விடயங்களுக்கு இவ்வளவு இறுக்கமான கட்டுப் பாடு அவசியமில்லை, சாத்தியமும் இல்லை.

ஒரு உதாரணம் மானிடவியலில்/வரலாற்றில் பார்ப்போம்: அடிமையைக் குறிக்கும் slave என்ற சொல்  கிழக்கு ஐரோப்பிய மக்களினமான Slav இல் இருந்து வந்தது. ஐரோப்பா முழுவதும் இந்த சிலாவ் மக்கள் அடிமைகளாக நோர்ஸ்க் கடலோடிகளாலும், முஸ்லிம்களாலும் விற்கப் பட்ட காலத்தில் சிலாவ் என்பதில் இருந்து சிலேவ் என்ற சொல் வந்திருக்கிறது. இது நடந்தது கி. பி 1000 இற்கு முன்.

தற்போது சகல இனத்தில் இருந்தும் வந்த அடிமைகளை slave என்று தான் அழைக்கிறோம். ஆபிரிக்காவில் இருந்து ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு கடத்தி வந்தவர்களை "நீ slave அல்ல, வேறு பெயரைப் பாவிக்க வேண்டும்" என்று யாரும் கட்டுப் பாடு விதிக்க முடியாது.

slavery ஒரு social construct . திருமணம் ஒரு social construct . இது போன்ற சமூகக் கட்டமைப்பு சார் பதங்களை நாம் அவை உருவான காலத்து வேர்ச்சொல் சார்ந்தே பாவிக்க வேண்டுமென்பது மொழியியலாளர்கள் கூட ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு Justin  க்கு 

"தற்போது சகல இனத்தில் இருந்தும் வந்த அடிமைகளை slave என்று தான் அழைக்கிறோம். ஆபிரிக்காவில் இருந்து ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு கடத்தி வந்தவர்களை "நீ slave அல்ல, வேறு பெயரைப் பாவிக்க வேண்டும்" என்று யாரும் கட்டுப் பாடு விதிக்க முடியாது."

slave க்கு என்று ஒரு அடிப்படை கருத்து அன்றில் இருந்து இன்றுவரை   மாறவில்லை 

ஆமாம், அதன் அடிப்படை கருத்து 

a person who is the property of and wholly subject to another and forced to provide unpaid labor. a person entirely under the domination of some influence or person: She was a slave to her own ambition.

அது தொடக்கத்தில் கிழக்கு ஐரோப்பிய மக்களினமான Slav இல் இருந்து வந்தது உண்மைதான். ஆனால் அது அப்படியான செயலில் உள்வாங்கப்பட்ட எல்லோருக்கும் நீட்டியதும் உண்மை  , ஏன் என்றால் அங்கே, 

அதே நடவடிக்கை, அதே மாதிரியான சூழ்நிலை, அதே மாதிரியான மக்கள், 

அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் அல்லது மற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது அங்கு முக்கியம் இல்லை  

கொஞ்சம் உற்றுப்  பாருங்கள், வேறு வேறு தெரிகிறதா, அடிப்படை கருத்தில்  ??  

திருமணம் என்ற சொல் சங்க காலத்தில், தமிழகத்தில் தோன்றியது , ஆனால் அது நீடிக்கப்பட்டு அதே கருத்துள்ள சடங்குக்கு , மக்கள் எங்கே பிறந்தார்கள் , எங்கே வாழ்கிறார்கள் என்பதை தாண்டி / தவிர்த்து பாவிக்கப் பட்டன , கருத்தை மாற்றாமல் 

 இறுதியாக, இரண்டாயிரம் / இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கத்தில் மட்டும் அல்ல , ஒரு அடிப்படை கருத்தையும் கொண்ட மணம், திருமணம் போன்ற சொற்களை, அதன் உள்பொருளை விளங்காமல் கதைப்பது என்னவென்று புரியவில்லை. 

அந்த திருமணம் என்ற சொல்லின் விளைவாகத்  தான் கணவன் , மனைவி என்ற சொற்களே பிறந்தன , சில கருத்துக்களுடன் , அது மட்டும் அல்ல, அம்மா , அப்பா என்ற சொல்கூட, அதே போல 

ஆனால் அவைகள் எதையும் வழங்காத கூட்டுக்கும் அதே பெயர் ??

அப்படி என்றால், 

அது என்ன 

இலங்கைத் தமிழர், இலங்கை சிங்களவர் ?

எல்லாம் இலங்கையர் என்றால் 

justin கூட தன் பெயரை முழுதாக கூறி இருந்து இருப்பாரே ??

ஆனால், உண்மையில் என்ன அங்கு நடந்து இருக்கும் ??

ஏன் இந்து வேறு வேறு ?? 

நன்றி  

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

மீண்டும் மன்னிக்க வேண்டும்: உள்பொருளை விளங்காமல் திருமணம் என்ற சொல்லின் அர்த்தத்தை குறுக்கிக் கொள்வது நீங்கள் தான் என கருதுகிறேன்.

நீலக்கண், வெள்ளைத் தோல் சிலாவ் மக்களில் இருந்து வந்தோரை அழைத்த சிலேவ் சொல், பின்னர் நீலக்கண், வெள்ளைத் தோல் இல்லாத ஆனால், அதே நிலையில், சமூக அந்தஸ்தில் இருந்த ஏனையோரையும் குறிக்கப் பயன்பட்டது எப்படி?

சமூகத்தில், உலக வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம்.

மேலும், சங்க காலத்தில் உருவான திருமணம் புனிதம் குறித்து மட்டுமே குறிக்க, நீங்கள் கிரேக்கத்தின் "தாய்மை" என்ற அர்த்தத்தை எங்கேயிருந்து தமிழ் சொல்லான திருமணத்தில் இணைத்தீர்கள்? இதைத் தான் சொன்னேன், திருமணம் என்றால் தாய்மை, பிள்ளை பெறுதல் என்ற பாரம்பரியமான பார்வையின் பால் உருவான கருத்தே உங்கள் வாதத்தின் அடிப்படை.

ஒரு பேச்சுக்கு, உங்கள் பாரம்பரிய திருமணம் என்பதன் குறுகத் தறித்த அர்த்தத்தை எடுத்துக் கொண்டால் கூட, அதை இன்றைய ஆண்-பெண் இணைகளுக்கு முழுவதுமாக பிரயோகிக்க இயலுமா?

தத்தெடுத்து குழந்தை வளர்ப்போர் திருமணத்தில் இல்லையென்றும், வாடகைத் தாய் மூலம் பிள்ளை வரம் பெறுவோர் திருமணத்தில் இல்லையென்றும் வியாக்கியானம் கொடுப்பீர்களா? பிள்ளை வேண்டாமென்று இருப்போர் திருமணத்தில் இல்லை என்பீர்களா? "பிள்ளை பெறும் சாத்தியம் (natural potential) இருக்கிறது, அதனாலேயே அது திருமணமாகக் கொள்ளலாம்" என்ற வாதத்தின்  அர்த்தம் இந்த நவீன கால ஆண்-பெண் இணைகளின் தெரிவுகளின் முன்னால் அடிபட்டுப் போகிறதே?

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு Justin  க்கு 

சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள்.
 
கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது என்பதில் ஐயம் இல்லை

ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு பொது இயல்பு மாறவில்லை,

ஆக நீங்கள் இன்றைய வசதியை பொறுத்து அதை தங்கள்  விருப்பம் படி சரிபண்ணுகிறீர்கள்  . அவ்வளவுதான். ஆனால் அடிப்படை மாறவில்லை ?? 

அது கூட புரியவில்லை என்றால், நான் இனி எழுதுவத்துக்கு ஒன்றும் இல்லை

தத்தெடுத்து குழந்தை வளர்ப்போர் திருமணத்தில் இல்லையென்றும், வாடகைத் தாய் மூலம் பிள்ளை வரம் பெறுவோர் திருமணத்தில் இல்லையென்றும் வியாக்கியானம் கொடுப்பீர்களா? 

இதற்கும் திருமணத்துக்கும் என்ன தொடர்பு ?? 

அது அவர்களின் உடலின் சில குறைபாடுகளால், அல்லது அவர்களின் தனிப்பட்ட எண்ணங்களால்  அதை இன்னும் அல்லது இன்றைய விஞ்ஞானத்தால் சரிபண்ண முடியாத சூழலில், அப்படியான ஒன்றுக்கு போகிறார்கள் . அவ்வளவு தான் 

சிந்திக்க தெரிந்தால், அது புரியும். குழப்பத் தேவை இல்லை ??

பிள்ளை வேண்டாமென்று இருப்போர் திருமணத்தில் இல்லை என்பீர்களா? "பிள்ளை பெறும் சாத்தியம் (natural potential) இருக்கிறது, அதனாலேயே அது திருமணமாகக் கொள்ளலாம்" என்ற வாதத்தின்  அர்த்தம் இந்த நவீன கால ஆண்-பெண் இணைகளின் தெரிவுகளின் முன்னால் அடிபட்டுப் போகிறதே?

ஆமாம், அது தெரிவு, இயற்கை அல்ல??

தெரிவு அறிவியல் வளர்ச்சியுடனும், நவீனமாக்களுடனும் வளரும் ஒன்று!!

அவ்வளவு தான். அதற்கும் திருமணம் என்ற சொல்லுக்கும், செயலுக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள் ??

உங்கள் கருத்தை நீங்கள் எப்படியும் சொல்லலாம். அது உங்கள் சுதந்திரம் . அவ்வளவுதான் !!

ஆனால் அதில் அடிப்படை இருக்கவேண்டுமே ??

நன்றி 

Edited by kandiah Thillaivinayagalingam

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

 திருமணத்துடன் "தாய்மையை, பிள்ளைப்பேற்றை முடிச்சுப் போட்டு விவாதிப்பது எங்கள் இருவரில் யார்😂?

உங்கள் ஒரிஜினல் வாதமான  "திருமணத்தின் ஆதிப் பெயரின் அடிப்படையை மாற்றக் கூடாது, திருமணத்தின் ஆதிப் பெயரின் அடிப்படை "Matri" என்பது உங்களுக்கே மறந்து போய் விட்டதா? அதில் இருந்தல்லவா இந்தக் கேள்விகளெல்லாம் என்னிடமிருந்து வந்தன?

சமூகம் மாறுகிறது, புதிய புரிதல்களும், இது சரி, இது தவறு என்ற புதிய தகவல்களும் கிடைக்கின்றன. சொற்களின் - குறிப்பாக மனிதர்கள் ஆதியில் உருவாக்கிய கலாச்சாரக் கட்டமைப்புகளின் அடிப்படையிலான சொற்களும் புதிய அர்த்தம் பெறுகின்றன. ஆனால், பழமைவாதிகள், பிற்போக்கு வாதிகள் சொற்களில் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். நீங்கள் உங்கள் எண்ணத்தின் அடிப்படையில் அவர்களுள் ஒருவராக இல்லா விட்டாலும், சொற்பிறப்பியல், மனித வரலாறு, முன்னேற்றம் என்பன பற்றிய உங்கள் ஒற்றைப் படையான புரிதலால் இந்தப் பழமை வாதிகளுக்கு ideological aid ஆக  இருக்கிறீர்கள் என அஞ்சுகிறேன்.

இதில் எனக்குப் புரிதல் குறைபாடு, குழப்பம் இருப்பதாக நான் கருதவில்லை. திருமணத்தின் அடிப்படை அர்ப்பணிப்பும் காதலும் என்று சிம்பிளாக வரைவிலக்கணம் இருக்கும் போது வேர்ச்சொல் ஆய்வெல்லாம் அவசியமில்லை.  Love is Love!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் சேர்ந்து ஒரு பிள்ளையை தத்து எடுக்க முடியும் என்றால் மேஜர் ஆன அன்றே(18 வயசான உடன்) ஒரு ஆணோ பெண்ணோ ஒரு குழந்தையை தத்து எடுக்க எல்லா உரிமையும் இருக்குத்தானே..?  ஆணும் ஆணும்/ பெண்ணும் தத்தெடுத்தால் என்ன ஆண்/பெண் தனிய தத்தெடுத்தால் என்ன..? நாய் பூனை ஆடு மாட்டை யாரும் தத்தெடுப்பதுபோல் இதையும் ஏன் அனுமதிக்கவில்லை..?😳

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு Justin  க்கு 

அன்பு அன்புக்கே 
அதில் குழப்பம் இல்லை 

அண்ணன் தங்கை, 
அம்மா மகன் 

இப்படி எங்கும் அன்பு அன்புக்கே 
அது உலகலாவியது 

அதனால்த்தான்

அன்பே கடவுள் என்றான் பண்டைய தமிழன் 

அதில் எவருக்குமே ஆட்சேபனை இல்லை 

ஆனால் அதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு ?

திருமணம் இல்லாமலே அன்பு அன்புக்கு என்று யாரும் அல்லது குறிப்பிட்ட இருவரோ அல்லது பலரோ வாழலாம்??

ஒருவரும் தடுக்கப் போவதில்லை 

அது தெரியாதா??

"சமூகம் மாறுகிறது, புதிய புரிதல்களும், இது சரி, இது தவறு என்ற புதிய தகவல்களும் கிடைக்கின்றன. சொற்களின் - குறிப்பாக மனிதர்கள் ஆதியில் உருவாக்கிய கலாச்சாரக் கட்டமைப்புகளின் அடிப்படையிலான சொற்களும் புதிய அர்த்தம் பெறுகின்றன. ஆனால், பழமைவாதிகள், பிற்போக்கு வாதிகள் சொற்களில் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்."

அது முற்றிலும் சரி . அது தான் மூட நம்பிக்கைகளுக்கு வழிவிடுகிறது 

ஆனால் அதற்கும் திருமண பந்தத்தில் வாழ்வதற்கும் என்ன தொடர்பு?

திருமணம் செய்ய விரும்பாதவர்கள் தாராளமாக living  together / ஒன்றாக  இணைந்து வாழலாம் இன்றைய சமூக அம்மைப்பில்.

ஒரு தடையும் இல்லை  

"ஆனால், பழமைவாதிகள், பிற்போக்கு வாதிகள் சொற்களில் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்."

இது தான் எனக்கு புரியவில்லை ??

சாப்பிடு என்றால் சுமேரிய காலத்தில் இருந்து சாப்பிடுதல். அடிப்படை கருத்து மாறவில்லை 

அது போலவே மற்ற சொற்களும். மாறியவை அந்த சொற்களின் அடிப்படை கருத்து அல்ல, ஆனால் அந்த அடிப்படை கருத்து மாறாமல் விரிவடைகின்றன என்று கூறலாம்.  

திருமணம் என்ற சொல் பலதாரமாக அல்லது கூட்டாக இருந்து , பின் ஒரு தாரமாக , ஒருவருக்கு ஒருவராக மாறியது. ஆனால் திருமணம் என்ற செயலில் மாற்றம் இல்லை.  

மற்றது நான் உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் அல்லது ஐயப்பாடுகளுக்கும் கோடிட்டு மறுமொழி தந்து கொண்டே இருக்கிறேன் 

ஆனால், 

நீங்கள்   என்னுடைய ஒவ்வொரு கேள்விகளுக்கோ, ஐயப்பாடுகளுக்கோ நேரடியாக பதில் இல்லை. அது குப்பையில் போகிறது

ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு ஒன்றை சேர்த்துக்கொண்டு / சொல்லிக்கொண்டு போகிறீர்கள் 

சேர்ப்பதில் பிழை ஒன்றும் இல்லை, ஆனால் கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்துவிட்டு, அதற்கு சான்றாக அல்லது மேலதிகமாக சொல்லலாம், அதுவே வாதத்தில் சரியானது . 

அது புரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன் 

அல்லாவிடால்  அது விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் 

அப்படித்தான் அது இருக்கிறது 

நன்றி 

துளி/DROP:669 [விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01]:
https://www.facebook.com/groups/978753388866632/permalink/2570752476333374/

துளி/DROP:670 [விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 02]:
https://www.facebook.com/groups/978753388866632/permalink/2584280864980535/

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் சேர்ந்து ஒரு பிள்ளையை தத்து எடுக்க முடியும் என்றால் மேஜர் ஆன அன்றே(18 வயசான உடன்) ஒரு ஆணோ பெண்ணோ ஒரு குழந்தையை தத்து எடுக்க எல்லா உரிமையும் இருக்குத்தானே..?  ஆணும் ஆணும்/ பெண்ணும் தத்தெடுத்தால் என்ன ஆண்/பெண் தனிய தத்தெடுத்தால் என்ன..? நாய் பூனை ஆடு மாட்டை யாரும் தத்தெடுப்பதுபோல் இதையும் ஏன் அனுமதிக்கவில்லை..?😳

தத்து எடுப்பது என்பது இலகுவான  விடயம் அல்ல. மேற்குநாடுகளில் தத்து எடுப்பதற்கு கூர்மையான ஆராய்ச்சி (vetting process) எல்லாம் உண்டு.  

வாதத்தில் வெல்லவேண்டும் என்று கருத்தாடுவது எப்போதும் வீண்வேலை. அதை குருவிகள், நெடுக்காலபோவன் காலத்தில் இருந்தே யாழில் பார்க்கின்றோம்😂

ஜனநாயக நாடுகளில் வரும் சட்டங்கள் எல்லாம் பாராளுமன்றில், அரசசபையில் நீண்ட விவாதங்களுக்கு உள்ளாகித்தான் சட்டங்கள் ஆகின்றன. ஒருபால் திருமணங்களையும் “திருமணம்” (marriage) என்று சட்டரீதியாகச் சொல்ல பல காரணங்கள் உள்ளன. ஆனால் திருமணத்திற்கு அடிமுடி தேடினால் லெமூரியன் காலத்தில் “திருமணம்” என்றுதான் சொல்லப்பட்டது என்றும் வாதாடலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

அன்பு Justin  க்கு 

அன்பு அன்புக்கே 
அதில் குழப்பம் இல்லை 

அண்ணன் தங்கை, 
அம்மா மகன் 

இப்படி எங்கும் அன்பு அன்புக்கே 
அது உலகலாவியது 

அதனால்த்தான்

அன்பே கடவுள் என்றான் பண்டைய தமிழன் 

அதில் எவருக்குமே ஆட்சேபனை இல்லை 

ஆனால் அதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு ?

திருமணம் இல்லாமலே அன்பு அன்புக்கு என்று யாரும் அல்லது குறிப்பிட்ட இருவரோ அல்லது பலரோ வாழலாம்??

ஒருவரும் தடுக்கப் போவதில்லை 

அது தெரியாதா??

"சமூகம் மாறுகிறது, புதிய புரிதல்களும், இது சரி, இது தவறு என்ற புதிய தகவல்களும் கிடைக்கின்றன. சொற்களின் - குறிப்பாக மனிதர்கள் ஆதியில் உருவாக்கிய கலாச்சாரக் கட்டமைப்புகளின் அடிப்படையிலான சொற்களும் புதிய அர்த்தம் பெறுகின்றன. ஆனால், பழமைவாதிகள், பிற்போக்கு வாதிகள் சொற்களில் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்."

அது முற்றிலும் சரி . அது தான் மூட நம்பிக்கைகளுக்கு வழிவிடுகிறது 

ஆனால் அதற்கும் திருமண பந்தத்தில் வாழ்வதற்கும் என்ன தொடர்பு?

திருமணம் செய்ய விரும்பாதவர்கள் தாராளமாக living  together / ஒன்றாக  இணைந்து வாழலாம் இன்றைய சமூக அம்மைப்பில்.

ஒரு தடையும் இல்லை  

"ஆனால், பழமைவாதிகள், பிற்போக்கு வாதிகள் சொற்களில் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்."

இது தான் எனக்கு புரியவில்லை ??

சாப்பிடு என்றால் சுமேரிய காலத்தில் இருந்து சாப்பிடுதல். அடிப்படை கருத்து மாறவில்லை 

அது போலவே மற்ற சொற்களும். மாறியவை அந்த சொற்களின் அடிப்படை கருத்து அல்ல, ஆனால் அந்த அடிப்படை கருத்து மாறாமல் விரிவடைகின்றன என்று கூறலாம்.  

திருமணம் என்ற சொல் பலதாரமாக அல்லது கூட்டாக இருந்து , பின் ஒரு தாரமாக , ஒருவருக்கு ஒருவராக மாறியது. ஆனால் திருமணம் என்ற செயலில் மாற்றம் இல்லை.  

மற்றது நான் உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் அல்லது ஐயப்பாடுகளுக்கும் கோடிட்டு மறுமொழி தந்து கொண்டே இருக்கிறேன் 

ஆனால், 

நீங்கள்   என்னுடைய ஒவ்வொரு கேள்விகளுக்கோ, ஐயப்பாடுகளுக்கோ நேரடியாக பதில் இல்லை. அது குப்பையில் போகிறது

ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு ஒன்றை சேர்த்துக்கொண்டு / சொல்லிக்கொண்டு போகிறீர்கள் 

சேர்ப்பதில் பிழை ஒன்றும் இல்லை, ஆனால் கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்துவிட்டு, அதற்கு சான்றாக அல்லது மேலதிகமாக சொல்லலாம், அதுவே வாதத்தில் சரியானது . 

அது புரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன் 

அல்லாவிடால்  அது விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் 

அப்படித்தான் அது இருக்கிறது 

நன்றி 

துளி/DROP:669 [விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01]:
https://www.facebook.com/groups/978753388866632/permalink/2570752476333374/

துளி/DROP:670 [விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 02]:
https://www.facebook.com/groups/978753388866632/permalink/2584280864980535/

என்னுடைய புரிதல்: நீங்கள் etymology எனும் சொற்பிறப்பியலை மிகவும் தவறாக இந்த விடயத்தில் கையாள்கிறீர்கள். வெற்றிடத்தில் ஒரு சொல் உதிப்பதில்லை. அந்த நேரம் இருந்த மானிடவியல்/வாழ்க்கை நிலைமைகளில் பெண்கள், தாய்மை என்ற சந்ததியை உருவாக்கிக் கொள்ளும் நோக்கில் தாய்மை திருமணத்திற்கு மையமாக இருந்தது. தற்போது "கனேடிய விசா" கூட திருமணத்திற்கு காரணமாக, மையமாக இருக்கிறது என்றால் நம்புவீர்களா? இதைத் தான் உங்களுக்கு விளக்க முயன்று வெறுத்துப் போய் இருக்கிறேன்😎.   

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் தரவில்லையென்கிறீர்கள். ஆனால், என்ன கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்?

உதாரணமாக: "அன்புக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு?" என்று கேட்டிருக்கிறீர்கள். இது கேள்வி? இதற்குப் பதில் உங்களுக்குத் தெரியவில்லையென்றால் விதண்டாவாதம் பற்றி முறைப்பட உங்களுக்கு ஏதும் காரணங்கள் இருக்கின்றனவா ஐயா? Romantic love அதன் பிறகு just plain love ஆக வளர்கிற அன்புக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பென்று உங்களுக்கு நான் விளக்க வேண்டுமா😂?

எனவே, சொற்களில் மனிதர்களை, அவர்களது வாழ்க்கையை அடக்கும் "செருப்பிற்காக காலை வெட்டும்" வேலையை நீங்கள் தொடரலாம். அதை எதிர்ப்போரை விதண்டாவாதம் செய்கிறார்கள் என்றும் கூறலாம். ஆனால், வாசிப்பவர்களுக்கு எந்தப் பக்கம் ஓட்டை இருக்கிறதென்பது தெளிவாகத் தெரியும்! கவலை வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்

LGBTQRSTUVWXYZ வின் ஆர்ப்பாட்டம் சொல்லும் விடயம் என்னவென்றால் ...காலம்காலமாகக் கட்டிக்காக்கப்பட்ட குடும்ப அமைப்பு முறை என்பது இனியும் தேவையா? என்பதுதான். 

தேவை என்பது என்பது என் நிலைப்பாடு 

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு Justin  க்கு

"கனேடிய விசா" கூட திருமணத்திற்கு காரணமாக, மையமாக இருக்கிறது என்றால் நம்புவீர்களா? 

இருக்கிறது. போலி திருமணங்கள் செய்து விசா பெறுவது யாரும் அறிந்ததே . அது ஒருவர் ஏமாற்றும் செயல்

ஆனால், அதே கனடா , இங்கு எதை, எவர் எவரை  திருமணம் என்று அங்கீகரிக்கிறது என்று தெரியுமா ?
 
உண்மையானது பொய்யானது என்பதை விட, அந்த கனடா அங்கீகரிக்கும் இருவரும்  சட்டப்படி இணைந்து இருக்கிறார்களா என்பதிலேயே கவனம் செலுத்துகிறது 

அது சரியா பிழையா என இங்கு நான் வாதாட வரவில்லை. 

சட்டத்தில் உள்ள ஓட்டையை தமக்கு சாதகமாக ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை. அது முற்றிலும் பிழையான செயலும் உதாரணமுமே

"இதைத் தான் உங்களுக்கு விளக்க முயன்று வெறுத்துப் போய் இருக்கிறேன்"

எம் வாதத்தின் தலைப்புடன் ஒத்துப் போகக்கூடியதாக இதில் எண்ணத்தை விளங்கப்படுத்த இருக்கிறது? மற்றும்  வெறுப்பதற்கு ??   

"அன்புக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு? என்று கேட்டிருக்கிறீர்கள். இது கேள்வி? இதற்குப் பதில் உங்களுக்குத் தெரியவில்லையென்றால்"

அன்பு மட்டும் சட்டபூர்வமான திருமணத்துக்கு காரணம்  அல்ல. அதுவும் ஒன்று என்பதே உண்மை !! 

"செருப்பிற்காக காலை வெட்டும்" வேலை எனக்குத் தெரியாது. நீங்க சொல்லித்தான் கேள்விப்படுகிறேன். நான் காலுக்கு தான் செருப்பு போடுறவன் , அளவு இல்லாவிட்டால் தூக்கி எறிந்து விடுவேன் , அவ்வளவு தான். சமயம், மூட நம்பிக்கைகள் எல்லாம் நான் எறிந்தவைகளில் அடங்கும் 

"வாசிப்பவர்களுக்கு எந்தப் பக்கம் ஓட்டை இருக்கிறதென்பது தெளிவாகத் தெரியும்! கவலை வேண்டாம்."

நான் கவலைப்பட ஒன்றுமே இல்லை, அப்படி ஒன்றை நான் யோசிக்கவே இல்லை. நீங்க யோசித்து சொல்லித்தான் இப்ப வாசிக்கிறேன். கவலைப்பட வேண்டாம்??

நன்றி   

Edited by kandiah Thillaivinayagalingam

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.