Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உடல் சிதறி பலி!

 
spacer.png
 

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர்  பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

இதன் போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது அதே திசையில் வருகை தந்த லொறி ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியதில்  வீதியில் நின்ற நபர்கள்  மூவர் லொறியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உடல்சிதறி  பலியாகியுள்ளனர்

லொறியின்  சாரதி மற்றும் பேருந்தில்  பயணித்த  இன்னொருவர் என இருவர் படுகாயம் அடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
 

http://www.samakalam.com/மாங்குளத்தில்-கோர-விபத்த/

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குளத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!

26 JUN, 2024 | 09:58 AM
image
 

மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்க்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது. பஸ் பழுதடைந்த நிலையில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளை, பின்னால் வாந்த லொறி மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பஸ் சாரதியும் பஸ்ஸில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளதுடன் லொறியின் சாரதியும் லொறியில் பயணித்த மற்றுமொருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

https://www.virakesari.lk/article/186986

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240626-WA0020.jpg?resize=750,375&s

முல்லைத்தீவு – மாங்குளத்தில் கோர விபத்து- மூவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – மாங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் இயந்திரக் கோளாறுக்குள்ளாகியுள்ளது.

இதன்போது நிறுத்தப்பட்ட பேருந்தின் பின்புறமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் சாரதியும் சில பயணிகளும் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த லொறி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்தவர்களில் பேருந்து சாரதியும் மேலும் இரு பயணிகளும் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

 

அத்துடன் பேருந்தின் நடத்துநரும் மற்றுமொருவரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சடலங்கள் மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1389706

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

200w.gif?cid=82a1493bepysyshy0lckp5i5e4l  images?q=tbn:ANd9GcTCAAhooRdyCXp3sJdm-G8

வாகனம் பழுது பட்டு நின்றால்... அந்த இடத்திலிருந்து 50 மீற்றர் தூரத்தில் மேலே காட்டியபடி எச்சரிக்கை முக்கோணம் ஒன்று வைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நடைமுறை. 

அதனை இவர்கள் பின்பற்றி இருந்தால் மூன்று உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கலாம். இதனைப் பற்றிய விழிப்புணர்வை அரசு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

200w.gif?cid=82a1493bepysyshy0lckp5i5e4l  images?q=tbn:ANd9GcTCAAhooRdyCXp3sJdm-G8

வாகனம் பழுது பட்டு நின்றால்... அந்த இடத்திலிருந்து 50 மீற்றர் தூரத்தில் மேலே காட்டியபடி எச்சரிக்கை முக்கோணம் ஒன்று வைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நடைமுறை. 

அதனை இவர்கள் பின்பற்றி இருந்தால் மூன்று உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கலாம். இதனைப் பற்றிய விழிப்புணர்வை அரசு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 

முதலில் சாரதி அனுமதிப்பத்திரம் கொடுப்பதில் இருந்து தொடங்க வேணும்.இங்குள்ள இறுக்கமான நடவடிக்கைகள் பற்றி சொன்னால் அங்குள்ளவர்கள் தாங்கள் ஏதோ பிரச்சனை இல்லாத நாட்டில் இருப்பது போலும் நாங்கள் எல்லா விடையங்களுக்கும் கஸ்ரப்பட வேன்டிய நிலையில் வாழ்வதாகவும் நினைக்கிறார்கள்.பலன் இப்படியான விபத்துக்கள்.பிலியானவர்களுக்கு அஞசலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

முதலில் சாரதி அனுமதிப்பத்திரம் கொடுப்பதில் இருந்து தொடங்க வேணும்.


பேருந்தின் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தபட்ட போது முக்கோண எச்சரிக்கை வைத்திருந்தாலுமே லொறி சாரதி வந்து மோதி தான் இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

தனியார் பேரூந்துகளை விட அரச பேரூந்துகளும் பார ஊர்திகளும் வான்களும் ஏ 9 வீதியில் கண்மண் தெரியாமல் ஓடினம். பல தடவைகளில் பேரூந்துகளுக்கு சமீபமாக வந்து முந்திச் சொல்லினம்.. இது பார வாகனங்களை ஓடுபவர்களுக்கு சிரமத்தை அளிப்பதை தெளிவாக காண முடிகிறது.

ஆக்களும் கண்ட இடத்திலும் வீதியை கடக்கினம். மேலும் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் அபாய விளக்கு எரிய விடப்படுவதில்லை. பல தடவைகளில் எல்லாத்தையும் நிற்பாட்டிட்டு தூங்கி விடுகிறார்கள். இது ஓட்டுனர்கள் ஆபத்தை புரிந்து கொண்டு செயற்பட கால அவகாசயத்தை அளிப்பதில்லை.

தீர்வு:

வேகக் கட்டுப்பாட்டு கமராக்கள்.. வேகக் கட்டுப்பாடு ஏ 9 வீதியில் மிக அவசியம்.

விதி மீறுபவர்கள் மீது காட்டமான உடனடி நடவடிக்கை அவசியம்.

வீதி ஓரத்தில் வாகனங்களை அத்தியாவசியம் தவிர நிறுத்த அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால்.. அதற்கான விதிகளை தீர்க்கமாக பின்பற்றப்பட வேண்டும். சரியான ஒளிர் தன்மை வாய்ந்த அறிகுறிகள் சரியான இடைவெளியில் வைக்கப்படுதல் வேண்டும். 

மக்கள் வீதிகளை கடக்கும் இடங்கள் குறியிடப்படுவதோடு.. குறைந்தது 150 மீட்டருக்கு முன்னரே ஓட்டுனர்கள் எச்சரிக்கை அறிவிப்பை தெளிவாகப் பெற குறியீடுகள் பொருந்தப்பட வேண்டும். 

வாகனங்கள் வீதி ஓரமாக.. நிறுத்தி வைக்கப்படும் போது... வீதியின் ஓரத்தில் இருந்து முற்றாக நீங்க நிறுத்தப்படுதல் அவசியம் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். 

வாகனங்கள் பழுதின் போது வீதியில் நிறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால்.. எச்சரிக்கை குறியீடுகள் முன்.. பின் என்று குறைந்தது 150, 100 மீற்றர்கள் தூரம் வரை முன் நகர்த்தி வைக்கப்படுதல் அவசியம். மேலும் வாகனங்களுக்கு வெளியில் வீதியில்.. வீதி ஓரத்தில் நடமாடும் தேவை ஏற்பட்டால்.. ஒளிர் மேலங்கி அணியப்படுதல் கட்டாயமாக்கப்படுதல் வேண்டும். 

இப்படியான விபத்துகளுக்கு வாகன ஓட்டுனர்கள் மட்டுமன்றி.. கால மாற்றம் வாகனங்களின் பாவனைப் பெருக்கத்திற்கு ஏற்ப வீதி விதிமுறைகளை மாற்றி அமைத்து அமுல்படுத்தாமை.. விபத்து தவிர்ப்பு முகாமைத்துவ அறிவின்மை போன்ற பல விடயங்கள் சொறீலங்கா வீதி பொலிஸ்துறைக்குள் குவிந்து கிடப்பதும்.. குற்றங்களை செய்துவிட்டு லஞ்சப் பணம் கொடுத்து தப்பிச் செல்லும் நடைமுறைகள் குவிந்து கிடப்பதும்..  இனப்பாகுபாட்டு விதி அமுலாக்கங்கள் என்று ஒரு சீரற்ற அமைப்பாக சொறீலங்கா பொலிஸ் இருப்பது முக்கிய காரணம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

விதி மீறுபவர்கள் மீது காட்டமான உடனடி நடவடிக்கை அவசியம்

கட்டுப்பாடுகள் நிறைந்த ஐரோப்பிய நாடுகளிலும் இப்படியான விபத்துக்கள் நடக்கின்றன.
ஆனாலும் இலங்கையைப் போன்ற லஞ்சத்தில் ஊறிய காவல் துறை இருக்கும் நாடுகளில் அதிகமாகவே நடைபெறுகின்றன.

கண்காணிப்பில் ஈடுபடும் போலீசார் மற்றும் நீதித்த துறை பாராபட்சம் இல்லாமல் மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள்,  வேகக்   கட்டுப்பாட்டை மீறுபவர்கள், அதிக நேரம் தொடர்ந்து களைப்பாறாமல் வாகனம் செலுத்துபவர்கள், என எல்லோருக்கும் அதி கூடிய தண்டனை வழங்கினால் சிறிது அளவில் விபத்துக்கள் குறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.