Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   08 JUL, 2024 | 06:30 AM

image
 

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது.

தீவிரவலதுசாரி கட்சியான ஆர்எல் அதிகளவு ஆசனங்களை கைப்பறக்கூடும் என எதிர்பார்ப்பு வெளியாகியிருந்த நிலையில் பிரான்சில் இடதுசாரி கூட்டணி அதிக ஆசனங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

1e61ecbb-1895-42bc-9ab7-f868b2a3a9b6.jpg

முதலாவது சுற்று தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதும் அதில் தீவிரவலதுசாரிகள் அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக பிரான்சில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் முதல்தடவையாக தீவிரவலதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற அச்சநிலை உருவானது.

தீவிரவலதுசாரிகளின்ஆட்சியை கைப்பற்றும் கனவு கலைந்தது- பிரான்சில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

கனவு கலையவில்லை. இது இடதுசாரிகளுக்கான கடைசி சந்தர்ப்பமே. மக்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீண்டும் மக்கள் கொண்டு வந்துள்ளனர். மக்களின் தேவைகளை கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை புரிந்து நடந்து காப்பாற்றாது விட்டால் அடுத்த முறை அவர்கள் கனவு பலிக்கும்.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அதிர்ச்சி முடிவுகள் - குழப்பமான சூழலால் பல இடங்களில் வன்முறை

ஜா-லுக் மெரான்ஷன்

பட மூலாதாரம்,ANDRE PAIN/EPA-EFE/REX/SHUTTERSTOCK

4 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சிக்குரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணி 182 இடங்களை பெற்று தனிப்பெரும் கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு நாடாளுமன்றம் அமைவதால், தற்போது அனைவரின் பார்வையும் பிரதமர் பதவியை நோக்கியே உள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில், தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சி (ஆர்என்) முன்னிலையில் இருந்த நிலையில், இறுதி முடிவில் இடதுசாரி கூட்டணியான புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி அதிக இடங்களைப் பெற்றுள்ளது.

பிரான்ஸின் டிவி சேனல்களில், தேர்தல் முடிவுகளை காண்பித்தபோது, அதில் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சியின் தலைவர் மரைன் லே பென்னோ, அடுத்த பிரதமாவதற்கு காத்திருந்த அவரது கட்சியை சேர்ந்த ஜோர்டான் பர்டெல்லாவோ வெற்றியை கொண்டாடவில்லை.

திடீர் திருப்பமாக, இடதுசாரி கூட்டணியே வெற்றியை பெற்றது. யாரும் எதிர்பாராத வகையில் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் மையவாத கூட்டணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி, தேசிய பேரணிக் கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளியது.

தீவிர இடதுசாரி கொள்கை கொண்டவர் என விமர்கர்களால் அழைக்கப்படும் மூத்த இடதுசாரி தலைவரான ஜா-லுக் மெரான்ஷன் அதிக நேரம் காத்திருக்காமல் தங்களது கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இந்த கூட்டணி 182 இடங்களை பெற்று தனிப்பெரும் அணியாக உருவெடுத்துள்ளது.

 
பிரான்ஸ்

பட மூலாதாரம்,EPA

’’புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியை ஆட்சி அமைக்க அதிபர் அழைக்க வேண்டும்’’ என ஸ்டாலின்கிராட் சதுக்கத்தில் கட்சியின் ஆதரவாளர்களிடம் மெரான்ஷன் கூறினார்.

மேலும் தானும் தனது கூட்டணியும் தோல்வியடைந்ததை, அதிபர் எமானுவேல் மக்ரோங் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் திடீரென முன்கூட்டியே தேர்தல்களை அறிவித்த நிலையில், சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்ட்கள், பசுமைவாதிகள் மற்றும் பிரான்ஸ் அன்பௌட் (LFI) உள்ளடங்கிய இடதுசாரிக் கட்சிகள் புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியை உருவாக்கின. ஆனால், ஆட்சி அமைக்கும் அளவுக்கு இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை.

பிரான்ஸில் தொங்கு நாடாளுமன்றம் அமையவுள்ளது. 577 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 289 இடங்களைப் பெற்று, எந்த கூட்டணியும் தனிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை. அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் மையவாத கூட்டணி 168 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒரு வாரத்திற்கு முன்பு வரை தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற பேச்சே இருந்தது.

முதல் சுற்றுத் தேர்தலில் பெரும்பான்மையை நோக்கி தேசிய பேரணி நகர்ந்து கொண்டிருந்தது, ஆனால், இரண்டாவது மற்றும் இறுதிக் சுற்றில் அந்த கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

மரைன் லே பென் மற்றும் ஜோர்டான் பர்டெல்லா ஆகியோர் வாக்களிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தங்கள் கட்சிக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

முடிவுகளை தைரியமாக எதிர்கொண்ட லே பென்,’’ இரண்டு வருடங்களுக்கு முன்பு நமக்கு 2 எம்.பிகள் மட்டுமே இருந்தனர். இன்று தேர்தலில் அதிக எம்.பிக்களை பெற்ற கட்சியாக உள்ளோம்’’ என கூறினார்.

கடந்த நாடாளுமன்றத்தில் 88 எம்.பி.க்களைக் கொண்டிருந்த தேசிய பேரணி கட்சி இப்போது 140க்கும் அதிகமான எம்.பி.க்களை பெற்றிருக்கிறது.

லே பென் சொன்னதுபோல, இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியும் 100 இடங்களை தாண்டவில்லை. மக்ரோங் கட்சியும், பாப்புலர் ஃப்ரண்ட் கட்சியும் கூட்டணி அமைத்தே போட்டியிட்டன.

இயற்கைக்கு மாறான "மரியாதையற்ற கூட்டணிகளால்" தனது கட்சி தோல்வியடைந்ததாக ஜோர்டான் பர்டெல்லா புகார் கூறினார்.

தற்போது வெற்றி பெற்ற 200க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை "குடியரசு முன்னணியின்" ஒரு பகுதியாகக் கருதுகின்றனர்.

இடதுசாரிகளின் அடுத்த இடத்தில் இவர்கள் உள்ளனர். இதன் மூலம் தேசிய பேரணிக் கட்சி மூன்றாம் இடத்திற்கு சென்றது.

யாருக்கு எத்தனை இடம்?

பிரான்ஸ்

புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி- 182

மையவாத கூட்டணி- 168

தேசிய பேரணிக் கட்சி + கூட்டணி -143

குடியரசு + வலது- 60

பிற இடது- 13

பிற- 11

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து வன்முறை

பிரான்ஸ் அரசியல் தற்போது நிலையற்ற சூழ்நிலைக்கு சென்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தெருக்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாரிஸ் மற்றும் நான்டெஸ் மற்றும் லியோன் உள்ளிட்ட நகரங்களில் ஒரு சில வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன

தற்போது அனைவரின் பார்வையும் பிரதமர் பதவியை நோக்கியே உள்ளது. தற்போது உள்ள முட்டுக்கட்டையான நிலையில் அடுத்த பிரதமர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மக்ரோங் கட்சியைச் சேர்ந்த தற்போதைய கேப்ரியல் அட்டல் பதவி விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார். தங்கள் கட்சியை சேர்ந்தவரே அடுத்த பிரதமாவார் என மூத்த இடதுசாரி தலைவரான ஜா-லுக் மெரான்ஷன் கூறியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி - எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் முட்டுக்கட்டை நிலை

08 JUL, 2024 | 02:57 PM
image
 

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றிபெற்றுள்ள போதிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை தொடர்ந்து அங்கு அரசியல் முட்டுக்கட்டை நிலை உருவாகியுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடது சாரி கூட்டணிக்கு 182 ஆசனங்கள் கிடைத்துள்ளன , ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சிக்கு 163 ஆசனங்கள் கிடைத்துள்ள அதேவேளை இம்முறை அதிகாரத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட தீவிரவலதுசாரி கட்சியான ஆர்எல்லிற்கு 143 ஆசனங்களே கிடைத்துள்ளன.

முதல் சுற்று தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.எனினும் அவர்கள் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற அச்சம் காரணமாக இடம்பெற்ற மூலோபாயரீதியிலான வாக்களிப்பின் காரணமாக அவர்கள் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இடதுசாரிகள் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள போதிலும் அவர்களிற்கு பெரும்பான்மை கிடைக்காததன் காரணமாக பிரான்ஸ் தனது எதிர்கால அரசாங்கம் தொடர்பில் நிச்சயமற்ற நிலையை  எதிர்கொள்கின்றது.

இதேவேளை இடதுசாரிகளின் வெற்றியை அதன்  ஆதரவாளர்கள் கொண்டாடிவரும் அதேவேளை தீவிரவலதுசாரி கட்சியின் ஆதரவாளர்கள் ஏமாற்றம் வெளியிட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/187964

பிரான்சில் தீவிர வலதுசாரிகளுக்கு வெற்றி கிடைத்திருந்தால் அது ஐரோப்பிய நாடுகளுடையே ஒரு அச்சுறுத்தலாகவே அமைந்திருக்கும். இது அவர்களுக்கு மக்களால் வழங்கப்பட்ட மிகப் பெரிய சாட்டையடி. 240 இடங்களுக்கு மேல் எதிர்பார்த்தவர்களுக்கு வெறும் 143 இடங்களே கிடைக்கப்பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டனர்.

தேர்தல் நெருங்கிவர மக்கள் இவர்களின் உண்மையான முகத்தை உணரத் தொடங்கினர். மக்றோனின் 64 வயது ஓய்வூதிய எல்லையைக் கலைத்து 60 வயது ஆக்குவோம் என்றனர். ஆனால் படிப்பு முடிந்து 23 வயதுக்கு பின் வேலையில் சேர்பவர் 66 வயதுவரை வேலை செய்ய வேண்டும் என்பதை மறைத்தனர்.

30 வயதுக்குட்பட்டவர்களுக்கு வருமான வரிக் குறைப்பு செய்வோம் என்றனர். ஆனால் 30 வயதுக்கு மேற்பட்ட குடும்பத் தலைவர்கள் அதிக வரி கட்ட வேண்டுமென்பதை வெளிப்படுத்தவில்லை.

எந்தக் கேள்வி கேட்டாலும் துன்பத்திலுள்ள எமதருமை பிரெஞ்சு மக்களுக்காக… என்று பதிலளிக்கும் இவர்களின் திட்டங்கள் யாவும் பணக்காரர்களுக்கே மறைமுகமாகச் சார்பானதாக இருந்தன. பெயரளவிலேயே பெண்களுக்கான சமவுரிமை மேம்படுத்தல் திட்டங்கள் இருந்தன. ஊனமுற்றவர்கள் என்ற சொல்லே இவர்களது விஞ்ஞாபனத்தில் இருக்கவில்லை.

கக்கூஸ் துப்பரவு செய்ய கருப்பு தோல் வேண்டும். உயர் பதவிகளுக்கு மண்ணின் மைந்தர்களான வெள்ளைத்தோல் வேண்டும் என்பது இவர்களது வெளிப்படையான கொள்கை.

இக் கட்சிகளின் கூட்டமைப்பில் உள்ள வேட்பாளர்களின் நடத்தை பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டபோது, 300 வேட்பாளர்களில் 4 அல்லது 5 பேர் தவறு செய்தவர்களாக இருப்பது சகஜம், விசாரிப்போம் என்று கட்சித் தலைவர் தெரிவித்துருந்தார். இன்றைய ஒரு செய்தியின்படி சிறுவர் பாலியல் குற்றவாளி, பணயக் கைதியாக ஒருவரைப் பிடித்து தண்டனை கிடைத்தவர் போன்ற குற்றவாளிகள் முதல் கறுப்பினத்தவர் ஒருவரை மிருகத்துடன் ஒப்பிட்டு படம் போட்டவர், நாசிகளின் சின்னத்துடன் முகப்புத்தகத்தில் படம் போட்டவர் வரை 26 பேர் இக் கட்சியில் வேட்பாளர்களாக உள்ளனர்.

இதுதான் தீவிர வலதுசாரிகளின் உண்மையான முகம்.

  • கருத்துக்கள உறவுகள்

143 இடங்கள் என்பதும் ஆபத்தாகப் பார்க்கப் பட வேண்டிய ஒன்றுதான். பிரித்தானியாவிலும் இனவாதக்கட்சி ஒன்றுக்கு 5 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் இதுதான் கள நிலவரம். 

☹️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.