இந்தியாவின் வரலாற்றிலேயே மிக நீண்ட காலமாக இருக்கும் ஒரே பிரச்சினை காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை தான்..

1974 ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே இந்த பிரச்சனை ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. 50 ஆண்டுகளாக நடக்கும் இந்த பிரச்சனைக்கு என்ன காரணம்..?

“தென்னகத்தின் கங்கை” என்று அழைக்கக்கூடிய காவிரி நீரானது 802 கிலோ மீட்டர் வரை நீளம் கொண்டது. கர்நாடகாவில் தொடங்கி கேரளா, தமிழ்நாடு  வழியாகச் சென்று இறுதியாக பாண்டிச்சேரியை சென்றடைகிறது. முழுக்க முழுக்க மழை நீரை மட்டுமே நம்பி இருக்கும் இந்தக் காவிரி ஆற்றுப்படுகை 740 TMC (Thousand million cubic feet) வரை சேகரித்துக் கொள்ளும் கொள்ளளவை கொண்டது. இந்த 740 TMC கொள்ளளவில், மழை யின் மூலமாக கர்நாடகாவிற்க்கு 425 TMC தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்க்கோ 252 TMC தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும் கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுப்பது ஏன்?

வரலாற்றை சற்று பின்னோக்கி பார்க்கும் போது,

1900 களில் கர்நாடகா மாநிலம்  மைசூர் சமஸ்தானமாகவும் , தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாகவும் இருந்தது.  மைசூர் சமஸ்தானம் மன்னர்களின் கீழ் இருந்த, அதே வேளையில் மெட்ராஸ் மாகாணமோ பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தது.

Madras-and-Mysore-1900s--300x180.png

 1910 ம் ஆண்டு மைசூர் சமஸ்தானம் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக ஒரு வரைவுத் திட்டத்தை முன் வைத்தது. ஆனால் அதே காலத்தில், மெட்ராஸ் மாகாணமும் அந்த ஆற்றின் மூலமாக நீர்ப்பாசன வசதியை மேற்கொள்வதற்கான திட்ட வரைவை முன் வைத்தது. காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசாங்கம் அணை கட்டினால், நீர்ப்பாசன வசதிக்கு தேவையான தண்ணீர் வரத்து குறைவாகிவிடும் என்று முதல் முதலாக மெட்ராஸ் மாகாணம் எதிர்ப்பு தெ ரிவித்தது அப்ப போதுதான்.  மெட்ராஸ் மாகாணம் பிரிட்டிஷாரின் நேரடி ஆளுகைக்கு உட்பட்டு இருப்பதால், மைசூர் அரசை பணிய வைப்பதற்காக 1924 ஆம் ஆண்டு ( நியாயம் இல்லாத) ஒரு ஒப்பந்தத்தைப் போட்டது. அதாவது 75% தண்ணீர்  மெட்ராஸ் மாகாணத்திற்கு விட வேண்டும் என்றும், 23% மைசூர் மாகாணத்திற்கு என்றும், மீதமுள்ள நீர் கேரளாவிற்கு செல்ல வேண்டும் என்றும் 50 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் 1974 -இல் முடிவுக்கு வந்தது. ஆனால் இதற்கு இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு காவிரி நீரை பயன்படுத்தி 25.8 லட்சம் ஏக்கர் நிலங்கள் வரை சாகுபடி செ ய்தது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் கிட்டத்தட்ட நீர்ப்பாசனத்தை மட்டுமே நம்பி இருக்கையில், திடீரென அந்த நீர்வரத்து குறைந்தால் தமிழ்நாடு மூன்று விதமான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

  1. விவசாய நிலங்கள் எல்லாம் குறையும் அபாயம்.
  2. நாடு மற்றும் விவசாயிகளின் நிதிநிலை குறைந்து வேலை இல்லாமல் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் அபாயம்.
  3. மேலே சொன்ன இரண்டு காரணத்தினால் விவசாயிகளின் கடன் சுமை அதிகமாவது மட்டுமல்லாமல், விவசாயிகள் தற்கொலைக்கும் தூண்டப்படும் அபாயம்.

இதுதான் காவிரி நதி நீருக்காக பிரிட்டிஷ் அரசால் போடப்பட்ட ஒப்பந்தத்தால் தமிழ்நாடு சந்தித்த முதல் பிரச்சனை .

இரண்டாவதாக உள்ள பிரச்சினை காவிரி ஆற்றுப்படுகையில் சீராக மழை பெய்யாதது தான்..

Rain-Fall-300x175.png

1993 ஆம் ஆண்டு கீழ் காவேரியில் பெய்த மழையின் கொள்ளளவு 1502.74 MM. ஆனால் 2002ல் பெய்த மழையின் அளவோ  241.88 MM மட்டுமே.

பத்தாண்டுகளில் மழைப்பொழிவு ஆறு மடங்கு வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் மேல் காவிரியிலும் 1992 ல் பெய்த மழையின் அளவு 2522.12  லிருந்து  1996ல் 1782.19 ஆக குறைந்தது. இப்படி படிப்படியாக மழை வரத்து குறையக்குறைய காவிரி பிரச்சனை படிப்படியாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது.

ஆனால் இதை விட ஒரு பெரிய பிரச்சனையும் இங்கு உள்ளது. அது  என்னவென்றால், 740 TMC தண்ணீர் தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இடையே பங்கிடப்பட்டாலும் கூட, நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் உற்பத்தியும்  தண்ணீர் தேவையை அதிகரிக்கவே செய்கின்றன.

3-300x177.png3.1-300x178.png

மாநிலங்களின் தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு 566 TMC தண்ணீரும், கர்நாடகாவிற்கு 465 TMC தண்ணீரும், கே ரளாவிற்கு 99.8 TMC தண்ணீர் மற்றும் புதுச்சேரிக்கு 9.3 TMC என மொத்தமாக 1030 TMC  தண்ணீர் தேவைப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட 1031 TMC தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் காவிரி ஆற்றுப்படுகையின் முழு கொள்ளளவு 740 TMC தண்ணீர் மட்டுமே . இதை இரண்டு மாநிலங்களுக்கும் பாதிப்பாதியாக பிரித்தால் கூட தண்ணீர் தேவை இருக்கவே தான் செய்கிறது.

எதனால் இந்த தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேசெல்கிறது..?

தமிழ்நாட்டில் நெல் பயிர் சாகுபடி பிரதானமான விவசாய தொழிலாக இருக்கும் பட்சத்தில் நெல் பயிர் மற்றும் கரும்பு சாகுபடி கர்நாடகாவில் பிரதானமான தொழிலாக இருக்கிறது. இந்த இரண்டு சாகுபடிக்கும் தண்ணீர் தேவை மிக அதிகமாக இருக்கிறது.

 Water Footprint Network ன் கூற்றுப்படி, ஒரு கிலோ அரிசி விளைவிக்க 3400 லிட்டர் தண்ணீர் தேவை ப்படுகிறது என்றும், ஒரு கிலோ சர்க்கரை விளைவிக்க 1500 லிட்டர் வரைக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்திய நிலப்பரப்பை பொறுத்தவரையில், இந்தத் தே வை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. அதாவது ஒரு கிலோ அரிசிக்கு 5000 லிட்டர் தண்ணீர் என்றும், ஒரு கிலோ சர்க்கரைக்கு 2500 லிட்டர் தண்ணீர் என்றும் கூறப்படுகிறது. கர்நாடகாவில் நெல் சாகுபடிக்கு 70% தண்ணீர் நேரடியாக செலவிடப்படுகிறது. மேலும் கரும்பு சாகுபடியில் இந்தியாவின் மூன்றாவது இடத்தில் உள்ள கர்நாடகாவிற்கு 30% தண்ணீர் செலவிடப்படுகிறது. இந்த நீர் வரத்து குறையும் பட்சத்தில் கர்நாடகா விவசாயிகள் பெரும் நிதிச்சுமைக்கு உள்ளாவார்கள். இந்நிலையில் முழுக்க முழுக்க காவிரி நதிநீரை மட்டுமே நம்பி இருக்கும் தமிழ்நாடு விவசாயிகளுக்கு, கர்நாடக அரசு தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு இந்த நான்கு காரணிகள் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

  1. பிரிட்டிஷ் ஒப்பந்தம்,
  2. தமிழ்நாட்டின் சார்புத்தன்மை ,
  3. இரு மாநிலங்களுக்குமான அதிகப்படியான தேவை மற்றும் இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயப் பழக்கவழக்கம்.மேலும் 2023 இல் கர்நாடகாவில் பெய்த குறைந்த மழையின் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள காவிரி நதி நீர் தேக்கங்களின் இருப்பு 104.5 TMC யில் இருந்து 51.1 TMC ஆக குறைந்தது. ஆனால் அன்றைய ஆண்டில் கர்நாடகாவிற்கு அடிப்படையாக 112 TMC தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2020 லிருந்து 2050 வரை யிலான காலகட்டத்திற்குள் காவிரி நதி நீர் ஆற்றுப்படுகையில் பெய்யும் மழையின் அளவு 20 சதவதீம் வரை குறை யும் என்று BCCI – k ( Bangalore climatic change initiative – Karnataka ) தெரிவித்துள்ளது. மே லும் தொழில்துறை மற்றும் விவசாய உற்பத்தித் துறைகளின் தேவை அதிகப்படியானதினால் நிலத்தடி நீரும் குறைந்து கொண்டேதான் செல்கிறது. இதுதான் காவேரி பிரச்சனை மேலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக  உருவெடுத்ததற்கு முக்கிய காரணியாகும்.

சரி… இதற்கு தீர்வு தான் என்ன?

இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் பாதை என்ற முன்னெடுப்பில் முதன்மையாக இருக்கும் பயிர் Millets என்று சொல்லக்கூடிய திணை தானியங்கள்.

4-300x178.png

இவற்றுக்கு தண்ணீர் தேவை மிகவும் குறைவு. ஒரு கிலோ திணை தானியங்களை விளைய வைப்பதற்கு தேவையான தண்ணீரின் அளவானது, ஒரு கிலோ அரிசி விலை விற்பதற்கு தேவையான தண்ணீரை விட நான்கு மடங்கு குறைவு. மேலும் இது கோதுமை விளைவிப்பதற்கு தேவையான தண்ணீரின் அளவை விட இரண்டு மடங்கு குறைவு. அதுமட்டுமில்லாமல் கரும்பு  விளைவிப்பதற்கு தேவையான தண்ணீரின் அளவை விட ஐந்து மடங்கு குறைவு. மேலும் இவை வறட்சி காலத்திலும் பயிரிட உகந்தவை என்பது இதன் சிறப்பம்சம். அரசாங்கம் இந்த பிரச்சனைக்கு என்று தீர்வு காணும் என்று விடை தெரியாத பட்சத்தில், விவசாயிகளுக்கு ஒரு மாற்று வழியாக கூட இந்த திணை தானியங்கள் விளைவித்தல் இருக்கலாம். மேலும் இந்தியாவில் நாளுக்கு நாள் இந்த திணை தானியங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது உற்று  நோக்கப்பட வேண்டிய ஒன்று. நாங்கள் கூறிய இந்த தினை தானிய ஊடுபயிர்விவசாயம் என்பது ஒரு சிறு உதாரணம் மட்டுமே . இதுபோல் மாற்று வழிகள் பல இருக்கிறது..

சுமார் 150 ஆண்டுகளாக நடக்கும் இந்த காவிரி நதிநீர் பிரச்சனை ஓயாத பட்சத்தில், ” நமக்கு நாமே ” என்று சொல்லக்கூடிய தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் மாற்று வழியை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://aramtalkies.com/2024/why-is-karnataka-refusing-to-give-cauvery-water-to-tamilnadu-aram-talkies-special/