Jump to content

பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024”

தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கண்காட்சி முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 23 முதல் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கண்காட்சியை முற்றிலும் இலவசமாக பார்வையிடமுடியும். முதல் நாள் நிகழ்வில் யாழ். இந்திய துணைவேந்தர், வடக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாக கலந்துகொள்வார்கள். இரண்டாம் நாள் கடற்தொழில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே ஏற்பாட்டாளர்கள் அதனை அறிவித்துள்ளனர்.

கண்காட்சி தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கட்டுமானம், பிற தொழில் துறைகளில் பங்காளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 200இற்கும் மேற்பட்ட காட்சி கூடங்களுடன் பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள், கட்டுமானம் மற்றும் பிற தொழில்களை இணைந்து மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கப்படுகின்றனர் இதேசமயம், சிறு தொழில் முயற்சியாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பிரபலப்படுத்தவும் உதவும்.

வடக்கு, தெற்கு வர்த்தக இணைப்புகளை வலுப்படுத்தும் இந்த கண்காட்சியில் கட்டுமானம் சார் இயந்திரங்கள், உபகரணங்கள், விவசாயம் சார் உபகரணங்கள், மின் உபகரணங்கள், கைவினை பொருட்கள், செரமிக் மற்றும் கண்ணாடிப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதாரம், உணவு மற்றும் உடைகள் போன்ற பல துறைகளில் உள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தவுள்ளன.

இந்தக் கண்காட்சியில், பொருட்கள் சேவைகளை 40 வீதம் வரையில் விலைக்கழிவுடன் பெற்றுக்கொள்ள முடியும். வடக்கைச் சேர்ந்த தொழில்
முயற்சியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காட்சிக்கூடங்களை வழங்கவுள்ளோம். -என்றனர்

பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” (newuthayan.com)

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024”

தமிழினம் தனக்கென்று உரிமையோடு வாழ்வதற்கு இலங்கையிவ் மண் இல்லை ஆனால் “யாழ்ப்பாணத்தில் எக்ஸ்போ 2024”🤭

“இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம்”

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Paanch said:

தமிழினம் தனக்கென்று உரிமையோடு வாழ்வதற்கு இலங்கையிவ் மண் இல்லை ஆனால் “யாழ்ப்பாணத்தில் எக்ஸ்போ 2024”🤭

“இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம்”

 

திகதியை கவனியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விசுகு said:

திகதியை கவனியுங்கள்.

இது நடக்கும் திகதி ஆவணி 23 -25 (யூலை 23 - 25 அல்ல)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இது நல்ல விடயம்........!

--- சிறு தொழில்கள் ஊக்குவிக்கப் பட்டு தொழில் முனைவர்கள் உருவாக வாய்ப்புண்டு........!

--- மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் பல உருவாகும்.......!

--- வேலை வாய்ப்புகள் அதிகமாகும்........!

பகிர்வுக்கு நன்றி பிழம்பு .......!  👍

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Paanch said:

தமிழினம் தனக்கென்று உரிமையோடு வாழ்வதற்கு இலங்கையிவ் மண் இல்லை ஆனால் “யாழ்ப்பாணத்தில் எக்ஸ்போ 2024”🤭

“இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம்”

 

அதாவது, ஊரில் எந்த நல்ல விடயமும் நடந்திரக் கூடாது. தீர்வு வரும் வரைக்கும் தாயக மக்கள் முன்னேறக் கூடிய எந்தவிதமான நிகழ்வுகளும் நிகழ்ந்திரக் கூடாது. பொருளாதாரத்தில் இன்னும் இன்னும் பின்னோக்கியே செல்ல வேண்டும். 

நல்ல மனசு உங்களுக்கு

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் மொஹமட் மஹிஷ் தெரிவித்துள்ளார். எனவே, வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியமானது. நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1407734
    • டொனால்ட் ட்ரம்பின்  (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)  தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia)  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன்.   ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது. அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல். புடினின் வாழ்த்து ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார். ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/putin-praises-trump-says-russia-ready-for-dialogue-1731016171#google_vignette
    • ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பியோடிய 43 குரங்குகள். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளன. பாதுகாவலரால் தவறுதலாக மையத்தின் கதவு திறக்கப்பட்டதாகவும், இந்த குரங்குகள் தப்பிச் சென்றதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி குறித்த பகுதியில் குரங்கு கூட்டத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், குடியிருப்பாளர்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி வைக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கரோலினா மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் தப்பியோடிய குரங்குகளைக் கண்டால், உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1407752
    • பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.    கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,    கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும்  அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.   எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ  அவர்களுக்கு அமைச்சர் பதவிகள்  வழங்கப்பட்டன.  அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை.   உதாரணத்திற்கு உயர் கல்வி, பெருவீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு  உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெருவீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எவேபொருத்தமானது  எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள்.  இப்படி யல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.   அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள்  போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட  வேண்டும்.  மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண் கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரிட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில் கின்றனர்.   இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார்.     https://www.virakesari.lk/article/198152
    • கலாநிதி ஜெகான் பெரேரா நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில்  திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது. பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்கள் அனுபவிக்கவேண்டி வந்த இடர்பாடுகளும் ஊழலை ஒழிக்கவேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை அகற்றவேண்டும் என்றும் உறுதிப்பாட்டை இறுக்கமாக்கியது. அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கொண்டிராத கட்சி என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியே (முன்னணி கட்சிகள் மத்தியில்) ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டதாக இருந்தது. ஊழலினாலும் முறைகேடுகளினால் சீரழிந்துகிடக்கும் நாட்டை துப்புரவு செய்ய வேண்டும் என்ற வேட்கை  ஆட்சிமுறை தொடர்பில் மக்களுக்கு இருந்த அக்கறையின் மைய  விவகாரமாக இருந்தது. வேறு எந்த பிரச்சினையினாலும் அதை மறைப்புச் செய்ய முடியவில்லை. இனத்துவ தேசியவாதத்தை கிளறிவிடுவதற்கு சில எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரயத்தனம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேசிய மக்கள் சக்தியை தவிர, தங்கள் மத்தியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களைக்  கொண்ட எந்தவொரு பிரதான அரசியல் கட்சியினாலும் ஊழல் பிரச்சினையை கையாள்வதற்கான அரசியல் துணிவாற்றல் தங்களுக்கு இருப்பதாக வாக்காளர்களை நம்பச்செய்ய முடியவில்லை. அதனால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாக எதாச்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களோ அல்லது அவற்றின் வாதங்களோ வாக்காள்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  ஊழலை ஒழிக்க  வேண்டும் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களை அகற்ற வேண்டும் என்பதுமே வாக்களர்களின் பிரதான அபிலாசையாக இருக்கிறது. முன்னைய அரசாங்கத்தின் இரு முக்கிய உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை அடுத்து ஊழலையும் அதனுடன் இணைந்த தண்டனையின்மையையும் கையாளுவதில் அரசாங்கம் அக்கறையுடன் இருக்கிறது என்ற திருப்தி தற்போதைக்கு வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  பதிவு செய்யப்படாத ஆடம்பர வாகனம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் வன்முறை நடத்தை வரலாற்றைக் கொண்டவர்.  ஆனால், அவர் முன்னர் ஒருபோதும்  கைது செய்யப்பட்டதில்லை. அவரின் குடும்பம் காலத்துவத்துக்கு  முன்னரான  உயர்குடி தொடர்புகளை கொண்டவர் என்பதும் சமூகத்தின் ஒரு பிரிவினரின் வாக்குகளை பெற்றுத்தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டதாலும்  அவர் கைதுசெய்யப்படால் இருந்திருக்கலாம். ஆனால்,  தற்போதைய அரசாங்கம் அவரையும் பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட  முன்னைய அரசாங்கத்தின் இன்னொரு உறுப்பினரையும் பதிவு செய்யப்படாத வாகனங்களை வைத்திருந்த ஒப்பீட்டளவில் சிறிய குற்றச்சாட்டு தொடர்பில்  இப்போது கைது செய்திருக்கிறது. இதை இவர்களின் பல சகாகக்கள் மோசடி செய்ததாக கூறப்படும் கோடிக்கணக்கான பணத்துடன்  ஒப்பிடமுடியாது. ஆனால், இது ஒரு தொடக்கம். பிரதான பிரச்சினை அதனால், பிரதான பிரச்சினையான ஊழலை தாமதமின்றி கையாளத் தொடங்கி முன்னைய அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளில் சிலருக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருப்பதால் அது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உண்மையில் அக்கறையுடன் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். முன்னைய அரசாங்கத்தின் இரு உறுப்பினர்களுக்குைஎதிரான குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பது கஷ்டம். ஏனைன்றால் சான்றுகள் ( பதிவுசெய்யப்படாத இரு  மோட்டார் வாகனங்கள் ) கைவசம் இருக்கின்றன. கோடிக்கணக்கான பணமோசடி சம்பந்தப்பட்ட சிக்கலான வழக்குகளில் சான்றுகளைப் பெறுவது கஷ்டம். முன்னைய அரசாங்கங்களினால் கடந்த காலத்தில் நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்பட்ட ஊழல் வழக்குகளில் பல தடவைகள் இடம்பெற்றதைப் போன்று அந்த சிக்கலான வழக்குகள் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு உள்ளாகி இறுதியில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் விடுதலையாகி விடவும் கூடும். ஆனால், தற்போதைய வழக்குகள் நேரடியானவை சிக்கலற்றவை என்பதால் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதன் விளைவாக, இன்றைய தருணத்தில் அரசாங்கத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. குறிப்பாக, முன்னைய அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை  இன்னறய அரசாங்கம் கையாளுகின்ற முறை தொடடர்பான விமர்சனங்களைப் பொறுத்தவரையில் நிலைமை இதுவே. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதாகவும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது இன்னொரு விமர்சனம். ஆனால் , தங்களது பொருளாதார இடர்பாடுகள்  சாத்தியமானளவு விரைவாக தணிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள் என்கிற அதேவேளை,  புதிய அரசாங்கம் ஒரு மாத காலத்துக்கு முன்னர்தான் பதவிக்கு வந்தது என்பதையும் குறைந்த முன்னுரிமை கொண்ட துறைகளில் இருந்து உயர்ந்த முன்னுரிமை கொண்ட துறைகளுக்கு வளங்களை  மாற்றிப்பகிர்வதற்கு புதிய வரவு  --  செலவு திட்டம் ஒன்றை  நிறைவேற்ற வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். வரிக் கட்டமைப்புகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சட்டங்களில் மாற்றம் செய்யவேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் அது இந்த நேரத்தில் சாத்தியமில்லை. அத்துடன்,  ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அதன் போட்டிக் கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகளின் பினபுலத்தில் நோக்கவேண்டியதும் அவசியமாகும்.  நம்பமுடியாத நிவாரணப் பொதிகள் அவற்றில் அடங்கும். சமூகத்தின் மிகவும் நலிவுற்ற குழுக்களுக்கு மாதாந்தம் நலன்புரி கொடுப்பனவு வழங்குவதாகவும் கடன்நிவாரணத் திட்டங்கள் அறிமுகம், மாற்றுத் திறனாளிகளுக்கும் மிகவும் வறுமைப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, வரிக்குறைப்பு,  இலட்சக்ணக்கில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், சகல தரப்பினருக்கும் சம்பள அதிகரிப்பு, பெருமளவு வெளிநாட்டு முலீடுகளைப் பெறுதல் அல்லது குறுகிய கால வரையறைக்குள் கடன் நிவாரணங்களைப் பெறுதல் என்று பெருவாரியான வாக்குறுதிகளை அந்த கட்சிகள் வழங்கின. கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் ஆற்றல் குறித்த தற்போதைய மதிப்பீடு மற்றும் சர்வதேச உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அதனால் அரசாங்கம் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது பாசாங்கத்தனமானதாகும். சாத்தியமான பங்காளிகள் அறகலய போராட்ட இயக்கத்தினால் " முறைமை மாற்றம் " என்று சுருங்கச் சொல்லப்பட்ட ஊழல் நிறைந்த ஆட்சி முறையை முற்று முழுவதுமாக மாற்றவேண்டும் என்ற மக்களின் வேட்கை பாராளுமன்ற தேர்தலிலும் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கக்கூடிய பிரசாரத் தொனிப்பொருளாக தொடர்ந்து விளங்கப்போகிறது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்காளிக்காதவர்களும் கூட ஊழலற்ற ஆட்சிமுறையை விரும்புவதால் இந்த தடவை அந்த கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. மறுபுறத்தில், கடந்த மாதம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் கண்டதைப் போன்று மக்கள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்கு அல்லது தங்களுக்கு உதவியவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக வாக்களிக்கவும் நாட்டம் காட்டலாம்.  அது உள்ளூர் மட்டத்தில் சலுகைகளைச் செய்திருக்கக்கூடிய முன்னைய அரசாங்க உறுப்பினர்களுக்கு அனுகூலமாக அமையும். எல்பிட்டிய பிரதேச சபையில்  47 சதவீதமான வாக்குகளைக்  கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி அரைவாசி ஆசனங்களைப் பெற்றது. ஆனால், கூடுதல் சதவீதமான வாக்குகளை ஏனைய கட்சிகளே பெற்றன. நாட்டில் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் காணப்படும் நிலைவரங்களும்  தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை சிக்கலாக்கும். தேசிய மக்கள் சக்தி முன்னர் பெரும்பான்மையினச் சமூகத்தின் மீதே பிரதானமாகக் கவனத்தைக் குவித்தது.  அதன் உயர்மட்டத் தலைவர்களும் அந்த இன, மதப் பின்னணியில் இருந்து வந்தவர்களே. அதனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்ளைப் பொறுத்தரை, தங்கள் மத்தியில் வேலை செய்யாத ஒரு தேசியக் கட்சியை விடவும் தங்களது பிரிவுசார்ந்த நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகளுக்கே வாக்களிப்பதில் இயல்பாகவே நாட்டம் காட்டுவார்கள். ஆனால், சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது சொந்த அரசியல் தலைவர்கள் மீதும் விரக்தியடைந்திருக்கின்ன. குறிப்பாக அந்த சமூகங்களின் இளம்  தலைமுறையினர் பிரிந்து வாழ்வதை விடவும் பிரதான சமூகத்துடனும் தேசிய பொருளாதாரத்துடனும் இணைந்து வாழ்வதில் முன்னரை விடவும் இப்போது கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள். அரசாங்கம் தானாகவே அரசியலமைப்புக்கு திருத்தங்களைச் செய்யும் செயன்முறைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பதே  இந்த ஆய்வில் இருந்து பெறக்கூடிய முடிவாகும். அதற்கு சாதாரண பெரும்பான்மை ஒன்று கிடைக்கலாம். ஆனால் அதுவும் நிச்சயமானதல்ல. அதனால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடிய கூட்டாகச் செயற்பட்டு சட்டங்களையும் அரசியலமைப்புத் திருத்தங்களையும் நிறைவேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படுமானால் அதுவே நாட்டுக்கு  நல்ல வாய்ப்பாக அமையும். அதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிக்க பிரேமதாச கூறியதைப் போன்று எதிர்க்கட்சிகளுடன்  கலந்தாலோசனை, விட்டுக்கொடுப்பு, கருத்தொருமிப்பு அவசியமாகும். ஊழலும் தண்டனையின்மையும் கோலோச்சிய கடந்த காலத்தைப் போலன்றி ஊழலை முடிவு கட்டுவதற்கு தேவையான சடடங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவது எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு அமிலப் பரீட்சையாகும். தேசிய மக்கள் சக்தி அதன் பங்காளிகளாக வரக்கூடியவர்களை  இன, மத சிறுபான்மை கட்சிகளில் தேடிக் கொள்ளக்கூடியது சாத்தியம். https://www.virakesari.lk/article/198148
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.