Jump to content

குறுங்கதை 21 -- கோட்பாட்டின் சதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கோட்பாட்டின் சதி
-----------------------------
வார இறுதி நாட்களில் ஏதாவது ஒன்றின் பெயரால் ஒன்றாகக் கூடுவதும், அன்றைய அரசியலை, சினிமாவை, விளையாட்டுகளை அலசி ஆராய்வதும் புலம்பெயர் சமூகத்தின் ஒரு அடையாளம் ஆகிவிட்டது. சமூக ஊடகங்களை விட நேரில் ஒன்றாகக் கூடி விடயங்களைப் பகிர்வது மிக இலகுவான, சுமூகமான ஒரு செயல். இன்டெர்நெட்டில் அவர்களுக்குள் ஆவிகள் புகுந்தது போல சுற்றிச் சுழன்று அடிக்கும் பலர் நேரில் ஒரு வார்த்தை கூட கதைக்கமாட்டார்கள். ஒரு கருத்துமே அவர்களிடம் இருக்காது. அவர்களா இவர்கள் என்றும் தோன்றும்.
 
நிதானமான நிலையில், நேரிலும், இன்டெர்நெட்டிலும் தீ மிதிப்பின் போது வருவது போல கடும் உருக் கொண்டு உலாவுகின்றவர்கள் மிகச் சிலரே. எங்களின் வகுப்பு படித்த பாடசாலைக்கு எதற்கோ நிதி கொடுத்து, பின்னர் அது பெரும் பிரச்சனையாகியது. எல்லாமே வாட்ஸ்அப்பில் தான். அடுத்த வந்த ஒன்றுகூடல் ஒன்றில் கதைப்போம் என்று எல்லோரும் சுற்றி இருந்தால், இரண்டோ மூவரோ தவிர்த்து, வேறு எவரும் எதுவுமே சொல்லவில்லை. பந்தி பந்தியாக எழுதியவர்களால் கோர்வையாக எதையும் சொல்ல முடியவில்லை. இது மனதிற்கு பெரும் ஆறுதலைக் கொடுத்தது.   
 
விஸ்கியின் பின்னோ அல்லது காக்டெயிலின் பின்னோ கதைத்தால் அது வேற கணக்கு. ஒரு தடவை ஒரு இடத்தில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிற நண்பன் ஒருவன், அவன் நல்ல விவேகமானவனும் கூட, திடீரென்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டான். உள்ளுக்குள் இருந்த நண்பனின் மனைவி அவர்களின் சின்ன மகளிடம் 'அப்பாவின் சத்தம் கொஞ்சம் கூடக் கேட்குது, போய் என்னவென்று பார்த்து வா.....' என்று அனுப்பிவிட்டார். போய் பார்த்து விட்டு வந்த சின்ன மகள் 'அப்பா still standing.........' என்று சுருக்கமாக நிலவரத்தை சரியாகச் சொன்னார். அத்துடன் மனைவி சத்தத்தை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.
 
ஒரு இடத்தில் புதியவர் ஒருவரை அறிமுகப்படுத்தினர். சமீபத்தில் நாட்டின் வேறொரு பகுதியிலிருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்திருக்கின்றார். 'ஆள் கனக்க கதைப்பார்......' என்பது ஒரு இரகசியத் தகவலாகவும் சொல்லப்பட்டிருந்தது. அது சிறிது நேரத்திலேயே தெரிந்தும் விட்டது.
 
எல்லா சதிக் கோட்பாடுகளையும் விரல் நுனியில் வைத்திருந்தார். 9/11 ஐ அமெரிக்கா எப்படி திட்டம் போட்டு முடித்தது என்று விளக்கினார். ஈராக்கை அடிக்க, மத்திய கிழக்கை வெருட்ட, அங்கிருக்கும் எண்ணை வளத்தை சுரண்ட என்று புள்ளிகளைப் போட்டு இணைத்தார். சந்திரனில் அமெரிக்கா இறங்கவே இல்லை என்றார். அமெரிக்கா அரிசோனா மாநிலப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் ஒரு போட்டோ ஷூட்டிங் செய்து தான் அந்தப் படங்களை எடுத்தார்கள் என்றார்.
 
இளவரசி டயானாவின் விபத்து. எகிப்தின் பிரமிட்டுகள். இப்படியே வரிசை போய்க் கொண்டிருந்தது. ஏலியன்ஸ் வந்து பிரமிட்டுகளை கட்டினது மட்டும் இல்லை, இன்றும் அவர்கள் எங்களுடன் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றார். எங்கள் இருவரில் ஒருவர் ஏலியனாகக் கூட இருக்கலாம் என்றார். அவர் கதைகளைத் தொடர தொடர, இவர்களுக்கு இவ்வளவு கொள்கைகளுடன் இரவில் நித்திரை எப்படி வரும், கண்களை ஆவது மூடுவார்களா என்ற சந்தேகம் எனக்கு வந்து கொண்டிருந்தது.    
 
'பூமி தட்டை என்றும் சொல்கின்றார்களே............' என்று அவர் இடைவெளி விட்ட ஒரு கணத்தில் நான் ஒரு தலைப்பை எடுத்துக் கொடுத்தேன். பூமி தட்டையானது என்பதும் ஒரு பிரபலமான சதிக் கோட்பாடு. ஒருவர் பார்க்கும் போது எல்லாமே தட்டையாக, கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிவதே அதற்கு சாட்சி என்று சதிக் கோட்பாளர்கள் கூறுவார்கள். ஆனால் அவர் அந்த சதிக் கோட்பாட்டை  ஒப்புக் கொள்ளவில்லை. பூமி உருண்டை தான் என்றார். இவர்களுக்கும் உட்பிரிவுகள் இருக்கின்றன என்று அன்று தெரிந்துகொண்டேன்.
 
ஒரு பெண்ணும், இரண்டு சிறுவர்களும் எங்களிடம் வந்தனர். அவரின் மனைவி, பிள்ளைகள் என்று அறிமுகப்படுத்தினார். பெரிய சிறுவன் பாடசாலை ஆரம்பித்திருந்தார். சின்னவர் இன்னும் போக ஆரம்பிக்கவில்லை. ஒரு சின்ன உரையாடலின் பின், பஸ்ஸுக்கு நேரம் ஆகி விட்டது என்று ஆயத்தமானார்கள். ஏன் பஸ், காரை திருத்த வேலைகளுக்கு விட்டிருக்கின்றீர்களா என்றேன். தன்னிடம் கார் இல்லை என்றார். இங்கு கார் ஒன்று இல்லாமல் வாழ்வது, அதுவும் குடும்பமாக, நினைத்தே பார்க்க முடியாத, நம்பவே முடியாத ஒரு விஷயம். கால்கள் இல்லாதது போல. ஏன் என்று கேட்க வாயெடுத்து விட்டு அப்படியே அதை விழுங்கிவிட்டேன். இவர்களிடம் அதற்கும் ஒரு கோட்பாடு இருக்கும்.
 
அவர் மனைவியை ஒரு தடவை பார்த்தேன். அவர் எப்போதோ வீதியைப் பார்க்க ஆரம்பித்திருந்தார்.
  • Like 7
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

ஒரு பெண்ணும், இரண்டு சிறுவர்களும் எங்களிடம் வந்தனர். அவரின் மனைவி, பிள்ளைகள் என்று அறிமுகப்படுத்தினார். பெரிய சிறுவன் பாடசாலை ஆரம்பித்திருந்தார். சின்னவர் இன்னும் போக ஆரம்பிக்கவில்லை

பிள்ளைகள் வளர எல்லாமே சரியாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்பாட்டின் சதி தொடருகிறது..........

அவர் மனைவி அவரிடம் வருகின்ற பஸ் எமது பஸ்தான் கையினை காட்டுங்கள் என அவரிடம் கூறுகிறார், ஆனால் அவர் பதிலுக்கு ஒரு நக்கலான புன்னகை ஒன்றினை உதட்டருகே தவளவிட்ட வண்ணம், இது என்ன ஊரென்றா நினைத்தீர்கள்? ஒவ்வொரு தரிப்பிடத்திலும் பஸ்ஸினை அவர்கள் நிறுத்தத்தான் வேண்டும் என்றார்.

இங்கு அப்படி நிறுத்தாமல் போனால் வாடிக்கையாளர் நீதிமன்றில் போய்தான் பஸ்ஸினை நிறுத்தவேண்டும் என்றார்.

பஸ்ஸின் குறிகாட்டி விளக்கு எரியும்போதே பஸ் தனது வேகத்தினை குறைத்து இவர்கள் பக்கமாக பஸ்ஸினை நிறுத்தியது, அவர் தனது மனைவியினை பார்த்து ஒரு வெற்றி புன்னகையினை வீசி விட்டு பஸ்ஸில் தனது குடும்பத்தினரை ஏற அனுமதித்து இறுதியாக பஸ்ஸில் ஏறினார்.

பஸ்ஸில் அவரை பார்த்து சாரதி கூறினார், எனக்கு எப்படித்தெரியும் நீ பஸ்ஸில் ஏறப்போகிறாயா இல்லையா? என, கை காட்டியிருக்கலாமே என கேட்டார், எங்கே தனது மனைவிக்கு கேட்டுவிடுமோ என பயந்த வண்ணம் ஓ அப்படியா என பதிலளித்த அதே நேரம் அவரது மனைவி அவரை திரும்பிப்பார்த்து ஒரு புன்னகை செய்தார்.

பஸ் சாரதி என்ன ஓ அப்படியா என்றால் என்ன  அர்த்தம் என என்று கோபத்தோடு கேட்பது அவர் காதில் பின்னால் கரைந்து போனது ஏன் இந்த சின்ன விடயத்திற்கு இந்த பஸ் சாரதி  அந்த ஒன்று கூடலிற்கு வந்த ரசோதரன் மாதிரி என்ன உலகம் உருண்டையா? என அலட்டிக்கொள்கிறார் என சிந்தித்தவாறே தனது இருக்கையை நோக்கி நகர்ந்தார்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, vasee said:

பஸ் சாரதி என்ன ஓ அப்படியா என்றால் என்ன  அர்த்தம் என என்று கோபத்தோடு கேட்பது அவர் காதில் பின்னால் கரைந்து போனது ஏன் இந்த சின்ன விடயத்திற்கு இந்த பஸ் சாரதி  அந்த ஒன்று கூடலிற்கு வந்த ரசோதரன் மாதிரி என்ன உலகம் உருண்டையா? என அலட்டிக்கொள்கிறார் என சிந்தித்தவாறே தனது இருக்கையை நோக்கி நகர்ந்தார்.

உங்கள் இருவரின் எழுத்தைப் பார்க்க ஒருவேளை இவங்க தான் அவங்களோ?

என்று எண்ணத் தோன்றுகின்றது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

பிள்ளைகள் வளர எல்லாமே சரியாகும்.

👍......

அது தான் கடைசியாக வழங்கப்படும் இழப்பற்ற ஒரு சந்தர்ப்பம், அண்ணை. அதையும் விட்டால், ஒரு பெரும் தனிப்பட்ட இழப்பு வந்து வாழ்க்கையை புரட்டிப் போட்டால் தான் உண்டு............ 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

👍......

அது தான் கடைசியாக வழங்கப்படும் இழப்பற்ற ஒரு சந்தர்ப்பம், அண்ணை. அதையும் விட்டால், ஒரு பெரும் தனிப்பட்ட இழப்பு வந்து வாழ்க்கையை புரட்டிப் போட்டால் தான் உண்டு............ 
 

 

விளங்கவில்லைப் பிரபு...இது பைடன் ரம்பு  கதையோ...அமெரிக்காகாரர்தான் ரசிக்கினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் இருவரின் எழுத்தைப் பார்க்க ஒருவேளை இவங்க தான் அவங்களோ?

என்று எண்ணத் தோன்றுகின்றது.

🤣....

வசீயின் படமும் கொஞ்சம் கலங்கி ஒரு ஏலியன் மாதிரியும் தெரியுது.....😀.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

🤣....

வசீயின் படமும் கொஞ்சம் கலங்கி ஒரு ஏலியன் மாதிரியும் தெரியுது.....😀.

மன்னிக்கவும், எனக்கு இந்த அமெரிக்கர்களின் ஏலியன் சதிக்கோட்பாட்டில் நம்பிக்கை இல்லை😁.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுகூடலா அங்கு ஒரு சத்தயுத்தமே நடக்கும்.......பிஸ்கட் தேநீருடன் ஒரு மாதிரி ஒன்றுகூடல் முடிந்ததும் கர்ஜித்த சிங்கங்கள் எல்லாம் எதுவுமே நடக்காததுபோல் கலந்துரையாடுவார்கள் பாருங்கள் அதுதான் நிஜமான ஒன்று கூடல்.......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

கோட்பாட்டின் சதி தொடருகிறது..........

பஸ் சாரதி என்ன ஓ அப்படியா என்றால் என்ன  அர்த்தம் என என்று கோபத்தோடு கேட்பது அவர் காதில் பின்னால் கரைந்து போனது ஏன் இந்த சின்ன விடயத்திற்கு இந்த பஸ் சாரதி  அந்த ஒன்று கூடலிற்கு வந்த ரசோதரன் மாதிரி என்ன உலகம் உருண்டையா? என அலட்டிக்கொள்கிறார் என சிந்தித்தவாறே தனது இருக்கையை நோக்கி நகர்ந்தார்.

🤣...............

வசீக்கு எழுத்து நன்றாகவே வரும் என்று முன்னரே தெரியும். கற்பனையும் அபாரம்.......👍

அடுத்த காட்சியாக அந்த பஸ்ஸிலேயே ஒரு ஆக்‌ஷன் சீன் வைக்கலாம் அல்லது ஒரு எமோஷனல் சீன் வைக்கலாம்........😃.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

விளங்கவில்லைப் பிரபு...இது பைடன் ரம்பு  கதையோ...அமெரிக்காகாரர்தான் ரசிக்கினம்..

இல்லை அல்வாயன், இது பைடன் - ட்ரம்ப் அவர்களின் கதை இல்லை.

கொள்கைகள், கோட்பாடுகள் என்று இருப்பவர்கள் சிலரின் மனைவிகள் மனங்களில் என்ன இருக்கும் என்ற எண்ணமே இந்தக் கதை. இது புதிய ஒரு எண்ணம் இல்லை. இதைப் போல பல ஏற்கனவே வந்துள்ளன. யசோதரா, புத்தரின் மனைவி, தன் நிலையைச் சொல்வதாக சில கவிதைகளும், கதைகளும் வந்துள்ளன. ராகுலனின், புத்தரின் மகன், நிலையும் எழுத்தில் வந்துள்ளது. கற்பனைகள் தான்.

பாரதியார் செல்லம்மாள் அவர்களுக்கு எழுதிய கடிதங்களும், செல்லம்மாள் அவர்கள் பாரதியாரின் மறைவின் பல வருடங்களின் பின் சொன்ன விசயங்களும் நிஜத்தில் நடந்தவை.

சதி என்பது மனைவி என்னும் சொல்லின் ஒத்த சொல் தானே. இங்கு 'கோட்பாட்டின் சதி' என்பது 'கோட்பாட்டின் மனைவி' என்பதையே. 

ஈழப்பிரியன் அண்ணா சொல்லியிருப்பது போல, பிள்ளைகள் பிறந்தவுடன் வாழ்க்கையில் ஒரு நெகிழ்வு வரவேண்டும். முக்கியமாக பெண் பிள்ளை ஒன்று பிறந்தவுடன். வாழ்க்கையில் இந்தக் கட்டத்தையும் இறுக்கமாகவே தாண்டினால், அதன் பின் ஒரு பெரிய தனிப்பட்ட இழப்பே, உதாரணம்: மிக அன்புக்குரியவர் ஒருவரின் மறைவு, ஒருவரின் பாதையை மாற்றும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரசோதரன் said:

கொள்கைகள், கோட்பாடுகள் என்று இருப்பவர்கள் சிலரின் மனைவிகள் மனங்களில் என்ன இருக்கும் என்ற எண்ணமே இந்தக் கதை.

இந்த கோட்பாடுகளை பறைசாற்றுபவர்கள் வீட்டுக்கு வந்ததும்

ஊருக்கடி பெண்ணே

உனக்கல்லடி கண்ணே

என்று சொல்லி வாயடைத்துவிடுவார்கள்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த கோட்பாடுகளை பறைசாற்றுபவர்கள் வீட்டுக்கு வந்ததும்

ஊருக்கடி பெண்ணே

உனக்கல்லடி கண்ணே

என்று சொல்லி வாயடைத்துவிடுவார்கள்.

🤣..........

அப்படி இருந்தால் அந்தக் குடும்பம், பெரும்பாலும், தப்பிவிடும், அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சதி என்பது மனைவி என்னும் சொல்லின் ஒத்த சொல் தானே. இங்கு 'கோட்பாட்டின் சதி' என்பது 'கோட்பாட்டின் மனைவி' என்பதையே. 

'கோட்பாட்டின் சதி' என்று தான் எல்லா சந்தர்ப்பங்களிலும் இருக்க வேண்டும் என்றும் இல்லை......... 'கோட்பாட்டின் பதி' என்று சொல்லும் நிலையும் பல இடங்களில் இருக்கும்...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

'அப்பாவின் சத்தம் கொஞ்சம் கூடக் கேட்குது, போய் என்னவென்று பார்த்து வா.....' என்று அனுப்பிவிட்டார். போய் பார்த்து விட்டு வந்த சின்ன மகள் 'அப்பா still standing.........' என்று சுருக்கமாக நிலவரத்தை சரியாகச் சொன்னார். அத்துடன் மனைவி சத்தத்தை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.

ஒரு ஆணை, மாதாவைவிட சதிதான்  நன்கு அறிந்து வைத்திருப்பாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kavi arunasalam said:

ஒரு ஆணை, மாதாவைவிட சதிதான்  நன்கு அறிந்து வைத்திருப்பாள்.

👍..........

அன்னை அநேகமாக எதையும் பொறுத்தே போவார்......... சதி சில வேளைகளில் சன்னதம் கொண்டு விடும்.......😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2024 at 00:11, ரசோதரன் said:

🤣...............

வசீக்கு எழுத்து நன்றாகவே வரும் என்று முன்னரே தெரியும். கற்பனையும் அபாரம்.......👍

அடுத்த காட்சியாக அந்த பஸ்ஸிலேயே ஒரு ஆக்‌ஷன் சீன் வைக்கலாம் அல்லது ஒரு எமோஷனல் சீன் வைக்கலாம்........😃.   

உங்கள் கருத்திற்கு நன்றி, உங்கள் கதையினை குறுக்கிட மனதளவில் சங்கடமாகவே உணர்ந்தேன், பின்னர் ஒரு  நகைசுவையாக அடுத்த தரப்பு எவ்வாறு சிந்திக்கலாம் என்பதாக எழுதியிருந்தேன்,பொதுவாக சில காலமாக கதைகள் வாசிப்பதில்லை ஆனால் உங்கள் கட்கை கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக உணர்கிறேன் அதனால் வாசிப்பதுண்டு.

பரவலாக உங்கள் கதை யாழில் நல்ல வரவேற்பை பெறுகிறது தொடர்ந்து எழுந்துங்கள் அத்துடன் வித்தியாசமான முயற்சிகளையும் செய்யுங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் மொஹமட் மஹிஷ் தெரிவித்துள்ளார். எனவே, வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியமானது. நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1407734
    • டொனால்ட் ட்ரம்பின்  (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)  தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia)  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன்.   ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது. அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல். புடினின் வாழ்த்து ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார். ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/putin-praises-trump-says-russia-ready-for-dialogue-1731016171#google_vignette
    • ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பியோடிய 43 குரங்குகள். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளன. பாதுகாவலரால் தவறுதலாக மையத்தின் கதவு திறக்கப்பட்டதாகவும், இந்த குரங்குகள் தப்பிச் சென்றதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி குறித்த பகுதியில் குரங்கு கூட்டத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், குடியிருப்பாளர்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி வைக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கரோலினா மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் தப்பியோடிய குரங்குகளைக் கண்டால், உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1407752
    • பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.    கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,    கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும்  அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.   எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ  அவர்களுக்கு அமைச்சர் பதவிகள்  வழங்கப்பட்டன.  அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை.   உதாரணத்திற்கு உயர் கல்வி, பெருவீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு  உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெருவீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எவேபொருத்தமானது  எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள்.  இப்படி யல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.   அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள்  போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட  வேண்டும்.  மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண் கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரிட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில் கின்றனர்.   இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார்.     https://www.virakesari.lk/article/198152
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.