Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kandiah57 said:

இவ்வாறு தமிழ் மக்கள் இவருக்கே பெருமளவுக்கு வாக்களித்தால்

இன்னொரு இனக்கலவரத்தைத் தூண்டிவிட்டால் போச்சு, பெருமளவு குறுகிவிடும்.🤪

  • Replies 77
  • Views 5.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    இதைத்தான் மக்களை ஏமாற்றும், புளுத்துப் போன, பழைய அரசியலின் நீட்சி என்கின்றேன். இவ்வாறு நீங்கள் சொல்லும் உறுதிப்படும், வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே உறுதியாக நிற்கின்றார்கள் என்று சர்வதேசத்துக்கு

  • அதி உத்தம  ஜனாதிபதி  பா. அரியநேந்திரன் நிச்சயமாக தமிழர் பிரச்சனைக்கு நீதியான தீர்வை காண்பார்.  இவரே முப்படைகளின் பிரதம தளபதியாகவும் எதிர்காலத்தில் இருக்க போவதால் முப்படைகளையும் உபயோகித்து அதிரடியாக சு

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுக்கேனையள்.. ஒண்டில் வீராவசனம் பேசுவாங்கள் இல்லாட்டி இப்பிடி ஏதாவது விளங்காத வேலை செய்வாங்கள்.. இவங்கள் செய்ததில் ஒரு வெளிநாடாவது எங்களுக்கு ஏதாவது செய்ததா தீர்வை நோக்கி இத்தனை தேர்தல்களில் நின்றிர

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

இன்னொரு இனக்கலவரத்தைத் தூண்டிவிட்டால் போச்சு, பெருமளவு குறுகிவிடும்.🤪

1983 பின்னர் இனக்கலவரங்கள்  நடபெறவில்லை,....30 ஆண்டுகள் தமிழன் திருப்பி அடித்தான்.   2009 இருந்து 2024 வரை   15 ஆண்டுகள் இனக்கலவரம். நடக்கவில்லை  முக்கிய காரணங்களில் ஒன்று   தமிழன் திருப்பி அடிப்பான். என்ற பயம்   மலையகம் கூட ஓரளவு பலம்பெற்றுவிட்டார்கள். அவர்கள் கூட திருப்பி அடிக்கலாம்   

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசமாகத் தமிழினம் நின்ற காலமொன்றை நாம் இனிக்காணமுடியுமா? அதற்கான வலுவான கருத்தூட்டல் மற்றும் அரசியற் செயலாக்கம் போன்றவற்றைச் செய்யும் தகமையைக் களத்திலேயுள்ள எந்தத் தமிழ் அரசியற்கட்சியாவது கொண்டுள்ளதா? ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழினம் காலத்துக்குக் காலம் சிங்களத் தலைமைகளாற் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுவருவதே வரலாறாக உள்ளது. இந்த வரலாற்றுப்போக்கில் தமிழினம் தன்னைத் தனது பூர்வீக நிலத்தில் தக்கவைத்துக்கொள்ளப் பெரும் உயிரீகத்தை செய்து போராடியபோது, அதனைச் சிங்களம் பயங்கரவாதமென்றதும் இந்த உலகு அதனோடு ஒத்தோடி எமது ஆயுதப் போராட்ட வலுவை அழித்தொழித்து எம்மைக் கையறுநிலையில் விட்டுள்ளது. இந்தச் சூழலிற் தமிழினம் ஐநா முதல் அமெரிக்காவரை படியேறிக் கலந்துரையாடல்களைச் செய்தபோதும், எந்த நாடோ நியாயம் பேசும் அனைத்துலக நிறுவனங்களோ தமிழினம் சார்ந்தோ அல்லது இனஅழிப்புச் சார்ந்தோ ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா? இலங்கையராக வாழுங்கள் என்ற உபதேசத்தைத் தவிர வேறெதை இவர்கள் முன்வைக்கிறார்கள். சமஸ்டியைக் கொடுத்துப் பிரச்சினையைத் தீருங்கள் என்று ஏன் இவர்களால் உரத்து கூறமுடியவில்லை. இவர்களுக்கும் தமது நலன்களை அடைய தமிழரது உயிர்கள் தேவைப்படுகிறது. –


சுமார்  இரண்டாயிரம் ஆண்டு காலமாக ஐரோப்பியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி நசிந்துகொண்டிருந்த யூத மக்கள் இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் ஹிட்லரால் மேற்கொள்ளப்பட்ட, வரலாறு முன்னெப்போதும் கண்டிராத பாரிய இன அழிப்புக்குள்ளாகினர். அத்தைகைய இன அழிப்பை எதிர்கொண்டு புவிப்பரப்பில் தமக்கென ஒரு சுதந்திர அரசை அமைப்பதில் வெற்றி பெற்றனர். ஆனால் ஐ.நா. வின் பாகப்பிரிவினையை எல்லையை மீறிப் பாலஸ்தீன நிலப்பரப்பை ஆக்கிரமித்ததை ஒருபோதும் ஏற்கமுடியாது. இங்கு அவர்கள் இள அழிப்பை எதிர்கொண்டு அதன் பின் தம்மை விடுதலைக்கு உரியவர்களாக வடிவமைத்த விதத்தில் இருந்து வரலாற்றுப் பாடங்களைக் கற்க வேண்டியது அவசியம். 

'இரண்டு யூதன் ஒன்று சேர்ந்தால் மூன்று கட்சி கட்டுவான்' என்று ஒரு யூதப் பழமொழி உண்டு. ஆனால் அப்படிப்பட்ட யூதர்கள் தமக்கு ஏற்பட்ட பாரிய இனப் படுகொலையின் சவாலின் முன்னிலையில் அதிகம் ஐக்கியப்பட்டு அதிகம் புத்திபூர்வமாகச் செயற்பட்டு தம்மிடம் காணப்பட்ட அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி ஒரு புதிய அரசை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர். அவர்கள் தமக்கிடையே நிலவிய பொறாமைகளையும், காழ்ப்புணர்வுகளையும், சிறுமனப்புத்திகளையும் ஒதுக்கித்தள்ளி விடுதலையை இலட்சியமாக்கி வெற்றி பெற்றனர்.  
குறிப்பு: மேலுள்ள இரு பந்திகளும் 'இலங்கை அரசியல் யாப்பு" என்ற நூலில் அதன் ஆசிரியர் திரு. மு. திருநாவுக்கரசு அவர்களின் முன்னுரையில் இருந்து எடுக்கப்பட்டது. 
 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.