Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 AUG, 2024 | 09:59 AM
image

ஆர்.ராம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) வவுனியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் முதலாவது விடயமாக தமிழ் பொதுவேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள அரியநேத்திரனின் விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அவர் மீது நடவடிக்கைகளை எடுப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

எவ்வாறாயினும், அரியநேத்திரனும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, தான் தமிழ் அரசுக் கட்சியை விட்டுச் செல்லவில்லை. சுயேட்சையாக போட்டியிடுகின்றேன். கட்சி எந்த தீர்மானத்தினையும் எடுக்கவில்லை. அதனால் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டவன் என்று குற்றஞ்சாட்ட முடியாது உள்ளிட்ட வாதங்களை முன்வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

அதேபோன்று, மாவை.சோ.சேனாதிராஜாவும் உடனடியாக அரியநேத்திரன் மீது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இடமளிப்பார் என்று கூற முடியாது. அதேபோன்று கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுவேட்பாளருக்கு ஆதரவான கூட்டத்தில் சிறிதரனின் வகிபாகம் சம்பந்தமாகவும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, சுமந்திரன் தென்னிலங்கை தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்கள், மாகாண சபை தேர்தல்கள் திருத்தச்சட்டம் உள்ளிடட இதர விடயங்களை பகிர்ந்துகொள்ளவுள்ளதோடு ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திப்பதற்கான தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/190754

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஏராளன் said:

இதனையடுத்து, சுமந்திரன் தென்னிலங்கை தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்கள், மாகாண சபை தேர்தல்கள் திருத்தச்சட்டம் உள்ளிடட இதர விடயங்களை பகிர்ந்துகொள்ளவுள்ளதோடு ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திப்பதற்கான தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த கால கசப்பான ஏமாற்றங்களை நினைவில் நிறுத்தி எழுத்து மூலமான உறுதி மொழிகளை சிங்கள தலைவர்களிடம் இருந்து பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, nunavilan said:

கடந்த கால கசப்பான ஏமாற்றங்களை நினைவில் நிறுத்தி எழுத்து மூலமான உறுதி மொழிகளை சிங்கள தலைவர்களிடம் இருந்து பெற வேண்டும்.

அதுக்கு... இவங்கள் சரிப்பட்டு வரமாட்டாங்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

இந்தக் கூட்டத்தில் முதலாவது விடயமாக தமிழ் பொதுவேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள அரியநேத்திரனின் விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அவர் மீது நடவடிக்கைகளை எடுப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

தன்னிச்சையாக ஒவ்வொருவருடனும் பேசி அறிக்கைவிடும் சுமந்திரனுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

கடந்த கால கசப்பான ஏமாற்றங்களை நினைவில் நிறுத்தி எழுத்து மூலமான உறுதி மொழிகளை சிங்கள தலைவர்களிடம் இருந்து பெற வேண்டும்.

ஏற்கனவே எழுத்து மூலமாக 13 வது திருத்தசட்டம் சட்டமாக்கப்பட்டு பாராளுமன்றிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையானவர்களால் நிறைவேற்றப்பட்டு

ஜனாதிபதி கிடப்பில் போட்டுள்ளார்களே.

இதற்கு முன்னரும் எழுதாத ஒப்பந்தங்களா?

ஒப்பந்தங்கள் எழுத ஆட்கள் இருப்பது போல் 
கிழித்தெறியவும் ஆட்கள் இருக்கிறார்கள்.

தமிழருக்கு வேறு வழியும்  இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைந்த வடகிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்குபவர்களுக்கு ஆதரவு;  சிங்கள மக்களுக்கும் அதனை அறிவிக்க வேண்டும் - தமிழரசுக்கட்சி தெரிவிப்பு

Published By: VISHNU   11 AUG, 2024 | 08:00 PM

image

வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்த தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிப்போம் என தமிழரசுக்கட்சி கலந்துரையாடியுள்ளதாக கட்சயின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று  தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்கள் சார்பாக தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழரசுக்கட்சியினுடைய  நிலைப்பாடானது இணைந்த வடகிழக்கிலே சமஸ்தி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறை ஏற்படுத்தப்படுவதாகும்.

இதுவே எங்களுடைய அரசியல் நிலைப்பாடு.  இதற்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் யாராவது இணங்கி வந்தால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற கருத்தும் கூட்டத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. எனினும் இது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. 

எமது கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நாம் கூறி இருப்பதானது, அவர்களுடைய அரசியல் அறிக்கையில் எவ்வாறான செய்தியை சொல்கிறீர்கள் என்று நாம் பார்க்கப் போகின்றோம்.

இது தொடர்பில் முழு நாட்டிற்கும் அவர்கள் எண்ணத்தை சொல்ல வருகிறார்கள் என்பது தொடர்பிலும் நாங்கள் பார்க்க இருக்கிறோம். 

எமது கோரிக்கைகளை ஏற்றால் அது தொடர்பில் விசேஷமாக சிங்கள மக்களுக்கு அவர்கள் தமிழர்களுக்கு எதைச் செய்யப் போகிறோம் என்பதையும் அறிவிக்க வேண்டும்.

இது தவிர நாங்களும் எங்களுடைய நிலைப்பாட்டை எழுத்து வடிவில் தெளிவான ஒரு அறிக்கையாக வெளியிடுவோம். எங்களுடைய மக்களுக்கு மக்களுடைய அரசியல் தலைமைத்துவம் வழங்குகின்ற கட்சி என்ற நிலைபாட்டில் அவ்வாறான ஒரு பொறுப்பை நாமும் உதாசீனம் செய்யாமல் வழிகாட்டல் அறிக்கை ஒன்றை ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளியிடுவோம்.

அரியநேந்திரன் தொடர்பில்

தமிழ் பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவது என்று சில அரசியல் கட்சிகளும் சில சிவில் அமைப்புகள் என்று சொல்லுபவர்களும் செயற்படுகின்றனர்.

அதுவும் இன்றைய கூட்டத்தில் அலசி ஆராயப்பட்டது. இதற்கு முன்னரே இரண்டு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி இருக்கிறோம். கடந்த கூட்டத்தில் அரியநேந்திரன் சமூகமாகி இருந்தார். அந்த கூட்டங்களிலேயே நாங்கள் இப்போது இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில்லை என சொல்லியிருந்தோம். எங்களுடைய மக்களோடும் எங்களுடைய கட்சி உறுப்பினர்களோடும் தொடர்ந்து கலந்துரையாடுவது அவசியம் என்று கலந்துரையாடப்பட்டிருக்கிறது. எனினும் நாம் இதற்கு ஆதரவா எதிர்ப்பா என்று ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை.

ஆனால் இலங்கை தமிழரசு கட்சியினுடைய மத்திய குழு உறுப்பினராகிய அரியநேந்திரன் கட்சியுடன் உரையாடாமல் தன்னை தமிழ் பொது வேட்பாளராக அறிவித்தமை சம்பந்தமாக அவரிடம் விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவருடைய விளக்கத்தை கட்சிக்கு சொல்வதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதுவரைக்கும் கட்சி நிகழ்வுகள் எதிலும் அவருக்கு அழைப்பு அனுப்புவதில்லை என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/190843

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இணைந்த வடகிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்குபவர்களுக்கு ஆதரவு;  சிங்கள மக்களுக்கும் அதனை அறிவிக்க வேண்டும் - தமிழரசுக்கட்சி தெரிவிப்பு

இதைத் தானே கஜே கோஸ்டி அப்ப தொடக்கம் சொல்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளியே போடா - சிறு நரிகளின் செயல்பாடுகளால் மானமிழக்கும் தமிழரசு

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது தகாத வார்த்தை பிரயோகங்களால் கௌரவமிக்க உறுப்பினர்கள் அவமதிக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழரசு கட்சியின் இளைஞரணியின்  யாழ் மாவட்ட செயலாளர் குணாளன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கும் கிழக்கும் இணைந்தது தான் தமிழர் தேசம்.  எமது அரசியல் பயணத்தில் உயர்ந்ததும் தாழ்ந்ததுமாய் எந்த ஒரு சிக்கல்களையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில்தான் எமது வெற்றியின் அடிநாதமே தங்கியிருக்கின்றது.

வடக்கு கிழக்கு என்ற இந்தப் பிரிவினையின் சூட்சுமத்தை பயன்படுத்திக் கொண்டுதான் தமிழ் தேசத்தின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதை மறந்து செயல்படுவோமானால் ஒரு காலத்திலும் ஒட்ட முடியாத இடைவெளியை இணைக்க முடியாத அந்தங்களை ஏற்படுத்தி விடும் அபாயம் நமது கண்முன்னே தெரிகின்றது .

நேற்று முன்தினம் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இதைத்தான் பறைசாற்றுகின்றது.

சங்கையில்லாத சிறு நரிகளின் ஒழுக்கம் இல்லாத நடத்தைகளால் நமக்கு அபாய மணி அடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தமிழரசு கட்சியின் கௌரவ உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

இன்றளவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருவாரியான மக்களின்  பெருமதிப்பை பெற்றிருக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ,  கல்வியலாளர் ஞா. ஸ்ரீநேசன் மீது பிரயோகிக்கப்பட்ட வெளியே போடா என்ற வார்த்தை பிரயோகம் அவ்வளவு இலகுவாக எடுத்துக்கொள்ளக் கூடிய ஒன்று அல்ல என்பதை தமிழரசு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும்

நாம் வெளிப்படையாக பேசுவோம் . இவ்வாறான கீழ்த்தரமான குழப்பத்தை விளைவித்தவர்கள் இரண்டு பேர் ஒன்று முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரனி ஜெகநாதன் பீற்றர்  மற்றவர்  சாவகச்சேரியைச் சேர்ந்த கேசவன்  சயந்தன்.  இவர்கள் இருவர் மீதும் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் தலைவரிடம்  நான் கோரிக்கை விடுத்திருந்தேன் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்திருந்தார்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் கட்சி வேறு ஒரு அபாயகரமான தளத்தை நோக்கி நகரும் என்பதை கண்முன்னாலே காண நேரிடும்

இவர்கள் இருவர் மீதும் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கக்கூடிய ஒரே ஒரு நபர்  நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்ரஹாம் மதியாபரணம்  சுமந்திரன் மட்டுமே.

ஏனெனில் இவர்கள் இருவரும் சுமந்திரன் குரல்கள் ! சுமந்திரன் கதைக்க முடியாதவற்றை இவர்கள் இருவரையும்  கொண்டுதான் கதைப்பார் .  சுமந்திரன் சாதிக்க முடியாதவற்றை இவர்கள் இருவரைக் கொண்டுதான் சாதித்துக் கொள்வார் என்பது பொதுவாக தெரிந்த விடயம்.

ஏற்கனவே கட்சிக்குள்ளும், பொதுவெளியிலும் பல குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள கேசவன் சயந்தன் என்பவர் உடனடியாக கட்சியின் இருந்து நீக்கப்பட வேண்டும். அதேபோன்று தமிழரசு கட்சிக்கெதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து துரோகமிழைத்த அன்ரனி ஜெகநாதன் பீற்றர்  மத்திய குழுவிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.  ஏனெனில் பீற்றரின் மத்திய குழு நியமனம் என்பது யாப்புக்கு முரணானது,

பீற்றரின் நெருங்கிய உறவினர் ஒருவர் கட்சியின் நிர்வாகப் பணிகளில் ஆதிக்கம் செலுத்திய காரணத்தினால் அவர் கட்சியில் 2018 ல்  உறுப்பினராகி ஒரு வருடத்திற்குள் அதாவது 2019 ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பொதுச்சபை கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினராக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால்  மத்திய குழுவுக்குள் ஒரு உறுப்பினர் உள்வாங்கப்பட வேண்டுமாக இருந்தால் தொடர்ச்சியாக அவர் இரண்டு வருடங்கள் அங்கத்துவத்தை வகித்திருக்க வேண்டும்.

ஆனால் அன்ரனி ஜெகநாதன் பீற்றர் என்பவர்  ஒரு வருடத்திற்குள் உள்வாங்கப்பட்டது கட்சியின் யாப்பு விதிகளை மீறியதாகும்.

எனவே உடனடியாக இந்த விடயத்தில் கட்சி கவனம் செலுத்தி அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். நாகரீகம் அற்ற இத்தகைய நபர்களால் கட்சி தன்மானம் இழக்கிறது என்பதை கட்சித் தலைமை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மத்திய குழு உறுப்பினர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட நாகரீகம் அற்ற வார்த்தைகளுக்காக வன்மையான கண்டனங்களை பதிவு செய்வதோடு அவர்களிடம் மன்னிப்பும் கோருகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/307847

  • கருத்துக்கள உறவுகள்

 இனி துரோகி *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் என்ற பதங்களுக்கு பதிலாக சுத்துமாத்து சுமா என்றால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் கட்சி வேறு ஒரு அபாயகரமான தளத்தை நோக்கி நகரும் என்பதை கண்முன்னாலே காண நேரிடும்

அப்புறம் என்ன?இன்னொரு கட்சி தொடங்க வேண்டியது தானே?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் என்ன?இன்னொரு கட்சி தொடங்க வேண்டியது தானே?

எப்படியோ.... தமிழரசு கட்சி, இரண்டாக பிரியத்தான் போகின்றது.
அதற்கு...  அத்திவாரம் போட்டது  சம்பந்தனும், சுமந்திரனும். 😎

நேற்று நடந்த கூட்டத்தில் கூட குழப்பம் விளைவித்தது, 
சுமந்திரனின்.. அல்லக்கைகள் என செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 😡

இனியும் சுமந்திரனை தமிழரசு  கட்சியில் வைத்திருந்து கொண்டு தினமும்...
ஒவ்வொரு பிரச்சினைகளை சகித்துக் கொண்டு இருப்பதை விட...   
கௌரவமாக... அவரை கட்சியில் இருந்து  விடுவிப்பதே, சரியான அணுகு முறையாக இருக்கும். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

இனியும் சுமந்திரனை தமிழரசு  கட்சியில் வைத்திருந்து கொண்டு தினமும்...
ஒவ்வொரு பிரச்சினைகளை சகித்துக் கொண்டு இருப்பதை விட...   
கௌரவமாக... அவரை கட்சியில் இருந்து, விடுவிப்பதே, சரியான அணுகு முறையாக இருக்கும். 😂

நாய்வாலைப் பிடித்தால் எப்படி விடமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

நாய்வாலைப் பிடித்தால் எப்படி விடமுடியும்?

ஆஹா... இது, புது பழமொழியாய் இருக்கு.
வேறு ஒரு காட்டு விலங்கின் பெயரைத்தான் சொல்வார்கள். 😂

ஓஹோ.... உங்களுக்கு, அந்தக் காட்டு விலங்கின் பெயரை,
இவருடன்  ஒப்பிட விருப்பம் இல்லை, 
என்னும் நல்ல மனதை புரிந்து கொள்கின்றேன். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கௌரவமாக... அவரை கட்சியில் இருந்து, விடுவிப்பதே, சரியான அணுகு முறையாக இருக்கும். 😂

செய்யுங்கள் உடனடியாக செய்யுங்கள் ... எனது 100% ஆதரவு உங்களுக்கு உண்டு”,.😂🤣🤣......

..இவற்றை அறிக்கையை வாசித்து பார்த்தீர்களா?? இவ்வளவு காலமும் இல்லாமல் இப்போது  புதிதாக இருக்கிறது   

தமிழருக்கு கொடுப்பதை.   கொடுக்கப் போவதை. சிங்கள மக்களுக்கு சொல்ல வேண்டும் 

யாப்பிலும். எழுத வேண்டும்    

ஆனால்  இவர் ரணிலுடன். பூட்டப்பட்ட. அறையில் கதைப்பார். 

எப்படியும் தமிழர்களின் வாக்குகளை பெற்று விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்   

4 hours ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் என்ன?இன்னொரு கட்சி தொடங்க வேண்டியது தானே?

இது சரி வராது” வீட்டை உடைப்பதை நான் முழுமூடன் எதிர்க்கிறேன் .🤣😂....

.எவ்வளவு படுபட்டு கடடிய வீடு     

புதிதாக வந்தவர்களை   கூடத்தில் வைத்து கதைக்கலாம்.   உள்ளே அனுமதித்தது தான் வந்த   பிரச்சனை 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

செய்யுங்கள் உடனடியாக செய்யுங்கள் ... எனது 100% ஆதரவு உங்களுக்கு உண்டு”,.😂🤣🤣......

..இவற்றை அறிக்கையை வாசித்து பார்த்தீர்களா?? இவ்வளவு காலமும் இல்லாமல் இப்போது  புதிதாக இருக்கிறது   

தமிழருக்கு கொடுப்பதை.   கொடுக்கப் போவதை. சிங்கள மக்களுக்கு சொல்ல வேண்டும் 

யாப்பிலும். எழுத வேண்டும்    

ஆனால்  இவர் ரணிலுடன். பூட்டப்பட்ட. அறையில் கதைப்பார். 

எப்படியும் தமிழர்களின் வாக்குகளை பெற்று விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்   

இது சரி வராது” வீட்டை உடைப்பதை நான் முழுமூடன் எதிர்க்கிறேன் .🤣😂....

.எவ்வளவு படுபட்டு கடடிய வீடு     

புதிதாக வந்தவர்களை   கூடத்தில் வைத்து கதைக்கலாம்.   உள்ளே அனுமதித்தது தான் வந்த   பிரச்சனை 

சனம் இவரை கழுவி ஊற்றுவது தெரியாமல், அரசியல் செய்து கொண்டு இருக்கின்றார்.
கடைசியாக தமிழரசு கட்சிக்குள் வந்த சுமந்திரன் தான்…
ஓட்டகத்துக்கு ஒதுங்க இடம் கொடுத்த கதையாக,
வீட்டை… பிரித்து மேய்ந்து கொண்டு இருக்கிறார்.

ஒன்றை ஆக்குவது கடினம். அழிப்பது வெகு சுலபம்.
இந்தக் கூத்துகள்… தமிழ் மக்களை மேலும் பின்னோக்கியே தள்ளும்.
இது புரியாமல்…. விசர் கூத்து ஆடிக் கொண்டு இருக்கின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

புதிதாக வந்தவர்களை   கூடத்தில் வைத்து கதைக்கலாம்.   உள்ளே அனுமதித்தது தான் வந்த   பிரச்சனை 

கல்லே கந்தையர்

ஒட்டகம் வீட்டுக்குள் புகுந்து ரொம்ப காலமாச்சு.

ஒன்றல்ல இரண்டு.(இன்னமும் இருக்கலாம்).

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2024 at 22:49, ஏராளன் said:

கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் எங்கே? வழக்கு வைத்து கலைத்தாச்சா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:


கடைசியாக தமிழரசு கட்சிக்குள் வந்த சுமந்திரன் தான்…
ஓட்டகத்துக்கு ஒதுங்க இடம் கொடுத்த கதையாக,
வீட்டை… பிரித்து மேய்ந்து கொண்டு இருக்கிறார்.

 

உது 100% உண்மை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.