Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்வாகம் குறட்டை விடுவதை நிறுத்ததா?

Featured Replies

களத்தில் உள்ள நாட்காட்டியில் தமிழரின் முக்கிய நினவு தினங்களை (recurring event ஆக)பதிவு செய்து வைத்தால் உதவும் அல்லவா?

சாதாரண அங்கத்தவர்கள் ஏதாவது பதிய முனைந்தால்

Sorry, but you do not have permission to use this feature. If you are not logged in, you may do so using the form below if available.

அதுதான் நிர்வாகம் குறட்டை விடுவதை நிறுத்ததா? :lol:

கருத்துக்கள உறவுகள் இப்போது முக்கிய நிகழ்வுகளை நாட்காட்டியில் குறித்து வைக்கலாம். இதனை ஆக்கபூர்வமான வகையில் பயன்படுத்திக் கொள்ளவும். :lol:

  • 2 months later...
  • தொடங்கியவர்

குறித்து வைக்கிறதை private view only என்று தெரிவு செய்தால் தான் காட்டுது. public view என்று தெரிவு செய்து பதியிறவை காணாமல் போகுது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பாவனைப்பெயரினை ஆங்கிலத்திலும், காட்சிப் பெயரைத் தமிழிலும் மாத்தித் தாருங்கள் என நிர்வாகத்திடம் கேட்டும் 6 மாதங்களுக்கு மேலாகியும் என்னும் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. கும்பகர்ணனைக் கூட இப்படிக் கஸ்டப்படுத்திக் கம்பர் எழுப்பியிருக்கவில்லை

எப்போ கும்மகர்ணனை கம்பர் எழுப்பினார்?

  • கருத்துக்கள உறவுகள்

கும்பகர்ணனைக் கஸ்டப்பட்டு எழுப்பியதை தன் கவியால் மிகைப்படுத்திச் சொன்னது அவர் தானே? அது தான்

என்னுடைய பாவனைப்பெயரினை ஆங்கிலத்திலும், காட்சிப் பெயரைத் தமிழிலும் மாத்தித் தாருங்கள் என நிர்வாகத்திடம் கேட்டும் 6 மாதங்களுக்கு மேலாகியும் என்னும் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. கும்பகர்ணனைக் கூட இப்படிக் கஸ்டப்படுத்திக் கம்பர் எழுப்பியிருக்கவில்லை

என்னதிற்கும் இன்னொரு 6 மாதம் பொறுத்து பாருங்கோவேன் :wub: இப்ப யார் இதில கும்பகர்ணன் யார் கம்பர் என்று ஒருக்கா சொல்லுங்கோ பார்போம்!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

பேசாப்போருள் என்ற பகுதியை நீக்கிவிட்டுப் பொருளாதாரம் பற்றிய பிரிவை நிர்வாகம் உருவாக்கினால் என்ன?

தராக்கியின் கட்டுரைகள் பெரும்பாலும், ஒரு நாட்டின் பொருளாதாரம் தான் நட்புநாடுகளை உருவாக்குகின்றது, அல்லது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகுமென்பார். அது நியாயமானது என்பதைத் தலைவரும் மாவீர்ர தின உரையில் சொல்லியிருந்தார்.

எனவே பொருளாதாரக் கண்ணோட்டம் என்பது தேவையான ஒன்று என நினைக்கின்றேன்.

நல்லதொரு ஆலோசனை.

யாழ் களம்.. வெறும் வெட்டுக் குத்துகளாலதான் உருப்படும் என்று நிர்வாகமும் நினைக்கிறது. ஆனால் அதுவல்ல முக்கிய தேவை இங்கு...!

யாழ் களச் செய்திப் பிரிவைப் பார்த்தால்..

1. ஈழத்து அரசியலும்.. இந்திய செய்திகளும்.. ( இரண்டும் இணையத்தளங்களில் தமிழில் கிடைக்கின்றன) பெருமளவில் வெட்டி ஒட்டப்படுகின்றன..!

ஆனால் சர்வதேசச் செய்திகள் எம்மக்களை அடைவது குறைவு. குறிப்பாக தமிழ் மட்டும் அறிந்தவர்கள்.. வேலைப்பழுவால் பிறமொழிச் செய்திகளை வாசிக்க முடியாதவர்கள் என்று பலருக்கும் சுருக்கமாக வேணும் சர்வதேசச் செய்திகள் தயாரித்து வழங்கப்படுவதில்லை..! அதைச் செய்ய எவருமே முன் வரவும் இல்லை..! முன் வந்தவர்களையும் நிர்வாகத்தின் துணையுடன் நக்கல் நளினம் செய்து விரட்டி அடித்துவிட்டார்கள்..!

2. தொழில்நுட்பச் செய்திகள்.

இன்றைய உலகம் தொழில்நுட்பத் துறையில் அசுர வளர்ச்சி கண்டு வருவதுடன் நாளும் பல புதிய மாற்றங்களும் கண்டுபிடிப்புக்களும் வருகின்றன..! அவை பற்றிய அறிமுகங்கள் விளக்கங்கள் என்று யாழில் எதுவும் கிடையாது. இன்று உ+ம்: ipod, iphone என்று அப்பிள் நிறுவனம் பல கையடக்கமான மின்னியல் உபகரணங்களை எல்லாம் அறிமுகம் செய்திருக்கிறது. இவ்வாறு பல பொருட்கள் தினமும் அறிமுகமாகின்றன. ஆங்கிலத் தளங்களில் இவற்றை மக்களுக்கு அறிமுகம் செய்வதோடு சுருக்கமான வகையில் வினைத்திறனுள்ள பாவனை விளக்கங்களும் அளிக்கின்றனர். ஆனால் தமிழில் அவ்வாறு காண்பதரிது. அந்த வகையில் அவை தொடர்பான அறிமுகங்கள் எவ்வாறு அவற்றை உயர்ந்த பயனைப் பெறும் வகையில் பாவிப்பது என்று பலரும் அறியக் கூடியதாக தகவல்களை மொழிபெயர்த்தோ அல்லது தொகுத்தோ வழங்குவது மக்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

3. பொருளாதாரச் செய்திகள்.

நிச்சயமா இந்த உலகின் அரசியல் மற்றும் இராணுவ நகர்வுகள் மட்டுமன்றி தொழில்நுட்ப வளர்ச்சி கூட பொருளாதாரத்தை மையப்படுத்தியே அமைகின்றது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கைத் தரமும் முறையும் கூட அவனின் பொருளாதாரம் சார்ந்தே இருக்கிறது. எனவே சாதாரண பொருளாதாரக் குறிப்புகளில் இருந்து சர்வதேச பொருளாதார நிலைகள் வரை விளக்குதல் நன்று. நாடுகளின் பொருளாதார மற்றும் வளத் தேவைப்பாடுகள் பற்றிய அலசல்களும் முக்கியமானவை.

இன்றும் புலம்பெயர்ந்த எமது மக்கள் சீட்டுப் பிடிக்கின்றனர். பலர் இதில் ஏமாந்தும் போகின்றனர். பலர் கிரடிட் காட் மோசடிகளுக்கு இலக்காகியுள்ளனர். பலர் வங்கிக் கடன் மோசடிகளுக்கு இலக்காகியுள்ளனர். பல வீட்டுமனை வாங்குதலில் வாகனங்களைக் கடனடிப்படையில் வாங்குதலில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். காரணம் இவை பற்றிய அறியாமைகளே. பல் வேறு நாடுகளில் இருந்தும் இத்துறை சார்ந்தவர்கள் இங்கு கருத்தாட வருவர். எனவே அவ்வவ் துறைகளில் அந்தந்த நாடுகளில் உள்ள நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கலாம்..! இது மக்களுக்கு பேருதவியாக இருக்கும்..!

4. உலக வெப்பமுறுதலும் அது தொடர்பான மக்களின் உலக நாடுகளின் பங்களிப்பும்.

இன்று சர்வதேம் உலக வெப்பமுறுதலைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சாதாரண மக்கள் எப்படி பங்களிப்பது எவ்வகையான வாகனங்களை பிரதியீடாக்குவது எவ்வாறு காபனீரொக்சைட்டின் வெளியீட்டு அளவைக் குறைக்க இல்லங்கள் தோறும் வாழும் மக்கள் பங்களிப்பது.. ஒவ்வொரு கார்களும் எவ்வளவு காபனீரொக்சைட்டை வெளிவிடுகின்றன.. எனவே குறைதூரப் பயணங்களுக்கு கார்களைத் தவிர்ப்பதால் உள்ள நன்மைகள் அதற்கான மாற்றீடுகள் என்று பல தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டி இருந்தும்.. இங்கும் அதற்கான ஆர்வம் கிடையாது..! முயற்சிகள் கூட ஊக்கிவிக்கப்படுவதில்லை..!

5. சுற்றுச்சூழல் மாற்றங்கள். உலக மக்களின் வறுமை. நோய்களின் பெருக்கங்கள்.

அவர்களுக்கு வசதிபடைத்த மக்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்புக்கள் குறித்த மனிதாபிமான எண்ணக் கருக்கள் எமது மக்களுக்கு ஊட்டப்படுவதில்லை. மேற்குநாடுகளில் சிறுவர் வறுமையை ஒழிக்க அது தொடர்பாக சிறுவர் மத்தியில் ஒரு கவனயீர்ப்பை உண்டு பண்ண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் சமூக அர்வம் உள்ளவர்களின் உதவியுடன் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துகின்றனர். ஆனால் புலம்பெயர்ந்த நம்மவர்களின் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு தமிழ் பல்கலைக்கழக மாணவர்களிடம் இருக்கிறதா.

குறிப்பாக மொழியாற்றல் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் அவசியம். சிறுவர் மொழியாற்றல் தொடர்பான சில நிகழ்ச்சித் திட்டங்களுக்கு சென்ற போது குறிப்பாக ஜேர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு வரும் பெற்றோரின் பிள்ளைகள் மொழியாற்றல் தொடர்பாக பல பிரச்சனைகளைச் சந்திப்பதை காணக் கூடியதாக இருந்தது. பலர் வீட்டில் தமிழும் பாடசாலையில் ஆங்கிலமும் வழக்க மொழியாக கொண்டிருப்பதால் மொழி இசைவுச் சிக்கலுக்கு இலக்காகி இருப்பதை மொழி திறன் வளர்ப்பில் ஈடுபடும் speech therapist இனங்கண்டுள்ளனர். இவ்வாறான எம்மவர் பிள்ளைகளுக்கு இத்துறையில் கல்வி பயிலும் தமிழ் மாணவ மாணவிகள் நல்லெண்ண உதவி அடிப்படையில் உதவ அல்லது இணையத்தளம் மூலம் அல்லது பத்திரிகைகள் மூலம் பயன்மிக்க தகவல்களை வழங்க முன் வர வேண்டும்..!

நாம் எமது மக்கள் படும் துன்பங்களை செய்தியாக்கி விமர்ச்சித்து விட்டு போகின்றோமே தவிர அதில் எமது பங்களிப்பை நாம் உணர்வதில்லை. உலகில் வாழும் எந்த மனிதனுக்குப் பாதிப்பு என்றாலும் அதில் மனித சமூகத்தவன் என்ற வகையில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அதில் பங்கிருக்கும். அதை உணர்ந்து குறித்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.

மேற்குலகில் பாடசாலை மட்டத்திலேயே இவ்வாறான நடத்தைகளை ஊக்கிவிக்கின்றனர். அவர்களுக்கு மனிதாபிமானச் சிந்தனைகளையும் செயற்படுத்தல்களையும் ஊட்டுகின்றனர். ஆனால் நம்மவரோ இறுக்கமான மனதோடு சுயநலம் பிடித்தவர்களாக போட்டி பொறாமை மிக்கவர்களாக தங்கள் பிள்ளைகளைக் கூட மாற்றி வருகின்றனர்..! இதுதான் நமக்கும் மேற்குலகத்தவர்களுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டைக் காட்டி நிற்கிறது.

மேற்குலகத்தவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதாபிமானத்தைச் செய்ய சிந்திக்க தூண்டப்படுகின்றனர். அதற்கேற்ப அவர்கள் அறிவூட்டப்படுகின்றனர். ஆனால்..எம்மவர்கள் அப்படியன்று. எப்படா அடுத்தவனைக் கவுத்திட்டு நான் முன்னால போவன்.. இப்படித்தான் சிந்திக்கத் தூண்டப்படுகின்றனர். பாடசாலைகளில் இருக்கும் போட்டிப் பரீட்சை நடைமுறைகளே இந்தச் சிந்தனைகளை மிக இள வயதிலேயே எம்மவர் மத்தியில் விதைத்து விடுவதால்.. அவர்கள் மனதும் ஒரு இறுக்கமான நிலைக்கு சுயநலம் மிக்க நிலைக்கு வந்துவிடுகிறது. இது தவறானது.

நாம் பிறர் மீது எம் போல அல்லது எமக்கு மேல அக்கறை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இயல்பான மனிதாபிமான உதவிக் குணம் பிறக்கும்.

உதாரணத்துக்குப் பாருங்கள். இங்கு நேசக்கர அமைப்பை உருவாக்கி ஒரு மனிதாபிமானச் செயற்பாட்டை செய்ய முற்பட்ட போது எத்தனை கரங்கள் மனிதாபிமான எண்ணத்தோடு உதவ வந்தன..??! உதவியவர்களில் சிலரின் நோக்கம் நான் தாயகத்துக்கு பணம் அனுப்புறன் என்று காட்டுவதாக இருந்தது. ஆனால் இயல்பான மனிதாபிமானச் சிந்தனை பலரிடம் அங்கு எழவில்லை..! அப்படி எழுந்திருப்பின்... நான் ஆயிரம் ஆயிரமா கொடுக்கிறன் பிறகென்ன 50, 10 இங்க என்ற கேள்விகள் முளைக்காது. அங்கு மனிதாபிமானம் என்பது முன்னின்றிருப்பின் இந்த எண்ணமே எழுந்திராது. உதவிகள் குவிந்திருக்கும்.

எமது மக்களுக்கு முதலில் புகட்ட வேண்டியது மற்றவர்களையும் தங்களைப் போல அல்லது அதற்கும் மேல நேசிக்கும் தன்மையை. மனிதாபிமானச் சிந்தனைகளை.

குரோதங்களை பிளவுகளை வஞ்சிப்புக்களை வளர்க்கவல்ல.. தூண்டவல்ல தலைவர்களின் பேச்சுக்களையே தினமும் வாதப் பொருளாக்கி மக்களிடையே குரோத பிளவுத்தனமான எண்ணங்களை விதைச்சிட்டிருந்தா எப்படி வரும் மனிதாபிமானம். விடுதலை என்பது கூட ஒரு மனிதாபிமான எண்ணத்தின் வெளிப்பாடாகி இருப்பின் இரத்தம் இன்றி யுத்தமின்றி இன்று உலகில் பல நாடுகள் சுதந்திரமடைந்திருக்கலாம். ஆனால் சாதாரண எம்மவருக்கிடையேயே மனிதாபிமானச் சிந்தனை முழுமை பெறாத போது... அதையெல்லாம் எதிர்பார்ப்பது வீண்..! இருந்தாலும் எமது மக்களுக்கு அடிப்படையில் மனிதாபிமானச் சிந்தனை குறைவு. மாறாக சுயநலம் அதிகம். இதை உணர்த்தத் தக்க வகையிலும் மனிதாபிமானச் சிந்தனைகளை வளர்க்கவும் மனிதாபிமானச் செயற்பாடுகளை ஊக்கிவிக்கவும் யாழ் கருத்துக்களை செயற்திட்டங்கள் வகுத்துச் செயற்பட வேண்டும்.

இப்போதைக்கு இந்த 5 அம்சத்திட்டம் பற்றி யாழ் நிர்வாகம் பரீசிலிக்கட்டும். இவற்றில் ஈடுபாடும் வெற்றியும் அமையுமானால் மிகுதித் திட்டங்கள் இலகுவாக இங்கு இடம்பிடித்துக் கொள்ளும்..! வாசகர்களும் கருத்தாளர்களும் புதிய களச் சூழலுக்கு தம்மை இசைவாக்கிக் கொள்ள முயல்வர்.

வாசகர்களின் கருத்தாளர்களின் வாசிப்பார்வமே முக்கியமானது. அவர்களின் வாசிப்பார்வத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைக்கும் போது மட்டுமே யாழ் மெருகேறும்.! வெட்டடா விழுத்தடா நான் செய்யுறதுதான் சரி.. விரும்பினா இரு இல்லைன்னா போ... இப்படியான நிர்வாக அணுகுமுறைகள் தான் இக்களத்தின் மீதான வினைத்திறனான பங்களிப்பை தடுக்கின்றன. இங்கு கருத்தாடும் சிலரின் நோக்கமும் நிர்வாகம் இப்படி சிலரைப் பார்த்துச் சொல்ல வேண்டும் என்ற ஒரு குறுகிய சுயநல மேலாண்மை பேணும் மனப்பான்மையே..!

அடிப்படையில் எனக்குக் கூட தந்தை பெரியார் மீது ஆர்வமோ கோபமோ கிடையாது. ஆனால் அவரின் மீது என்னுள் ஒரு வெறுப்புணர்வுக்குரிய பக்கத்தை உருவாக்கியது.. அவர் மீது சிலர் காட்டிய அதீத விசுவாசம் சார்ந்த கருத்துருவாக்கங்களும் மோசடியான மனிதாபிமானமற்ற வகையில் அவர்கள் முன்வைத்த பிராமண சமூக, இந்து மக்கள் மீதான எதிர்ப்புமே. நான் எந்த வகையிலும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவனும் அல்லன். தினமும் கோயில் கும்பிடுறவனும் அல்லன்..! ஆனால் எல்லா மக்களின் உணர்வுகளையும் நாம் உள்வாங்க வேண்டும்.. அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களிடம் உள்ள அறியாமையை மனிதாபிமான அணுகுறைகளின் கீழ் அவர்களிடம் மனக்குரோதம், சமூகப் பிளவுகள் ஏற்படுத்தாத வகையில் செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

பெண்களை எதிர்ப்பதாக நான் காட்டிக் கொள்வது கூட அவர்களிடம் ஏற்பட வேண்டிய சிந்தனைமாற்றத்தை நேரடியாகவன்றி மறைமுகமாகச் சொல்லவே அன்றி... பெண்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் வெறுப்போ.. நாட்டமோ கிடையாது..! :lol:

Edited by nedukkalapoovan

பெண்களை எதிர்ப்பதாக நான் காட்டிக் கொள்வது கூட அவர்களிடம் ஏற்பட வேண்டிய சிந்தனைமாற்றத்தை நேரடியாகவன்றி மறைமுகமாகச் சொல்லவே அன்றி... பெண்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் வெறுப்போ.. நாட்டமோ கிடையாது..! :)

ஓ அப்படியா?... :lol: நான் உங்களப்பற்றி வேற என்னமோ எல்லாம் நெனச்சுகொண்டு இருந்தன்.

நான் உங்களை எதிர்ப்பதாக காட்டிக்கொள்வது கூட உங்களிடம் ஏற்படவேண்டிய சிந்தனைமாற்றத்தை நேரடியாகவன்றி மறைமுகமாகச் சொல்வதே அன்றி... உங்களிடம் எனக்கும் தனிப்பட்ட முறையில் வெறுப்போ.. நாட்டமோ கிடையாது..!

இது மாதிரியே..

யாழ் நிருவாகம் உங்களை எதிர்ப்பதாக காட்டிக்கொள்வது கூட உங்களிடம் ஏற்படவேண்டிய சிந்தனைமாற்றத்தை நேரடியாகவன்றி மறைமுகமாகச் சொல்வதே அன்றி... உங்களிடம் அவர்களிற்கு தனிப்பட்ட முறையில் வெறுப்போ.. நாட்டமோ கிடையாது..! என்றே நினைக்கின்றேன்..

இது மாதிரியே..

_ _ _ _ _ _ உங்களை எதிர்ப்பதாக காட்டிக்கொள்வது கூட உங்களிடம் ஏற்படவேண்டிய சிந்தனைமாற்றத்தை நேரடியாகவன்றி மறைமுகமாகச் சொல்வதே அன்றி... உங்களிடம் _ _ _ _ _ _ற்கு தனிப்பட்ட முறையில் வெறுப்போ.. நாட்டமோ கிடையாது..! என்றே நினைக்கின்றேன்..

[உங்களிற்கு விருப்பமான சொல்லை _ _ _ _ _ _ ற்கு போட்டு நிரப்பி கொள்ளுங்கோ.]

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை எதிர்ப்பதாக நான் காட்டிக் கொள்வது கூட அவர்களிடம் ஏற்பட வேண்டிய சிந்தனைமாற்றத்தை நேரடியாகவன்றி மறைமுகமாகச் சொல்லவே அன்றி... பெண்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் வெறுப்போ.. நாட்டமோ கிடையாது..!

போன கிழமை தானே பெண்களை ஏன் பிடிப்பதில்லை எனப் பட்டியல் போட்ட மாதிரிக் கிடந்தது.:lol:

நீங்கள் இவ்வளவு பட்டியல் போட்டிருக்கின்றீர்கள். ஆனால் நிர்வாகம் எவ்வளவு தூரம் எடுக்கும் என்று தெரியவில்லை. இவைகளும் பேசாப்பொருளாகப் போய் விடும் என்றே நான் நம்புகின்றேன். ஆனால் பேசாப்பொருள் பிரியோசமில்லை என்றாலும் பேசப்படும்.

"பேசாப் பொருள்" என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

தமிழர்கள் பேச வேண்டிய, ஆனால் பேசத் தயங்குகின்ற நிறைய விடயங்கள் உண்டு. அந்த வகையில் அப் பகுதி மிகவும் அவசியம்.

நீங்கள் வேண்டுமென்றால், பொருளாதாரம் குறித்த ஒரு பகுதியை உருவாக்க நிர்வாகத்தை வலியுறுத்தலாம்.

ஆனால் உங்களுக்கு பிடிக்காத ஒரு பகுதியை நீக்கச் சொல்வது சரியல்ல.

  • தொடங்கியவர்

மெய்யெனப்படுவது எண்டதிலும் எங்கடை இந்து மதம் மெய்யில்லை அதில சொல்லிறதுகள் எல்லாம் மாயைய் என்று மறைமுகமாகக் கலாச்சாரச் சீரழிவு நடக்குது. அதையும் நீக்க வேணும்.

இந்த பிரச்சினை எல்லாம் தீர்க்க ஒரு வழி பேசாம யாழ் உறவோசை பகுதியை நீக்கிறது தான் என்ன நான் சொல்லுறது சரி தானே!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

"பேசாப் பொருள்" என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

தமிழர்கள் பேச வேண்டிய, ஆனால் பேசத் தயங்குகின்ற நிறைய விடயங்கள் உண்டு. அந்த வகையில் அப் பகுதி மிகவும் அவசியம்.

நீங்கள் வேண்டுமென்றால், பொருளாதாரம் குறித்த ஒரு பகுதியை உருவாக்க நிர்வாகத்தை வலியுறுத்தலாம்.

ஆனால் உங்களுக்கு பிடிக்காத ஒரு பகுதியை நீக்கச் சொல்வது சரியல்ல.

பேசாப்பொருள் என்ற தலைப்பு பலத்த சர்ச்சைகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன் பலவந்தமாகக் கொண்டு வரப்பட்ட ஒன்று. அதில் பெண்ணின் அங்கங்களையும், உடலமைப்பையும் பேச வேண்டும் என்பதற்காக புகுத்தப்பட்டதன் பின்னர் ஆக்கங்கள் எதுவும் பெரியளவில் வரவில்லை. அதில் கிடைத்த பெறுபேறுகள் என்பது பூச்சியமே. அதனால் தான் அதற்குப் பதிலாக வேறு ஒன்று கொண்டு வரக் கேட்டேன்.

எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, அதை வைத்திருக்க வலியுறுத்துவது நல்லதில்லை சபேசன்.

மெய்யெனப்படுவது எண்டதிலும் எங்கடை இந்து மதம் மெய்யில்லை அதில சொல்லிறதுகள் எல்லாம் மாயைய் என்று மறைமுகமாகக் கலாச்சாரச் சீரழிவு நடக்குது. அதையும் நீக்க வேணும்.

அப்படிப் பார்த்தால் யாழ்களத்தை முழுக்க நிறுத்த வேண்டும். சிலரால் ராமசாமி என்ற கன்னடக்காரனுக்கு களம் முழுக்க வக்காளத்து வாங்கப்படுகின்றது :lol:

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'nedukkalapoovan' Dec 21 2007, 08:50 AM'

நல்லதொரு ஆலோசனை.

யாழ் களம்.. வெறும் வெட்டுக் குத்துகளாலதான் உருப்படும் என்று நிர்வாகமும் நினைக்கிறது. ஆனால் அதுவல்ல முக்கிய தேவை இங்கு...!

யாழ் களச் செய்திப் பிரிவைப் பார்த்தால்..

1. ஈழத்து அரசியலும்.. இந்திய செய்திகளும்.. ( இரண்டும் இணையத்தளங்களில் தமிழில் கிடைக்கின்றன) பெருமளவில் வெட்டி ஒட்டப்படுகின்றன..!

ஆனால் சர்வதேசச் செய்திகள் எம்மக்களை அடைவது குறைவு. குறிப்பாக தமிழ் மட்டும் அறிந்தவர்கள்.. வேலைப்பழுவால் பிறமொழிச் செய்திகளை வாசிக்க முடியாதவர்கள் என்று பலருக்கும் சுருக்கமாக வேணும் சர்வதேசச் செய்திகள் தயாரித்து வழங்கப்படுவதில்லை..! அதைச் செய்ய எவருமே முன் வரவும் இல்லை..! முன் வந்தவர்களையும் நிர்வாகத்தின் துணையுடன் நக்கல் நளினம் செய்து விரட்டி அடித்துவிட்டார்கள்..!

இங்கு மட்டுமல்ல அநேகமாக சகல பகுதிகளிலும் வெட்டி ஒட்டுதல் தான் நடக்கின்றது.ஏன் நீங்கள் கூட அவ்வப்போது அதைத்தான் செய்கின்றீர்கள்.இங்கு யாராலுமே செய்திகளை நேரடியாக தயாரித்து வழங்க முடியாது.கதை,கட்டுரை,கவிதை போன்றவைகளே சுயமாக தயாரித்து வழங்க முடியும்.

2. தொழில்நுட்பச் செய்திகள்.

இன்றைய உலகம் தொழில்நுட்பத் துறையில் அசுர வளர்ச்சி கண்டு வருவதுடன் நாளும் பல புதிய மாற்றங்களும் கண்டுபிடிப்புக்களும் வருகின்றன..! அவை பற்றிய அறிமுகங்கள் விளக்கங்கள் என்று யாழில் எதுவும் கிடையாது. இன்று உ+ம்: ipod, iphone என்று அப்பிள் நிறுவனம் பல கையடக்கமான மின்னியல் உபகரணங்களை எல்லாம் அறிமுகம் செய்திருக்கிறது. இவ்வாறு பல பொருட்கள் தினமும் அறிமுகமாகின்றன. ஆங்கிலத் தளங்களில் இவற்றை மக்களுக்கு அறிமுகம் செய்வதோடு சுருக்கமான வகையில் வினைத்திறனுள்ள பாவனை விளக்கங்களும் அளிக்கின்றனர். ஆனால் தமிழில் அவ்வாறு காண்பதரிது. அந்த வகையில் அவை தொடர்பான அறிமுகங்கள் எவ்வாறு அவற்றை உயர்ந்த பயனைப் பெறும் வகையில் பாவிப்பது என்று பலரும் அறியக் கூடியதாக தகவல்களை மொழிபெயர்த்தோ அல்லது தொகுத்தோ வழங்குவது மக்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

யார் இதை செய்வது? ஏற்கனவே காலக்கண்ணாடி தள்ளாடிக்கொண்டிருக்கின்றது. இதில் மொழி பெயர்ப்பு ஆலோசனை வேறு.ஏதோ ஒருசிலர் அவ்வப்போது செய்கின்றனர். அதற்கும் வரவேற்பு கிடைத்ததாக தெரியவில்லை.

3. பொருளாதாரச் செய்திகள்.

நிச்சயமா இந்த உலகின் அரசியல் மற்றும் இராணுவ நகர்வுகள் மட்டுமன்றி தொழில்நுட்ப வளர்ச்சி கூட பொருளாதாரத்தை மையப்படுத்தியே அமைகின்றது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கைத் தரமும் முறையும் கூட அவனின் பொருளாதாரம் சார்ந்தே இருக்கிறது. எனவே சாதாரண பொருளாதாரக் குறிப்புகளில் இருந்து சர்வதேச பொருளாதார நிலைகள் வரை விளக்குதல் நன்று. நாடுகளின் பொருளாதார மற்றும் வளத் தேவைப்பாடுகள் பற்றிய அலசல்களும் முக்கியமானவை.

இன்றும் புலம்பெயர்ந்த எமது மக்கள் சீட்டுப் பிடிக்கின்றனர். பலர் இதில் ஏமாந்தும் போகின்றனர். பலர் கிரடிட் காட் மோசடிகளுக்கு இலக்காகியுள்ளனர். பலர் வங்கிக் கடன் மோசடிகளுக்கு இலக்காகியுள்ளனர். பல வீட்டுமனை வாங்குதலில் வாகனங்களைக் கடனடிப்படையில் வாங்குதலில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். காரணம் இவை பற்றிய அறியாமைகளே. பல் வேறு நாடுகளில் இருந்தும் இத்துறை சார்ந்தவர்கள் இங்கு கருத்தாட வருவர். எனவே அவ்வவ் துறைகளில் அந்தந்த நாடுகளில் உள்ள நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கலாம்..! இது மக்களுக்கு பேருதவியாக இருக்கும்..!

வரவேற்கக்கூடியது அத்துடன் எமக்கு தேவையானதும் கூட. பல நாடுகளில் புலம் பெயர்ந்து இருக்கும் எம்மவர்களின் அன்றாட பிரச்சனைகளை மற்றவர்களும் அறிந்து திருந்தி திருத்தி வாழ பேருதவியாக இருக்கும் இதன் மூலம் நிர்வாகத்தினர் மேலதிகமாக மட்டுறுத்தினர்களை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குட்படுத்த

Edited by குமாரசாமி

பெண்களை எதிர்ப்பதாக நான் காட்டிக் கொள்வது கூட அவர்களிடம் ஏற்பட வேண்டிய சிந்தனைமாற்றத்தை நேரடியாகவன்றி மறைமுகமாகச் சொல்லவே அன்றி... பெண்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் வெறுப்போ.. நாட்டமோ கிடையாது..! :(

:D<_<<_<:(

நெடுக்காலபோவான், நீங்கள் கிறீன்பிரிகேட் என்று ஒன்றை ஆரம்பித்தீர்கள். அதை தொடர்ந்து நடாத்திச் செல்லலாமே? மேலும், தொழிநுட்பம், பொருளாதாரம் சம்மந்தமான கட்டுரைகளை தாங்கள் எழுதி இணைக்கலாமே? யாரையாவது எழுதச்சொன்னால், அல்லது யாராவது இவற்றை எழுதுவார்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது? ஏதாவது மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்றால் நீங்களும் வித்தியாசமான பாணியில் எழுதி முயற்சித்து பார்க்கலாமே? நிருவாகம் கருத்தாடல் தளத்தை கண்காணிப்பது தவிர, கருத்துக்களம் எப்படி, எங்கு செல்கின்றது என்பது கருத்தாடல் செய்பவர்களின் கைகளிலேயே தங்கி உள்ளது. சும்மா குழுமங்களை உருவாக்குவதால் அல்லது பெயர் மாற்றங்கள் செய்வதால் கருத்தாடல் தளத்தின் போக்கில் ஏதாவது மாற்றம் வரும் என எதிர்பார்க்க முடியாது. மேலும், எத்தனை பேர் ஆய்வுக்கட்டுரைகள் எழுதக்கூடிய நிலையில் உள்ளார்கள்?

முதலில் மூடுமந்திரங்களுடன் உள்ள இந்தக்களத்தின் நிர்வாகம் முழுமையாக சீர்பெற வேண்டும். நிர்வாகம் சீரழிஞ்சு கிடக்கிறது. சமச்சீரற்ற செயற்பாடுகள் பெருகிக் கிடக்கின்றன.. இவற்றுக்கு மத்தியிலும் நேரப்பற்றாக்குறைகளுக்கும் இடையிலும் ஆக்கங்களை வரைந்து இங்கே இடவும் அவற்றை நிர்வாகம் என்ற பெயரில் ஒரு சிலர் தங்கள் சொந்த அதிகாரப் போக்கில் கையாளவும்.. நாங்கள் அதைப் பார்த்து இலிச்சிட்டுப் போகவும்..ஏன் ஐயா வேண்டாத வேலை. :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்துக்குப் பாருங்கள். இங்கு நேசக்கர அமைப்பை உருவாக்கி ஒரு மனிதாபிமானச் செயற்பாட்டை செய்ய முற்பட்ட போது எத்தனை கரங்கள் மனிதாபிமான எண்ணத்தோடு உதவ வந்தன..??! உதவியவர்களில் சிலரின் நோக்கம் நான் தாயகத்துக்கு பணம் அனுப்புறன் என்று காட்டுவதாக இருந்தது. ஆனால் இயல்பான மனிதாபிமானச் சிந்தனை பலரிடம் அங்கு எழவில்லை..! அப்படி எழுந்திருப்பின்... நான் ஆயிரம் ஆயிரமா கொடுக்கிறன் பிறகென்ன 50, 10 இங்க என்ற கேள்விகள் முளைக்காது. அங்கு மனிதாபிமானம் என்பது முன்னின்றிருப்பின் இந்த எண்ணமே எழுந்திராது. உதவிகள் குவிந்திருக்கும்.

இது உங்களின் தனிப்பட்ட கருத்தாகவே எடுத்துக்கொள்ளுகின்றேன். எனினும் சாத்திரியினதும், டன்னினதும் நோக்கம் இப்படி மலினப்படுத்தப்படுவது சரியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்களின் தனிப்பட்ட கருத்தாகவே எடுத்துக்கொள்ளுகின்றேன். எனினும் சாத்திரியினதும், டன்னினதும் நோக்கம் இப்படி மலினப்படுத்தப்படுவது சரியல்ல.

நீங்கள் எடுத்துக்கொண்டால் என்ன விட்டால் என்ன அது எனது கருத்துத்தான். சாத்திரிக்கும் டன்னுக்கும் தான் தெரியும் அவர்களின் செயற்பாட்டின் உண்மை நோக்கம்..! அதில் மனிதாபிமானமும் நிறைந்திருக்கலாம்..! :lol:

ஏற்கனவே பங்களிப்புக்கள் குறைந்துபோய் தள்ளாடிக் கொண்டிருக்கு.. இதில் இருந்தே தெரிகின்றது எவ்வளவு மனிதாபிமானம் உள்ளவர்கள் இங்கு வந்து குப்பை கொட்டுகிறார்கள் என்று... அதற்குள்ளும் உதவி செய்யும் ஒன்றிரண்டு பேரையும் செய்யாமல் பண்ண உங்களைப்போரின் கருத்துக்கள் போதும்.. மனிதாபிமானம் உள்ள உங்களின் உள்நோக்கம் புரிகின்றது..

நான் நினைக்கிறேன் உங்களுக்குள்ள பிரச்சனை மற்றவர்களுக்கு இல்லையென்று. எனது கருத்தினூடு பங்களிப்புச் செய்பவர்கள் நிச்சயம் மனிதாபிமான அணுகுமுறையின் அவசியத்தை உணர்வார்களே அன்றி பங்களிப்பை நிறுத்த முனையார்கள். ஆனால் உங்களின் நிலை அதற்கு எதிர்மாறானது என்பதை நான் நங்கு அறிவேன்..!

பங்களிப்பதும் விடுவதும் உங்கள் உங்கள் சுய விருப்பம். நாம் கோருவது பங்களிப்பின் மனிதாபிமானப் பக்கத்தை உணர்வதும் பங்களிப்பை அதிகரிப்பதுமே..! உங்களால் அதை உணர முடியல்ல என்றால் கருத்துக்கு தவறான அர்த்தம் கற்பிதம் செய்யும் பணியையாவது செய்யாதிருங்கள். முன்னரும் ஒரு கள உறவின் மீது தவறான கற்பிதங்களை கற்பிக்க முன்னின்றவர்களில் தாங்களும் ஒருவர் என்பதை நான் நங்கு அறிவேன்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் உங்களின் நிலை அதற்கு எதிர்மாறானது என்பதை நான் நங்கு அறிவேன்..!

என்னைப் பற்றிச் சரியாகப் புரிந்து வைத்துள்ளமைக்கு நன்றி.. :D:D

முன்னரும் ஒரு கள உறவின் மீது தவறான கற்பிதங்களை கற்பிக்க முன்னின்றவர்களில் தாங்களும் ஒருவர் என்பதை நான் நங்கு அறிவேன்..! :lol:

நானும் உங்களைப் பற்றிச் சரியாகவே புரிந்துவைத்துள்ளேன்.. சும்மா வேறொரு கள உறவு என்று ஏன் இப்பவும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.. அது தாங்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே.. :lol::D

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

கிருபன் அண்ணை, நெடுக்காலபோவான்,

நீங்கள் ரெண்டு பேரும் இப்படி ஆக்களை ஆக்கள் புரிந்து கொண்டு இருக்கிறீங்கள் எண்டு நீளமாக எழுதி கதைப்பதைவிட...

ரெண்டுபேரும் எதிர் எதிர் அணிகளில் நின்று ஒரு பட்டிமன்றம் ஒன்றை நடாத்தமுடியுமா? வாசிப்பவர்களிற்கு நல்லா இருக்கும்.

நான் நடுவராக நின்று பட்டிமன்றத்தை கொண்டு செல்கின்றேன்.

நீங்கள் எதிர் எதிர் அணிகளில் நிற்கக்கூடிய தலைப்பு ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ. ஆரம்பிப்பம் ஒன்றை.

(பெரியார், சிறியார், இந்துமதம் தவிர வேறு எதாவது பற்றி... )

புலத்தில் வாழும் தமிழ் மக்களிற்கு மனிதாபிமானம் என்றால் என்ன என்று தெரியுமா?

இல்லாட்டி

புலத்தில் வாழும் தமிழ் மக்களிற்கு மனிதாபிமானம் என்று ஒன்று இருக்கின்றதா? இப்படி ஒரு பட்டிமன்றம் ஆரம்பிப்பமா?

பகிடிக்கல்ல உண்மையாத்தான் கேட்கின்றேன். நீங்கள் இருவரும் ஆயத்தம் என்றால் ஒன்றை இப்படி தொடங்கலாம். இல்லாட்டி வேறு ஏதாவது சமூக விடயங்கள் பற்றியும் செய்யலாம்.

உங்கள் வசதிகள் எப்படி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.