Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவில் (Russia) உக்ரைனின் (UKraine) ஊடுருவலானது, மூன்றாம் உலகப் போர் நெருங்கியுள்ளதை சுட்டிக்காட்டுவதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) கூட்டாளியுமான மிகைல் ஷெரெமெட் (Mikhail Sheremet) தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரஷ்யாவிற்குள் உக்ரைன் இராணுவம் ஊடுருவியது.

அவசர நிலை

உக்ரைனிய படைகளின் இந்த ஊடுருவல் காரணமாக கிட்டத்தட்ட 120000 இற்கும் மேற்பட்ட மக்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன் குறித்த பகுதியில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது.

நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு | Ukraine S Invasion Of Russia Is World War Iii

இந்த நிலையில், குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்தில் உள்ள சுட்ஜா (Sudzha) நகரை உக்ரைன் படைகள் ஆக்கிரமித்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், உக்ரைனின் இந்த நடவடிக்கைகள் மூன்றாம் உலகப் போருக்கு காரணமாக அமையும் என புடினின் கூட்டாளி மிகைல் ஷெரெமெட் எச்சரித்துள்ளார்.

உலகப் போருக்கான ஒத்திகை

உக்ரைனின் இந்த நடவடிக்கைகளின் போது, தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்ய மண்ணில் பிரித்தானிய, அமெரிக்கா ஆயுதங்களை பயன்படுத்துவது, ரஷ்ய பொதுமக்கள் மீதும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது, தாக்குதலில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பு என்பன அதற்கு மறுக்க முடியாத ஆதாரம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு | Ukraine S Invasion Of Russia Is World War Iii

இவை நிச்சயமாக மூன்றாம் உலகப் போருக்கான ஒத்திகை என்றே மிகைல் ஷெரெமெட் கொந்தளித்துள்ளதுடன் ரஷ்யா மீதான தாக்குதலுக்கு NATO உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்திருக்கு எனவும் அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.  

https://ibctamil.com/article/ukraine-s-invasion-of-russia-is-world-war-iii-1723806264

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் நெருக்கடியை சந்திக்கும்  போதெல்லாம் தாம் தப்பிப்பதற்காக உலகப்போரை சொல்லி அச்சுறுத்துவது, மற்றைய நாடுகளை தாம் ஊடுருவும் போது அதற்கு வேறொரு காரணம் கற்பிப்பது சர்வாதிகாரிகளின்குணம். ஏன் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்? ஆரம்பியுங்கள்! எல்லாரும் சேர்ந்தே அழிவோம். அதை செய்ய மாட்டீர்கள், நீங்கள் அபகரிக்க வேண்டியது நினைத்தது நிலுவையில் இருக்கே.    

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, satan said:

குலைக்கிற நாய் கடிக்காது. 

இராணுவம் உள்ளே வந்தாச்சு. இனி அணுகுண்டு போடுவேன் என்றும் வெருட்ட முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகநாடுகளை அத்துமீறி பிடித்த வரலாறுகளை பார்த்தால், இரண்டு உலக மகாயுத்தங்களை ஆரம்பித்தது யாரென்று பார்த்தால்.....
ஐயோ தலை சுத்துது.......

ஜேர்மனிக்கு ரஷ்யாவிலிருந்து வந்த இரண்டாவது எரிவாயு குழாயை குண்டுவைத்து தகர்த்தது உக்ரேன் என தெரிந்தும்.....

அதைவிட இன்றைய முக்கியமான இன்னுமொரு விடயம் ஜேர்மனி உக்ரேனுக்கான நிதியுதவியை இன்றுடன் நிறுத்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

போரை நிறுத்த சொல்லி நிறுத்துகிறார்களா? எம்மிடம் பணம் இல்லை என்று நிறுத்துகிறார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, விசுகு said:

போரை நிறுத்த சொல்லி நிறுத்துகிறார்களா? எம்மிடம் பணம் இல்லை என்று நிறுத்துகிறார்களா?

நீங்கள் மேற்கூறிய இரண்டும் இல்லை.

உக்ரேனியர்களை நம்பி ஆற்றில் இறங்க முடியாது என நினைக்கின்றார்கள் என நான் நினைக்கின்றேன். அதோட அமெரிக்க லெக்ச்சன்ல ரம்ப் வந்தால் நிலைமை தலைகீழ் எண்டு எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் தானே.😄
 
போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க பொதுமக்களின் ஆதரவு நிறையவே உண்டு  என எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம். 😎

3 hours ago, குமாரசாமி said:

அதைவிட இன்றைய முக்கியமான இன்னுமொரு விடயம் ஜேர்மனி உக்ரேனுக்கான நிதியுதவியை இன்றுடன் நிறுத்துகின்றது.

இதுவும் டிக்டொக்கில் வாசித்ததா ? 

பொருளாதார நெருக்கடியில் உள்ள ஜேர்மனி அதன் அடுத்த வருட பட்ஜெட்டில் செலவுகளைக் குறைக்க முயல்கிறது. இந்த வருட உக்ரெயின் உதவி 8 பில்லியன் ஈரோ. அடுத்த வருடம் இதனை 4 பில்லியனாகக் குறைக்கிறது. மீதி 4 பில்லியன்கள் ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து வரும் வருமானத்திலிருந்து ஈடு செய்யப்படும். இதுவும் இறுதி முடிவு கிடையாது, பாராளுமன்றத்தில் பட்ஜெட் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
 
1 hour ago, குமாரசாமி said:

உக்ரேனியர்களை நம்பி ஆற்றில் இறங்க முடியாது என நினைக்கின்றார்கள் என நான் நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, இணையவன் said:

இதுவும் டிக்டொக்கில் வாசித்ததா ? 

வணக்கம் இணையவன்! இங்குதான் உங்கள் குழுத்தன்மை புலப்படுகின்றது. இங்கே யாழ்களத்தில் குழுவாதத்தை வெளிப்படுத்தி ஆரம்பித்து வைத்தவர் சாட்சாத் தாங்கள் தான் என்பதை இங்கே நேரடியாகவே எழுதுகின்றேன்.இங்கே டிக்டொட் செய்திகளை வாசிப்பவர்கள் என்பதை அறிமுகப்படுத்தியவர் யாழ்கள உறவு @Justin  மட்டுமே. அதையே தாங்களும் தொடர்வதால் உங்கள் குழு நிலைகள் நிரூபணமாகின்றது.அவர் எழுதும் கருத்துகளுக்கு மட்டும் ஓடிவந்து விருப்புவாக்கு இடுவது உட்பட.....

நான் டிக்டொக் வாசிப்பதில்லை.அங்கத்தவரும் இல்லை. அநேகமாக நான் என் சுய எண்ண கருத்துக்களையே எழுதுகின்றேன். அது நிர்வாக சட்டத்திற்குள் அமையாது என்றால் சொல்லுங்கள். 

6 hours ago, இணையவன் said:

பொருளாதார நெருக்கடியில் உள்ள ஜேர்மனி அதன் அடுத்த வருட பட்ஜெட்டில் செலவுகளைக் குறைக்க முயல்கிறது. இந்த வருட உக்ரெயின் உதவி 8 பில்லியன் ஈரோ. அடுத்த வருடம் இதனை 4 பில்லியனாகக் குறைக்கிறது. மீதி 4 பில்லியன்கள் ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து வரும் வருமானத்திலிருந்து ஈடு செய்யப்படும். இதுவும் இறுதி முடிவு கிடையாது, பாராளுமன்றத்தில் பட்ஜெட் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

நீங்கள் எழுதியது உண்மைதான். 

தங்கள் பொருளாதார நெருக்கடிக்கு அடுத்தவன் சொத்துக்களை உபயோகப்படுத்துவது கேவலத்திலும் கேவலம். இதையே இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரும் செய்தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.