Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

sehan-fe.jpg?resize=484,319

அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்!

“எதிர்வரும் ஆண்டு முதல் அரச பணியாளர்களின் மாதாந்த கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக” நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்

தேர்தல் பிரசார பணிகள் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டில் பொருளாதார மீட்சிக்கான பயணத்தின் போது அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.

அப்போது அவர்கள் முன்னிலையாகவில்லை.ஆனால் ஜனாதிபதி பாதகம் ஏற்படாதவாறு பொருளாதார அபிவிருத்தி நோக்கிய பயணத்திற்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளார்.

கடன்மறுசீரமைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று அதன்நன்மைகளை மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அரச பணியாளர்களின் சம்பளத்தை அடுத்த ஆண்டு முதல் 25 ஆயிரம் ரூபாவாக கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சிறந்த பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே எம்மால் அதனை செய்யமுடிந்தது. அநுரவாலும் சஜித்தாலும் இதனை செய்யமுடியுமா என நான் கேட்கின்றேன்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அவர்களால் இந்த அளவு அதிகரிக்க முடியுமா? வாழ்க்கை செலவினை அதிகரிப்பது எமது நோக்கமல்ல. நாம் மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வழங்கமாட்டோம். தேர்தலை இலக்காக கொண்டு நாம் அதனை செய்யவில்லை.

நடைமுறையில் செயற்படுத்த இயலுமான விடயங்களையே நாம் கூறுவோம்.அடுத்த ஆண்டு வருமான வரி விலக்குவழங்குவதற்கு நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகவே எதிர்வரும் தேர்தல் இடம்பெறவுள்ளது.

இது தனிநபர் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதல்ல . நாட்டை நெருக்கடிக்கு இட்டுச்செல்லாமல் அபிவிருத்திபாதைக்கு இட்டுச் செல்வதற்கான பயணமாகவே புதிய ஆட்சி அமைய வேண்டும் நெருக்கடியை கண்டு ஓடி ஒழிந்தவர்கள் இன்று ஜனாதிபதியாகும் கனவில் உள்ளனர்” இவ்வாறு ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1396436

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசாங்க ஊழியர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவை 2024 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்க நடவடிக்கை - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

21 AUG, 2024 | 06:59 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

அரசாங்க ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு  வழங்கும் முடிவு தேர்தலுக்கான வாக்குறுதியோ வெறும் ஜனரஞ்சக வார்த்தையோ அல்ல. இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (21)  இடம்பெற்ற கலால் வரி கட்டளைச் சட்டம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகியன தொடர்பான கட்டளைச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே  இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், 

எதிர்காலத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது தேர்தல் வாக்குறுதியா என்றும் அவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். 

நாம் 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டிலுள்ள 13 இலட்சத்து 80.000 அரசாங்க ஊழியர்களுக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினோம். 

ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவுகளையும் அதிகரித்தோம். அவர்களுக்கு மேலும் 3000 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசாங்கத்தின் திட்டங்கள் மூலமான  நடவடிக்கைகள். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை மேற்கொண்டார். 

நாட்டு மக்களின் வாழ்வாதார நெருக்கடியை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம். வரிச்சுமையும் காணப்படுவதால் வரிகளை குறைக்க வேண்டியுள்ளது. முடியுமான  அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதனை மேற்கொள்வது அவசியம். 

நாட்டு மக்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு அவர்களுக்கான சக்தியை பெற்றுக் கொடுப்பது அவசியம். 

அதனைக் கவனத்திற் கொண்டே உதய ஆர் செனவிரத்ன குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவில் எந்த அரசியல்வாதிகளும் பங்கேற்கவில்லை. நிதியமைச்சு உட்பட அரச அதிகாரிகளே இடம் பெற்றனர். 

அந்தக் குழு இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்தது. எதிர்காலத்தில் எவ்வாறு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பான பரிந்துரையை அதில் உள்ளடக்கியுள்ளது. அந்த இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.  

அந்த இடைக்கால அறிக்கையில் தற்போதுள்ள அனைத்து வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகளும் ஒன்றிணைக்கப்பட்டு 25,000 ரூபா வாழ்க்கை செலவு கொடுப்பனவாக அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ளதால் திறைசேரி 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கி அதனை வழங்குவதற்கான முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. 

திறைசேரியின் செயலாளரும் அமர்ந்திருந்த குழுவிலேயே இந்த திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டு இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 24 வீத அதிகரிப்பு அடுத்த வரவு செலவு திட்டத்தில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

இவை அனைத்தும் முகாமைத்துவம் செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முடிவுகளே தவிர ஜனரஞ்சக வார்த்தைகள் அல்ல என்றார்.

https://www.virakesari.lk/article/191659

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்கியே தீருவோம் - வஜிர அபேவர்தன உறுதி

22 AUG, 2024 | 05:29 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தேர்தல் வாக்குறுதி அல்ல. மாறாக அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் உள்வாங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும். ரணில் விக்ரமசிங்க சொல்வதைச் செய்யும் தலைவர். அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கியே ஆகுவோம் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுஎமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை  (22)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு வீழ்ச்சியடைந்த நிலையில் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துச் சென்றது. என்றாலும் தற்போது படிப்படியாக நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்து வருகிறது. அதன் பிரகாரம் மக்களின் வருமானமும் அதிகரிக்க வேண்டும். அதனால் மக்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகிறார். தொழில் முயற்சியாளர்களை அதிகரித்து அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வாழ்க்கைச்செலவு அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்றவகையில் நாளாந்த சம்பளத்துக்குத் தொழில் செய்பவர்கள் தங்களின் நாட்சம்பளத்தை அதிகரித்துக்கொள்கின்றனர். ஆனால் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக இருந்தால், அதற்கு திறைசேரியின் அனுமதி பெற்று முறையாக மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கிறது. அதனால் இந்த நடவடிக்கையை முறையாக மேற்கொண்டு தற்போது அரச ஊழியர்களுக்கு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருக்கிறது.

அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு. ஜனவரி முதல் அதனை வழங்க நடவடிக்கை எடுப்போம். இது தேர்தலை இலக்கு வைத்துத் தெரிவிக்கப்படும் வாக்குறுதி என யாரும் நினைக்க வேண்டாம். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சொல்வதையும் செய்யும் தலைவர் என்பது அரச ஊழியர்களுக்கு தெரியும். ஏனெனில் அரச ஊழியர்களுக்கு ஏற்கனவே 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கியது ரணில் விக்ரமசிங்க என்பது அவர்களுக்கு தெரியும்.

மேலும் இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் யாரை வேண்டுமானாலும் நிராகரிக்கலாம். ஆனால் இந்த தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களுடன் களமிறங்கியுள்ளார். அதனால் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் இந்த நாடு தோல்வியடையும். நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/191724

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை நாமும் 24 சதவீதத்தால் அதிகரிப்போம் - சஜித் பிரேமதாச

Published By: VISHNU   23 AUG, 2024 | 05:46 PM

image

(எம்.மனோசித்ரா)

அரச உத்தியோகத்தர்கள் நாட்டுக்கு சுமை என்று இதுவரைக் காலமும் கூறி வந்த அரசாங்கம் தற்போது அவர்கள் மீது கரிசணை காட்டுகின்றது. இது முற்று முழுதாக சந்தர்ப்பவாதமாகும். நாமும் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை 24 சதவீதத்தால் அதிகரிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கேகாலை மாவட்டம், வரகாப்பொல தொகுதியில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச உத்தியோகத்தர்களை நாட்டுக்கு சுமையாகவே இதுவரை காலமும் உள்ள அரசாங்கங்கள் பார்த்து வந்தன. ஆனால் இப்போதுதான் இந்த அரசாங்கத்துக்கு அரச உத்தியோகத்தர்கள் முக்கியத்துவமானவர்களாகியுள்ளனர். இது சந்தர்ப்பவாதமாகும். தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்களை ஏமாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் அரசு சேவை பயனற்றது என்றும் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் அவர்கள் நாட்டின் நாட்டிற்கு சுமை என்றும் கூறினார்கள். ஆனால் இன்று அதே நபர்கள் போலியான வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். நாம் அவ்வாறு போலியான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். கூறும் அனைத்தையும் நடைமுறையில் செய்து காட்டுவோம்.

எமது ஆட்சியில் வாழ்க்கை செலவுக்கு சமமாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பிரத்தியேக குழு ஒன்று நியமிக்கப்படும். 2025 ஜனவரி முதல் சகல அரச உத்தியோகத்தர்கள் அடிப்படை சம்பளமும் 24 சதவீதத்தால் அதிகரிக்கப்படும். தற்போது அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் ஆகக்குறைந்த 17500 ரூபாய் வாழ்க்கை செலவு கொடுப்பனவானது 25000 ரூபாய் வரை அதிகரிக்கப்படும்.

அதற்கமைய சகல கொடுப்பனவுகளும் உள்ளடங்களாக அரச உத்தியோகத்தர்களுக்கு ஆகக் குறைந்த மாத சம்பளமாக 57500 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுப்போம். தற்போது நடைமுறையில் உள்ள 6 - 36 சதவீத வருமான வரியை  1 - 24 சதவீத வீதம் வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

https://www.virakesari.lk/article/191821

  • கருத்துக்கள உறவுகள்
Posted

456952701_911084877723152_73581373969597

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓய்வூதியர்களுக்கும் கொஞ்சம் கூட்டலாமே? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களுக்கு 24 - 50 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு

Published By: VISHNU   03 SEP, 2024 | 04:11 AM

image
 
  • - அலுவலக உதவியாளர்களுக்கு தரநிலை அடிப்படையில்  5450 - 13,980 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
  • - சாரதிகளுக்கு 6960 - 16,340 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
  • - சமூர்த்தி/அபிவிருத்தி/விவசாய ஆய்வு அதிகாரிகளுக்கு 8,340-15,685ரூபாய் வரையில் சம்பளன அதிகரிப்பு
  • - முகாமைத்துவ உதவியாளர்களுக்கு 12,710 - 17,550 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
  • - அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு 12,710 - 25,150 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
  • - பொது சுகாதார பரிசோதகர்/குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 12,558 -25,275ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
  • - கதிரியக்கவியல்/  மருந்தாளர்களுக்கு 13,280 - 25,720 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
  • - தாதியர்களுக்கு 13,725 - 26,165 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
  • - அதிபர்களுக்கு 23,245 - 39,595 ரூபாய் சம்பள அதிகரிப்பு
  • - ஆசியர்களுக்கு 17,480 - 38,020 ரூபாய் சம்பள அதிகரிப்பு
  • - பொலிஸ் அதிகாரிகளுக்கு 10,740 - 23,685 ரூபாய் சம்பள அதிகரிப்பு
  • - கிராம சேவகர்களுக்கு 11,340 -  23,575 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு
  • - நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு 28,885 ரூபாய் சம்பள அதிகரிப்பு
  • - பிரதிப் பணிப்பாளர்/பிரதி ஆணையாளர்களுக்கு 43,865 ரூபாய் சம்பள அதிகரிப்பு
  • - பிரதேச செயலாளர்/பணிப்பாளர்/ஆணையாளர்/சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவிகளுக்கு 57,545 ரூபாய் சம்பள அதிகரிப்பு
  • - வைத்திய அதிகாரிகளுக்கு 35,560 - 53,075 ரூபாய் சம்பள அதிகரிப்பு
  • - வருடாந்த சம்பள அதிகரிப்பு இரட்டிப்பாக்கப்படும்
  • - அரச கூட்டுத்தாபனம்/சபைகள்/நியதிச் சட்ட நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள்/முப்படையினருக்கு 2025 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். 

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான  நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

அதன்படி  2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 - 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது. 

அதன்படி அரச சேவையின் அலுவலக உதவியாளர் தரம் மூன்றிற்கு  5,450 ரூபாவினாலும், இரண்டாம் தரத்திற்கு  8,760 ரூபாவினாலும், தரம் ஒன்றிற்கு 10,950 ரூபாயினாலும் சம்பளம் அதிகரிக்கப்படவிருப்பதோடு, அதன் உயர்தர சேவைகளுக்கு 13,980 ரூபாவினால் சம்பள அதிகரிப்பு செய்யப்படவுள்ளது.  

அதேபோல் சாரதி சேவையின் மூன்றாம் தரத்தின்  சம்பளம் 6,960 ரூபாவினால் அதிகரிக்கப்படும். இரண்டாம் தரத்தின் சம்பளம் 9,990 ரூபாவினாலும், முதலாம் தரத்திற்கு 13,020 ரூபாவினாலும், விசேட தரத்திற்கு 16,340 ரூபாவினாலும் சம்பள அதிகரிப்பு கிடைக்கும்.

மூன்றாம் நிலை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு ரூ.8,340 சம்பள உயர்வும், இரண்டாம் தரத்திற்கு ரூ.11,690 சம்பள உயர்வும், முதலாம் தரத்திற்கு ரூ.15,685 சம்பள உயர்வும் கிடைக்கும்.

முகாமைத்துவ சேவை அதிகாரி/முகாமைத்துவ உதவியாளர் தரம் III இற்கு ரூ. 10,140 மற்றும் தரம் II இற்கு ரூ.13,490 உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் தர சம்பளம் 17,550 ரூபாயால் அதிகரிக்கப்படும்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் மூன்று சம்பள உயர்வு 12,710 ரூபாவினாலும்  இரண்டாம் தரத்திற்கு ரூ.17,820, முதல் தரத்திற்கு ரூ.25,150 வினாலும் அதிகரிக்கப்படும்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப சுகாதார பணியாளர் மூன்றாம் தரத்தின் சம்பளம் 12,885 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இரண்டாம் தரத்திற்கு ரூ.17,945 சம்பள உயர்வும் முதலாம் தரத்திற்கு ரூ.25,275 சம்பள உயர்வும் கிடைக்கும்.

கதிரியக்க நிபுணர் மற்றும் மருந்தாளர் மூன்றாம் தரத்திற்கு ரூ.13,280 சம்பள அதிகரிப்பும், இரண்டாம் தரத்திற்கு ரூ.18,310 சம்பள உயர்வும் முதலாம் தரத்திற்கு ரூ.25,720 சம்பள உயர்வும் கிடைக்கும்.

மூன்றாம் தர தாதியர் உத்தியோகத்தரின் சம்பளம் 13,725 ரூபாயாலும், இரண்டாம் தரத்திற்கு ரூ.18,835 சம்பள அதிகரிப்பும், முதலாம் தரத்தினருக்கு ரூ.26,165 சம்பள உயர்வும் வழங்கப்படவுள்ளது.

அதிபர் சேவையின் மூன்றாம் தரத்தின் சம்பளம் 23,425 ரூபாவினாலும், இரண்டாம் தரத்தின் சம்பளம் 29,935 ரூபாவினாலும், மூன்றாம் தரத்திற்கு 39,595 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

ஆசிரியர் சேவையில் உள்ள கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ.17,480 சம்பள உயர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.19,055 அதிகரிப்பும், இரண்டாம் தரத்திற்கு ரூ.20,425, முதல் தரத்திற்கு 38,020 ரூபாயும் முன்மொழியப்பட்டுள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சம்பள உயர்வாக ரூ.10,704 பெறுவார். பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சம்பள ரூ.13,210 வினாலும், சப்-இன்ஸ்பெக்டர்களின் சம்பளம் ரூ.14,050 வினாலும்  அதிகரிக்கப்படும். பொலிஸ் பரிசோதகரின் சம்பளம் ரூ.18,290, பிரதான பொலிஸ் பரிசோதகரின் சம்பளம் ரூ.23,685  அதிகரிக்கப்படவுள்ளது.

கிராம உத்தியோகத்தர் முதலாம் தர சம்பளம் 11,340 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது. அந்த சேவையின் இரண்டாம் தரத்திற்கு ரூ.14,690, முதலாம் தரத்தினருக்கு ரூ.18,750 சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. நிர்வாக கிராம அதிகாரியின் சம்பளம் ரூ.23,575 அதிகரிக்கும்.

உதவிச் செயலாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர், உதவிப் பிரதேச செயலாளர், உதவி ஆணையாளர் ஆகியோரின் சம்பளம் 28,885 ரூபாவினால் அதிகரிக்கப்படும். பிரதி பணிப்பாளர் ,பிரதி ஆணையாளர்களின் ஆரம்ப சம்பளம் 43,865 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளது. பிரதேச செயலாளர், பணிப்பாளர், ஆணையாளர், சிரேஷ்ட உதவி செயலாளர் ஆகிய பதவிகளுக்கான சம்பளம் 57,545 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஆரம்ப தர வைத்தியர்களின் சம்பளம் 35,560 ரூபாவினால் அதிகரிக்கப்படும். இரண்டாம் தர வைத்தியர்களின் சம்பளம் ரூ.39,575 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது. முதலாம் தர வைத்தியர்களுக்கான சம்பள அதிகரிப்பு 53,075 ரூபாவினாலும், மேலதிக செயலாளர் மற்றும் விசேட வைத்தியர்களின் சம்பளம் 70,200 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

உதவிச் செயலாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகிய பதவிகளுக்கான சம்பளம் 28,885 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. பிரதிப் பணிப்பாளர் மற்றும் பிரதி ஆணையர்களின் அடிப்படைச் சம்பளம் 43,865 ரூபாயாவினாலும் பிரதேச செயலாளர், பணிப்பாளர், ஆணையர், சிரேஷ்ட உதவிச் செயலர் பதவிகளுக்கான சம்பளம் ரூ.57,545 வினாலும் உயர்த்தப்படும்.

அத்துடன் ஆரம்ப நிலை வைத்தியர்களின் சம்பளம் 35,560 ரூபாவினாலும் இரண்டாம் நிலை  வைத்தியர்களின் சம்பளம் 39,575 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. முதலாம் நிலை  வைத்தியர்களுக்கு 53,075 ரூபாவும், மேலதிக செயலாளர் மற்றும் விசேட வைத்திய பதவிகளுக்கு 70,200 ரூபாவும் சம்பள உயர்வு வழங்கப்படும்.

அதே சமயம், அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்கும் வருடாந்தம் சம்பள உயர்வுத் தொகையை இரட்டிப்பாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 ஜனவரி 01 முதல் அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும்  பாதுகாப்பு படையினரின் சம்பளத்தை   அதிகரிக்கவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/192689

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

இவ்வளவும் செய்ய எங்கையிருந்தாம் காசு வரும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்காம் , உண்மையாகவா , இப்ப உள்ள விலைவாசிக்கு இந்த உயர்வு கட்டாயம் தேவை . உண்மையாக வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாதவூரான் said:

இவ்வளவும் செய்ய எங்கையிருந்தாம் காசு வரும்

கடன் வேண்டுவது  🤣😂.   மக்களை கடன்கார்களாக மாற்றுவது   ஆனால் இது மக்களுக்கு தெரியாது  20 லட்சம் அரச உத்தியோகத்தர்கள் வரும்   மிகுதி.  200  லட்சம் 

[கிட்டத்தட்ட ] மக்களின் வாழ்வதாரம் என்ன???  அவர்களுக்குகான. கொடுப்பனவுகள். எதுவும் இல்லையா?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாதவூரான் said:

இவ்வளவும் செய்ய எங்கையிருந்தாம் காசு வரும்

அதெல்லாம் வரும்! வரும்போது தருவம் என்று சொல்லமாட்டம்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வு; அரசாங்கம் அரச ஊழியர்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது - பவ்ரல் விசனம்

04 SEP, 2024 | 01:11 PM
image
 
அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பிற்கு முன்னதாக அரசாங்கம்  பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என பவ்ரல் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை எதிர்வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று தீர்மானங்களை எடுத்துள்ளது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம் குறித்து நான் முரண்படவில்லை, எனினும் இந்த மூன்று தீர்மானங்களும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் இவை பாரதூரமானவை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வார அமைச்சரவைகூட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை  அதிகரிப்பதற்கும், வரிகளை குறைப்பதற்கும் உள்ளுராட்சி சபை தேர்தலிற்கான வேட்பு மனுக்களை இரத்துச்செய்வதற்கும்  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் தபால்மூல வாக்களிப்பிற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர் வெளியான இந்த அறிவிப்பு 14 மில்லியன் அரசாங்க ஊழியர்களை கவருவதற்கான முயற்சி என அவர் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களிற்கு முன்னரே அரசாங்கம் ஒரு சதம் கூட சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் மூலம் அரசாங்கம் தெரிவித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பள உயர்வை வழங்கும் அளவிற்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? உத்தேச சம்பள அதிகரிப்பை வழங்குவது என்றால் அரசாங்கத்திற்கு மாதமொன்றிற்கு 20 மில்லியன் தேவை என தெரிவித்துள்ள ரோகண ஹெட்டியாராச்சி இவ்வாறான அறிவிப்புகள் மூலம் அரசாங்கம் அரசாங்க ஊழியர்களை ஏமாற்ற முயல்கின்றது என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/192824

  • கருத்துக்கள உறவுகள்
Posted

paffrel.jpg?resize=650,375

சம்பள உயர்வு தொடர்பில் பொதுமக்களை ஏமாற்ற முயற்சி – பெப்ரல் சுட்டிக்காட்டு.

அரச ஊழியர்களிற்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பிற்கு முன்னதாக அரசாங்கம்  பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என பவ்ரல் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை எதிர்வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று தீர்மானங்களை எடுத்துள்ளது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம் குறித்து நான் முரண்படவில்லை,எனினும் இந்த மூன்று தீர்மானங்களும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் இவை பாரதூரமானவை என அவர் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களிற்கு முன்னரே அரசாங்கம் ஒருசதம் கூட சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் மூலம் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

உத்தேச சம்பள அதிகரிப்பை வழங்குவது என்றால் அரசாங்கத்திற்கு மாதமொன்றிற்கு 20 மில்லியன் தேவை என தெரிவித்துள்ள ரோகண ஹெட்டியாராச்சி இவ்வாறான அறிவிப்புகள் மூலம் அரசாங்கம் அரசாங்க ஊழியர்களை ஏமாற்ற முயல்கின்றது என தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1398214

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, தமிழ் சிறி said:

மேலே பதியப்பட்டதை வாசிப்பது இல்லையா  ??  நான் ஒரு செய்தியை இரண்டு முறை வாசித்து விட்டேன்   🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Kandiah57 said:

மேலே பதியப்பட்டதை வாசிப்பது இல்லையா  ??  நான் ஒரு செய்தியை இரண்டு முறை வாசித்து விட்டேன்   🤣🤣

சரி... சரி.., ரென்சன் ஆகாதேங்கோ. 😂
அடுத்தமுறை கவனமாக பார்த்து  பதிகின்றேன். 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரச ஊழியர்களின் சம்பள உயர்வின் பலன் கிடைக்க, ஜனவரி 01 ஆம் திகதி பிறக்க மட்டுமே உள்ளது - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Published By: VISHNU   05 SEP, 2024 | 01:56 AM

image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய வெறும் ஆவணம் அல்ல எனவும், அதற்கு திறைசேரி மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். 

பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப் பட்டதாகவும், அரச ஊழியர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், அதனை அறவே குறைக்கக் கூடாது என்று தெரிவித்து  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த யோசனையை கடுமையாக நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு, பிளவர் வீதியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் எவ்வகையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் பொருளாதார நெருக்கடியான காலத்திலும் கூட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாவை வழங்கியதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியதாவது:

‘’இந்த நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட 2022 ஆம் ஆண்டளவில்,  13 இலட்சத்து எண்பதாயிரம் அரச ஊழியர்கள் இருந்தனர். அவர்களுக்கான சம்பளம், 95 பில்லியன் ரூபாவாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக பதவியேற்கும் போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை காணப்பட்டது. அதன்படி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அதில் ஒன்று அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்பது. ஆனால் ஜனாதிபதி அதனை கடுமையாக நிராகரித்தார். அதன் பிறகு இரண்டு முறை சம்பளம் கொடுத்து இரண்டு, மூன்று மாதங்கள் நிலைமையை சமாளித்தனர். அதன்படி, சாதாரண ஊழியர்களுக்கு உரிய நாளிலும், அதற்கு அடுத்த வாரத்தில் நிறைவேற்றுப் பதவியில் இருப்பவர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டது. அப்படி ஒரு காலம் இருந்ததை இன்று சிலர் மறந்து விடுகிறார்கள்.

2023 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் திறைசேரியுடன் நடத்திய கலந்துரையாடலின் போது அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார். ஆனால் அப்போது  திறைசேரியால் சாதகமான பதில் அளிக்க முடியவில்லை. ஆனால் இவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடியின்போது அதற்கு முகம்கொடுக்கும் மக்களில் பிரதானமாக பாதிக்கப்படுவது நிலையான வருமானம் பெறும் அரச ஊழியர்களே என ஜனாதிபதி மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

இதன்படி அரச ஊழியர்களின் சம்பளத்தை கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே பத்தாயிரம் ரூபாவால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகரித்தார். இதனால், திறைசேரியின் மாதாந்தச் செலவு 12 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமானது. ஆனால் சம்பள அதிகரிப்பு போதாது என்பதே ஜனாதிபதியின் கருத்தாகும். 

அத்துடன், அரச சேவையில் சம்பள முரண்பாடு, ஓய்வூதிய வேறுபாடு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகள் அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன. இதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உதய ஆர். செனவிரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷன், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிரன்சா களுதந்திரி, ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ். ஆலோக பண்டார, நிறுவன பணிப்பாளர் நாயகம் எச்.ஏ. சந்தன குமாரசிங்க,  சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வா, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ,  BCS International Technology PTY LTD இன் பிரதம பொது அதிகாரி சந்தி எச். தர்மரத்ன, கொமர்ஷல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (மனித வளங்கள்) இசுரு திலகவர்தன, ஜனாதிபதி மேலதிக செயலாளர் ஜீ.எல். வர்ணன் பெரேரா ஆகியோர் செயற்படுகின்றனர். மேலும், இந்த 10 உறுப்பினர்களில் மூன்று பேர் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இந்தக் குழுவினால் வழங்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. 18 பரிந்துரைகளுக்கு அமைச்சர்கள் குழு அங்கீகாரம் அளித்துள்ளது. அரச சேவையில் நேரடியாக தாக்கம் செலுத்தும் பல முக்கியமான பரிந்துரைகள் அதில் அடங்கியிருந்தன.

அதன்படி, 2025ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி, அரச சேவையின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை இருபத்தைந்தாயிரம் ரூபாவாக அதிகரிப்பது, குறைந்தபட்ச ஆரம்ப மாதச் சம்பளத்தை 24% இல் இருந்து 50% ஆக அதிகரிப்பது, அதன்படி அவர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை ஐம்பத்தைந்தாயிரம் ரூபாவாக அதிகரிப்பது என்பன பிரதான பரிந்துரைகளாக இருந்தன. 

மேலும், இந்த அதிகரிப்பபை வர்த்தக அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தவிர அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அமுல்படுத்த வேண்டும் என்றும், அனைத்து அரசதுறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்திர பங்களிப்பில் ஆயிரம் ரூபாய் கொண்ட முழு மருத்துவ காப்புறுதித் திட்டத்தை செயல்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு சம்பள உயர்வை வழங்குவதன் மூலம் ஓய்வூதியத்தை மீள்திருத்தம் செய்வதும் பரிந்துரைகளில் அடங்கும். இந்த பரிந்துரைகள் அனைத்தும் 2025 வரவுசெலவுத் திட்ட ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இது அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட திட்டமே தவிர வெறும் ஆவணம் அல்ல. இந்த பலன்களைப் பெற மீதமுள்ளது 2025  ஜனவரி 01 ஆம் திகதியாவது ஆகும். மேலும் இது நீண்ட காலத்தின் பின்னர் இந்நாட்டு அரச உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கும் பெரும் நன்மை என்பதைக் கூற வேண்டும். இது தேர்தலை குறிவைத்து நடத்தப்பட்டது என்று யாராவது கூறினால் அது ஆதாரமற்றது என்றே கூற வேண்டும். மிகவும் இக்கட்டான நேரத்திலும் பத்தாயிரம் ரூபாயை வழங்கி அரச ஊழியர்களை நாங்கள் கவனச் செலுத்துகிறோம் என்ற சமிக்ஞையை வழங்கிய அரசாங்கம் இது என்பதையும் விசேடமாக குறிப்பிட வேண்டும்.

இதேவேளை, அரச ஊழியர்களுக்கு நாம் வழங்குகின்ற குறைந்தபட்ச சம்பளமான ஐம்பத்தைந்தாயிரம் ரூபாவிற்கு பதிலாக ஐம்பத்தேழாயிரம் ரூபாவை வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அது ஒரு சாதாரண அரசியல் கதை என்பதைக் கூற வேண்டும்.

தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும், வாழ்க்கைச் செலவுக்கேற்ப 6 மாதங்களுக்கு ஒரு முறை வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என பல இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் வரவு செலவுத்திட்டத்தை  தாக்கல் செய்ய வேண்டிவரும்.

இல்லையெனில், ஒதுக்கீட்டுச் சட்டத்தை மாற்ற வேண்டும். ஆனால் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், நாங்கள் 10,000 ரூபாயை அதிகரித்தபோது, 20,000 ரூபா தருவதாகச் சொன்னார்கள். அதுபற்றி இப்போது எந்தவிதப் பேச்சும் இல்லை.

அரச உத்தியோகத்தர்களுக்கு இந்த நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளையில், அரச சேவையின் வினைத்திறனை அதிகரிப்பது மற்றும் ஆட்சேர்ப்பு முறையை மேலும் வினைத்திறனாக்குவது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம். இது ஆகஸ்ட் 12 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்று அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்து அரச ஊழியர்களுக்கு தீர்மானிக்க முடியும்.’’ என்றார். 

ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சித் தலைவர் கலாநிதி அன்வர் முஸ்தபா

நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தலைவர்கள் பின்வாங்கிய போது தனியொரு நபராக நாட்டைப் பொறுப்பேற்றார். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினார். எதிர்வரும் 5 ஆண்டுகள் அவருக்கு நாட்டைக் கையளிப்பது தார்மீகக் கடமையாகும்.

13 ஆவது திருத்தத்தை செயற்படுத்துவதாக வடக்கில் சஜித் தெரிவித்தார். அவர் கடந்த  காலத்தில் வழங்கிய வாக்குறுகளை நிறைவேற்றாமல் போனது சுமந்திரனுக்கு தெரியும். இருந்தும் அவர் சஜித்தை ஆதரிப்பது வேடிக்கையாகும்.

முழுமையாக 13 ஆவது திருத்தத்தை சஜித்தினால் நிறைவேற்ற முடியுமா? அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன், கிழக்கில் உள்ள தலைவர்கள் அபிவிருத்திப் பணிகளை செய்துள்ளனர். முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிசும் சஜித்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் முஸ்லிங்கள் ஜனாதிபதியின் பக்கமே உள்ளனர்.’’ என்றார்.

https://www.virakesari.lk/article/192878

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது சுமந்திர டீல்...அதாவது எம்.பி யாக்கும் டீல்...தெருக்கூத்து நடத்தும்தமிழ் அமைப்பு பெரும் விலை கொடுக்கவும் தயாராக் இருக்கிறது..இதனை விட இன்னுமொமொரு புது அமைப்பும்தொடங்கப்பட்டிருக்கிறது...இன்னும் சுமன் ஆதரவுப் பெரும் தலைகளும் காத்திருகின் றனர்..கூட வாறவரும் சுமன் விசுவாசி...பாவம் சிறீ .. போகும்போது கோவணத்துடன் 50 பொறின் சரக்கு போத்திலையும் கொண்டுபோய்..  பாரில் போட்டு விற்க வேண்டியதுதான்😎
    • கோஷான், இவர் தலைவரையும் புலிகளையும் கொச்சைப்படுத்த இத்திரியைத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது ஆசாத்திற்கும், பின்புலத்தில் நிற்கும் புட்டினுக்கும் வெள்ளையடிக்க முயல்வது. இரண்டாவது புலிகள் மீதிருக்கும் தனது வக்கிரத்தைக் இத்திரியூடாக வெளியே கொண்டுவருவது.  இவரது பிதற்றல்கள் குறித்து உங்களுக்குத் தெரியாத விடயங்களை நான் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 
    • புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்காகத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொண்டிருந்தவரின் உண்மை முகம் இதன் மூலம் வெளியே தெரிந்திருக்கிறது. சிரியாவின் முன்னாள் கொடுங்கோலனிற்கு புட்டினின் ஆதரவு இல்லாதிருந்தாலோ அல்லது அக்கொடுங்கோலன் மேற்குலகின் நண்பனாக இருந்திருந்தாலோ இந்தப் போலித்தேசியவாதி ஒருபோதுமே ஆசாத் எனும் கொடுங்கோலனை ஆதரித்தோ அல்லது அவனைத் தலைவருடன் ஒரே தராசில் வைத்தோ பார்த்திருக்க மாட்டார் என்பது திண்ணம். ஆக, அவர் ஆசாத்தை ஆதரிப்பதன் ஒரே காரணம் அவன் புட்டினின் நண்பன் என்பது மட்டும்தான். தீவிர மேற்குலக எதிர்ப்புடன் அதே மேற்குலகில் வாழ்ந்துகொண்டு சர்வாதிகாரி புட்டினை வழிபடும் இவர் போன்றவர்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?  புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா? அல்லது அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளின் தலைமையின் பாதுகாப்பிற்கு அச்சசுருத்தலாக இருந்தது என்று இவரே நம்பும் சதிக்கோட்பாட்டிற்கு அப்பால் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் நலனுக்கும் அவர்களின் இருப்பிற்கும் அச்சுருத்தலாக இருந்தன என்பதை இவர் அறிவாரா? இந்தியாவின் பின்புலத்திலிருந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும், அதனை முன்னெடுத்த புலிகளுக்கெதிராகவும் நாசகார சதிகளில் ஈடுபட்ட மாற்று இயக்கத்தவர்களை புலிகள் கொன்றார்கள். இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த‌ இவ்வமைப்புக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு இணைந்து செயலாற்றியதே அவர்களின் தண்டனைகளுக்குக் காரணமாக இருந்தன என்பதை இவர் அறியாரா? இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னரான காலத்திலேயே புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய உளவுத்துறையுடன் டெலொ இணைந்து இயங்கியதே?  டெலோ அமைப்பின் போராளிகளைப் புலிகள் இயக்க மோதல்களில் கொன்றது உண்மை. ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை. சரி, ஆசாத்துடன் தலைவரை ஒப்பிட‌வேண்டிய தேவை என்ன? இந்திய உளவுத்துறையுடனும், இலங்கை அரசுடனும் சேர்ந்தியங்கிய மாற்று இயக்கங்களைப் புலிகள் த‌ண்டித்தார்கள், போராளிகளைக் கொன்றார்கள். இவை எல்லாமே தமிழர்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டவை. தமிழ் மக்களின் நலன்களுக்கெதிராகவும், இருப்பிற்கெதிராகவும் எதிரிகளுடன் சேர்ந்து அவர்கள் செயற்பட்டபோது புலிகளுக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. இதற்குத் தலைவரின் பாதுகாப்பு அச்சுருத்தலே காரணம் என்று இவர் பிதற்றுவது முழுக்க முழுக்க ஆசாத்தையும், பின்னால் நிற்கும் புட்டினையும் நியாயப்படுத்தத்தான் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏனென்றால் இன்று புட்டினும் ஆசாத்தும் செய்வது தமது அதிகாரத்திற்கும், பலத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும், நலன்களுக்கும் எதிராக இருப்பார்கள் என்று தாம் எண்ணுவோரை வகை தொகையின்றி அழிப்பதுதான். இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எவருமே விதிவிலக்கில்லை.   தமிழ் மக்களை புலிகள் அடிமைகளாக ஒருபோதும் நடத்தியதில்லை. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய புலிகளுக்குத் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சதிக்கோட்பாட்டு கற்பனைவாதிதான் விளக்க வேண்டும். ஆனால் ஆசாத் ஒரு சர்வாதிகாரி, தனது இருப்பிற்காக தனது நாட்டு மக்களையே இரசாயணக் குண்டு உட்பட பல கனர ஆயுதங்களைக் கொண்டு கொன்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் மட்டுமே கொல்லப்பட்ட அப்பாவிச் சிரியர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம். இவனது கொலைகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணை வழங்கி வந்தது இன்னொரு சர்வாதிகாரியான புட்டின். ஆக இச்சர்வாதிகரிகளோடு தலைவரை ஒப்பிட்டு இவர் பேசுவதன் ஒரே நோக்கம், தலைவர் மீதும், புலிகள் மீது கறை பூசுவது அல்லது ஆசாத்தைற்கும், புட்டினுக்கும் வெள்ளை அடிக்க முனைவது. இச்சதிக்கோட்பாட்டு கற்பனைவாதியின் கருத்திற்குப் பச்சை குத்தியவர் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விடயம், இப்பச்சை குத்தலுக்கான ஒரே காரணம் ஆசாத்திற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான். இத்தளத்தில் ரஸ்ஸியா ‍- உக்ரேன் மோதல் குறித்த முன்பொரு பதிவில் புலிகளை இந்தியா அழித்தது சரிதான் என்று தனது ரஸ்ஸிய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க இங்கு பச்சை குத்தியவர் வெளிப்படையாகவே எழுதினார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளை இந்தியா அழித்தது சரியானதுதான் என்று கூறியிருந்தார்.  இவர்கள் போன்றோரின் உண்மை முகம் அவப்போது வெளியே வருகிறது. இதைத்தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. 
    • அந்தக் கஞ்சி பழங்கஞ்சியா அல்லது புதுக் கஞ்சியா? உந்தக் க்ஞ்சியில் வெளுத்த  உடுப்பு போட்டு நீற்றாக அயன் செய்ய முடியுமா?  😁
    • பலரை நம்பி ஏமாந்த அனுபவத்தைப் போல சிலரை நம்பாமல் ஏமாறும் சந்தர்ப்பங்ளும் எதிர்காலத்தில் வரலாம். சீமான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் சம்பிரதாயத்திற்கு அதைத் செய்திருக்கலாம்.அவரது ஆதரவாளர்களும் தம்பிமார்களும் இதை விருமபமாட்டார்கள் என்பது உண்மை. இளங்கோவனுக்கு சம்பிரதாயத்துக்கு கூட சீமான் அஞ்சி செலுத்தாமல் விட்டிருந்தால்  எதிர்க்கட்சிகள் விமர்சிக்கலாம்.ஆதரவாளர்களும் கட்சிக்காரர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.மற்றும் வயறு முத்துவின் கவிதையைப்பற்றி அலட்டிக்கொள்ள அவசியமில்லை.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.