Jump to content

“காணாமல்போனதாக 6000 பேர் மாத்திரமே முறைப்பாடு செய்துள்ளனர்” - அலி சப்ரி பேட்டி – மேற்குலகின் முட்டாள்தனம் என விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“தங்கள் உறவுகள் காணாமல்போனதாக 6000 பேர் மாத்திரமே முறைப்பாடு செய்துள்ளனர்” - சர்வதேச ஊடகத்திற்கு அலி சப்ரி பேட்டி – ஒரு இலட்சம் பேர் என உங்களிற்கு யார் சொன்னது என சீற்றம் - மேற்குலகின் முட்டாள்தனம் என விமர்சனம்

Published By: RAJEEBAN   31 AUG, 2024 | 08:26 AM

image
 

2000 ஆண்டு முதல் 2009 வரையில் தங்கள் உறவுகள் காணாமல்போனதாக 6047 பேர்மாத்திரமே  முறைப்பாடு செய்துள்ளனர் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கில் மக்கள் நீதிக்காக காத்திருக்கின்றனர் ஒரு இலட்சம் பேர் வரை - அவர்கள் பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்பட்டமை குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என ஜேர்மனியின் டிடபில்யூவின் செய்தியாளரின் கேள்விக்கு சீற்றத்துடன் பதிலளித்துள்ள அலி சப்ரி உங்களிற்கு எவ்வாறு இந்த எண்ணிக்கை கிடைத்தது. யார் இதனை சொன்னது?

இது வெறும் குப்பை மேற்குலகின் முட்டாள்தனம் என தெரிவித்துள்ளார்.

ali__dw.jpg 

 

கேள்வி:- இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்றதுயுத்த குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் தேவை காணப்படுகின்றது – அது குறித்த பரிந்துரைகள் உள்ளன, உண்மை நல்லிணக்க ஆணைக்குழு குறித்து பேசப்படுகின்றது ஆனால் இலங்கை எப்போதும் அதனை நிராகரித்துள்ளது ஏன்? தமிழ் சமூகத்தினருக்கு அர்த்தபூர்வமான நீதியை வழங்குவது எந்த நிலையில் உள்ளது?

அலிசப்ரி:- நாங்கள் தமிழ் சமூகத்துடன் போர்புரியவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.நாங்கள் உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற  பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக போராடினோம்.

இந்த அமைப்பு இரண்டு தலைவர்களை அழித்தது- ராஜீவ்காந்தி. இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச. பல அமைச்சர்கள் தமிழ் தலைவர்கள்.

இந்த அமைப்பு தற்கொலை குண்டு தாக்குதலில் ஈடுபட்டது300க்கும் மேற்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்களில் ஈடுபட்டது. கடந்த காலங்களில் எவரும் இவ்வாறு செயற்பட்டதில்லை. செய்தது இல்லை.

அவர்கள் 11. 12 வயது சிறுவர்களை பிடித்து இழுத்துச்செல்வார்கள். அவர்களிற்கு சையனைட் வில்லையை வழங்கி தற்கொலை தாக்குதலில் ஈடுபடுத்துவார்கள்.

ஆகவே நாங்கள் அவர்களிற்கு எதிராக போரிடவேண்டும், அவர்களின் செய்கைகளை அனுமதிக்க முடியாது.

சில மேற்குலக நாடுகள் வேறு நாடுகளிற்கு சென்று போரிடுகின்றன, இது எங்களின் ஆட்புல ஒருமைப்பாடு நாங்கள் அதனை செய்யவேண்டும்.

ஆனால் அதன் பின்னர் நாங்கள் சமாதானத்தை  ஏற்படுத்தியுள்ளோம், சரணடைந்த 12000க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளிற்கு புனர்வாழ்வளித்துள்ளோம்..

அவர்கள் எங்கள் சமூகத்தின் ஒரு பகுதியினர்.

நாங்கள் போரிட்டவேளை இராணுவத்திடமிருந்த நிலங்களில் 99 வீதத்தினை நாங்கள் உரியவர்களிடம் - மக்களிடம் கொடுத்துள்ளோம்.

ஆகவே நிறைய விடயங்கள் இடம்பெறுகின்றன.

மேற்குலகில்  வாக்குவங்கி அரசியல் என சொல்லப்படும் ஒன்று உள்ளது

புலம்பெயர் தமிழர்களில் சிலர் அவர்களின் வாக்குகள் முக்கியமானதாக விளங்கும் பகுதிகளில் சென்று குடியேறியுள்ளனர்.

ஆகவே அந்த நாடுகளின் இலங்கை தொடர்பான கொள்கை முற்று முழுதாக இந்த புலம்பெயர் தமிழர்களால் தீர்மானிக்கப்படுகின்றது.

நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் வெளிநாட்டவர்கள் எங்கள் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

நாங்கள் என்ன செய்திருக்கின்றோம்? நாங்கள் காணாமல்போனவர்கள் அலுவலகத்தை அமைத்திருக்கின்றோம்.

missing-person1.jpg

தங்கள் அன்புக்குரியவர்களை காணவில்லை என முறைப்பாடளித்த 6075 பேரில்( 2000  - 2009)5776 பேர் அலுவலகத்தை தொடர்புகொண்டுள்ளனர். அதாவது 96 வீதமானவர்கள் இது இலங்கை அதிகாரிகளின் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. நாங்கள் இந்த விடயத்தில் செயற்படுகின்றோம். அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

நாங்கள் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை  ஏற்படுத்தவுள்ளோம், நாங்கள் அது குறித்து வர்த்தமானியில் அறிவித்துள்ளோம்.

நாங்கள் உள்நாட்டு பொறிமுறையை முன்வைக்கவுள்ளோம், அதன் மூலம் தீர்வை வழங்குவோம்.

நாங்கள் ஏனையவர்கள் வந்து இதற்கு தீர்வை வழங்குவதற்கு அனுமதிக்கப்போவதில்லை.

இலங்கை குறித்து  தங்களின் நிலைப்பாடுகளை முன்வைப்பவர்கள் காசா குறித்த தங்களின் நிலைப்பாட்டை ஆய்வு செய்யவேண்டும்.

காசாவில் என்ன நடக்கின்றது, யார் அவர்களிற்கு இராஜதந்திர பாதுகாப்பை வழங்குகின்றார்கள்? ஆயுதங்களை வெடிமருந்துகளை வழங்குகின்றார்கள்?

 

கேள்வி- ஆனால் நாட்டின் வடக்குகிழக்கை சேர்ந்த மக்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றார்கள்? அவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சம் என தெரிவிக்கப்படுகின்றது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டமை குறித்து அவர்கள் குற்றம்சாட்டுகின்றார்கள்? 

இதற்கு என்ன காரணம்? இந்த விடயம் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழு தேவை? நீதியான விசாரணை தேவை? ஆனால் நீதி நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருகின்றனவே? இதற்கான காரணங்கள் என்ன?

பதில்- உங்களிற்கு எவ்வாறு இந்த எண்ணிக்கை கிடைத்தது. யார் இதனை சொன்னது?

இது வெறும் குப்பை

மேற்குலகின் முட்டாள்தனம்.

கேள்வி:- கடந்த காலங்களில் மனிதர்கள் புதைக்கப்பட்ட பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவே?

பதில்- ஆம் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித புதைகுழிகள்  என்பதை அடிப்படையாக வைத்து ஒரு இலட்சம் என்ற முடிவிற்கு எப்படி வருவீர்கள்?

இதனையே நான் உங்களிற்கு தெரிவித்தேன், நாங்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து ஒரு பொறிமுறையை உருவாக்கியுள்ளோம், அந்த இலக்கங்களை நாங்கள் ஐநாவிடமிருந்தே பெற்றுக்கொண்டோம், செஞ்சிலுவை சங்கத்தின் எண்ணிக்கை இல்லை. அவை அனைத்தின் அடிப்படையிலும் 2000 முதல் 2009 வரை 6407 பேர் மாத்திரமே தங்களின் அன்புக்குரியவர்கள் காணாமல்போயுள்ளனர் என முறைப்பாடு செய்துள்ளனர்.

நீங்கள் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளவேண்டும் இலங்கை படையினரில் 4000 பேர் காணாமல்போயுள்ளனர், அவர்கள் நடவடிக்கைகளின் போது காணாமல்போனவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் மோதலின் போது கொல்லப்பட்டவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் மிகவும் அமைதியான அமைப்பு என கருதுகின்றீர்களா?

கேள்வி - நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை.  யுத்தத்தின் பின்னர் பல பொறிமுறைகள் உருவாக்கப்பட்டன ஏன் இலங்கையால்  எதனையும் சாதிக்க முடியவில்லை என்றே நான் கேட்கின்றேன்?

பதில்- ஒரு இலட்சம் பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்பது மிகவும் தவறான விடயம் 6004 பேர் மாத்திரமே காணாமல்போயுள்ளனர்.

நாங்கள் காணாமல்போனோர் அலுவலகத்தை அமைத்துள்ளோம் 97000 பேர் அந்தஅலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.  நாங்கள் அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.

ஒரே இரவில் இவ்வாறான குழப்பமான பிரச்சினைக்கு எங்களால் தீர்வை வழங்க முடியாது.

 

கேள்வி - ஆனால் 15 வருடங்களாகிவிட்டதே

பதில் -  என்ன 15 வருடங்கள் - நீங்கள் கனடாவை கேளுங்கள் 200 வருடங்களின் பின்னர் தனது சுதேசிய மக்களிடம் மன்னிப்பு கோருகின்றது. நெதர்லாந்து எங்களின் தொல்பொருட்களை 300 வருடங்களின் பின்னர் திருப்பி தந்தது.

15 வருடங்கள் என்பது நீண்ட காலமா? நாங்கள் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.

96 வீதமான நிலத்தை திருப்பி கொடுத்துள்ளோம்? 12917 பேருக்கு புனர்வாழ்வளித்துள்ளோம். முழு உட்கட்டமைப்பையும் உருவாக்கினோம்.

இலங்கை படையினர் 26000 பேரை இழந்தனர். ஆனால் நாங்கள் விடுதலைப்புலிகளின் 12000 உறுப்பினர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவில்லை.

இது அரசியல் மோதல் கைமீறிப்போய் பயங்கரவாத அமைப்பாக மாறியது.

ஏன் அவர்கள் எங்களை ஏனைய விடயங்களை செய்யுமாறு அழுத்தம் கொடுக்கின்றனர்?

sddefault.jpg

 

கேள்வி - நீங்கள் இணைந்து வாழ்வது பற்றி பேசுகின்றீர்கள்? ஆனால் இலங்கையின் பல பகுதிகளிற்கும் சென்ற போது நான் இலங்கையின் தென்பகுதியில் மேற்கில் பல அபிவிருத்திகள் இடம்பெறுவதையும் ஆனால் வடக்கு கிழக்கில் நீங்கள் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் எதனையும் பார்க்கவில்லை  வேலைவாய்ப்பின்மை காணப்படுகின்றது - இரு நாடுகள் போல தோற்றமளிக்கின்றதே?

நில ஆக்கிரமிப்பு குறித்த குற்றச்சாட்டுகளும் காணப்படுகின்றன  - இலங்கையின் கிழக்கில் நான் பல விவசாயிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன் அவர்கள் இராணுவம் முன்னர் இராணுவத்திலிருந்து தற்போது விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு தங்கள் நிலத்தை இராணுவம் வழங்கியுள்ளது என தெரிவித்தார்கள்?

சில விடயங்கள் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளன  இதனை பற்றி என்ன சொல்லவிரும்புகின்றீர்கள்?

பதில்- வடக்குகிழக்கில் அபிவிருத்தி வேகமாக இடம்பெறவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் மொனராகலைக்கு சென்றாலும் இதனையே பார்ப்பீர்கள்.

இது இலாபத்துடன் தொடர்புடைய விடயம் மக்கள் இலாபம் கிடைக்குமா என்ற அடிப்படையிலேயே முதலீடு செய்வார்கள்.

கொழும்பிற்கும் வடக்கு கிழக்கிற்கு  இடையிலான தொலைவு காரணமாகவும் உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாகவும் மக்கள் அங்கு செல்கின்றார்கள் இல்லை.

இதன் காரணமாகவே புலம்பெயர்ந்தவர்கள் இங்கு வந்து முதலீடு செய்யவேண்டும்.

நாங்கள் மீள்சக்திதுறையில் இந்திய முதலீடு குறித்து ஆராய்ந்து வருகின்றோம். திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, காங்கேசன்துறை அபிவிருத்தி இந்தியாவையும் இலங்கையையும் இணைப்பது குறித்தும் ஆராய்கின்றோம். இதன் காரணமாக மக்களின் நடமாட்டங்களை அதிகரித்து அப்பகுதியில் வாழ்க்கை தரத்தை அதிகரிக்கலாம்.

நீஙகள் உங்கள் பயணத்தின் போது வீதிகள் சிறந்த நிலையில் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். பொதுகட்டமைப்பு உள்ளது அரசாங்கத்தினால் அதனை மாத்திரம் செய்ய முடியும்.

நாங்கள் அனைத்தையும் செய்துள்ளோம் அரசாங்க உட்கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளன சிறந்த வீதிகள் உள்ளன. மிக நவீன மருத்துவமனைகள் உள்ளன நாங்கள் பெரும் பணத்தை செலவழித்துள்ளோம். கிளிநொச்சி காங்கேசன்துறையில் மிகச்சிறந்த மருத்துவமனைகளை உருவாக்கி வருகின்றோம்.

பாடசாலைகளை உருவாக்குகின்றோம் இணைய தொடர்புள்ளது அரசாங்கத்தினால் இதனை மாத்திரம் செய்ய முடியும்.

இதற்கு அப்பால் தனியார் துறையே பொறுப்பு அவர்கள் வர்த்தக ரீதியில் இது சாத்தியமான விடயமா என்ற அடிப்படையிலேயே பார்ப்பார்கள். இதன் காரணமாக உலகின் சில நாடுகளில் சிறந்த நிலையில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்தும் தனிநாட்டிற்காக குரல்கொடுப்பதற்கு பதில் இலங்கை மக்களில் ஒரு பகுதியினரை தவறாக வழிநடத்தி மோதலில் ஈடுபடுத்துவதற்கு பதில் இலங்கைக்கு திரும்பி வாருங்கள் இந்த உட்கட்டமைப்பை பாருங்கள் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள் வேலைவாய்ப்பினை உருவாக்குங்கள் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துங்கள்.

 

கேள்வி- டிடபில்யூ இந்த வருடம் விவரணச்சித்திரமொன்றை வெளியிட்டிருந்தது - அதில் சித்திரவதைகளில் ஈடுபட்ட இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகள் குறித்தும்  அவர்கள் ஐநா அமைதிப்படையில் இணைந்து பணியாற்றியமை குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐநா இது பற்றி ஏதாவது குறிப்பிட்டிருந்ததா?

பதில்- உலகில் மிகவும் மதிக்கப்படும் படையணிகளில் இலங்கை இராணுவத்தினரும் உள்ளனர்!

யுத்தத்தின் இறுதியில் விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பொதுமக்களை பயன்படுத்தியவேளை நாங்கள் விடுதலைப்புலிகளை தோற்கடித்தவேளை பொதுமக்கள் இராணுவத்தினரிடமிருந்து தப்பியோடவில்லை படையினரை நோக்கியே ஓடினார்கள்!

பாதுகாப்பு என்பது இலங்கை படையினரின் கரங்களிலேயே கிடைக்கும் என்பது அவர்களிற்கு தெரியும்.

தமிழில் - ரஜீபன்

https://www.virakesari.lk/article/192446

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
https://j.gifs.com/58rYMB.gif

எவ்வளவு தான் கழுவி கழுவி ஊற்றினாலும் துடைத்து விட்டு மறுபடி கடன் கொடுப்பினம் என்று  தெரியும்..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 70 ஆண்டுகளில்.... நடந்த ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாதத்தால், 
நிகழ்ந்த எந்த ஒரு அழிவிற்கும் ஸ்ரீலங்கா அரசால் நீதி வழங்கப் படாது இருக்கும் போது... 
உங்களது அமைப்பையும்,  உங்களையும்  நம்பி காணாமல் ஆக்கப் பட்டவர்களின் 
உறவினர்கள் எப்படி தங்கள் முறைப்பாடுகளை பதிவு செய்வர்.

அதற்காகாகத்தான் தமிழர் தரப்பு  உங்களை நம்பாமல் சர்வதேச விசாரணையை கோருகின்றார்கள்.

அந்த சர்வதேச விசாரணைக்கும் சுமந்திரன் என்பவர்... 
உள்ளக விசாரணையே போதும் என்று சொல்லி அதனையும் வலுவிழக்க செய்துவிட்டு.. 
தமிழருக்காக அரசியல் செய்கின்றேன் என்று ஒரு ஆளாக திரிகின்றார். 

எங்கடையளே பயங்கர சுத்துமாத்து அரசியல் செய்து கொண்டு இருக்கும் போது... 
மற்றவனை நொந்து என்ன பயன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை : அலி சப்ரி தவறாக வழிநடத்த முயல்கின்றார் – அலன் கீனன்

Published By: RAJEEBAN   31 AUG, 2024 | 01:24 PM

image

2000 ஆண்டு முதல் 2009 வரையில் தங்கள் உறவுகள் காணாமல்போனதாக 6047 பேர் மாத்திரமே  முறைப்பாடு செய்துள்ளனர். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருப்பது தவறாக வழிநடத்தும் ஒரு நடவடிக்கையாகும் என சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கை குறித்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்த எண்ணிக்கை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திய வெளிப்படைத் தன்மையற்ற அதிகாரத்துவ பொறிமுறைகளின் புள்ளிவிபரங்களை அடிப்படையாக கொண்டிருக்கலாம்.

2000ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு என்பது 1970களின் பிற்பகுதியில் (இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர்) ஆரம்பித்த அரசாங்கத்திற்கும் தமிழ் போராளிகளிற்கும்  இடையிலான கிளர்ச்சி, கிளர்ச்சி எதிர்ப்பு யுத்தத்தின் ஈவிரக்கமற்ற ஒரு சிறிய காலம் மாத்திரமே.

இந்த காலப்பகுதியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போனார்கள்.

missing_persons_sep.jpg

தங்கள் குடும்பத்தவர்களை காணவில்லை என முறையிட்ட 6047 பேரில் சிலர் அல்லது பலர் குடும்பத்தில் பலரை இழந்திருக்கலாம் எனவே காணாமல்போனவர்களின் எண்ணிக்கை காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகளை விட கணிசமான அளவு அதிகமாகயிருக்கலாம்.

பல தசாப்தங்களாக ஆணையங்கள் குழுக்கள் மற்றும் பல்வேறு பிற தகவல் சேகரிப்பு செயல்முறைகளுக்குப் பிறகு காணாமல் போனவர்களின் பல குடும்பங்கள் சோர்வடைந்துள்ளன சலிப்படைந்துள்ளன கோபமடைந்துள்ளன தாங்களாகவே இறந்துவிட்டன அல்லது போலீஸ் மற்றும் இராணுவத்தால் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன-இதனால் புகார் தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது.

இடதுசாரி சிங்கள ஜேவிபியின் இரண்டு கிளர்ச்சிகளின் போதும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசபடையினர் துணை இராணுவகுழுக்களால் காணாமலாக்கப்பட்டனர் என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இவை குறித்து மிகச்சிறிய எண்ணிக்கையிலான வழக்கு விசாரணைகள் மாத்திரம் இடம்பெற்றுள்ளன சில உண்மைகள் மாத்திரம் வெளிவந்துள்ளன.

நான்கு தசாப்தகால வன்முறைகளின் போது அனைத்து இனங்கள் மதங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரு சிலரின் தலைவிதி குறித்து கூட உத்தியோகபூர்வமான தீர்மானங்கள் எதுவும் வெளியாகவில்லை அரசாங்கம் பொறுப்பேற்கவுமில்லை நீதி வழங்கப்படவுமில்லை.

பல தசாப்தங்களாக உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த வேண்டுகோள்களிற்கு இலங்கை அரசாங்கங்கள் அளித்து வரும் மறுப்பு மற்றும் பொறுப்பை திசைதிருப்பும் பதிலையே இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும் பேட்டியில் வழங்கியுள்ளார்.

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களும் இலங்கையர்களும் இதனை விட சிறந்த பதில்களிற்கு உரித்துடையவர்கள்.

https://www.virakesari.lk/article/192467

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.