Jump to content

புவி வெப்பம் அதிகரிப்பு: உத்தராகண்ட் ஓம் பர்வத மலையில் முதல் முறையாக பனிக்கட்டிகள் மாயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
01 SEP, 2024 | 10:13 AM
image
 

பிதோராகர்: உத்தராகண்ட் ஓம் பர்வத மலைப் பகுதியில் முதல் முறையாக பனிக்கட்டிகள் கடந்த வாரம் முற்றிலும் மாயமானது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தராகண்ட் மாநிலத்தில் வியாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஓம் பர்வத மலை. இதன் வடிவமைப்பு இந்தி எழுத்து ஓம் போல இருப்பதால் இது ஓம் பர்வத மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலை எப்போதும் பனி படர்ந்து காணப்படுவதால், இது பிரபல சுற்றுலாத் தளமாக விளங்கியது.

இந்நிலையில் இந்த ஓம் பர்வதமலை கடந்த வாரம் பனிக்கட்டிகள் முற்றிலும் மாயமாகி வெறும் பாறைகளாக காட்சியளித்தன. இதுபோல் ஓம் பர்வத மலை பனி இல்லாமல் இருந்தது இதுவே முதல் முறை. இது இப்பகுதி மக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளித்தது. இது குறித்து இங்குள்ள குஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ஊர்மிளா சான்வல் கூறுகையில், ‘‘பனி இல்லாமல் ஓம் வடிவிலான இந்த மலையை அடையாளம் காணவே முடியவில்லை’’ என்றார்.

இந்த நிலை தொடர்ந்தால், இப்பகுதியில் சுற்றுலா பாதிக்கப் படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் இங்கு சில நாட்களுக்கு முன் பனிப்பொழிவு ஏற்பட்டதால், ஓம் பர்வத மலையில் மீண்டும் பனித் துகள்களை பார்க்க முடிந்தது. இது இப்பகுதி மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

‘‘இமயமலைப் பகுதியில் கடந்தசில ஆண்டுகளாக மழை மற்றும் பனிப்பொழிவு குறைவால், தற்போது ஓம் பர்வத மலையில் பனித்துகள்கள் முற்றிலும் மறைந்துவிட்டன’’ என கைலாஷ் - மானசரோவர் மற்றும் ஆதி கைலாஷ் யாத்திரைகள் நடத்தும்தன் சிங் கூறுகிறார்.

அல்மோராவில் உள்ள ஜிபி பந்த் இமயமலை சுற்றுச்சூழல் தேசிய மையத்தின் இயக்குநர் சுனில் நாட்டியால் கூறுகையில், ‘‘இமயமலைப் பகுதியில் வாகனங்கள் அதிகரிப்பால் வெப்ப நிலை உயர்வு, புவி வெப்பம் அதிகரிப்பு, காட்டுத் தீ ஆகியவை காரணமாக பனி மறைகிறது’’ என்றார்.

https://www.virakesari.lk/article/192521

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஏராளன் said:
01 SEP, 2024 | 10:13 AM
image
 

பிதோராகர்: உத்தராகண்ட் ஓம் பர்வத மலைப் பகுதியில் முதல் முறையாக பனிக்கட்டிகள் கடந்த வாரம் முற்றிலும் மாயமானது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தராகண்ட் மாநிலத்தில் வியாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஓம் பர்வத மலை. இதன் வடிவமைப்பு இந்தி எழுத்து ஓம் போல இருப்பதால் இது ஓம் பர்வத மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலை எப்போதும் பனி படர்ந்து காணப்படுவதால், இது பிரபல சுற்றுலாத் தளமாக விளங்கியது.

இந்நிலையில் இந்த ஓம் பர்வதமலை கடந்த வாரம் பனிக்கட்டிகள் முற்றிலும் மாயமாகி வெறும் பாறைகளாக காட்சியளித்தன. இதுபோல் ஓம் பர்வத மலை பனி இல்லாமல் இருந்தது இதுவே முதல் முறை. இது இப்பகுதி மக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளித்தது. இது குறித்து இங்குள்ள குஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ஊர்மிளா சான்வல் கூறுகையில், ‘‘பனி இல்லாமல் ஓம் வடிவிலான இந்த மலையை அடையாளம் காணவே முடியவில்லை’’ என்றார்.

இந்த நிலை தொடர்ந்தால், இப்பகுதியில் சுற்றுலா பாதிக்கப் படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் இங்கு சில நாட்களுக்கு முன் பனிப்பொழிவு ஏற்பட்டதால், ஓம் பர்வத மலையில் மீண்டும் பனித் துகள்களை பார்க்க முடிந்தது. இது இப்பகுதி மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

‘‘இமயமலைப் பகுதியில் கடந்தசில ஆண்டுகளாக மழை மற்றும் பனிப்பொழிவு குறைவால், தற்போது ஓம் பர்வத மலையில் பனித்துகள்கள் முற்றிலும் மறைந்துவிட்டன’’ என கைலாஷ் - மானசரோவர் மற்றும் ஆதி கைலாஷ் யாத்திரைகள் நடத்தும்தன் சிங் கூறுகிறார்.

அல்மோராவில் உள்ள ஜிபி பந்த் இமயமலை சுற்றுச்சூழல் தேசிய மையத்தின் இயக்குநர் சுனில் நாட்டியால் கூறுகையில், ‘‘இமயமலைப் பகுதியில் வாகனங்கள் அதிகரிப்பால் வெப்ப நிலை உயர்வு, புவி வெப்பம் அதிகரிப்பு, காட்டுத் தீ ஆகியவை காரணமாக பனி மறைகிறது’’ என்றார்.

https://www.virakesari.lk/article/192521

உலகம் எங்கும் புவி வெப்பம் அதிகரிப்பு பெரும் சிக்கலை கொடுத்துள்ளது.
ஜேர்மனியில் நான் வசிக்கும் இடத்தில்... நேற்று நள்ளிரவு +27 பாகை காட்டியது.
இந்த அளவு வெப்பம் இங்கு நள்ளிரவில் காட்டியதே இல்லை.

பிரச்சினை  என்ன வென்றால்.... குளிரை தாக்குப் பிடிப்பதற்காக, 
வீட்டு வெப்பம் வெளியேறாமல் கட்டப் படும்  இங்குள்ள வீடுகளில்...
காலநிலையின்  வெப்பம் அதிகரிக்கும் போது... வீட்டிற்குள்ளும் மிகுந்த  வெக்கையாக இருக்கும்.
இதனால் நித்தரை கொள்ளவும் முடியாது.

குளிர் நாடு என்ற படியால்.. மின் விசிறியோ, குளிரூட்டியோ பூட்டுவதும் மிக மிக அருமையாக இருக்கும். ஏனென்றால் இப்படியான  வெப்பம் வருடத்தில் ஒரு 15/20 நாட்கள் மட்டுமே  வருவதால்.. வீணாக குளிரூட்டி போன்றவற்றை பொருத்துவது இல்லை.

அத்துடன்... வயோதிபர்கள், இருதய பிரச்சினை உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படும்.
எமது வீட்டிற்கு அருகில்... இரண்டு முதியோர் இல்லங்கள் உள்ளன.
நேற்றைய வெப்ப நிலைக்கு... ஒரு முப்பது தரமாவது அவசர மருத்துவ வண்டி (அம்புலன்ஸ்)  வந்து போனது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2024 at 03:56, தமிழ் சிறி said:

உலகம் எங்கும் புவி வெப்பம் அதிகரிப்பு பெரும் சிக்கலை கொடுத்துள்ளது.
ஜேர்மனியில் நான் வசிக்கும் இடத்தில்... நேற்று நள்ளிரவு +27 பாகை காட்டியது.
இந்த அளவு வெப்பம் இங்கு நள்ளிரவில் காட்டியதே இல்லை.

பிரச்சினை  என்ன வென்றால்.... குளிரை தாக்குப் பிடிப்பதற்காக, 
வீட்டு வெப்பம் வெளியேறாமல் கட்டப் படும்  இங்குள்ள வீடுகளில்...
காலநிலையின்  வெப்பம் அதிகரிக்கும் போது... வீட்டிற்குள்ளும் மிகுந்த  வெக்கையாக இருக்கும்.
இதனால் நித்தரை கொள்ளவும் முடியாது.

குளிர் நாடு என்ற படியால்.. மின் விசிறியோ, குளிரூட்டியோ பூட்டுவதும் மிக மிக அருமையாக இருக்கும். ஏனென்றால் இப்படியான  வெப்பம் வருடத்தில் ஒரு 15/20 நாட்கள் மட்டுமே  வருவதால்.. வீணாக குளிரூட்டி போன்றவற்றை பொருத்துவது இல்லை.

அத்துடன்... வயோதிபர்கள், இருதய பிரச்சினை உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படும்.
எமது வீட்டிற்கு அருகில்... இரண்டு முதியோர் இல்லங்கள் உள்ளன.
நேற்றைய வெப்ப நிலைக்கு... ஒரு முப்பது தரமாவது அவசர மருத்துவ வண்டி (அம்புலன்ஸ்)  வந்து போனது.

Canada  உங்களை அன்புடன் வரவேற்கிறது. 

(நான்  பொல்லுடன் காத்திருக்கின்றேன் 😀)

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

Canada  உங்களை அன்புடன் வரவேற்கிறது. 

(நான்  பொல்லுடன் காத்திருக்கின்றேன் 😀)

புலி... பசித்தாலும், புல்லை தின்னாது. 😂
நான்... ஜேர்மனியிலேயே இருந்து விட்டு போகின்றேன்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

Canada  உங்களை அன்புடன் வரவேற்கிறது. 

(நான்  பொல்லுடன் காத்திருக்கின்றேன் 😀)

சிறி கவனம், இவரின் இந்த வார்த்தை எனக்கு பயமாக இருக்கு, பின்னுக்கு கஷ்டபடுவியல்

6 minutes ago, தமிழ் சிறி said:

புலி... பசித்தாலும், புல்லை தின்னாது. 😂
நான்... ஜேர்மனியிலேயே இருந்து விட்டு போகின்றேன்.  🤣

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

சிறி கவனம், இவரின் இந்த வார்த்தை எனக்கு பயமாக இருக்கு, பின்னுக்கு கஷ்டபடுவியல்

உடையார்... கபிதனை  நம்பி, கனடா போக எனக்கு என்ன விசரே. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, உடையார் said:

சிறி கவனம், இவரின் இந்த வார்த்தை எனக்கு பயமாக இருக்கு, பின்னுக்கு கஷ்டபடுவியல்

 

nayan-thara-nilambari.gif

உடையார் உங்களின் ஸ்டையிலும் குசும்பும் உங்களை விட்டுப் போகல .......!  😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

Canada  உங்களை அன்புடன் வரவேற்கிறது. 

(நான்  பொல்லுடன் காத்திருக்கின்றேன் 😀)

லண்டன் தான் வாகன நெரிச்சல் கவலைப்படுவது உங்க நாட்டுக்கு வந்தபின் லண்டன் சொர்க்கமா தெரியுது .டொரண்டோ மோட்டர்வேயில் கூட நித்திரை கொள்ளும் அளவுக்கு வாகன நெரிச்சல் .

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

புலி... பசித்தாலும், புல்லை தின்னாது. 😂
நான்... ஜேர்மனியிலேயே இருந்து விட்டு போகின்றேன்.  🤣

புடினின் அணுக்குண்டுக்கு ரெடியாகுங்கோ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெல்பேர்ன் அப்பிடீன்னு சொல்லி ஒரு ஷேஸ்திரம் இருக்கு கண்டியளோ , அம்சமா இருக்கு ..
20 வரியம் பிரிஸ்பேன் எனப்படும் யாழ் சூழ்நிலை உள்ள இடத்தில் இருந்து விட்டு , என்ன தான் இங்கே இருக்கு என்று பார்த்து விடலாமே  என்று மாறியிருக்கிறேன் .
மாறின கையோட , இளவேனிலில் பிரிஸ்பேன் தேசம் 35 பாகை செல்ஷியஸில் வரு வரு எண்டு வறுபட     மெல்பேர்ன் 10 - 20 பாகை இளமையில்   தழுவிச் செல்கிறது ...😊

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, சாமானியன் said:

மெல்பேர்ன் அப்பிடீன்னு சொல்லி ஒரு ஷேஸ்திரம் இருக்கு கண்டியளோ , அம்சமா இருக்கு ..
20 வரியம் பிரிஸ்பேன் எனப்படும் யாழ் சூழ்நிலை உள்ள இடத்தில் இருந்து விட்டு , என்ன தான் இங்கே இருக்கு என்று பார்த்து விடலாமே  என்று மாறியிருக்கிறேன் .
மாறின கையோட , இளவேனிலில் பிரிஸ்பேன் தேசம் 35 பாகை செல்ஷியஸில் வரு வரு எண்டு வறுபட     மெல்பேர்ன் 10 - 20 பாகை இளமையில்   தழுவிச் செல்கிறது ...😊

பாவி போற இடமெல்லாம்... பள்ளமும், திட்டியும் என்று பெரியவங்க சொல்வாய்ங்க. 😂

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்ப் பொது வேட்பாளர்  ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார் - வட, கிழக்கு நீதிக்கும் சமாதானத்திற்குமான குருக்கள் ஒன்றியம் Published By: DIGITAL DESK 3   15 SEP, 2024 | 10:21 AM (எம்.நியூட்டன்) தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார் எனவே அவரையே தமிழ்மக்கள் தெரிவு செய்யவேண்டும் என வடக்கு கிழக்கு நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு நாடு தயாராகிக்கொண்டு இருக்கின்றது. இச் ஜனாதிபதி தேர்தல் பற்றிய அல்லது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய அரசியல் அறிவு, அவர்களது தனி- கூட்டு அரசியல் இறந்தகால வரலாற்றுடன்தான் எமக்கு முன்னுள்ள தெரிவாக முன்வைக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய தேவையில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் உள்ள சட்டகத்திற்குள் இருந்தே நடாத்தப்படுகின்றது என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியாது. தற்போதுள்ள சனநாயக முறைமை எண்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது என்ற உண்மை பொது அறிவுக்குட்பட்டது. வாக்குகளின் எண்ணிக்கையை மையப்படுத்திய ஜனாதிபதி ஜனநாயக தெரிவில் ஈழத்தமிழ் மக்களுடையதும் ஏனைய சிறுபான்மை இனக் குழுக்களினதும் வாக்குகள் செல்வாக்கு செலுத்துவது வரையறுக்கப்பட்டுள்ளது.  தெற்கிலிருந்து சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரச்சார மேடைகளை அலங்கரிக்கின்றார்கள்.  ஈழத்தமிழ் மக்களுடைய கூட்டு அரசியல் வேணாவாவையும் தமிழின அழிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசியல் கோட்பாட்டுச் சூழலில் தெற்கில் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுபட்டிருக்கின்றார்கள்.  அதேநேரத்தில் தமிழின அழிப்பில் நீதி கோருவதை மறுப்பதோடல்லாமல் ஸ்ரீலங்காவின் படைக் கட்டுமானம் சிங்கள தேச விடுதலைக் கட்டுமானத்தில் ஆற்றிய பங்களிப்பை கதாநாயக சொல்லாடலுக் கூடாகவே கட்டமைக்கின்றார்கள். தமிழர் தாயகம் தொடர்ந்து ஈழ தமிழ்த்தேசிய நீக்கத்துக்குள் வலிந்து தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இது வெவ்வேறு வடிவங்களை/பரிமாணங்களை கொண்டுள்ளது. உதாரணமாக, ஈழத்தமிழர் ஒருங்கிணைந்த தாயகத்தை துண்டாடல், தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கச் செறிவை அதிகரித்தல், ஈழத்தமிழர் தாயகம் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உட்பட்ட தேசமாகவே உள்ளது. ஈழத்தமிழர் நிலங்கள் வலிந்து பறிக்கப்படுகின்றன.  சிங்கள மயமாக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் ஈழத்தமிழர் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறான அரசியல் சூழமைவில் அரசியல் அறத் தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக நமக்குமுன் நிறுத்தப்பட்டுள்ளார். இம்முக்கியமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் தெரிவு, ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும் என்பது எமது ஆழமான நம்பிக்கை என்றுள்ளது. https://www.virakesari.lk/article/193690
    • இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடக்க இன்னும் ஒரு கிழமை உள்ள நிலையில்.... ஸ்ரீலங்காவின் ஆணழகன் யார்.... என நடக்கும் போட்டி. 😂
    • 15 SEP, 2024 | 10:20 AM ராமேசுவரம்: விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 27-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். சிறை தண்டனைக்குப்பின் இவர்களின் வழக்கு கடந்த 5-ம் தேதி மன்னார் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் இன்னாசி, ராஜா, சசிக்குமார், மாரி கிங்ஸ்டன், மெக்கான்ஷ் ஆகிய 5 மீனவர்களை விடுதலை செய்ததுடன், தலா ரூ.50 ஆயிரம் அபதாரம் செலுத்தவும் உத்தரவிட்டார். மேலும் கணேசன, சேசு, அடைக்கலம் ஆகிய 3 மீனவர்கள் இரண்டாவது முறையாக எல்லைதாண்டி வந்ததாக கூறி ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், அவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபதாரமும் கட்ட உத்தரவிட்டார். இதனையடுத்து 3 மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கு உறவினர்கள் கடன் வாங்கி 7-ம் தேதி பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் 6-ம் தேதி அபராததொகை செலுத்த வில்லை என சிறைத் துறையினர் அவர்களை கைவிலங்கிட்டு மொட்டை அடித்தும், இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து, வளாகத்திலுள்ள கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்து கொடுமைப் படுத்தியதாகவும், சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.   பின்னர் 5 மீனவர்களும் (செப்.13) காலை மெர்ஹானா முகாமில் இருந்து விமான மூலம் இரவு சென்னை வந்தடைந்ததாக கூறினர். மீனவர்கள் இன்று  பகல் 1 மணியளவில் சொந்த ஊரான தங்கச்சிமடத்துக்கு வந்து சேர்ந்தனர். மீனவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு வந்ததை கண்ட அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் தொடர் அத்துமீறல் மற்றும் மனித நேயமற்ற செயலை கண்டித்தும், மத்திய அரசு மீனவர்கள் பிரச்சனையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மீனவ சங்க நிர்வாகிகள் ஜேசுராஜா, எமரிட் மற்றும் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மீனவர் சங்க தலைவர் எமரிட் கூறும்போது, “மொட்டை அடிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள் தான் என எண்ண வேண்டாம், எங்களுடைய வரிப்பணத்தில் வாழும் இலங்கை அரசு எங்கள் மீனவர்களை மொட்டை அடித்து மனித நேயமற்ற அரக்கர்களாக கொடுமைப்படுத்தி உள்ளனர். மத்திய அரசு இதையும் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. இது இந்தியாவை அவமானப்படுத்தியதாகத் தான் நாங்கள் கருதுகிறோம். ஆகவே, இதுவரை இலங்கை கடற்படை எங்களை அடித்து கொடுமைப்படுத்தியது, படகுகளை சிறை பிடித்தது, அதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இனிமேலும் இவ்வாறான மனிதநேயமற்ற செயலை பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஆகவே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்களை தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கும் எதிராகவும் நடத்துவோம்” என்றார். https://www.virakesari.lk/article/193719
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் விவாதிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று பிரிட்டன் பிரதமர் கூறினார் கட்டுரை தகவல் எழுதியவர், மாலு கர்சீனோ பதவி, பிபிசி செய்திகள் 14 செப்டெம்பர் 2024 சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்யாவிற்குள் ஊடுருவி அதன் உள்புற இலக்குகளைத் தாக்குவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த யுக்ரேனை அனுமதிப்பது குறித்து சர் கியர் ஸ்டார்மர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. யுக்ரேன் குறித்து ஒரு உத்தியில் கவனம் செலுத்துவது குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமாக கலந்துரையாடியதாக சர் கியர் ஸ்டாமர் கூறினார். "இரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து ஆழ்ந்த கவலையை" வெளிப்படுத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரானில் தயாரிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தி யுக்ரேன் முழுவதும் இரவோடு இரவாக ரஷ்யா தாக்கியது என்றும், தனது நாட்டு மக்களை பாதுகாக்க யுக்ரேனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் தேவை என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அன்று தெரிவித்தார். "இதற்காக நாங்கள் அனைத்து நட்பு நாடுகளுடனும் ஆலோசித்து வருகிறோம்", என்று அவர் கூறியிருந்தார். வெள்ளை மாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பாக, ரஷ்யா மீது யுக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்க அனுமதிக்க வேண்டாம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இத்தகைய நடவடிக்கைகள் ரஷ்யா - யுக்ரேன் போரில் நேட்டோ நாடுகளின் "நேரடி பங்கேற்பை" குறிக்கும் விதமாக இருக்கும் என்று புதின் கூறினார்.   "புதினின் அச்சுறுத்தல்களை மீறி ரஷ்யாவில் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்க யுக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் அனுமதி அளிக்க வேண்டும். வெறும் பேச்சுவார்த்தைகள் மட்டும் நடத்துவது ரஷ்ய அதிபருக்கு நன்மை பயப்பதாக இருக்கின்றது" என்று பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சர் பென் வாலஸ் பிபிசி ரேடியோ 4-இன் டுடே நிகழ்ச்சியில் கூறினார். "இது மற்றொரு விஷயம் சார்ந்த இன்னொரு இழுபறியாக இருப்பதால் நான் ஏமாற்றமடைகிறேன்", என்று மேலும் அவர் தெரிவித்தார். சர் பென் வாலஸ், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஆவார். மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளை தடுக்கவே புதின் இவ்வாறு எச்சரிக்கை விடுப்பதாக யுக்ரேன் பேச்சுவார்த்தைகளுக்கான முன்னாள் அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி கர்ட் வோல்கர் கூறினார். "இதுகுறித்து நாங்கள் நடவடிக்கை எடுப்பதை தடுக்கவே புதின் இவ்வாறு கருத்து தெரிவித்து வருகிறார். அவர் உண்மையில் என்ன செய்யப் போகிறார் அல்லது என்ன செய்ய நினைக்கிறார் என்பது இதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை", என்று அவர் டுடே நிகழ்ச்சியில் கூறினார். வெள்ளை மாளிகையில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமரை சந்திப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "விளாதிமிர் புதினைப் பற்றி நான் அதிகம் நினைப்பதில்லை", என்று கூறினார். ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளை நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்க அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் இன்று வரை யுக்ரேனுக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், ரஷ்யா- யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழி இதுதான் என்றும், இதற்காக இந்த ஏவுகணைகளை பயன்படுத்த யுக்ரேனுக்கு அனுமதி வழங்குமாறும் மேற்கத்திய நட்பு நாடுகளிடம் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.   படக்குறிப்பு, நீண்ட தூர ஏவுகணை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் யுக்ரேன் மீது ரஷ்யா முழு வீச்சில் படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து, யுக்ரேன் மீது ரஷ்யா தினசரி குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தி வருகிறது. யுக்ரேனின் இராணுவ நிலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், எரிசக்தி வசதிகள் மற்றும் மருத்துவமனைகளைத் தாக்கும் பல ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் ரஷ்யாவால் ஏவப்படுகின்றன. இந்தத் தாக்குதல்களை நடத்த ரஷ்யா பயன்படுத்தும் தளங்களைத் தாக்க தங்களை அனுமதிக்காதது தங்களது தற்காப்புத் திறனைத் தடுக்கிறது என்று யுக்ரேன் கூறுகின்றது. கடந்த மாதம் யுக்ரேன் படைகள் ரஷ்ய எல்லையைத் தாண்டி திடீர் தாக்குதலை மேற்கொண்டன. இதனை தொடர்ந்து பிரிட்டன் வழங்கிய ஆயுதங்களை யுக்ரேன் 'தற்காப்புக்காக' பயன்படுத்த முழு உரிமை அந்நாட்டிற்கு இருப்பதாகவும், 'ரஷ்யாவிற்குள் இதனை பயன்படுத்தினால் தடுக்க மாட்டோம்' என்றும் பிரிட்டன் கூறியது. அமெரிக்கா இந்த ஆண்டின் தொடக்கத்தில் யுக்ரேனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கியது, ஆனால் இவற்றின் மூலம் ரஷ்யாவின் உள்புற இலக்குகளைத் தாக்க அனுமதி வழங்கப்படவில்லை. நேட்டோ நாடுகளுடன் நேரடி போர் ஏற்படும் சாத்தியம் உண்டாகும் என்ற ரஷ்ய அதிபர் புதினின் அச்சுறுத்தல்களால் அவர் பயமுறுத்தப்பட்டாரா என்று பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "யுக்ரேன் போரில் 'விரைவான தீர்வுக்கான வழி' என்பது 'புதின் உண்மையில் என்ன செய்கிறார்' என்பதில் தான் இருக்கிறது", என்று கூறினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான வெள்ளை மாளிகை சந்திப்பில் யுக்ரேன் குறித்து குறிப்பிட்ட படிநிலை அல்லது செயல்முறை பற்றி அல்லாமல் ஒரு உத்தி குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பாக இருந்தது என்று சர் கியர் ஸ்டார்மர் கூறினார். இஸ்ரேல்-காஸா இடையே நீடிக்கும் போர் குறித்தும் மத்திய கிழக்கு நிலவரம் குறித்தும் இருவரும் பேசியதாக அவர் தெரிவித்தார். அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி பேசுகையில், "ரஷ்ய பகுதிகளை தாக்குவதற்கு அமெரிக்க ஆயுதங்களை யுக்ரேன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள வரம்புகளில் எந்த மாற்றத்தை கொண்டு வர திட்டமிடவில்லை" என்றார்.   பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்று, பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் 6 பேரை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி ரஷ்யா வெளியேற்றியது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் "முற்றிலும் ஆதாரமற்றவை" என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அலுவலகம் நிராகரித்தது. பிரிட்டனில் புதிதாக பதவி ஏற்ற தொழிலாளர் கட்சி அரசாங்கத்தையும், மாற இருக்கும் பைடனின் நிர்வாகத்தையும் சோதிப்பதற்காகவே புதின் இவ்வாறு செய்கிறார் என்று பிரிட்டன் பாதுகாப்பு ஆய்வாளர் ஜஸ்டின் க்ரம்ப் பிபிசி-க்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். "ரஷ்யா ஏற்கனவே பிரிட்டனின் எதிரிகளுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளது. நேட்டோ உறுப்பினர்களின் நலன்களுக்கு எதிராக நாசவேலை, உளவு, அழிவு மற்றும் தகவல்/சைபர் சார்ந்த நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டு வருகின்றது". "இவை அனைத்தும் விரைவுபடுத்தப்படலாம். யுக்ரேனை எதிர்த்து ரஷ்யா போரிடுவதை கருத்தில் கொண்டு பார்க்கும் போது நேட்டோ நாடுகளுக்கு எதிராக போராட்டத்தை தொடுப்பது ரஷ்யாவிற்கு சவாலானதாக இருக்கலாம்", என்று அவர் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமையன்று, ரஷ்ய ஊடகமான RT-க்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்தது. இது "ரஷ்யாவின் உளவுத்துறை அமைப்புடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கிறது" என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. "ரஷ்ய ஊடகமான RT, அமெரிக்காவில் ஜனநாயகத்திற்கு குழிபறிக்க இரகசியமாக முயன்று வருகின்றது", என்று உயர்மட்ட அமெரிக்க அதிகாரியான ஆண்டனி பிளிங்கன் கூறினார். அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த RT செய்தி ஆசிரியர் மார்கரிட்டா சிமோன்யான், "RT ஊழியர்கள் பலரும் அமெரிக்காவில், அந்நாட்டின் உதவித்தொகை பெற்று படித்தவர்கள்" என்று கூறியுள்ளார். இவர் மீதும் அமெரிக்கா கடந்த வாரம் தடை விதித்துள்ளது. ரஷ்யா மீது அடுத்தடுத்து பல தடைகளை அமெரிக்கா விதித்து வருவது குறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மரியா ஸக்கரோவா, ரஷ்யா மீது தடைகளை விதிக்கும் நிபுணத்துவம் பெறும் புதிய வேலை அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0lw893jrzxo
    • நான் அறிந்தவரையில், வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊரில் உள்ள காணிகளை விற்றுப் பணம் பார்ப்பதில்தான் அதிகம் நாட்டம் காட்டுகிறார்கள். இந்தக் கனடாக்காரர் வித்தியாசமாக இருக்கிறார். அவர் காணியை வாங்கி இருந்தாலும் நாளைக்கு யாரோ ஆட்டையைப் போடத்தானே போகிறார்கள். என்ன விசயம் கொஞ்சம் முன்னாடியே நடந்திருக்கு.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.