Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அமெரிக்க ஜோர்ஜிஜா மாநிலத்தில் உயர்தர பாடசாலையில் துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

ஒன்பது படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

14 வயது மாணவனே துப்பாக்கி சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது.

கோடைகால விடுமுறை முடிந்து இன்று தான் பல பாடசாலைகள் தொடங்கியது.

பாடசாலை எப்போது தொடங்கும் என்று காத்திருந்திருக்கிறார்.

https://www.cnn.com/us/live-news/apalachee-high-school-shooting-georgia-09-04-24/index.html

fd8ddac5-9f81-472a-842f-d0f0cc45d836.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்க ஜோர்ஜிஜா மாநிலத்தில் உயர்தர பாடசாலையில் துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

ஒன்பது படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

14 வயது மாணவனே துப்பாக்கி சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்தா மேசையில அடிச்சு சொல்லுறன்....😄
14 வயது பொடியன் மனநலம் குன்றியவன் எண்டு வாற கிழமை தீர்ப்பு வரும் பாருங்கோ...😎

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொல்லப்பவர்களில் இரண்டு ஆசிரியர்களும்

இரண்டு மாணவர்களும் அடங்குவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2024’ம் ஆண்டு ஆரம்பித்து இதுவரை 378 பாரிய துப்பாக்கி சூடுகள் அமெரிக்காவில் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி வைத்திருக்கும் அனுமதியை கடுமையாக்காவிடில் இது தொடர் கதைதான்.

14 வயது சிறுவனின் கைக்கு துப்பாக்கி சென்றதை இட்டு… பெற்றோர் வெட்கப் படவேண்டும். அவர்களும் இக்கொலையின் பங்காளிகள் என்ற முறையில் கடுமையான தண்டனை வழங்கப் படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - 14வயது சிறுவன் கைது

05 SEP, 2024 | 06:26 AM
image

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் இரண்டு ஆசிரியர்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 14 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

பரோ கவுண்டியின் வின்டெரில் உள்ள அப்பலச்சீ பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை வளாகத்தில் உள்ள அதிகாரிகள் அந்த சிறுவனை கைதுசெய்துள்ளனர்.

குறிப்பிட்ட சிறுவன் பாடசாலையில் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொள்வது எவ்வாறு என இணையத்தில் தேடியமை தொடர்பில் 2023 இல் எவ்பிஐயினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

1900 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையிலேயே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

ஒரிரு நிமிடங்களில் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்து சேர்ந்துவிட்டனர், பாடசாலைக்கு என நியமிக்கப்பட்ட இரண்டு உத்தியோகத்தர்களும்  அங்கு காணப்பட்டனர். அவர்கள் உடனடியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சிறுவனை எதிர்கொண்டனர் என ஷெரீவ் தெரிவித்துள்ளார்.

அந்த சிறுவன் உடனடியாக சரணடைந்தான் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/192882

  • கருத்துக்கள உறவுகள்
Posted

school-fe.jpg?resize=631,337

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின், ஜோர்ஜியா மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நிலை பாடசாலையில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறார்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில், அப்பலாஜி என்ற இடத்தில் அமைந்துள்ள உயர்நிலைப் பாடசாலையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 14 வயதுடைய கொல்ட் க்ரே எனும் மாணவன் என ஜோர்ஜியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நடத்திய தாக்குதலில் இரண்டு மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். அந்தவகையில், 14 வயதுடைய மேஷன் செமர்ஹோர்ன், 14 வயதுடைய கிறிஸ்டியன் எங்குலு, 39 வயதுடைய ரிச்சட் எஸ்பின்வால், மற்றும் 53 வயதுடைய கிறிஸ்டினா இரிமி ஆகியோரே இதில் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்தத் தாக்குதலில் 9 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை அடுத்து குறித்த பாடசாலையின் பாதுகாப்பை பலப்படுத்திய பொலிஸார், அங்கிருந்து மாணவர்களை விரைவாக வெளியேற்றியதோடு, துப்பாக்கி தாரியையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் தொடர்ச்சியாக பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் கலாசாரம் தொடர்ந்து வரும் நிலையிலேயே, இந்தத் தாக்குதலும் இடம்பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்காவின் 45 பாடசாலைகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஆனால், இந்த சம்பவமே மிகவும் மோசமானது என்றும் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜோர்ஜியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை அமெரிக்காவில் 385 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு, 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1398303

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

2024’ம் ஆண்டு ஆரம்பித்து இதுவரை 378 பாரிய துப்பாக்கி சூடுகள் அமெரிக்காவில் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி வைத்திருக்கும் அனுமதியை கடுமையாக்காவிடில் இது தொடர் கதைதான்.

14 வயது சிறுவனின் கைக்கு துப்பாக்கி சென்றதை இட்டு… பெற்றோர் வெட்கப் படவேண்டும். அவர்களும் இக்கொலையின் பங்காளிகள் என்ற முறையில் கடுமையான தண்டனை வழங்கப் படவேண்டும்.

பெரியவருக்கு காதுக்குள் போட்டும் இன்னும் துப்பாக்கி கலாசாரத்தை குறைக்கவே மாட்டாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

How school shootings so far this year compare to the same point in past years

As of September 4 – the 248th day of the year – there have been 45 school shootings in the United States in 2024. Light purple indicates the number that had occurred by the 248th day of each year.

Annual school shootings

Bar chart showing the annual number of school shootings since 2008.
2008
 
 
18
2009
 
 
22
2010
 
 
13
2011
 
 
15
2012
 
 
13
2013
 
 
26
2014
 
 
36
2015
 
 
37
2016
 
 
51
2017
 
 
42
2018
 
 
44
2019
 
 
52
2020
 
 
22
2021
 
 
73
2022
 
 
79
2023
 
 
82
2024
 
 
45
Note: CNN reviewed incidents reported by the Gun Violence Archive, Everytown, and Education Week.
Source: CNN school shootings databaseGraphic: Alex Leeds Matthews, CNN

ஒவ்வொரு வருடமும் துப்பாக்கி சூடு நடக்கிறது.

எத்தனை பேர் இறக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                       ஜார்ஜியா புலனாய்வுப் பணியகத்தின்படி, அபலாச்சி உயர்நிலைப் பள்ளி துப்பாக்கிச் சூடு சந்தேக நபரின் தந்தை தனது மகனிடம் ஆயுதம் வைத்திருக்க "தெரிந்தே அனுமதித்ததற்காக" கைது செய்யப்பட்டுள்ளார்.

                       கொலின் கிரே மீது நான்கு தன்னிச்சையான ஆணவக் கொலைகள், இரண்டு இரண்டாம் நிலை கொலைகள் மற்றும் எட்டு குழந்தைகளைக் கொடுமைப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

                     இரண்டு சட்ட அமலாக்க ஆதாரங்களின்படி, டிசம்பர் 2023 இல் தனது மகனுக்கு விடுமுறை பரிசாக இரண்டு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு மாணவர்களைக் கொன்றதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை தான் வாங்கியதாக கிரே புலனாய்வாளர்களிடம் கூறினார்.

                       அவரது 14 வயது மகன் புலனாய்வாளர்களிடம் விசாரிக்கும் போது "நான் அதை செய்தேன்" என்று கூறினார், பாரோ கவுண்டி ஷெரிப் CNN இடம் கூறினார்.

https://www.cnn.com/us/live-news/apalachee-school-shooting-georgia-09-05-24/index.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காது கேட்குதோ தெரியாது தானே..🤔

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.