Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

jai-shankar.jpg?resize=750,375&ssl=1

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து.

ரஷ்யா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் மோடியின் ரஷ்யா, உக்ரைன் பயணத்துக்கு பிறகு புடின் இந்தக் கருத்தை தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.

இரு நாட்டு தலைவர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.

இந்நிலையில், ஜெர்மனியில் நடந்த வெளியுறவு அலுவலகத்தின் தூதர்கள் மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கருத்து தெரிவித்தார்.

அதற்கமைய , இந்த மோதல் போர்க்களத்தில் தீர்க்கப்படும் என நினைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கும். பேச்சுவார்த்தை நடக்கும்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் அந்தப் பேச்சுவார்த்தையில் இருக்கவேண்டும்.

போர்க்களத்தில் இருந்து நீங்கள் ஒரு தீர்வைப் பெறப் போகிறீர்கள் என நாங்கள் நினைக்கவில்லை. நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.

உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால், நாங்கள் எப்போதும் அதை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1398876

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரஸ்சிய உக்கிரேன் போர் முடிவுக்கு வருவதற்கான சாத்திய கூறுகள் குறைவாகவே இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

அமெரிக்க வெளியுறவுச்செயலர் உக்கிரேனிற்கு சென்று  செலன்ஸ்கியுடன் பேச உள்ளதாகவும் அதில்  இரஸ்ஸியாவிற்குள் நீண்ட தூர ஏவுகணைகள் பயன்பாடு தொடர்பாக பேச உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் இரஸ்சியாவிற்கெதிரான போரினை உக்கிரேனின் இறையாண்மையினை பேன அதற்கான ஆயுத ஆளணி வசதிகள் செய்வதனை விடுத்து  இரஸ்சியாவினை கோபமூட்டுவதன் மூலம் ஒரு அணுவாயுத போர் ஆபாய நாடாகக்காட்டுவதன் மூலம் எதோ ஒரு அணுகூலத்தினை பெற முயல்வது போல தோன்றுகிறது.

தற்போது போலந்தினால் பயிற்றுவிக்கப்படும் உக்கிரேனிய அகதிகளை கொண்ட படையணி ஒரு இலகு காலாற்படைக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது மற்றும் போலந்தின் இலகு காலாற்படைக்கான ஆயுத தளபாடங்கள் என்பன  மீண்டும் ஒரு கேர்ஸ்க்  போன்ற வேறு தாக்குதல்களை மனதில் வைத்து மேற்கொள்ளப்படுகிறதோ எனும் சந்தேகம் ஏற்படுகிறது.

அதே போல் பிரான்ஸினால் பயிற்றுவிக்கப்படும் படையணி கனரக படைப்பிரிவாக பயிற்றுவிக்கப்பட்டு அதற்குரிய பிரான்ஸ் ஆயுதங்களும்  வழங்கப்படும் என கூறப்படுகிறது, அத்துடன் கிழக்கு உக்கிரேனில் உக்கிரேன் நிலைகள் தொடராக வீழ்ந்து வருகின்ற  நிலையிலும் உக்கிரேன் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதற்கு கூறப்படும் ஒரு காரணம் உக்கிரேனிடம் 5 பிரிகேட் படையினர் தயார்நிலையில் இருக்கலாம் என கருதிகிறார்கள், இருந்தும் அவற்றினை கிழக்கு போர் முனையில் பயன்படுத்தப்படவில்லை என கருதுகிறேன்.

இவற்றினை எல்லாம் பார்க்கும் போது இரஸ்சியாவிற்குள் நீண்ட தூர  ஏவுகணை பயன்பாடு, மற்றும் கேர்ஸ்க் போன்ற தாக்குதல்கள் வேறு முனகளினூடாக சம நேரத்தில் மேற்கொண்டு இரஸ்சியாவினை அச்சநிலைக்கு கொண்டு வர முயற்சிப்பதன் மூலம் ஏதேனும் இலக்குகளை அடைய மேற்கு  முயற்சிக்கலாம்.

கேர்ஸ்க்  ஊடுருவல் வாரத்தில் 2 அமெரிக்க பி - 52 விமானங்கள் இரஸ்சிய எல்லைக்குள் நுழைய முயற்சித்தாக கூறுகிறார்கள் இந்த முயற்சியின் மூலம் இரஸ்ஸிய தகவல் தொடர்பு நிலைகளை அமெரிக்க தரப்பு ஏற்கனவே அறிந்திருக்கும் என கூறுகிறார்கள், இது ஒரு அணுவாயுத தாக்குதலை இரஸ்சியாவின் மேல் நிகழ்த்துவதற்கு முக்கியமாக தேவையான தரவாக இருக்கும் என கருதுகிறார்கள்.

இந்த போர் 3 ஆம் உலகப்போரினை ஏற்படுத்த போவதாக கூறுகிறார்கள் ஆனால் அப்படி நிகழும் என நான் கருதவில்லை, இந்த மாதத்தின் பின்னர் உக்கிரேனிய படைப்பிரிவினருக்கான சம்பளம் கொடுப்பதற்கு நிதி கூட இல்லை என கூறுகிறார்கள் (உண்மை தன்மை தெரியவில்லை), உக்கிரேனின் நிலை  மிக மோசமாகிக்கொண்டிருக்கிறது மறு வளமாக எதிர் வரும் நாள்களில் இரஸ்சியாவின் நிலையும்  மோசமாகலாம் அதனால் உக்கிரேனும் இரஸ்சியாவும் சமாதானத்தினை விரும்புகின்றன ஆனால் சாமி வரம் கொடுத்தாலும் தட்சணை  வாங்கிற பூசாரி அனுமதிக்க மாட்டார் என்பது போல அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் போரினை தொடர விரும்புகின்றன.

இந்தியா முழு முயற்சியுடன் இந்த சமாதான முயற்ச்சியில் ஈடுபட்டால், உலகிற்கு நன்மை உண்டாகலாம், இந்த சமாதான முயற்சிக்கு இந்தியாவினை விட பொருத்தமான நாடு வேறு எதுவும் தற்போது இல்லை என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

1 - நீங்கள் ரசிய எல்லை மற்றும் இறையாண்மை பற்றி கவலைப்படும் அளவுக்கு உக்ரைன் எல்லைகள் மற்றும் இறையாண்மை பற்றி கவலை கொள்ளவதாக தெரியவில்லை.

2 - பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் எல்லைகள் மற்றும் இறையாண்மை பற்றி பல சகாப்தங்களாக ஒரு முடிவை எட்ட முடியாத இந்தியா பற்றிய உங்கள் கருத்து?????

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

உங்கள் கருத்திற்கு நன்றி

இந்த வகையான கருத்தாடல்களை ஆங்கிலத்தில் "Whataboutism" என அழைப்பார்கள், ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை, நல்ல  மாணவன் ஆசிரியர் கூறாத விடயங்களையும் புரிந்து கொள்வான், ஏகலைவன் மாதிரி, நீங்களும் ஒரு ஏகலைவந்தான்!

நான் கூற வந்த விடயம் தற்போதய போரினால் உலகம் எதிர்கொள்ளும் அபாயமும், சமாதானதிற்கான சவால்களும் அதில் தென்படும் சில சாதகமான அம்சங்களும்.

உங்களைப்போல உங்களிடமும் கேள்வி

1. எப்படி அமெரிக்கா உலகில் உள்ள அனைத்து நாடுகளை ஆக்கிரமிகும் போது அதனை பயங்கரவாதத்திற்கெதிரான போர் என நம்பும் உங்களால்; இரஸ்சியா உக்கிரேனை ஆக்கிரமிக்கும் போது மட்டும் ஆக்கிரமிப்பாக தெரிகிறது?

2. இலங்கையில் தமிழர்கள் வாழும் வட கிழக்கில் இலங்கை படையினர் மேற்கொள்ளும் படுகொலைகள் இனப்படுகொலையாக தெரிந்த போது தற்போது போர் நிகழும் இரஸ்சியர்கள் வாழும் டொன்பாஸ், லுகான்ஸ் பிராந்தியத்தில் உக்கிரேனியர்களின் படுகொலை உக்கிரேனின் இறையாண்மையாகத்தெரிகிறது.

நான் தனிப்பட்ட ரீதியில் உங்களுக்காக வைக்கப்பட்ட வாதம் அல்ல, இது உங்கள் நோக்கத்தினை புரிந்து கொண்டு (திரிகளை சூடாக்குவதற்கு) வைகும் பதில், அதனால் மனம் கோண வேண்டாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, vasee said:

ஐயா உங்களிடம் நான் கேட்ட கேள்வி மிகவும் சுலபமானது. அதற்கு எதுக்காக இவ்வளவு சுற்றி வந்து மூக்கை தொடுகிறீர்கள்.???

அப்புறம் உங்கள் கேள்வி 

1- நான் எங்கே எப்பொழுது அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்தேன்?

2- இந்த போர் ஆரம்பித்தபோது இரு நாடுகளையும் நான் எதிர்த்து எழுதினேன். ஆனால் உக்ரைனில் தலைநகர் வரை புட்டின் தொட்டபோதே இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து எழுதினேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எப்படி? தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நடந்த போரை நிறுத்தினமாதிரியா? நல்ல விசயம் 1 இலட்சம் துருப்புக்களை அனுப்பி வையுங்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

ஐயா உங்களிடம் நான் கேட்ட கேள்வி மிகவும் சுலபமானது. அதற்கு எதுக்காக இவ்வளவு சுற்றி வந்து மூக்கை தொடுகிறீர்கள்.???

அப்புறம் உங்கள் கேள்வி 

1- நான் எங்கே எப்பொழுது அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்தேன்?

2- இந்த போர் ஆரம்பித்தபோது இரு நாடுகளையும் நான் எதிர்த்து எழுதினேன். ஆனால் உக்ரைனில் தலைநகர் வரை புட்டின் தொட்டபோதே இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து எழுதினேன். 

ஏற்கனவே பதில் கூறிவிட்டேன் உங்களுக்கு விளங்கவில்லை என கருதுகிறேன்.

இந்த போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தெரிகிறது, ஆனால் செலன்ஸ்கியின் ஒற்றை (America one way trip)😁 வழிப்பயனத்தினை பிளிங்ரன் நிறுத்தி விட்டார் போலிருக்கிறது?

பிளின்ரன் கையோடு உக்கிரேன் முன்னால் தலை இராணுவ அதிகாரியினையும் அழைத்துக்கொண்டு அல்லவா உக்கிரேன் வந்துள்ளார் (செலன்ஸ்கியுடன் முரண்பட்டவர்), சிஙக்த்டினை வாலில் கட்டி கூட்டி வந்த நரி போல.😁

மறு வளமாக போலந்து தான் இன்னமும் எந்த படையினரையும் திரட்டவில்லை என தற்போது குத்துக்கரணம் அடித்துள்ளது, அப்படி எண்றால் இது நாள் வரை 160 ஆவது இயந்திரமாக்கப்பட்ட படைப்பிரிவு என அறிக்கை விட்டதெல்லாம் பொய்யா?

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகிவிட்டது, தேரை இழுத்து தெருவில விட்டிட்டாங்கள் என்பதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, vasee said:

6 hours ago, vasee said:

ஏற்கனவே பதில் கூறிவிட்டேன் உங்களுக்கு விளங்கவில்லை என கருதுகிறேன்.

நான் எங்கே ஐயா விளங்கவில்லை என்று எழுதினேன். எதுக்காக சுற்றி வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை என்று அர்த்தமா??

சண்டை மொஸ்கோ வரை நீண்டுள்ளது. சமாதானத்திற்கான காலங்கள் நீண்டதால் பல வழிகளிலும் ஆயத்தங்கள் செய்து முடிக்கப்பட்டாயிற்று. இனி. ..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, விசுகு said:

நான் எங்கே ஐயா விளங்கவில்லை என்று எழுதினேன். எதுக்காக சுற்றி வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை என்று அர்த்தமா??

சண்டை மொஸ்கோ வரை நீண்டுள்ளது. சமாதானத்திற்கான காலங்கள் நீண்டதால் பல வழிகளிலும் ஆயத்தங்கள் செய்து முடிக்கப்பட்டாயிற்று. இனி. ..?

இது ஒன்றும் சிக்கலான விடயம் இல்லை, அமெரிக்க தலையீடுகளில் ஒரே விதமான மாதிரி இருக்கும்; அது பணம் பார்ப்பதுதான்.

நீங்களே ஒரு வர்த்தகர்தான், உங்களுக்கு தெரியாததா? இலாபமில்லாமல் அமெரிக்கா ஏன் இதில் தலையிட போகிறார்கள்?

அமெரிக்க அரசியல்வாதிகள் கூறும் உக்கிரேன் ஒரு சிறந்த முதலீடு என்று அதற்கு அவர்கள் கூறும் காரணி 12 ரில்லியன் பெறுமதியான தங்க சுரங்கங்கள் மேற்கு உக்கிரேனில் உள்ளது அதனை அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டால் பிரச்சினை முடிந்து விடும்.

அதற்கு உக்கிரேனின் நிலையினை மோசமாக்கிய பின்னர் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றன் மூலம் அதனை செய்யலாம், அல்லது வேறு வகைகளில் செய்ய முயற்சிக்கலாம், அதனால் நீண்ட தூர ஏவுகணைகளை கொடுத்து மேலும் உக்கிரேனின் நிலையினை துருதமாக மோசமாக்குவதனூடாக முதலீட்டு இலாபத்தினை விரைவாக பெறமுடியும். 

இந்த முயற்சியில் அனைவருக்கும் இலாபம் இரஸ்சியாவிற்கு  இரஸ்சியர்கள் வாழும் கிழக்கு உக்கிரேனையும், மேற்கு உக்கிரேனில் உள்ள 12 ரில்லியன் வளங்கள் அமெரிக்க மற்றும் மேற்கு கூட்டணிக்கு, உக்கிரேனுக்கு நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, vasee said:

எல்லா விடயங்களிலும் வியாபாரமும் இலாபமும் பணமும் சுயநலங்களும் இருப்பதாக நான் எடுத்துக் கொள்வதில்லை. உதவிகளும் ஐயோ என்ற குரலுக்கு ஓடி வருதலும் சுய லாபத்திற்காகத் தான் என்று எப்பொழுதுமே நினைத்ததில்லை. 

பல கோடி மக்களின் உயிர் உடமைகள் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடமைப்பாடுகள் முக்கிய தலைவர்களுக்கு, நாடுகளுக்கு இருக்கிறது. 

நாம் இருவரும் இரண்டு தண்டவாளங்கள் என்று புரிகிறது. பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, விசுகு said:

நாம் இருவரும் இரண்டு தண்டவாளங்கள் என்று புரிகிறது. பார்க்கலாம். 

அதுவும் நல்லது தான் ஒரே திசையில் பயணிக்கிறீர்கள். இல்லையா?? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, Kandiah57 said:

அதுவும் நல்லது தான் ஒரே திசையில் பயணிக்கிறீர்கள். இல்லையா?? 🤣

ஆனால் இணையாதே....?🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, விசுகு said:

ஆனால் இணையாதே....?🤣

ஆமாம் உண்மை   தான்  சாமந்தரமாக  செல்லும்  இரண்டின். நோக்கமும் செயலாற்றமும் ஒன்று தான்  🤣🤣

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.