Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

459319641_3297135660423928_1048321305941

25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.

நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள்.

அதில் ஒரு தம்பதியினரில்...

மனைவி ''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்ற படி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்.

கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள்

அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும், விட்டு கொடுத்தலும் நிறைந்திருந்தது.

அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100 எல்லோருக்குமே தெரிந்து விட்டது அவர்கள் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று.

எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்த பின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும்

மிகக் குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள்.

பூஜ்ஜியம் வாங்கியது வேறு யாரும் இல்லை வரும் போதே சண்டை போட்டுக் கொண்டு வந்தார்களே அவர்கள் தான்.

இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள்

ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்கள்.

எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள் திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு

35 வருடங்கள் என்று சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள்.

35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள் அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள்.

ஆனால் போட்டியின் நடுவர் இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள் தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்!

காரணம்...

எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது எந்த ஒரு மன ஒற்றுமையும், புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இது தான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார்.

இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக் கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

எந்நிலையும் தன் கணவனை/மனைவியை விட்டும் பிரியாத இதுவும் ஒரு வகையான அன்பு தான்.

Sutha Lakshmi  

  • கருத்துக்கள உறவுகள்

அட .....இது எங்கு நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை . .......நானும் அவளும் (கவனிக்கவும் நாங்கள் அல்ல) கலந்திருந்தால் இப்ப கார் அவளின் கராஜில் நின்றிருக்கும் . ......இவர்கள் கூறிய பொருத்தமில்லாத பொருத்தங்களை விட எனக்கும் அவளுக்கும் ஒன்று கூட அதுதான் செவ்வாய் பொருத்தமும் பொருந்தவில்லை . ....... இனி வாழும் காலத்திலும் நானும் இவளும்தான் சீனியர் புரியுதா . ........!  😴

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

35 வருடங்கள்  சேர்ந்து வாழ்ந்திர்களா?? 

 மொத்தம் எத்தனை பிள்ளைகள் உண்டு”??😂

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு 39 + இருக்கும் . .........அரசமரத்தை சுத்த ஆண்டவன் தந்தது மூன்று . .....!  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கன புருசன் பொண்டாட்டிகளுக்குள்ள எப்ப பார்த்தாலும் நாய்கடி பூனைகடி பிரச்சனையாய் இருக்கும்.தங்களுக்குள்ள சிரிச்சே கதைக்க மாட்டார்கள்.எதுக்கெடுத்தாலும் புடுங்குப்படுவார்கள்.
ஆனால்
இவர்கள் சேர்ந்து பெற்றெடுத்த பிள்ளகள் எண்ணிக்கைய பாத்தால் 6 க்கு மேல இருக்கும்.🤣

சகிப்புத்தன்மை எண்டால் இவர்களிடம் நூறு வீதம் இருக்கும். :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, suvy said:

அது ஒரு 39 + இருக்கும் . .........அரசமரத்தை சுத்த ஆண்டவன் தந்தது மூன்று . .....!  😂

அட நீதானா அந்தக்குயில்......? 😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

அட .....இது எங்கு நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை . .......நானும் அவளும் (கவனிக்கவும் நாங்கள் அல்ல) கலந்திருந்தால் இப்ப கார் அவளின் கராஜில் நின்றிருக்கும் . ......இவர்கள் கூறிய பொருத்தமில்லாத பொருத்தங்களை விட எனக்கும் அவளுக்கும் ஒன்று கூட அதுதான் செவ்வாய் பொருத்தமும் பொருந்தவில்லை . ....... இனி வாழும் காலத்திலும் நானும் இவளும்தான் சீனியர் புரியுதா . ........!  😴

பெரிய ஆள் தான் அண்ணை நீங்க 
அஞ்சு வருசத்திற்கே என்னை யாரும் தேட வேண்டாம் என்று எழுதி வைத்துவிட்டு எங்கேயாவது கண் காணா தேசத்திற்கு ஓடி விடுவோமா என்று இருக்கு.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

பெரிய ஆள் தான் அண்ணை நீங்க 
அஞ்சு வருசத்திற்கே என்னை யாரும் தேட வேண்டாம் என்று எழுதி வைத்துவிட்டு எங்கேயாவது கண் காணா தேசத்திற்கு ஓடி விடுவோமா என்று இருக்கு.  

மகனே . ...... நீங்கள் பலத்தையும் நினைக்கலாம் . ........அதுக்கு உங்களுக்கு சுதந்திரம் உண்டு . ......ஆனால் இடையில் சுண்டும் நரம்பில் துடிப்பு இருக்கும் வரை அது முடியாது . .........பின் அதுவே பழகிவிடும் ......... !  😂 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.