Jump to content

என்கிட்ட மோதாதே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

IMG-7010.jpg

ஸ்ரெபான் ராப் ஒரு பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளராக யேர்மனியில் அறியப்பட்டவர். பாடல்கள் இயற்றுவது இசை அல்பங்களைத் தயாரித்து வெளியிடுவது, பாடுவது, நகைச்சுவை நிகழ்ச்சிகள் செய்வது என மேலும் பல  விடயங்களில் தன்னை வெளிக்காட்டியவர். பெண்களுக்கான குத்துச் சண்டையில் யேர்மனியில் முன்னணியில் இருந்த ரெஜினா ஹால்மிஸ்ஸை இவர் நகைச்சுவையாக விமர்சிக்கப் போய், அது இருவரையும் குத்துச் சண்டை வளையத்துக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது

ரெஜினா ஹால்மிஸ், தனது வாழ்நாளில் சந்தித்த 56 குத்துச் சண்டைப் போட்டிகளில் 54 தடவைகள் வெற்றியையும் ஒரே ஒரு தடவை தோல்வியையும் ஒரு தடவை சமநிலையையும் தழுவிக் கொண்டவர்.

“பெண்ணோடு மோதுவது என்ன பெரிய வேலையா?” என்று நினைத்து ரெஜினா ஹால்மிஸ்ஸுடன்  2001ஆம் ஆண்டு குத்துச் சண்டைக்குப் போன ஸ்ரெபான் ராப், தோற்றுப் போனார். மூக்குடைபட்டு இரத்தம் வழிய அவர் இருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் அடுத்த நாள் ஊடகங்களில் வெளிவந்ததில் அவர் பெருத்த அவமானங்களுக்கு ஆளானார்.

‘ஒரு பெண்ணிடம் தோற்பது எவ்வளவு அவமானம்? அவளை வென்றே தீருவேன்என்ற அவரது வீராப்பு மீண்டும் ரெஜினா ஹால்மிஸ்ஸை 2007இல் மோத அழைத்தது. இம்முறை நடந்த குத்துச் சண்டையில் ஸ்ரெபான் ராப்புக்கு மூக்கு உடைபடவில்லை ஆனாலும் தோற்றுப் போனார்.

 ஸ்ரெபான் ராப் ஊடகங்களுடான தனது தொழிலை 2015 இல் நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு அவர் பொது வெளியில் வந்ததில்லை. திடீரென இப்பொழுது ஊடகங்களில் அடிபடத் தொடங்கியிருக்கிறார். “நான் ரெஜினா ஹால்மிஸ்ஸுடன் மோதத் தயார்என அறிவித்திருக்கிறார். ஸ்ரெபான் ராப்புக்கு இப்பொழுது வயது 57. ரெஜினா ஹால்மிஸ்ஸுக்கு 47 வயது. ரெஜினா ஹால்மிஸ்ஸும் குத்துச் சண்டைப் போட்டியில் இருந்து 17 வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்று விட்டவர். ஆனாலும் ஸ்ரெபான் ராப்பின் சவாலை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இருவரும் நாளை இரவு (14.09.2024) டுசுல்டோர்ப் நகரத்தில் மோதப் போகிறார்கள். ரெஜினா ஹால்மிஸின் எடை 50கிலோ, ஸ்ரெபான் ராப்பின் எடை 80கிலோ. ரெஜினா ஹால்மிஸ் எடையில் மட்டுமல்ல உயரத்திலும் ஸ்ரெபான் ராப்பைவிடக் குறைவானவர்.

“ஒரு பெண்ணிடம் பொது வெளியில் தோற்றுப் போன ஸ்ரெபான் ராப்பின் மனதில் உள்ள வலி அவரை சும்மா இருக்கவிடவில்லைப் போலும். கடந்த ஒன்பது வருடங்களாக நல்ல பயிற்சிகள் எடுத்துவிட்டு இப்பொழுது மீண்டும்  வந்திருக்கிறார். குத்துச் சண்டைகளில் 25 வருட அனுபவங்கள் எனக்கிருக்கிறது. வரட்டும் பார்க்கலாம்என ரெஜினா ஹால்மிஸ்  தெரிவித்திருக்கிறார்.

இந்தப் போட்டி நாளை யேர்மன் தொலைக்காட்சி( RTL)இல் 20.15க்கு நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது. பார்க்கலாம்.

  • Like 3
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனுஷன் ஏன் இப்படி திரும்பித் திரும்பி போய் அடி வாங்குது......... இதுக்கு பேசாமல் அவரையே காதலித்து, கல்யாணமும் கட்டி, தினமும் வீட்டிலேயே குத்து வாங்கலாமே........ உள்வீட்டு விவகாரம் என்று உலகமும் இதைக் கவனிக்காமல் இருந்து கொள்ளும்..........🤣.

Edited by ரசோதரன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதி யாரை விட்டது? பெண்ணால் சாவோ ??

ஆனால் இந்த இடைவெளியை அவர் மிகவும் பிரயோசனமாக்கி தயாராகி இருக்க வாய்ப்பு உண்டு. பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் விளம்பர வியாபாரம். 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

57 வயசிலயும் அதெல்லாம்  ஒத்துக்க  முடியாது  கோட்ட அழிங்கே மொதல்ல  இருந்து  ஆடுவம் எண்டு மனுசன் ஒத்தைக்காலில நிக்குரத பாத்தா பரோட்டா சூரி காமெடிதான் ஞாபகம் வருது..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை வாசிக்கையில் ட்ரம்பும் கமலாவும் நினைவுக்கு வருகிறார்கள். பெண்களிடம் தோற்பதைச் சகிக்க முடியாத ட்ரம்ப், கமலாவிடம் விவாதத்தில் தோற்றதாகத் தான் தெரிகிறது. "இனி விவாதம் இல்லை!"  என்று நாண்டு கொண்டு நிண்ட பின்னர், கட்டாயம் மீண்டும் விவாதிக்க வருவார் என்கிறார்கள்! பார்க்கலாம்!

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தம்மா ஒருமுறை அவருக்கு விட்டுக்குடுத்தால்தான் என்ன . .........எப்போதும் தானே வெல்லவேண்டும் என்று அடம்பிடிக்கக் கூடாது . .........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2024 at 20:38, ரசோதரன் said:

இந்த மனுஷன் ஏன் இப்படி திரும்பித் திரும்பி போய் அடி வாங்குது.........

இறுதிப் போட்டி என்று மோத வந்து மூன்றாவது தடவையும் தோற்றுப் போனார்.

 

On 13/9/2024 at 22:08, குமாரசாமி said:

எல்லாம் விளம்பர வியாபாரம். 😄

உண்மைதான்.

வாரம் தோறும் நடைபெறப் போகும் நிகழ்ச்சி ஒன்றைத் தொலைக்காட்சியில்தொகுத்து வழங்கப் போகிறார். ஏறக்குறைய பத்து வருடங்கள் ஊடகங்களில் இல்லாமல் இருந்தவரை திரும்பக் கொண்டு வந்து நிகழ்ச்சியை நடத்துவதுக்கு இந்தக் குத்துச் சண்டை ஒரு விளம்பரம்தான். ஆனாலும் சண்டை உண்மையானது.

IMG-7020.jpg

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • லெபனான் தலைநகர் பெய்ரூட் பகுதியில் குண்டு வெடிப்பு-09 பேர் உயிரிழப்பு! லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பம் பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்புச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்த சுமார் 200 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் செய்திப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட “பேஜர் மெசேஜ் எக்ஸ்சேஞ்ச்” இயந்திரங்கள் ஒரே நேரத்தில் வெடிக்க செய்ததாக கூறப்படுகிறது. இதன்போது சாலைகள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் இந்த வெடிப்புகள் நடந்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்தியதாக ஹிஸ்புல்லா போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குண்டுவெடிப்புகளில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1399831
    • நாசாவின் முயற்சியால் விலகி சென்ற விண்கல் – 3035 இல் மீண்டும் மோதும் என எச்சரிக்கை. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் (ஜே.பி.எல்.) மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கிகளை பயன்படுத்தி ‘2024-ஓன்’ என்ற சிறுகோளை முதன்முதலில் கண்டறிந்துள்ளது. இதனுடைய அளவு, வடிவம் மற்றும் நகர்வு பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிறுகோள் 720 அடி விட்டம் கொண்டது. பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது. 60 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டிருப்பதுடன், இதன் வேகம் மணிக்கு சுமார் 25 ஆயிரம் மைல்கள் (சுமார் 48 ஆயிரம் கிலோ மீட்டர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறுகோளின் அளவு மற்றும் வேகம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் மைல் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும். பூமிக்கும், நிலவுக்கும் இடையில் உள்ள தொலைவைவிட 2.6 மடங்கு தூரமாகும். இந்த சிறுகோள் நேற்று பூமியை கடந்து சென்றது. இந்த சிறுகோளின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால் கூட அது பூமியைப் பாதிக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து, டெல்லி விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரன் கூறும்போது, ‘விண்வெளியில் ‘2024 ஓஎன்’ சிறுகோள் பூமியை கடந்து சென்றது. இது 720 அடி பெரியது. அதாவது 2 கிரிக்கெட் மைதானத்தின் அளவு போன்றது. இந்த சிறுகோள் திட்டமிட்டப்படி நேற்று பகல் 3.49 மணிக்கு பூமிக்கும், நிலவிற்கும் நடுவில் பூமியில் இருந்து 10 லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து சென்றது. குறிப்பாக, பூமியுடன் ஒப்பிடும்போது வினாடிக்கு 8.88 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. அடுத்து இதே சிறுகோள் வருகிற 2035-ம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி  மீண்டும் பூமியை கடந்து செல்ல இருப்பதாக முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1399861
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆழ்ந்த அனுதாபங்கள் நுணாவிலான், இந்த துயரை தாங்கும் வலிமையை இறைவன் தங்களுக்கு அருளுவாராக.
    • அண்மையில் பிரிஸ்பேனில் எனது வீட்டினை விற்றிருந்தேன் . வாங்கியவன் ஒரு சைனாக்  காரன் . அவன் தனக்கு சிறிலங்கா நண்பர்கள் இருக்கிறார்கள் என்று, கூட எடுத்த படம் காட்டினான். அவனும் சாட்சாத் மகிந்தவும் சிநேகபூர்வமாக அந்த படத்தில்  அதற்காக ம மாமா  கொள்ளையடித்த சல்லியில் சைனாவுக்குள்ளால என்ர வீட்டை வாங்கீட்டங்கள் எண்டு நான் சொல்ல வரேல்லை 😀
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.