Jump to content

ஊரடங்கு - முக்கிய அறிவித்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 SEP, 2024 | 09:55 PM
image
 

இன்று சனிக்கிழமை (21) இரவு 10.00 மணி முதல்  நாளை ஞாயிற்றுக்கிழமை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அல்லது வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் தங்களது ஆவணங்கள், விமான பயணச் சீட்டுகளை தம்வசம் வைத்திருத்தல் அவசியமாகும்.

மேலும்,  தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் அலுவலக அனுமதிப்பத்திரம் மற்றும் ஊழியர் அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/194319

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானநிலையம் செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகளுக்கு - விசேட அறிவித்தல்

21 SEP, 2024 | 10:16 PM
image
 

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில்  பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடக பிரிவு  அறிவித்துள்ளது.

இதேவேளை வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை  ஊரடங்கு வேளையில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என  பொலிஸார் அறிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/194323

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மாத்திரமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என நம்புகின்றோம் - தேசிய மக்கள் சக்தி

21 SEP, 2024 | 10:39 PM
image

(எம்.மனோசித்ரா)

தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பொது ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கத்தில் மாத்திரமே  ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள தேசிய மக்கள் சக்தி, முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் உரிய அதிகாரிகள் பணியாற்றுவர் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய மக்கள் சக்தி இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையமும் தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பணியாற்றுவார்கள் என்றும் நம்புகிறோம்.

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவது தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பொது ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கத்தில் மட்டுமே செய்யப்படுவதாக நாங்கள் நம்புகிறோம்.

 

7136a9ff-a63e-4318-aec0-519e18d3f058.jfi

https://www.virakesari.lk/article/194325

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் யாழ்ப்பாணத்தில் எனது உறவினர்கள் நேற்று சொன்னதை இங்கே பதிந்தேன். தமிழர்கள் வரலாறு கடந்து வந்தவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பொது ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கத்தில் மாத்திரமே  ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள தேசிய மக்கள் சக்தி, முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் உரிய அதிகாரிகள் பணியாற்றுவர் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அனுரவுக்கும்... சுத்து மாத்து செய்யப் போகிறார்கள் என்ற சந்தேகம் வந்திட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது ஒழுங்கமைதியைப் பேணுவது அவசியமாகவுள்ளது - ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

21 SEP, 2024 | 10:57 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டிலுள்ள சகல நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கமைதியைப் பேணுவது அவசியமாகவுள்ளது எனக் கருதுவதால் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சகல நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கமைதியைப் பேணுவது அவசியமாகவுள்ளதென நான் கருதுகின்றேன். அதனால் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 16ஆம் பிரிவின் கீழ் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கமைய ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பிக்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்பு செயலாளரினால், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அல்லது இவர்களால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் அலுவலரினால் வழங்கப்பட்ட எழுத்திலான அனுமதிப்பத்திரமொன்றின் அதிகாரத்தின் கீழன்றி பொது இடங்களில் நடமாட முடியாது என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/194328

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள். 
    • இரத்தினபுரி  -தபால் வாக்குகள்  ANURA KUMARA DISSANAYAKE NPP   19,185 Votes 60.83% RANIL WICKREMESINGHE IND16   6,641 Votes 21.06% SAJITH PREMADASA SJB   4,675 Votes 14.82% NAMAL RAJAPAKSA SLPP   500 Votes 1.59% ARIYANETHIRAN PAKKIYASELVAM - 3 Votes Division Results 2024 (virakesari.lk)  
    • எப்பிடியும் டக்கரின் 50 ஆயிரம்  வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் நரிணிலுக்கு விழும். இன்னும் கொஞ்ச முடிவுகள் வந்திருக்கு உத்தியோகப்பற்றற்ற முடிவுகளை தொடர்ந்து போடுவது அழகல்ல.
    • இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை லங்காசிறியின் நேரலை ஊடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலையை இந்த இணைப்பில் பார்வையிடலாம். மேலும் உங்கள் கருத்துக்களுடன் நீங்களும் நேரலையில் இணைந்துகொள்ளலாம். https://tamilwin.com/article/sri-lanka-presidential-election-2024-live-updates-1726934857#google_vignette திருவுளச்சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் ஒரு எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச் சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், இரண்டாம் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும். இரண்டாம் சுற்றுவாக்கு எண்ணப்படும்  இவ்வாறு இரண்டாம் சுற்று வாக்கு எண்ணப்படும் போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் குறிப்பாக இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச்சீட்டு முறையின் அடிப்படையில் ஜனாதிபதி தெரிவு மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்தால் அப்போதும் திருவுளச்சீட்டு முறைமை பின்பற்றப்பட உள்ளது.  https://tamilwin.com/article/two-scenarios-where-a-tie-could-occur-in-1726924469#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.