Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 SEP, 2024 | 09:55 PM
image
 

இன்று சனிக்கிழமை (21) இரவு 10.00 மணி முதல்  நாளை ஞாயிற்றுக்கிழமை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அல்லது வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் தங்களது ஆவணங்கள், விமான பயணச் சீட்டுகளை தம்வசம் வைத்திருத்தல் அவசியமாகும்.

மேலும்,  தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் அலுவலக அனுமதிப்பத்திரம் மற்றும் ஊழியர் அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/194319

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமானநிலையம் செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகளுக்கு - விசேட அறிவித்தல்

21 SEP, 2024 | 10:16 PM
image
 

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில்  பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடக பிரிவு  அறிவித்துள்ளது.

இதேவேளை வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை  ஊரடங்கு வேளையில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என  பொலிஸார் அறிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/194323

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மாத்திரமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என நம்புகின்றோம் - தேசிய மக்கள் சக்தி

21 SEP, 2024 | 10:39 PM
image

(எம்.மனோசித்ரா)

தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பொது ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கத்தில் மாத்திரமே  ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள தேசிய மக்கள் சக்தி, முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் உரிய அதிகாரிகள் பணியாற்றுவர் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய மக்கள் சக்தி இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையமும் தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பணியாற்றுவார்கள் என்றும் நம்புகிறோம்.

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவது தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பொது ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கத்தில் மட்டுமே செய்யப்படுவதாக நாங்கள் நம்புகிறோம்.

 

7136a9ff-a63e-4318-aec0-519e18d3f058.jfi

https://www.virakesari.lk/article/194325

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் யாழ்ப்பாணத்தில் எனது உறவினர்கள் நேற்று சொன்னதை இங்கே பதிந்தேன். தமிழர்கள் வரலாறு கடந்து வந்தவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பொது ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கத்தில் மாத்திரமே  ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள தேசிய மக்கள் சக்தி, முடிவுகள் வெளியாவதில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் உரிய அதிகாரிகள் பணியாற்றுவர் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அனுரவுக்கும்... சுத்து மாத்து செய்யப் போகிறார்கள் என்ற சந்தேகம் வந்திட்டுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொது ஒழுங்கமைதியைப் பேணுவது அவசியமாகவுள்ளது - ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

21 SEP, 2024 | 10:57 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டிலுள்ள சகல நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கமைதியைப் பேணுவது அவசியமாகவுள்ளது எனக் கருதுவதால் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சகல நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கமைதியைப் பேணுவது அவசியமாகவுள்ளதென நான் கருதுகின்றேன். அதனால் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 16ஆம் பிரிவின் கீழ் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கமைய ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பிக்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்பு செயலாளரினால், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அல்லது இவர்களால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் அலுவலரினால் வழங்கப்பட்ட எழுத்திலான அனுமதிப்பத்திரமொன்றின் அதிகாரத்தின் கீழன்றி பொது இடங்களில் நடமாட முடியாது என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/194328

  • கருத்துக்கள உறவுகள்

மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீடிக்கப்பட்டது ஊரடங்கு..

புதிய இணைப்பு

நாட்டில் நேற்று இரவு 10 மணிமுதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று மதியம் 12 மணி வரையில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு  

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று(22) காலையுடன் தளர்த்திக் கொள்ளப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு இல்லையெனில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது பற்றி அரச மேல்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் காலை ஆறுமணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்டு, அதன் பின்னர் தேவையேற்படின் இன்று(22) மாலை தொடக்கம் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

இன்று மாலை ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டால் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில் நடைபெறும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது. 

இரண்டாம் இணைப்பு

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை காலை 06 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் த ரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு இணக்கம்

அதன் பிரகாரம் தேர்தல் முடிவுகள் மொத்தமாக வெளியானதன் பின்னர் தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நீடிக்கப்பட்டது ஊரடங்கு.. | Curfew Implemented In Sri Lanka

பெரும்பாலும் ஞாயிறு மாலை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முதற்கட்டமாக ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இருப்பதாக மேலதிக தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது. 

https://tamilwin.com/article/curfew-implemented-in-sri-lanka-1726928000

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.