Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

anura-1.jpg?resize=750,375

ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்!

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில்  அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க மற்றும்  பல்வேறு  அரசியல்  தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1400710

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர பதவிப் பிரமாணம்!

September 23, 2024
06-21-696x464.jpg

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் 9 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

04-30.jpg

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், விருப்பு வாக்கு உள்ளடங்களாக 5,740,179 வாக்குகளைப் பெற்று, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

05-24.jpg

 

 

https://eelanadu.lk/இலங்கையின்-9ஆவது-நிறைவேற/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் - ஜனாதிபதி அநுர உறுதி

Published By: DIGITAL DESK 3   23 SEP, 2024 | 10:37 AM

image

அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று காலை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது.

இதன் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இங்கு மேலும் உரையாற்றுகையில், 

தேர்தலை நடத்துவதும், அரச தலைவரை தெரிவு செய்வது மாத்திரம் ஜனநாயகமல்ல, எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பையும், அவரது அரசியல் வகிபாகத்தையும் மதிக்கிறேன்.

சவால்மிக்க பொருளாதார சூழலில் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளேன். அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்போம்.

நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/194576

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருந்தாலும் மேற்குலக ஊடகங்கள்.. இவரை.. இடது சாரி ஆள் என்பதை அழுத்தம் திருத்தமாக தவறாமல் உச்சரிப்பதை காண முடிகிறது. அவைட ஊழல்.. சுரண்டல்.. சன நாய் அகத்துக்கு ஆபத்து வந்திடுமோ என்று பயப்பிடுகினம் போல. சீன பக்கம் அதிகம் சாய்ஞ்சிடுவினமே என்ற அச்சம் அவைக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுரகுமாரவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

23 SEP, 2024 | 12:19 PM
image

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள  அனுரகுமாரதிசநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

சீன அரசாங்கத்தின் சார்பிலும் மக்களின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

இலங்கையும் சீனாவும் பாரம்பரிய நட்பு அயல்நாடுகள், இருநாடுகளும் இராஜதந்திர உறவை ஏற்படுத்தி 67 வருடங்களாகின்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வையும், ஆதரவையும் வழங்கி வருகின்றன.

இதன் மூலம் இருநாடுகளும் நட்புறவுமிக்க சகவாழ்வு வேவ்வேறு அளவிலான நாடுகளிடையிலான பரஸ்பரம் நன்மையளிக்க கூடிய  ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான சிறந்த உதாரணங்களாகும் 

நான் இலங்கை சீன உறவுகளிற்கு பெரும் முக்கியத்துவத்தை வழங்குகின்றேன். உங்களுடன் பாரம்பரிய நட்புறவை முன்னெடுப்பதற்கும், பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் வெற்றிகரமான விடயங்கள சாதிப்பதற்கும்நான் ஆர்வமாக உள்ளேன்.

https://www.virakesari.lk/article/194595

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முப்படைத் தளபதிகளுடன் விசேட பேச்சுவார்த்தையில் புதிய ஜனாதிபதி அநுர!

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) முப்படைத் தளபதிகளுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து முப்படைகளின் தளபதிகளை சந்தித்துள்ள புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாப்பது தொடர்பில் அவர்களுடன் விசேட கலந்துரையாடலில் அநுர ஈடுபட்டுள்ளார்.

முப்படைகளின் தளபதி

மேலும், அநுர குமார திஸாநாயக்கவின் பாதுகாப்பிற்காக விசேட கமாண்டோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முப்படைத் தளபதிகளுடன் விசேட பேச்சுவார்த்தையில் புதிய ஜனாதிபதி அநுர! | Sl New President Anura Meets Military Chiefs Force

இதேவேளை, நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அநுர குமார திஸாநாயக்க நேற்றையதினம் (22) தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/sl-new-president-anura-meets-military-chiefs-force-1727074011#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி அநுரகுமார கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் 

23 SEP, 2024 | 05:22 PM
image
 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை (23) கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். 

அதன் பின்னர், மகாநாயக்க தேரர்களின் ஆசிகளை பெற்றுக்கொண்டார்.

https://www.virakesari.lk/article/194637

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதிய ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் வாழ்த்து!

23 SEP, 2024 | 07:57 PM
image

(எம்.மனோசித்ரா) 

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.  

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்து செய்தியில், 'சமூக பொருளாதாரம், அரசியல் மற்றும் ஜனநாயக அரசாட்சி உள்ளிட்ட துறைகளில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன.   

அவற்றிலிருந்து இலங்கையை மீட்டு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.' எனக் குறிப்பிட்டுள்ளார்.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்து செய்தியில், 'இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்கள்.   

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதிலும் ஐக்கியமான மற்றும் பலமான இலங்கையை உறுதி செய்வதிலும் அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.  

முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தனது வாழ்த்து செய்தியில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் ஜனநாயக மற்றும் அமைதியான தேர்தலுக்கு வாழ்த்துகள்! முக்கியமான பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் அதே வேளையில், புதிய அரசாங்கம் சட்டத்தின் ஆட்சி மற்றும் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கான அதன் ஆணையை செயல்படுத்தும் என்று நம்புகின்றோம்.' எனத் தெரிவித்துள்ளார்.

இதே போன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/194639

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி அநுர குமாரவிற்கு ஜோபைடன் வாழ்த்து

27 SEP, 2024 | 08:46 AM
image

அமெரிக்கா ஜனாதிபதி ஜோபைடன் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமாரதிசநாயக்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் தாங்கள் பெருமைப்படக்கூடிய சுதந்திரமான நியாயமான அமைதியான தேர்தலின் மூலம்  உங்களை தங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர் என ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

இந்தோ பசுபிக்கில் சமாதானம் பாதுகாப்பு மற்றும் செழிப்பினை ஏற்படுத்துவதற்கு உங்களுடன் இணைந்து செயற்பட ஆர்வமாக உள்ளேன் என ஜோ பைடன் அநுரகுமாரதிசநாயக்க எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/194883

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி அநுர குமாரவிற்கு ஜோபைடன் வாழ்த்து

27 SEP, 2024 | 08:46 AM
image

அமெரிக்கா ஜனாதிபதி ஜோபைடன் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமாரதிசநாயக்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் தாங்கள் பெருமைப்படக்கூடிய சுதந்திரமான நியாயமான அமைதியான தேர்தலின் மூலம்  உங்களை தங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர் என ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

இந்தோ பசுபிக்கில் சமாதானம் பாதுகாப்பு மற்றும் செழிப்பினை ஏற்படுத்துவதற்கு உங்களுடன் இணைந்து செயற்பட ஆர்வமாக உள்ளேன் என ஜோ பைடன் அநுரகுமாரதிசநாயக்க எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/194883

ஆள் கொஞ்சம் சிலோ என்றபடியால்

லேற்ராக வாழ்த்தியுள்ளார்.

கண்டுக்க வேண்டாம்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.