Jump to content

பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இன்று பதவி விலகல் – புதிய பிரதமராக ஹாிணி அமரசூாிய?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பிரதமரின் கருத்து!

பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இன்று பதவி விலகல் – புதிய பிரதமராக ஹாிணி அமரசூாிய?

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய பிரதமர் மற்றும் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் சபையும் இன்று அமைச்சர் பதவியை விட்டு விலகவுள்ளனர்.

எவ்வாறெனினும், புதிய ஜனாதிபதி தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர் அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரியவர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி தற்போது அமைச்சுப் பதவிகளில் கடமையாற்றும் அமைச்சர்களும் அவரது தனிப்பட்ட ஊழியர்களும் வெளியேறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

https://athavannews.com/2024/1400706

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா; அமைச்சரவையும் கலைந்தது

பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை, புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இந்நிலையில்,பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அமைச்சரவை கலைந்தது.

https://thinakkural.lk/article/309791

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குத்தியர்.. வழமை போல்.. நானும் தாடிக்காரக் கூட்டமுன்னு.. போய் அனுர முன்னும் மண்டியிட எதிர்பாருங்கள்... பதவிக்கு. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குத்தியர்.. வழமை போல்.. நானும் தாடிக்காரக் கூட்டமுன்னு.. போய் அனுர முன்னும் மண்டியிட எதிர்பாருங்கள்... பதவிக்கு. 
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க, இலங்கையின் புதிய ஜனாதிபதி (தேர்வு) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 23 செப்டெம்பர் 2024, 02:03 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவருடைய கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ஒரு இடதுசாரி கட்சியாக அறியப்பட்டதால், அவர் இந்தியாவைவிட சீனாவுடன் கூடுதல் நெருக்கம் காட்டுவாரா? இலங்கையின் முதல் இடதுசாரி ஜனாதிபதி இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் (Jathika Jana Balawegaya) வேட்பாளரான அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். ஜனதா விமுக்தி பெரமுனவைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்படுவார் என பத்தாண்டுகளுக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், அதை ஒருவர்கூட நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் அரசியல் அதிசயங்களுக்கு பெயர் போன இலங்கையில் இப்படி நடப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. தேசிய மக்கள் சக்திக்கு தலைமையேற்றுள்ள ஜனதா விமுக்தி பெரமுன கட்சித் தலைவரான அநுர குமார திஸாநாயக்க, இரண்டாவது இடம் பிடித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைவிட, சுமார் 12 லட்சத்து 9 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார். 38 பேர் களத்தில் நின்ற இந்தத் தேர்தலில், புதிய ஜனாதிபதியைத் தேர்வுசெய்ய விருப்ப வாக்குகளையும் எண்ணவேண்டி வந்தது. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை வந்த பிறகு, விருப்ப வாக்குகள் எண்ணப்படுவது இதுவே முதல் முறை. அதேபோல, இலங்கையின் வரலாற்றில் ஒரு இடதுசாரி தலைவர் ஜனாதிபதியாக பதவியேற்பதும் இதுவே முதல் முறை. இந்த நிலையில், இலங்கைக்கு அருகில் உள்ள பிராந்திய சக்திகளான இந்தியாவையும் சீனாவையும் புதிய ஜனாதிபதி எப்படி அணுகுவார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக சீன சார்பு கொண்டவரா? இடதுசாரி சாய்வு கொண்டவர் என்பதால், இயல்பாகவே இந்தியாவைவிட சீனாவுடன் கூடுதல் நெருக்கத்தைக் காட்டக்கூடும் என்பதுதான் பொதுவான புரிதல். இந்தியாவின் இலங்கை குறித்த கொள்கையை ஜனதா விமுக்தி பெரமுன நீண்ட காலமாக விமர்சித்து வருகிறது. ஒருவித ஆதிக்க மனோபாவத்துடனேயே இலங்கையை இந்தியா அணுகுவதாக குற்றம்சாட்டியும் வந்தது. சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற பேச்சுகள் இல்லை என்றாலும் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில், செப்டம்பர் 16ஆம் தேதியன்று ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில் இந்தியா பற்றிய அவரது பேச்சு கவனிக்கத்தக்கதாக இருந்தது. தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் இலங்கையில் அதானி குழும முதலீட்டில் உருவாகும் காற்றாலை மின் திட்டம் ரத்து செய்யப்படும் என்றார். அந்தத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டார். இவையெல்லாம் சேர்ந்து, அநுரவை இந்தியாவுக்கு சாதகமற்ற ஜனாதிபதி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க பங்கேற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் இந்தியத் தூதர் நேரில் வாழ்த்து இந்த விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்தே ஜாக்கிரதையாக இருந்துவருகிறது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்துவந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா, "நாங்கள் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை. புதிதாக தேர்வுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் பணியாற்ற நாங்கள் விருப்பத்துடன் இருக்கிறோம்" என்று குறிப்பிட்டார். தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் புதிய ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யப்பட்ட அநுர குமார திஸாநாயக்கவை, நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் சந்தோஷ் ஷா. Twitter பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் உடனடியாக தனது வாழ்த்தைப் பதிவுசெய்தார். அநுர குமாரவை டெல்லிக்கு அழைத்துப் பேசிய இந்தியா சமீபத்தில்தான் வங்கதேசத்தில், ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா ஜாக்கிரதையாகவே செயல்படவிரும்புகிறது. உண்மையில், சில மாதங்களுக்கு முன்பாகவே, அநுர குமாரவை தில்லிக்கு அழைத்து இந்திய அதிகாரிகள் சந்திப்புகளை நடத்தினார்கள், ஆகவே இந்தியாவின் கவனத்தில் அவர் எப்போதுமே இருந்தார் என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரான கிளாட்ஸன் சேவியர். "இந்தியாவைப் பொருத்தவரை, அநுர குமார திஸாநாயக்கவை கண்டுகொள்ளாமல் விடவில்லை. இந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டார். முக்கியமான தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார். பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்று அங்கேயும் பலரை சந்தித்தார். பொதுவாக இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்ட கட்சியாக அறியப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவோடு தொடர்புகொண்டு இந்தியா செயல்பட்டது இதுவே முதல் முறையாகவும் இருந்தது" என்கிறார் கிளாட்ஸன் சேவியர். "முழுமையான இந்திய சாய்வு கொண்டவராக இருக்க மாட்டார்" 1980களில் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு இந்தியா குறித்து இருந்த பார்வை தற்போது மாறிவிட்டது என்கிறார் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி அகிலன் கதிர்காமர். "ஜனதா விமுக்தி பெரமுனவைப் பொருத்தவரை, அது பழைய ஜே.வி.பி. இல்லை. அது ஒரு மையவாதக் கட்சியாக மாறிவிட்டது. ஆனால், ரணில் விக்ரமசிங்கவைப் போல முழுமையான இந்தியச் சாய்வு கொண்டவராக அவர் இருப்பார் என சொல்ல முடியாது. ஆனால், எந்த நாட்டிற்கும் மிகவும் நெருக்கமாகவோ, விரோதமாகவோ இல்லாத ஒரு நிலையைத்தான் அவர் எடுப்பார் எனக் கருதுகிறேன். இலங்கை இன்னமும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. இந்தத் தருணத்தில் அதீதமான நிலைப்பாடுகளை எடுப்பது சரிவராது என்பதை அவர் புரிந்துகொண்டிருப்பார் எனக் கருதுகிறேன்." என்கிறார் அகிலன் கதிர்காமர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க, இலங்கையின் புதிய ஜனாதிபதி (தேர்வு) இலங்கையில் அதானி காற்றாலை திட்டம் என்னவாகும்? 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 442 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் காற்றாலைகளை அமைக்க, இந்தியாவைச் சேர்ந்த அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இலங்கையின் முதலீட்டு வாரியம் அனுமதி அளித்தது. ஆனால், சுற்றுச்சூழல் பிரச்னைகள், இந்த காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் கூடுதல் விலைக்கு இலங்கை மின்வாரியத்திற்கு விற்கப்படும் என்ற கவலைகளால் ஆரம்பத்திலிருந்தே இந்தத் திட்டம் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது அதானியின் காற்றாலை மின்திட்டத்திற்கு எதிராகப் பேசியதை வைத்தே, அவர் இந்தியாவுக்கு எதிரான அணுகுமுறையைக் கொண்டிருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது. அது சரியான பார்வையல்ல என்கிறார் கொழும்பு பல்கலைக் கழகத்தின் கௌரவப் பேராசிரியர் ஜெயதேவா உய்யங்கொட. "அநுர குமார திஸாநாயக்கவைப் பொருத்தவரை இலங்கையில் இந்தியாவின் பங்கு குறித்த நிதர்சனத்தை ஏற்றுக்கொள்வார் எனக் கருதுகிறேன். மற்ற பிராந்திய சக்திகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டும். அதானி திட்டத்தைப் பொருத்தவரை, பொருளாதார ரீதியாகவும் சூழல் ரீதியாகவும் அது மிகப் பெரிய சர்ச்சைக்குள்ளான விவகாரம். மோதியும் அதானியும்தான் அந்தத் திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்யவேண்டும்." என்கிறார் ஜெயதேவா உய்யங்கொட. இதே கருத்தையே முன்வைக்கிறார் அகிலன் கதிர்காமர். "அதானியின் காற்றாலை மின் திட்டத்தைப் பொருத்தவரை, அது இந்தியாவின் திட்டம் என்பதற்காக எதிர்க்கப்படவில்லை. இந்தத் திட்டம் தொடர்பாக ஜே.வி.பி. மட்டுமல்ல, மற்றவர்களாலும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அந்தத் திட்டம் தொடர்பாக பல சூழலியல் ரீதியான, பொருளாதார ரீதியான விமர்சனங்கள் உள்ளன. அந்த ஒரு விவகாரத்தை வைத்து மட்டும் ஜே.வி.பி. - இந்தியா உறவை தீர்மானிக்க முடியாது. அவர் இந்தியாவுடன் அனுசரணையுடன் இருப்பார் என்றே கருதுகிறேன்" என்கிறார் அவர்.   படக்குறிப்பு,கோப்புப் படம் இந்தியா - சீனா இரண்டில் எந்த பக்கம் சாய்வார்? இலங்கையின் Department of External Resources அளிக்கும் தகவல்களின்படி பார்த்தால், இலங்கைக்கு கடன் அளித்த நாடுகளில் சீனா முதலிடத்திலும் ஜப்பான் இரண்டாம் இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இம்மாதிரியான தருணத்தில் இந்தியாவை உதாசீனம் செய்வது போன்ற சிக்கலான சூழலை அவர் ஏற்படுத்த மாட்டார் என்கிறார் கிளாட்ஸன். "அநுரவைப் பொருத்தவரை இந்தியத் திட்டங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கிறார். ஆனால், சீனாவைப் பற்றி விமர்சிப்பதில்லை. எனவே அவரிடம் ஒருவிதமான பாரபட்சம் இருக்கிறது என்று சொல்லலாம். இருந்த போதும் இலங்கை இன்னமும் பொருளாதார நெருக்கடியில்தான் இருக்கிறது. இந்தியா அளிக்கும் நிதியுதவி அந்நாட்டிற்குத் தொடர்ந்து தேவைப்படும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது உடனடியாக நிதியுதவி செய்தது இந்தியாதான். இந்த விஷயங்களை புதிய ஜனாதிபதி மனதில் கொள்வார் என கருதுகிறேன். இந்தியாவைத் தவிர்த்துவிட்டு, ஒரு சிக்கலான சூழலுக்கு நாட்டை இட்டுச்செல்ல மாட்டார்" என்கிறார் கிளாட்ஸன் சேவியர். இந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் சஜித்திற்கு கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டும் ஜெயதேவா, "தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிப்பது குறித்து அநுர குமார திஸாநாயக்க சிந்தித்தாக வேண்டும்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c7v6z10d3mro
    • தேவையில்லாத ஆணி 2.25 இலட்சம் வாக்குகளை பிரிச்சுக்கிட்டு போயிட்டு. ரணில் நரியாரின் பிரித்தாளும் தந்திரமே அவரின் தோல்விக்கும் காரணமாகி விட்டது. அடிப்படையில் ரணில்- சஜித் கூட்டாக.. பெற்ற மொத்த வாக்குகள் அனுரவை விட அதிகம்.  ராஜபக்ச செல்வாக்கு அடியோடு காணாமல் போய் விட்டது. சரத்தின் குண்டு துளைத்த கார்.. செல்லாக் காசாகி விட்டது.
    • Published By: RAJEEBAN   23 SEP, 2024 | 07:58 AM   அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காபந்து அரசாங்கமொன்றை அமைப்பதே முன்னுரிமைக்குரிய நடவடிக்கை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் காபாந்து அரசாங்கத்தை அமைப்பதே முக்கிய முன்னுரிமைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள கட்சி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் வரை நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடு;ப்பதற்கான காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. நான்கு உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிச தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் அனுரகுமாரதிசநாயக்கவும் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றிருப்பார்கள் மக்கள் வழங்கிய ஆணையை இந்த அமைச்சரவை பிரதிபலிக்கும் என  அவர் தெரிவித்துள்ளார். ஏனைய கட்சிகளுடன் இணையாமல் எங்கள் அரசாங்கத்தை அமைப்போம் மக்கள் வழங்கிய ஆணையை முன்னெடுப்பதே எங்களின் முக்கிய நோக்கம்,தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அரசாங்கத்தில் இடம்பெற்றிருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் யார் என்ற கேள்விக்கு ஹரிணி அமரசூரிய குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை, என தெரிவித்துள்ள அவர் காபந்து அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194568
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.