Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புருஜோத்தமன் தங்கமயில்

 

sumanthiran_Art.jpg

 

“…தமிழ்ப் பொது வேட்பாளரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், தமிழர் தாயகத்தில் ஐந்து இலட்சத்துக்கும் குறையாமல் வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அப்போதுதான், அது தமிழ்த் தேசிய அரசியலின் வெற்றியாக பார்க்கப்படும்....” என்று தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் அண்மைய youtube செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார். இந்தப் பத்தியாளரோ, சில வானொலிச் செவ்விகளில் 160,000 முதல் 180,000 வரையான வாக்குகளை அரியநேத்திரன் பெறுவார் என்று கூறி வந்திருக்கிறார். ஆனால், இந்தப் பத்தியாளர் எதிர்வுகூறியதைக் காட்டிலும் 46,343 வாக்குகளை அவர் அதிகம் பெற்றிருக்கிறார். அதேவேளை, பொது வேட்பாளருக்காக சொந்தக் கட்சியின் முடிவுக்கு எதிராக நின்று வாக்குச் சேகரித்த சிறீதரனின் ‘ஐந்து இலட்சம் வாக்குகள்’ என்ற எதிர்பார்ப்பில், அரைவாசியைக்கூட, அரியநேத்திரனால் தாண்ட முடியவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் பதிவு செய்திருக்கின்றன.  
 
ஏழு கட்சிகளும், எண்பத்து மூன்று அமைப்புக்களும் உள்ளடங்கிய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினாலும், தமிழரசுக் கட்சியின் சிறீதரன், அரியநேத்திரன் உள்ளடங்கிய அணியினராலும் தமிழ்ப் பொது வேட்பாளர்  என்கிற எண்ணக்கரு, இந்த ஜனாதிபதித் தேர்தலில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பரீட்சார்த்த முயற்சிக்குப் பின்னால் பல காரணங்கள் உண்டு. அதில், பிரதானமானது, முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலில் ‘சம்பந்தன்- சுமந்திரன்’ அணுகுமுறைக்கு மாற்றான அணியொன்றைக் கட்டுதல் என்பதாகும். கூட்டமைப்பில் இருந்து 2010 பொதுத் தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வெளியேறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தோற்றுவித்தார். அன்றுமுதல், சில அரசியல் பத்தியாளர்களும், புலம்பெயர் தரப்பினரும் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அரசியல் சக்தியாக முன்னணியை சித்தரிக்கத் தொடங்கினர். அத்தோடு சம்பந்தனுக்கு மாற்று கஜேந்திரகுமார் என்று நிறுவத் தலைப்பட்டனர். ஆனால், 2015 பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் பெரு வெற்றியும் முன்னணியின் படுதோல்வியும் ‘முன்னணி’ மீதான அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புக்களையும் பொய்யாக்கியது. அதன் பின்னர், அவர்கள்  சம்பந்தனும் சுமந்திரனும் கொழும்பிலிருந்து அழைத்து வந்து வடக்கில் முதலமைச்சராக்கிய சி.வி.விக்னேஸ்வரனை மாற்றுத்தலையாக மாற்றத்தலைப்பட்டனர். அந்த வேலையை தமிழ் மக்கள் பேரவை செய்து வந்தது. அதுவும் பொய்த்துப்போன புள்ளியில், கூட்டமைப்புக்கு, அதாவது சம்பந்தன்- சுமந்திரனின் அரசியலுக்கு மாற்று யார்? என்பது தொடர் தேடல் ஆனது. அந்தத் தேடலுக்கான பதிலை, கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு சந்தித்த பின்னடைவும், தமிழரசுக் கட்சிக்குள் எழுந்த குழப்பங்களும் சேர்ந்து வழங்கின. அதுதான், இன்றைக்கு தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஆரம்பங்களுக்கு காரணமானது.
 
ஆக, சம்பந்தன் - சுமந்திரன் அரசியலுக்கான மாற்றுத் தலைமையை நிறுவுவது தொடர்பிலான நீண்ட தேடலை, பொதுக் கட்டமைப்பினர் இப்போது பொது வேட்பாளருக்கான வாக்குச் சேகரிப்பினூடு சாதித்துக் காட்டத் தலைப்பட்டிருக்கிறனர். ஆனால், அதுவும்கூட தமிழரசுக் கட்சியினால் கழட்டி விடப்பட்ட ரெலோ, புளொட் உள்ளிட்ட கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சிகள் மற்றும் தமிழரசின் உட்பிளவுகளினால் அலைக்கழியும் மாவை சேனாதிராஜா, சிறீதரன் போன்றவர்களினால் தோன்றியிருக்கின்றது.
 
பொதுக் கட்டமைப்பினர், தமிழ்ப் பொது வேட்பாளர் என்கிற விடயத்தை தூக்கிக் கொண்டு அரங்கிற்கு வந்த போதே, இந்தப் பத்தியாளர் அதனை  அவசரக் குடுக்கைத்தனமான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார். குறிப்பாக, யாழ்ப்பாணத்துக்குள் இருந்து மாத்திரம் பொது வேட்பாளர் என்கிற எண்ணக்கரு முன்வைக்கப்படுகின்றது. அதனை, வடக்குக் கிழக்கின் அனைத்து மாவட்டங்களின் தனித்துவமான பிரச்சினைகள், சிக்கல்களை உள்வாங்கி முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், அவை எதுவும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. ஆரம்பத்தில், பொது வாக்கெடுப்பாக ஜனாதிபதித் தேர்தலை அணுக வேண்டும், அதன் பொருட்டு தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்கள். அந்த அரசியல் நிலைப்பாட்டுக்குப் பின்னாலுள்ள சிக்கல்களை எடுத்துக்கூறியதும், பொது வாக்கெடுப்பு என்கிற நிலையில் இருந்து விலகி, தமிழ்த் தேசிய வாக்குகளை ஒன்றிணைத்தல் என்ற நிலைக்குள் சுருக்கினார்கள். பொது வாக்கெடுப்பு என்கிற நிலையை இறுதி வரையில் பிடித்துக் கொண்டிருந்தால், இன்று அரியநேத்திரன் பெற்றிருக்கின்ற வாக்குகள், தமிழர் தாயகத்தின் மொத்த வாக்குகளில் சுமார் 14 வீதம் மாத்திரமே. அது, தமிழ்த் தேசிய அரசியலின் பெரும் தோல்வியாக பதிவு பெற்றிருக்கும். நல்லவேளையாக அது நடைபெறவில்லை. மாறாக, தமிழ்த் தேசிய வாக்கு ஒருங்கிணைப்பு மற்றும் சம்பந்தன்- சுமந்திரன் அணுகுமுறைக்கு மாற்றான தலைமைத்துவத்தை கண்டடைதல் என்ற நிலைகளில் நின்று கொண்டது.
 
சம்பந்தன் – சுமந்திரன் அரசியல் அணுகுமுறைக்கு மாற்றான தலைமைத்துவத்தை, பொதுக் கட்டமைப்பினர் எதிர்பார்த்தது மாதிரி கண்டடைய முடிந்திருக்கிறதா, அரியநேத்திரன் பெற்றிருக்கும் வாக்குகள் அதனைப் பிரதிபலிக்கின்றதா? என்ற கேள்விகள் முக்கியமானவை. அதனை எந்தவித பூச்சுக்களும் இன்றி நேரடியாக நோக்கினால், அதற்கான பதில் எதிர்மறையானது. ஏனெனில், தமிழர் தாயகம் எங்கும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு மதிப்பளித்த தேர்தல் முடிவுகளே கிடைத்திருக்கின்றன. அதுவும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை, புதிய தலைவராக தேர்வாகி பதவியேற்க முடியாமல் போன சிறீதரன், பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிறீநேசன், யோகேஸ்வரன், பொது வேட்பாளராக நின்ற அரியநேத்திரன் என்று தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பொதுக் கட்டமைப்பினரோடு நின்று, பொது வேட்பாளருக்காக வாக்குச் சேகரித்தார்கள். பொதுக் கட்டமைப்பில் ஏற்கனவே ஏழு கட்சிகள் இருக்கின்றன. அதற்குள் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.  ஆக, சுமந்திரன், சாணக்கியன், அவ்வப்போது தலைகாட்டிய கலையரசன் ஆகிய தமிழரசின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் நின்று வாக்குச் சேகரித்தார்கள். ஏழு கட்சிகள் ஒன்றாய் நின்றன. சிவில் அமைப்புக்களும் இணைந்து நின்றன. ஆனால், அவர்களினால், தமிழரசின் சுமந்திரன் -சாணக்கியன் அணியால், பெற முடிந்த வாக்குகளில் பகுதியளவைக் கூட தாண்ட முடியவில்லை. இதில், வேடிக்கை என்னவென்றால், கிளிநொச்சியின் ஜமீனாக வலம் வரும் சிறீதரனால், கட்சியின் மாவட்டக்கிளையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிந்ததேயன்றி, அவரினால் கிளிநொச்சி வாக்காளர்களை வெற்றிகொள்ள முடியவில்லை. அவரைவிட சுமந்திரனுக்கு பின்னால் திரண்ட தமிழரசு வாக்காளர்கள் சஜித்துக்கு அதிக வாக்குகளை வழங்கினர். அதில், சந்திரகுமாருக்கும் அவரின் சமத்துவக் கட்சிக்கும் கணிசமான பங்குண்டு.
 
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் சஜித்தின் வாக்குகளைவிட அரியநேத்திரன் ஒரு சில ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார். அந்த வாக்குகளை, சித்தார்த்தன், விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை(!), ஐங்கரநேசன், சிறீகாந்தா, மணிவண்ணன் போன்றவர்கள், தங்களுக்கான உரித்தாக கோரி நிற்கிறார்கள். அங்குதான் பொதுக் கட்டமைப்பின் அரசியல் பத்தியாளர்கள் பலரும் இருக்கிறார்கள். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிதான் வென்றிருக்கின்றது. அந்த வெற்றிக்கான உரித்தை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உழைத்த சுமந்திரன் அணியினர் கோருகிறார்கள். ஏனெனில், அவர்களைத் தாண்டி, தமிழரசுக் கட்சிக்குள் வேறு யாரும் சஜித்துக்காக பிரச்சார நடவடிக்கைகளையே முன்னெடுக்கவில்லை.
 
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், கரையோரத் தேர்தல் தொகுதிகளில் அரியநேத்திரன் வென்றிருந்தார். அது ஏன் நிகழ்ந்தது என்று தேடினால், ‘தமிழ்த் தேசியம் – ஒருங்கிணைவு’ என்ற அடையாளங்களுக்கு அப்பாலான ஒரு விடயம் மேலெழுகின்றது. வடக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் எல்லைதாண்டிய அத்துமீறல்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனைத் தீர்ப்பது தொடர்பில் இந்தியா அக்கறையின்றி, மேலும் மேலும் அத்துமீறும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாக மீனவ சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. அப்படியான நிலையில், சஜித் இந்தியாவின் தெரிவு என்ற உணர்நிலையொன்று தமிழ் அரசியல் பரப்பில் எழுந்தது. இந்தியாவின் தெரிவைத்தான் சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் முடிவாக அறிவித்துவிட்டார் என்ற கோபம், மீனவர் சங்கங்கள் உள்ளிட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்களிடம் உண்டு. அந்தக் கோபம், அவர்களை பொதுக் கட்டமைப்பின் பின்னால் திரள வைத்து, சங்குக்கான வாக்குகளாக மாற்றிவிட்டது. இப்படி, யாழ்ப்பாணத்தில் பொதுக் கட்டமைப்பின் வாக்குத் திரட்சிக்குப் பின்னால், பல சமூகக் காரணிகளும் உண்டு.
 
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 116000 வாக்குகளைப் பெற முடிந்த பொது வேட்பாளரினால், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் முதல் இரண்டு இடங்களுக்குள் ஒருவராக கூட வர முடியவில்லை. கிழக்கில் அது இன்னும் மோசம். முதல் மூன்று இடங்களுக்குள் அரியநேத்திரன் இல்லை. குறிப்பாக, அவரின் சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் அவர், 36000 வாக்குகளுக்குள் சுருங்கிவிட்டார். நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டார். வழக்கமாக ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் சார்பிலான  வரைபடத்தில் வடக்கு கிழக்கு – மலையகம் உள்ளடங்கிய தமிழ் பேசும் எண்ணிக்கை சிறுபான்மையினரின் வாக்குகள் சொல்லும் செய்திக்கும் தென் இலங்கையின் செய்திக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் இருக்கும். இந்தத் தேர்தலிலும் அதுவே, பிரதிபலித்திருக்கின்றது. அந்த தெளிவான வேறுபாட்டிற்கான உரித்தாளர்களாக வடக்கு கிழக்கில் தமிழ் வாக்குகளை தமிழரசுக் கட்சியும், (சுமந்திரன் – சாணக்கியன் அணியும்), முஸ்லிம் வாக்குகளுக்கான உரித்தை முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், மலையக தமிழ் மக்களின் வாக்குகளுக்கான உரித்தை தமிழர் முற்போக்குக் கூட்டணியும் எடுத்துக் கொள்ள முடியும்.
 
இப்போது, வடக்கு – கிழக்கில் பொதுக் கட்டமைப்பினர் பெற்றுக் கொண்டிருக்கின்ற வாக்குகளை வைத்துக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையாக எதனை முன்னெடுப்பார்கள் என்ற விடயம் மேலெழுகின்றது. ஏனெனில், சிறீதரன் எதிர்பார்த்தது போல, ஐந்து இலட்சம் வாக்குகளை பொதுக் கட்டமைப்பினரால் பெற முடியவில்லை. அப்படியானால், அதனை தமிழ்த் தேசிய வாக்குகளின் பூரண ஒருங்கிணைவாக கொள்ள முடியாது. தமிழரசுக் கட்சி பெற்ற வாக்குகளில் அரைவாசி அளவை வேண்டுமானால் அவர்கள் பெற்றதாக கொள்ள முடியும். இப்போது, பொதுக் கட்டமைப்பினர் முன்னால் உள்ள சவால், அடுத்து வரும் தேர்தல்களை இந்தக் கட்டமைப்பாக எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதான். ஏனெனில், பொது வேட்பாளருக்காக ஆதரவாக களமிறங்கி வேலை செய்த தமிழரசுக் கட்சிக்காரர்களை, அந்தக் கட்சி எவ்வாறு கையாளும் என்று தெரியவில்லை. இப்போது, சிறீதரனே தன்னுடைய கோட்டையான கிளிநொச்சியை,  சுமந்திரன் அணியிடம் பறிகொடுத்துவிட்டார். அப்படியான கட்டத்தில், சிறீதரன் எப்படி தன்னை கட்சிக்குள் நிலைப்படுத்துவர்? அவரினால் இனி சுமந்திரன் அணியை கிளிநொச்சிக்குள் கையாள முடியாமல் போகலாம். ஏற்கனவே, அவரினால் கட்சியின் மத்திய குழுவைக் கையாள முடியாமல் இருக்கின்றது. இவையெல்லாம் சேர்ந்து, சிறீதரனை, பொதுக் கட்டமைப்பின் அங்கமாக மாற்றிவிடும் சூழல் உண்டு.
 
பொதுக் கட்டமைப்பிலுள்ள அரசியல் பத்தியாளர்களுக்கு தேர்தல் முடிவுகள் உற்சாகம் ஊட்டியிருப்பதாக தெரிகிறது. அவர்கள், புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக் கட்டமைப்பிலுள்ள முன்னாள் ஆயுத இயக்கங்கள் தவிர்ந்த தரப்புக்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பது சார்ந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தக் கட்சியின் தலைவராக சிலவேளை சிறீதரன் வருவதற்கான வாய்ப்புக்களையும் மறுப்பதற்கு இல்லை. முன்னாள் ஆயுத இயக்கங்களை பங்காளிகளாக இணைந்து பொதுக் கட்டமைப்பு பரந்துபட்ட தேர்தல் கூட்டணியாக நிலைபெறும் நோக்கைக் கொண்டிருக்கின்றது. அப்படி நடைபெற்றால், பொதுக் கட்டமைப்பினால் யாழ்ப்பாணத்தில் குறைந்தது இரண்டு ஆசனங்களை வெற்றிகொள்ள முடியும். அதுபோல, வன்னியில் முயற்சித்தால் ஒரு ஆசனத்தை பெறலாம். அத்தோடு ஒரு தேசியப்பட்டியல் கணக்கும் அவர்களிடத்தில் இருக்கிறது. அப்படியான கட்டத்தில், சம்பந்தன் – சுமந்திரனின் அரசியலுக்கு மாற்றாக தங்களை நிரற்படுத்திக் கொள்ள முடியும் என்று பொதுக் கட்டமைப்பினர் நம்புகிறார்கள். ஆனால், அவர்களினால் கிழக்கில் எப்படியான அடைவுகளைக் காட்ட முடியும் என்பது முக்கிய கேள்வி. ஏனெனில், அவர்களினால் கிழக்கில் ஒரு ஆசனத்தைக்கூட வெற்றிபெறும் அளவுக்கான வாக்குகளை பெற முடியவில்லை. பொதுக் கட்டமைப்பினரின் எதிர்காலப் பயணத்தினால் பாதிக்கப்படப் போகும் தரப்பினர், முன்னணி அடையாளத்தோடு இருக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸினர்தான். தமிழரசு உள்ளடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளை இதுவரை காலமும் குறிவைத்து கவர்ந்து வந்த முன்னணியினர், அதனை பொதுக் கட்டமைப்பினரிடம் இழக்க வேண்டி வரும். அதனால்தான், சங்குக்கு வாக்குச் சேகரித்தவர்களுக்கு எதிராக நின்று முன்னணியின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் களமாடுகிறார்கள்.
 
தேர்தல் முடிவுகள் என்ன செய்தியைச் சொல்கின்றன என்பதை அரசியலில் நம்பிக்கையும் ஆர்வமும் உள்ளவர்கள் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தல், தமிழ்த் தேசியப் பரப்பில் தெளிவான சில செய்திகளை சொல்லியிருக்கின்றன. அதனை உள்வாங்கி பிரதிபலிக்க வேண்டும். இனி, தமிழ்த் தேசிய அரசியல் யாழ்ப்பாணத்துக்குள் தமிழரசு (சுமந்திரன் அணி) எதிர் பொதுக் கட்டமைப்பாகவும், யாழ்ப்பாணத்துக்கு வெளியே தமிழரசின் ஏகபோகமாகவும் நிலைபெறலாம்.
 
முகப்புப் படம் ஆர்.ராஜேஸ்/ தி ஹிண்டு
 
காலைமுரசு பத்திரிகையில் செப்டம்பர் 23, 2024 வெளியான பத்தி.
 
 
சம்பந்தன் - சுமந்திரன் அரசியலாம்!!
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியில் ஒரு உடைவு இருக்கு. கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாத அரியம் மற்றும் பார் ஶ்ரீதரன் போன்றோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்ப ஒர் உடைவு இருக்கு!  

  • கருத்துக்கள உறவுகள்

முதலில், இந்த உள்ளகப் போட்டியே, இந்த தேர்தலில் நிகழ்ந்திருக்கக் கூடாதென நான் கருதுகிறேன்.

தமிழர்களுக்கு தீரவைப் பெற்றுக் கொடுக்க ஆர்வமாயிருப்போர் பொதுத் தேர்தலில் தங்கள் திட்டங்களை முன்வைத்து வாக்குக் கேட்டுப் போட்டியிடுவது தான் முறை. 2020 இல் அப்படிப் போட்டி போட்டு, 3 வெவ்வேறு நிலை கொண்ட தமிழ் கட்சிகளையும், இரு தேசியக் கட்சி ஆட்களையும் வடக்கு கிழக்கு மக்கள் தேர்தெடுத்தார்கள். அதே போல மீண்டும் 2024/25 இலும் தேர்ந்தெடுக்க போட்டி போடுவது தான் முறை.

அதை விட்டு விட்டு, ஜனாதிபதி தேர்தலில் இந்த சிறு பிள்ளை வேளாண்மையை பொதுக் கட்டமைப்பு ஆரம்பித்தது பயனற்ற வேலை!

"விலகி இடங்கொடு, நான் வர வேணும்😎!" என்று சும்மா அலட்டிக் கொண்டிருக்காமல் பொதுத் தேர்தலில் நின்று மக்கள் ஆணையைப் பெற்ற பின்னர் பேசினால், பொதுக்கட்டமைப்பின் பின் நிற்கும் ஆட்களுக்கு மரியாதை திரும்பக் கிடைக்கலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து பாராளுமன்ற தேர்தலிலும், சிங்கள மக்கள் பெரும்பான்மையாக புதியவர்களையே தெரிவுசெய்து அநுரவுக்கு பெரும்பான்மையை கொடுப்பார்கள். அநுர முன்னிறுத்தப் போகும் கல்வியாளர்களே அடுத்த பாராளுமன்றில் பெரும்பான்மையாக இருக்கப் போகிறார்கள்.

அதேபோல் தமிழர்களும் மாற வேண்டும். இப்போதுள்ள அனைத்து (கவனிக்க :அனைத்து) எம்பிக்களையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு புதிய எம்பிக்களை தெரிவு செய்ய தமிழ் மக்கள் முன்வர வேண்டும்.

படித்த இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து பிரதேசவாதத்தை மறந்து அடுத்த கட்ட தமிழ் அரசியல் நகர்வை நடத்த வேண்டும்.

ஆகக்குறைந்தது, பிரதேசவாதம் பேசி மக்களைத் தூண்டிய பிள்ளையான், அமல், ஒட்டுக்குழுக்களான டக்ளஸ், சித்தார்த்தன், அடைக்கலநாதன்...etc , வேலைதாறன் அபிவிருத்தி அரசியல் என்று சனத்தை பேய்க்காட்டிய அங்கஜன்,  பேரினவாதம் திட்டமிட்டு தமிழ் அரசியலை அழிக்க அனுப்பிய சுத்து மாத்து போன்றோரையாவது நிரந்தரமாக அரசியலை விட்டு நீக்க வேண்டும். இவர்களில் ஒருவராவது மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் தமிழர் விடும் இறுதி வரலாற்றுத் தவறாக அது மாறும். அதற்குப்பிறகு தவறுவிட தமிழர் என்றொரு இனம் இருக்காது.

தமிழர்களிடம் இந்த மாற்றம் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் இதைப் பகிருங்கள்.

தமிழர்களிடமும் புதிய அரசியல் கலாச்சாரம் வரட்டும்!

வட்சப்பில் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் சுமத்திரனின் தீவிர சொம்பு என அறியக் கூடியதாக இருக்கிறது. சுமத்திரன் சொல்லித்தான் சஜீத்துக்கு மக்கள் ஆதரவளித்தார்கள் என்று நிறுவ முற்பட்டிருக்கிறார்.எந்தக் கட்சியும் ஆதரவளிக்காவிட்டாலும் தமிழ்மக்களின் தெரிவு அனுராவோ .ரணிலோ அல்ல.சஜித்தான் அவர்களின் தெரிவாக இருந்தது. இடையில் பொது வேட்பாளர் போட்டியிட்டதால் சஜித் கணிசமான வாக்கை இழந்திருக்கிறார். சுமத்திரன் தரப்பு ஆதரவு கொடுத்ததனாலும் கணிசமான வாக்கை இழந்திருக்கிறார்.சஜித்தின் தோல்விக்கு தமிழ்மக்கள் வாக்குகள் சிதறியமை ஒரு முக்கிய காரணமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

.

அதேபோல் தமிழர்களும் மாற வேண்டும். இப்போதுள்ள அனைத்து (கவனிக்க :அனைத்து) எம்பிக்களையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு புதிய எம்பிக்களை தெரிவு செய்ய தமிழ் மக்கள் முன்வர வேண்டும்.

படித்த இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து பிரதேசவாதத்தை மறந்து அடுத்த கட்ட தமிழ் அரசியல் நகர்வை நடத்த வேண்டும்.

 

தமிழர்களிடம் இந்த மாற்றம் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் இதைப் பகிருங்கள்.

தமிழர்களிடமும் புதிய அரசியல் கலாச்சாரம் வரட்டும்!

வட்சப்பில் வந்தது.

இதைத் தான் 2009க்கு பின்னர் இங்கே தொடர்ந்து எழுதி வருகிறேன். நன்றி பகிர்வுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, புலவர் said:

கட்டுரையாளர் சுமத்திரனின் தீவிர சொம்பு என அறியக் கூடியதாக இருக்கிறது. சுமத்திரன் சொல்லித்தான் சஜீத்துக்கு மக்கள் ஆதரவளித்தார்கள் என்று நிறுவ முற்பட்டிருக்கிறார்.எந்தக் கட்சியும் ஆதரவளிக்காவிட்டாலும் தமிழ்மக்களின் தெரிவு அனுராவோ .ரணிலோ அல்ல.சஜித்தான் அவர்களின் தெரிவாக இருந்தது. இடையில் பொது வேட்பாளர் போட்டியிட்டதால் சஜித் கணிசமான வாக்கை இழந்திருக்கிறார். சுமத்திரன் தரப்பு ஆதரவு கொடுத்ததனாலும் கணிசமான வாக்கை இழந்திருக்கிறார்.சஜித்தின் தோல்விக்கு தமிழ்மக்கள் வாக்குகள் சிதறியமை ஒரு முக்கிய காரணமாகும்.

சுமந்திரன் கை காட்டின சஜித்தை…
சுமந்திரனின் சொந்த ஊர் பருத்தித்துறையிலேயே
அரியநேத்திரன் 8658 வாக்குகள் பெற்று  முதலாம் இடம்.
சஜித் 6100 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்.
சுமந்திரனை…. அவரது சொந்த ஊர் மக்களே கணக்கில் எடுக்கவில்லை. 
இதற்குள் சுமந்திரன் துதி பாட.. சில செம்புகள் முண்டியடிக்குதுகள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

பட்டாசு கோஷ்டி அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகீட்டுது போலை!😂

ஒண்டு போக ஒண்டு எண்டு வெட்கமே இல்லாமல் வருங்கள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஆகக்குறைந்தது, பிரதேசவாதம் பேசி மக்களைத் தூண்டிய பிள்ளையான், அமல், ஒட்டுக்குழுக்களான டக்ளஸ், சித்தார்த்தன், அடைக்கலநாதன்...etc , வேலைதாறன் அபிவிருத்தி அரசியல் என்று சனத்தை பேய்க்காட்டிய அங்கஜன்,  பேரினவாதம் திட்டமிட்டு தமிழ் அரசியலை அழிக்க அனுப்பிய சுத்து மாத்து போன்றோரையாவது நிரந்தரமாக அரசியலை விட்டு நீக்க வேண்டும். இவர்களில் ஒருவராவது மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் தமிழர் விடும் இறுதி வரலாற்றுத் தவறாக அது மாறும். அதற்குப்பிறகு தவறுவிட தமிழர் என்றொரு இனம் இருக்காது.

 

இது தான் இலக்கு👆! இதை பொது வேட்பாளர் மூலம் செய்ய இயலாமல் போய் விட்ட கோபத்தில் தான் இனி பொதுத் தேர்தலை எதிர் கொள்வர்😂!

இதைத் தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்: தீவிர தேசியவாத தமிழர் அரசியலில் - குறைந்த பட்சம் இந்த வட்சப் பதிவை எழுதுவோர் போன்றோரின் பார்வையில்- ஒரு சில குறிப்பிட்ட கருத்துகளை உரத்துச் சொல்வோர் மாத்திரமே கை தட்டி வரவேற்கப் பட வேண்டும், ஏனையோர் மக்கள் தேர்வு செய்தாலும் விரட்டப் பட வேண்டும்.

இந்த மக்கள் தீர்ப்பை மதிக்காத ஜனநாயக மறுப்பை ஆதரிக்கும் ஆட்களோ தேடிப் போய் அடைக்கலம் தேடுவது ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகளில்! அங்க இருந்து தான் ஊரில் ரௌடிகளும், ஒத்த ரூட் தீவிர போக்காளர்களும் உருவாக ஆசிர்வாதம் வழங்குவர்😂!

இவர்கள் எத்தனை தரம் வாக்காளர்கள் வாக்குகள் மூலம் சொன்னாலும் திருந்தப் போவதில்லை! விளக்குமாறால் தான் இந்த தீவிர தேசிய ரௌடிகளை அடித்து விரட்டுவர் மக்கள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.