Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 31/10/2024 at 22:40, கந்தப்பு said:

கிழக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் கட்சிக்கு வழங்கும் வாக்குகள் அக்கட்சி சார்பாக போட்டியிடும் தமிழரல்லாத வேட்பாளரை தெரிவு செய்ய உதவி செய்யும். உதாரணம்-  சிலதமிழர்கள்  தேசிய மக்கள் கட்சிக்கும் அக்கட்சி சார்பாக போட்டியிடும் 3 தமிழ்வேட்பாளர்களுக்கு வாக்களிக்கிறார்கள்.  தேசிய மக்கள் கட்சிஅம்மாவட்டத்தில் 2 இடங்களை கைப்பற்றுகிறது. அக்கட்சிக்கு வேட்பாளர்களில் அதிக வாக்குகளை பெறுபவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.  முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள் தமிழரல்லாதவர்களாகவும் இருக்கலாம். 

இதே போல தமிழர் தாயகத்தில் சிங்கள கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகள் தேசியரீதியில் தேசிய பட்டியலின் மூலம் தமிழருக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒருவரை தெரிவு செய்ய உதவலாம். 

தேசிய மக்கள் கட்சியின் திருமலை, அம்பாறை, வன்னி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள். எத்தனை தமிழர்கள் போட்டியிடுகிறார்கள் என்று பாருங்கள். 

Vanni District

R.H. Upali Samarasinghe
District Organizer
S. Thilakanadan
Veterinary
A. Mailvaganam Jegadishwaran
Teacher
M.A. Pathima Hajistha
Social Activist
V.A. Don Priyankara Premarathne
Student Scientist Mahaweli Authority
Yogaraja Sivaruban
Farmer
J. Ragar Anton Kamalasragar
Businessman
A. Raizdin Principal
Teacher
Ramaiya Radha Krishnan
Agricultural Insurance (Field Division Officer)

 

Trincomalee District

Arun Hemachandra
District Organizer
M.A. Mohammed Rafique
Teacher
P. Indika Priyadarshana Paranawithana
Farmer
A.G. Roshan Priyanjana
Teacher
Karunanayakage Shila
Social Activist
M. Niyaz Mohammed Sabraan
Assistant Manager
Yevugan Irajendran
Businessman

Digamadulla District

L.P.G. Wasantha Piyathissa
Full-Time Politician
A.M.M. Muthumanike Rathwatte
Retired Army
Mohammed Sultan Saththar
Teacher
Abubakar Adambavah
Teacher
M. Meemana Sugath Ratnayake
Teacher
M.M. Priyantha Kumara Wijerathna
Lawyer
A. Muhaideen Rameesh
Farmer
S.M. Buhari Mohammed Rizad
Teacher
R. Morris Anton
Retired Principal
K.M. Tilak Kithsiri
Regional Environment Officer

  • Replies 63
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

இந்தச் சட்டம் ஏற்கனவே உள்ளது என்றும் ஆனாலும் எவரும் கண்டுகொள்வதில்லை என்றும் சொல்கிறார்கள். இந்தத் தடவை அமுல்படுத்துவார்களா பார்ப்போம். அமுல்படுத்துவது மாத்திரமல்ல பகிரங்கப்படுத்தவும் வேண

வாதவூரான்

இவ்வளவு சனத்தொகை உள்ள கொழும்பிலையே மொத்தமாக 10 குழுக்கள் தான் போட்டியிடுகினம் ஆனால் வடக்குகிழக்கில் ? வாக்குகளைப்பிரிக்க திட்டமிட்டு களமிறங்குவதாகவே தெரிகிறது

நிழலி

கடைசியில் என்னையும் இவர்களை ஆதரிக்க வைக்கப் போகின்றார்கள். உண்மையில் நல்ல விடயங்களை செய்ய தொடங்கியுள்ளார்கள் போல் உள்ளது. கந்தளாயில் சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான 11,000 ஏக்கர் நிலத்தை குறுகிய க

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரச, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தேர்தல் விடுமுறைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

image

இம்மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தேர்தல் விடுமுறைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது, 

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்லும் தூரத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த விடுமுறைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் அல்லது அதற்கு குறைந்த தூரத்தில் இருப்பவர்களுக்கு அரைநாள் விடுமுறையும், 40 கிலோ மீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் விடுமுறையும், 100 கிலோ மீட்டரிலிருந்து 150 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒன்றரை நாள் விடுமுறையும், 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருப்பவர்களுக்கு இரு நாட்கள் விடுமுறைகளும் வழங்கப்படும்.

இதன்போது, அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் தனிப்பட்ட விடுமுறை விதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

gjh.jpg

uhjlo.jpg

https://www.virakesari.lk/article/197793

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

தேர்தல் திகதிக்கு எதிரான மனு தள்ளுபடி

Mayu   / 2024 நவம்பர் 04 , பி.ப. 12:14 - 0

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், முன்வைக்கப்பட்ட உண்மைகளை நீண்ட காலமாக பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

முறையான விசாரணைக்கு செல்லாமல் மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்  நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தேர்தல்-திகதிக்கு-எதிரான-மனு-தள்ளுபடி/150-346533

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ  வாக்காளரட்டை விநியோகம் இன்றுடன் (7) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது

உத்தியோகபூர்வ  வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட 27ஆம் திகதி முதல் இன்று வரை வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் நாளை (8) தபால் நிலையங்களுக்கு சென்று தங்களது வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமென சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

நாளை தொடக்கம் பொதுத் தேர்தல் நடைபெறும் நவம்பர் 14ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளரட்டைகளை தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக வாக்காளர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/311849

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல்கலைக்கழக, க.பொ.த உயர் தர மாணவ, மாணவிகளின் தேர்தல் விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

image

எதிர்வரும் 14 ஆம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள பல்கலைக்கழக மற்றும் க.பொ.த உயர் தர மாணவ, மாணவிகளின் தேர்தல் விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, 

பொதுத் தேர்தல் அன்று அரச பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்களுக்கும் அவற்றில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இயலுமான விதத்தில் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்களுக்கும் அவற்றில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கும் தேர்தல் விடுமுறையை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த 18 வயதை பூர்த்தி செய்த அனைத்து க.பொ.த உயர் தர மாணவ, மாணவிகளுக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்குமாறு மேலதிக வகுப்புகளின் முகாமையாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

fgb.jpg

dxfvg.jpg

https://www.virakesari.lk/article/198267

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்காளர்களிடம் மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ள வேண்டுகோள்...!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதனை தவிர்க்க வேண்டாம் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வாக்களிக்காதிருத்தல் அல்லது வாக்குச்சீட்டு சீட்டில் கிறுக்குவது பொருத்தமானது அல்ல. வாக்களிப்பதற்காக அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

வாக்காளர்களிடம் மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ள வேண்டுகோள்...! | Dont Ignore The Voting

வாக்களிக்காதிருப்பது சரியான தீர்மானம் அல்ல

வாக்களிப்பது எமது உரிமை, அது எமது அதிகாரம், அது எமது குரல், வாக்களிப்பதன் மூலம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மரணத்தை தவிர வாக்குரிமை மட்டுமே அனைவருக்கும் பேதமின்றி கிடைக்கப்பெறுகின்றது எனவும் எனவே வாக்களிக்காதிருப்பது சரியான தீர்மானம் ஆகாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

வாக்களிப்பை புறக்கணிப்பதன் மூலம் வாக்களிக்கும் நபர்களுக்கு விருப்பில்லாத ஒரு ஆட்சியாளர் ஆட்சி அதிகாரத்தில் அமர்வார் என மகிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டி உள்ளார். 

https://tamilwin.com/article/dont-ignore-the-voting-1731295517#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுத் தேர்தலில் இடது கையின் ஆள்காட்டி விரலில் மை

பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்படமாட்டாது என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க,மாறாக
இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கையின் சிறிய விரலுக்கு மை பூசினோம். பலருக்கு இன்னும் மை அடையாளங்கள் உள்ளன. எனவே, இம்முறை இடது கையின் ஆள்காட்டி விரலை குறியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து முதற்கட்டப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையும்.

இன்னும் 3 நாட்களில் இடம்பெறவுள்ள 10ஆவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், இந்த வருட தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/311956

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊடகங்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு அவதானிக்கும் -  கேம்பிரிஜ் அமைப்பின் தலைவர்

image

அபிலாஷனி லெட்சுமன்

தேர்தல் நடவடிக்கையின் போது வாக்காளர்களின் செயற்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயற்பாடுகள், தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் ஊடகங்களிள் செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் சர்வதேச தேர்தல்  கண்காணிப்பாளர்களால் அவதானிக்கப்படும் என கேம்பிரிஜ் அமைப்பின் தலைவர் நாசிம் சைடி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலையடுத்து, எதிர்வரும் 14 ஆம் திகதி  இடம்பெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் ரஷ்யா, பங்களாதேஷ், இந்தியா, மாலைத்தீவு, நெதர்லாந்து உள்ளிட்ட  நாடுகளிலிருந்து 10 பேர் கொண்ட சர்வதேச தேர்தல்  கண்காணிப்பு குழு  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில்  ஊடக  சந்திப்பொன்று  இடம்பெற்றது.

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் இதுவரையில் சிறப்பான முறையில் காணப்படுவதுடன்  கடந்த ஜனாதிபதி தேர்தல் மிக அமைதியாக  இடம்பெற்றதாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல்  கண்காணிப்பாளர்கள் தமது பணிகள் தொடர்பிலான விளக்கங்களையும் தேர்தல் நடைமுறை கண்காணிப்பு தொடர்பிலும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக  கேம்பிரிஜ் அமைப்பின் தலைவர் நாசிம் சைடி இதன்போது மேலதிக தகவல்களை வழங்கினார்.

WhatsApp_Image_2024-11-12_at_14.28.29.jp

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவில் சமூக அமைப்புகள், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன் அடிப்படையில் இதுவரையில் தேர்தல் செயற்பாடுகள் சிறப்பாகவும் அமைதியாகவும்  இடம்பெறுவதை நாம் அறிந்து கொண்டோம். 

கடந்த ஜனாதிபதி தேர்தலை போன்று அமைதியான முறையில் தற்போது இடம்பெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலும் அவ்வாறு இடம்பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். 

இங்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுவினால் தேர்தலுக்கு முதல் நாள், தேர்தல் தினத்தன்று, வாக்கு எண்ணும் பணி மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் தினம் ஆகிய நான்கு விடயங்களையும் கண்காணிப்பு செய்யவுள்ளோம்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள எமது சர்வதேச தேர்தல்  கண்காணிப்பு குழுவினால் நுவரெலியா, யாழ்பாணம், பதுளை, கம்பஹா, களுத்துறை, திருகோணமலை, மாத்தளை, பொலன்னறுவை, கொழும்பு மற்றும் மாத்தறை போன்ற 10 பிரதேசங்களில் தமது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

தேர்தல் நடவடிக்கையின் போது வாக்காளர்களின் செயற்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயற்பாடுகள், தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள்  மற்றும் ஊடகங்களிள் செயற்பாடுகள் போன்றவை தொடர்பிலான கண்காணிப்பு நடவடிக்கைகளை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் மேற்கொள்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேற்கூரிய விடயங்களை தொகுத்து ஆராய்ந்து தேர்தல் நிறைவடைந்த பின்பு தேர்தல் தொடர்பிலான எமது அறிக்கையினை வெளியிடுவதுடன் தொடர்ந்தும் தேர்தல் நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுவதோடு  வாக்களிக்கும் நடவடிக்கைகளும் சிறப்பாக இடம்பெறவேண்டும் என கேம்பிரிஜ் அமைப்பின் தலைவர் நாசிம் சைடி மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198509

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற ஒருவர் கைது

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கற்பிட்டி அல்மனார் வாக்குச் சாவடிக்கு அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

https://thinakkural.lk/article/311987

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் தேர்தல் முடிவு எப்போது?; வெளியானது அறிவிப்பு

2024 பாராளுமன்றத் தேர்தலின் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும்.
இந்த தகவலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/311982

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10  மணிக்கு வெளியாகும்

image

2024 பாராளுமன்றத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று வியாழக்கிழமை (14) தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவரும் நிலையில் மாலை 4 மணிக்கு நிறைவடையும். முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணும் பணி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும்.

10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதோடு, 17,140,354 நபர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

https://www.virakesari.lk/article/198680

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இத் தேர்தலில்  தேசிய மக்கள் சக்தி 124 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்கும் எனவும் சஜித் அணி 53 ஆசனங்களையும், ரணில் அடி 24 ஆசனங்களையும் கைப்பற்றலாம் எனவும் கருத்து கணிப்பு ஒன்று கூறியுள்ளதாம்.  

மிச்ச ஆசனங்களை சில்லறைக்கட்சிகள் கைப்பற்றலாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக வழக்கு

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் எதிராக வழக்கு தொடரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அனைத்து செலவு அறிக்கைகளையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 8,888 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், உரிய நேரத்தில் வருமான அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்தார்.AN

https://www.tamilmirror.lk/செய்திகள்/சலவ-அறககய-சமரபபககதவரகளகக-எதரக-வழகக/175-347291

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஏராளன் said:

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக வழக்கு

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் எதிராக வழக்கு தொடரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அனைத்து செலவு அறிக்கைகளையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 8,888 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், உரிய நேரத்தில் வருமான அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்தார்.AN

https://www.tamilmirror.lk/செய்திகள்/சலவ-அறககய-சமரபபககதவரகளகக-எதரக-வழகக/175-347291

இதென்ன பனையால விழுந்தவனை மாடு ஏறி மிதித்த மாதிரி இருக்கே.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுமுறை எடுக்க முடியாததால் ஒரு இலட்சம் தனியார்துறை ஊழியர்கள் வாக்களிக்கவில்லை

சுமார் ஒரு இலட்சம் தனியார்துறை ஊழியர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

விடுமுறை எடுக்க முடியாமல் அவர்கள் வாக்களிப்பதை தவிர்த்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் 12 நிறுவனங்களின் ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதற்கான எதிர் நடவடிக்கைகள் குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது.

https://thinakkural.lk/article/312244




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.