Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

parliment.jpg?resize=750,375

ஓய்வூதியத்தினை இழந்துள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்றம் முன்கூட்டி கலைக்கப்பட்டதன் காரணமாக 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்ற கலைக்கப்பட்டு வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 85 பேர் ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் குறித்த காலம் நிறைவடைவதற்கு முன்னதாக முன்கூட்டி கலைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் உறுப்பினர் ஒருவருக்கு அவரது சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது.

மேலும் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஓய்வூதியம் பெறுவதற்கு உரித்துடையவர்.

1977 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க ஓய்வூதிய சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு உரித்துடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நாடாளும்னறம் கலைக்கப்பட்டதன் காரணமாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஏனைய வரப்பிரசாதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1401192

  • கருத்துக்கள உறவுகள்

A Member of Parliament will receive a salary of Rs 54,285 (with a proposed increased to 120,000 from January 2018) paid monthly by the parliament, while Ministers, Deputy Ministers and State Ministers will receive a salary applicable to their grade from their Ministries.

The Act of Pensions to Parliamentarians was passed as per the Act of 1977 No. 01. An MP is entitled to enjoy a monthly pension of one-third of the monthly salary if he or she has completed a five-year term in Parliament. An MP who completes ten years is entitled to a monthly pension of two-thirds of the monthly salary.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பத்து வருடம் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால்…..
80,000 ரூபாய் ஓய்வூதியம் எடுக்கின்றார்கள்.
ஏழை நாட்டுக்கு இது மிக அதிகம்.  மக்களின் வரிப்பணம் எல்லாம் இப்படி வீணாக போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பத்து வருடம் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால்…..
80,000 ரூபாய் ஓய்வூதியம் எடுக்கின்றார்கள்.
ஏழை நாட்டுக்கு இது மிக அதிகம்.  மக்களின் வரிப்பணம் எல்லாம் இப்படி வீணாக போகின்றது.

பாராளுமன்றம் சென்று கதிரையில்  நித்திரை கொள்வது இலகுவான காரியமல்ல ..நாடியில் கை வைத்து பேச்சுக்களை அவதானிப்பது போல் நடித்து நித்திரை கொள்வ‌து மிக மிக கடினம்...அதற்கு 1 லட்சம் அல்ல அதைவிட அதிகம் கொடுக்க வேணும்...

சும்மா இருந்து சுகம் காண்பது மிகவும் கடினமான விடயம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பத்து வருடம் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால்…..
80,000 ரூபாய் ஓய்வூதியம் எடுக்கின்றார்கள்.
ஏழை நாட்டுக்கு இது மிக அதிகம்.  மக்களின் வரிப்பணம் எல்லாம் இப்படி வீணாக போகின்றது.

மகிந்த.   ரணில்   சந்திரிக்கா.  மைத்திரி.   கோத்தா, .......போன்றோரின்.  கொடுப்பனவுகளை அறிய. ஆவலுடன் இருக்கிறேன்      தெரிந்தால் அறியத் தரவும்.  

குறிப்பு,... அமெரிக்கர்களிடம்   மாட்டி விடவேண்டாம்   🙏😂🤪

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

பாராளுமன்றம் சென்று கதிரையில்  நித்திரை கொள்வது இலகுவான காரியமல்ல ..நாடியில் கை வைத்து பேச்சுக்களை அவதானிப்பது போல் நடித்து நித்திரை கொள்வ‌து மிக மிக கடினம்...அதற்கு 1 லட்சம் அல்ல அதைவிட அதிகம் கொடுக்க வேணும்...

சும்மா இருந்து சுகம் காண்பது மிகவும் கடினமான விடயம்

அதற்கு சம்பந்தரை அடிக்க ஆளே இல்லை.😆

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

மகிந்த.   ரணில்   சந்திரிக்கா.  மைத்திரி.   கோத்தா, .......போன்றோரின்.  கொடுப்பனவுகளை அறிய. ஆவலுடன் இருக்கிறேன்      தெரிந்தால் அறியத் தரவும்.  

குறிப்பு,... அமெரிக்கர்களிடம்   மாட்டி விடவேண்டாம்   🙏😂🤪

இந்த திரியில் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் இருக்கலாம் அண்ணை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.