Jump to content

வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்

adminSeptember 27, 2024
IMG-20240927-WA0013-1170x658.jpg

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய தஇனம் வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும். இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன்.

 வேறு எந்த ஜனாதிபதி வந்திருந்தாலும் இந்த பதவி எனக்கு கிடைத்திருக்கவும் மாட்டாது வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கவும் மாட்டேன் என தெரிவித்தார்.

IMG-20240927-WA0002-800x450.jpgIMG-20240927-WA0005-800x450.jpgIMG-20240927-WA0009-800x450.jpgIMG-20240927-WA0014-800x450.jpg
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண ஆளுநராக நியமனம்; ஐனாதிபதி அநுர  நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி

anura-7.jpg

அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய ஐனாதிபதி இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம் ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது.

இலங்கை ஐனாதிபதி தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, 9 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் பதவி விலகினர். தொடர்ந்து, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனும் ஒருவர். இவர் இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தகாலத்தில் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து மட்டகளப்பு, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஆட்சியராக வேதநாயகன் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வேதநாயகன் பணியாற்றிய இடங்களில் சாதாரண மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இந்தியா-இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார்.
 

https://akkinikkunchu.com/?p=293162

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி வாழ்த்து

Published By: VISHNU   27 SEP, 2024 | 11:15 PM

image

வடமாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்த இந்திய துணைத் தூதர் சாய் முரளி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

FB_IMG_1727454419265__1_.jpg

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி வடமாகாணத்தின் ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது, வடக்கில் இந்தியாவிற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/194955

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுரா.... இந்திய துணைதூத்ரகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ,இல்லையென்றால் இப்படியான படம் காட்டல் தொடரும்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.