Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

ஈரானிய உளவாளி இஸ்ரேல் தரப்புக்கு தெரிவித்துள்ளார்.

ஈரானியர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை😅 ...ஒற்றுமை இருந்திருந்தால் அவர்கள் எப்பவோ இஸ்ரேலை துவசம் பண்ணியிருக்கலாம்  ,எமது சொல்லை கேட்கவில்லை😅 ...சகோதர படுகொலைகளை செய்த காரணத்தால் தான் இவர் கொலை செய்யப்பட்டார் .😅..
லெபனானின் இறையாண்மையை மீறியமையும் ஒரு காரணம்...
தொடர்ந்து நாம் சொல்வது என்ன என்றால் இஸ்ரேலுடன் இவர்கள் இணக்க அரசியல் செய்ய வேண்டும் அப்படியென்றால் இவர்களின் இருப்பை தக்க வைக்கலாம்...😅
லெபனான் மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்த்து இருப்பை தக்க வைக்க வேணும் வீர வசனம் பேசுவதில் பயனில்லை😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தீராத கோபத்தையும், தீராத பழியையும் தன்னகத்தே  சேகரித்து வைத்திருக்கும் இஸ்ரேல் எத்தனை நாட்களுக்கு/காலத்திற்கு தன் மக்களை சுதந்திரமாக வாழ பாதுகாப்பு கொடுக்கும்?

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான் இஸ்ரேல் பொதுமக்கள் வாழ்க்கை..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/9/2024 at 19:13, putthan said:

 

 

இதில் ஒர் வித்தியாசம் உண்டு பலஸ்தீனருக்காக ஏனைய முஸ்லீம்கள் போராடினார்கள் ஆனால் எமது மண்ணில் எமது போராளிகள் மட்டுமே போராடினார்கள்....நாம் இனத்திற்காக போராடியவ்ர்கள் அவர்கள் மதத்திற்காக போராடுகிறார்கள் 

ஆரம்ப காலங்களில் பல தமிழ் இயக்கங்களுக்கு இராணுவ பயிற்சியும் ஆயுத கொள்வனவுக்கான முகவர்களையும் பாலஸ்தீனியர்களே வழங்கினார்கள்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Maruthankerny said:

ஆரம்ப காலங்களில் பல தமிழ் இயக்கங்களுக்கு இராணுவ பயிற்சியும் ஆயுத கொள்வனவுக்கான முகவர்களையும் பாலஸ்தீனியர்களே வழங்கினார்கள்

மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி அண்ணா......

தொட‌ர்ந்து எழுதுங்கோ........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு

ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் புதிய தலைவராக ஹஷேம் சஃபிதீன் பதவியேற்றுள்ளார்.

இவர் ஹிஸ்புல்லாவின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவின் உறவினராவார்.

நஸ்ரல்லாவைப் போலவே இருக்கும் சஃபிதீன் ஹிஸ்புல்லா இயக்கத்தில் ஆரம்பம் முதலே இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.

இதேவேளை ஹிஸ்புல்லா இயக்கத்தின் நிர்வாக சபையின் தலைவராகவும் சஃபிதீன் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/310115

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலை தாக்க நடந்த இரகசியத் திட்டம்! Hassan Nasrallah மரணம் ஏற்படுத்தியுள்ள தாக்கம்!!

ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நசரல்லாவைத் தாக்கி அழிக்க இஸ்ரேல் எதற்காக இந்தக் காலகட்டத்தைத் தேர்ந்தெடுத்திருந்தது?

ஹிஸ்புல்லாக்களுக்கு அருகில், ஹிஸ்புல்லா அமைப்புக்கு உள்ளே நீண்டகாலமாகச் செயற்பட்டுவந்த இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு நினைத்திருந்தால்- Hassan Nasrallahவை முன்னரேயே அகற்றி இருக்க முடியும்.

அப்படியிருக்க எதற்காக இந்தத் தருனத்தைத் தேர்ந்தெடுத்திருந்தது இஸ்ரேல்?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/9/2024 at 16:34, நியாயம் said:

 

இங்கு பெரியதொரு வித்தியாசம் என்ன என்றால் ஹமாஸ்/ஹிஸ்புல்லா ஆயுதங்களை மெளனிக்கபோவது இல்லை.

இது உண்மைதான், ஆனால் இந்த கொடுமை எவ்வளவு காலமாக இந்த மக்கள் உலகின் கண் முன்னால் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், எமது போராட்டம் முடிவுக்கு வந்த காலத்தில் நிலவிய உலக ஒழுங்கு தற்போது இல்லை என்றே சொல்லலாம் அதனால் இப்படியான ஒரு நிலை நிலவுகிறது இதுவே அப்படியான ஒரு கால கட்டமாக இருந்தால் இஸ்ரேல் மிக மோசமான முறையில் அடக்கி இருப்பார்கள் அது போல இவ்வலவு காலம் இந்த மோதல் நீடித்திருக்காது, அத்துடன் இவ்வாறான தாக்குதலில் கமாஸ் இறங்கியிருக்காது.

வல்லரசுகளின் போட்டியில் (நான் கருதுகிறேன் இரஸ்சியா இதற்Kஉ பின்னால் இருக்கலாம்) சிங்குண்டு மீண்டும் இந்த மக்கள் பேரழிவிற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

Rule base world order  மூலம் அமெரிக்கா நீதியற்ற முறையில் இந்த மக்களை ஒரு தலைமுறயாக அழித்துவருகிறார்கள், இதனை கண்ணிருந்த குருடர்களாக சிலரும், வேறு சிலர் அதனை நியாப்படுத்தி இந்த கொலைகளில் தார்மீக பங்கினை ஏற்பவர்களாகவும் மனிதர்கள் என்ற பெயரில் திரிகிறார்கள்.

ஆனால் இன்னும் உடையாமல் நிமிர்ந்து நிற்கும் இந்த ஓர்மம் எங்கிருந்து இவர்களுக்கு கிடைக்கிறது (என்னை பொறுத்தவரை உலகம் இவர்கள் அழிவதை பற்றி கவலைப்படாது, இப்படி அழிவதனை விட வேறு ஏதாவது முறையில் சிந்திக்கலாம், ஆயுதங்களை மெளனிப்பது கூட புத்திசாலித்தனம்தான் அவர்களுக்கான காலம் வராமலா போய்விடும்?). 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

இது உண்மைதான், ஆனால் இந்த கொடுமை எவ்வளவு காலமாக இந்த மக்கள் உலகின் கண் முன்னால் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், எமது போராட்டம் முடிவுக்கு வந்த காலத்தில் நிலவிய உலக ஒழுங்கு தற்போது இல்லை என்றே சொல்லலாம் அதனால் இப்படியான ஒரு நிலை நிலவுகிறது இதுவே அப்படியான ஒரு கால கட்டமாக இருந்தால் இஸ்ரேல் மிக மோசமான முறையில் அடக்கி இருப்பார்கள் அது போல இவ்வலவு காலம் இந்த மோதல் நீடித்திருக்காது, அத்துடன் இவ்வாறான தாக்குதலில் கமாஸ் இறங்கியிருக்காது.

வல்லரசுகளின் போட்டியில் (நான் கருதுகிறேன் இரஸ்சியா இதற்Kஉ பின்னால் இருக்கலாம்) சிங்குண்டு மீண்டும் இந்த மக்கள் பேரழிவிற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

Rule base world order  மூலம் அமெரிக்கா நீதியற்ற முறையில் இந்த மக்களை ஒரு தலைமுறயாக அழித்துவருகிறார்கள், இதனை கண்ணிருந்த குருடர்களாக சிலரும், வேறு சிலர் அதனை நியாப்படுத்தி இந்த கொலைகளில் தார்மீக பங்கினை ஏற்பவர்களாகவும் மனிதர்கள் என்ற பெயரில் திரிகிறார்கள்.

ஆனால் இன்னும் உடையாமல் நிமிர்ந்து நிற்கும் இந்த ஓர்மம் எங்கிருந்து இவர்களுக்கு கிடைக்கிறது (என்னை பொறுத்தவரை உலகம் இவர்கள் அழிவதை பற்றி கவலைப்படாது, இப்படி அழிவதனை விட வேறு ஏதாவது முறையில் சிந்திக்கலாம், ஆயுதங்களை மெளனிப்பது கூட புத்திசாலித்தனம்தான் அவர்களுக்கான காலம் வராமலா போய்விடும்?). 

 

வரலாற்றில் இடம்பெற்ற பெரும்போர்கள், அதில் ஏற்பட்ட அழிவுகள் பற்றி சரித்திரத்தில் கற்றுள்ளோம். எமது காலத்தில் அதை இப்போது காண்கின்றோம். எதுவும் நிரந்தரம் இல்லை.

ஒரு புறம் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஈரான் எல்லாம் சேர்ந்து குழுவாக இயங்குகின்றன. மறுபுறம் அமெரிக்கா, இஸ்ரேல் தரப்பு. எமது போராட்டத்தில் குழுநிலை இல்லை. இல்லாவிட்டால் ஆயுதங்கள் மெளனிக்க வாய்ப்பில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹசன் நஸ்ரல்லா கொலையை இஸ்ரேல் அரங்கேற்றியது எப்படி? மொசாட் உளவாளிகளின் பங்கு உள்ளதா?

இஸ்ரேல்: ஹசன் நஸ்ரல்லா கொலை அரங்கேற்றியது எப்படி? மொசாட் உளவாளிகளின் பங்கு என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2006இல் நடந்த போருக்குப் பிறகு நஸ்ரல்லா பொதுவெளியில் தோன்றுவதைப் பெரிதும் தவிர்த்து வந்தார்.
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த 15 நாட்களில், லெபனானில் இருந்து செயல்படும் ஹெஸ்பொலா தனது அதிகாரக் கட்டமைப்பில் தொடர்ச்சியான இழப்புகளையும் பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளது.

முதலில், செப்டம்பர் 17-18 ஆகிய தேதிகளில், ஹெஸ்பொலா அமைப்பை சேர்ந்த 1500 பேர் பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி வெடிப்புகள் மூலம் குறி வைக்கப்பட்டனர். அதில் சிலர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, இதுவரை இஸ்ரேலுக்கு எட்டாத தூரத்தில் இருந்த ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த வெள்ளிக்கிழமையன்று பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், நஸ்ரல்லாவையும், ஹெஸ்பொலாவின் மூத்த தளபதிகளையும் இஸ்ரேல் ராணுவம் எப்படிக் கண்காணித்து, குறி வைத்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஹெஸ்பொலாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு தோல்வியடைந்தது எப்படி?

பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் இதுகுறித்து அலசினார்.

ஹசன் நஸ்ரல்லாவை குறிவைப்பது இஸ்ரேலின் ராஜ்ஜீய ரீதியிலான முடிவு என்றும், பல ஆண்டுகளாகத் தலைமறைவாக வாழ்ந்து வந்த அவரை, இஸ்ரேல் நீண்டகாலமாகக் கண்காணித்து வந்தது என்றும் ஃபிராங்க் கார்ட்னர் கூறுகிறார்.

மேலும் அவர் “சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஹெஸ்பொலா அமைப்பை சேர்ந்தவர்களின் பேஜர்களும், வாக்கி-டாக்கிகளும் வெடித்துச் சிதறின. இதன் பின்னணியில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் இருப்பதாக ஊகிக்கப்பட்டது.

மொசாட், ஹெஸ்பொலாவின் இந்த தொலைதொடர்பு சாதனங்களின் விநியோகச் சங்கிலியில் தலையிட்டு, அவற்றில் வெடிமருந்துகளை வைத்ததாக நம்பப்படுகிறது. இது சுமார் 15 நாட்களுக்கு முன்பு நடந்தது.

அதன் பின்னர் என்ன நடந்தது என்பது ஹெஸ்பொலாவின் அதிகார கட்டமைப்பில் இஸ்ரேல் எவ்வாறு ஆழமாக ஊடுருவ முடிந்தது என்பதைக் காட்டுகிறது.

ஹெஸ்பொலாவின் மூத்த தளபதிகள் அனைவரையும் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. இஸ்ரேல் தனது நடவடிக்கைகளின் மூலம் எவ்வாறு ஹெஸ்பொலாவின் பாதுகாப்புக் கட்டமைப்பை இவ்வளவு திறம்படச் சீர்குலைக்க முடிந்தது என்பதே கேள்வி” என்கிறார்.

 

நஸ்ரல்லாவை இஸ்ரேல் கண்டுபிடித்தது எப்படி?

இஸ்ரேல்: ஹசன் நஸ்ரல்லா கொலை அரங்கேற்றியது எப்படி? மொசாட் உளவாளிகளின் பங்கு என்ன?

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு, ஹெஸ்பொலாவின் முக்கியத் தலைவர்களை இஸ்ரேல் நீண்டகாலமாகவே கண்காணித்து வந்தது. (கோப்புப் படம்)

ஹசன் நஸ்ரல்லா கொல்லப்படுவதற்கு முன்பு ராய்ட்டர்ஸ் செய்தி முகமையில் ஒரு சிறப்பு செய்தி வெளியானது. இதற்காக லெபனான், இஸ்ரேல், இரான் மற்றும் சிரியாவில் உள்ள பல நபர்களுடன் பேசியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அந்த உரையாடல்களின் மூலம், ஹெஸ்பொலாவின் விநியோகச் சங்கிலி மற்றும் அதிகாரக் கட்டமைப்பை இஸ்ரேல் எவ்வாறு அழித்தது என்பது தெரியவந்தது.

இஸ்ரேல் 20 ஆண்டுகளாக நஸ்ரல்லாவையும் ஹெஸ்பொலாவையும் உளவு பார்த்து, அதன்பிறகே அவர்களின் தலைமையகத்தைத் தாக்கியது என்று இந்த விவகாரங்களை அறிந்த ஒரு நபர் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார். மேலும் அவர் இஸ்ரேலின் இந்த உளவு செயல்பாடு “புத்திசாலித்தனமானது” என்றும் விவரித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது நெருக்கமான அமைச்சர்கள் குழுவும் புதன்கிழமையன்று தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்ததாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பல மைல்களுக்கு அப்பால், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நெதன்யாகு உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

 
இஸ்ரேல்: ஹசன் நஸ்ரல்லா கொலை அரங்கேற்றியது எப்படி? மொசாட் உளவாளிகளின் பங்கு என்ன?

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு, இஸ்ரேல், ஹெஸ்பொலாவின் விநியோகச் சங்கிலியையும் அதிகாரக் கட்டமைப்பையும் தகர்த்தது.

ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் ராணுவ சேவைகளின் இயக்குநர் மேத்யூ சாவில், இந்தத் திட்டம் பல ஆண்டுகளாகச் தீட்டப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவதாக கூறியுள்ளார்.

ஹெஸ்பொலாவின் தகவல் தொடர்புகளில் இஸ்ரேல் உளவுத்துறை குறுக்கீடு செய்திருப்பதையும் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. மேலும், செயற்கைக்கோள் படங்கள் அல்லது ரகசியமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போன்ற பல புகைப்படங்ககளை பகுப்பாய்வு செய்தது முக்கியப் பங்கு வகித்துள்ளது. இவற்றுடன் அந்த மனித புத்திசாலித்தனத்திற்கும் முக்கியப் பங்கு இருந்தது என்று நிச்சயமாகச் சொல்லலாம்,” என்கிறார் மேத்யூ சாவில்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், இது அடிமட்டத்தில் உளவாளிகளின் தீவிர ஈடுபாட்டை உள்ளடக்கிய ஒரு ஆபரேஷன் என்று மேத்யூ சாவில் குறிப்பிடுகிறார்.

கடந்த 2006இல் நடந்த இஸ்ரேல் - ஹெஸ்பொலா போருக்கு பிறகு நஸ்ரல்லா பொது வெளியில் தோன்றுவதைப் பெரிதும் தவிர்த்து வந்தார்.

ஹசன் நஸ்ரல்லாவின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அவரது மிக நெருக்கமான வட்டாரங்கள், நஸ்ரல்லா மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருவதாகவும் அவரது ஒவ்வோர் அசைவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அவர் ஒரு சிறிய குழுவை மட்டுமே சந்திக்கும் அளவிற்கு இருப்பதாகவும் முன்பு ராய்ட்டர்ஸிடம் தெரிவித்திருந்தனர்.

 

இஸ்ரேல் குண்டுகளை வீசியது எப்படி?

இஸ்ரேல்: ஹசன் நஸ்ரல்லா கொலை அரங்கேற்றியது எப்படி? மொசாட் உளவாளிகளின் பங்கு என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி

ஹசன் நஸ்ரல்லாவின் இருப்பிடம் பற்றிப் பல மாதங்களாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தது என்று மூன்று மூத்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் கூறியதாக சனிக்கிழமையன்று தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டது.

இஸ்ரேலிய செய்திகளின்படி, நஸ்ரல்லாவை குறிவைக்கும் முடிவு நேரத்தை வீணாக்கக்கூடாது என்பதற்காக அமெரிக்காவிற்கு தெரிவிக்காமலே உடனடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, செப்டம்பர் 17-ஆம் தேதியன்று பேஜர் வெடிப்புக்குப் பிறகு, ஹெஸ்பொலா தலைவர்கள் மிகவும் விழிப்புடன் இருந்தனர். இஸ்ரேல் தங்களைக் கொல்ல விரும்புவதாக அவர்களுக்குச் சந்தேகம் வலுத்து வந்தது.

உயிரிழந்த தளபதிகளின் இறுதிச் சடங்குகளில் கூட முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. அவர்களின் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உரைகள்தான் சில நாட்களுக்குப் பிறகு ஒளிபரப்பட்டது.

தெற்கு பெய்ரூட்டில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் அடித்ததளத்தில் இருந்த நஸ்ரல்லாவின் தலைமையகத்தை குண்டுவீசித் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

நஸ்ரல்லா உட்பட ஒன்பது மூத்த ஹெஸ்பொலா தளபதிகள் கடந்த வாரத்தில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இது ஹெஸ்பொலாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவர்களின் உளவுத்துறை தோல்வி அடைந்திருப்பதாகவும் கூறுகிறார் ராய்ட்டர்ஸிடம் பேசிய ஸ்வீடிஷ் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஹெஸ்பொலா குறித்து ஆராய்ந்து வரும் மூத்த நிபுணர் மேக்னஸ் ரென்ஸ்டார்ப்.

நஸ்ரல்லா ஒரு சந்திப்பை நடத்துகிறார் என்பதை இஸ்ரேல் அறிந்திருந்தது. அவர் மற்ற தளபதிகளைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், இஸ்ரேல் அவரைத் தாக்கியது,” என்று மேக்னஸ் கூறுகிறார்.

 
இஸ்ரேல்: ஹசன் நஸ்ரல்லா கொலை அரங்கேற்றியது எப்படி? மொசாட் உளவாளிகளின் பங்கு என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நஸ்ரல்லா உட்பட ஒன்பது மூத்த ஹெஸ்பொலா தளபதிகள் கடந்த வாரத்தில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடவ் ஷோஷானி செய்தியாளர்களிடம் பேசியபோது, நஸ்ரல்லாவும் பிற தலைவர்களும் ஒன்றுகூடுவது பற்றிய உடனுக்குடன் தகவல் ராணுவத்திடம் இருந்ததாக கூறினார்.

இந்தத் தகவல் தங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதை ஷோஷானி கூறவில்லை. எப்படி இருப்பினும், இந்தத் தலைவர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதற்காக ஒரு கூட்டத்தை நடத்தவிருந்ததாக ஷோஷானி கூறினார்.

இதையறிந்த அடுத்த சில நொடிகளில் டஜன் கணக்கான குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேலின் ஹட்செரிம் விமான தளத்தின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அமிச்சாய் லெவின் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நடவடிக்கை மிகவும் சிக்கலானது, நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டது,” என்று பிரிகேடியர் ஜெனரல் அமிச்சாய் லெவின் கூறினார்.

இஸ்ரேல், ஹசன் நஸ்ரல்லாவின் இருப்பிடத்தைத் தீர்மானித்தவுடன், அதன் F-15 போர் விமானங்கள் பதுங்கு குழிகளை அழிக்கவல்ல 80 குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த குண்டுகள் தெற்கு பெய்ரூட் மற்றும் தஹியாவில் உள்ள நிலத்தடி தளங்களைக் குறிவைத்தன. அங்கு ஹசன் நஸ்ரல்லா உயர்நிலை தளபதிகளைச் சந்தித்துக்கொண்டிருந்தார்,” என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் ராணுவ சேவைகளின் இயக்குநர் மேத்யூ கூறுகிறார்.

இவையனைத்தும் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட், ஹெஸ்பொலாவின் பாதுகாப்பு அமைப்புக்குள் ஊடுருவியதைத் தெளிவாக்குகின்றன. நஸ்ரல்லாவின் இடத்திற்கு இதே கொள்கைகளைக் கொண்ட ஒருவர் கொண்டுவரப்படுவார். ஆனால், புதிய தலைவர் இத்தகைய உறுதிப்பாட்டை அமைப்புக்குள் உருவாக்கப் பல ஆண்டுகள் ஆகும். இருப்பினும், இப்போதைய சூழ்நிலையில், அதைச் செய்ய அவருக்கு அதிக நேரம் இருக்காது,” என்று மேத்யூ விளக்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ‌ர்க‌ள் இழ‌க்க‌ கூடாத‌ ப‌ல‌ உயிர்க‌ளை ஒரு வ‌ருட‌த்துக்குள்ளையே இழ‌ந்து விட்டின‌ம்.....................மொசாட் மிக‌வும் ஆவ‌த்தான‌வ‌ர்க‌ள் என்பதை இவ‌ர்க‌ள் எப்ப‌ உண‌ர‌ போகின‌மோ தெரிய‌ல‌......................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

ஒரு மட்டுபடுத்தபட்ட ஊடுருவல் செய்ய போவதாய் அமரிக்காவுக்கு அறிவித்துள்ளார்கள் இஸ்ரேலியர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Maruthankerny said:

ஆரம்ப காலங்களில் பல தமிழ் இயக்கங்களுக்கு இராணுவ பயிற்சியும் ஆயுத கொள்வனவுக்கான முகவர்களையும் பாலஸ்தீனியர்களே வழங்கினார்கள்

ஒம் ..பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக‌ பல கூட்டங்களை ,கண்காட்சிகளை நடத்தியவர்கள் ....

😅ஒருத்தர் அமைச்சராகவும் இருந்தவர் இந்த முன்னாள் சோசலிஸ்ட் அடுத்த அரசாங்கத்திலும் அமைச்சராக வருவார் அதற்காக தனது தொப்பியை மீண்டும் அணிவாரா....😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எப்படி கொல்லப்பட்டார் ஹிஸ்புல்லா தலைவர்..!

கடந்த வெள்ளிக்கிழமை லெபனானின்(lebanon) தெற்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் மீது இஸ்ரேல்(israel) விமானப்படை நடத்திய தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா உட்பட பல தளபதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் நஸ்ரல்லா எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பான தகவலை இஸ்ரேல் ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

நச்சுப் புகை கசிவில் மூச்சுத் திணறி உயிரிழப்பு

இதன்படி ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா இரகசிய பதுங்கு குழியில் மறைந்திருந்த போது நச்சுப் புகை கசிவில் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

எப்படி கொல்லப்பட்டார் ஹிஸ்புல்லா தலைவர்..! | How Hezbollah Leader Was Killed

இஸ்ரேலின் சனல் 12 வெளியிட்டுள்ள தகவலில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா பதுங்கி இருந்த மறைவிடத்தின் மீது இஸ்ரேல் 80 தொன் வெடிகுண்டுகள் வீசப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பதுங்கு குழியில் நச்சுப் புகை கசிவு ஏற்பட்டு 64 வயதான ஹசன் நஸ்ரல்லா மூச்சுத் திணறி வேதனையில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

உடலில் காயங்கள் 

ஹசன் நஸ்ரல்லாவின் உடல் அந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட போது உடலில் காயங்கள் ஏதுமின்றி காணப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எப்படி கொல்லப்பட்டார் ஹிஸ்புல்லா தலைவர்..! | How Hezbollah Leader Was Killed

எனினும் அவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிடவில்லை.

https://ibctamil.com/article/how-hezbollah-leader-was-killed-1727793866

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹெஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படக்கூடியவரை இலக்குவைத்தது இஸ்ரேல்?

04 OCT, 2024 | 11:20 AM
image

ஹெஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படக்கூடியவர் என கருதப்படுபவரை இலக்குவைத்து லெபனான் தலைநகரில் தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹெஸ்புல்லா இயக்க்தின் முக்கிய உறுப்பினரான ஹாஷிம் சாபீதின் என்பவரை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய அதிகாரியொருவர் சிஎன்என்னிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் கொல்லப்பட்டாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

https://www.virakesari.lk/article/195453

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

How Israel assassinate Hassan Nasrallah in Lebanon?

 

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.