Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

selvam.jpg?resize=750,375

பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!

தமிழ்த் தரப்பு பிாிந்து நின்று இம்முறை தோ்தலில் போட்டியிடுமாக இருந்தால் சில ஆசனங்களை இழக்கும் நிலையே ஏற்படும் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்திய தூதுவருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடா்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”தமிழர் தரப்பில் உள்ளவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையில் ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் புதிய அரசாங்கத்தோடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும்.

அந்த வகையிலே நீங்கள் ஒற்றுமையோடு இருந்தால் தான் எல்லா விடயங்களையும் சாதிக்க முடியும். அதேபோல் இந்த அபிவிருத்தி பணிகளை நாங்கள் கூடுதலாக வடக்கிலே செய்ய இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் தமிழர் தரப்பு கூடுதலான ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் அபிவிருத்தி பணிகளை மக்களிடம் சென்றடைய கூடிய வாய்ப்பு உள்ளது.

அது மாத்திரம் அல்ல தமிழ் தரப்பு ஓரணியிலே ஒன்றாக வேண்டும். தற்போது உள்ள அந்த பிரிந்து நிற்கும் செயற்பாட்டை தொடர்ந்து வைத்திருப்பது நல்லதல்ல. நல்லதொரு ஒற்றுமையான முடிவை எட்டி இந்த தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற வேண்டும்.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியும் ஒன்றாக சேர வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றது. இந்நிலையில் நான் ஒரு ஆலோசனையை முன் வைப்பதற்கு விரும்புகின்றேன்.

இப்போதுள்ள கள நிலவரம் எங்களுடைய பிரதிநிதித்துவம் குறைகின்ற செயற்பாடாகத்தான் காணப்படுகிறது. அண்மையில் நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை காணக் கூடியதாகவும் உள்ளது.

ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தமிழரசுக் கட்சியிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஒரு பொதுச் சின்னத்திலே குறிப்பாக குத்துவிளக்கு சின்னத்திலும்கூட வலியுறுத்தாமல் எல்லோரும் இணைந்து ஒரு பொது சின்னத்திலே இந்த தேர்தலில் பங்குபற்றினால் அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரவாக இருக்கும்.

அந்த வகையில் எங்களைப் பொறுத்தமட்டில் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம்.

குறிப்பாக அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களிலே நாங்கள் பிரிந்து நின்றால் இருக்கின்ற பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விடும். அங்கு மட்டுமல்ல வன்னியிலும் எமக்கு பெரிய ஆபத்து உள்ளது.

நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும். மக்களின் கோபத்துக்கு உள்ளாக்கப்பட்டு நமக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் ஒன்று, இரண்டாக மாறுகின்ற நிலைமை ஏற்படும்.

ஆகவே வன்னியை பொறுத்தவரையும் அது ஒரு அபாயகரமான நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. சிங்கள பிரதிநிதித்துவம் கூடி விடுமா என்கின்ற ஒரு அச்சம் காணப்படுகிறது.

அது மாத்திரமல்ல எங்களுக்குள் பிரச்சனைகளை நாங்கள் வைத்திருப்போமாக இருந்தால் முஸ்லிம் சகோதரர்களுக்கும் பிரதிநிதித்துவத்தில் கூடுதலாக வருகின்ற நிலைமை காணப்படும்” என செல்வம் அடைக்கலநாதன் மேலும் தொிவித்தாா்.

https://athavannews.com/2024/1402031

  • கருத்துக்கள உறவுகள்

பொதுசின்னமாக 🍾 போத்தல்?

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நியாயம் said:

பொதுசின்னமாக 🍾 போத்தல்?

உங்களுக்கு  அவருடன் பிரச்சினைகள் இருந்தால்  அதை எல்லா  இடமும் நியாயம் பிளக்கிறேன  என்று  கொட்டவேண்டியதில்லையே??
இங்கே  அவர்  ஒரு  ஒ;ற்றுமையான  விடயம் பற்றி பேசுப்போது தேவையற்ற சீண்டல்களை  தவிர்க்கலாமே??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்களுக்கு  அவருடன் பிரச்சினைகள் இருந்தால்  அதை எல்லா  இடமும் நியாயம் பிளக்கிறேன  என்று  கொட்டவேண்டியதில்லையே??
இங்கே  அவர்  ஒரு  ஒ;ற்றுமையான  விடயம் பற்றி பேசுப்போது தேவையற்ற சீண்டல்களை  தவிர்க்கலாமே??

வெறும் போத்தல் அல்லாமல் போத்தலை சுற்றி பற்றி பிடிக்கும் பத்து கைகள் பொதுசின்னம் எப்படி?

ஆளாளுக்கு தங்கள் சுய தேவைகளை பூர்த்திசெய்ய தமிழ்த்தேசியத்தை போர்த்து உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!

ஓட்டுண்ணிகள் தனித்து நின்று வெற்றிபெறமுடியாது. 

அது போக தமிழரசுக் கட்சி வேறு சின்னத்தில் போட்டிட விரும்பாது!  சுமந்திரன் இவர்களை அழைத்தது பாசத்தினால் அல்ல இவர்கள் வரக்கூடாது என்பதுதான் அவர் விருப்பம். நாங்கள் கேட்டோம் அவர்கள் வரவில்லை என்று மக்களிடம் காண்பிக்கத்தான். எது எவ்வாறாயினும் மக்களிடம் இவர்களின் தில்லுமுல்லு இம்முறை வாய்க்காது. குறிப்பாக புலம்பெயர் பட்டாசு குறூப் மீண்டும் செருப்படி வாங்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாலி said:

சுமந்திரன்… பாசத்தினால் அவர்களை அழைக்கவில்லை, சுத்துமாத்தினால்தான் அழைத்தார் என்று நீங்களே ஒப்புக் கொண்டமை சிறப்பு. 
சுமந்திரனின் அழைப்பு உள் நோக்கம் கொண்டது என்று… ஆரம்பத்திலேயே இங்கு பலர் சொல்லி விட்டார்கள்.
இது விளங்க… உங்களுக்கு, இவ்வளவு நாள் எடுத்திருக்கு.  

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்… பாசத்தினால் அவர்களை அழைக்கவில்லை, சுத்துமாத்தினால்தான் அழைத்தார் என்று நீங்களே ஒப்புக் கொண்டமை சிறப்பு. 
சுமந்திரனின் அழைப்பு உள் நோக்கம் கொண்டது என்று… ஆரம்பத்திலேயே இங்கு பலர் சொல்லி விட்டார்கள்.
இது விளங்க… உங்களுக்கு, இவ்வளவு நாள் எடுத்திருக்கு.  

தமிழரசுக் கட்சிக்கு இந்தமுறை தான் கடைசித்தேர்தல். இத்துடன் இந்த கபடி விளையாட்டுகள் முடிவுக்கு வரும். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டது போல ...

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

தமிழரசுக் கட்சிக்கு இந்தமுறை தான் கடைசித்தேர்தல். இத்துடன் இந்த கபடி விளையாட்டுகள் முடிவுக்கு வரும். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டது போல ...

மூஞ்சூறு தான் போக வழியை காணவில்லை. விளக்குமாத்தையும் காவிக் கொண்டு போன மாதிரி மற்றவர்களையும் அழைக்கின்றாராம். நல்ல பகிடியாய் இருக்கு. 😂
சிலரின் நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கிறது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்… பாசத்தினால் அவர்களை அழைக்கவில்லை, சுத்துமாத்தினால்தான் அழைத்தார் என்று நீங்களே ஒப்புக் கொண்டமை சிறப்பு. 
சுமந்திரனின் அழைப்பு உள் நோக்கம் கொண்டது என்று… ஆரம்பத்திலேயே இங்கு பலர் சொல்லி விட்டார்கள்.
இது விளங்க… உங்களுக்கு, இவ்வளவு நாள் எடுத்திருக்கு.  

யாழ் இணையத்தில் உள்ள சுமந்திரனுக்கெதிரான இணைய விடுதலைப் போராளிகளின் தளபதிகளுள் நீங்களும் ஒருவர்.  உங்கள் போராட்டம் சுமந்திரனுக்கெதிராக விமல் வீரவன்ச நின்றாலும் அதற்கு ஆதரவு தரும் போராட்டம். நாங்கள் பட்டாசு கோஷ்டியல்ல. யாழ் இணையத்தில் எங்காவது நான் சுமந்திரன் புராணம் பாடியதை எங்கும் காட்டமுடியுமா?  நான் எப்பவுமே மக்களின் முடிவிலேயே நம்பிக்கை வைத்திருப்பவன். 

ஈழப்போர் மவுனிக்கும்வரை தாயகதிலேயே வாழ்ந்தவன் என்பதனையும் நினைவில்கொள்க. இறுதி காலங்களில் என்ன நிகழ்நது மக்களின் நேரடிச் சாட்சியங்களைக் கேட்டவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாலி said:

நான்… யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பது என் உரிமை.
அதில் பிறர் மூக்கை நுழைப்பதை விரும்புவதில்லை.

அத்துடன்… விமல் வீரவன்ச, பட்டாசு போன்ற உங்களின் கற்பனை கதைகளுக்கு எல்லாம் பதில் சொல்லி…. உக்களுடன் லாவணி பாடிக் கொண்டிருக்க விரும்பவில்லை. அதற்கு வேறு ஆட்களை பார்க்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நியாயம் said:

வெறும் போத்தல் அல்லாமல் போத்தலை சுற்றி பற்றி பிடிக்கும் பத்து கைகள் பொதுசின்னம் எப்படி?

ஆளாளுக்கு தங்கள் சுய தேவைகளை பூர்த்திசெய்ய தமிழ்த்தேசியத்தை போர்த்து உள்ளார்கள். 

உங்களைப் போன்றவர்களுக்கு தமிழர்களின் எதிர்காலம் சார்ந்த எந்த கரிசனையும் இல்லை. எல்லாவற்றையும் பிச்சு எறிந்து விட்டு எல்லோரையும் கள்ளராக்கி விட்டு சிங்களத்தின் காலில் கிடக்க வழி செய்வது உங்களுக்கு தெரியவில்லையா?? 

எவன் நூறு வீதம் உத்தமன்? நூறு வீதம் தூய்மை என்று எங்கே இருக்கிறது?? அண்ணன் தம்பிகளை கள்ளராக்கி விட்டு இதுவரை இனவாதத்தை மட்டுமே கக்கியவர்கள் பின்னால் அணிவகுப்பு எதனை நோக்கி???

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

நான்… யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பது என் உரிமை.
அதில் பிறர் மூக்கை நுழைப்பதை விரும்புவதில்லை.

அத்துடன்… விமல் வீரவன்ச, பட்டாசு போன்ற உங்களின் கற்பனை கதைகளுக்கு எல்லாம் பதில் சொல்லி…. உக்களுடன் லாவணி பாடிக் கொண்டிருக்க விரும்பவில்லை. அதற்கு வேறு ஆட்களை பார்க்கவும். 

எனக்கும் உங்களுடன் டூயட் பாடிக்கொண்டிருக்க விருப்பமில்லை, வேறை யாரும் பட்டாசு கோஷ்டியில் கிடைப்பார்கள் அவர்களுடன் சேர்ந்து பாடவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, வாலி said:

எனக்கும் உங்களுடன் டூயட் பாடிக்கொண்டிருக்க விருப்பமில்லை, வேறை யாரும் பட்டாசு கோஷ்டியில் கிடைப்பார்கள் அவர்களுடன் சேர்ந்து பாடவும்.

தமிழில் தானே வடிவாய் சொன்னனான்.  அது… விளங்கவில்லையா.
பிறகு ஏன், பிலாக்காய் பால் மாதிரி, இழு படுறியள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

”தமிழர் தரப்பில் உள்ளவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையில் ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் புதிய அரசாங்கத்தோடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும்.

சம்பந்தன் ஐயா மாதிரி தொடர்ந்து பாராளுமன்ற கதிரையை அலங்கரிக்க போறீங்கள் போல...
நீங்கள் இன்னும் இந்தியாவை நம்புறீங்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் பாராளுமன்ற ஆசனங்களை இழப்போம்: செல்வம் எச்சரிக்கை

October 2, 2024

நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்திய தூதுவருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த  அவர்,

நேற்று இந்திய தூதுவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இரு விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.

தற்போதுள்ள ஜனாதிபதியின் செயற்பாட்டில் தாங்களும் இணைந்து செயல்பட போவதாக இந்திய தூதுவர்  எடுத்துக் கூறினார். அடுத்து வடக்கில் அதிகமான அபிவிருத்தியை இந்தியா செய்ய இருக்கின்றது. அவ்வாறான அபிவிருத்தியின் போது அதன் பலன்களை தமிழ் மக்கள் அடைய வேண்டும் என்ற ரீதியில் அவருடைய கருத்துக்கள் இருந்தன.

அது மாத்திரம் அல்ல தமிழ் தரப்பு ஓரணியிலே ஒன்றாக வேண்டும்.   பிரிந்து நிற்கும் செயற்பாட்டை தொடர்ந்து வைத்திருப்பது நல்லதல்ல. நல்லதொரு ஒற்றுமையான முடிவை எட்டி இந்த தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் தமிழர் தரப்பில் உள்ளவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையில் ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் புதிய அரசாங்கத்தோடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும். அந்த வகையிலே நீங்கள் ஒற்றுமையோடு இருந்தால் தான் எல்லா விடயங்களையும் சாதிக்க முடியும். அதேபோல் இந்த அபிவிருத்தி பணிகளை நாங்கள் கூடுதலாக வடக்கிலே செய்ய இருக்கின்றோம். அந்த அடிப்படையில் தமிழர் தரப்பு கூடுதலான ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் அபிவிருத்தி பணிகளை மக்களிடம் சென்றடைய கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் எடுத்துக் கூறினார்.

இந்நிலையில் தமிழரசு கட்சியும் ஒன்றாக சேர வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றது. இந்நிலையில் நான் ஒரு ஆலோசனையை முன் வைப்பதற்கு விரும்புகின்றேன்.

இப்போதுள்ள கள நிலவரம் எங்களுடைய பிரதிநிதித்துவம் குறைகின்ற செயற்பாடாகத்தான் காணப்படுகிறது. அண்மையில் நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை காணக் கூடியதாகவும் உள்ளது. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தமிழரசு கட்சியிடம் கேட்டுக்கொள்கின்றோம் ஒரு பொதுச் சின்னத்திலே குறிப்பாக குத்துவிளக்கு சின்னத்திலும்கூட வலியுறுத்தாமல் எல்லோரும் இணைந்து ஒரு பொது சின்னத்திலே இந்த தேர்தலில் பங்குபற்றினால் அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரவாக இருக்கும்.

அந்த வகையில் எங்களைப் பொருத்தமட்டில் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம்.

விமர்சனங்கள் என்பது இருந்து கொண்டே இருக்கிறது. சிலர் வெளிப்படையாக சஜித்துக்கும் ரணிலுக்கும் செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்திலே பொது வேட்பாளராக களம் இறங்கிய அரியனேந்திரன் 2 லட்சம் வாக்குகளை பெற்றது என்பது சாதாரண விடயம் அல்ல.

நாங்கள் இன்னும் முழுமையாக வேலை செய்திருந்தால் கூடுதலாக வாக்குகளை பெற்று இருக்கலாம் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது. இந்த காலத்திலே விமர்சனங்கள் மேலோங்கி இருக்கின்றது. தேசியத்தோடு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள தலைவர்களுக்கு விரலை நீட்டி அவருக்கு வாக்களியுங்கள் என்று சொன்ன நிலைமை காணப்பட்டது. அது சம்பந்தமான விமர்சனங்கள் இருக்கின்றது. அவை ஆராயப்பட வேண்டும்.

குறிப்பாக அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களிலே நாங்கள் பிரிந்து நின்றால்  இருக்கின்ற பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விடும். அங்கு மட்டுமல்ல வன்னியிலும் எமக்கு பெரிய ஆபத்து உள்ளது. நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும்.  மக்களின் கோபத்துக்கு உள்ளாக்கப்பட்டு நமக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் ஒன்று, இரண்டாக மாறுகின்ற நிலைமை ஏற்படும்.

ஆகவே வன்னியை பொருத்தவரையும் அது ஒரு அபாயகரமான நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. சிங்கள பிரதிநிதித்துவம் கூடி விடுமா என்கின்ற ஒரு அச்சம் காணப்படுகிறது. அது மாத்திரமல்ல எங்களுக்குள் பிரச்சனைகளை நாங்கள் வைத்திருப்போமாக இருந்தால் முஸ்லிம் சகோதரர்களுக்கும் பிரதிநிதித்துவத்தில் கூடுதலாக வருகின்ற நிலைமை காணப்படும்.

ஆகவே மக்கள் கோபப்படும் அளவிற்கு எமது செயற்பாடுகள் இருக்காது, இருக்கவும் கூடாது என கேட்டு கொள்வதோடு ஒரே அணியில் ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது தான் சாதகமாக இருக்கும்  என்றார்.

https://www.ilakku.org/பிரிந்து-நின்று-செயல்படு/

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

உங்களைப் போன்றவர்களுக்கு தமிழர்களின் எதிர்காலம் சார்ந்த எந்த கரிசனையும் இல்லை. எல்லாவற்றையும் பிச்சு எறிந்து விட்டு எல்லோரையும் கள்ளராக்கி விட்டு சிங்களத்தின் காலில் கிடக்க வழி செய்வது உங்களுக்கு தெரியவில்லையா?? 

எவன் நூறு வீதம் உத்தமன்? நூறு வீதம் தூய்மை என்று எங்கே இருக்கிறது?? அண்ணன் தம்பிகளை கள்ளராக்கி விட்டு இதுவரை இனவாதத்தை மட்டுமே கக்கியவர்கள் பின்னால் அணிவகுப்பு எதனை நோக்கி???

களவாணிக்கூட்டத்திற்கு தோள்கொடுப்பது உங்கள் சொந்த விருப்பம். தமிழ்த்தேசியத்தை அணிந்துள்ள குருக்கள்மார் ஏதும் செய்யலாம் என்பதை நாம் காலம் காலமாக காண்கின்றோம். பிழைக்க தெரிந்தவர்கள் இவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அந்த வகையில் எங்களைப் பொருத்தமட்டில் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம்.

தேர்தல் காலத்தின் காட்டாயம் என்று வரவேண்டும்    🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

களவாணிக்கூட்டத்திற்கு தோள்கொடுப்பது உங்கள் சொந்த விருப்பம். தமிழ்த்தேசியத்தை அணிந்துள்ள குருக்கள்மார் ஏதும் செய்யலாம் என்பதை நாம் காலம் காலமாக காண்கின்றோம். பிழைக்க தெரிந்தவர்கள் இவர்கள்.

அவர்கள் தாயகத்தில் தான் இருக்கிறார்கள். அந்த மக்கள் தான் அவர்களை இதுவரை பாராளுமன்றம் அனுப்பினார்கள். மக்கள் முன் தான் அவர்கள் நடனமாடுகிறார்கள். நீங்கள் புலத்தில் உள்ளவர்களையும் தாயகத்தில் உள்ளவர்களையும் கள்ளர் என்றபடி சிங்களத்திற்கு முந்தானை விரிப்பது ஆபத்தான விளையாட்டு என்று மட்டுமே சொல்லமுடியும். டொட்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

அவர்கள் தாயகத்தில் தான் இருக்கிறார்கள். அந்த மக்கள் தான் அவர்களை இதுவரை பாராளுமன்றம் அனுப்பினார்கள். மக்கள் முன் தான் அவர்கள் நடனமாடுகிறார்கள். நீங்கள் புலத்தில் உள்ளவர்களையும் தாயகத்தில் உள்ளவர்களையும் கள்ளர் என்றபடி சிங்களத்திற்கு முந்தானை விரிப்பது ஆபத்தான விளையாட்டு என்று மட்டுமே சொல்லமுடியும். டொட்.

விரும்பியோ விரும்பாமலோ சிங்களவருடனே இலங்கையில் சேர்ந்து வாழ்கின்றோம், சேர்ந்து வாழ்வோம். தமிழர் எனும் ஒரே காரணத்திற்காக அயோக்கியர்களுக்கு ஆதரவு கொடுக்க முடியாது. அதேசமயம் சிங்கள அரசியல்வாதிகள் யோக்கியர்கள் என்றும் இல்லை.

நீங்கள் இலங்கைக்கு வந்து சிறிதுகாலம் வாழவேண்டும். அப்போது பல விடயங்களில் உங்களுக்கு தெளிவு கிடைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் காலத்தில் ஒற்றுமையைப் பற்றி பேசுவது எற்றைகொள்ள முடியாது   பதவி அல்லது கதிரை மீது கொண்ட  மோகம்.  காரணமாக தான்  தேர்தல் காலத்தில் ஒற்றுமை பற்றி பேசுவது   

தேர்தல் முடிய. அடிபடுவது   ஏன்?? இந்த ஒற்றுமை என்பது போலியானது   உள சுத்தியுடையது இல்லை  நீங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் தகுதி அற்றவர்கள். சிங்கள. ஆட்சியளார்கள். நினைத்தால் பிரச்சனைகளை தீர்ப்பார்கள். அவரகளால். முடியும்   ஆகவே   சுமத்திரன்.  செல்வம்    டக்ளஸ்   சித்தார்த்தர்,......   போன்றோருக்கு போடும் வாக்கை அனுர   போன்ற சிங்களவருக்கு    தீர்வை தர கூடியவர்களுக்கு போடலாம்   🙏🙏🙏

2 hours ago, Kandiah57 said:

தேர்தல் காலத்தில் ஒற்றுமையைப் பற்றி பேசுவது எற்றைகொள்ள முடியாது   பதவி அல்லது கதிரை மீது கொத்ட மோகம்.  காரணமாக தான்  தேர்தல் காலத்தில் ஒற்றுமை பற்றி பேசுவது   

தேர்தல் முடிய. அடிபடுவது   ஏன்?? இந்த ஒற்றுமை என்பது போலியானது   உள சுத்தியுடையது இல்லை  நீங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் தகுதி அற்றவர்கள். சிங்கள. ஆட்சியளார்கள். நினைத்தால் பிரச்சனைகளை தீர்ப்பார்கள். அவரகளால். முடியும்   ஆகவே   சுமத்திரன்.  செல்வம்    டக்ளஸ்   சித்தார்த்தர்,......   போன்றோருக்கு போடும் வாக்கை அனுர   போன்ற சிங்களவருக்கு    தீர்வை தர கூடியவர்களுக்கு போடலாம்   🙏🙏🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2024 at 22:46, Kandiah57 said:

தேர்தல் காலத்தில் ஒற்றுமையைப் பற்றி பேசுவது எற்றைகொள்ள முடியாது   பதவி அல்லது கதிரை மீது கொண்ட  மோகம்.  காரணமாக தான்  தேர்தல் காலத்தில் ஒற்றுமை பற்றி பேசுவது   

தேர்தல் முடிய. அடிபடுவது   ஏன்?? இந்த ஒற்றுமை என்பது போலியானது   உள சுத்தியுடையது இல்லை  நீங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் தகுதி அற்றவர்கள். சிங்கள. ஆட்சியளார்கள். நினைத்தால் பிரச்சனைகளை தீர்ப்பார்கள். அவரகளால். முடியும்   ஆகவே   சுமத்திரன்.  செல்வம்    டக்ளஸ்   சித்தார்த்தர்,......   போன்றோருக்கு போடும் வாக்கை அனுர   போன்ற சிங்களவருக்கு    தீர்வை தர கூடியவர்களுக்கு போடலாம்   🙏🙏🙏

அருமையான கருத்து கந்தையா அண்ணை. 👍🏼

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.