Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் - ஜனாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
06 OCT, 2024 | 05:11 PM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.  

WhatsApp_Image_2024-10-06_at_16.44.19__4

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு உறுதியளித்தார்.  

இன்று காலை கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார்.   

WhatsApp_Image_2024-10-06_at_16.44.19.jp

ஜனாதிபதியின் வருகையை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.  பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இதன்போது நேரடியாக ஜனாதிபதியிடம் அவர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். 

WhatsApp_Image_2024-10-06_at_16.44.19__2 

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

இந்நாட்டில் அண்மைய காலத்தின் மிக மோசமாக அழிவு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே நிகழ்ந்தது என்றும் அந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.  

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களித்ததன் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்ததென நம்புகிறோம்.  

இந்நாட்டு மக்களின் நோக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் தான் கொண்டிருக்கும் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறுபட்டவை அல்லவெனவும்,  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மக்கள் எதிர்பார்க்கும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்பதுடன், அதற்கான முன்னெடுப்புக்கள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

இது தொடர்பிலான முழுமையான முடிவொன்றுக்கு வந்து, அந்த முடிவை அடிப்படையாக கொண்டு சாட்சிகளை திரட்டுவதுவதால் மாத்திரம் இந்த விசாரணைகளை கொண்டு நடத்த முடியாதெனவும், வௌிப்படைத் தன்மையுடன் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.      

அரசியல் மாற்றத்துக்காக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதாகவும், அரசியலுக்காக நூற்றுக் கணக்கில் அப்பாவி உயிர்களை பலியிடுவது பாரிய அழிவாகும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அவ்வாறான நிலைப்பாடு நாட்டின் அரசியலுக்குள் காணப்படுமாயின் அந்த நிலைமையை முழுமையாக துடைத்தெறிய வேண்டும்  

இரண்டாவது விடயமாக அப்போதைய ஆட்சிப் பொறிமுறையும் இதனுடன் தொடர்பு பட்டிருந்ததா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவுவதாகவும் அவ்வாறான நிலை மிகவும் பாதுகாப்பற்றதும் ஆபத்தானதுமான நிலை என்பதோடு, அதன்படி இதற்குள் நடந்தது என்னவென்பதை கண்டறிய வேண்டியது மிக அவசியமானது. 

அடுத்தபடியாக, 274க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை பறித்த மற்றும் பெருமளவானவர்களை காயத்துக்கு உள்ளாக்கிய அழிவினால் பாதிக்கப்பட்டவர்கள்  தமது அன்புக்குரியவர்கள் மீது கொண்டிருக்கும் அன்புக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும். 

அதேபோல் இவ்வாறான பிரச்சினையினால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்பிலிருந்து சமூகத்தை பாதுகாத்தமைக்காக மதகுருமார்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி.   

சமூகத்திற்குள் காணப்பட்ட இணைவு,ஒருமைப்பாடு, நம்பிக்கை சிதைந்து போயிருப்பதாகவும் மற்றுமொரு சமூகத்தின் மீது குரோதத்துடன் பார்க்கும் நிலை உருவாவது சமூக நல்வாழ்விற்கு மிகப்பெரிய ஆபத்தெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனால் ஈஸ்டர் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணையொன்றை நடத்த வேண்டியது அவசியமாகும்.  

கடந்துபோன 05 வருடங்களில் ஒவ்வொரு ஏப்ரல் 21 ஆம் திகதியும் வீதிகளிகளிலும் சந்திகளிலும் ஒன்றுகூடிய மக்கள் அவர்களின் மனதிலிருந்த நீதி தொடர்பிலான எதிர்பார்ப்புக்களையே வௌிப்படுத்தினர் என்றார். 

WhatsApp_Image_2024-10-06_at_16.44.19__1

WhatsApp_Image_2024-10-06_at_16.44.19__3

WhatsApp_Image_2024-10-06_at_16.44.20.jp

WhatsApp_Image_2024-10-06_at_16.44.19__5

இங்கு கருத்து தெரிவித்த கொழும்பு பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,   

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த போதும் அதற்கான நியாயம் கிடைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கங்களினால் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டாலும் பிரச்சினைக்கு காரணம் என்னவென்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது என்றும் தெரிவித்தார்.   

இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது நம்பிக்கை உள்ளதெனவும், அவரின் நேர்மையை பாராட்டுவதாகவும் தெரிவித்த கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  அந்த நேர்மையை மக்கள் மத்தியில் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அதன்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவார் என்ற நம்பிக்கையும் கொண்டிருப்பதாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்தார்.    

இந்நிகழ்வில் கட்டுவாப்பிட்டிய தேவாலய பொறுப்பாளர் அருட்தந்தை மஞ்சுள நிரோஷன் மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/195640

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சனாதிபதி தனது பாதுகாப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டிய நேரம்  இது. 

முன்னாள் ஆயுததாரிகளைக் கொண்டு இந்தியாவோ அல்லது ஈஸ்ரர் குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புபட்ட தரப்புக்கள் இந்தியாவுடன் சேர்ந்து இவரைக் கொல்ல முயற்சிக்கும் அபாயம் மிகவும் அதிகமாக இருக்கிறது. 

பழி வழமைபோல விடுதலைப் புலிகளின் மேல் போடப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20241006-WA0014.jpg?resize=750,375&s

மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை-ஜனாதிபதி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு  தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று  நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு உறுதியளித்தார்.

அத்துடன் கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி  தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தியும் இருந்தார்.

ஜனாதிபதியின் வருகையை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

பின்னர் ஈஸ்டர் தாக்குலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இதன்போது நேரடியாக ஜனாதிபதியிடம் அவர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறியிருந்தனர்.

இதேவேளை இந்நாட்டில்  மோசமாக அழிவு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே நிகழ்ந்தது என்றும் அந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களித்ததன் பின்னணியில் உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பிலான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்ததென நம்புவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களின் நோக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் தான் கொண்டிருக்கும் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறுபட்டவை அல்லவெனவும் மக்கள் எதிர்பார்க்கும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்பதுடன், அதற்கான முன்னெடுப்புக்கள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பிலான முழுமையான முடிவொன்றுக்கு வந்து, அந்த முடிவை அடிப்படையாக கொண்டு சாட்சிகளை திரட்டுவதுவதால் மாத்திரம் இந்த விசாரணைகளை கொண்டு நடத்த முடியாதெனவும், வௌிப்படைத் தன்மையுடன் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியல் மாற்றத்துக்காக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதாகவும், அரசியலுக்காக நூற்றுக் கணக்கில் அப்பாவி உயிர்களை பலியிடுவது பாரிய அழிவாகும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அவ்வாறான நிலைப்பாடு நாட்டின் அரசியலுக்குள் காணப்படுமாயின் அந்த நிலைமையை முழுமையாக துடைத்தெறிய வேண்டுனெவும் தெரிவித்தார்.

இரண்டாவது விடயமாக அப்போதைய ஆட்சிப் பொறிமுறையும் இதனுடன் தொடர்பு பட்டிருந்ததா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவுவதாகவும் அவ்வாறான நிலை மிகவும் பாதுகாப்பற்றதும் ஆபத்தானதுமான நிலை என்பதோடு, அதன்படி இதற்குள் நடந்தது என்னவென்பதை கண்டறிய வேண்டியது மிக அவசியமானது என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அடுத்தபடியாக, 274க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை பறித்த மற்றும் பெருமளவானவர்களை காயத்துக்கு உள்ளாக்கிய அழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்புக்குரியவர்கள் மீது கொண்டிருக்கும் அன்புக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

அதேபோல் இவ்வாறான பிரச்சினையினால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்பிலிருந்து சமூகத்தை பாதுகாத்தமைக்காக மதகுருமார்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சமூகத்திற்குள் காணப்பட்ட இணைவு,ஒருமைப்பாடு, நம்பிக்கை சிதைந்து போயிருப்பதாகவும் மற்றுமொரு சமூகத்தின் மீது குரோதத்துடன் பார்க்கும் நிலை உருவாவது சமூக நல்வாழ்விற்கு மிகப்பெரிய ஆபத்தெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,  நியாயமான விசாரணையொன்றை நடத்த வேண்டியது அவசியமாகும் என்பதையும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கட்டுவாப்பிட்டிய தேவாலய பொறுப்பாளர் அருட்தந்தை மஞ்சுள நிரோஷன் மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1402795

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

சமூகத்திற்குள் காணப்பட்ட இணைவு,ஒருமைப்பாடு, நம்பிக்கை சிதைந்து போயிருப்பதாகவும் மற்றுமொரு சமூகத்தின் மீது குரோதத்துடன் பார்க்கும் நிலை உருவாவது சமூக நல்வாழ்விற்கு மிகப்பெரிய ஆபத்தெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,  நியாயமான விசாரணையொன்றை நடத்த வேண்டியது அவசியமாகும் என்பதையும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இது, தமிழ் இனத்துக்கு எழுபத்தாறு ஆண்டுகளாக  இழைக்கப்பட்ட அநிஞாயாயங்களுக்கும் பொருந்தும். அதைத்தான் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறீர்கள் என நினைக்கிறன். அதை தீர்த்து வைக்கவேண்டியது ஜனாதிபதியாகிய உங்களின் கடமை!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

இலங்கை சனாதிபதி தனது பாதுகாப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டிய நேரம்  இது. 

முன்னாள் ஆயுததாரிகளைக் கொண்டு இந்தியாவோ அல்லது ஈஸ்ரர் குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புபட்ட தரப்புக்கள் இந்தியாவுடன் சேர்ந்து இவரைக் கொல்ல முயற்சிக்கும் அபாயம் மிகவும் அதிகமாக இருக்கிறது. 

பழி வழமைபோல விடுதலைப் புலிகளின் மேல் போடப்படும். 

461991108_1014210470716696_4870746221058

ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பந்தமான ஜனாதிபதி அறிக்கை ஒன்று காணாமல் போய் விட்டதாம்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் அறிக்கையை கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு எடுத்து வர ஜனாதிபதி மறந்தது ஏன்?

ஈஸ்டர் அறிக்கையை கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு எடுத்து வர ஜனாதிபதி மறந்தது ஏன்? என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற  பிவிதுரு ஹெல உறுமய ஏற்பாடு செய்த  ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு செல்லும் போது ஈஸ்டர் அறிக்கையை எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.  ஏன் எடுக்க மறந்தார் என்று தெரியவில்லை.

மக்களுக்கு தீர்வு கொடுக்க வேண்டும். சும்மாவாக மக்களுக்கு கையசைத்து செல்வதில் பலன் இல்லை. உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு  பணம் செலவழித்தே அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பதில் அதில் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். அதனை மக்களும் அறிய விரும்புகிறார்கள்.

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று மேடையில் சொன்னபோது அவர்களுக்கு பொருளாதாரம் தெரியாது. அல்லது பொய் சொல்லியிருப்பார்கள்.  அத்தகைய எரிபொருளின் விலையை வரிகள் விதிப்பதன் மூலம் குறைக்க முடியாது.

நாங்கள் இம்முறை நட்சத்திரப் பதக்கத்திற்காகப் போட்டியிடவில்லை, வெள்ளிப் பதக்கத்திற்காகப் போட்டியிடுகிறோம்.

சஜித் கூறுவது போல் நாங்கள் பிரதமர் பதவியை பெற முயற்சிக்கவில்லை. ஆட்சிக்கு வந்த அரசு தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/310392

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்பது உங்களிற்கும் தெரிந்திருந்தது ஜனாதிபதி அவர்களே" பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றச்சாட்டு

07 OCT, 2024 | 12:57 PM
image

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல்கள் இடம்பெறப்போகின்றன என்பது அனைத்து அரசியல்வாதிகளிற்கும் தெரிந்திருந்தது என  பாதிக்கப்பட்ட ஒருவர் ஜனாதிபதியின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நேற்று நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக உரையாடியவேளை  பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அவ்வேளை பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்பது அனைத்து அரசியல்வாதிகளிற்கும் தெரிந்திருந்தது என  குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மிக முக்கியமான சில அரசியல்வாதிகளின் விசேட பாதுகாப்பு பிரிவினருக்கு மாத்திரம் தாக்குதல் இடம்பெறலாம் என தகவல் வழங்கப்பட்டிருந்தது என  அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

எனக்கும் எனது சகாக்களுக்கும் அவ்வேளை விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை என தெரிவித்துள்ள  ஜனாதிபதி  உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு எவ்வாறு நீதியை வழங்க முடியும் என்பதை கோடிட்டுக்காட்டியுள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புடையவர்களை விசாரணைகள் மூலம் அடையாளம் கண்டு அவர்களை தண்டித்தல், எதிர்காலத்தில் மீண்டும் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதை தவிர்த்தல், போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/195675

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

461991108_1014210470716696_4870746221058

ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பந்தமான ஜனாதிபதி அறிக்கை ஒன்று காணாமல் போய் விட்டதாம்.  

காணாமல் போகாவிட்டால்தான் ஆச்சரியமாய் இருந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

காணாமல் போகாவிட்டால்தான் ஆச்சரியமாய் இருந்திருக்கும். 

அதுதான்... இவ்வளவு துணிவாக மக்கள் முன் நடமாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை வெளியே கொண்டுவந்தால் பல பாதுகாப்பு பிரிவினர் மாட்டுப்படலாம்.

எவ்வளவு தூரம் இந்த விசாரணை போகுமோ தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ஈஸ்டர் அறிக்கையை கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு எடுத்து வர ஜனாதிபதி மறந்தது ஏன்?

அவருக்கு என்ன விசரே?? பொந்தில் கையை விட??

இன்றைய நிலையில் அவர் தான் சிறீலங்காவில் சிறந்த அரசியல்வாதி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.