Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

அவர் பயன்படுத்திய வாகனம், ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் பதிவு செய்யப்படாத இலக்கத்தில் பயணித்ததாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்த உண்மைகளை சுட்டிக்காட்டி கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த காரை யார் இலங்கைக்கு கொண்டு வந்தனர், எப்போது, யார் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/310543

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு!

சட்டவிரோதமான முறையில் ஒருங்கினைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்க அவகாசம் கோரிய நிலையில், தற்கோது அவர் தலைமறைவாகியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

விசேட குற்றத்தடுப்பு பிரிவினர்

இது தொடர்பில் விசாரணையை முன்னெடுக்க விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பலனலிக்கவில்லை என கூறப்படுகிறது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு! | Johnston Fernando Absconding

இந்நிலையில், மேலும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு மற்றும் தங்கும் இடங்களில் நடத்திய சோதனையில் அவர் பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது.

அண்மையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் சர்ச்சைக்குறிய கார் தொடர்பான வாக்குமூலத்தைப் பெற குற்றத்தடுப்பு பிரிவுக்கு வருமாறு தெரிவித்திருந்த போதிலும், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி அதைத் தவிர்த்து வந்தார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு ஒன்றையும் கடந்த 10.10.2024 அன்று பிறப்பித்திருந்தது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு! | Johnston Fernando Absconding

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சொகுசு வாகனம் எவ்வாறு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது, யார் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

https://tamilwin.com/article/johnston-fernando-absconding-1729160364#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு?

adminOctober 18, 2024

சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுக்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக செயல்பட்டு வந்தாலும் அவர் தொடர்பில் எந்தவொரு தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை.

சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தங்கியிருந்த வீடு மற்றும் அவர் தங்கியிருக்கும் ஏனைய இடங்கள் அனைத்திலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என காவற்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வாகன உதிரி பாகங்களை இரகசியமாக இறக்குமதி செய்து அவற்றை பயன்படுத்தி பி. எம்.டபிள்யூ. கார் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தியதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த கார் பதிவு செய்யப்படவில்லை என்றும், அது போலி எண் மூலம் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கார் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வாகன தரிப்பிடத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய காவற்துறையினர் மூலம் கைப்பற்றப்பட்டது.

‘டாக்சி அபே’ எனப்படும் காமினி அபேரத்ன ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட காரை கைவிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காரில் இருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான ஆவணங்களும் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2024/207625/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை சிஐடியில் முன்னிலையாகவுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) நாளை (23) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க தயார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (22) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறித்தே முன்னாள் அமைச்சர் நாளைய தினம் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

தாக்கல் செய்த மனு 

குறித்த சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவொன்றை வெளியிடுமாறு கோரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு இன்று அழைக்கப்பட்டது.

நாளை சிஐடியில் முன்னிலையாகவுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ | Johnston To Record Statement At Cid Tomorrow

இதன்போது, சம்பவம் தொடர்பில் நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்க தயார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இதையடுத்து, குறித்த மனுவை வரும் 25ம் திகதி அழைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/johnston-to-record-statement-at-cid-tomorrow-1729582937

  • கருத்துக்கள உறவுகள்

ஜோண்ஸ்ரன் பெனாண்டோ வுக்கு அடுத்ததாக கொட்டாபய கைது செய்யப்படுவார். 

அதன் பின்னர் உலகுக்குச் சொல்வார்கள் "  ஒரு ஜனாதிபதியையே கைது செய்துள்ளோம். எனவே இனப்படுகொலை தொடர்பாக உள்நாட்டுப் பொறிமுறையே போதுமானது. UN  தேவையில்லை " 

இதற்கு மேற்கு தலையாட்டும்.  அத்துடன் எமது வாய்ச் சவடால்கள் எல்லாம் முடிவுக்கு வரும். 

இப்போதும் நேரமிருக்கிறது. விழித்துக்கொண்டால்,...... 🥺

  • கருத்துக்கள உறவுகள்

வாகனங்களும், பதியப்படாத வாகனங்களும் தான் இலங்கையில் இப்ப பெரிய பேசும் விடயமாக மாறியுள்ளது. கண்டியிலும் ஒரு வீட்டில் இரண்டு வாகனங்கள், ஒரு பஜீரோ மற்றது பிஎம்டபிள்யூ, பதியப்படாமல் நிற்க, அதிகாரிகள் அதை எடுத்திருக்கின்றார்கள். அதுவும் இன்னொரு முன்னாள் அமைச்சரினது என்கின்றார்கள். அந்த அமைச்சரோ, வழமை போலவே, அவை தன்னுடைய வாகனங்கள் என்று நிரூபித்தால் தான் அரசியலில் இருந்தே விலகுகின்றேன் என்கின்றார்............ பதிவே இல்லாவிட்டால் எப்படி நிரூபிப்பது......... அந்த வீட்டுக்காரர்களும் அவை என்னவென்றே தெரியாது என்கின்றார்கள்............🤨.

ஜோன்ஸ்டன் கொஞ்சம் கையும் களவுமாக மாட்டுப்பட்டுவிட்டார். உள்ளுக்குள் அவரின் விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் இருந்துவிட்டது. வேறொரு புதிய திரைக்கதை வசனம் எழுதித்தான் அவர் தப்பிக்கவேண்டும். அரகலிய நேரத்தில் இவரைத் தேடினார்கள், இப்பொழுது தான் பிடிபட்டு இருக்கின்றார். 

மற்ற நாடுகளில் அரசியல்வாதிகள் எதை எதையோ பதியாமல், சொல்லாமல் இரகசியமாக வைத்திருப்பார்கள். நம்ம நாட்டில் வாகனங்களா..............😜.

ரணில் கூட 16 சமையல்காரர்கள், 16 வாகனங்கள், அத்துடன் நாற்பது குடைகளும் கேட்டிருந்தார்........... இவர் என்ன ஹோட்டல் ஆரம்பிக்கப் போகின்றாரா என்று தான் உடனே நினைத்தேன். பின்னர் இந்த வேண்டுகோளை விட இன்னும் அதிகமாக சிரிப்பு வருகின்ற ஒரு காரணத்தை அவரின் செயலாளர் சொன்னார்...........

மஹிந்தவிற்கு 16 வாகனங்கள் அவர் வீட்டில் நிற்கா விட்டால், அவரின் உயிருக்கு ஆபத்து காத்திருக்குதாம்............. இலங்கையிலேயே இவரின் உயிருக்கு தான் அதிகூடிய ஆபத்தும் இருக்குதாம் என்று மஹிந்தவே சொல்லுகின்றார்............

அடுத்த ஐஎம்எஃப் கொடுப்பனவின் முன், இந்த வாகன, குடை, சமையல்காரர்கள் போன்ற பிரச்சனைகளை ஐஎம்எஃப் கவனத்தில் எடுத்து, கடும் நிபந்தனைகளை விதிக்க வேண்டும்..........🤣.

எல்லாருமே அலிபாபாவும் நாற்பது திருடர்களாகவுமே இருக்கின்றார்கள்..............

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரசோதரன் said:

ரணில் கூட 16 சமையல்காரர்கள், 16 வாகனங்கள், அத்துடன் நாற்பது குடைகளும் கேட்டிருந்தார்.....

ரணிலின். குடும்பம் மிகப்பெரியதா??  

43 minutes ago, ரசோதரன் said:

மற்ற நாடுகளில் அரசியல்வாதிகள் எதை எதையோ பதியாமல், சொல்லாமல் இரகசியமாக வைத்திருப்பார்கள்.

எதை   என்று  சொல்லுங்கள்    ??   

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

ரணிலின். குடும்பம் மிகப்பெரியதா??  

ரணிலும், அவரின் துணைவியாரும் மட்டுமே..........

ஆனால் இந்த 16 சமையல்காரர்கள், 40 குடைகள் வேண்டும் என்று ரணிலுக்கு தெரியாமல் ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கேட்டு விட்டார்களாம்............ ரணிலின் செயலாளர் சொன்ன காரணம் இது.............🫣.   

10 minutes ago, Kandiah57 said:

எதை   என்று  சொல்லுங்கள்    ??   

ஹெலிகாப்டர், பிளேன், கப்பல்,.................. அண்ணன், நீங்கள் வேறு எதையோ ஒன்றை இங்கு எதிர்பார்க்கின்றீர்கள் போல.......😜.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ஹெலிகாப்டர், பிளேன், கப்பல்,.................. அண்ணன், நீங்கள் வேறு எதையோ ஒன்றை இங்கு எதிர்பார்க்கின்றீர்கள் போல..

சீ ...சீ,.. அப்படியல்ல.   உங்களுக்கு தெரியுமா?? என்று சோதனை வைத்து பார்த்தேன் 😂.   நீங்கள் போய்ல்   ஆகிவிட்டீர்கள்.  ஆனால் எனக்கு தெரியும்    பதிவுகள் செய்யமால் என்ன வைத்திருக்கலாமென்று 🙏

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:
2 hours ago, ரசோதரன் said:

ஹெலிகாப்டர், பிளேன், கப்பல்,.................. அண்ணன், நீங்கள் வேறு எதையோ ஒன்றை இங்கு எதிர்பார்க்கின்றீர்கள் போல..

சீ ...சீ,.. அப்படியல்ல.   உங்களுக்கு தெரியுமா?? என்று சோதனை வைத்து பார்த்தேன் 😂.   நீங்கள் போய்ல்   ஆகிவிட்டீர்கள்.  ஆனால் எனக்கு தெரியும்    பதிவுகள் செய்யமால் என்ன வைத்திருக்கலாமென்று

உண்மையாவா?அது என்னவாக இருக்கும்?

எங்களுக்கும் சொன்னால் நாங்களும் வைத்திருக்கலாமில்ல!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மையாவா?அது என்னவாக இருக்கும்?

எங்களுக்கும் சொன்னால் நாங்களும் வைத்திருக்கலாமில்ல!

அண்ணன்மார்கள் எல்லோருக்கும் வீடுகளில்  தேத்தண்ணிக்குள் antifreeze கலக்கப்படப் போகுது..........🤣.

நம்ம கவிஞர் செமையான ஒரு ஐடியாவை கொடுத்திருக்கின்றார்........... 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மையாவா?அது என்னவாக இருக்கும்?

எங்களுக்கும் சொன்னால் நாங்களும் வைத்திருக்கலாமில்ல!

சொல்லலாம் பிரச்சனை இல்லை   வைத்திருக்க. துணிவு வேண்டும்   மனத்தைரியம்.  100% வேண்டும்   உங்களுக்கு இவை அறவே இல்லை 🤣🙏.  

ஆண்கள்  பதியாமால். பல. பெண்களையும்.  

பெண்கள் பதியாமால். பல ஆண்களையும்.  வைத்து இருக்கலாம்   

இதை நீங்கள் செய்வீங்களா???? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

அண்ணன்மார்கள் எல்லோருக்கும் வீடுகளில்  தேத்தண்ணிக்குள் antifreeze கலக்கப்படப் போகுது..........🤣.

நம்ம கவிஞர் செமையான ஒரு ஐடியாவை கொடுத்திருக்கின்றார்........... 

 

7 minutes ago, Kandiah57 said:

சொல்லலாம் பிரச்சனை இல்லை   வைத்திருக்க. துணிவு வேண்டும்   மனத்தைரியம்.  100% வேண்டும்   உங்களுக்கு இவை அறவே இல்லை 🤣🙏.  

ஆண்கள்  பதியாமால். பல. பெண்களையும்.  

பெண்கள் பதியாமால். பல ஆண்களையும்.  வைத்து இருக்கலாம்   

இதை நீங்கள் செய்வீங்களா???? 🤣

ஓ இதுவா சங்கதி.

எனக்கு இருந்த இடத்திலிருந்து எழும்பேலாமல் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

 

ஓ இதுவா சங்கதி.

எனக்கு இருந்த இடத்திலிருந்து எழும்பேலாமல் இருக்கு.

உதவிக்கு ஒரு இளம்பெண்ணை வேலைக்கு அமர்த்தி விடுங்கள்  பிரச்சனை தீர்ந்தது.   ஒடியடி திரியலாம் 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

உதவிக்கு ஒரு இளம்பெண்ணை வேலைக்கு அமர்த்தி விடுங்கள்  பிரச்சனை தீர்ந்தது.   ஒடியடி திரியலாம் 😀

உங்களுக்கு தெரியும் தானே ஓய்வெடுத்துவிட்டால் தரும் பணம் நாக்கு வழிக்கவே போதாது.

இளசுகளை வைத்திருக்க கட்டு கட்டாக பணம் தேவையெ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

image

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று புதன்கிழமை (23) முன்னிலையாகியுள்ளார்.

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தைப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இந்த குற்றச்சாட்டுக்கமைய அவருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  வாக்கு மூலம் அளிப்பதற்காக வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பிணை தொடர்ந்தே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

https://www.virakesari.lk/article/196890

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.