Jump to content

இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இந்திய அணியினை நியுசிலாந்து போட்டு புரட்டி எடுப்பது என்பது அதுவும் இந்தியாவிலே என்பதால் இந்த தொடர் ஒரு ஆர்வ மிகுதியினை ஏற்படுத்தியுள்ளது அதனால் இதனை பின் தொடர்கிறேன், பெரும்பாலும் ஆட்ட முடிவில் நிலமையினை அவதானிப்பதுண்டு அல்லது யூரியூப்பில் சில வேளை கைலைற்ஸ் பார்பதுண்டு வேறு ஆட்டங்களை பின் தொடர்வதில்லை.

மூன்றாவ‌து டெஸ்ட் விளையாட்டு இந்தியா க‌ண்டிப்பாய் வெல்லும்

 

நியுசிலாந் முன்ன‌னி விக்கேட் எல்லாம் போய் விட்ட‌து 70ர‌ன்ஸ் முன்ன‌னியில் 4 விக்கேட் 

 

கூடுத‌லா நியுசிலாந் 100.அல்ல‌து 150ர‌ன்ஸ் அடிச்சாதும் அதை இந்தியா அதிர‌டியாக‌ விளையாடி வென்று விடுவின‌ம்

 

விளையாட்டு நாளையோட‌ முடிந்து விடும்

 

இப்ப‌ ந‌ட‌க்கும் ப‌ல‌ டெஸ்ட் விளையாட்டு 3.அல்ல‌து 4 நாளில் முடிந்து விடுது...................

 

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் டெஸ்ட் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் ஒலிய‌ இல்லையேன் விளையாட்டு 3.4 நாட்க‌ளில் முடிந்து விடும்..........................

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இந்திய அணியினை நியுசிலாந்து போட்டு புரட்டி எடுப்பது என்பது அதுவும் இந்தியாவிலே என்பதால் இந்த தொடர் ஒரு ஆர்வ மிகுதியினை ஏற்படுத்தியுள்ளது அதனால் இதனை பின் தொடர்கிறேன், பெரும்பாலும் ஆட்ட முடிவில் நிலமையினை அவதானிப்பதுண்டு அல்லது யூரியூப்பில் சில வேளை கைலைற்ஸ் பார்பதுண்டு வேறு ஆட்டங்களை பின் தொடர்வதில்லை.

நியுசிலாந் மூன்றாவ‌து டெஸ்ட் விளையாட்டை சீடியேசா வெல்ல‌னும் என்று விளையாடின‌ மாதிரி தெரிய‌ வில்லை...................தொட‌ரை வென்றாச்சு தானே என்று 

ஏனோ தானோ என்று விளையாடுகின‌ம்

 

இந்தியாவின் வெற்றி உறுதியாகி விட்ட‌து......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பான கட்டத்தில் மும்பை டெஸ்ட் - இந்திய அணி வெற்றி பெறுமா? ஆட்டம் எப்படி திரும்பும்?

India vs New Zealand Test match

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

மும்பை வான்ஹடே மைதானத்தில் நடந்து வரும் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்கிறது.

இன்னும் 3 நாட்கள் ஆட்டம் இருக்கும் நிலையில் புனே டெஸ்ட் போட்டியைப் போன்று ஆட்டம் 3 நாட்களில் முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் பெரிதாக முன்னிலை வகிக்காத நிலையில், நியூசிலாந்து அணியும் 2வது இன்னிங்ஸில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இதனால் குறைந்த வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி 2வது இன்னிங்ஸில் களமிறங்கினாலும் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் சமாளிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ரிஷப் பந்த், சுப்மான் கில் ஆகியோரின் அரை சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 28 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய நியூசிலாந்து அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து, 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

இரண்டாவது நாளான இன்று ஒரே நாளில் மட்டும் 15 விக்கெட்டுகள் இரு அணிகளிலும் சேர்த்து வீழ்த்தப்பட்டுள்ளன. இந்திய அணியின் அனுபவ பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சரியக் காரணமாயினர். குறிப்பாக அஸ்வின் பல அற்புதமான கேரம் பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்டம் எப்படி நகரும்

நியூசிலாந்து அணியை 200 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்துவிட்டால், இந்திய அணிக்கு 160 முதல் 170 ரன்களுக்குள்தான் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும். இந்த இலக்கை இந்திய அணி பேட்டிங்கின் மூலம் அணுகினால்தான் வெற்றியை எளிதாக எட்ட முடியும்.

விக்கெட்டை இழந்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் அதீத கவனத்துடன் ஆடும்பட்சத்தில் இந்திய பேட்டர்கள் திணறும் டிஃபெண்ட்ஸ் போக்கால் விக்கெட்டுகளை இழக்க நேரிடும். இந்திய பேட்டர்கள் டிஃபெண்ட்ஸ் வகை பேட்டிங்கில் திணறுகிறார்கள் என பயிற்சியாளர் கம்பீரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால், இதுபோன்ற நேரத்தில் தற்காப்பு பேட்டிங் மிகுந்த அவசியம். டி20 போட்டிகளில் அதிகம் பங்கேற்றதால் தற்காப்பு பேட்டிங்கை இந்திய பேட்டர்கள் கையாளுவதில் திணறுகிறார்கள். இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தலாம்.

ஆடுகளமும் கடைசி 3 நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், ஈஷ் சோதி, அஜாஸ் படேல், பிலிப்ஸ் ஆகியோரின் பந்துவீச்சு நன்கு டர்ன் ஆகி, பவுன்ஸ் ஆகும். இதனால் இந்திய பேட்டர்கள் விக்கெட்டை இழக்காமல் ரன்களை சேர்த்தால் வெற்றி பெறலாம். டெஸ்ட் தொடரையும் ஒயிட்வாஷ் முறையில் இழக்காமல் 2-1 என்ற கணக்கில் கௌரவமாக இந்திய அணி முடிக்கும்.

ஒருவேளை இந்திய அணி நாளை விரைவாக வெற்றி இலக்கை அடைந்துவிட்டால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டணையில் 12 புள்ளிகளைப் பெறும், வெற்றி சதவீதமும் தற்போதுள்ள 62 சதவீதத்தில் இருந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் பின் ஆஸ்திரேலியா சென்று அந்நாட்டுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட சவாலான டெஸ்ட் தொடரை இந்திய அணி எதிர்கொள்ளும்.

 

ரிஷப் பந்த் - கில் அதிரடி

India vs New Zealand Test match

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி நேற்று மாலை ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் இருக்கும்போது 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பதற்றமடைந்தது. ஆனால், ரிஷப் பந்த், சுப்மான் கில் கடைசி நேரத்தில் விக்கெட்டை நிலைப்படுத்தி, இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ரிஷப் பந்த், கில் இருவரும் டெஸ்ட் போட்டியை போன்று பேட் செய்யாமல் டி20 போட்டியை போல நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அதிரடியாக ஆட வேண்டும் என்ற மனநிலையோடு களமிறங்கிய ரிஷப் பந்த் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். சுப்மான் கில் 66 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இந்திய அணி 21 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. அடுத்த 10 ஓவர்களில் தேநீர் இடைவேளையின் போது 163 ரன்களை எட்டி 6 ரன்ரேட்டில் சென்றது. இதனால் இந்திய அணி பெரிய ஸ்கோரை நோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், ரிஷப் பந்த் 53 ரன்கள் சேர்த்திருந்தபோது கிடைத்த கேட்ச் வாய்ப்பை ஃபிலிப்ஸ் தவறவிட்டார். இருப்பினும் ஈஷ் சோதி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ரிஷப் பந்த் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்திருந்தது. 46 ஓவர்களில் 200 ரன்களை இந்திய அணி எட்டியது.

 

விக்கெட் சரிவு

India vs New Zealand Test match

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், அடுத்த 63 ரன்களுக்கு மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இந்திய பேட்டர்கள் விரைவாக இழந்தனர். ரிஷப் பந்த் ஆட்டமிழந்தபின் இந்திய அணி கவனமாக ஆட்டத்தை நகர்த்த வேண்டும் என்று எண்ணி இருந்தது. இதனால் அடுத்த 10 ஓவர்களாக ஒரு பவுண்டரிகூட அடிக்காமல் ஆட்டம் நகர்ந்தது.

ஆனால், ரவீந்திர ஜடேஜா, சர்ஃபிராஸ் கான் விக்கெட்டுகளை விரைவாக இந்திய அணி இழந்தது. சொந்த மண்ணில் களமிறங்கிய சர்ஃபிராஸ் கான் டக்-அவுட்டில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் பிளென்டலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஃபிலிப்ஸ் பந்துவீச்சில் ஜடேஜா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

சதத்தை தவறவிட்ட கில்

சதத்தை நோக்கி நகர்ந்த சுப்மான் கில் 90 ரன்கள் சேர்த்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் டேரல் மிட்ஷெலிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன்பின் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனித்துப் போராடிய நிலையில் அவருக்குக் கடைசி வரிசையில் எந்த பேட்டரும் ஒத்துழைக்கவில்லை. அஸ்வின்(6), ஆகாஷ் தீப்(0) விரைவாக விக்கெட்டை இழந்தனர். சுந்தர் 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 59.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 28 ரன்கள் முன்னிலை பெற்றது. அஜாஸ் படேல் இந்த டெஸ்ட் தொடரில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

நியூசிலாந்து திணறல்

India vs New Zealand Test match

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்து அணி, 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஆகாஷ் தீப் வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் லாதம் க்ளீன் போல்டாகி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு கான்வே, யங் ஜோடி சேர்ந்து ஆட்டத்தைப் பொறுமையாக நகர்த்தினர். ஆனால், கான்வே 22 ரன்கள் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த இன்னிங்ஸை போலவே ரவீந்திரா இந்த முறையும் நிலைக்கவில்லை.

ரவீந்திரா களமிறங்கிய சிறிது நேரத்தில் 4 ரன்னில் ரிஷப் பந்த் ஸ்டெம்பிங் செய்து, அஸ்வின் பந்துவீச்சில் அவரது விக்கெட்டை எடுத்தார். 4வது விக்கெட்டுக்கு டேரல் மிட்ஷெல், யங் கூட்டணி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

திருப்பம் தந்த ஜடேஜா

இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் சிரமப்பட்ட நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் திருப்பம் நிகழ்ந்தது. டேரல் மிட்ஷெல் 21 ரன்கள் சேர்த்திருந்தபோது, மிட்-ஆப் திசையில் நின்றிருந்த அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதன்பின் நியூசிலாந்து விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. மாலை தேநீர் இடைவேளையின்போது நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்திருந்தது.

ஆனால் நிதானமாக பேட் செய்த வில் யங் 95 பந்துகளில் அரைசதம் அடித்தார். 94 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து அணி, அடுத்த 77 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கடைசி 4 விக்கெட்டுகளை மட்டும் 40 ரன்களுக்குள் இழந்தது. நிதானமாக பேட் செய்த வில் யங் 51 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 43.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து, 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, வீரப் பையன்26 said:

மூன்றாவ‌து டெஸ்ட் விளையாட்டு இந்தியா க‌ண்டிப்பாய் வெல்லும்

 

நியுசிலாந் முன்ன‌னி விக்கேட் எல்லாம் போய் விட்ட‌து 70ர‌ன்ஸ் முன்ன‌னியில் 4 விக்கேட் 

 

கூடுத‌லா நியுசிலாந் 100.அல்ல‌து 150ர‌ன்ஸ் அடிச்சாதும் அதை இந்தியா அதிர‌டியாக‌ விளையாடி வென்று விடுவின‌ம்

 

விளையாட்டு நாளையோட‌ முடிந்து விடும்

 

இப்ப‌ ந‌ட‌க்கும் ப‌ல‌ டெஸ்ட் விளையாட்டு 3.அல்ல‌து 4 நாளில் முடிந்து விடுது...................

 

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் டெஸ்ட் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் ஒலிய‌ இல்லையேன் விளையாட்டு 3.4 நாட்க‌ளில் முடிந்து விடும்..........................

நியுசிலாந்து இந்தியாவிற்கே போய் இந்தியாவிற்கு வெள்ளை அடித்துவிட்டது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, vasee said:

நியுசிலாந்து இந்தியாவிற்கே போய் இந்தியாவிற்கு வெள்ளை அடித்துவிட்டது.😁

இந்தியா வீர‌ர்க‌ளுக்கு உண்மையில் என்ன‌ ஆச்சு

இன்றும் தோல்வி

 

யாராவ‌து முன் கூட்டி நினைத்து இருப்பின‌மா இந்தியா தொட‌ரை நியுசிலாந்திட‌ம் 3-0 என‌ தோக்கும் என்று......................

 

இந்தியா க‌ப்ட‌ன் இந்த‌ டெஸ்ட் தொட‌ரில் பெரிய‌ ர‌ன்ஸ் அடிக்க‌ வில்லை..................

 

இனி க‌டும் விம‌ர்ச‌ன‌ம் இவ‌ர்க‌ள் மீது வைக்க‌ப் ப‌டும்

 

வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் த‌னி ஆளாய் நின்று அடிச்ச‌ ர‌ன்ஸ்ச‌ கோலியால் . ரோகித் ச‌ர்மாவால் கூட‌ அடிக்க‌ முடிய‌ வில்லை........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியா வீர‌ர்க‌ளுக்கு உண்மையில் என்ன‌ ஆச்சு

இன்றும் தோல்வி

 

யாராவ‌து முன் கூட்டி நினைத்து இருப்பின‌மா இந்தியா தொட‌ரை நியுசிலாந்திட‌ம் 3-0 என‌ தோக்கும் என்று......................

 

இந்தியா க‌ப்ட‌ன் இந்த‌ டெஸ்ட் தொட‌ரில் பெரிய‌ ர‌ன்ஸ் அடிக்க‌ வில்லை..................

 

இனி க‌டும் விம‌ர்ச‌ன‌ம் இவ‌ர்க‌ள் மீது வைக்க‌ப் ப‌டும்

 

வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் த‌னி ஆளாய் நின்று அடிச்ச‌ ர‌ன்ஸ்ச‌ கோலியால் . ரோகித் ச‌ர்மாவால் கூட‌ அடிக்க‌ முடிய‌ வில்லை........................

On 2/11/2024 at 08:14, vasee said:

முன்னால் இந்திய மட்டை பயிற்சியாளரும், இலங்கை சுழற்பந்து வீச்சாளரின் உதவியுடன் நியுசிலாந்து இந்த தொடரை வெள்ளை அடித்தாலும் ஆச்சரிய பட முடியாது, ஆனால் இந்தியா தனது முதலாவது இனிங்ஸில் குரைந்த பட்சம் 300 ஓட்டங்களாவது பெறவேண்டும் ஏனென்றால் 4 ஆவதாக ஆடும் இந்தியணிக்கு 150 ஒட்டங்களே இமாலய இலக்காக இருக்கும்.

150 ஓட்டங்கள் என்பது கடினமாக இருக்கும் என முன்பே கூறியிருந்தேன்(முதல் நாள் ஆட்ட முடிவில்), அதற்குக்காரணம் ஆடுகளத்தின் தன்மை, இந்தியா சுழல் பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தினை முதல் நாளிலேயே உருவாக்கியுள்ளது (பொதுவாக 3 ஆம் நாளின் பின்னரே ஆடுகலம் சுழல் பந்துவீச்சிற்கு சாதகமாக மாறும்), அந்த ஆப்பு அவர்களுக்கே வந்து சேர்ந்துவிட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, vasee said:

150 ஓட்டங்கள் என்பது கடினமாக இருக்கும் என முன்பே கூறியிருந்தேன்(முதல் நாள் ஆட்ட முடிவில்), அதற்குக்காரணம் ஆடுகளத்தின் தன்மை, இந்தியா சுழல் பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தினை முதல் நாளிலேயே உருவாக்கியுள்ளது (பொதுவாக 3 ஆம் நாளின் பின்னரே ஆடுகலம் சுழல் பந்துவீச்சிற்கு சாதகமாக மாறும்), அந்த ஆப்பு அவர்களுக்கே வந்து சேர்ந்துவிட்டது.

 

நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி🙏................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச‌ச்சின் . ராகுல் ராவிட் . ல‌க்ஸ்ம‌ன் . இவ‌ர்க‌ள் விளையாடின‌ கால‌த்தில் டெஸ்ட் விளையாட்டில் ப‌டு நிதான‌ம் இருந்த‌து

 

ப‌ண‌ ஆசையில் 20ஓவ‌ரில் விளையாடும் வீர‌ர்க‌ளை ஜ‌ந்த‌ நாள் விளையாட்டில் விளையாட‌ விட்டால் இது தான் கெதி

 

புஜாரா . ராகான‌ . போன்ற‌ நிதான‌மாய் விளையாடும் வீர‌ர்க‌ளை அணியில் இருந்து ஓர‌ம் க‌ட்டின‌ ப‌டியால் வ‌ந்த‌ வினை

 

அவுஸ்ரேலியா தொட‌ரில் புஜாராவை சேர்க்க‌னும் முன்ன‌னி விக்கேட் போனாலும் 

ஆமை வேக‌த்தில் நிதான‌மாய் விளையாடி ர‌ன்ஸ் அடிப்பார் புஜாரா..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, வீரப் பையன்26 said:

 

அவுஸ்ரேலியா தொட‌ரில் புஜாராவை சேர்க்க‌னும் முன்ன‌னி விக்கேட் போனாலும் 

ஆமை வேக‌த்தில் நிதான‌மாய் விளையாடி ர‌ன்ஸ் அடிப்பார் புஜாரா..........................

அவுஸ்திரேலியா செல்லும் இந்தியா  அணி ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு இருக்கிறது. பார்க்கவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா 3 - 0 என தோல்வியடைந்ததால் மட்டற்ற  மகிழ்ச்சி. ரோஹித் அணியிலிருந்து விலக்கப்படவேண்டிய ஒரு தேவையில்லாத ஆணி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கந்தப்பு said:

அவுஸ்திரேலியா செல்லும் இந்தியா  அணி ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு இருக்கிறது. பார்க்கவில்லையா? 

cricinfoவில் இன்னும் தெரிவு செய்த‌ வீர‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள் காட்ட‌ வில்லை......................

10 minutes ago, Eppothum Thamizhan said:

இந்தியா 3 - 0 என தோல்வியடைந்ததால் மட்டற்ற  மகிழ்ச்சி. ரோஹித் அணியிலிருந்து விலக்கப்படவேண்டிய ஒரு தேவையில்லாத ஆணி!

டெஸ்ட் விளையாட்டு விளையாடுகிறேன் என்ப‌த‌ மற‌ந்து எல்லா ப‌ந்தையும் 20ஓவ‌ர் போல் அடிச்சு ஆட‌னும் என்று விளையாடி அவுட்டா வெளியில் போன‌வ‌ர் ந‌ண்பா

 

உண்மையில் இந்தியா டெஸ்ட் அணியில் மாற்ற‌ங்க‌ள் நிறைய‌ செய்ய‌ இருக்கு...................ரோகித் ச‌ர்மாவை அணியில் இருந்து நீக்க‌னும் அதோட‌ நிதான‌மாக‌ விளையாடும் வீர‌ர்க‌ளை அணியில் சேர்க்க‌னும்............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

cricinfoவில் இன்னும் தெரிவு செய்த‌ வீர‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள் காட்ட‌ 

இருக்குது. பாருங்கள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூனி குறுகி நிக்கிறீனம் போல. கோலி சார் ஓய்வு நிலைக்கு வந்துவிட்டாரோ.

வாசிங்டன் சுந்தர் தமிழோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் டெஸ்ட் போட்டியைத் தவிர நாணயச் சுழற்சியும் முக்கிய பங்கு வகித்துள்ளதாக எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்தி அசத்திய நியூஸிலாந்துக்கு டெஸ்ட் தொடரில் முழுமையான (3 - 0) வெற்றி

image

(நெவில் அன்தனி)

ந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் நியூஸிலாந்து 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முழுமையான வெற்றியீட்டி வரலாறு படைத்தது.

இந்திய மண்ணில் 1956இலிருந்து  இந்த வருடம்வரை விளையாடிய 13 டெஸ்ட் தொடர்களில் நியூஸிலாந்து ஈட்டிய முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும்.

0311_glenn_philipps.png

மூன்று நாட்களுக்குள் நிறைவடைந்த மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் 25 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 2ஆவது இன்னிங்ஸில் 147 ஓட்டங்களே தேவைப்பட்டது.

ஆனால், மும்பையைப் பிறப்பிடமாகக் கொண்ட அஜாஸ் பட்டேல், க்ளென் பிலிப்ஸ் ஆகிய சுழல்பந்துவீச்சாளர்கள் இருவரும் தங்களிடையே 9 விக்கெட்களைப் பகிர்ந்து இந்தியாவை 121 ஓட்டங்களுக்கு சுருட்டி நியூஸிலாந்தின் அபார வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 9 விக்கெட்கள் இழப்புக்கு 171 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து 174 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அதன் கடைசி விக்கெட்டை இழந்தது.

இந் நிலையில் இந்தியாவுக்கு மிகவும் இலகுவான 147 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

0311_glenn_philipps.png

இந்த வெற்றி இலக்கை இலகுவாக அடைந்துவிடலாம் என இந்திய கிரிக்கெட் வீரர்களும் இரசிகர்களும் நினைத்திருக்கக்கூடும்.

ஆனால், மிக மோசமான துடுப்பாட்டம் காரணமாக இந்தியா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 29.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

0311_rishab_pant.png

இந்தியா ஒரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

ஆனால், ரிஷாப் பான்ட் முதல் இன்னிங்ஸில் போன்றே இரண்டாவது இன்னிங்ஸிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார்.

அவர் 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அஜாஸ் பட்டேலின் பந்துவீச்சில் பிடி ஒன்றுக்கான கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால், அது ஆட்டம் இழப்பில்லை என கள மத்தியஸ்தர் தீர்ப்பளித்தார்.

எனினும் கள மத்தியஸ்தரின் தீர்ப்பை மீளாய்வு செய்யுமாறு நியூஸிலாந்து அணியினர் கோரினர்.

அதனை மீளாய்வு செய்த மூன்றாவது மத்தியஸ்தர், பந்து துடுப்பில் பட்ட பின்னரே பாதகாப்பில் பட்டதாகத் தீர்மானித்து கள மத்தியஸ்தரின் தீர்ப்பை மாற்றி ரிஷாப் பான்ட் ஆட்டம் இழந்ததாகத் தீர்ப்பளித்தார்.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷாப் பான்டைவிட ரோஹித் ஷர்மா, வொஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்களையும் க்ளென் பிலிப்ஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

0311_ajaz_patel.png

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 235 (டெறில் மிச்செல் 82, வில் யங் 71, டொம் லெதம் 28, ரவிந்த்ர ஜடேஜா 65 - 5 விக்., வொஷிங்டன் சுந்தர் 81 - 4 விக்.)

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 263 (ஷுப்மான் கில் 90, ரிஷாப் பான்ட் 60, வொஷிங்டன் சுந்தர் 38 ஆ.இ., யஷஸ்வி ஜய்ஸ்வால் 30, அஜாஸ் 103 - 5 விக்.)

நியூஸிலாந்து 2 ஆவது இன்: 174 (வில் யங் 51, க்ளென் பிலிப்ஸ் 26, டெவன் கொன்வே 22, டெறில் மிச்செல் 21, ரவிந்த்ரா ஜடேஜா 55 - 5 விக்., ரவிச்சந்திரன் 63 - 3 விக்.)

இந்தியா - வெற்றி இலக்கு 147 - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 141 (ரிஷாப் பான்ட் 64, வொஷிங்டன் சுந்தர் 12, ரோஹித் ஷர்மா 11, உதிரிகள் 12, அஜாஸ் பட்டேல் 57 - 5 விக்., க்ளென் பிலிப்ஸ் 42 - 3 விக்.)

ஆட்டநாயகன்: அஜாஸ் பட்டேல்

தொடர் நாயகன்: வில் யங்.

GbcbgsEagAALgqp.jpg

https://www.virakesari.lk/article/197784

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'பத்திற்குள்ள நம்பர் ஒன்று சொல்லு..................' என்று கோலி பாடிப் பாடி விளையாடி இருக்கின்றார் போல........ கோலிபாய் எம்பிபிஎஸ்...........

அந்த நாளில், 80, 90 களில், எவ்வளவு மோசமான இந்திய அணிகளை பார்த்திருக்கின்றேன்............. ஆனாலும் இது வேற லெவல் அணி.......... மகா கேவலம்............

வீட்டிலிருக்கும் நால்வருடன் இன்னும் ஒரு எட்டுப் பேரை அக்கம்பக்கத்தில் கூட்டி அள்ளிக் கொண்டு போய் நானும் ஒரு மாட்ச் கேட்கலாம் என்றிருக்கின்றேன்..........

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

 

இது மூன்றாம் நாள் முழு க‌ட்லையிட் காணொளி கிடையாது...................த‌மிழ‌க‌ வீர‌ர் வஸ்சின்ட‌ன் சுந்த‌ர் ம‌ற்றும் ரிக்ஸ்ச‌ ப‌ண்ட் இருவ‌ரும் சேர்ந்து ந‌ல்ல‌ பாட்ன‌ சிப் போட்ட‌வை 

அது இந்தில் இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா..............................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கந்தப்பு said:

அவுஸ்திரேலியா செல்லும் இந்தியா  அணி ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு இருக்கிறது. பார்க்கவில்லையா? 

சொந்த‌ நாட்டிலையே இப்ப‌டி ப‌டு சுத‌ப்ப‌லா விளையாடும் இந்தியா

அவுஸ்ரேலியாவை சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து சிர‌ம‌ம்................தோல்வியுட‌ன் நாடு திரும்ப‌ ச‌ரி........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

150 ஓட்டங்கள் என்பது கடினமாக இருக்கும் என முன்பே கூறியிருந்தேன்(முதல் நாள் ஆட்ட முடிவில்), அதற்குக்காரணம் ஆடுகளத்தின் தன்மை, இந்தியா சுழல் பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தினை முதல் நாளிலேயே உருவாக்கியுள்ளது (பொதுவாக 3 ஆம் நாளின் பின்னரே ஆடுகலம் சுழல் பந்துவீச்சிற்கு சாதகமாக மாறும்), அந்த ஆப்பு அவர்களுக்கே வந்து சேர்ந்துவிட்டது.

 

இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டை இந்தியா வென்றால் தான் உல‌க‌ ச‌ம்பிய‌ன் டெஸ்ட் பின‌லுக்கு இந்தியாவால் போக‌ முடியுமாம் 

இனி அவுஸ்ரேலியாவை அவ‌ர்க‌ளின் ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம்......................

 

நான் சில‌தை ச‌ரியா க‌ணித்தேன் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் உண்மையில் இந்தியா வென்று இருக்க‌னும்

 

இந்தியா க‌ப்ட‌னை டெஸ்ட் போட்டிக‌ளில் இருந்து நீக்க‌னும்

ரோகித் ச‌ர்மா இர‌ண்டு இனிங்சிலும் பெரிய‌ ர‌ன்ஸ் அடிக்க‌ வில்லை 

 

அது தான் இந்தியாவின் தோல்விக்கு கார‌ண‌ம்................எப்போதும் த‌மிழ‌ன் சொன்ன‌து போல் ரோகித் ச‌ர்மா டெஸ்ட் போட்டிக்கு இவ‌ர் தேவை இல்லா ஆணி

 

சுல்ம‌ன் கில் ம‌ற்றும் ஜேஸ்வால‌ தொட‌க்க‌ வீர‌ர்க‌ளா விளையாட‌ விட‌னும் மிடில் வீர‌ர்க‌ளில் புஜாராவை மீண்டும் அணியில் சேர்த்து விளையாட‌ விட‌னும்...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, வீரப் பையன்26 said:

இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டை இந்தியா வென்றால் தான் உல‌க‌ ச‌ம்பிய‌ன் டெஸ்ட் பின‌லுக்கு இந்தியாவால் போக‌ முடியுமாம் 

இனி அவுஸ்ரேலியாவை அவ‌ர்க‌ளின் ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம்......................

 

நான் சில‌தை ச‌ரியா க‌ணித்தேன் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் உண்மையில் இந்தியா வென்று இருக்க‌னும்

 

இந்தியா க‌ப்ட‌னை டெஸ்ட் போட்டிக‌ளில் இருந்து நீக்க‌னும்

ரோகித் ச‌ர்மா இர‌ண்டு இனிங்சிலும் பெரிய‌ ர‌ன்ஸ் அடிக்க‌ வில்லை 

 

அது தான் இந்தியாவின் தோல்விக்கு கார‌ண‌ம்................எப்போதும் த‌மிழ‌ன் சொன்ன‌து போல் ரோகித் ச‌ர்மா டெஸ்ட் போட்டிக்கு இவ‌ர் தேவை இல்லா ஆணி

 

சுல்ம‌ன் கில் ம‌ற்றும் ஜேஸ்வால‌ தொட‌க்க‌ வீர‌ர்க‌ளா விளையாட‌ விட‌னும் மிடில் வீர‌ர்க‌ளில் புஜாராவை மீண்டும் அணியில் சேர்த்து விளையாட‌ விட‌னும்...............................

அனைவரும் இந்தியா மோசமாக விளையாடிதுதான் இந்தியாவின் தோல்விக்குக்காரணம் எனும் நிலை காணப்படுகிறது, உண்மையில் நியுசிலாந்து திறமையாக விளையாடி எப்போதும் இந்தியாவினை அளுத்தத்தில் வைத்திருந்தது, அவர்களிடம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும் இல்லை, ஒரு சகல துறை ஆட்டக்காரர் பிரதான பந்துவீச்சாளராக செயற்படும் நிலை காணப்பட்டது.

போட்டியில் பந்துவீச்சில் இரண்டு பக்கமும் அளுத்தம் கொடுப்பதற்காக பட்டேலையும் பிலிப்ஸையும் நியுசிலாந்து தொடர்ந்து பயன்படுத்தவேண்டிய நிலை காணப்பட்டது.

தனது பலத்திற்கேற்ப மிக தெளிவாக் திட்டமிட்டு நியுசிலாந்து இந்தியாவினை வென்றுள்ளது, நியுசிலாந்திடம்  தோற்றதனால் இந்தியா மோசமான அணி அல்ல இதே இந்திய அணி அவுஸில் சிறப்பாக விளையாடும், நியுசிலாந்து ஒவ்வொரு மட்டையாளரது பலவீனத்தினையும் குறிவைத்து அவர்களை அவுட்டாக்கியது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, vasee said:

அனைவரும் இந்தியா மோசமாக விளையாடிதுதான் இந்தியாவின் தோல்விக்குக்காரணம் எனும் நிலை காணப்படுகிறது, உண்மையில் நியுசிலாந்து திறமையாக விளையாடி எப்போதும் இந்தியாவினை அளுத்தத்தில் வைத்திருந்தது, அவர்களிடம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும் இல்லை, ஒரு சகல துறை ஆட்டக்காரர் பிரதான பந்துவீச்சாளராக செயற்படும் நிலை காணப்பட்டது.

போட்டியில் பந்துவீச்சில் இரண்டு பக்கமும் அளுத்தம் கொடுப்பதற்காக பட்டேலையும் பிலிப்ஸையும் நியுசிலாந்து தொடர்ந்து பயன்படுத்தவேண்டிய நிலை காணப்பட்டது.

தனது பலத்திற்கேற்ப மிக தெளிவாக் திட்டமிட்டு நியுசிலாந்து இந்தியாவினை வென்றுள்ளது, நியுசிலாந்திடம்  தோற்றதனால் இந்தியா மோசமான அணி அல்ல இதே இந்திய அணி அவுஸில் சிறப்பாக விளையாடும், நியுசிலாந்து ஒவ்வொரு மட்டையாளரது பலவீனத்தினையும் குறிவைத்து அவர்களை அவுட்டாக்கியது.

 

இந்தியா வெளி நாடுக‌ளுக்கு போனால் அடி வாங்கி கொண்டு தான் வார‌வை....................நீங்க‌ள் நியுசிலாந் வீர‌ர்க‌ளை ப‌ற்றி சொன்ன‌தில் என‌க்கும் அது ச‌ரி என்று ப‌டுது......................மூன்றாவ‌து டெஸ்ட் போட்டியில் விளையாடின‌ இந்தியா அணியில் 9வீர‌ர்க‌ளுக்கு ம‌ட்டையால் ப‌ந்தை அடிக்க‌ தெரியும் மீத‌ம் உள்ள‌ இர‌ண்டு வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு ம‌ட்டையால் அடிக்க‌ தெரியாது..................நீங்க‌ள் சொன்ன‌து போல் நியுசிலாந்தை விட‌ ச‌க‌ல‌துரை ஆட்க்கார‌ இந்தியா தான் அதிக‌ம் வைச்சு இருக்கு அப்ப‌டி இருந்தும் இந்தியா தோல்வி................................. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18 தொடர்களை வென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் ‘ஒயிட்வாஷ்’ ஆகக் காரணம் என்ன?

இந்திய அணி ஒயிட்வாஷ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், போத்திராஜ்.க
  • பதவி, பிபிசி தமிழுக்காக

கடந்த 12 ஆண்டுகளில் 18 டெஸ்ட் தொடர்கள் வெற்றி, உள்நாட்டில் அதிகமான டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற பெருமை, உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியும் நிகழ்த்தியிராத சாதனை என இந்திய அணி வலம் வந்தது.

ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய கிரிக்கெட்டையே புரட்டிப் போடும் அளவுக்கு மோசமானதாக மாற்றும் என யாரும் நினைக்கவில்லை.

இந்த மோசமான தோல்விக்குக் காரணம் என்ன?

147 ரன்களைக்கூட சேஸ் செய்ய முடியாமல்...

12 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் தொடரைத்தான் இந்திய அணி இழந்துவிட்டது என்று நினைத்திருந்த நிலையில் முதல்முறையாக டெஸ்ட் தொடரில் 24 ஆண்டுகளுக்குப்பின் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. அதிலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை முதல்முறையாக முற்றிலும் இழந்து வரலாற்றில் மிகப்பெரிய கறையை ஏற்படுத்தியுள்ளது.

ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, அஸ்வின் போன்ற அனுபவமான வீரர்கள் இருந்தும் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. அதிலும் சுப்மான் கில், ஜெய்ஸ்வால், ரிஷப்பந்த், வாஷிங்டன் சுந்தர் என அனைவரும் ஐ.பி.எல் லீக்கில் அதிரடியாக பேட் செய்யக்கூடிய திறமையான பேட்டர்கள், இவர்கள் இருந்தும் 147 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் இந்திய அணி தோற்றது என்பது ஜீரணிக்கமுடியாததாக அமைந்துள்ளது.

 
சச்சின் டெண்டுல்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த தோல்வி ஆலோசிக்கப்பட்டு, சுயபரிசோதனை செய்யப்பட வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்

முன்னாள் வீரர்கள் சாடல்

இந்திய அணியின் இந்த வரலாற்றுத் தோல்வியை சீனியர் வீரர்கள் பலர் கடுமையாகச் சாடியுள்ளனர்.

“உள்நாட்டில் இந்திய அணியின் இந்த ஒயிட்வாஷ் வெட்கக்கேடாக இருக்கிறது,” என முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஒயிட்வாஷ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, அஸ்வின் போன்ற அனுபவமான வீரர்கள் இருந்தும் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியுள்ளது

'தரமான ஆடுகளங்களில் பயிற்சி தேவை'

ஹர்பஜன் சிங், எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “பந்து திரும்பக்கூடிய ஆடுகளம், அதுவே நமக்குச் சொந்த எதிரியாக மாறிவிட்டது. தரமான சுழற்பந்துவீச்சு ஆடுகளத்தில் இந்திய அணி விளையாடி பயிற்சி எடுப்பது அவசியம் என தொடர்ந்து கூறிவருகிறோம். இதுபோன்ற டர்னிங் பிட்ச்கள் ஒவ்வொரு பேட்டரையும் சாதாரணமாக மாற்றிவிட்டது,” என்று இந்திய அணியின் உண்மையைான நிலையை அம்பலப்படுத்திவிட்டார்.

'மாஸ்டர் பேட்டர்' சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “இந்திய அணியின் ஒயிட்வாஷ் தோல்வியை ஜீரணிக்கக் கடினமாக இருக்கிறது. இந்தத் தோல்வி ஆலோசிக்கப்பட்டு, சுயபரிசோதனை செய்யப்பட வேண்டும். டெஸ்ட் தொடருக்குச் சரியாகத் தயாராகவில்லையா, மோசமான ஷாட்கள் தேர்வா, போதுமான பயிற்சி எடுக்கவில்லையா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஆடும் இந்திய பேட்டர்களின் திறனை உறுதியாக மேம்படுத்த வேண்டும், அதற்கு அதிக பயிற்சிகள் வழங்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் தேவையில்லாத பரிசோதனைகள் மோசமான முடிவுகளை வழங்கிவிட்டன” எனச் சாடியுள்ளார்.

 
நியூசிலாந்து அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்தது ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி ஆதிக்கம் செய்ய வழிவகுத்துவிட்டது என தெரிவித்துள்ளார் அணில் கும்ப்ளே

'சரியான பிட்ச் அமைத்திருக்கலாம்'

இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அணில் கும்ப்ளே ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் “இந்தத் தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்து இந்திய அணியினர் எந்தவிதமான ஆடுகளத்தில் சிறப்பாக ஆடக் கூடியவர்கள் என்பதைப் புரிந்து, அறிந்து அதற்கு ஏற்றார்போல் பிட்ச் அமைத்திருக்க வேண்டும். பந்து நன்றாக திரும்பக்கூடிய முதல்தரமான சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தை அமைத்தது ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி ஆதிக்கம் செய்ய வழிவகுத்துவிட்டது,” என்றிருக்கிறார்.

மேலும், "சுழற்பந்துவீச்சில் மட்டும் இந்திய பேட்டர்கள் இந்த டெஸ்ட் தொடரில் 37 விக்கெட்டுகளை இழந்துள்ளனர். பெங்களூரு டெஸ்டில் 2வது இன்னிங்ஸ் தவிர்த்து, டாப்ஆர்டர் பேட்டர்கள் இந்த டெஸ்ட் தொடரில் முழுமையாக ஒரு செஷன் கூட பேட் செய்யவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை, வீரர்கள் களமிறங்கிய வரிசையில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது,” எனத் தெரிவித்தார்.

ரோஹித் சர்மா, விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சீனியர் பேட்டர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் பேட் செய்தவிதம் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குகிறது

சீனியர் வீரர்களின் நிலை

ஒட்டுமொத்தமாக இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்தவிதம், சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு, குறிப்பாக சீனியர் வீரர்களின் பேட்டிங் ஆகியவை பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் வீரர்களின் காலத்தை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பி.சி.சி.ஐ ஆலோசிக்கும் என பல இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப்பின் இந்த சீனியர் வீரர்களின் டெஸ்ட் வாழ்க்கை குறித்து ஏதேனும் முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஏனென்றால், சீனியர் பேட்டர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் பேட் செய்தவிதம் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குகிறது.

ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 10 இன்னிங்ஸ்களில் கேப்டன் ரோஹித் சர்மா 6 போட்டிகளில் 10க்கும் குறைவான ரன்களையே எடுத்துள்ளார்

ரோகித், கோலியின் மோசமான பேட்டிங்

குறிப்பாக ரோகித் சர்மா 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து உள்நாட்டு டெஸ்டில் 35 இன்னிங்ஸ்களில் பேட் செய்து 1,210 ரன்கள் சேர்த்துள்ளார். 4 சதங்கள் உள்பட 37 சராசரி டெஸ்ட் அரங்கில் வைத்துள்ளார். ஆனால் கடந்த 10 இன்னிங்ஸ்களில் கேப்டன் ரோகித் சர்மா 6 போட்டிகளில் 10-க்கும் குறைவான ரன்களையே எடுத்துள்ளார், 2 போட்டிகளில் 20 ரன்களுக்கும் குறைவாக எடுத்துள்ளார், இரு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.

விராட் கோலி இதே காலகட்டத்தில் உள்நாட்டில் 25 இன்னிங்ஸ்களில் 742 ரன்கள் சேர்த்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஒரு சதம் மட்டுமே அடித்து, 30.91 சராசரி வைத்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் இரு சீனியர் வீரர்களும் தலா ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளனர். விராட் கோலி அதிகபட்சமாக 70 ரன்களும் ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் தொடரில் 93 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

கேப்டன் ரோகித் சர்மா அதைவிட மோசமாக இந்த டெஸ்ட் தொடரில் ஒட்டுமொத்தமாக 91 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், இதில் ஒரு அரைசதம் மட்டும் அடங்கும். சீனியர் பேட்டர்கள் இருவரின் சராசரி 15 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு டெஸ்ட் தொடரில் மோசமான சராசரி ரன்கள் என்பது இந்த டெஸ்ட் தொடர்தான். இந்த தொடரில் இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர்.

ஆனால் ரோகித் சர்மா 6 இன்னிங்ஸ்களில் 4 முறை ஹென்றி, சவுத்தி வேகப்பந்துவீச்சில் தேவையற்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவின் டெஸ்ட் சராசரி ரன்கள் 42.29 ஆக இருக்கும்போது, இந்த தொடரின் மோசமான பங்களிப்பு அவருக்கு பெரிய கறையாக அமைந்துவிட்டது.

விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கையில் உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மோசமான ரன் சராசரி இதுதான். கோலியின் டெஸ்ட் சராசரி 48 ரன்களாக இருந்தநிலையில் அது 47 ஆகக் குறைந்துவிட்டது.

அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அஸ்வின், ஜடேஜா இருவரின் பந்துவீச்சு வேகம் 90கிமீக்கு மேல்தான் இருந்தது

அஸ்வின் திணறுகிறாரா?

இந்தியாவில் கடந்த காலங்களில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார்போல் உலகத் தரத்துக்கு இணையில்லாத எளிதாக உடையக்கூடிய பிட்சுகளையே அமைத்து வந்தனர். உலகத்தரத்துக்கு இணையான சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து அதில் சீனியர் வீரர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பந்துவீசி இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

இதனால்தான், இந்த டெஸ்ட் தொடரில் தரமான டர்னிங் பிட்சுகளை அமைத்தபோது, இந்த ஆடுகளத்தில் பந்தை டர்ன் செய்யமுடியாமல் அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் பந்துவீச்சாளர்கள் திணறியுள்ளனர்.

இதுபோன்ற தரமான டர்னிங் பிட்ச்களில் சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் வேகத்தைக் குறைத்து, பந்தை அதிகமாக 'டாஸ்' (வளைவாகத் தூக்கி வீசுதல்) செய்ய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற ஆடுகளத்தில் பந்து நன்றாக டர்ன் ஆகும். குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு வேகம் மணிக்கு 85 கி.மீக்கு மேல் இருக்கக்கூடாது.

ஆனால், அஸ்வின், ஜடேஜா இருவரின் பந்துவீச்சு வேகம் 90 கி.மீ.க்கு மேல்தான் இருந்தது. இதனால்தான் இருவரின் பந்துவீச்சும் இதுபோன்ற ஆடுகளத்தில் எடுபடவில்லை. ஆனால், வாஷிங்டன் சுந்தர் இந்த ஆடுகளத்தை எளிதாகக் கணித்து பந்துவீச்சு வேகத்தைக் குறைத்ததால் புனே டெஸ்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது.

இதுபோன்ற ஆடுகளத்தில் அஸ்வின், ஜடேஜா பந்துவீசிப் பழகியிருந்தால் வேகத்தைக் குறைத்து, ஆடுகளத்தைப் புரிந்து பந்துவீசியிருப்பார்கள். ஆனால், தரமற்ற ஆடுகளத்தில் பந்துவீசி, வேகத்தைக் குறைக்காமல் பந்துவீசியதால், அதை இந்த விக்கெட்டில் மாற்றமுடியாமல் சிரமப்பட்டனர். தரமான சுழற்பந்துவீச்சுக்கு இணையான ஆடுகளத்தில் பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்ற இதே கருத்தைத்தான் ஹர்பஜன் சிங்கும் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

 
ஜடேஜா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த ஆடுகளத்தில் பந்தை டர்ன் செய்யமுடியாமல் அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் பந்துவீச்சாளர்கள் திணறியுள்ளனர்

டாப் ஆர்டர் தோல்வி, நடுவரிசையை அதிகம் நம்பியது

இந்த டெஸ்ட் தொடரில் டாப் ஆர்டர் பேட்டர்கள் ஒரு இன்னிங்ஸில்கூட 100 ரன்களைக் கடக்கவில்லை. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, கில், கோலி என யாருமே சரியாக பங்களிப்பு செய்யவில்லை. இதனால் முழுமையாக நடுவரிசை பேட்டிங்கில் ரிஷப்பந்த், சர்ஃபிராஸ்கான், ஜடேஜா ஆகியோரைத்தான் நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

டாப் ஆர்டர் பேட்டர்கள் ரன்கள் குவித்திருந்தால், நிச்சயமாக நடுவரிசைக்குச் சுமை இருந்திருக்காது. ஆனால் டாப் ஆர்டர்கள் தோல்வியால் ஒட்டுமொத்தச் சுமையும் நடுவரிசை பேட்டர்கள் மீது விழுந்து, அவர்கள் ரன் சேர்க்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகினர்.

கம்பீருடன், கேப்டன் ரோகித் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணி பயிற்சியாளர் கம்பீருடன், கேப்டன் ரோஹித் சர்மா

டி20 போட்டியின் தாக்கம்

கடந்த 1980, 1990, 2000 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் இருந்த டெஸ்ட் கிரிக்கெட் முறை இப்போது இல்லை. பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் மெல்ல மறைந்து வருகிறது என்பதையே இந்த டெஸ்ட் தொடர் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. அதேநேரம், டி20 தாக்கத்திலிருந்து வீரர்கள் யாரும் மீளவில்லை.

இந்திய பேட்டர்கள் சமீப காலங்களில் டி20 போட்டிகளில் விளையாடிய அளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததன் விளைவாகத்தான், அவர்களால் தங்களை உடனடியாக டெஸ்ட் தொடருக்குத் தயார் செய்யமுடியவில்லை, தங்களின் பேட்டிங்கையும் மாற்றிக்கொள்ள முடியவில்லை.

தரமான டர்னிங் பிட்சுகளில் டிஃபென்ஸ் முறை பேட்டிங் மிகவும் அவசியம். ஆனால், இந்திய பேட்டர்களில் ரிஷப் பந்த் தவிர வேறு எந்த பேட்டரும் இந்தத் தொடரில் டிஃபென்ஸ் முறை ஆட்டத்தைக் கையில் எடுக்கவில்லை, அந்த ஆயுதத்தை பயன்படுத்தவில்லை. ஒருவேளை அதைச் சரியாகக் கையாளவில்லையா அல்லது பிட்சைக் கண்டு அச்சப்பட்டார்களா, விக்கெட்டை இழந்துவிடுவோம் என அதீத கவனத்துடன் ஆடினார்களா எனத் தெரியவில்லை.

ஒவ்வொரு ஷாட்டையும் டி20 போட்டியின் அணுகுமுறையில் ஆடத்தான் இந்திய பேட்டர்கள் முயன்றனர். எந்தப் பந்தில் டிஃபென்ஸ் ஆடுவது, எந்தப் பந்தை ஸ்வீப்ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப், ஃபுல்ஷாட் ஆடுவது, ஸ்ட்ரோக் வைப்பது எனத் தெரியாமல் தவறான ஷாட்கள் ஆடியுள்ளனர். இவை அனைத்தும் தீவிரமான சுயபரிசோதனைக்கு உட்படுத்தப்படும்போது தெரியவரும்.

 
ஜான் கென்னடி
படக்குறிப்பு, எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேஷனின் பயிற்சியாளர் ஜான் கென்னடி

'பரிசோதனைகள் தேவையற்றது'

இந்திய அணியின் ஒயிட்வாஷ் குறித்து எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேஷனின் பயிற்சியாளர் ஜான் கென்னடி பிபிசி-யிடம் பேசினார். “எந்த பேட்டரை எந்த இடத்தில் களமிறக்குவது எனத் தெரியாமல் களமிறக்கினர். ஒன்டவுனில் ஆடக்கூடிய கோலியை 4-வது டவுனில் ஆடவைத்தனர். இதுபோன்ற பரிசோதனைகள் தேவையற்றவை,” என்றார்.

“இதுபோன்ற டர்னிங் டிராக் (பிட்ச்) பற்றி அஸ்வின், வாஷிங்டன் சுந்தருக்கு நன்கு தெரியும். இதில் அதிகமாகவும் ஆடிப் பயிற்சி எடுத்துள்ளனர். அதிலும் சென்னையில் இதுபோன்ற ஆடுகளம்தான் அதிகம் பயன்படுத்துவோம். அப்படியிருக்கும் போது சுந்தர், அஸ்வினை நடுவரிசையில் களமிறக்கி இருந்தால் சிறப்பாக பேட் செய்திருப்பார்கள். சுந்தர் டாப் ஆர்டரில் சிறப்பாக பேட் செய்யக்கூடியவர். அவரை 7-வது வரிசையில் களமிறக்கித் தவறு செய்துவிட்டனர்,” என்று கூறினார்.

'அஸ்வினின் தவறான ஷாட்'

தொடர்ந்து பேசிய ஜான் கென்னடி, “அது மட்டுமல்லாமல் இந்திய அணி வெற்றிக்கு 25 ரன்கள் இருக்கும்போது அஸ்வின் அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் மோசமான தேர்வு. இதுபோன்ற முக்கியமான கட்டத்தில் சுந்தர், அஸ்வின் இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றி பெற வைத்திருக்கலாம். ஆனால், அஸ்வின் அடித்த ஷாட் அந்த நேரத்தில் தேவையற்று, தவறானது,” என்றார்.

'டர்னிங் விக்கெட்டில் விளையாடவில்லை'

இந்திய பேட்டர்கள் உண்மையில் இதுபோன்ற டர்னிங் டிராக்களில் பேட் செய்து பழகாதவர்கள் என்று கூறிய ஜான் கென்னடி, “உண்மையில் இப்போதுதான் தரமான ஆடுகளத்தை அமைத்துள்ளனர். அதனால்தான் பந்து நன்றாக டர்ன் ஆகியவுடன் அதை எவ்வாறு அணுகுவது எனத் தெரியாமல் இந்த பேட்டர்கள் திணறி விக்கெட்டை இழந்தனர்,” என்றார்.

இதுபோன்ற டர்னிங் டிராக்குகளில் பேட்டர்கள் டிஃபென்ஸ் முறை ஆட்டத்தை முறையாக ஆட வேண்டும். ஆடிப் பயிற்சி எடுத்திருக்க வேண்டும் அல்லது ரிஷப் பந்த் ஆடியதைப் போல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்ய முடியாத வகையில் அதிரடியாக ஆடி அவர்களைக் குழப்பிவிட வேண்டும்,” என்றார்.

“அப்போது எப்படிப் பந்துவீசுவது எனத் தெரியாமல் பந்துவீச்சாளர்கள் குழப்படையும்போது பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால், இந்திய பேட்டர்கள் பந்து டர்ன் ஆகிவிடும் என பயந்து, அதீத கவனத்துடன் பந்தை எதிர்கொண்டு பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்ய வாய்ப்பளித்துவிட்டனர்,” என்றார்.

மேலும், “கிரிக்கெட்டில் பேட்டர்கள் பந்துவீச்சாளர்களின் கை அசைவு, அவர் ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், தூஸ்ரா, கூக்ளி வீசுகிறாரா என்பதைப் பார்த்து விளையாட வேண்டும். ஆனால், இப்போதுள்ள பேட்டர்கள் பந்தைப் பார்த்து ஆடுகிறார்கள்,” என்றார்.

“ரோகித், கோலி என அனைவருமே தரமான பேட்டர்கள்தான். ஆனால், இதுபோன்ற தரமான சுழற்பந்துவீச்சு ஆடுகளத்தில் ஆடியதில்லை என்பதுதான் கவனிக்க வேண்டியது. இதுபோன்ற விக்கெட்டை அமைக்கும்போது, இந்திய பேட்டர்களால் விளையாட முடியுமா, பந்துவீச முடியுமா என்பதை அறிந்து அமைத்திருக்கலாம்,” எனத் தெரிவித்தார் ஜான் கென்னடி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, vasee said:

அனைவரும் இந்தியா மோசமாக விளையாடிதுதான் இந்தியாவின் தோல்விக்குக்காரணம் எனும் நிலை காணப்படுகிறது, உண்மையில் நியுசிலாந்து திறமையாக விளையாடி எப்போதும் இந்தியாவினை அளுத்தத்தில் வைத்திருந்தது, அவர்களிடம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும் இல்லை, ஒரு சகல துறை ஆட்டக்காரர் பிரதான பந்துவீச்சாளராக செயற்படும் நிலை காணப்பட்டது.

போட்டியில் பந்துவீச்சில் இரண்டு பக்கமும் அளுத்தம் கொடுப்பதற்காக பட்டேலையும் பிலிப்ஸையும் நியுசிலாந்து தொடர்ந்து பயன்படுத்தவேண்டிய நிலை காணப்பட்டது.

தனது பலத்திற்கேற்ப மிக தெளிவாக் திட்டமிட்டு நியுசிலாந்து இந்தியாவினை வென்றுள்ளது, நியுசிலாந்திடம்  தோற்றதனால் இந்தியா மோசமான அணி அல்ல இதே இந்திய அணி அவுஸில் சிறப்பாக விளையாடும், நியுசிலாந்து ஒவ்வொரு மட்டையாளரது பலவீனத்தினையும் குறிவைத்து அவர்களை அவுட்டாக்கியது.

 

இப்போது க‌வுத‌ம் க‌ம்பீர‌ க‌ழுவி ஊத்தின‌ம் இந்திய‌ர்க‌ள்

 

இவ‌ர் த‌ல‌மையில் இந்தியா இல‌ங்கையிட‌ம் தோல்வி

அதே போல் நியுசிலாந்திட‌ம் ப‌டு தோல்வி என்று புல‌ம்புகின‌ம்😁....................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வீரப் பையன்26 said:

இப்போது க‌வுத‌ம் க‌ம்பீர‌ க‌ழுவி ஊத்தின‌ம் இந்திய‌ர்க‌ள்

 

இவ‌ர் த‌ல‌மையில் இந்தியா இல‌ங்கையிட‌ம் தோல்வி

அதே போல் நியுசிலாந்திட‌ம் ப‌டு தோல்வி என்று புல‌ம்புகின‌ம்😁....................

 

 

இந்த தோல்விக்கு ரி20 போல் விளையாடியதுதான்  காரணம் என குற்றம் சாட்டும் இவர்கள்தான் வங்க தேசத்துடனான போட்டியினை இந்தியா; கிரிக்கட் உலகிற்கு ஒரு புதிய அத்தியாயத்தினை தோற்றுவித்தாக தமதணியின் வெற்றியினை மிகைப்படுத்தி கொண்டாடினார்கள், தற்போது தோல்வி ஏற்பட்டவுடன் எதனை மெச்சி புகழ்ந்தார்களோ இப்போது அதனை குற்றம் கூறுகிறார்கள்.

அதே போல கம்பீர் மீதான குற்றச்சாட்டும்.

டெஸ்ட் போட்டியில் இப்படித்தான் விளையாடவேண்டும் என கூறுவதற்கு சில காரணம் இருக்கும் ஆனால் தனிப்பட்ட ரீதியில் ஒவொரு வீரருக்கும் இயல்பான ஆட்டம் இருக்கும் சிலருக்கு டெஸ்டில் விளையாடுவது போல லெக் ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்துகளைத்தான் சுவீப் விளையாட வேண்டும் என்றோ அல்லது சுழலுக்கு எதிராக விளையாட கூடாது எனும் வழமையான மாதிரியினைத்தான் பின் பற்ற வேண்டும் என்றில்லாமல் தமது இயல்பான ஆட்டத்தினை விளையாடினால் போதும்., முதல் இனிங்ஸில் 400 ஓட்டங்களை (குறைந்தது) எடுப்பதுதான் இலக்கு .

நியுசிலாந்து முதலாம் தர சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக (இந்தியா எதிர் கொண்டதனை போல இரண்டாம் மூன்றாம் தர சுழல் பந்து வீச்சாளர்கள் அல்ல) சுவீப், ரிவர்ஸ் சுவீப்களை விளையாடித்தான் வென்றுள்ளது.

அதனை எவ்வாறெடுத்தால் என்ன?

இதே போல் விளையாடி வென்றிருந்தால் இதனைப்பற்றி கதைக்கமாட்டார்கள்,தோற்றபின் இவ்வாறன  இவ்வாறான காரணங்கள் கூறுவதனை நொண்டிக்குதிரைக்கு சறுக்கியதுதான் சாட்டு என்பார்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற ஆப்பிளின் சாதனையை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்ப கணினி சிப் தயாரிப்பு நிறுவனம் என்விடியா. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.38 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை செவ்வாய்க்கிழமை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. என்விடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.43 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. 2022ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற புதிய வசதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் அங்கம் வகித்த என்விடியா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அன்று முதல் தற்போது வரை 850 விழுக்காடு உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குச்சந்தையில் என்விடியா நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 139 புள்ளி 93 டொலர்களாக இருந்தது. https://thinakkural.lk/article/311843
    • மன்னார் சதோச மனித புதைகுழி "ஸ்கேன்" செயல்பாடு ஆரம்பம்; காணொளி, புகைப்படங்கள் எடுக்க ஊடகங்களுக்கு தடை மன்னார் நகர மையப்பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதோச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை மற்றும் புதைகுழியை சூழ உள்ள பகுதியை ஸ்கேன் மற்றும் அகழ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மன்னார் சதோச வளாகத்திற்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வு பணிகள்  இன்று வியாழக்கிழமை (07) நடைபெற்று வருகின்றது. இருப்பினும் குறித்த அகழ்வு பணி தொடர்பான செயற்பாடுகளையோ, ஸ்கான் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்கவோ, காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே  சதோச மனித புதைகுழி அகழ்வு பணியை செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வு பணி தொடர்பான உண்மையான விடயங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப் படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் புதிய நீதிபதியினால் தற்போது அகழ்வு பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளை கணொளியோ புகைப்படமோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198110
    • எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பொலன்னறுவை, மொனராகலை மற்றும் களுத்துறை ஆகிய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் ஒரே நெடுவரிசையிலும், ஏனைய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் இரண்டு பத்திகளிலும் அச்சிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகிக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியலில் ஒவ்வொரு தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு அச்சிடப்படும். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கும் விருப்பங்களை குறிப்பதற்கும் புள்ளடியை (X) மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்களிக்கும் போது வாக்காளர்கள் பின்வரும் வாக்களிப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்;   https://thinakkural.lk/article/311839
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.