Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

இன்றைய நீயா நானா நிகழ்ச்சியை முடிந்தவர்கள் பாருங்கள்.

எப்படி எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.

சாதாரணமாக காற்சட்டை பாக்கெற்றில் வைத்திருக்கும் கடனட்டையை பாக்கெற்றுக்கு பக்கத்தில் வைத்தால் தொடரூந்திலோ பேரூந்திலோ போகும்போது சாடையாக அதில்பட்டால் நமக்கு புரியவா போகுது ஆனால் எமது கடனட்டை அவர்களின் சிறிய ஒரு தீப்பெட்டியளவு சாதனத்தில் பதிவாகிறது.

இதே மாதிரி இன்னும்இன்னும் வழிகளில் ஏமாறியவர்களின் கதைகளைக் கேட்க தலையே சுற்றுகிறது.

நம்மவர்கள் யாரும் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இப்படி ஏதாவது நடந்திருந்தால் அதன் அனுபவத்தை எழுதுங்கள்.

இதை இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட பன்றிகள் என்கிறார்கள்.புரியலையா நாங்க தான் அந்த பன்றிகள்.

Full Show;-

https://www.hotstar.com/in/shows/neeya-naana/1584/neeya-naana/1700049182/watch

https://www.tamildhool.net/vijay-tv/vijay-tv-show/neeya-naana/page/3/

மேலே உள்ள தளத்திலேயே நான் பார்ப்பேன்.

Edited by ஈழப்பிரியன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடப்பாவிங்களா எப்படியெல்லாம் ஏமாத்திருக்காங்க.. 😮 | Neeya Naana | Episode Preview

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போது வரும் அட்டைகளில் தொடுகை மூலம் பரிமாற்றம் செய்யும் RFID இருப்பதால் இது முடிகிறது. shimming என்பார்கள். இதைத் தடுக்க சில வழிகள் இருக்கின்றன. கடனட்டைகளை வேறு அட்டைகளோடு அடுக்கி அதை பேர்சினுள் வைத்திருக்க வேண்டுமாம். இப்படி வைத்திருந்தால் இலகுவாக தொடர்பை ஏற்படுத்த முடியாது என்கிறார்கள்.

எங்காவது புதிய இடத்திற்குப் போய் கடனட்டை பாவிக்கும் போது ஒரு குறிப்பிட்ட கடனட்டையை மட்டும் பயன்படுத்தினால் அதில் ஏதாவது சந்தேகம் தரும் செயல்கள் நடந்திருக்கின்றனவா என்று இலகுவாகக் கண்காணிக்க முடியும்.

அனேகமாக எல்லாக் கடனட்டைகளும் தற்போது zero liability கொண்டவையாக இருக்கின்றன. இதன் அர்த்தம் நீங்கள் செலவழிக்காத ஒரு தொகையை நீங்கள் கண்டு பிடித்து கம்பனியிடம் "இது என்னுடையது அல்ல" என்று முறையிட்டால், அந்தத் தொகையை உங்கள் கணக்கில் இருந்து அகற்றி விடுவர்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, Justin said:

அனேகமாக எல்லாக் கடனட்டைகளும் தற்போது zero liability கொண்டவையாக இருக்கின்றன. இதன் அர்த்தம் நீங்கள் செலவழிக்காத ஒரு தொகையை நீங்கள் கண்டு பிடித்து கம்பனியிடம் "இது என்னுடையது அல்ல" என்று முறையிட்டால், அந்தத் தொகையை உங்கள் கணக்கில் இருந்து அகற்றி விடுவர்.

அண்மையில் எனது கடனட்டையைப் பயன்படுத்தி நியூயோர்க்கில் இருந்து ராஸ் அங்கிலசில் உள்ள ஓடர் கொடுத்து எடுத்துள்ளனர்.

கடனட்டை வங்கிக்கு அறிவித்து 3 கிழமையில் கணக்கை சரி செய்துவிட்டு புதிய கடனட்டையும் அனுப்பியிருந்தனர்.

கடனட்டை உபயோகப்படுத்தும் போது எனது கைபேசிக்கும் குறும்செய்தி வரும்.அதனால் உடனடியாகவே உசாராகிவிடலாம்.

ஆனால் மேலே உள்ள நிகழ்ச்சி அடிமையாக வைத்து சொல்வழி கேட்காவிட்டால் கறன்ற் சொக்(இதனால் சிலபேர் இறந்தும் உள்ளார்களாம்)கொடுக்கிறார்கள்.அதிலே ஒருவர் 2 மாதமாக வெறும் சோறு மாத்திரம் சாப்பிட்டதாக சொல்கிறார்.

எமக்கு எந்த நாளும் Scam call  என்று வரும்.

முதல்தடவையாக Scam company  யைப் பற்றி கேள்விப்படுகிறேன்.மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

54 minutes ago, Justin said:

இப்போது வரும் அட்டைகளில் தொடுகை மூலம் பரிமாற்றம் செய்யும் RFID இருப்பதால் இது முடிகிறது. shimming என்பார்கள். இதைத் தடுக்க சில வழிகள் இருக்கின்றன. கடனட்டைகளை வேறு அட்டைகளோடு அடுக்கி அதை பேர்சினுள் வைத்திருக்க வேண்டுமாம். இப்படி வைத்திருந்தால் இலகுவாக தொடர்பை ஏற்படுத்த முடியாது என்கிறார்கள்.

இப்போது Apple pay  மூலம் பணத்தை செலுத்துகிறேன்.ஆனால் எல்லா இடமும் இந்த வசதி இல்லை.

இப்போதைக்கு இது பாதுகாப்ப என்கிறார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்வளவுக்கும் காரணம் சைனா தான் Flipper Zero போன்ற மின்னியல் பொருள்கள் சாதரணமாக அமேசனில் ஓடர் பண்ணினால் அடுத்த நாளே வந்து விழும் அதன் பார்ம் வெயர் சில தளம்களில் கள்ள வேலைக்கு என்றே உருவாக்கி வைத்து உள்ளார்கள் டார்க் வெப் ல் கனக்க வேண்டாம் 5௦ பவுண்டு தான் அதன் மூலம் கிரடிட் கார்ட் என்ன வட அமரிக்காவில் சில பெற்றோல் நிலையங்களில் விலையை குறைத்து கூட கொள்ளை நடக்குது . இங்கு uk ல் கூட சில சிக்னல்கள் பச்சை ஆக்கி விடுகிறார்கள் இவ்வளவு பிரச்சனைகுரிய பொருளை அமேசன் போன்ற தளம்கள் விற்பதை முதலில் நிறுத்தனும் .கார் களவுக்கு முக்கிய காரணமே இந்த Flipper Zero தான் சில கார்களில் பிரிகுவன்சி மாறி கொண்டு இருக்கும் அதையும் இந்த Flipper  கொப்பி பண்ணுது என்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போதைக்கு இப்படியான திருட்டு வேலைகளில் தப்புவது என்றால் Defender Signal Blocker கிரெடிட் கார்ட் பேஸ் கார் துறப்பு போன்ற வற்றுக்கு அதே அமேசனிலே விற்கிறார்கள் வாங்கி வைக்கவேண்டி உள்ள கட்டாயம் அதே அமேசனே செய்கிறது எல்லாம் வியபார உலகு .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, பெருமாள் said:

உலகில் யுத்தம் நடந்தால்த் தான் சில நாடுகளின் பொருளாதாரம் உயரும்.

அதே மாதிரி களவுகள் கொள்ளைகள் நடந்தால்த் தான் சில வியாபார நிலையங்களுக்கு நல்லது.

6 minutes ago, பெருமாள் said:

இப்போதைக்கு இப்படியான திருட்டு வேலைகளில் தப்புவது என்றால் Defender Signal Blocker கிரெடிட் கார்ட் பேஸ் கார் துறப்பு போன்ற வற்றுக்கு அதே அமேசனிலே விற்கிறார்கள் வாங்கி வைக்கவேண்டி உள்ள கட்டாயம் அதே அமேசனே செய்கிறது எல்லாம் வியபார உலகு .

தகவலுக்கு நன்றி பெருமாள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதற்கு சிறந்த வழி prepaid கடனட்டைகள். தேவையென்றால் பணத்தை போட்டுவிட்டு உபயோகித்துக்கொள்ளலாம். 

கைத்தொலைபேசியில் இருந்து கடனட்டைக்கு பணப்பரிமாற்றம் சில வினாடிகளில் நடக்கிறது. கைத்தொலைபேசியில் இருந்து கைரேகை மூலம் தான் உள்ளே செல்ல முடியும். அப்படியே சென்றாலும் பணம் வெளியில் போகும் போது ஒரு தகவல் வரும்படி setting செய்துள்ளேன். 

இதையெல்லாம் தாண்டி உள்ளே போனாலும் எடுப்பதற்கு பெரிய தொகை பணம் இருக்காது. சமபலம் வந்தவுடனே எல்லாம் பிரித்து பிரித்து ஒவ்வொரு திசைக்கும் அனுப்பிவிடுவேன். அந்த மாத செலவிற்கு ஒரு தொகை மட்டும் இருக்கும். 

ஒரு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் தான் நடமாடுகின்றேன். 🤣

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.