Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை: அறுகம்பையில் இஸ்ரேல் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் - புலனாய்வு தகவல் கூறுவது என்ன?

இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை
  • 24 அக்டோபர் 2024, 07:58 GMT
    புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையிலுள்ள இஸ்ரேல் நாட்டவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இரண்டு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அறுகம்பை பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

 

அமெரிக்க தூதரகம் விடுத்த அவசர எச்சரிக்கை

அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பை பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் நேற்று காலை அவசர எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது.

அறுகம்பை பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமது ஊழியர்கள் மற்றும் இலங்கையில் வாழும் அமெரிக்க பிரஜைகளை அறுகம்பை பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அந்த அறிக்கையில் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டிருந்தது.

மீள் அறிவிப்பு விடுக்கப்படும் வரை அறுகம்பை பகுதிக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டம்

பட மூலாதாரம்,X

'அறுகம்பை பகுதியில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் விடுத்த அறிவிப்பு'

அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பை பகுதி மற்றும் இலங்கை தென் மற்றும் மேற்கு கரையோர பகுதிகளில் உள்ள தமது பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள இஸ்ரேல் பிரஜைகளுக்கு இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு தலைமையகம் நேற்றைய தினம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

சுற்றுலா தளங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு கிடைக்கப் பெற்ற தகவல்களைக் கருத்தில் கொண்டே இஸ்ரேஸ் தேசிய பாதுகாப்பு தலைமையகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளையில், இலங்கைக்கு விஜயம் செய்யும்போது அவதானத்துடன் செயற்படுமாறு பிரிட்டன், தமது நாட்டு பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மேலும், தமது நாட்டு பிரஜைகளை அவதானத்துடன் இருக்குமாறு இலங்கைக்கான ரஷ்ய தூதரகம், ஆஸ்திரேலிய தூதரகம் ஆகியன அறிவித்துள்ளன.

 

இலங்கை போலீசாருக்கு முன்னதாகவே கிடைத்த புலனாய்வு தகவல்

இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெளிநாட்டு பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அக்டோபர் மாதம் 7ஆம் தேதி புலனாய்வுத் தகவல் கிடைத்ததாக பதில் போலீஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

''கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே பாதுகாப்பு சபையில் நாம் மிகவும் ஆழமாகக் கலந்துரையாடியிருந்தோம். அதற்கான ஆலோசனைகள் எமக்குக் கிடைத்தன. அந்த ஆலோசனைகளின் பிரகாரம், வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு, குறித்த பகுதிகளில் பாதுகாப்பு, மதத் தலங்களின் பாதுகாப்பு விசேட பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பலப்படுத்தப்பட்டது.

போசார், விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஊடாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. புலனாய்வு அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்றைய தினம் முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

மேலும், புலனாய்வுத் தகவல் சரியாகக் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்பு சபைக் கூட்டம் இணைய வழியாக நடத்தப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

"முப்படைத் தளபதிகள், புலனாய்வுப் பிரதானிகள், பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதி செயலாளர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோர் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

வெளிநாட்டுப் பிஜைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அனைத்து தூதரகங்களையும் நாம் தெளிவூட்டியுள்ளோம்" என பதில் போலீஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவிக்கிறார்.

 

இலங்கையிலுள்ள இஸ்ரேல் பிரஜைகள்

இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பிரஜைகளில் இஸ்ரேல் நாட்டு பிரஜைகளும் குறிப்பிடத்தக்க அளவு காணப்படுகின்றனர்.

இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை 14,87,808 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த நிலையில், அவர்களில் 21,610 பேர் இஸ்ரேல் பிரஜைகள் என சுற்றுலாத்துறை அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இறுதி இரண்டு மாதங்களில் இஸ்ரேல் பிரஜைகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. அறுகம்பை பகுதியில் இஸ்ரேல் நாட்டு பிரஜைகள் தங்கியுள்ள கட்டடம் ஒன்று உள்ளதாகவும், அந்த கட்டடத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கிறார்.

இந்த நிலையில், குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

''அறுகம்பை பகுதியில் இஸ்ரேல் நாட்டு பிரஜைகளால் கட்டடமொன்று கட்டப்பட்டுள்ளது. ஒரு மண்டபத்தைப் போன்றதொரு கட்டடம். அறுகம்பை மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகள் இஸ்ரேல் நாட்டு பிரஜைகளின் கவனத்தை ஈர்த்த பகுதிகளாகும். கடல் சார் விளையாட்டுகளில் அவர்கள் அதிக விருப்பம் கொண்டுள்ளனர்" என அவர் கூறுகின்றார்.

''இஸ்ரேல் நாட்டு பிரஜைகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல் கிடைத்திருந்தது. கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பாக பிரதி போலீஸ் மாஅதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம், வீதி சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, நபர்கள், வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன" எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

 

தாக்குதல் தொடர்பில் இந்தியா தகவல் வழங்கியதா?

இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டம்

பட மூலாதாரம்,POLICE MEDIA

படக்குறிப்பு, போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ

அறுகம்பை பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டு பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இந்திய புலனாய்வுத் துறை இலங்கைக்கு தகவல் வழங்கியுள்ளதாக இலங்கையின் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தகவலானது, அக்டோபர் 19ஆம் தேதிக்கும், 23ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படக்கூடும் என இந்திய புலனாய்வுப் பிரிவு தகவல் வழங்கியுதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை இரண்டு பேர் நடத்தவுள்ளதுடன், அதில் ஒருவர் இராக்கில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் அந்தப் புலனாய்வுத் தகவலை மேற்கோள்காட்டி உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த விடயம் தொடர்பில் போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவவிடம் வினவினோம்.

''அது தொடர்பிலான தகவல் என்னிடம் இல்லை. இந்தப் புலனாய்வுத் தகவல் வெளிநாடு ஒன்றிலிருந்து கிடைத்ததா அல்லது எமது புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்ததா என்பதைக் கூற முடியாது. எனினும், பதில் போலீஸ் மாஅதிபருக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, கிழக்கு மாகாண பிரதி போலீஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

 
இலங்கை: அறுகம்பையில் தாக்குதல் நடத்த திட்டமா? இஸ்ரேல், அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தப் பகுதியிலுள்ள ஹோட்டல்களில் இஸ்ரேல் பிரஜைகள் வேலை செய்து வருவதாக பொத்துவில் பிரதேச செயலக பிரிவின் நிர்வாக அதிகாரி எம்.எம்.எம்.சுபைர், பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த ஹோட்டல்களில் இந்த பிரஜைகளுக்கு இலவச உணவு வழங்கப்படுவதுடன், அவர்களின் ஊடாக சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல்களுக்கு வரவழைக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

அத்துடன், இஸ்ரேல் நாட்டு பிரஜைகளால் இந்தப் பகுதியிலுள்ள சில கட்டடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், குறித்த பகுதியில் மத ஸ்தலம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்தத் தகவலை பிபிசி சிங்கள சேவையால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

நாட்டின் பல பகுதிகளில் கடும் பாதுகாப்பு

அறுகம்பை பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படக்கூடும் என விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அறுகம்பை, பொத்துவில், காலி, மாத்தறை, எல்ல உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணிக்கும் இடங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட தேவாலயங்களில் பெரிய குழுக்களில் மக்கள் திரண்டிருந்த நிலையில் கொழும்பு நகரைச் சுற்றிப் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. மூன்று தேவாலயங்கள், மூன்று சொகுசு விடுதிகள் உள்படப் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரும் இலங்கையர்கள் - விஜித ஹேரத்

image
 

அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளை இலக்குவைப்பதற்கு திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்ட்டுள்ள மூவரும் இலங்கையர்களே என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளின் புலனாய்வு தகவல்களை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட மூவரும் இலங்கையர்கள் விசாரணைகள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளன, சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/197002

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/10/2024 at 23:56, குமாரசாமி said:

 

 

12 hours ago, கிருபன் said:

பாகிஸ்தான் மற்றும் ஈரான் கைதிகளுடன் தொடர்புகளை பெற்று ,  நாசகார செயலில் ஈடுபட முனைந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழன் என்றால் தூள் வியாபார்த்தில் ஈடுபட முயற்சி செய்திருப்பான்...
முஸ்லீம் என்றால் குண்டு வைக்க முயற்சி செய்திருப்பான்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அறுகம்குடா குறித்த வெளிநாட்டு தூதரகங்களின் எச்சரிக்கை – சுற்றுலாத்துறை கூட்டமைப்பு கரிசனை கடும் கண்டனம்

October 25, 2024
yyyy-2.jpg

இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாக வெளிநாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளமைக்கு இலங்கையின் சுற்றுலாத்துறை கூட்டமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையால் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பாரிய பின்னடைவு ஏற்படலாம் என ஸ்ரீலங்கா சுற்றுலத்துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் அதன் பின்னர் வேறு சில நாடுகளும் விடுத்த பயண எச்சரிக்கை சுற்றுலாத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அந்த அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு தூதரகங்கள் இலங்கை குறித்தும்  அதன் பொருளாதார மீட்சிக்கு அவசியமான சுற்றுலாத்துறை குறித்தும்  ஈவிரக்கமற்ற வேடிக்கையில் ஈடுபட்டுள்ளனவா என  என ஸ்ரீலங்கா சுற்றுலத்துறை கூட்டமைப்பின் தலைவர் மலிக் ஜே பெர்ணாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் இருவரை கைதுசெய்துள்ளனர் என்பதை சுற்றுலாத்துறை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய தகவல்களை உள்வாங்கி திருத்தம் செய்யப்படாத வெளிநாட்டு தூதரகங்களின் அறிக்கை இலங்கை குறித்தும் அதன் சுற்றுலாத்துறை மீது அவற்றிற்கு அக்கறை இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுற்றுலத்துறை கூட்டமைப்பு சமீபத்தைய பொருளாதார நெருக்கடியின் பாதிப்பில் இன்னமும் சிக்குண்டுள்ள மில்லியன் கணக்கான கிராமிய மக்களை கைதூக்கிவிடுவதில் சுற்றுலாத்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றது என தெரிவித்துள்ளது.

அறுகம் குடா குறித்த அமெரிக்காவின் எச்சரிக்கையை இஸ்ரேலிய ஊடகங்கள் பெரிதுபடுத்தின  முழு இலங்கையும் இஸ்ரேலியர்களிற்கு பாதுகாப்பற்றது போன்ற உணர்வை ஏற்படுத்தின என சுற்றுலாத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

 

https://eelanadu.lk/அறுகம்குடா-குறித்த-வெளிந/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அறுகம் குடா தாக்குதல் திட்டத்திற்கு வெளிநாட்டு ஆதரவு? – நிதி பயிற்சி வழங்கப்பட்டதா என விசாரணை

image

வெளிநாடொன்றின் ஆதரவுடனேயே  அறுகம் குடாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டதாக தெரிவித்துள்ள  சண்டே டைம்ஸ் ஒக்டோபர் 19 முதல் 24ம் திகதிக்குள் இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அறுகம் குடாவில் உள்ள அவர்களது வழிபாட்டுதலத்தில் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டிருக்க கூடிய  பெரும் ஆபத்தை பொலிஸார் தடுத்துநிறுத்தியுள்ளனர்.

ஓக்டோபர் 19 முதல் 24 ம் திகதி  இந்த தாக்குதலிற்கு திட்டமிட்டிருந்தனர், இந்த வாரத்தில் இஸ்ரேலியர்கள் பெருமளவில் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறவிருந்தது என புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடொன்று இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு எவ்வளவு தூரம் ஆதரவு வழங்கியது? எவ்வளவு நிதி வழங்கப்பட்டது? என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொள்வதற்கு  பயிற்சிகள் வழங்கப்பட்டனவா? என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

https://www.virakesari.lk/article/197208

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒக்டோபர் 19 - 24க்கு இடையில் அறுகம் குடாவில் தாக்குதல் நடத்த திட்டம் - மாலைதீவு பிரஜையும் கைது - இருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம் - விசாரணைகள் தீவிரம்

image
 

ஒக்டோபர் 19ம் திகதிக்கும் 24ம் திகதிக்கும் இடையில் அறுகம்குடாவில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ள சண்டே டைம்ஸ் சந்தேகநபர்களில் இருவர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளது.

சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அறுகம் குடாவில் உள்ள அவர்களது வழிபாட்டுதலத்தில் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டிருக்க கூடிய  பெரும் ஆபத்தை பொலிஸார் தடுத்துநிறுத்தியுள்ளனர்.

ஓக்டோபர் 19 முதல் 24 ம் திகதி  இந்த தாக்குதலிற்கு திட்டமிட்டிருந்தனர். இந்த வாரத்தில் இஸ்ரேலியர்கள் பெருமளவில் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறவிருந்தது என புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடொன்று இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு எவ்வளவு தூரம் ஆதரவு வழங்கியது எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொள்வதற்கு  பயிற்சிகள் வழங்கப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

arrugam_bay.jpg

காசாவிலும் லெபனானிலும் இஸ்ரேலின் தாக்குதலிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதே அறுகம் குடா தாக்குதல் நோக்கம். காசாவிலும் லெபனானிலும் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்ய்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னரே இந்த யுத்தம் ஆரம்பமானது. இந்த தாக்குதலில் 1200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் அனேகமானவர்கள் பொதுமக்கள் 250க்கும் அதிகமானவர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

அறுகம்; குடாவிற்கு அருகில் உள்ள முஸ்லீம் கிராமங்களிற்கு ஏற்பட்டிருக்ககூடிய பாதிப்பே இந்த தாக்குதலின் மிக ஆபத்தான விளைவாகயிருந்திருக்க கூடும்.

அறுகம்குடாவிற்கு அருகில் உள்ள நகரம் பொத்துவில் இங்கு பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள். மிகவும் பிரபலமான கரையோர  சுற்றுலாத்தளத்திலிருந்து இந்த நகரம் 3.8 மைல்  தொலைவில் உள்ளது.

இந்த தாக்குதலை முஸ்லீம்களே மேற்கொண்டனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் உண்மையான குற்றவாளிகள் அல்லது சூத்திரதாரிகள் குறித்து கவனம் திரும்பியிருக்காது. ஆகக்குறைந்தது சிறிது நேரத்திற்காவது.

இஸ்ரேலியர்கள் அதிகளவில் செல்லும் தென்பகுதியின் கரையோர நகரங்களான அஹங்கம அகுங்க போன்றவற்றிலும் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

யூதர்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதிதிட்டங்களை ஒக்டோபர் முதல் வாரத்தில் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்தனர்.

எனினும் அவ்வேளை அவர்களிற்கு கிடைத்த தகவல்கள் போதுமானவையாக காணப்படவில்லை தெளிவற்றவையாக காணப்பட்டன.

இதன் காரணமாக சந்தேகநபர்கள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கொழும்பின் புறநகர் பகுதியிலிருந்து ஒருவரும் வடக்கிலிருந்து ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர் மூன்றாவது நபர் மாலைதீவை சேர்ந்தவர். இவர் மாலைதீவு தந்தைக்கும் இலங்கை தாய்க்கும் பிறந்தவர்.

இவர்கள் அனைவரும் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

சிங்களம் பேசக்கூடிய மாலைதீவை சேர்ந்த நபரிடமிருந்து இரண்டு கையடக்கதொலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர். இதில் பலரின் விபரங்கள் காணப்படுகின்றன. வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுள்ள இருவரை  பொலிஸார் தேடிவருகின்றனர். அவர்கள் பல தடவை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இலங்கை சிறைச்சாலையொன்றில் பல குற்றங்களிற்காக தண்டனை அனுபவித்து வந்தவர்கள்.

பாதுகாப்பு செயலாளர் எயர் மார்ஷல் சம்பத்து யாகொன்த இந்த வாரம் மாலைதீவு  தூதுவருடன் மாலைதீவை சேர்ந்த சந்தேகநபர் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இதேவேளை தெகிவளையில் உள்ள இஸ்ரேலின் துணைத்தூதுவரின் இல்லத்திற்கு அருகே நடமாடிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/197215

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யூத பிரார்த்தனை மையங்களுக்கு வெளியே குவிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு படையினர்

aruka-1.jpg

அருகம் குடாவில் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள யூத பிரார்த்தனை மையங்களுக்கு வெளியே விஷேட அதிரடிப்படையினர் ,விமானப்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/311220

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"நாங்கள் அறுகம் குடா ஆபத்து குறித்து தகவல்களை வழங்கினோம் இலங்கை அரசாங்கம் துரிதமாக செயற்பட்டது - அமெரிக்கா பயண தடைவிதிக்கவில்லை" - ஜூலி சங்

image

இலங்கையர்களினதும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்பவர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயற்படுகின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களிற்கு தீர்வை காண்பதில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து நான் பெருமிதம் கொள்கின்றேன். அமெரிக்கா இலங்கை குறித்து போக்குவரத்து தடை எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து அமெரிக்கர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய தனது கடமையை வலியுறுத்தியுள்ள அவர் நம்பகதன்மை மிக்க பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தூதரக பணியாளர்கள், அமெரிக்க பிரஜைகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவும் நாடு ஆகிய தரப்புடன் தகவல்களை பகிர்ந்துகொள்ளவேண்டும் எச்சரிக்கும் கடமை கொள்கை குறித்த ஆணைபற்றியும் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் எங்கள் தூதரகங்கள் எச்சரிப்பதற்கான கடமை என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்படுகின்றன, அதாவது நம்பகதன்மை குறித்த எச்சரிக்கை கிடைத்தால் நாங்கள் எங்கள் பிரஜைகள் மற்றும் அந்த நாட்டின் அதிகாரிகளுடன் அந்த தகவலை பகிர்ந்துகொள்ளவேண்டும். இது அமெரிக்கா பின்பற்றும் உலகளாவிய நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.

அறுகம் குடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்பட்டதும் நாங்கள் அது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்தோம், இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்தது என ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நாளாந்த அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுகின்றோம், இலங்கையின் அரசாங்கம் மற்றும்  பாதுகாப்பு அதிகாரிகளுடனான கூட்டாண்மை குறித்து நாங்கள் பெருமிதம் அடைகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் வெளிப்படைதன்மை குறித்த இலங்கை அரசாங்கத்தினதும் பாதுகாப்பு அதிகாரினதும்  அர்ப்பணிப்பு குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுஅறிவித்தல் வரும் வரை அறுகம்குடாவிற்கு செல்லவேண்டாம் என அமெரிக்கர்களிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மையின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/197315

  • கருத்துக்கள உறவுகள்
Posted

New-Project-17.jpg?resize=750,375&ssl=1

அறுகம்பை பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் 6 பேர் கைது!

தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு பிரஜை ஒருவரும் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அறுகம்பை வளைகுடா பகுதியில் தாக்குதல் நடத்தலாம் என கிடைத்த புலனாய்வு தகவல் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய நிதித் தளங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனத் தகவல் கிடைத்தவுடன் அவர்களின் பாதுகாப்பையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த சந்தேக நபர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டில் நாங்கள் மாலைத்தீவு பிரஜை மற்றும் ஐந்து இலங்கையர்களை கைது செய்யது, விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தாக்குதல் திட்டம் தொடர்பான இறுதி முடிவுக்கு வர முடியாது.

எனவே, இவர்களின் கைது தொடர்பான தேவையற்ற விளக்கங்கள் மற்றும் போலியான செய்திகளை வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1406900

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அறுகம் குடா சர்ச்சையின் பின்னணியில் இருக்கும் ஆப்கானிய முகவர்

அறுகம் குடா மீது தாக்குதல் பின்னணயில் செயற்பட்ட ஆப்கானிஸ்தான் முகவர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் தெரியவந்துள்ளன.

அறுகம் குடா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த நபர் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறிது.

இந்த ஆப்கானிய முகவர் போதைப்பொருள் வியாபாரி என கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

பண பரிவர்த்தனைகள்

அறுகம்பே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மொஹமட் பிலான் இவருடன் பாரிய பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார்.

அறுகம் குடா சர்ச்சையின் பின்னணியில் இருக்கும் ஆப்கானிய முகவர் | Arugam Bay Attack Threat Investigation Updates

இதன்படி, குறித்த பண பரிவர்த்தனையுடன் தொடர்புடைய போதைப்பொருட்கள் அனைத்தும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

இதேவேளை, அறுகம்பே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழுவினர் அறுகம் குடா பிரதேசத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அவற்றை விற்பனை செய்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது.

அறுகம் குடா சர்ச்சையின் பின்னணியில் இருக்கும் ஆப்கானிய முகவர் | Arugam Bay Attack Threat Investigation Updates

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://ibctamil.com/article/arugam-bay-attack-threat-investigation-updates-1730631441

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

இதேவேளை, அறுகம்பே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழுவினர் அறுகம் குடா பிரதேசத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அவற்றை விற்பனை செய்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது.

 

தோழர் அனுராவின் "சிஸ்டம் செஞ்சில்" இதெல்லாம் இல்லாமல் போய் பாலும் தேனும் சுற்றுலா பிரயாணிகளுக்கு இலவசமால வழங்கப்படும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அறுகம்குடாவில் யூதர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொள்ளும் திட்டம் - அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அமெரிக்க நீதித் திணைக்களம்

image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டங்களை தீட்டிய நபரிடம் ஒக்டோபர் மாதம் இலங்கை அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொள்ளும் திட்டத்தினை முன்னெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது என அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈரான் இராணுவத்தின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படையே இந்த திட்டத்தை ஒப்படைத்திருந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Gb7YTGmWoAAugfE.jpg

அமெரிக்க நீதித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஒக்டோபர் 23ம் திகதி அமெரிக்க, இஸ்ரேலிய அரசாங்கங்கள் அறுகம்குடாவில் சுற்றுலாப்பயணிகளிற்கு ஆபத்துள்ளதாக எச்சரித்திருந்தது.

அதன் பின்னர் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் மூன்று நபர்களை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர்  சிசி- 2

அமெரிக்க இஸ்ரேலிய அதிகாரிகள் பொதுவான பயண எச்சரிக்கையை வெளியிட்ட பின்னர் சிசி 2 இலங்கை அரசாங்கத்தினால் கைதுசெய்யப்பட்ட பின்னர் ஒக்டோபர் 28 ம் திகதி சகேரி தான் சிசி-2விடம் இலங்கைக்கான இஸ்ரேலிய துணை தூதரகத்தை கண்காணிக்குமாறு உத்தரவிட்டதாக எவ்பிஐயிடம் தெரிவித்திருந்தார்.

அவ்வேளை தானும் சிசி-2 என்பவரும் சிறைத்தண்டனையை அனுபவித்துவந்ததாக அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் துணைதூதரகத்தை கண்காணித்து வேவுபார்த்து பெறப்பட்ட தகவல்களை ஈரானின் புரட்சிகரக் காவல்படையிடம் ஒப்படைத்ததாக சகேரி எவ்பிஐயிடம் தெரிவித்தார்.

இதன் பின்னர் ஈரானிய அதிகாரிகள் மற்றுமொரு இலக்கை அடையாளம் காணுமாறு சகேரியை கேட்டுக்கொண்டுள்ளனர், இதன் பின்னர் சகேரி சிசி-2 விடம்  இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அதிகமாக செல்லும் அறுகம்குடாவினை  வேவு பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

download.jpg

பின்னர் அறுகம்குடாவில் பாரிய துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொள்வதற்கு திட்டமிடுமாறு ஈரான் அதிகாரிகள் சகேரிக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சிசி-2 இந்த தாக்குதலிற்காக ஏகே47 துப்பாக்கிகளையும் ஏனைய ஆயுதங்களையும் வழங்குவார் என திட்டமிடப்பட்டதாக  சகேரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198259



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.