Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

lo.jpg

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது பிரத்தியேக செயலாளரே குறித்த வாகனத்தை வீட்டின் வாகன தரிப்பு கராஜூக்கு கொண்டு வந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸில் சாட்சியமளித்துள்ளனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்கு சொந்தமான மிரிஹான – எம்புல்தெணிய மண்டப வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்ததுடன், குறித்த வீட்டிற்குச் சென்று வாகனத்தை சோதனையிட்டனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மனைவியிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

மேற்படி வீட்டில் முன்னாள் அமைச்சரின் மனைவியின் தாயார் வசிப்பதாகவும், சில தினங்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர், குறித்த காரை 3 வாரங்களுக்கு முன்பு கராஜுக்கு கொண்டு வந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு இலக்கத் தகடுகள் மற்றும் சாவிகள் இல்லாத சொகுசு கார் மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று அரச பரிசோதகர் வாகனத்தை சோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் அதன் பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

https://thinakkural.lk/article/311189

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லொகான் ரத்வத்தையின் மனைவியின் வீட்டில் இலக்கத்தகடு அற்ற வாகனம் மீட்பு - எனக்கு எதுவும் தெரியாது என்கின்றார் முன்னாள் இராஜாங்க அமைச்சர்

image

மிரிஹானவில் இலக்கத்தகடு அற்ற நிலையில் மீட்கப்பட்ட கார் தனது மனைவிக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுவதை முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை நிராகரித்துள்ளார்.

சமீபத்தில் கண்டியில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை இலங்கைக்கு கொண்டுவந்தார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட நபர்  எனக்கு தெரியாமல் அந்த வாகனத்தை இலங்கைக்கு கொண்டுவந்தார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். எனக்கு வாகனத்தின் உரிமையாளரை தெரியாது எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

லொகான் ரத்வத்தையின் மனைவியின் இல்லத்தில் சனிக்கிழமை பதிவு செய்யப்படடாத வாகனமொன்றை பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வாகனம் குறித்து விசாரணை செய்தவேளையே அது லொகான் ரத்வத்தையின் மனைவியின் வீடு என்பது பொலிஸாருக்கு தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/197310

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது

image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதன்போது, லொஹான் ரத்வத்தவும் அவரது மனைவியும் இது தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், 

“கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் இந்த காரை வீட்டின் கராஜில் நிறுத்தி வைத்தார்” என தெரிவித்துள்ளனர்.

பின்னர், இந்த காரானது மேலதிக விசாரணைகளுக்காக மிரிஹான பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/197578

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு விளக்கமறியல்!

image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (31) உத்தரவிட்டுள்ளது.

லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26 ஆம் திகதி மிரிஹான  பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் கைது செய்யப்பட்ட லொஹான் ரத்வத்த நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/197617

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

லொஹான் ரத்வத்தவுக்குச் சொந்தமான மற்றுமொரு வாகனம் மீட்பு

image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மற்றுமொரு ஜீப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றின்  கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது இந்த ஜீப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜீப் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத் தகட்டில் உள்ள இலக்கங்கள் அதே பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு நபரின் வாகனத்தில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/197626

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

image

பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26 ஆம் திகதி மிரிஹான  பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட லொஹான் ரத்வத்த நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடல் நிலைமையை கருத்தில் கொண்டு அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நுகேகொடை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/197698

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்தவுக்கு விசேட பாதுகாப்பு!

image

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகச் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  

பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்று (02) அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் கீழ் லொஹான் ரத்வத்தவுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகச் சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/197727  

  • கருத்துக்கள உறவுகள்
On 1/11/2024 at 11:32, ஏராளன் said:

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு விளக்கமறியல்!

image

 

இந்த எருமை தானே... அமைச்சு  பதவியில் இருக்கும் போது,
முழு  வெறியில்  அனுராதபுரம் சிறைச்சாலைக்கு துப்பாக்கியுடன் சென்று,
தமிழ் கைதிகளை முழங்காலில் இருக்கச் செய்து, தனது துப்பாக்கியை காட்டி சுட்டுக் கொன்று  விடுவேன் என்று மிரட்டல் விடுத்தது.

மேல் நாட்டில்... அப்படி வாயாலோ, செய்கையாலோ கொலைக்கான எச்சரிக்கை விடுத்தால்... 
கொலை செய்ய எத்தனித்த வழக்காக பதிவு செய்யப் படும்.

காலம் எவ்வளவு விசித்திரமானது.
நீ செய்ததை, உனக்கே திருப்பி அடிக்கும். 
வினை விதைத்தவன்... வினையைத்தான்  அறுவடை செய்வான். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவர்தான் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை பிஸ்டலை காட்டி சுடுவன் எண்டவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ரத்வத்தையின் மகன் மகிந்தா குடும்பத்தின் வால் அவர்களின் படைத்தளபதிகளில் ஒருவர், அமைச்சரா இருந்தவர்   தமிழர்கள் என்றாலே வெறுப்புடன் அலைபவர் குமார் பொன்னம்பலம் போன்ற தலைவர்களின் கொலைகளிலும் ஆளுக்கு பங்குண்டு என்று பேசப்பட்டது காலம் எப்பவும் ஒரு பக்கம் போகாது தானே … இப்ப ஆளை தூக்கி ஜெயில்ல போட்டாச்சு மோசடி குற்றச்சாட்டுகளுக்காக.

Prashanthan Navaratnam

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இவர்தான் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை பிஸ்டலை காட்டி சுடுவன் எண்டவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ரத்வத்தையின் மகன் மகிந்தா குடும்பத்தின் வால் அவர்களின் படைத்தளபதிகளில் ஒருவர், அமைச்சரா இருந்தவர்   தமிழர்கள் என்றாலே வெறுப்புடன் அலைபவர் குமார் பொன்னம்பலம் போன்ற தலைவர்களின் கொலைகளிலும் ஆளுக்கு பங்குண்டு என்று பேசப்பட்டது காலம் எப்பவும் ஒரு பக்கம் போகாது தானே … இப்ப ஆளை தூக்கி ஜெயில்ல போட்டாச்சு மோசடி குற்றச்சாட்டுகளுக்காக.

Prashanthan Navaratnam

 

சிறி நானும் இதை எழுத வேண்டும் என எண்ணினேன்.பதிவுக்கு நன்றி.

நடுச்சாமத்தில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குள் என்ன வேலை?

தமிழ் கைதிகளை சுடுவேன் என்றதுமல்லாமல் தனது சப்பாத்தைநக்கச் சொன்னதாகவும் சொன்னார்கள்.

முதுகெலும்பில்லாத எமது அரசியல்வாதிகளும் சாட்டுக்கு ஒருநாள் குரலெழுப்பினார்கள் அதோடு சரி.

தூரகங்களும் சரி மனிதஉரிமை அமைப்புகளும் சரி பெரிதுபடுத்தவே இல்லை.

காயாலாகாத நாங்கள் என்ன தான் செய்யலாம்?

இப்போ எங்கோ ஓர் மூலையில் சந்தோசமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

லொஹான் ரத்வத்த தொடர்பில் விசேட அறிவிப்பு!

லொஹான் ரத்வத்த தொடர்பில் விசேட அறிவிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் அவர்,

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு விசேட பாதுகாப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் அமைச்சராக அவர் முன்னர் பதவி வகித்ததன் காரணமாக, நீதிவான் அவரது விசேட பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை இந்த உத்தரவில் உள்ளடக்கியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கட்டுகஸ்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அன்றிரவு, நுகேகொடை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த, மருத்துவப் பிரச்சினைகள் காரணமாக சிகிச்சை பெற வேண்டியதன் அவசியத்தை சிறைச்சாலை வைத்தியசாலையின் சுகாதார அறிக்கை சுட்டிக்காட்டியதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.

https://athavannews.com/2024/1406911

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் லொஹான் ரத்வத்த

image

பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவிக்கையில், 

லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவுக்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/197781

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

 

சிறி நானும் இதை எழுத வேண்டும் என எண்ணினேன்.பதிவுக்கு நன்றி.

நடுச்சாமத்தில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குள் என்ன வேலை?

தமிழ் கைதிகளை சுடுவேன் என்றதுமல்லாமல் தனது சப்பாத்தைநக்கச் சொன்னதாகவும் சொன்னார்கள்.

முதுகெலும்பில்லாத எமது அரசியல்வாதிகளும் சாட்டுக்கு ஒருநாள் குரலெழுப்பினார்கள் அதோடு சரி.

தூரகங்களும் சரி மனிதஉரிமை அமைப்புகளும் சரி பெரிதுபடுத்தவே இல்லை.

காயாலாகாத நாங்கள் என்ன தான் செய்யலாம்?

இப்போ எங்கோ ஓர் மூலையில் சந்தோசமாக உள்ளது.

இந்தப் பிரச்சனையை கஜேகுழுவினர் கையிலெடுத்த போதும் சிறைச்சாலையில் இருந்தவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் கைவிடப்பட்டதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of text

 

 

465220769_963732619125044_54359951510933

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லொஹானின் மனைவியும் விளக்கமறியலில்

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியிருந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய அவர், கைது செய்யப்பட்டார்.

https://thinakkural.lk/article/311546

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லொஹான் ரத்வத்தவுக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

image

பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்த ஆகியோரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டுள்ளது.

லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு  நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/198111

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிவு செய்யப்படாத ஆடம்பர காரினை 2020 முதல் லொகான் ரத்வத்தை பயன்படுத்தியுள்ளார் - விசாரணைகளின் மூலம் உண்மை வெளியானது

image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான்ரத்வத்தை சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பதிவுசெய்யப்படாத இலகத்தகடுகள் அற்ற ஆடம்பரகாரினை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

லொகான் ரத்வத்தையின் மனைவியின் மிரிஹான வீட்டில் மீட்கப்பட்ட கார் குறித்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன.

கண்டியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை கொண்டு வந்தார் என தெரிவித்ததன் மூலம் லொகான் ரத்வத்தை விசாரணையை குழப்ப முயன்றார் என பொலிஸ் சட்டப்பிரிவின் தலைவர் பிரதிபொலிஸ்மாஅதிபர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எனினும் விசாரணைகளின் போது மீட்கப்பட்ட பல வீடியோக்கள் ஆவணங்கள் ரத்வத்தை அந்த காரை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் அந்த விசாரணையின் போது போலியான செசி இலக்கத்தினை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மிரிஹானவில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவுசெய்யப்படாத  வாகனம் காணப்பட்டதை தொடர்ந்து கைதுசெய்யப்ட்டார்.

https://www.virakesari.lk/article/198166

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுகள், தேடுதல்கள் காட்சிப்பதிவுகளை சில நொடிகளில் தொடும் அளவிற்கு உலகம் இணைய வழிகளில் எங்கேயோ போய் விட்டது. இவர்கள் இன்னும் பிறந்த இடத்திலேயே நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂
நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லொஹான் ரத்வத்தைக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு

image
 

பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தை ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (18) நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், லொஹான் ரத்வத்தையை டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரையும், ஷஷி பிரபா ரத்வத்தையை நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லொஹான் ரத்வத்தையின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தைக்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு  நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தை  ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/199069

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.

லொஹான் ரத்வத்தையின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தைக்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பொலிஸாரால் முற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தையும் கைது செய்யப்பட்டு நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தை  ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது லொஹான் ரத்வத்தையை டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரையும்  ஷஷி பிரபா ரத்வத்தையை நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/199398

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.