Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

தமிழ் தலைவர்கள் அநுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியிலே போட்டியிட்டு வெல்பவர்களே அமைச்சர்களாக முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்தார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டமானது தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிதம்பரநாதன் தலைமையில் நேற்று சனிக்கிழமை (26) இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. 

இதன் போது கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில் , 

அனுரகுமார திஸாநாயக்க ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர். ரணிலோ, சஜித்தோ, நாமலோ கிராமத்தில் படித்து வளர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வரிசையில் நின்று அரச வைத்தியசாலையில் மருந்து எடுத்திருப்பார்களா? இல்லை. ஏதாவது ஒரு விடயத்திற்கு வரிசையில் இருந்திருப்பார்களா? 

அவர்களுக்கு சாதாரண மக்களுடைய பிரச்சினை தெரியாது. ஆகவே எமது வர்க்கத்தை சேர்ந்தவர் தற்போது ஜனாதிபதியாகி இருக்கின்றார்.

இதிலிருக்கும் கணிசமானவர்கள் யுத்தத்தில் பாதிப்படைந்தவர்களாக இருக்கலாம். பெரும்பாலனவர்களது வீடுகள் சேதமடைந்திருக்கலாம். அதேபோல் அனுர குமார திஸாநாயக்கவின் வீடு 1979 ஆம் ஆண்டு இராணுவத்தால் தாக்கப்பட்டிருந்தது.

யுத்தத்தினால் உற்றார், உறவினர்கள் உயிரிழப்புக்களை சந்தித்திருக்கலாம் அதேபோல் அனுர அவர்களது ஒரேயொரு அண்ணா டயர் கொளுத்தி கொலை செய்யப்பட்டார்.

யுத்தம் மிகவும் வித்தியாசமான யுத்தம். யுத்தத்தின் போது சாதாரண சிங்கள, தமிழ் மக்கள், இளைஞர்கள் தான் கொல்லப்பட்டார்கள். சிறப்பம்சம் என்னவென்றால் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புரிந்த ஒருவரே ஜனாதிபதி ஆகியிருக்கின்றார்.

தேசிய மக்கள் சக்தி வடமாகாணத்தில் மக்கள் மத்தியில் பதிந்து கொண்டு வருகின்றபடியால் பல கட்சிகள் அவதூறுகளை பரப்பிகொண்டு வருகின்றார்கள். சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, சிறீதரன் போன்றவர்கள் அனுர அவர்களை சந்தித்து கொண்டு வருகிறார்கள். 

அவர்கள் எவ்வளவு வங்குரோத்து அடைந்திருக்கிறார்கள் என்பதனை உணரமுடியும். அனுரவோடு படம் எடுத்த 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பார்கள். அமைச்சரவை கொடுப்பதாயின் படம் எடுத்த அனைவருக்குமே கொடுக்க வேண்டும். 

டீல் அரசியலில் நாம் ஈடுபட மாட்டோம். அடுத்த அரசாங்கத்தில் அடுத்த அமைச்சர்களாக பதவியேற்பதும் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெறும் நேர்மையான ஊழலற்ற நபர்களே என்பதை உறுதியாக கூறுகின்றோம்.  

எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி பிரதமர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கூட்டம் ஒன்றிற்கு வருகின்றார். அதேபோல் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வருகின்றார். அக் கூட்டங்களிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்.  அடுத்த 14 ஆம் திகதி தேர்தலுக்கு பின்னர் மிக வேகமாக நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துடன் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிப்போம் என மேலும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் பிமல் ரத்னாயக்கா, வன்னி தேர்தல் தொகுதியில் முதன்மை வேட்பாளர் யோகராசா சிவரூபன், யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் மருங்கன் மோகன், கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

IMG-20241027-WA0018.jpg

IMG-20241027-WA0092.jpg

IMG-20241027-WA0059.jpg

IMG-20241027-WA0064.jpg

IMG-20241027-WA0086.jpg

IMG-20241027-WA0102.jpg

https://www.virakesari.lk/article/197261

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:
தமிழ் தலைவர்கள் அநுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியிலே போட்டியிட்டு வெல்பவர்களே அமைச்சர்களாக முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்தார்.

----சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, சிறீதரன் போன்றவர்கள் அனுர அவர்களை சந்தித்து கொண்டு வருகிறார்கள். 

 

tenor.gif

எல்லாம் போச்சா...   சுமந்திரனின், அமைச்சர் கனவில் மண் அள்ளிப் போட்டு விட்டார்களே. 😂
உளறு வாயனுக்கு, ஆப்பு  வைத்து விட்டார்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

tenor.gif

எல்லாம் போச்சா...   சுமந்திரனின், அமைச்சர் கனவில் மண் அள்ளிப் போட்டு விட்டார்களே. 😂
உளறு வாயனுக்கு, ஆப்பு  வைத்து விட்டார்கள். 🤣

எனக்கு மூக்குப் போனாலும் பறவாயில்லை. எதிரிக்குச் சகுனப்பிழையானால் சரிதான்,.....🤣

தமிழன்டா,......😁

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குத்தான் சொன்னேன், மக்களுக்கு சேவை செய்பவர் மக்களின் ஆணை பெற்று தைரியமாக பாராளுமன்றம் போய் பகிரங்கமாக பேச வேண்டும். அது என்ன செய்வது, பழக்கதோஷம் விடவில்லையே? கடத்தல்காரர், கொள்ளைக்காரர், என்று சிலரை விமர்சித்தார், அவர்கள் கௌரவமாக இருக்கிறார்கள். இவரோ, வடக்கின் வசந்தத்தின் நிலைக்கு தாழ்ந்து விட்டார். தான் தான் அவர்களின் பெரும்பாலான வழக்குகளில் ஆஜர் ஆகிறேன், எனக்கு பிரதம மந்திரி பதவியை ஏற்க அழைப்பு வருமென காத்திருக்க, இப்படியொரு அவமான செய்தியை எப்படி தாங்கப்போகிறார்? பொய்யும் புழுகும் கன நாளைக்கு நிலைக்காது. எதை விதைத்தாயோ அதையே அறுப்பாய் என்பார்கள், உடனேயே பலித்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

எனக்கு மூக்குப் போனாலும் பறவாயில்லை. எதிரிக்குச் சகுனப்பிழையானால் சரிதான்,.....🤣

தமிழன்டா,......😁

இங்கு நீங்க சொல்லும் தமிழ் மக்களின்  எதிரி சுமத்திரன் என்று கூறியதுக்கு உங்களுக்கு பச்சை புள்ளி குத்த இன்று இல்லை நாளை குத்துகிறேன் பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு தீர்வு தர தகுதி அற்ற சிங்கள அரசு தமிழரின் வாக்குகளை பெற தகுதி அற்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பெருமாள் said:

இங்கு நீங்க சொல்லும் தமிழ் மக்களின்  எதிரி சுமத்திரன் என்று கூறியதுக்கு உங்களுக்கு பச்சை புள்ளி குத்த இன்று இல்லை நாளை குத்துகிறேன் பாஸ் .

இன்றைய நிலவரத்தின்படி, இலங்கைத் தமிழரின் முதல் எதிரி புலம்பெயர்ஸ், இரண்டாவது எதிரி, இந்தியா,....சிங்களம் இதன் பின்பே,..🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கு நீங்க சொல்லும் தமிழ் மக்களின்  எதிரி சுமத்திரன் என்று கூறியதுக்கு உங்களுக்கு பச்சை புள்ளி குத்த இன்று இல்லை நாளை குத்துகிறேன் பாஸ் .

இன்றைய நிலவரத்தின்படி, இலங்கைத் தமிழரின் முதல் எதிரி புலம்பெயர்ஸ், இரண்டாவது எதிரி, இந்தியா,....சிங்களம் இதன் பின்பே,..🤣

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.