Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

யாழில் கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு!

spacer.png

யாழ்ப்பாணம் – பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வீட்டிற்கு இன்று (30) புதன்கிழமை காலை சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

50 மற்றும் 51 வயதான 2 பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை நீதவானின் பிரசன்னத்திற்கு பின்னரே சடலங்களை மீட்டு மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.samakalam.com/யாழில்-கணவன்-மனைவியின்-ச/

Edited by கிருபன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மிருகத்தனமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொள்ளையன்/ர் சைக்கோவா? போதைப் பொருள் பாவனையாளர்? 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ். கற்கோவளத்தில் கணவன், மனைவி தாக்கப்பட்டு கொலை !

image

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

மாணிக்கம்  சுப்பிரமணியம் என்ற  53 வயதுடைய கணவனும், மேரி என்ற 54 வயதுடைய மனைவியுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களைப்  பார்வையிட்டுள்ளார்.

IMG_20241030_104903.jpg

IMG_20241030_105811.jpg

IMG_20241030_105802.jpg

https://www.virakesari.lk/article/197493

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடமராட்சியில் இரட்டைக் கொலை: இருவர் கைது

1183785387.jpeg

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 54), அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா (வயது 53) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 54), அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா (வயது 53) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் வீட்டுக்கு நேற்று காலை அயலவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்னர்.

இந்நிலையில், கொலை சப்பவம் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 காங்கேசன்துறை பிரிவுக்குட்பட்ட பொலிஸ் உளவுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலையாளிகள் மூவரில் இருவரைக் கைது செய்துள்ளனர். ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

தொழிற் போட்டியினால் மூவர் சேர்ந்து வயோதிபத் தம்பதியினரை கொலை செய்துள்ளனர். [எ]

https://newuthayan.com/article/வடமராட்சியில்_இரட்டைக்_கொலை:_இருவர்_கைது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கைது செய்யப்பட்டவர்கள் இனிமேல் சிறைச்சாலை சலவைத் தொழிலைக் குத்தகைக்கு எடுப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹ்ம்ம்... தீபாவளி நேரம் இப்படி ஒரு கோரச் சம்பவம்.
தொழில் போட்டி என்றால், கொலை செய்து தான் அதனை  தீர்க்க வேண்டுமா? 
இனி மறியலில் இருந்து என்ன செய்யப் போகின்றார்கள்.
கொலை செய்யப் பட்டவர்கள் குடும்பமும், 
கொலை செய்தவர்கள் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்து விட்டதே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ். கற்கோவளம் இரட்டைக்கொலை : இரு சந்தேகநபர்கள் கைது

image

யாழ்ப்பாணம் - கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான தீவிர நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். 

அப்பகுதியை சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம் அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோர் நேற்றைய தினம் புதன்கிழமை வீட்டில் படுகொலை செய்ய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். 

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

படுகொலை செய்யப்பட்ட குடும்ப தலைவர் சலவை தொழிலாளி எனவும், அவர் அச்சுவேலி வைத்தியசாலை துணிகளை சலவை செய்யும் ஒப்பந்தத்தை அண்மையில் பெற்று இருந்ததாகவும், அதனால் தொழில் ரீதியில் எதிர்ப்புக்கள் சில கிளம்பியிருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் பொலிஸார் இருவரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்ய தீவிர நடவடிக்கையை எடுத்துள்ளனர். 

அதேவேளை கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கழுத்தை நெரித்த பின்னர் கொங்கிறீட் கற்களால் தலையில் பலமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

படுகொலையானவர்களின் ஒரு மகன் வெளிநாடொன்றில் வசித்து வருவதாகவும், மற்றைய மகன் தாய் தந்தையாருடன், படுகொலை நடைபெற்ற வீட்டில் வசித்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று, தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

https://www.virakesari.lk/article/197591



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.