Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் : - சரவணபவன் சூளுரைப்பு!

2095379362.jpg

தமிழரசுக் கட்சியால் சிதைக்கப்பட்ட தமிழ் தேசியத்தை  மீள உருவாக்குவதில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படும் என சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை  தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தமிழரசு கட்சியிலிருந்து ஏன் விலகினோம் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் அதை பற்றி நான் இங்கு கூற விரும்பவில்லை. 

நாங்கள் தற்போது சனநாயக தமிழரசு கூட்டமைப்பாக மாம்பழ சின்னத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையில் களமிறங்கி உள்ள நிலையில் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்கி வருகிறார்கள்.

நான் ஒரு வேட்பாளராக மாம்பழ சின்னத்தில் போட்டியிடுகிறேன். தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களுக்கான ஒரு கூட்டமைப்பாக  நாங்கள் செயல்படுகிறோம்.

நான் ஒரு ஊடகத்துறையை நடத்தி வரும் நிலையில் 38 தடவைகள் தாக்குதலை மேற்கொண்டார்கள். இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. 

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த ஜனாதிபதிகளிடம் கூறினேன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

வெளிநாட்டு தூதரகங்களுக்கு கூறினேன் சர்வதேச நிறுவனங்களுக்கு கூறினேன் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் தமிழ் தேசியத்திற்காக பயணிப்பவர்கள் பல்வேறு தடைகளை சந்திப்பது வழமையான செயல்பாடு ஆனால் நானும் என் சாந்த நிறுவனமும் பல்வேறு தடவைகள் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்படுவதும் தொடர் செயற்பாடாக இருந்து வருகிறது. 

தமிழ் தேசியத்திற்காக பயணிப்பவர்கள் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் காணாமல் ஆக்கப்படுவதும் இலங்கையில் சாதாரணமான ஒரு விடயமாக நடந்து வந்த நிலையில் இதுவரை எந்த ஒரு விசாரணை முடிவுகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் தருவதாக அமையவில்லை. 

தமிழ் மக்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். தமிழ் தேசியத்தை விலைபேசி விற்பதற்கு பல்வேறு தரப்புக்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் .

தமிழ் மக்கள் அவர்களிடமிருந்து விடக் கூடாது தமிழ் தேசியத்தை உண்மையாக நேசிப்பவர்கள் அதற்காக போராடுபவர்களையும் மக்கள் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும். 

நான் சென்ற தடவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது வட்டுக்கோட்டை தொகுதிக்கு முன்னுரிமை கொடுத்து சுமார் 600 மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு இருக்கிறேன். 

அவற்றோடு நின்றுவிடாமல் ஏனைய தொகுதிகளுக்கும் என்னால் இயன்றவரை அபிவிருத்திகளை கொண்டு சென்றிருக்கிறேன். 

நான் அந்த தொகுதிகளுக்கு செல்லும்போது மக்கள் கூறினார்கள் நீங்கள் எந்த கட்சியில் கேட்டாலும் உங்கள் சிறப்பான சேவைக்கு நமது ஆதரவு இருக்கும் என்று. 

நாங்கள் தமிழ் தேசியத்தை விலை பேசி விற்றவர்கள் அல்ல விக்கப் போவார்கள் அல்ல அது மக்களுக்கு தெரியும்.

ஆகவே தமிழ் மக்கள் மாவீரர் நாளில் தமது வரலாற்றுக் கடமைகளில் ஒன்றாக தமிழ் தேசியம் சார்ந்தவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.  (ப)

 

https://newuthayan.com/article/மாம்பழ_சின்னம்_தமிழ்_தேசியத்தை_மீள்_உருவாக்கும்_: -_சரவணபவன்_சூளுரைப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

நாங்கள் தமிழ் தேசியத்தை விலை பேசி விற்றவர்கள் அல்ல விக்கப் போவார்கள் அல்ல அது மக்களுக்கு தெரியும்.

அதுதான் மோளிண்ட 21வது பேர்த்டேக்கு மகிந்தவை கூப்பிட்டு கேக்வெட்டி தீத்தினவராக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

வெந்தல் மாம்பழமாக இருக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மாங்கா குறூப் காப்டன் நேற்றோ முந்தநாளோ தெரியல்லை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்றலில் நாலைஞ்சு ‘மாங்கா’க்களோட மண்வெட்டியோட நிண்டவராம்! எலே சிரமதானம் செய்யிராராம் துயிலுமில்லத்துக்குள்ள!  நல்லகாலம் 27ஆம் திகதிக்குப் பிறகு எலக்சன் வைக்கேல்லை, வச்சிருந்தால் மனிசன் கிடங்கொண்டைகிண்டி மாவீரர் வேசத்தைப்போட்டு படுத்திருந்து படமெடுத்திருக்கும்! 

ஆனால் அநுர வலுசுழியன் ஜேவிபியின் கார்த்திகை வீரர் நாள் நவம்பர் 13. அன்றுதான் ரோகண விஜேவீர கொல்லப்பட்ட நினைவுநாள். அடுத்தா நாள் எலக்சன்.

 

குறிப்பு:

மாங்கா: நமது அயல்நாட்டுத் தமிழர் மாங்கா மடையன் என்று முட்டாள்களைத் திட்டுவார்கள். அதை இன்னும் சுருக்கி மாங்கா என அன்போடு விளிப்பார்கள்!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

 

ஆனால் அநுர வலுசுழியன் ஜேவிபியின் கார்த்திகை வீரர் நாள் நவம்பர் 13. அன்றுதான் ரோகண விஜேவீர கொல்லப்பட்ட நினைவுநாள். அடுத்தா நாள் எலக்சன்.

 

 

புதிய தகவல் நன்றி....கார்த்திகை மாதத்தை சிறிலங்காவின் தேசிய மாதமாக அறிவித்து ஆயுதமேந்தி போராடிய சகல சிறிலங்கனும் தீபம் ஏற்றலாம் என நல்லிணக்க சிக்னலை சொல்லுவாரோ தோழர் அணுரா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

மாங்கா: நமது அயல்நாட்டுத் தமிழர் மாங்கா மடையன் என்று முட்டாள்களைத் திட்டுவார்கள். அதை இன்னும் சுருக்கி மாங்கா என அன்போடு விளிப்பார்கள்!

கூடுதலாக நமது மருத்துவர் இராமதாசு ஐயாவின் பாமக சின்னமும் மாங்காய்.

அவரின் தொண்டர்களும், வன்னியண்டா…சத்திரியண்டா…ஆண்ட பரம்பரைடா எண்டு…டாட்டா சுமோவின் வெளியால சால்வையை கையிறு போல கொழுவி தொங்கி கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக போகும் அளவுக்கு மடையர்கள்.

இவர்களையும் மாங்கா என்பார்கள். அன்பு மணி இராமதாசை மாங்கா மணி என்பார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி என்னும் எங்களின் நிலப்பரப்பிற்கும் தங்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக மருத்துவர் ஐயாவின் மக்கள் சிலர் ஏற்கனவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பண்டார வன்னியன் வேற இருந்துவிட்டார்.............. இப்ப மாம்பழமும் உள்ளே வந்ததால், அசைக்க முடியாத வரலாற்று உண்மை என்று கொண்டாடப் போகின்றார்களே...............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

கூடுதலாக நமது மருத்துவர் இராமதாசு ஐயாவின் பாமக சின்னமும் மாங்காய்.

அவரின் தொண்டர்களும், வன்னியண்டா…சத்திரியண்டா…ஆண்ட பரம்பரைடா எண்டு…டாட்டா சுமோவின் வெளியால சால்வையை கையிறு போல கொழுவி தொங்கி கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக போகும் அளவுக்கு மடையர்கள்.

இவர்களையும் மாங்கா என்பார்கள். அன்பு மணி இராமதாசை மாங்கா மணி என்பார்கள்.

 

ராமதாசை பெரிய மாங்கா என்றும் அன்புமணியை சின்ன மாங்கா என்றும் குறிப்பிடுவது என் வழக்கம்!😂

  • கருத்துக்கள உறவுகள்

'பழையன கழிதலும் புதியன புகுதலும் ...............' என்று பெரியவர் இன்று விஜய்க்கு நூல் விட்டிருக்கின்றார்........... பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்தது பாழும் கிணற்றுக்குள்ள விழுந்தது போல ஆகி விட்டது.......... விஜய் தான் ஒரு கயிறை எடுத்து இப்ப உள்ளே எறியவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரசோதரன் said:

'பழையன கழிதலும் புதியன புகுதலும் ...............' என்று பெரியவர் இன்று விஜய்க்கு நூல் விட்டிருக்கின்றார்........... பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்தது பாழும் கிணற்றுக்குள்ள விழுந்தது போல ஆகி விட்டது.......... விஜய் தான் ஒரு கயிறை எடுத்து இப்ப உள்ளே எறியவேண்டும்.

எப்படி இருந்த மனிசன். ஒரு காலத்தில் ரஜனியை கதறவிட்டவர்.

மகனுக்காக மாறி மாறி கூட்டணி வைத்து, கட்சியில் இருந்து பலரை வெளியேற்றி…இப்போ விஜைக்கு நூல் விடும் நிலை.

ஆனால் விஜை ஏற்க வேண்டும்.

திருமா…இல்லன்னா (காடுவெட்டி) குரு மா🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஆனால் விஜை ஏற்க வேண்டும்.

திருமா…இல்லன்னா (காடுவெட்டி) குரு மா🤣.

( அதிமுக + தவெக  + பாமக )  எதிர் ( திமுக + காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் + விசிக)

இது நல்ல விறுவிறுப்பான போட்டியாக இருக்கும்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரசோதரன் said:

( அதிமுக + தவெக  + பாமக )  எதிர் ( திமுக + காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் + விசிக)

இது நல்ல விறுவிறுப்பான போட்டியாக இருக்கும்.

 

 

 

ஆமா இல்ல, அப்படியே காங்கிரசையும் இங்கால இழுத்து, விஜய பிரபாகரனுக்கும் ஒரு நல்ல சீட்டா கொடுத்தால்…

திமுகவை மீண்டும் கூப்பில் உக்கார வைக்கலாம்.

ஆனால் கூட்டணி கணக்கு இப்படி அமையின், 

நா த க எதிர் நோட்டா போட்டி தான் இன்னும் விறு விறுப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2024 at 00:39, வாலி said:
On 4/11/2024 at 00:27, கிருபன் said:

 

அதுதான் மோளிண்ட 21வது பேர்த்டேக்கு மகிந்தவை கூப்பிட்டு கேக்வெட்டி

 இல்லை மகிந்த  இல்லை   மைத்திரி        

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.