Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

யாழ். சுன்னாகத்தில் வாகனமொன்றின் மீது இருவர் மதுபோதையில் வந்து மோதிய சம்பவத்தை தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் இரண்டு மாத குழந்தையின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் சிலரின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்த பொலிஸார் தாயையும் தந்தையும் கடுமையாக தாக்கினார்கள் என தாயார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாங்கள் வீதியால் சென்று கொண்டிருக்கும்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எங்கள் வாகனத்தை முந்தி செல்ல முயன்று தாங்களே அடிபட்டு கீழே விழுந்தார்கள்.

நானும் எனது கணவரும் அக்காவும் எங்களது வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதால் நாங்கள் நின்றுவிட்டோம்.

கீழே விழுந்தவர் மது அருந்தியிருந்தார். கீழே விழுந்தவர் மது அருந்தியுள்ளதாகவும் நீங்கள் பயப்பட வேண்டாமென அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சிவில் உடையில் வந்தவர்கள் எனது கணவரிடம் வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்டார்கள். ஆனால் அவர் போக்குவரத்து பிரிவினர் வந்தால் தான் கொடுக்க வேண்டும் என்பதால் கொடுக்கவில்லை.

எனது கணவரின் கையைப் பிடித்து இழுத்தார்கள் நான் விடவில்லை. எனக்கு கறுப்புநிற ரிசேர்ட் அணிந்த பொலிஸ்காரர் அடித்தார்.

இரண்டுமாத குழந்தையுடன் இருந்த எனக்கு அடித்தார்கள். நான் மயிலிட்டியில் இருக்கும் அண்ணாவுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அண்ணா சம்பவ இடத்திற்கு வந்தார்.

அவர் என்னவிடயம் என கேட்க அவருக்கும் அடித்துவிட்டு அக்காவுக்கும் அடித்தார்கள். எனது இரண்டுமாத குழந்தை வீதியில் விழுந்த நிலையில், எனது பிள்ளையை தூக்கி பற்றைக்குள் எறிந்தார்கள். இதனை நான் தட்டிக்கேட்க என்னை அடித்துவிட்டு வெள்ளை ரிசேர்ட் அணிந்தவர் எனது போனை தூக்கி எறிந்தார், பொதுமக்கள் தான் எனது தொலைபேசியை எடுத்துதந்தார்கள்.  

எனது கணவர் பிள்ளையை வேனிற்குள் கொண்டு போக எனது பிள்ளையை  கீழே போட்டுவிட்டு எனது கணவரிற்கு கையால் அடித்தார்கள். பிள்ளையை மருத்துவமனைக்கு கொண்டுபோக நாம் முயன்றபோது நீலநிற ரிசேர்ட் அணிந்தவர் வாகனத்தை இரும்பு கம்பியுடன் மறித்துக்கொண்டு நின்றார். வாகனத்தை எடுத்தால் உடைத்துவிடுவோம் என்றார். 

அண்ணா பிள்ளையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எங்கள் இரண்டு பேரையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அடித்ததுடன் கதிரையாலும் தாக்கினார்கள். எனக்கு புற்றுநோய் உள்ளது. எனது பிள்ளை பிறந்து இரண்டு மாதம். எங்களிற்கு நியாயம் பெற்றுதாருங்கள். எங்கள் வாகனத்தை மீட்டு தாருங்கள் என்றார். 

https://www.virakesari.lk/article/198290

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உள்ளிட்ட வேனிலிருந்தவர்களை சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மிலேச்சத்தனமாக தாக்கியுள்ளனர் : சம்பவ இடத்திற்கு விரைந்த கஜேந்திரகுமார் தெரிவிப்பு

image

யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் பொலிஸார் அந்த வேனிலிருந்த ஆண்களிற்கு மிக மோசமாக அடித்து கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உட்பட வேனிலிருந்த பெண்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று அங்கு மிலேச்சத்தனமாக தாக்கியுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.                      

குறித்த சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொனானம்பலம், செல்வராஜா கஜேந்திரன், நடராஜா காண்டீபன் ஆகியோர் பொலிஸாருடன் கதைத்து தாக்குதலுக்கு உட்பட்டவர்களை உடனடியாக பார்வையிட்டு அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்கள்.

SyW2m7GJhbIHgr6b.jpg

இதன் பின்னர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம்  தெரிவித்துள்ளதாவது.

பொலிஸார் அந்த வேனிலிருந்த ஆண்களிற்கு மிக மோசமாக அடித்து கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உட்பட வேனினிலிருந்த பெண்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து சென்று வந்து மிலேச்சத்தனமான விதத்தில் தாக்கியுள்ளதுடன் கடும் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்றவேளை தான் அந்த இடத்தில் இருக்கவில்லை என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து மிலேச்சதனமாக தாக்கியுள்ளனர் என அவர் எங்களிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என அவர் எம்மிடம் தெரிவித்தார்.

ஆனால் அடிபட்ட பிரதேசத்தில் உள்ள நிலைமைகளை பார்க்கின்ற போது சி.சி.ரி.வி. ஊடாக நடந்த முழு சம்பவத்தையும் அறிவதற்கான வாய்ப்புள்ளது என அங்குள்ள மக்களின் கருத்துக்களின் மூலம் நாங்கள் அறிய முடிகின்றது.

இந்த சம்பவமானது எமக்கு மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்ற விடயம் என்னவென்றால் வடக்கு, கிழக்கிற்கு உள்ளே பொலிஸார் என்ற பெயரில் அனுப்பப்படுகின்றவர்கள் காடையர்களாக செயற்படுவதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது.

உண்மையிலேயே இது பொதுப்பிரச்சினை. தெற்கிலே விதிமுறைகளை மீறி செயற்படுகின்ற பொலிஸார் தண்டனைக்காக வடக்கு பகுதிக்கு இடமாற்றப்படுகின்ற நிலைமைதான் காணப்படுகின்றது.

வடகிழக்கிலே உள்ள மக்களை அரசாங்கம் ஒரு எதிரிபோன்று பார்க்கின்ற நிலையில் அவர்கள் எப்படி பிழையாக நடந்துகொண்டாலும் அதனை மூடிமறைக்கின்ற வகையில் மக்களை பாதுகாக்கின்ற வகையிலே செயற்படாமல் பொலிஸாரை பாதுகாக்கின்ற வகையிலேயே செயற்படுகின்றது.

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இந்த நிலைமை தொடர்கின்றது என்பதை இந்த சம்பவம் தெளிவாக காண்பிக்கின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/198292

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பகுதிகளில் இயங்கும் காவல் நிலையங்களில்... சுன்னாகம் காவல் நிலையம் இதற்கு முன்பும் பொதுமக்களுக்கு எதிராக,  பலமுறை மிக மோசமான நடவடிக்கைளை சட்டத்தை  மீறி செயல்பட்டமை செய்திகளாக வெளிவந்தது. இதனை முடிவிற்கு கொண்டு வர அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும். இதனை இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

ஒரு தடவை, இரு தடவை என்றால்... கடந்து போய் விடலாம். தொடர்ந்தும் இதே நிலை நீடிப்பது கண்டனத்துக்குரியது. இவர்கள் தமிழர்களை, தமது அடிமைகளாக நினைத்து செயல் படுவது போல் தெரிகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நமக்காக நாம் என்பதை
Dr சிறீ பவானந்தராஜா நிரூபித்துள்ளார்.

———

நான் போலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டதன் பெயரில் சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிகமாக வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்

https://www.facebook.com/share/1DgY8VzRdL/?mibextid=WC7FNe

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

24-6704eb745f5e1.webp

இவர் அனுர கட்சியில்... யாழ்ப்பாணம் / கிளிநொச்சி  மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். கஜேந்திரகுமார் போய் சவுண்டு கொடுக்கத்தான் முடிந்தது!

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகாரத்தின் மூலம் செயலில் இறங்குவார்கள். மக்கள் தேர்தலில் சவுண்டு கொடுப்பவர்களுக்கா அல்லது செயல்வீரர்களுக்கா வாக்களிப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்😄

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக செயலில் இறங்குபவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். வெறும் சவுண்டு கொடுத்து மக்களை  உசுப்பேற்றும. தேசிக்காய்கள்  யாரென்றாலும் அவர்களுக்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சி  சுமந்திரன்... அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. 😎
தங்களுக்குள்... "குழி" பறித்துக் கொண்டு இருக்கின்றார்கள் போலுள்ளது. 🤣
அல்லது... வரப் போகும் அரசாங்கத்தின், வெளிநாட்டு அமைச்சர் கனவில் இருக்கிறாரோ... 
animiertes-schlafen-smilies-bild-0019.gi 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நமக்காக நாம் என்பதை
Dr சிறீ பவானந்தராஜா நிரூபித்துள்ளார்.

———

நான் போலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டதன் பெயரில் சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிகமாக வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்

https://www.facebook.com/share/1DgY8VzRdL/?mibextid=WC7FNe

1 hour ago, தமிழ் சிறி said:

24-6704eb745f5e1.webp

இவர் அனுர கட்சியில்... யாழ்ப்பாணம் / கிளிநொச்சி  மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

இவர் வென்றால் சுகாதாரத்துறை ஊழல்களுக்கு முடிவு கட்டலாம், அர்ச்சுனாவை விட இவர் பொருத்தமாயிருப்பார் என நம்புகிறேன். 
யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பதில் பணிப்பாளராகவும் கடமை ஆற்றியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

இவர் வென்றால் சுகாதாரத்துறை ஊழல்களுக்கு முடிவு கட்டலாம், அர்ச்சுனாவை விட இவர் பொருத்தமாயிருப்பார் என நம்புகிறேன். 
யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பதில் பணிப்பாளராகவும் கடமை ஆற்றியுள்ளார்.

எப்படியும்.... தேசிய மக்கள் சக்தியில் இருந்து... 
ஒருவரோ, இருவரோ பாராளுமன்றம் செல்ல வேண்டும்.

அப்படி அவர்கள் சென்றால்... தமிழர் சார்பாக ஒரு கனமான  அமைச்சுப் பதவி கிடைக்கும்.
கெட்டிக்காரர் என்றால்,  அதனை வைத்து.... மக்களுக்கு நல்ல சேவை ஆற்ற முடியும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகத்தில் பொலிஸாரினால் தாக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் - கீதநாத் காசிலிங்கம்

image

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரால் இளம் தாயொருவரும், அவரது பச்சிளம் குழந்தையும் கணவனும் நேற்றிரவு தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் நான் கவலையடைவதுடன், இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு தாக்குதல் நடத்தியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டி நிற்கின்றேன்.

இந்த சம்பவம் தொடர்பில் பலரும் ஆளும் அரசாங்கத்தை கண்டிப்பதை காண முடிகிறது. ஒரு சில அதிகாரிகள் விடும் தவறுகளுக்கு அரசாங்கத்தை குறை கூறி பயனில்லை. இப்படியான சம்பவம் எமது பொதுஜன பெரமுன அரசாங்க காலத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. அதன்போது பிழை விடும் அதிகாரிகள் மீது சுமத்தவேண்டிய குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் மீது சுமத்தினார்கள்.

நேற்றைய தாக்குதல் சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக இருக்கின்றது என்றார். 

https://www.virakesari.lk/article/198321

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகம் விபத்து; பொலிஸார் அராஜகம்; விசேட பொலிஸ் குழு விசாரணை - யாழ். பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்

image

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்து,  பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜருள் தெரிவித்துள்ளார். 

சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை (09) வேன் - மோட்டார் சைக்கிள் விபத்தினை தொடர்ந்து வாகன சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை சிவில் உடையில் நின்ற பொலிஸார் பரிசோதிக்க முற்பட்டவேளை சாரதிக்கும் பொலிஸாருக்கும் இடையில் முதலில் வாய்த்தர்க்கம், பின்னர் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 

அதனை தடுக்க சென்ற சாரதியின் மனைவியையும் பொலிஸார் தாக்கியதாகவும், அவரின் கையில் இருந்த அவர்களின் இரண்டு மாத குழந்தையை பொலிஸார் தூக்கி எறிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தினையடுத்து நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்பாக மக்கள் கூடியமையால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (10)  யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, 

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்  பயணித்த மோட்டார் சைக்கிளும் வேன் ஒன்றும் காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தினையடுத்து, வாகனம் அவ்விடத்தில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்டவேளை, சிவில் உடையில் நின்ற பொலிஸார் வாகனத்தை வழிமறித்து, சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை கேட்டுள்ளனர். 

சிவில் உடையில் உள்ளவர்களுக்கு தான் சாரதி அனுமதிப் பத்திரத்தினை தர மாட்டேன் என கூறி தர்க்கம் செய்த நிலையில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் கைகலப்பில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க அவர்களின் உத்தரவில், விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

விசாரணைகளில் குற்றவியல் குற்றங்கள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 

பொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே கடமையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு என ஒரு வரையறை இருக்கிறது. அதை அவர்கள் மீற முடியாது. மீறினால் நிச்சயமாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். 

சுன்னாகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினரால் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபரும் அறிவுறுத்தியுள்ளார். 

நிச்சயமாக பக்கச் சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/198360

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்த பொலிஸார் தாயையும் தந்தையும் கடுமையாக தாக்கினார்கள் என தாயார் தெரிவித்துள்ளார்.

large.IMG_7474.jpeg.f5c4864aee9974cabc49

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

நமக்காக நாம் என்பதை
Dr சிறீ பவானந்தராஜா நிரூபித்துள்ளார்.

———

நான் போலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டதன் பெயரில் சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிகமாக வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்

https://www.facebook.com/share/1DgY8VzRdL/?mibextid=WC7FNe

4 hours ago, கிருபன் said:

ஆமாம். கஜேந்திரகுமார் போய் சவுண்டு கொடுக்கத்தான் முடிந்தது!

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகாரத்தின் மூலம் செயலில் இறங்குவார்கள். மக்கள் தேர்தலில் சவுண்டு கொடுப்பவர்களுக்கா அல்லது செயல்வீரர்களுக்கா வாக்களிப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்😄

3 hours ago, island said:

நிச்சயமாக செயலில் இறங்குபவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். வெறும் சவுண்டு கொடுத்து மக்களை  உசுப்பேற்றும. தேசிக்காய்கள்  யாரென்றாலும் அவர்களுக்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும். 

தேர்தல் முடிந்ததும் அவர்கள் மீண்டும் கடமைகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று நாட்டாண்மை தீர்ப்பளிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இவர் வென்றால் சுகாதாரத்துறை ஊழல்களுக்கு முடிவு கட்டலாம், அர்ச்சுனாவை விட இவர் பொருத்தமாயிருப்பார் என நம்புகிறேன். 
யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பதில் பணிப்பாளராகவும் கடமை ஆற்றியுள்ளார்.

நல்லது செய்யப் போய்த்தான் களுத்துறைக்கு மாற்றப்பட்டதாக பேசிக் கொண்டார்கள்.

டாக்ரர் அர்ச்சுனா ஒருவரே சுனாமியை ஏற்படுத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

தேர்தல் முடிந்ததும் அவர்கள் மீண்டும் கடமைகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று நாட்டாண்மை தீர்ப்பளிக்கிறது.

நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கிய இராணுவ சிப்பாய்க்கு விடுதலை கொடுத்த உத்தமர்கள் ..

அனுரா ஆட்சிக்கு அபகீர்த்தி ஏற்படுத்த புலம்பெயர்ஸ் தேசிய பழம்கள் சுன்னாக பொலிசாருக்கு பணம் கொடுத்து பொலிசாரை உசுப்பேத்தி யிருப்பினமோ

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

நமக்காக நாம் என்பதை
Dr சிறீ பவானந்தராஜா நிரூபித்துள்ளார்.

———

நான் போலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டதன் பெயரில் சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிகமாக வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்

https://www.facebook.com/share/1DgY8VzRdL/?mibextid=WC7FNe

இது அரசியல்வாதிகள செய்ய வேண்டிய செயல் அல்ல அவர் அனுராவின் பக்கம் நிற்கின்றார் என்பதால் அணுராவுக்கு சொல்லி அவர் உடனடியாக பொலிசுக்கு சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டிய் அவசியம் இல்லை...

பொலிஸ் அதிகாரிகள் செய்ய வேண்டிய விடயம்...வடபகுதி பொலிஸ் அதிகாரி செய்ய வேண்டிய கடமை....ஆட்சியில் இருப்பவர்கள் இப்படியான செயல்களை செய்ய வேணும் என நினைப்பது தவறு...

அரசாதிகாரிகள் ,பொலிசார் போன்றவர்களும் மாற வேண்டும் ...இல்லை என்றால் நல்லிணக்கம் சாத்தியமில்லை ....இனவாதம் அரசியல்வாதிகள் பேசுவார்கள் ..ஆனால் நடைமுறைப்படுத்தி இனவாதத்தை வளர்த்ததில் சிறிலங்கா பொலிசாருக்கு முக்கிய பங்கு உண்டு...  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

சுன்னாகத்தில் பொலிஸாரினால் தாக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் - கீதநாத் காசிலிங்கம்

image

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரால் இளம் தாயொருவரும், அவரது பச்சிளம் குழந்தையும் கணவனும் நேற்றிரவு தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் நான் கவலையடைவதுடன், இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு தாக்குதல் நடத்தியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டி நிற்கின்றேன்.

இந்த சம்பவம் தொடர்பில் பலரும் ஆளும் அரசாங்கத்தை கண்டிப்பதை காண முடிகிறது. ஒரு சில அதிகாரிகள் விடும் தவறுகளுக்கு அரசாங்கத்தை குறை கூறி பயனில்லை. இப்படியான சம்பவம் எமது பொதுஜன பெரமுன அரசாங்க காலத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. அதன்போது பிழை விடும் அதிகாரிகள் மீது சுமத்தவேண்டிய குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் மீது சுமத்தினார்கள்.

நேற்றைய தாக்குதல் சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக இருக்கின்றது என்றார். 

https://www.virakesari.lk/article/198321

பார்ரா…

தம்பி…

சுன்னாகம் சுண்டக்காய்…

முள்ளிவாய்க்கால்…பிலாப்பழம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

சுன்னாகத்தில் பொலிஸாரினால் தாக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் - கீதநாத் காசிலிங்கம்

image

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல்வாதிகளின் முகம் மாறியுள்ளது,கட்சியின் பெயர் மாறியுள்ளது ஆனால் பொலிசார் செய்ய்யும் அட்டுழியங்கள் அன்று தொடக்கம் இன்று வரை மாறவில்லை ...

இது அரசியல்வாதிகள் செய்ய  வேண்டிய/அறிக்கை விட வேண்டிய‌ விடயம் அல்ல ...முதலில் இது மாற வேண்டும் ...வடபகுதி உயர்பொலிசஸ் அதிகாரி செய்யவேண்டிய விடயம் 

தேர்தல் காலங்களில் இப்படியான பொலிஸ் தில்லுமுல்லு சில ஆட்சியாளர்கள் செய்வது வழமை இதை ஊதிபெருப்பித்து வன்முறைகளை வளர்ப்பார்கள் ...இது போன்ற பல வன்முறைகளை யாழ் மண் சந்தித்துள்ளது ...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  குற்றம் நடந்திருக்கிறது. எந்த சூழ்நிலையில் யார் எதற்காக இதை செய்தார்கள் என்று கூட தெரியவில்லை. 

ஆனால் இதற்குள் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கும் தேர்தலில் வேட்பாளராக உள்ள ஒருவரால் தனியாளாக தீர்ப்பெழுத முடிகிறது. என்ன நாடு இது? என்ன அரசு இது? என்ன சட்டம் நீதி இது? இவர்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு யார் கையில் இருக்கப் போகிறது?????

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்  பயணித்த மோட்டார் சைக்கிளும் வேன் ஒன்றும் காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தினையடுத்து, வாகனம் அவ்விடத்தில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்டவேளை, சிவில் உடையில் நின்ற பொலிஸார் வாகனத்தை வழிமறித்து, சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை கேட்டுள்ளனர். 

சிவில் உடையில் உள்ளவர்களுக்கு தான் சாரதி அனுமதிப் பத்திரத்தினை தர மாட்டேன் என கூறி தர்க்கம் செய்த நிலையில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வேன் சாரதி அப்பாவி மாதிரி தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஒரு  குற்றம் நடந்திருக்கிறது. எந்த சூழ்நிலையில் யார் எதற்காக இதை செய்தார்கள் என்று கூட தெரியவில்லை. 

ஆனால் இதற்குள் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கும் தேர்தலில் வேட்பாளராக உள்ள ஒருவரால் தனியாளாக தீர்ப்பெழுத முடிகிறது. என்ன நாடு இது? என்ன அரசு இது? என்ன சட்டம் நீதி இது? இவர்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு யார் கையில் இருக்கப் போகிறது?????

நியாயமான கேள்வி.

ஆனால் இது பிரான்ஸ் இல்லையே அண்ணை. இலங்கை.

அரசு இயந்திரம் சிங்களவரான (?),  பொலிஸ் பக்கம் சாராமல் தமிழரான (?) வான் சாரதி பக்கம் சாய்வது கொஞ்சம்…புதிசு கண்ணா புதுசு.

2 hours ago, கிருபன் said:

வேன் சாரதி அப்பாவி மாதிரி தெரியவில்லை

ம்ம்ம்..

83 இல் தமிழரும் சிங்களவரும் அடித்து கொண்டார்கள் என யாரோ எழுதியது போல இருக்கு ஜி.

சுன்னாகத்தில், சிவிலில் நிக்கும் ஒரு பொலிஸ் கூட்டத்தின் மேல் - ஒரு சாதாரண வான் காரார் தானாக போய் கைவைத்திருப்பார் என நம்புகிறீர்களா ஜி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

வேன் சாரதி அப்பாவி மாதிரி தெரியவில்லை

தப்பியோட முனைந்தவர் என்பதை வைத்து சொல்கிறீர்களா அண்ணை? தன்னில் தவறில்லை என்பதால் பயணத்தை தொடர நினைத்திருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் மா அதிபர் வந்து சென்ற பின்னர் சுற்றறிக்கையை மீறிய பொலிஸார் - ஜோஸப் ஸ்டாலின்

image

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபர் வருகை தந்து சென்ற சில மணிநேரத்தில் இடம்பெற்ற அராஜகத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள், பொலிசாரின் செயல்பாடுகளை காணொளி பதிவு செய்து சமூக ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தினால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இது இவ்வாறு இருக்கையில்  பதில் பொலிஸ் மா அதிபர் சுன்னாகத்திற்கு வருகை தந்து புதிய பொலிஸ் நிலையத்தினை திறந்து வைத்துவிட்டு சென்று சில மணி நேரத்தில், அவரது சுற்றறிக்கையை மீறி அராஜகம் இடம்பெற்றுள்ளது.

 சுன்னாகம்பொலிஸ் நிலையத்தின் பெயர் எழுதப்பட்ட முச்சக்கர வண்டியில் வந்த பொலிசாரினால் தாக்குதல் நடாத்தப்பட்டவேளை, அந்த தாக்குதலை காணொளி பதிவு செய்த ஆசிரியரின் கைப்பேசியை பொலிஸார் பறித்து சென்றனர்.

பதில் பொலிஸ் மா அதிபரின் சுற்றறிக்கையின் பிரகாரம் அவர் இவ்வாறு காணொளி பதிவு செய்துள்ளார். இது இவ்வாறு இருக்கையிலேயே பொலிஸாரின் அராஜகம் இடம்பெற்றுள்ளது.. இதுவரை அந்த கைப்பேசி கொடுக்கப்படவுமில்லை.

இந்தப் பிரச்சனைக்கு நீதி வழங்கப்பட வேண்டும். ஆசிரியரது கைப்பேசி கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் இந்த சம்பவத்தை மேற்கொண்ட பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/198398

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

தப்பியோட முனைந்தவர் என்பதை வைத்து சொல்கிறீர்களா அண்ணை? தன்னில் தவறில்லை என்பதால் பயணத்தை தொடர நினைத்திருக்கலாம்.

விபத்து நடந்தால், அதில் ஒருவர் காயப்பட்டால், பொலிஸ்வரும்வரை காத்திருக்கவேண்டும். தப்பி ஓட முனைந்ததும் சிவில் பொலிஸுடன் சண்டைபோட்டதும் அப்பாவி எனக் காட்டவில்லை. 

சரியாக விசாரணை நடந்தால்தான் உண்மை தெரியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.