Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யுக்ரேன்- ரஷ்யா போர், அமெரிக்கா, புதின், டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, யுக்ரேன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழும் காட்சி
  • எழுதியவர், அலெக்ஸ் போய்ட்
  • பதவி, பிபிசி நியூஸ்

ரஷ்யா- யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்களை இரு நாடுகளும் நடத்தியுள்ளன.

மாஸ்கோவை நோக்கி வந்த சில ட்ரோன்கள் உட்பட ஆறு பிராந்தியங்களில் 84 யுக்ரேனிய ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மூன்று முக்கிய விமான நிலையங்களில் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

சனிக்கிழமை இரவு, யுக்ரேன் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் நோக்கி ரஷ்யா 145 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் யுக்ரேன் விமானப்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.

‘மாஸ்கோ மீதான மிகப்பெரிய தாக்குதல்’

மாஸ்கோ மீது யுக்ரேன் நடத்திய இந்தத் தாக்குதல் முயற்சி என்பது போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய தலைநகர் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும். மாஸ்கோ பிராந்திய ஆளுநரும் இதை ‘மிகப்பெரிய அளவிலான தாக்குதல்’ என்றே விவரித்தார்.

ரஷ்யாவின் ரமென்ஸ்கோய், கொலோம்னா மற்றும் டொமோடெடோவோ மாவட்டங்களில் பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாஸ்கோவின் தென்மேற்கில் உள்ள ரமென்ஸ்கோய் மாவட்டத்தில், ட்ரோன் பாகங்கள் விழுந்ததால் ஐந்து பேர் காயமடைந்தனர் மற்றும் நான்கு வீடுகள் தீப்பிடித்தன என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கு 34 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

கடந்த செப்டம்பரில், ரமென்ஸ்கோய் மீது நடந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு மே மாதம், மத்திய மாஸ்கோவில் கிரெம்ளின் அருகே இரண்டு ட்ரோன்கள் அழிக்கப்பட்டன.

யுக்ரேனில், ஒடேசா பிராந்தியத்தில் ட்ரோன் தாக்கியதில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்தனர். சில கட்டிடங்களில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதையும், அதனால் ஏற்பட்ட சேதங்களையும் புகைப்படங்கள் காட்டின.

 
யுக்ரேன்- ரஷ்யா போர், அமெரிக்கா, புதின், டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, தெற்கு யுக்ரேனின் ஒடேசாவில், ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள சேதங்கள்

இரானில் தயாரிக்கப்பட்ட 62 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக யுக்ரேன் விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும் 10 ட்ரோன்கள், யுக்ரேன் வான்வெளியில் இருந்து ரஷ்யா மற்றும் அண்டை நாடுகளான பெலாரஸ் மற்றும் மால்டோவாவை நோக்கிச் சென்றன என்றும் யுக்ரேன் விமானப்படை கூறியுள்ளது.

‘இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் வார்’ என்ற அமைப்பின் தரவுகளை பகுப்பாய்வு செய்த ஏ.எஃப்.பி செய்தி முகமை, ‘மார்ச் 2022-க்குப் பிறகு, ரஷ்யப் படைகள் அதிக நிலப்பரப்பைக் கைப்பற்றியதாக கடந்த அக்டோபரில் தகவல்கள் வெளியான நிலையில் இந்த ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன’ என்று கூறியுள்ளது.

ஆனால் பிபிசியிடம் பேசிய, பிரிட்டிஷ் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி சர் டோனி ராடகின், ‘போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யா அதன் மிக மோசமான உயிரிழப்புகளை சந்தித்தது கடந்த அக்டோபர் மாதத்தில் தான்’ என்றார்.

ரஷ்யப் படையில், அக்டோபர் மாதத்தில் ‘ஒவ்வொரு நாளும்’ சராசரியாக சுமார் 1,500 பேர் இறந்தனர் மற்றும் காயமடைந்தனர் என்றும் அவர் கூறினார்.

 

ரஷ்யா - யுக்ரேன் போரை டிரம்ப் எவ்வாறு அணுகுவார்?

யுக்ரேன்- ரஷ்யா போர், அமெரிக்கா, புதின், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்யா மீது தோல்வியைத் திணிக்க டிரம்ப் விரும்பவில்லை என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், ரஷ்யா - யுக்ரேன் போரை எவ்வாறு அணுகுவார் என்பது குறித்து தீவிரமான ஊகங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தில் ‘ஒரே நாளில் தன்னால் ரஷ்யா- யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்’ என்று தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் அவர் அதை எவ்வாறு செய்வார் என்பது குறித்த விவரங்களை வழங்கவில்லை.

டிரம்பின் முன்னாள் ஆலோசகர் பிரையன் லான்சா பிபிசியிடம் கூறுகையில், “வரவிருக்கும் புதிய அமெரிக்க நிர்வாகம், ரஷ்யாவிடம் இருந்து யுக்ரேன் பகுதிகளை திரும்பப் பெறுவதற்கு உதவுவதை விட, இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டுவதில் தான் கவனம் செலுத்தும்” என்றார்.

இதற்கு பதிலளித்த டிரம்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “பிரையன் லான்சா ‘டிரம்பின் பிரதிநிதி அல்ல’” என்று கூறி, இப்போதைக்கு இந்த விவகாரத்தில் டிரம்ப் ஏதும் கூறப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் அலுவலகத்தின் (கிரெம்ளின்) செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஞாயிறன்று அரசு ஊடகங்களில் பேசிய போது, ‘புதிய அமெரிக்க நிர்வாகத்திடம் இருந்து ரஷ்யாவிற்கு ‘சாதகமான’ சமிக்ஞைகள் வருவது’ குறித்து தெரிவித்தார்.

“டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமைதியை நிலைநாட்ட விரும்புவதைப் பற்றி தான் பேசினார், ரஷ்யா மீது தோல்வியைத் திணிக்க அவருக்கு விருப்பம் இல்லை” என்று டிமிட்ரி கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் பேசியுள்ளார். இந்த உரையாடல் சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக நம்பத்தகுந்த வட்டாரம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் உதவி இல்லையென்றால், யுக்ரேன் இந்தப் போரில் தோல்வியடையக் கூடும் என்று ஜெலன்ஸ்கி முன்பு கூறியிருந்தார். ரஷ்யாவுக்கு தங்களின் பிராந்தியத்தை விட்டுக்கொடுப்பதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

எவர் தான் அமெரிக்காவின் அதிபராக வந்தாலும், ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்காவின் சொல்லை ஏன் கேட்க வேண்டும்............... இது ஒரு அடிப்படைக் கேள்வி அல்லவா.

புடினின் நோக்கம் என்று ஒன்று இருக்கின்றது. அதை அடையாமல் அவர் ஓயப் போவதில்லை. ஆகக் குறைந்தது தன்னுடைய நோக்கத்தை அடைந்து விட்டேன் என்று அவர் சொல்லிக் கொள்ளும் வரை இந்தச் சண்டை நடந்து கொண்டேயிருக்கும். உக்ரேனுக்கு இது தங்கள் மண்ணை காப்பாற்றுவதற்கான ஒரு போராட்டம். இன்னும் நீண்ட தூரம் போகும், அமெரிக்கா என்ன தான் செய்தாலும், செய்யா விட்டாலும்..........

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

120 ஏவுகணைகள் 90 ஆளில்லா விமானங்கள் - உக்ரைனின் வலுசக்தி கட்டமைப்பின் மீது ரஸ்யா தாக்குதல்

image

உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பை இலக்குவைத்து ரஸ்யா கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ரஸ்யாவின் இந்த தாக்குதல் காரணமாக பொதுமக்களின் கட்டிடங்களும் தாக்கப்பட்டுள்ளன.

உக்ரைனின் அனைத்து பிராந்தியங்களின் மீதும் மேற்கொள்ளப்பட்ட பாரிய கூட்டு தாக்குதலின் போது 120 ஏவுகணைகளையும் 90 ஆளில்லா விமானங்களையும் ரஸ்யா பயன்படுத்தியது என தெரிவித்துள்ள  உக்ரைன் தனது நாட்டின் மேற்குபகுதிவரை ஏவுகணைகள் சென்றன என  குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனின் மிகப்பெரிய தனியார் வலுசக்தி நிறுவனம் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வலுச்சக்தி உட்கட்டமைப்பின் மீதான தாக்குதல் காரணமாக சில பகுதிகள் தொடர்ந்தும் மின்சாரம் அற்ற நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/199018

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஏராளன் said:

உக்ரைனின் அனைத்து பிராந்தியங்களின் மீதும் மேற்கொள்ளப்பட்ட பாரிய கூட்டு தாக்குதலின் போது 120 ஏவுகணைகளையும் 90 ஆளில்லா விமானங்களையும் ரஸ்யா பயன்படுத்தியது என தெரிவித்துள்ள  உக்ரைன் தனது நாட்டின் மேற்குபகுதிவரை ஏவுகணைகள் சென்றன என  குறிப்பிட்டுள்ளது.

ஆளில்லா விமானத்தை மொஸ்கோவரை அனுப்பி குண்டுவீச்சு நடத்தும் போதே சாத்துப்படி இருக்கு என்று யோசித்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஆளில்லா விமானத்தை மொஸ்கோவரை அனுப்பி குண்டுவீச்சு நடத்தும் போதே சாத்துப்படி இருக்கு என்று யோசித்தேன்.

ஜனவரி 20க்கு இடையில் போர் நிறுத்தங்கள் ஏற்படலாம் என பலர் கதைக்கின்றார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

ஜனவரி 20க்கு இடையில் போர் நிறுத்தங்கள் ஏற்படலாம் என பலர் கதைக்கின்றார்கள். 😂

உக்ரேன் ஜனாதிபதி போர் நிறுத்தத்தை விரும்பலையாமே?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

உக்ரேன் ஜனாதிபதி போர் நிறுத்தத்தை விரும்பலையாமே?

ர‌ம் கைகொடுக்காம‌ விட்டால் 

செல‌ன்ஸ்கி உக்கிரேனை விட்டு த‌ப்பி ஓடுவ‌து உறுதி................

 

மூன்று வ‌ருட‌ம் ஆக‌ போகுது ஒட்டு மொத்த‌ உல‌க‌மும் சேர்ந்து புட்டினை அசைக்க‌ முடிய‌ வில்லை

 

உக்கிரேனுக்கு யாழில் ஜிங் சாங் போட்ட‌ கூட்ட‌ம் இப்ப‌ அமைதியாகிட்டின‌ம்🙏......................

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

உக்ரேன் ஜனாதிபதி போர் நிறுத்தத்தை விரும்பலையாமே?

இப்பவும் ஜேர்மனிய தொலைக்காட்சியில் ஒரு அரசியல் கலந்துரையாடல் பார்த்தேன். அதனுள் உள்ள சாரம்சம் ஜேர்மனிக்கு உக்ரேன் தேவை. அதே தேவை அமெரிக்காவுக்கும் உண்டு.
எதற்கும் அடுத்த வருடம் ஜேர்மனியில் ஒரு ஆட்சி மாற்றம் வரும். அப்போது பொருளாதார கொள்கை விடயத்தில் ரம்ப் சார்பானவர் ஆட்சிக்கு வருவார்.  அதாவது ரம்ப் பதவியேற்க இங்கே ஜேர்மனியில் ஆட்சியின் கைகள் மாறும். அதன் பின் பல சாத்தியங்கள் உண்டு.

உக்ரேனும் தோற்ற மாதிரி இருக்காது. ரஷ்யாவும் தோற்ற மாதிரி இருக்காது. நேட்டோவின் நிலைமை கவலைக்கிடம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இப்பவும் ஜேர்மனிய தொலைக்காட்சியில் ஒரு அரசியல் கலந்துரையாடல் பார்த்தேன். அதனுள் உள்ள சாரம்சம் ஜேர்மனிக்கு உக்ரேன் தேவை. அதே தேவை அமெரிக்காவுக்கும் உண்டு.
எதற்கும் அடுத்த வருடம் ஜேர்மனியில் ஒரு ஆட்சி மாற்றம் வரும். அப்போது பொருளாதார கொள்கை விடயத்தில் ரம்ப் சார்பானவர் ஆட்சிக்கு வருவார்.  அதாவது ரம்ப் பதவியேற்க இங்கே ஜேர்மனியில் ஆட்சியின் கைகள் மாறும். அதன் பின் பல சாத்தியங்கள் உண்டு.

உக்ரேனும் தோற்ற மாதிரி இருக்காது. ரஷ்யாவும் தோற்ற மாதிரி இருக்காது. நேட்டோவின் நிலைமை கவலைக்கிடம்.

அடுத்த மாதம் ஜேர்மன் ஆட்டம் காண போகுதாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

அடுத்த மாதம் ஜேர்மன் ஆட்டம் காண போகுதாமே?

இப்பவே பயங்கர ஆட்டம். இது இன்னும் வெளியே தெரியவில்லை. ஜேர்மனி ஓடின வேகத்தில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கு......வேகம் வருகிற வருடம் குறையும் என எதிர்பார்க்கலாம். பெரிய பெரிய நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றன. பல  நிறுவனங்கள்  திவாலாகி கொண்டு போகின்றது. ஏற்கனவே பொருளாதார பிரச்சனைகள். இந்த நிலையில் உக்ரேனுக்கு  மிண்டு கொடுக்க வெளிக்கிட்டு சொல்லணாதுயரங்கள். அதை விட ரஷ்ய எரிபொருள் தடை இன்னுமொரு பெரிய இடி.
ஜேர்மனி தொழிற்சாலை நாடு. அதற்கு காட்டாறு போல் 24மணி நேரமும் எரிவாயு வேண்டும்.அற்கு மலிவான ரஷ்ய எரிவாயு அவசியமாக இருந்தது. இன்று அது இல்லை. இருமடங்கு விலையுடன் நோர்வேயிடமும் அமெரிக்காவிடவும் இருந்து வரவேண்டிய அவசியம். அது கொம்பனிக்கு கட்டுப்படியாகவில்லை. இதனால் வேலை இழப்புகளும் அதிகமாகிக்கொண்டே போகின்றது.

அதை விட ஜேர்மனியை நோக்கி அளவிற்கு அதிகமாக அகதிகள் வருகையும் இவர்களுக்கு பெரும் சுமையும் தலையிடியுமாகி விட்டது. இந்த அகதிகள் விடயத்தில் ரஷ்ய அதிபரும் துருக்கி அதிபரும் பக்காவாக செயல்படுகின்றார்கள் என பல இடங்களில் கேள்விப்பட்டுள்ளேன்.

இத்துடன் என் அறுவைய முடித்துக்கொள்கின்றேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

 

உக்ரேனும் தோற்ற மாதிரி இருக்காது. ரஷ்யாவும் தோற்ற மாதிரி இருக்காது. நேட்டோவின் நிலைமை கவலைக்கிடம்.

😁.................

டென்மார்க்கின் நில‌மையும் க‌வ‌லைக் கிட‌ம் தாத்தா

என்ன‌ கூத்து போட்டா எங்க‌ட‌ நாட்டு பிர‌மினிஸ்த‌ர்😁..................... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

😁.................

டென்மார்க்கின் நில‌மையும் க‌வ‌லைக் கிட‌ம் தாத்தா

என்ன‌ கூத்து போட்டா எங்க‌ட‌ நாட்டு பிர‌மினிஸ்த‌ர்😁..................... 

ஐரோப்பிய யூனியனில் உள்ள ஒரு சில நாடுகள்  காலமாற்றத்திற்கு ஏற்ப தங்களை சுதாரிக்க முடியாமல் திணறி தள்ளாடுகின்றன. 😀

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய யூனியனில் உள்ள ஒரு சில நாடுகள்  காலமாற்றத்திற்கு ஏற்ப தங்களை சுதாரிக்க முடியாமல் திணறி தள்ளாடுகின்றன. 😀

நூற்றுக்கு /100 உண்மை தாத்தா👍...............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அடுத்த மாதம் ஜேர்மன் ஆட்டம் காண போகுதாமே?

 

1 hour ago, குமாரசாமி said:

இப்பவும் ஜேர்மனிய தொலைக்காட்சியில் ஒரு அரசியல் கலந்துரையாடல் பார்த்தேன். அதனுள் உள்ள சாரம்சம் ஜேர்மனிக்கு உக்ரேன் தேவை. அதே தேவை அமெரிக்காவுக்கும் உண்டு.
எதற்கும் அடுத்த வருடம் ஜேர்மனியில் ஒரு ஆட்சி மாற்றம் வரும். அப்போது பொருளாதார கொள்கை விடயத்தில் ரம்ப் சார்பானவர் ஆட்சிக்கு வருவார்.  அதாவது ரம்ப் பதவியேற்க இங்கே ஜேர்மனியில் ஆட்சியின் கைகள் மாறும். அதன் பின் பல சாத்தியங்கள் உண்டு.

உக்ரேனும் தோற்ற மாதிரி இருக்காது. ரஷ்யாவும் தோற்ற மாதிரி இருக்காது. நேட்டோவின் நிலைமை கவலைக்கிடம்.

 

1 hour ago, குமாரசாமி said:

இப்பவே பயங்கர ஆட்டம். இது இன்னும் வெளியே தெரியவில்லை. ஜேர்மனி ஓடின வேகத்தில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கு......வேகம் வருகிற வருடம் குறையும் என எதிர்பார்க்கலாம். பெரிய பெரிய நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றன. பல  நிறுவனங்கள்  திவாலாகி கொண்டு போகின்றது. ஏற்கனவே பொருளாதார பிரச்சனைகள். இந்த நிலையில் உக்ரேனுக்கு  மிண்டு கொடுக்க வெளிக்கிட்டு சொல்லணாதுயரங்கள். அதை விட ரஷ்ய எரிபொருள் தடை இன்னுமொரு பெரிய இடி.
ஜேர்மனி தொழிற்சாலை நாடு. அதற்கு காட்டாறு போல் 24மணி நேரமும் எரிவாயு வேண்டும்.அற்கு மலிவான ரஷ்ய எரிவாயு அவசியமாக இருந்தது. இன்று அது இல்லை. இருமடங்கு விலையுடன் நோர்வேயிடமும் அமெரிக்காவிடவும் இருந்து வரவேண்டிய அவசியம். அது கொம்பனிக்கு கட்டுப்படியாகவில்லை. இதனால் வேலை இழப்புகளும் அதிகமாகிக்கொண்டே போகின்றது.

அதை விட ஜேர்மனியை நோக்கி அளவிற்கு அதிகமாக அகதிகள் வருகையும் இவர்களுக்கு பெரும் சுமையும் தலையிடியுமாகி விட்டது. இந்த அகதிகள் விடயத்தில் ரஷ்ய அதிபரும் துருக்கி அதிபரும் பக்காவாக செயல்படுகின்றார்கள் என பல இடங்களில் கேள்விப்பட்டுள்ளேன்.

இத்துடன் என் அறுவைய முடித்துக்கொள்கின்றேன். 😂

ஐரோப்பிய அரசாங்கங்கள் புடாபெஸ்ட் உச்சிமாநாட்டில் ட்ரம்ப் தொடர்பான உறவுகள் குறித்து விவாதிக்கின்றன

 
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதன்முறையாக வியாழக்கிழமை ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் (EPC - European Political Community) தலைவர்கள் புடாபெஸ்டில் ஒன்றுகூடினர். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் முறைசாரா உச்சிமாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டங்கள், ட்ரம்பின் வெற்றியால் ஏற்பட்ட அரசியல் பூகம்பத்திற்கு ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் முதல் எதிர்வினையாக அமைந்தன. குறிப்பிடத்தக்க வகையில், ட்ரம்ப் 2021 ஜனவரி 6 அன்று 2020 தேர்தல் முடிவை மாற்றும் நோக்கில் தீவிர வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை மேற்கொண்டதோடு, அமெரிக்காவில் தேர்தல் முறையையே முடிவுக்குக் கொண்டுவருவது பற்றியும் பேசியிருந்தார்.

cbb791e4-2cb6-43a7-a83d-557278822d0c?ren
இடமிருந்து, போர்ச்சுகலின் பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோ (Luis Montenegro), ஜேர்மனியின் சான்சிலர் ஓலாஃப் ஷொல்ஸ் (Olaf Scholz), குரோஷியாவின் பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் (Andrej Plenkovic) மற்றும் பின்லாந்தின் பிரதமர் பெட்டேரி ஓர்போ (Petteri Orpo) ஆகியோர் நவம்பர் 8, 2024 வெள்ளிக்கிழமை, புடாபெஸ்டில் உள்ள புஸ்காஸ் அரங்கில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் போது ஒரு முழுமையான அமர்வில் கலந்து கொள்கிறார்கள். [AP Photo/Denes Erdos]

புடாபெஸ்ட் உச்சிமாநாடானது ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் பாசிச போக்கிற்கான எச்சரிக்கையாக கருதப்பட வேண்டும். இந்த மாநாடு, பில்லியனர் பாசிசவாதி ட்ரம்ப் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தொடரும் வரை அவருடன் இணைந்து செயல்பட ஐரோப்பிய தலைவர்கள் விரும்புவதை சமிக்ஞை செய்தன. அமெரிக்காவுடனான வளர்ந்து வரும் ஏகாதிபத்தியங்களிளுக்கு இடையிலான பதட்டங்களை, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகள் மீது கடுமையான வரிகளை விதிக்கும் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை, தொழிலாளர் வர்க்கத்தின் வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் மீதான கடும் தாக்குதல்கள் மூலம் தீர்க்க அவர்கள் முயல்கின்றனர்.

அப்பட்டமாக மக்கள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அதிவலது ஆட்சிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் அணிதிரண்டு வருகின்ற நிலையில், வர்க்க போராட்டத்தின் ஒரு வெடிப்பார்ந்த தீவிரப்படலே இயக்கத்தில் வைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு இடையே ஆழமாக வேரூன்றிய மற்றும் இறுதியில் கையாளவியலாத பதட்டங்கள் நிலவுகின்ற அதேவேளையில், ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் ட்ரம்புடன் சேர்ந்து வெளிநாட்டில் ஏகாதிபத்தியப் போரையும் உள்நாட்டில் வர்க்கப் போரையும் நடத்துவதன் மூலமாக அவற்றைத் தீர்க்க நம்புகிறது.

ஒரு சமீபத்திய பொலிட்டிகோ (Politico) கட்டுரை குறிப்பிட்டது, “ட்ரம்ப் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் ஆழமாக மதிப்பிழந்துள்ளார், அவரை அரவணைத்துப் பெறுவதற்கு அங்கே ஒரு சில அரசியல் புள்ளிகளே உள்ளன.” அமெரிக்க தேர்தல்களில் பிரெஞ்சு மக்களில் வெறும் 13 சதவீதத்தினர் மட்டுமே ட்ரம்பை ஆதரித்ததாக ஒரு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. எவ்வாறிருப்பினும், ஒரு பாசிசவாத அமெரிக்க ஜனாதிபதி, “ஒரு அனுகூலமான அதிர்ச்சியாக இருப்பார்... தொற்றுநோய் அல்லது உக்ரேன் போரைத் தொடரும் எரிசக்தி நெருக்கடி போன்றவைகளாகும்” என்று வாதிட்ட அநாமதேய ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரிகளை பொலிடிகோ மேற்கோள் காட்டியது. மற்றொருவர் கூறுகையில், ட்ரம்ப் “கசப்பான மருந்தை” வழங்குவார் என்றும், இராணுவ செலவினங்களை அதிகரிப்பதை நியாயப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உதவுவார் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், உச்சிமாநாட்டின் வடிவமே நேட்டோ ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான தீவிர புவிசார் அரசியல் பதட்டங்களை வெளிப்படுத்தியது. உக்ரேன் போர் தொடங்கிய பின்னர், 2022 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் EPC-ஐ முதன்முதலில் முன்மொழிந்தார். இது ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகள், பிரிட்டன், துருக்கி, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கான ஒரு மன்றமாக, ரஷ்யாவை தனிமைப்படுத்த, அதனுடன் மோதல் ஏற்படுத்த மற்றும் இறுதியில் அதனை பலவீனப்படுத்த திட்டங்களை விவாதிக்க அமைக்கப்பட்டது.

ட்ரம்ப்பின் வெற்றி ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் (EPC) அடித்தளத்தை உலுக்கியுள்ளது. உக்ரேன் படைகள் முழு முன்னணி அரங்குகளிலும் பின்வாங்கி, நாட்டிற்குள் வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிலையில், ட்ரம்ப் இப்போரை “தோல்வியடைந்ததாக” குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இப்போரை “தூண்டியதாக” குற்றம்சாட்டி, வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் போருக்காக செலவிட்ட நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைக் குறித்து விமர்சித்துள்ளார். அமெரிக்காவுக்கு “பங்களிப்பு செய்யாத” ஐரோப்பிய நேட்டோ நாடுகளை ரஷ்யா “விரும்பியபடி நடத்த” அனுமதிப்பதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.

ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளே ஜேர்மன் அரசாங்கம் கவிழ்ந்தது, EPC உச்சிமாநாடானது உத்தியோகபூர்வமாக முடிவடைந்த பின்னர்தான் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ் வியாழனன்று இரவு உணவுக்கு வந்தார். பேர்லினில் நடந்த அரசாங்க பேச்சுவார்த்தைகள் ஷொல்ஸை முழு EPC கூட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து தடுத்ததாக பேர்லின் தெரிவித்தது.

ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சிமாநாட்டில், மக்ரோன் ட்ரம்பின் வெற்றியை ஏற்றுக்கொண்டார், அவரது ஆட்சி “சட்டபூர்வமானது” என்றும் அவரது கொள்கைகள் “நல்லவை” என்றும் குறிப்பிட்டார். மக்ரோன் கூறியதாவது: “ஐரோப்பிய ஒன்றியத்தில் நமது பங்கு டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிப்பதல்ல, அது நல்லதா கெட்டதா என்பதை மதிப்பிடுவதும் அல்ல. அவர் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் அமெரிக்க மக்களின் நலன்களைப் பாதுகாப்பார், இது நியாயமானது மற்றும் நல்லதுதான்.”

ட்ரம்பின் கீழும் கூட உக்ரேனில் ரஷ்யாவுடனான போர் தொடர்வதை உறுதிப்படுத்துவதே ஐரோப்பாவின் முக்கிய நலனாகும் என்று மக்ரோன் வாதிட்டார்: “ரஷ்யா இந்த போரில் வெல்லக்கூடாது என்பதே எங்கள் நலன்கள்... ஏனென்றால் ரஷ்யா வெற்றி பெற்றால், ‘நீங்கள் விரிவாக்கவாதியாக இருக்க முடியும்’ என்று நாம் கூறும் ஒரு ஏகாதிபத்திய சக்தி நமது எல்லைகளில் இருக்கிறது என்பதே இதன் அர்த்தமாகும்.”

அதேநேரத்தில், மக்ரோன் நேட்டோவுக்குள்ளான பிளவுகளைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவில் இருந்து ஒரு தனியான ஐரோப்பிய ஒன்றிய இராணுவ ஸ்தாபகம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறைக்கு அழைப்பு விடுத்தார். அவர் இவ்வாறு கூறினார், “ஐரோப்பியர்களாகிய நாம் நமது பாதுகாப்பை அமெரிக்கர்களிடம் எக்காலத்திற்கும் ஒப்படைக்க வேண்டியதில்லை. நாங்கள் இப்போது பாதுகாப்பு தீர்வுகளை வழங்குபவர்கள் என்ற செய்தியை அனுப்புவது முக்கியம் என்று நான் நம்புகிறேன் ... இந்த வகை தொழில்துறை உற்பத்தியில் ஐரோப்பிய முன்னுரிமைக் கொள்கையை வெளிப்படையாக அறிவிப்பது.”

மக்ரோன் இவ்வாறு கேள்வி எழுப்பினார்: “மற்றவர்களால் எழுதப்பட்ட வரலாற்றை - விளாடிமீர் புட்டின் தொடங்கிய போர்கள், அமெரிக்கத் தேர்தல்கள், சீனாவின் முடிவுகள் - நாம் வெறுமனே படிக்க விரும்புகிறோமா? அல்லது நாமே வரலாற்றை உருவாக்க விரும்புகிறோமா?” ஐரோப்பிய அரசியல் சமூகம் (EPC) ஒரு நம்பகமான, சுயாதீனமான இராணுவ சக்தியாக உருவெடுக்க முடியும் என மக்ரோன் வலியுறுத்தினார்: “வரலாறு, நலன்கள் மற்றும் விழுமியங்களால் இவ்வளவு ஒன்றிணைந்த 700 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வேறு எந்தச் சந்தையும் இல்லை, இந்த மேஜையைச் சுற்றியுள்ள நம்மைத் தவிர.”

இபிசி உச்சி மாநாட்டில் ஷொல்ஸ் பேசவில்லை என்றாலும், ஜேர்மன் முதலாளித்துவத்தின் சக்திவாய்ந்த கன்னைகளும் ரஷ்யா மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக ட்ரம்புடன் கூட்டணி வைக்கும் அதேபோன்றதொரு கொள்கையை முன்வைத்து வருகின்றன. மலிவான ரஷ்ய எரிவாயுவுக்கு பதிலாக அமெரிக்காவில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை அதிக விலைக்கு வாங்குவதன் மூலமாகவும், மற்றும் ரஷ்யாவுடனான போருக்காக பெரும் அளவிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதன் மூலமாகவும், ஐரோப்பாவுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதன் மூலமாக ட்ரம்பின் கோபத்தைத் தணிக்க பிரான்க்பியூர்ட்டர் அல்லகேமேன் ஸிட்டுங் (FAZ - Frankfurter Allgemeine Zeitung) அழைப்பு விடுத்தது.

அமெரிக்க வர்த்தக தடையாணைகளுக்கு ஐரோப்பாவின் பலவீனத்தை ஒப்புக் கொண்ட அதேவேளையில், FAZ பத்திரிகை இவ்வாறு கூறியது: “இருந்தும் ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பற்றதாக இல்லை. [அமெரிக்க] திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, விவசாய பொருட்கள் அல்லது ஆயுதங்களை வாங்குவதன் மூலம் வர்த்தக உபரியைக் குறைக்க அது முயற்சிக்கலாம். ட்ரம்பைப் பொறுத்த வரையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான மற்றும் குறிப்பாக ஜேர்மனியுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை என்பது ஒரு வெறித்தனமாக உள்ளது. ஆனால் அவரது மிக முக்கியமான பொருளாதார ஆலோசகர்களும் மிகவும் சீரான வர்த்தகத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அமெரிக்க இறக்குமதி வரிவிதிப்புகளை விட சற்றே அதிகமான சுங்கவரிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் குறைக்கக்கூடும்.”

இதுபோன்ற சலுகைகளைக் கொண்டு ட்ரம்ப் தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ள முடிவெடுத்தாலும் கூட, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இந்த கொள்கை இரண்டு வெளிப்படையான தடைகளை முகங்கொடுக்கிறது.

முதலாவதாக, ஐரோப்பா மீதான ட்ரம்பின் பொருளாதார கோரிக்கைகளின் சுமைகளை தொழிலாளர்களின் தோள்களில் சுமக்கச் செய்வதன் மூலமாக ட்ரம்புடன் ஒரு கூட்டணியைப் பின்தொடர்வதானது, பெரிய, அணுஆயுதமேந்திய இராணுவ சக்திகளுடனான போர்களில் ஐரோப்பாவின் ஈடுபாட்டை ஆழப்படுத்தும். உலக வரைபடத்தில் இருந்து ஈரானை “துடைத்தெறிவது” உட்பட, மத்திய கிழக்கில் போரைத் தீவிரப்படுத்துவதற்கான திட்டங்களை ட்ரம்ப் தெளிவாக சமிக்ஞை செய்துள்ளார்.

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர விரைவாக பேச்சுவார்த்தை நடத்த தனது “ஒப்பந்தத்தின் கலை” தன்னை அனுமதிக்கும் என்று ட்ரம்ப் கூறினாலும், அவரது கூற்றில் நம்பகத்தன்மை இல்லை. சீன இறக்குமதிகள் மீது பாரிய சுங்கவரிகளை விதிக்க ட்ரம்ப் அச்சுறுத்தி வருகிறார், இது சீன தொழில்துறை மற்றும் அமெரிக்க தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை சீரழிக்கும். ரஷ்யாவின் எல்லைகளில் மூலோபாயரீதியில் அமைந்துள்ள முக்கிய ரஷ்ய கூட்டாளிகளை நசுக்குவதற்கும் ட்ரம்ப் சூளுரைத்து வருகின்ற நிலைமைகளின் கீழ், ட்ரம்ப் அவற்றை வழங்கினாலும், மாஸ்கோவுக்கு அவரது சமாதான முன்மொழிவுகளை நம்புவதற்கு எந்த காரணமும் இருக்காது.

ட்ரம்பின் தேர்தல் வெற்றி இரவில் மாஸ்கோவோ பெய்ஜிங்கோ அவரை அழைத்து வாழ்த்து தெரிவிக்கவில்லை. அன்றைய தினம், முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வெடேவ் கூறுகையில், ட்ரம்பால் போரை முடிவுக்குக் கொண்டுவர இயலாது என்றும், அவர் முயன்றால் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியைப் போல படுகொலை செய்யப்படலாம் என்றும் தெரிவித்தார்: “’நான் ஒரு ஒப்பந்தத்தை முன்வைப்பேன்’ மற்றும் ‘எனக்கு சிறந்த உறவு உள்ளது’ போன்ற வெற்று வார்த்தைகளை கூறும் சோர்வடைந்த ட்ரம்ப்பும் அமைப்புமுறையின் அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டியிருக்கும். அவரால் போரை நிறுத்த முடியாது. ஒரு நாளில் அல்ல, மூன்று நாட்களில் அல்ல, மூன்று மாதங்களில் கூட அல்ல. அவர் உண்மையிலேயே முயற்சித்தால், அவர் புதிய JFK ஆக மாறக்கூடும்.”

இரண்டாவதாக, இராணுவ தீவிரப்பாடு உள்நாட்டில் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை முகங்கொடுக்கிறது, ஏனென்றால் அது தொழிலாளர்களின் இழப்பில் நிதியளிக்கப்பட உள்ளது. ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ சேவையை குறைக்க தயாரிப்பு செய்து வரும் செலவுக் குறைப்பு ஆணையத்தின் தலைவராக உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை நியமிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். பிரான்சின் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 112 சதவீதமாகவும், அமெரிக்க கடன் 122 சதவீதமாகவும், இத்தாலியின் கடன் 140 சதவீதமாகவும் உள்ள நிலையில், பல தசாப்த கால போர்கள் மற்றும் வங்கி பிணையெடுப்புகளின் ஒட்டுமொத்த நிதியத் தாக்கத்தின் கீழ் தேசிய அரசாங்கங்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஐரோப்பிய போர் திட்டங்களுக்கும் காட்டுமிராண்டித்தனமான சமூக தாக்குதல்களும் அவசியப்படுகின்றன.

வோல்ஸ்வாகனில் (Volkswagen) மலைப்பூட்டும் வகையில் 30,000 வேலை வெட்டுக்கள் மற்றும் பெல்ஜியத்தில் அவுடி (Audi) உற்பத்தியை நிறுத்துவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர், ஐரோப்பியத் தொழில்துறை முழுவதிலும் பாரிய பணிநீக்கங்கள் நடந்து வருகின்றன. இந்த வாரம் பிரான்சில் இன்னும் ஆயிரக்கணக்கான வேலை வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டன. Michelin இல் 3,700 வேலை வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டன. இதில் Cholet, Vannes ஆலைகள் மூடப்பட்டதும், Auchan பல்பொருள் அங்காடித் தொடரில் 2,400 வெட்டுக்களும் அடங்கும்.

பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள அரசாங்கங்கள் சமூக வேலைத்திட்டங்களில் இருந்து பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை வெட்டுவதற்காக சிக்கன வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு தயாரிப்பு செய்து வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியமானது இத்திட்டங்களை மூடிய கதவுகளுக்குப் பின்னால் தீவிரமாக விவாதித்து வருகிறது. “ஒரு புதிய புவிசார் அரசியல் யதார்த்தத்திற்கு” மத்தியில், அது “ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்க உறவுகள்” மீதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் “போட்டித்தன்மை மீதும்” ஒரு மூலோபாய விவாதத்தை நடத்தும் என்று புடாபெஸ்டில் வெள்ளிக்கிழமை உச்சிமாநாட்டின் திட்டநிரல் வெற்றுத்தனமாக குறிப்பிட்டது. மேலதிக சுதந்திர-சந்தை சீர்திருத்தங்களுக்கும், ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புத் தொழில்துறையைப் பலப்படுத்துவதற்கும், மற்றும் வணிக நடவடிக்கைகளைப் பாதிக்கும் நெறிமுறைகளைக் குறைப்பதற்கும் அழைப்புவிடுத்து, “புதிய ஐரோப்பிய போட்டித்தன்மை உடன்படிக்கை மீதான புடாபெஸ்ட் பிரகடனம்” என்ற சுருக்கமாக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு அறிக்கையை அது ஏற்றுக்கொண்டது.

இந்த நடவடிக்கைகள், பாதுகாப்பு செலவினங்களில் 100 பில்லியன் யூரோ அதிகரிப்புக்கு நிதியாதாரம் திரட்டுவதற்காக ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பிரான்சில் கடந்த ஆண்டு நடந்த வேலைநிறுத்தங்களைப் போலவே, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திடம் இருந்து ஆழமான எதிர்ப்பை முகங்கொடுக்கும். ஏகாதிபத்திய போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அதிவலது ஆட்சிக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதே முக்கிய பிரச்சினையாகும். அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, சர்வதேச சோசலிசப் புரட்சியின் முன்னோக்கில் தொடுக்கப்பட்ட அட்லாண்டிக்கின் இருபுறமும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் போராட்டம் அவசியமாகும்.

https://www.wsws.org/ta/articles/2024/11/12/pjrc-n12.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.