Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்கின்றனர்.

ஹரிணி அமரசூரிய-(பிரதமர்) – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்

விஜித ஹேரத்-வெளிநாட்டு அலுவல்கள்,வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை

சஞ்சன அபேரத்ன -பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்

ஹர்ஷண நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு

சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் விவகாரம்

கே,டி.லால்காந்த -விவசாயம் ,கால்நடைகள்,காணி மற்றும் நீர்ப்பாசனம்

https://thinakkural.lk/article/312253

  • Replies 68
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம்!

image
 
இலங்கையின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

https://www.virakesari.lk/article/199037

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி பதவிப் பிரமாணம்

image
 
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சராக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18)  காலை இடம்பெற்றது.

https://www.virakesari.lk/article/199039

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சராக விஜித ஹேரத் பதவிப் பிரமாணம்

image
 
வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சராக விஜித ஹேரத் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18)  காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199040

அரச நிர்வாகம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பேராசிரியர் சந்தன அபேரத்ன பதவிப் பிரமாணம்

image
 
அரச நிர்வாகம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பேராசிரியர் சந்தன அபேரத்ன ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18)  காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199041

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார பதவிப்பிரமாணம் 

image
 
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18)  காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199042

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவிப் பிரமாணம்

image
 
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199043

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நகர அபிவிருத்தி, கட்டுமானத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவிப் பிரமாணம்

image
 
நகர அபிவிருத்தி, கட்டுமானத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சராக  அநுர கருணாதிலக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18)  காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199044

கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் பதவிப் பிரமாணம்

image
 
கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199045

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பேராசிரியர் உபாலி பன்னிலகே பதவிப்பிரமாணம்

image
 
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பேராசிரியர் உபாலி பன்னிலகே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199046

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்தநெத்தி பதவிப் பிரமாணம்

image
 
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்தநெத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199047

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜேபால பதவிப் பிரமாணம்

image
 
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜேபால ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199048

போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பிமல் ரத்நாயக்க பதவிப் பிரமாணம்

image
 
போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18)  காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199049

புத்தசாசனம், மத  மற்றும் கலை ,கலாசார விவகாரங்கள் அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பதவிப் பிரமாணம்

image
 
புத்தசாசனம், மத  மற்றும் கலை, கலாசார விவகாரங்கள் அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199050

  • கருத்துக்கள உறவுகள்
Posted

chanra-segar.jpg?resize=521,293&ssl=1

புதிய அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சராக ‘ராமலிங்கம் சந்திரசேகர்‘ பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின் கடற்றொழில் மற்றும் நீரியியல் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர்  பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

https://athavannews.com/2024/1408907

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பதவிப் பிரமாணம்

image
 
சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199051

விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சராக கே.டி. லால்காந்த பதவிப் பிரமாணம் !

image
 
விவசாயம்,கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சராக கே.டி. லால்காந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199052

பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக சமந்த வித்யாரத்ன பதவிப் பிரமாணம்

image
 
பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக சமந்த வித்யாரத்ன ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199054

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே பதவிப்பிரமாணம்

image
 
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199058

வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க பதவிப் பிரமாணம்

image
 
வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/199059

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டு தமிழ் அமைச்சர்கள். 
முஸ்லீம்கள் அமைச்சரவையில் உள்ளடக்கப் படவில்லைப் போலுள்ளது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டு தமிழ் அமைச்சர்கள். 
முஸ்லீம்கள் அமைச்சரவையில் உள்ளடக்கப் படவில்லைப் போலுள்ளது. 

70 ஆம் ஆண்டின் பின்பு முஸ்லீம்களுக்கு க‌பினட் அந்தஸ்து கொடுக்காத  அமைச்சரவை இதுவாக இருக்குமோ?வருகின்ற வெள்ளிக்கிழமி ஜும்மா தொழுகையின் பின் இருக்கு அனுராவுக்கு 
அதுசரி யாழ்ப்பாணீஸுக்கு எந்த அமைச்சும் இல்லை போல்...
பிரதி அமைச்சர் பதவி கொடுப்பினம் போல ...மீன் பிடி பிரதி அமைச்சர் சில நேரம் கொடுப்பினம்...சுகாதார துறை பிர்தி அமைச்சு இவைய்ளுக்கு கிடைக்கும்...தோழர் யாழ்ப்பாணிசை  கை  விடமாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதிய அமைச்சரவை விபரம் - நேரலை

anura-4.jpg

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.

அதற்கமைய;

1. ஹரிணி அமரசூரிய - (பிரதமர்) – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்

2. விஜித ஹேரத் - வெளிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு,சுற்றுலாத்துறை

3. சஞ்சன அபேரத்ன - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்

4. ஹர்ஷண நாணயக்கார - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு

5. சரோஜா சாவித்திரி போல்ராஜ் - மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் விவகாரம்

6. கே,டி.லால்காந்த - விவசாயம், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசனம்

7. அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு

8. ராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்

9. உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை

10. சுனில் ஹந்துன் நெத்தி - கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

11. ஆனந்த விஜயபால - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

12. பிமல் ரத்நாயக்க - போக்குவரத்து நெடுஞ்சாலைகள்

13. ஹினிதும சுனில் செனவி – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்

14. நளிந்த ஜயதிஸ்ஸ - சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு

15. சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு

16. சுனில் குமார கமகே - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை

17. வசந்த சமரசிங்க – வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

18. கிருஷாந்த சில்வா அபேசேன – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்

19. அணில் ஜயசுந்தர பெர்னாண்டோ - தொழில் அமைச்சர்

20. குமார ஜெயக்கொடி - வலுசக்தி அமைச்சர்

21. டாக்டர் தம்மிக்க பட்டபெந்தி -  சுற்றாடல் அமைச்சர்

https://thinakkural.lk/article/312253

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி! புதிய அமைச்சர்களின் விபரம் வருமாறு!

image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன் 21 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பாதுகாப்பு, நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி,  டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியன ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவின் கீழ் காணப்படும் அதேவேளை, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுகள் காணப்படுகின்றன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.

புதிய அமைச்சரவை 21 பேருக்கு மட்டுப்படுத்தப்படுவதோடு  பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி,  டிஜிட்டல் பொருளாதார ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதியின்   கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.   

புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள்  பின்வருமாறு.

01. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க: பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி,  டிஜிட்டல் பொருளாதார  அமைச்சர்

02. கலாநிதி ஹரிணி அமரசூரிய: பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்

03. விஜித ஹேரத் : வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்

04. பேராசிரியர் சந்தன அபேரத்ன : பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

05. சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார : நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் 

06. சரோஜா சாவித்ரி போல்ராஜ் : மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் 

07. கே.டி லால் காந்த : விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்

08. அநுர கருணாதிலக : நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் 

09. ராமலிங்கம் சந்திரசேகர் : கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்

10. பேராசிரியர் உபாலி பன்னிலகே : கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்

11. சுனில் ஹந்துன்னெத்தி : கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்

12. ஆனந்த விஜேபால : பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்

13. பிமல் ரத்னாயக்க : போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர்

14. பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி : புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

15. வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ : சுகாதார மற்றும்  வெகுஜன ஊடக அமைச்சர்

16. சமந்த வித்யாரத்ன : பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்

17. சுனில் குமார கமகே : இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

18. வசந்த சமரசிங்க : வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

19. பேராசிரியர் கிரிசாந்த அபேசேன : விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர்

20. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ : தொழில் அமைச்சர்

21. பொறியியலாளர் குமார ஜயகொடி: வலுசக்தி அமைச்சர்

22. வைத்தியர் தம்மிக பட்டபெந்தி: சுற்றாடல் அமைச்சர்

இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.

462645499_534117959505532_11237294770572

462554477_1446006363454422_2391970378370

https://www.virakesari.lk/article/199062

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன அமைச்சரவை நீளுது. இவையும் சக்கடத்தார் ஏறின குதிரையிலதான் சவாரி போல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

கடற்றொழில் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தமிழில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி அநுரவின் அமைச்சரவையில் இரண்டு தமிழ் அமைச்சர்கள்!

ஜனாதிபதி அநுரவின் அமைச்சரவையில் இரண்டு தமிழ் அமைச்சர்கள்!

இலங்கையின் புதிய அமைச்சரவையில்  இன்று இரண்டு தமிழ் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) மற்றும், சரோஜினி சாவித்திரி போல்ராஜ் ஆகியோரே  இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில்  கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகரும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார  அமைச்சராக சரோஜி சாவித்திரி போல்ராஜும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகவும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவான நிலையில் மொத்தமாக 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1408957

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னாள் டக்ளசின் மீன்பிடி  அமைச்சுப் பதவி... 
தற்போது ராமலிங்கம் சந்திரசேகருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

கேரள கஞ்சா வாற வழியை பிடிக்க போட்ட பொறி போல் உள்ளது. 
டக்ளசின் வியாபாரம் எல்லாம் அம்பிடப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த அனுபவமில்லாத அமைச்சர்களுக்கு செயலாளர்கள் எப்படி இருப்பார்கள்?

அவர்களும் புதிது என்றால் எல்லாமே கோணலாகிடுமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி! புதிய அமைச்சர்களின் விபரம் வருமாறு!

image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன் 21 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பாதுகாப்பு, நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி,  டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியன ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவின் கீழ் காணப்படும் அதேவேளை, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுகள் காணப்படுகின்றன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.

புதிய அமைச்சரவை 21 பேருக்கு மட்டுப்படுத்தப்படுவதோடு  பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி,  டிஜிட்டல் பொருளாதார ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதியின்   கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.   

புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள்  பின்வருமாறு.

01. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க: பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி,  டிஜிட்டல் பொருளாதார  அமைச்சர்

02. கலாநிதி ஹரிணி அமரசூரிய: பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்

03. விஜித ஹேரத் : வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்

04. பேராசிரியர் சந்தன அபேரத்ன : பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

05. சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார : நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் 

06. சரோஜா சாவித்ரி போல்ராஜ் : மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் 

07. கே.டி லால் காந்த : விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்

08. அநுர கருணாதிலக : நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் 

09. ராமலிங்கம் சந்திரசேகர் : கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்

10. பேராசிரியர் உபாலி பன்னிலகே : கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்

11. சுனில் ஹந்துன்னெத்தி : கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்

12. ஆனந்த விஜேபால : பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்

13. பிமல் ரத்னாயக்க : போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர்

14. பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி : புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

15. வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ : சுகாதார மற்றும்  வெகுஜன ஊடக அமைச்சர்

16. சமந்த வித்யாரத்ன : பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்

17. சுனில் குமார கமகே : இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

18. வசந்த சமரசிங்க : வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

19. பேராசிரியர் கிரிசாந்த அபேசேன : விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர்

20. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ : தொழில் அமைச்சர்

21. பொறியியலாளர் குமார ஜயகொடி: வலுசக்தி அமைச்சர்

22. வைத்தியர் தம்மிக பட்டபெந்தி: சுற்றாடல் அமைச்சர்

இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.

462645499_534117959505532_11237294770572

462554477_1446006363454422_2391970378370

https://www.virakesari.lk/article/199062

முஸ்லீம் எவருக்கும் மந்திரிப் பதவி இல்லையோ.. எங்கேயோ இடிக்குதே 🧐

மருத்துவர் ஷாஃபி யையும் உள்வாங்கி செய்த பாவங்களை கழுவிக்கொள்ளுங்கள்.

Edited by Sasi_varnam
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, Sasi_varnam said:

தமிழ் முஸ்லீம் எவருக்கும் மந்திரிப் பதவி இல்லையோ.. எங்கேயோ இடிக்குதே 🧐

மருத்துவர் ஷாஃபி யையும் உள்வாங்கி செய்த பாவங்களை கழுவிக்கொள்ளுங்கள்.

3 hours ago, ஏராளன் said:

06. சரோஜா சாவித்ரி போல்ராஜ் : மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் 

09. ராமலிங்கம் சந்திரசேகர் : கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்

சசி.. இரண்டு தமிழ் அமைச்சர்கள் உள்ளார்கள்.
அதில் ராமலிங்கம் சந்திரசேகர் தமிழிலேயே சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். 

இந்தத் தேர்தலில், நாடெங்கிலும் உள்ள  முஸ்லீம்களும்.... அனுர கட்சிக்காக கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு  அமைச்சு பதவி வழங்கப் படவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, தமிழ் சிறி said:

சசி.. இரண்டு தமிழ் அமைச்சர்கள் உள்ளார்கள்.
அதில் ராமலிங்கம் சந்திரசேகர் தமிழிலேயே சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். 
முஸ்லீம்களுக்கு அமைச்சு பதவி வழங்கப் படவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.

தமிழ் முஸ்லீம்கள் என்று எழுதியதால் அப்படி ஒரு பொருள் தென்பட்டிருக்கும். தமிழர்கள் இருவர் இருக்கிறார்கள் என்பதை அறிவேன். திருத்தி உள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, nedukkalapoovan said:

என்ன அமைச்சரவை நீளுது. இவையும் சக்கடத்தார் ஏறின குதிரையிலதான் சவாரி போல. 

May be an image of 7 people and text

நெடுக்ஸ்... அன்றும், இன்றும்... அமைச்சரவை.
அன்று.... அரைவாசி பாராளுமன்றமுமே அமைச்சர்கள்.
இன்று.. 21 பேர் மட்டுமே அமைச்சர்கள்.

பிற்குறிப்பு: என்னை ஜே.வி.பி. காரன் என்று முத்திரை குத்திப் போடாதீங்கப்பு.  😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, Sasi_varnam said:

மருத்துவர் ஷாஃபி யையும் உள்வாங்கி செய்த பாவங்களை கழுவிக்கொள்ளுங்கள்.

👍.............

அவருக்கு அரசியலில், அதிகாரத்தில் நாட்டம் இல்லை என்றால், அவர் போட்டிருக்கும் வழக்குகளையாவது இந்த அரசு விரைவாக வெளிப்படையாக விசாரித்து தீர்ப்பை வழங்கவேண்டும். இந்த விடயத்தில் ஷாஃபிக்கு எதிராக சதி செய்தவர்களின் பெயர்கள் ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரசோதரன் said:

👍.............

அவருக்கு அரசியலில், அதிகாரத்தில் நாட்டம் இல்லை என்றால், அவர் போட்டிருக்கும் வழக்குகளையாவது இந்த அரசு விரைவாக வெளிப்படையாக விசாரித்து தீர்ப்பை வழங்கவேண்டும். இந்த விடயத்தில் ஷாஃபிக்கு எதிராக சதி செய்தவர்களின் பெயர்கள் ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அமெரிக்காவிற்கான அநுரவின் குரல்தரவல்ல அதிகாரி அண்ணன் ரசோதரன் அவர்கள் அமைச்சரவை பதவியேற்பின் யாழுக்கு விஜயம்!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஏராளன் said:

அமெரிக்காவிற்கான அநுரவின் குரல்தரவல்ல அதிகாரி அண்ணன் ரசோதரன் அவர்கள் அமைச்சரவை பதவியேற்பின் யாழுக்கு விஜயம்!

🤣..............

எனக்கு பிரதமர் பதவி கொடுக்கப்படாததால் நான் கடும் யோசனையில் இருக்கின்றேன்...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, putthan said:

70 ஆம் ஆண்டின் பின்பு முஸ்லீம்களுக்கு க‌பினட் அந்தஸ்து கொடுக்காத  அமைச்சரவை இதுவாக இருக்குமோ?வருகின்ற வெள்ளிக்கிழமி ஜும்மா தொழுகையின் பின் இருக்கு அனுராவுக்கு 
அதுசரி யாழ்ப்பாணீஸுக்கு எந்த அமைச்சும் இல்லை போல்...
பிரதி அமைச்சர் பதவி கொடுப்பினம் போல ...மீன் பிடி பிரதி அமைச்சர் சில நேரம் கொடுப்பினம்...சுகாதார துறை பிர்தி அமைச்சு இவைய்ளுக்கு கிடைக்கும்...தோழர் யாழ்ப்பாணிசை  கை  விடமாட்டார்

பனங்கொட்டை சுவைத்தல் மட்டும்தானாம்🤣

50 minutes ago, தமிழ் சிறி said:

இந்தத் தேர்தலில், நாடெங்கிலும் உள்ள  முஸ்லீம்களும்.... அனுர கட்சிக்காக கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு  அமைச்சு பதவி வழங்கப் படவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.

போக போக தெரியும்.

அமைச்சரான தமிழர் இருவரும்

கதிர்காமர் 2.0

டமாரா குணநாயகம் 2.0 தான்.

35 minutes ago, தமிழ் சிறி said:

பிற்குறிப்பு: என்னை ஜே.வி.பி. காரன் என்று முத்திரை குத்திப் போடாதீங்கப்பு.  😂

முத்திரை தயார் - மையில் தோய்ப்பதா இல்லையா என அடுத்த நடவடிக்கைகளை பார்த்து முடிவு செய்வோம்.

கப்டன்_சிறி

அனுர பிரெகேட் கட்டளை அதிகாரி.

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐசிசியிடம் எழுத்துபூர்வமான உத்தரவாதம் கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான சலசலப்பு இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், ஐசிசியிடமிருந்து எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை கோரியுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம்திகதியிலிருந்து மார்ச் 9 ஆம் திகதி வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்று நடத்துகிறது. ஆனால் இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ மறுத்து வருகிறது. மேலும், இந்திய அணிக்கான போட்டிகளை, ‘ஹைபிரிட்’ மாடலில் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியிருந்தது. இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், இனி வரும் காலங்களிலும், ஐசிசி தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை ‘ஹைபிரிட்’ மாடலிலேயே நடத்த வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை ஐசிசி எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ஐசிசி இதை கொடுக்கும் பட்சத்தில், இனி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி தொடர்கள் என்றுமே ஹைபிரிட் மாடலில் தான் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஹெரிபை சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசின் வழிமுறைகளை தான் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் பின்பற்றும் என ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கூறியது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை, துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அட்டவணை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/313493
    • 'எனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குங்கள் அல்லது இலங்கைக்கு திருப்பிஅனுப்புங்கள்" - தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் மன்றாட்டமாக வேண்டுகோள் 12 DEC, 2024 | 03:18 PM இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் தனக்கு  இந்திய பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் அல்லது தன்னை இலங்கைக்கு திரும்பி அனுவேண்டும் என மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்கள்தெரிவித்துள்ளன. இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம்  முன்பாக இலங்கை தமிழ் இளைஞர் முழந்தாளிட்டு தனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குமாறும் அல்லது இலங்கைக்கு அனுப்புமாறும் கோரும் வீடியோவை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இராமநாதபுரம் ஆட்சியர் இலங்கைக்கு தன்னை திருப்பி அனுப்பு மறுக்கின்றார் அதேவேளை தனக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பிலான ஆவணங்களையும் வழங்க மறுக்கின்றார் என ஜொய் என்ற அந்த இளைஞன் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தின் முன்னாள் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிடம் தெரிவிப்பதை வீடியோவில் அவதானிக்க முடிகின்றது. இராமநாதபுரம் ஆட்சியரிடம் நான் பத்திற்கும்  மேற்பட்ட ஆவணங்களை கையளித்துவிட்டேன்,என யாழ்ப்பாண இளைஞன் தெரிவிப்பதை வீடியோவில் அவதானிக்க முடிகின்றது. தான் பல வருடகாலமாக இந்த விடயத்துடன் போராடிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவிக்கின்றார். https://www.virakesari.lk/article/201095
    • பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கணேசன் பெண் பயணியிடம் 10 பவுன் நகையை வழிப்பறி செய்ததாகக் கூறி தனது தந்தையை மகனே காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், புதன் கிழமையன்று (டிசம்பர் 11) சென்னையில் நடந்துள்ளது. "நம்மை நம்பி வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது" என்கிறார் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் மகன். பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது? காவல்துறை சொல்வது என்ன? ஆட்டோவில் திரையை வைத்து மறைத்து வேறு இடத்துக்கு கொண்டு சென்ற ஓட்டுநர் திருச்சி மாவட்டம் குண்டூரில் வசித்து வரும் 80 வயதான வசந்தா மாரிக்கண்ணு, தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த வாரம் ஐதராபாத்தில் உள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டு கடந்த புதன்கிழமையன்று (டிசம்பர் 11) விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து தாம்பரம் சென்று திருச்சி செல்வதாக அவரது பயணத் திட்டம் இருந்தது. இதன்பிறகு நடந்த சம்பவங்களை பிபிசி தமிழிடம் விவரித்தார், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன். "காலை 9.45 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த வசந்தா மாரிக்கண்ணு, அங்கு நின்றிருந்த ஆட்டோ மூலம் தாம்பரம் செல்வதற்காக ஏறியுள்ளார். வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டோவில் இரண்டு பக்கமும் இருந்த ஸ்க்ரீனை டிரைவர் இறக்கிவிட்டுள்ளார்." ஆனால், ஆட்டோ தாம்பரம் செல்லாமல் குரோம்பேட்டை அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே திரும்பி, பச்சை மலை வழியாகச் சென்றுள்ளது," என்று தெரிவித்தார் உதவி ஆணையர் நெல்சன். அங்கு ஓர் இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, வசந்தா மாரிக்கண்ணு அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளை அந்த நபர் மிரட்டிப் பறித்ததோடு, அதன்பிறகு வசந்தாவை கீழே தள்ளிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறினார். சிரியாவில் அசத்தின் வீழ்ச்சி மற்றும் இஸ்ரேலிய தாக்குதல் பற்றி அரபு நாடுகள் என்ன சொல்கின்றன?11 டிசம்பர் 2024 குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 தந்தையை போலீஸில் ஒப்படைத்த மகன் பட மூலாதாரம்,HANDOUT இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வசந்தா மாரிக்கண்ணு, தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கணேசன் என்ற ஆட்டோ டிரைவரை அழைத்துக் கொண்டு அவரது மகன் ராமச்சந்திரன் வந்துள்ளார். இதுதொடர்பாக, தாம்பரம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தான் திருடிய நகைகளை விற்று குடும்பச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தனது மகளிடம் கணேசன் கூறியதாகவும், இதை அறிந்த அவரது மகன் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் தனது தந்தையை ஆஜர் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வசந்தாவிடம் இருந்து திருடப்பட்டதாகச் சொல்லப்படும் பத்து பவுன் நகை மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!8 மணி நேரங்களுக்கு முன்னர் தனது தந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமச்சந்திரன், "புதன்கிழமை காலையில வீட்டுக்கு வந்ததும் என் அப்பா நகைகளைக் காட்டினார். 'இந்த நகை எப்படி வந்தது?' எனக் கேட்டபோது, வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்ததாகச் சொன்னார். 'நம்மை நம்பி ஆட்டோவில் ஏறும் ஒருவரிடம் இப்படியெல்லாம் செய்வது தவறு" எனக் கூறி வீட்டைவிட்டு வெளியே போகுமாறு சத்தம் போட்டேன். அவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்" என்றார். இதன்பிறகு கணேசனை பின்தொடர்ந்து சென்ற ராமச்சந்திரன், அவரை தாம்பரம் காவல்நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார். "காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாமென்று என் தந்தை கெஞ்சினார். அதைப் பொருட்படுத்தாமல் நான் கூட்டிப் போனேன்" என்றார், ராமச்சந்திரன், மேலும், குடிபோதையில் இப்படித் தொடர்ந்து செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், தொடர்ந்து பேசிய அவர், "தவறுக்கு எப்போதும் உடன்பட மாட்டேன். அவர் செய்தது மிகத் தவறான காரியம் என்பதால் போலீசில் ஒப்படைத்தேன். அது என் தம்பி, தங்கையாக இருந்தாலும் இதைத்தான் செய்வேன்" என்றார். யுக்ரேன் போரில் காயமடைந்த வீரர்களின் மறுவாழ்வுக்கு உதவும் பெண்5 மணி நேரங்களுக்கு முன்னர் அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, திருடப்பட்ட நகை கஞ்சா விற்றதாக தாம்பரம் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கணேசன் மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறார் காவல் உதவி ஆணையர் நெல்வன். அதுகுறித்துப் பேசியவர், "கஞ்சாவை புகைத்துவிட்டுப் பலமுறை கணேசன் தகராறு செய்துள்ளதால், மறுவாழ்வு மையத்திலும் அவரைச் சேர்த்துள்ளோம். ஆனால், அங்கு முறையாக சிகிச்சை பெறாமல் திரும்பிவிட்டார்" என்றார். கணேசனின் மனைவி சிங்கப்பூரில் வீட்டு வேலைக்காகச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை மீண்டும் இந்தியாவுக்கு வரவழைப்பதற்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. "கணேசனின் மனைவியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு இந்த நகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அவரின் நோக்கமாக இருந்துள்ளது" என்கிறார் நெல்சன். ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்9 மணி நேரங்களுக்கு முன்னர் மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இதை பிபிசி தமிழிடம் தெரிவித்த ராமச்சந்திரன், "உண்மைதான். இதற்காக நானும் கடன்களை வாங்கி ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். அதற்காக திருடுவதை எப்படி அனுமதிக்க முடியும்?" என்கிறார். இந்த வழக்கில் கணேசன் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவு 304(2)இன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் உதவி ஆணையர் நெல்சன், "பொதுவெளியில் பயணிக்கும்போது வசந்தா மாரிக்கண்ணு எப்போதும் எச்சரிக்கையாக இருந்து வந்துள்ளதாகக் கூறினார். ஆனால், சம்பவம் நடந்த அன்று மழை பெய்ததால் அவர் கோட் அணிந்துள்ளார். 'இதனால் நகைகள் அணிந்திருப்பது வெளியில் தெரியாது' எனத் தான் அலட்சியமாக இருந்துவிட்டதாக" கூறுகிறார். விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் இருந்து வெளியே வரும் பயணிகள், மொபைல் செயலி மூலம் பதிவு செய்துவிட்டு வெளி வாகனங்களில் பயணித்தால் ஆட்டோ டிரைவரின் பெயர், வாகனம் ஆகியவற்றை அறிய முடியும். "அவ்வாறு இல்லாமல் தெருவில் செல்லும் எதாவது ஒரு வாகனத்தைத் தேர்வு செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். தங்களது உறவினர்களுக்கு வாகனத்தின் எண், டிரைவரின் அடையாளம் ஆகியவற்றைத் தெரிவித்துவிட்டுப் பயணிப்பது நல்லது" என்று அறிவுறுத்துகிறார் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்வன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cm2exyp63j0o
    • கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு பெப்ரவரி 27 இல் 12 DEC, 2024 | 02:46 PM முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, விசாரணைக்காக  இன்று வியாழக்கிழமை (12) எடுத்துக்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல்போனோர் அலுவலகம் (ஓ எம் பி ) சார்பில் அலுவலகத்தின் சட்டத்தரணி, ஓஎம்பி அலுவலகத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிராந்திய இணைப்பாளர் கிருஷாந்தி ரத்நாயக்க, சட்ட வைத்திய அதிகாரி சார்பாக மருத்துவ அதிகாரி, மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கணபதிப்பிள்ளை கணேஸ்வரன், அனித்தா சிவனேஸ்வரன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். இன்றைய வழக்கின் பின்னர் சட்டத்தரணி கணபதிப்பிள்ளை கணேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான AR 804/23 வழக்கானது, இன்று (12) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட போது சட்ட வைத்திய அதிகாரி சார்பாக இன்றையதினம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்றும் இன்னும் இரண்டு மாத கால அவகாசம் வேண்டும் என்ற அடிப்படையில் மன்றில் திகதியினை கோரியிருந்தனர். அதன் அடிப்படையில் மன்றானது சட்ட அதிகாரியின் விண்ணப்பத்தினை ஏற்று  குறித்த வழக்கானது மீண்டும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதிக்கு தவணையிடப்படுள்ளது எனக் கூறியிருந்தார். இதற்கு முன்னர் இடம்பெற்ற கடந்த வழக்கின் பின்னர் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் மனித புதைகுழியில் இருந்தும் மற்றும் மனித எலும்பு கூட்டு தொகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட இலக்க தகடு சம்பந்தமான முழு விபரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை காலமும் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 20 வரையான எலும்புக்கூடுகள் முற்றாக பகுப்பாய்வுக்கு உட்பட்ட நிலையில் மிகுதி எலும்புக்கூடுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201088
    • இதில் விளங்க என்ன இருக்கிறது. எவ்வளவு மிலேச்சதனமான அரசாக இருந்தாலும்… ஒரு மதச்சார்பற்ற அரசை - மதம்சார் அரசால் பிரிதியீடு செய்வது சம்பந்தபட்ட, படாத அனைவருக்கும் நீண்ட கால நோக்கில் ஆபத்து என்பது என் கருத்து. அதேபோல் ஒரு நாட்டில் தலையிடும் போது, தலையிட்ட பின் அந்த நாடு புதிய மாற்றங்களுக்கு தயாராக இல்லை எனில் தலையிடாமலே விடலாம். இதனால்தான் ஈராக் யுத்தத்தை எதிர்ர்த்தேன். லிபியாவில் தலையிட்டதையும் எதிர்த்தேன். இது ரஸ்யா சிரியாவில் தலையிட்டமைக்கும் பொருந்தும். ஆனால் இப்போ சிரியாவில் தலையிட்டுள்ளது துருக்கி. மேற்கு அல்ல. துருக்கியிடம் நோஸ் கட் வாங்கும் அளவுக்கு கிளி செத்துவிட்டது என்பது சோகம்தான், வாட் டு டூ🤣.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.