Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா 9/228 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு மிக அருகில் உள்ளது, தற்போது 333 அவுஸ்ரேலியா முன்னிலையில் உள்ளது, இது வரை எந்த ஒரு அணியும் இந்த ஓட்டத்தினை 4 ஆவது இனிங்ஸில் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

 

  • Replies 106
  • Views 6.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    பகலில் போட்டியை வைத்தாலும் நாங்கள் போகிறது இல்லை........... அது தான் இரவில் இரகசியமாக வைக்கின்றார்களோ............... இரகசியங்களை இரவில் செய்து கொள்வது வழக்கம் தானே.............🤣. டி 20 உலகக் கோ

  • ரசோதரன்
    ரசோதரன்

    🤣............ கிரிக்கட் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆன பின், இங்கு களத்தில் நடந்த டி-20 போட்டியினால் அந்த நேரத்தில் கிரிக்கட் பார்த்தேன். ரோகித்தை அப்பதான் பார்த்தேன். அவர் ஒரு சூப்பர் பாட்ஸ்மேன்

  • ரசோதரன்
    ரசோதரன்

    பையன் சார்,  அரிஸ்டாட்டில், பிளேட்டோ வரிசையில் ஒரு தத்துவஞானியாக வளர்ந்து வருவோம் என்று பார்த்தால், கவுண்டமணி செந்திலுக்கு பின்னர் ஒரு இடைவெளி வந்து விட்டது, அங்கே தான் நான் நிற்கின்றேன் என்று நீ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா?

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புதிய சாதனை படைத்த பும்ரா கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

மெல்போர்னில் நடந்துவரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் நான்காவது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

4-வது நாளான இன்று ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்து, 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை பேட்டிங்கின் முதுகெலும்பை உடைத்த பும்ரா, சிராஜ் இருவரும் டெய்லண்டர்களான போலந்த்(10), நேதன் லேயான்(41) விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர். 173 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்த நிலையில் கடைசி விக்கெட்டுக்கு இருவரும் 55 ரன்களுடன் இந்திய பந்துவீச்சாளர்களைச் சோதித்து வருகிறார்கள்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களுக்கும், இந்திய அணி 369 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதையடுத்து, 105 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

4வது டெஸ்ட் டிரா ஆகுமா? இந்தியா அல்லது ஆஸ்திரேலியா வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே எகிறச் செய்துள்ளது.

 

கோன்ஸ்டாஸை வீழ்த்திய பும்ரா

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நிதிஷ் குமார் ரெட்டியின்(114) விக்கெட்டை இன்று காலை லேயான் பந்துவீச்சில் இழந்தவுடன் 369 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, 105 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. கடந்த இன்னிங்ஸில் பும்ரா பந்துவீச்சில் ராம்ப் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய கோன்ஸ்டாஸை 8 ரன்னில் பும்ரா க்ளீன் போல்டாக்கினார். கண்ணிமைக்கும் வேகத்தில் ஸ்விங் ஆகிய பும்ராவின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் கோன்ஸ்டாஸ் அவுட்டானார்.

அடுத்த சிறிது நேரத்தில் உஸ்மான் கவாஜா 21 ரன்கள் சேர்த்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். ஸ்மித்-லாபுஷேன் ஓரளவுக்கு நிலைத்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உஸ்மான் கவாஜா 21 ரன்கள் சேர்த்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித்

ஸ்மித்(13) விக்கெட்டையும் சிராஜ் கழற்றினார். சிராஜ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட்(1), மிட்ச்செல் மார்ஷ்(0), அலெக்ஸ் கெரே(2) ஆகியோர் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து நடுவரிசை பேட்டிங் உருக்குலைந்தது. 80 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 11 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால், இதை தொடர்ந்து எடுத்துச் செல்ல கேப்டன் ரோஹித் சர்மா தவறிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். கடைசி நேரத்தில் எந்த பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது, எந்த பேட்டர் எதில் பலவீனம் என்பதை அறிந்து பந்துவீச்சை மாற்றுவதில் கேப்டன் ரோஹித் தோல்வி அடைந்துவிட்டார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.

லாபுஷேன் மட்டும் களத்தில் இருந்த நிலையில் கேப்டன் கம்மின்ஸ் அவருடன் இணைந்தார். இருவரும் இணைந்து, 7-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். லாபுஷேன் 70 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

ஸ்டார்க் 5 ரன்னில் ரன்அவுட்டானார். கம்மின்ஸும் 41 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி விக்கெட்டான போலந்த், நேதன் லயன் இருவரில் ஒருவரை விரைவாக வீழ்த்திவிடலாம் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா எண்ணினார். ஆனால், போலந்த், லேயான் இருவரும் 100 பந்துகளுக்கும் சமாளித்து 50 ரன்களுக்கும் மேல் சேர்த்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 333 ரன் முன்னிலை பெற்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, லாபுஷேன் அடித்தாடுகையில், மிக நெருக்கமாக பீல்டிங் செய்து கொண்டிருந்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் துள்ளிக் குதிக்கிறார்.

ஜெய்ஸ்வால் மீது கோபப்பட்ட ரோஹித்

4வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் மளமளவென விக்கெட்டுகளை இழந்த நிலையில் லாபுஷேன் மட்டும் நிலைத்து பேட் செய்தார். லாபுஷேன் 46 ரன்களை எட்டியிருந்த போது, நிதிஷ் குமார் வீசிய 40-வது ஓவரின்போது, கிடைத்த கிடைத்த கேட்சை ஜெய்ஸ்வால் பிடிக்காமல் நழுவவிட்டார். இதைப் பார்த்த கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வாலை நோக்கி கடுமையாக பேசினார். இன்று மட்டும் ஜெய்ஸ்வால் 3 கேட்சுகளை நழுவவிட்டார்.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, லாபுஷேன் 46 ரன்னில் இருந்த போது, நிதிஷ் குமார் பந்துவீச்சில் கொடுத்த கேட்சை ஜெய்ஸ்வால் நழுவவிட்டார்.

நோபாலால் கிடைத்த வாய்ப்பு

கடைசி விக்கெட்டுக்கு போலந்த் - லயன் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலிய அணியின் முன்னிலையை 300 ரன்களுக்கு மேல் உயர்த்தி, இந்திய அணிக்கு நெருக்கடி அளித்துள்ளனர். இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 55 ரன்களை எட்டியுள்ளது.

பும்ரா பந்துவீச்சில் லயன் பேட்டில் பட்டு ராகுலிடம் 3வது ஸ்லிப்பில் கேட்சானது, அப்போதே ஆட்டம் முடிந்துவிட்டதாக எண்ணியிருந்த போது, அது நோபாலாக நடுவர் அறிவித்தார்.

அது மட்டுமல்லாமல் 3வது செஷனில் கடைசி நேரத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேட் செய்யாமல் ஒரு விதத்தில் ஆஸ்திரேலிய அணியும் காப்பாற்றியுள்ளது. ஆட்டம் முடிய கடைசி நேரத்தில் புதிய பந்தில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சில் இந்திய தொடக்க பேட்டர்கள் விக்கெட்டுகளை இழந்தால் பெரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும். அதை தவிர்க்கும் விதத்தில் ஆஸ்திரேலியா டெய்லண்டர்கள் களத்தில் இருந்தார்கள் என்று இந்திய ரசிகர்கள் ஆறுதல்பட்டுக் கொள்ளலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடைசி விக்கெட்டுக்கு போலந்த் - லயன் பார்ட்னர்ஷிப் 55 ரன்களை சேர்த்துள்ளது.

பும்ரா புதிய சாதனை

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்திய போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 200-வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். 44 போட்டிகளில் அவர் 200 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதன் மூலம் அலெக் பெட்சர், ரிச்சர்ட் ஹாட்லி, காகிசோ ரபாடா, ஜோயல் கார்னர், கம்மின்ஸ் ஆகியோர் வரிசையில் பும்ராவும் இணைந்தார். இவர்கள் அனைவரும் 44 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் 200 விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரத்துக்கும் குறைவான (3912)ரன்களையே பும்ரா விட்டுக்கொடுத்துள்ளார். பும்ராவின் பந்துவீச்சு சராசரி 19.56 என்கிற அளவில் உள்ளது. அந்த வகையில், 20-க்கும் குறைவான சராசரியுடன் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

பும்ராவின் ஸ்ட்ரைக் ரேட் 42.4 ஆகும். அதாவது ஒவ்வொரு 7 ஓவர்களுக்கு ஒருமுறை ஒரு விக்கெட்டை பும்ரா வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானின் வக்கார் யூனுஸ், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், ரபாடா ஆகியோருக்கு அடுத்த இடத்தில் பும்ரா உள்ளார்.

குறிப்பாக சேனா நாடுகள் எனச் சொல்லப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக மட்டும் பும்ரா 142 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதாவது பும்ராவின் 202 டெஸ்ட் விக்கெட்டுகளில் 142 விக்கெட்டுகள் சேனா நாடுகளுக்கு எதிராக வீழ்த்தப்பட்டவை.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பும்ராவின் 200 விக்கெட்டுகளில் 64 விக்கெட்டுகள் அனைத்து அணிகளின் டாப்-3 பேட்டர்களுக்கு எதிராக வீழ்த்தப்பட்டவை. தொடக்க ஆட்டக்காரர்களை 50 முறையும், 3வது பேட்டரை 14 முறையும், 4வது பேட்டரை 30 முறையும் வீழ்த்தியுள்ளார். பும்ராவின் 200 விக்கெட்டுகளில் டாப்-4 பேட்டர்கள் விக்கெட்டுகள் மட்டும் 47 சதவீதமாகும். உலகளவில் பும்ராவின் இந்த பந்துவீச்சு 7-வது இடத்திலும், இந்திய அளவில் சிறந்த பந்துவீச்சாகவும் பார்க்கப்படுகிறது.

பும்ரா தனது பந்துவீச்சில் அதிக முறை இங்கிலாந்தின் ஜோ ரூட்டை 9 முறையும், அடுத்தபடியாக டிராவிஸ் ஹெட்டை 6 முறையும் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இந்த டெஸ்டில் கூட டிராவிஸ் ஹெட்டை 2 முறையும் பும்ராதான் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிதாப நிலையில் 'ஹிட் மேன்'

ரோஹித் சர்மா 2வது டெஸ்டிலிருந்துதான் பார்டர்- கவாஸ்கர் கோப்பையில் பங்கேற்று விளையாடி வருகிறார். இதுவரை ரோஹித் சர்மா இந்த டெஸ்ட் தொடரில் 22 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். 70 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ளார்.

ஆனால், ஆஸ்திரேலிய அணியின் டெய்லெண்டர் பேட்டரான, வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலந்த் இந்த டெஸ்டில் மட்டும் 101 பந்துகளைச்(முதல் இன்னிங்ஸில் 36, 2வது இன்னிங்ஸில் 65) சந்தித்துள்ளார். போலந்த் ஒரு டெஸ்டில் 100 பந்துகளைச் சந்தித்துவிட்ட நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 3 டெஸ்ட்களிலும் சேர்த்து 70 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா 100 ஆண்டு வரலாற்றை மாற்றுமா?

கடந்த 100 ஆண்டுகளில் மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்ஸில் 332 ரன்கள்தான் அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ரன்களுக்கு மேல் எந்த அணியும் இதுவரை சேஸ் செய்ததில்லை. அப்படியிருக்கையில் கடைசி நாளான(நாளை) 333 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை இந்திய அணி சேஸிங் செய்தால் மெல்போர்ன் மைதானத்தில் புதிய வரலாறு படைக்கும்.

1928-ம் ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 332 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி சேஸிங் செய்ததுதான் இங்கு அதிகபட்சம். இந்திய அணிக்கு 333 ரன்களுக்கும் அதிகமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை சேஸிங் செய்தால் புதிய வரலாறு படைக்கும்.

முக்கியத்துவம் மிகுந்த 5-வதுநாள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே இந்த போட்டியில் வெற்றி அவசியமாகும். ஆதலால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாகப் போராடும்.

இந்திய அணியின் முன்னணி பேட்டர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஆகியோர் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நிதிஷ் குமாரை முன்கூட்டியே களமிறக்கலாமா என்று கேப்டன் ரோஹித்தை சிந்திக்க வைத்துள்ளார்.

5-வது நாளில் ஆடுகளம் எப்படி இருக்கும்?

மெல்போர்ன் எம்சிஜி ஆடுகளம் நாளைய கடைசி நாளை தீர்மானிக்கும் முக்கியமான காரணியாக இருக்கும். ஆடுகளத்தில் தற்போது பிளவுகள் வந்துள்ளன, நாளை வெயில் அதிகரிக்கும் போது ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறக் கூடும்.

ஒருவேளை ஆடுகளத்தில் ரோலர் போட்டு உருட்டினாலோ அல்லது ஆடுகளத்தில் தண்ணீர் தெளித்து இறுக்கம் செய்தாலோ ஆட்டத்தின் போக்கு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆட்டத்தை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்வது ஆடுகளத்தின் பராமரிப்பாளர்கள் கையில் இருக்கிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்

மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் ஏறக்குறைய 2.99 லட்சம் ரசிகர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய 4-வது நாளில் மட்டும் 43 ஆயிரம் ரசிகர்கள் ஆட்டத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மவுசு குறைந்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அதற்கு உயிர் கொடுக்கம் விதத்தில் அதிகளவு வந்து பார்வையிட்டுள்ளனர். நாளை கடைசி நாளில் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

பட் கம்மின்ஸின் விக்கட்டை 65ஆவது ஓவரில் இழந்தவுடன் ஆஸி தனது இரண்டாவது இன்னிங்ஸை நிறுத்தி இந்தியாவை ஆட அழைத்திருக்கவேண்டும். பட் கம்மின்ஸ் ஆட்டமிழந்தபோது ஸ்கோர் 173/9 என்ற நிலையில் இருந்தது. ஆஸி 278 ஓட்டங்களுடன் முன்னிலை பெற்றிருந்தது.  MCGஇன் லைவ்லி ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்ஸில் 278 ஓட்டங்களைச் சேஸ் செய்வது கடினமானது. நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசி ஒரு மணிநேரத்தில் இந்தியாவை ஆடச்செய்திருந்தால் ஒன்றிரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தியிருக்க முடியும். இன்று கடைசி நாள் 90 ஓவர்கள் ஆடமுடியும். ஆடுகளத்தில் போதிய வெளிச்சமிருந்தால் மேலதிகமாக 10 ஓவர்கள் ஆடலாம். ஆஸி இப்போது 333 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கின்றது. இப்போதாவது ஆட்டத்தை நிறுத்தி இந்தியாவை ஆட அழைக்கவேண்டும். 

இந்தியாவை ஆஸி காடாத்தவேண்டி வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

பட் கம்மின்ஸின் விக்கட்டை 65ஆவது ஓவரில் இழந்தவுடன் ஆஸி தனது இரண்டாவது இன்னிங்ஸை நிறுத்தி இந்தியாவை ஆட அழைத்திருக்கவேண்டும். பட் கம்மின்ஸ் ஆட்டமிழந்தபோது ஸ்கோர் 173/9 என்ற நிலையில் இருந்தது. ஆஸி 278 ஓட்டங்களுடன் முன்னிலை பெற்றிருந்தது.  MCGஇன் லைவ்லி ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்ஸில் 278 ஓட்டங்களைச் சேஸ் செய்வது கடினமானது. நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசி ஒரு மணிநேரத்தில் இந்தியாவை ஆடச்செய்திருந்தால் ஒன்றிரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தியிருக்க முடியும். இன்று கடைசி நாள் 90 ஓவர்கள் ஆடமுடியும். ஆடுகளத்தில் போதிய வெளிச்சமிருந்தால் மேலதிகமாக 10 ஓவர்கள் ஆடலாம். ஆஸி இப்போது 333 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கின்றது. இப்போதாவது ஆட்டத்தை நிறுத்தி இந்தியாவை ஆட அழைக்கவேண்டும். 

இந்தியாவை ஆஸி காடாத்தவேண்டி வாழ்த்துக்கள்!

அது ஒரு நல்ல முடிவாக இருந்திருக்கும்,

அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஒரு பந்து வீச்சாளர், 4 ஆம் நாள் காலையில் கூட பந்து வீசினார் மீண்டும் மாலையில் பந்து வீச வென்டும், பின்னர் சிட்னியில் இடம்பெறும் போட்டியில் பந்து வீச வேண்டும், பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவையானதுதான், கமின்ஸ் ஒரு பந்து வீச்சாளராக அந்த முடிவினை எடுக்காமல் விட்டிருக்கக்கூடும்.

4 ஆம் நாள் இந்திய பந்து வீச்சாளர்களின் 50 ஓவர்களில் கூட பந்து ஆடுகளத்தின் தாக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டிருந்தது, இன்றும் அதே போல் செயற்பட்டால் அவுஸ்ரேலியர்கள் திறமையாக செயற்பட்டால் தேனீர் இடைவேளையின் போது இந்தியாவினை வென்றுவிடுவார்கள், இந்தியா ஆட்டத்தினை வெற்றி தோல்வியின்றி முடிக்க போராடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கொன்ஸ்டாஸிற்கு விக்கெட் காப்பாளருக்கு பின்னால் எல்லை கோட்டில் இரு வீரர்கள் நிறுத்தப்பட்டு பந்து வீசப்பட்டது, அதன் மூலம் முதலாவது இனிங்ஸில் சாம் கொன்ஸ்டாஸ் செய்தது போல செய்ய விடாமல் தடுத்ததன் மூலம் பந்து வீச்சாளார்களின் லைன், லெந்தினை குறுக்கீடு செய்வது தடுக்கப்பட்டது.

ஆனாலும் அவர் இறங்கி வந்து ஆட முயன்றார் அதன் மூலம் பந்து வீச்சாளரைகளை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சித்தார், அதனையும் இந்திய பந்து வீச்சாளர்கள் ஓவரின் ஆரம்பத்திலேயே அளவு குறைவான பந்துகளை வீசி கட்டுப்படுத்தினர்.

இறுதியாக சாம் அவுட்டாகி வெளியேறும் போது இந்தியணி அவருக்கு பதிலடி வழியனுப்பி வைப்பு செய்தார்கள், சாம், கோலி அவுட்டாகி வெளியேறும் போது பார்வையாளர்களை எழுந்து நின்று வழி அனுப்பி வைக்க சைகை செய்த்தது போல, ஆனால் சாமிற்கு பிடித்த துடுப்பாட்டகாராக விராட் கோலி இருந்துள்ளார், அதற்காக அப்படி செய்தாரா அல்லது கோலியினை கேலி செய்வதற்காக அப்படி செய்தாரா என தெரியவில்லை, இருப்பினும் இந்திய வீரர்கள் சாமிற்கு கேலியாக அந்த வழி அனுப்பலை செய்தார்கள்.

வழமையாக மோசமாக நடக்கும் அணியாக இருக்கும் அவுஸ்ரேலிய அணியினை விட மோசமாக இந்திய அணி நடப்பதால், அவுஸ்ரேலிய அணி பார்ப்பதற்கு கண்ணியமான அணியாக தோன்றும் அளவிற்கு மோசமான அணியாக உருவெடுத்திருக்கும் இந்தியணி, என்னதான் திறமை இருந்தாலும் அவர்களது நடத்தை அவர்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

MCG இல் ஐந்தாம் நாள் மதிய உணவுக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இந்தியா 33 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்துள்ளது. ரோஹித், ராகுல், கோலி மூவரும் ஆட்டமிழந்துள்ளனர். பட் கம்மின்ஸ் 2 விக்கட்டுக்களையும் மிட்சல் ஸ்டார்க் 1 விக்கட்டையும் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆட்டத்தில் இன்னும் ஆகக்குறைந்தது 65 ஓவர்களும் 5 பந்துகளும் வீசப்படவேண்டும் இந்திய அணியின் மீதமுள்ள 7 விக்கட்டுக்களையும் இன்னும் 306 ஓட்டங்களுக்குள் வீழ்த்தவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

340 ஓட்ட இலக்கை துரத்தும் இந்தியணி 3/33 மதிய உனவு இடைவேளையில் பெற்றுள்ளது, இந்தியா தோல்வியினை தவிர்க்க போராடி வருகிறது, பந்து 26 ஒவர்கலை நிறைவு செய்துள்ளது இருந்தும் பந்து தனது அனுகூலத்தினை இழக்கவில்லை, ரோகித், ராகுல், கோலி அவுடாகி உள்ளார்கள் கோல்யும் ராகுலும் அவுட்டாகியமை இந்தியணியினை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

 
AUS FlagAUS
474 & 234
IND FlagIND
(26.1 ov, T:340) 369 & 33/3
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vasee said:

340 ஓட்ட இலக்கை துரத்தும் இந்தியணி 3/33 மதிய உனவு இடைவேளையில் பெற்றுள்ளது, இந்தியா தோல்வியினை தவிர்க்க போராடி வருகிறது, பந்து 26 ஒவர்கலை நிறைவு செய்துள்ளது இருந்தும் பந்து தனது அனுகூலத்தினை இழக்கவில்லை, ரோகித், ராகுல், கோலி அவுடாகி உள்ளார்கள் கோல்யும் ராகுலும் அவுட்டாகியமை இந்தியணியினை பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது.

நல்ல செய்தி.

13 minutes ago, வாலி said:

MCG இல் ஐந்தாம் நாள் மதிய உணவுக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இந்தியா 33 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்துள்ளது. ரோஹித், ராகுல், கோலி மூவரும் ஆட்டமிழந்துள்ளனர். பட் கம்மின்ஸ் 2 விக்கட்டுக்களையும் மிட்சல் ஸ்டார்க் 1 விக்கட்டையும் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆட்டத்தில் இன்னும் ஆகக்குறைந்தது 65 ஓவர்களும் 5 பந்துகளும் வீசப்படவேண்டும் இந்திய அணியின் மீதமுள்ள 7 விக்கட்டுக்களையும் இன்னும் 306 ஓட்டங்களுக்குள் வீழ்த்தவேண்டும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நிதிஸ் குமாரை அடுத்ததாக களமிறக்க வேண்டும், வழமை போல ரிசாப் பண்டினை களமிற்க்குவது சாதகமாக இருக்காது என கருதுகிறேன், பந்து சிறப்பாக செயல்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தேனீர் இடைவேலையின் போது 3/112 (54 ஓவர்களில்), ஜெஸ்வால் 63, பந்த் 28, அவுஸின் வெற்றி வாய்ப்பு நழுவுகின்றது.

38 ஓவர்கல் மீதமுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
LIVE
4th Test, Melbourne, December 26 - 30, 2024, India tour of Australia
Australia FlagAustralia                        474 & 234
India FlagIndia     (71 ov, T:340) 369 & 141/7

Day 5 - Session 3: India need 199 runs.

Current RR: 1.98 • Min. Ov. Rem: 21• Last 10 ov (RR): 15/3 (1.50)

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா வெற்றி, 2:1 என தொடரில் முன்னணியில் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாக்ஸிங் டே டெஸ்டில் தோல்வி: கோலி, ரோஹித்தை விமர்சிக்கும் ரசிகர்கள் - டெஸ்ட் சாம்பியன் பைனலுக்கு இந்தியா முன்னேறுமா?

பாக்ஸிங் டே, இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 3வது முறையாக விளையாடுவதற்கான வாய்ப்பு அருகிவிட்டது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 184 ரன் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி.

இரண்டாவது இன்னிங்ஸில் 340 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அணி 79.1 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்து 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி 7 விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு, 20 ஓவர்களில் இந்திய அணி இழந்தது.

இந்திய அணி சேர்த்த 155 ரன்களில் ஜெய்ஸ்வால் மட்டும் 84 ரன்கள் சேர்த்துள்ளார்.

இதன் மூலம் 5 போட்டிகள் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 3வது முறையாக விளையாடுவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளனவா?

 
பாக்ஸிங் டே, இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணி சேர்த்த 155 ரன்களில் ஜெய்ஸ்வால் மட்டும் 84 ரன்கள் சேர்த்துள்ளார்

தோல்விக்கான காரணம் என்ன?

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாகக் கருதப்பட்ட டாப்ஆர்டர் பேட்டர்கள் கேப்டன் ரோஹித் சர்மா(8), கே.எல்ராகுல்(0), விராட் கோலி(5), ஜடேஜா(2), ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

121 ரன்கள் வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து மட்டுமே வலுவாகத்தான் இருந்தது. ஆனால், அடுத்த 34 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளையும் இந்திய அணி பறிகொடுத்துள்ளது. ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் கூட்டணி 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை ஓரளவுக்கு காத்து நின்றனர். அதன்பின் வந்த பேட்டர்கள் யாரும் ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துழைத்து பேட் செய்யவில்லை.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களால் இயன்ற சிறந்த பங்களிப்பை இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் அளித்து வருகிறார்கள். குறிப்பாக பும்ரா இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிராஜ், ஆகாஷ் தீப் இருவரும் சிறப்பாகவே பந்துவீசி வருகிறார்கள்

ஆனால், பேட்டிங்கைப் பொருத்தவரை முன்னணி வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா, ரிஷப் பந்த் ஆகியோர் இதுவரை தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கவில்லை.

ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் 150 ரன்களை அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இந்த டெஸ்ட் போட்டியில் 84 ரன்கள் சேர்த்து இந்த அளவு போராடினார்.

டிரா செய்வதற்கான வாய்ப்பு

பாக்ஸிங் டே, இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிராவிஸ் ஹெட் வீசிய ஓவரில் ரிஷப் பந்த் லாங் ஆன் திசையில் தூக்கி அடித்து கேட்சாகி விக்கெட்டை இழந்தார்

ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் கூட்டணி ஆட்டத்தை டிராவை நோக்கி மெல்ல நகர்த்தியது. இதனால் வெற்றி கிடைக்காவிட்டாலும் டிரா செய்யலாம் என்று ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.

ஆனால், டிராவிஸ் ஹெட் வீசிய பந்தை தேவையில்லாமல் அவுட்சைட் ஆஃப் திசையில் சென்ற பந்தை லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க ரிஷப் பந்த் முயன்றார், ஆனால், பவுண்டரி எல்லையில் மார்ஷால் கேட்ச் பிடிக்கப்பட்டார்.

போட்டியில் ஒரு பேட்டர் ஆட்டமிழந்தவுடன் பந்துவீச்சாளர் உள்ளிட்ட எதிரணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமானது. ஆனால், ரிஷப் பந்த் ஆட்டமிழந்தவுடன் டிராவிஸ் ஹெட் அதைக் கொண்டாடும் வகையில் ரசிகர்களை நோக்கி காட்டிய செய்கை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.

கோலி, ரோஹித் ஏமாற்றம்

பாக்ஸிங் டே, இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இதுவரை ரோஹித் சர்மா 3 டெஸ்ட் போட்டிகளில் 100 பந்துகளைச் சந்திக்கவில்லை

பார்டர் - கவாஸ்கர் கோப்பைத் தொடரை இந்திய அணி தக்கவைக்குமா அடுத்து கடைசியாக நடக்கவுள்ள சிட்னி டெஸ்டில்தான் தெரியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணி முன்னேறுமா என்பதும் அப்போது தெளிவாகும். அதே நேரத்தில் ரோஹித் சர்மா, கோலி, ஜடேஜா ஆகியோரின் டெஸ்ட் வாழ்க்கையும் முடிவுக்கு வருமா என்பது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

இதுவரை ரோஹித் சர்மா 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் மொத்தமாக 100 பந்துகளைக் கூட சந்திக்கவில்லை. 2வது இன்னிங்ஸில் 9 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ளார். கோலி முதல் போட்டியில் சதம் அடித்தபின் பெரிதாக எந்த போட்டியிலும் ஸ்கோர் செய்யவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருவருமே ஜாம்பவான்களாக திகழ்பவர்கள்தான்.

ஆனால், இப்போது இருவரும் ஃபார்மின்றி தவிப்பதுடன் அணிக்கு சுமையாக மாறிவிட்டார்கள் என்று ரசிகர்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

பாக்ஸிங் டே, இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணிக்கு இன்னும் ஒரு டெஸ்ட் மட்டுமே மீதமிருக்கிறது,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பு உள்ளதா?

இந்திய அணி மெல்போர்ன் டெஸ்டில் அடைந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. தற்போது இந்திய அணி 18 போட்டிகளில் 9 வெற்றி 7 தோல்வி, 2 டிரா என 114 புள்ளிகளுடன் 52.78 வெற்றி சதவீதமாகக் குறைந்து 3வது இடத்தில் இருக்கிறது.

இந்த டெஸ்டில் பெற்ற வெற்றியால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவீதம் 61.46 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அணிக்கு இன்னும் ஒரு டெஸ்ட் மட்டுமே மீதமிருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு பயணம் செய்து 2 டெஸ்ட்களில் விளையாட இருக்கிறது. அதில் ஒரு டெஸ்டில் வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ பைனலுக்கு தகுதி பெற்றுவிடும்.

சிட்னி டெஸ்டில் இந்திய அணி வென்றால் டெஸ்ட் தொடர் 2-2 என்று சமனில் முடியும். அப்போது இந்திய அணி 55.26 சதவீதத்துடன் முடிக்கும். இலங்கை அணி 1-0 என்று ஆஸ்திரேலிய அணியை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றினால், இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது.

எனவே இந்திய அணி கடைசி டெஸ்டில் கட்டாயமாக வென்றால் மட்டும் போதாது, ஆஸ்திரேலிய அணியை 1-0 என்று இலங்கை அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றினால்தான் வாய்ப்புக் கிடைக்கும்.

ஒருவேளை சிட்னி டெஸ்டில் இந்திய அணி டிரா செய்தால் 51.75 சதவீதத்துடன் முடிக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பு பறிபோய்விடும்.

அவ்வாறான சூழலில், ஆஸ்திரேலிய அணி இலங்கையிடம் டெஸ்ட் தொடரை இழந்தாலும் அந்த அணி பைனல் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆதலால், சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி டிரா செய்தாலே அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் செல்வது உறுதியாகிவிடும்.

'வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டோம்'

பாக்ஸிங் டே, இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தோல்விக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "போதுமான அளவு எங்களின் திறனையை வெளிப்படுத்த முடியவில்லை" என்றார்

தோல்விக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நாங்கள் முழுமையான போராட்டக் குணத்தை வெளிப்படுத்தி விளையாடவில்லை, கடைசிப் பந்து வரை போராட நினைத்தோம். ஆனால், எங்களால் முடியவில்லை." என்றார்.

கடைசி இரு செஷன்களிலும் ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார்போல் விளையாடுவது கடினமாக இருந்தது என்று கூறிய அவர், "இந்த டெஸ்ட் முழுவதையும் கவனித்தால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது, ஆனால், நாங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை." என்று கூறினார்.

"ஆஸ்திரேலிய அணியை 2வது இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு 6 விக்கெட் என்று நிலைக்கு கொண்டுவந்தோம். ஆனால் அதன்பின் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை, சில விஷயங்கள் கடினமானவை என எங்களுக்குத் தெரியும். கடினமான சூழலில் நாங்கள் கடினமான கிரிக்கெட்டை விளையாட விரும்பினோம்."

"போதுமான அளவு எங்களின் திறனையை வெளிப்படுத்த முடியவில்லை, இது குறித்து அணி வீரர்களிடமும் ஆலோசித்தோம். கடைசி விக்கெட் வரை போராடியும் எங்களால் வெல்ல முடியவில்லை. 340 ரன்கள் இலக்கு கடினமானது என எங்களுக்குத் தெரியும். கடைசி இரு செஷன்களில் விக்கெட்டை கைவசம் வைத்திருக்க விரும்பினோம். ஆனால், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிறப்பாகப் பந்துவீசினர். வெற்றி பெறுவதற்கான வழியை தேடுவதில் நாங்கள் தோற்றுவிட்டோம்." என்றும் கூறினார் ரோஹித் சர்மா.

நிதிஷ் குமார் பற்றி பேசிய ரோஹித், "இங்கு முதல் முறையாக வந்துள்ளார். இந்த சூழல் கடினமானதுதான். ஆனால் அவர் அருமையாக விளையாடினார் பேட் செய்தார். அவரின் சிறப்பான ஆட்டத்தை அளித்தார்." என்று கூறினார்.

மேலும், "பும்ராவின் பந்துவீச்சு இந்தத் தொடரில் அற்புதமாக இருக்கிறது. அவருக்கான பணியை சிறப்பாகச் செய்தார். நாட்டுக்காக, அணிக்காக விளையாடக் கூடியவர் பும்ரா, சுய சாதனையை விரும்பாதவர், ஆனால், அவருக்கு துணையாக மற்ற பந்துவீச்சாளர்கள் பந்துவீசவில்லை" எனத் தெரிவித்தார் கேப்டன் ரோஹித் சர்மா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

பொக்ஸிங் டே டெஸ்ட்டில் பாரத் அணியை வென்ற ஆஸி அணிக்கு பாராட்டுக்கள்.👏

பகிடி என்னவென்றால் பாரத் அணிக்கும் அவர்கள் அடிப்பொடிகளுக்கும் ஐந்தாம் நாளில் கூட தாங்கள் வெற்றிபெறலாம் என்று நம்பிக்கொண்டு இருந்ததுதான்😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

போட்டியில் ஒரு பேட்டர் ஆட்டமிழந்தவுடன் பந்துவீச்சாளர் உள்ளிட்ட எதிரணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமானது. ஆனால், ரிஷப் பந்த் ஆட்டமிழந்தவுடன் டிராவிஸ் ஹெட் அதைக் கொண்டாடும் வகையில் ரசிகர்களை நோக்கி காட்டிய செய்கை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.

I put the bait he had taken என்பதனையே ட்ரவிஸ் கெட் கூறியதாக கூறுகிறார்கள்,

https://www.theroar.com.au/cricket/video/watch-travis-heads-interesting-celebration-after-pant-brain-explosion-off-half-tracker-1401484/

இந்தியா இந்த போட்டியினை வெல்வதற்கான சாத்திய கூறுகள் இருக்கவில்லை, ஆனால் தோல்வியினை தவிர்ப்பதற்கு சாத்திய கூறு இருந்தது, அது ஒரு கடுமையான பணி அதனை இந்தியாவின் தற்போதய அணியினால் செய்ய முடியாது, இந்தியணி முதலாவது இனிங்ஸில் சிறப்பாக விளையாடியது போல தோன்றுவதற்கு காரணம் ஆடுகளம் இரண்டாம் மூன்றாம் நாள்களில் காய்ந்து துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமானது.

பின்னர் 4,5 நாள்களில் பிட்ச் காய்வதால் ஏற்படும் வெடிப்பு பந்து தரையில் பட்டு எதிர்பாரா மாற்றங்களை ஏற்படுத்தும், அந்த பிட்சில் விளையாடும் போது இந்த ஓட்டம் ஒரு எடுக்க முடியாத இலக்கு, இந்தியணி தற்போது கூறுவது போல வெற்றிக்காக ஆடினோம் என்பது இரசிகர்களை சமாதானபடுத்துவதற்காக அவர்களின் நோக்கமும் போட்டியினை தோல்வியின்றி தவிர்ப்பதாகவே இருந்த்து.

முதல் 26 ஓவர்களில் வெறும் 33 ஓட்டங்களை இந்தியணி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.news.com.au/sport/cricket/i-can-explain-truth-behind-travis-heads-bizarre-celebration/news-story/b47dae4c340ed73dd6173ac265182bfb

ட்ரவிஸ் கெட் செயலுக்கு இன்னொரு விளக்கம், ஆனால் பார்ப்பதற்கு முகம் சுழிப்பதாகவே இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

போடர் கவாஸ்கர் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்க உள்ளது, ஆடுகள தயாரிப்பு பற்றி அதற்கு பொறுப்பாக உள்ள அடம் கூறிய கருத்திற்கு இந்திய இரசிகர்கள் எதிர்வினையாற்றியுள்ளார்கள்.

இந்த ஆடுகளத்தினை அவுஸ்ரேலியா வேண்டுமென்றே வெற்றி தோல்வியின்றி முடிக்க விரும்புவதாக இந்திய இரசிகர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக சிட்னி ஆடுகளம் இந்திய உபகண்ட ஆடுகளம் போன்றிருக்கும் என கூறப்படுகிறது, இங்கு முதலில் துடுப்பெடுதாட விரும்புவார்கள் போட்டியின் இறுதி நாளகளில் ஆடுகளம் உடைய தொடங்கும் போது சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக காணப்படும், அதிக ஓட்டங்களை குவிக்க கூடிய ஆடுகளமாக இந்த ஆடுகளம் உள்ளது, இந்த போட்டி பெரும்பாலும் வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என முன்னால் அவுஸ்ரேலிய ஆட்டக்காரான மைகல் கிளார்க் எதிர்பார்க்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இந்தியா இந்த போட்டியில் வென்றாக வேண்டும், அத்துடன் அவுஸ்ரேலியா இலங்கையுடன் விளையாடும் டெஸ்ட் தொடரில் இலங்கையுடன் தோற்க வேண்டும் இந்த இரண்டும் நிகழ்வதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுவதாக இந்திய முன்னால் வீரர்களும் இந்திய இரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

மெல்பேரினில் நடந்த போட்டி மிகவும் விறு விறுப்பாக இரு அணிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் கை மாறி ஒரு சமச்சீரான போட்டியாக நடந்து அதில் இரு அணிகளிலிலும் சிறந்த அணியான அவுஸ்ரேலியா வென்றது (370000 மேற்பட்ட இரசிகர்களால் இரசிக்கப்பட்ட இந்த போட்டி ஒரு வரலாற்று சாதனை கொண்ட போட்டியாக உள்ளது).

தற்போது சிட்னி வெப்பம் கடந்த சில தினங்களாக மத்திய 30 களில் இருந்தது தற்போது இன்றும் நாளையும் (போட்டியின் முக்டல் நாளான) மத்திய 20 களுக்கு வருகிறது, பின்னர் 2, 3, 4 நாள்களில் 30 களின் ஆரம்பத்திற்கு வெப்பம் செல்லுகிறது இறுதி நாளில் மழை குறுக்கிடலாம்.

இவற்றினை வைத்து பார்க்கும் போது பிட்சில் 7 MM புல்லும், அதிக வெப்பமற்ற மிதமான வெப்பம், மற்றும் பாரமான ரோலர்களை அதிகமாக பயன்படுத்த உள்ளார்கள் போல இருப்பதலால் வழமைக்கு மாறாக வேக பந்து வீச்சிற்கு ஓரளவு உதவி செய்யும் நிலையில் பிட்ச் காணப்படலாம் ஆனால் அதே வேளை துடுப்பாட்டக்காரர்களின் சொர்க்கமாகவும் காணப்படும்.

மெல்பேர்ன் ஆடுகளம் போல ஒரு சூழலலை எதிர்பார்க்கலாம் ஆனால் இறுதி நாளில் மழை குறுக்கீடு ஏற்படலாம் அதனால் போட்டியின் முடிவு அற்றதாக வாய்ப்புண்டு.

இந்த போட்டியிலும் அவுஸ்ரேலிய அணி இந்திய அணியினை விட சிறந்த அணியாக இருப்பதால் அவுஸ்ரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

அவுஸ்ரேலிய அணியில் கவாயாவின் இறுதிப்போட்டி என கூறுகிறார்கள், அதே போல் சில இந்திய வீரர்களின் இறுதிப்போட்டியாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள், இந்த போட்டியினை வென்றாக வேண்டிய நிலையில் இந்தியணியில் மாற்றங்கள் ஏற்படலாம், ஆனால் இந்திய முன்னால் ஆட்டக்காரர்களின் கருத்தின்படி இந்தியா தனது அணியில் எந்த மாற்றங்களையும் செய்யாது என கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி டெஸ்ட்: SCG இல் முதலாம் நாள் தேநீர் இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டபோது பாரத் அணி 50 ஓவர்கள் ஆடி 107 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்துள்ளது. ஜெய்ஸ்வால், ராகுல், கில், கோலி ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர். பந்துவீச்சில் போலண்ட் 2 விக்கட்டுக்களையும் ஸ்டார்க் மற்றும் லயன் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பாரத் அணி 57வது ஓவரில் 5 விக்கட்டை இழக்கின்றது!

ஆறவது விக்கட்டையும் இழக்கின்றது பாரத் அணி!

120 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை இழந்துள்ளது பாரத் அணி!

Innings 
Batting R B 4s 6s SR
10 26 1 0 38.46
c Webster b Boland
4 14 0 0 28.57
c Konstas b Starc
20 64 2 0 31.25
c Smith b Lyon
17 69 0 0 24.63
c Webster b Boland
40 98 3 1 40.81
c Cummins b Boland
15 76 1 0 19.73
not out 
0 1 0 0 0.00
c Smith b Boland
0 1 0 0 0.00
not out 
Extras 14 (b 5, lb 6, nb 3)
Total 120/6
57.4 Ov (RR: 2.08
  • கருத்துக்கள உறவுகள்

India 185, Australia 1/9

சிட்னி ஆடுகளம் பச்சை பசேலன காணப்படுகிறது, இந்தியர்கள் அவுஸ்ரேலியா தட்டையான சீமெந்து தரையினை அவுஸ்ரேலியா வழங்கும் என குறை கூறிய நிலையில் இவ்வாறான ஒரு ஆடுகளத்தினை யாரும் எதிர்பார்க்கவில்லை.

நாணய சுழற்சியில் வென்ற இந்தியணி முதலில் துடுப்பெடுத்தாடும் முடிவினை எடுத்தது, இன்று மேக மூட்டத்துடன் மிதமான வெப்பத்துடன் புற்கள் நிறைந்த ஆடுகளம் வேக பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தது,  எதிர் வரும் 3 நாதள் வெப்பம் அதிகரிக்கும் ஆடுகளத்தில் ஈரப்பதன் காணப்படுவது போல இருப்பதாக எனக்கு தோன்றுகிறது (தவறாக இருக்கலாம்) எதிர் வரும் நாள்களில் பந்து எதிர் பாராத வண்ணம் ஏற்ற இறக்கத்துடன் பந்து மேலெழும் நிலை உருவாகலாம்.

இது வழமையான சிட்னி ஆடுகளம் போல தட்டையாக இல்லை, வழமையாக 2, 3 ஆம் நாள்களில் துடுப்பாட்டத்திற்கு வசததியாக இருக்கும் ஆனால் இந்த ஆடுகளம் நாள்கள் செல்ல செல்ல மோசமாகலம் என கருதுகிறேன் (எனது தனிப்பட்ட கருத்து) ஆனாலும் பிட்ச் காயும் போது துடுப்பாட்டத்திற்கு வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

சிட்னி ஆடுகலம் மெல்பேர்ன் ஆடுகளம் போல Drop pitch இல்லை, அதனால் பிட்ச் உடையும் போது சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக காணப்படும், இவற்றினை பார்க்கும் போது அதிகளவில் இந்தியணிக்கு சாதகமாக நிலை உள்ளது, அதனால் அவுஸ்ரேலியா தனது முதல் இனிங்க்ஸில் அதிக ஒட்டங்களை பெற்றாக வேண்டும் 300 ஒட்டங்களையாவது அவுஸ்ரேலியா எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னா அடி.. தர்ம அடி என்பது இதுதானா..? தாதிமாரிட்ட சொல்லி சுடு நீரில் கொஞ்சம் உப்பு கலந்து கிந்தியர்களுக்கு ஒத்தடம் கொடுங்கப்பா..

sudu.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

தேனீர் இடைவேளையின் போது ஆவுஸ்ரேலிய அணி 181 ஓட்டங்களுக்கு ஆட்டமிழடந்துள்ளது, இன்று கலையில் வேகப்பந்து வீச்சுக்கிற்கு சாதகமான நிலை தொடர்ந்து காணப்பட்டது, பந்து நேற்றைய தினத்தினை விட அதிகளவில் சுவிங் ஆனது, நேற்று மேக மூட்டம் இருந்தபோது இருந்த சுவிங்க் இனை விட அதிக மாக இருப்பதாக கூறுகிறார்கள் (நேற்று 0.7 இன்று 2.0) அதே வேளை பிட்சும் அதன் தன்மையினை இழக்கவில்லை.

ஆனால் மதிய உணவிற்கு பின்னர் நிலமை ஓரளவிற்கு முன்னேற்றம் காணப்படுகிறது, அதற்கு காரணமாக வெப்பம் அதிகரிப்பு இருக்கலாம், இந்தியணி இந்த போட்டியில் வென்றாக வேண்டும் எனும் நிலையில், நாளை ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும் நிலையில்  முதல் இனிங்க்ஸ் போல ஒரு ஆட்டத்தினை இந்திய அணி கொடுத்த்கு  நாளை முழுவதும் துடுப்பாடி தேனீர் இடை வேளையில் அவுஸ்ரேலிய அணியினை ஆட வைத்தால் இந்தியணி வெல்லலாம்.

இந்த போட்டியில் அவுஸ்ரேலிய அணி இந்தியணியினை விட பலமான அணி, ஆனாலும் அவுஸ்ரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு மிக குறைவாக உள்ளதாக கருதுகிறேன்.

முதல் இனிங்ஸில் இரண்டு அணிகளும் இந்தியா 185, அவுஸ்ரேலியா 181 ஓடங்களை பெற்று சமநிலையில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மெல்பேர்ன் டெஸ்ட் போட்டி போல இந்த ஆட்டமும் இரு புறமும் வெற்றிவாய்ப்புக்கள் கை மாறி வருகிறது, தற்போது இந்தியா 145 அ ஒட்டங்கள் முன்னிலையில் உள்ள, 4 விக்கெட் டுக்களை அவுஸ்ரேலியா கைப்பற்ற வேண்டும் இந்தியணியினை 15 ஓட்டங்களுக்குள் அவுஸ்ரேலியா நாளை சுருட்டி விட்டால் வெற்றி வாய்ப்பு அவுஸ்ரேலியாவிற்கு உள்ளது ( 160 ஓட்டங்களுக்குள்), 200 ஒட்டங்களுக்குள் இந்தியாவினை ஆட்டமிழக்க செய்தால் அவுஸ்ரேலியாவிற்கு வெற்றி உண்டு என ஜஸ்ரின் லாங்கர் (முன்னால் அவுஸ்ரேலிய பயிற்றுவிப்பாலர்) தெரிவித்துள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

"If we have somebody that comes up and says I can fight you, as a team we want to tell them we are here and you can't take us for granted. We are all here, 11 of us versus you. If you can be as aggressive, that's fine."

இந்திய வேகப்பந்து வீச்சாளாரான பிரசித் கிருஸ்னாவின், சாம் கொன்ஸ்டாஸ் பற்றி இரண்டாம் நாள்  சிட்னி டெஸ்ட் போட்டியின் பின்னர் கூறிய வாசகம் இது.

இந்தியணி வீரர்கள் ஓய்வறையில் உள்வீட்டு பிரச்சினைகள் உள்ளதாக கருத்து நிலவி வருகின்ற நிலையில் இந்தியணி வீரரின் கூற்று இவ்வாறு அமைந்துள்ள்து, அதில் இந்தியணி வீரர்கள் குழுவாக செயற்படுவதனை இக்கருத்தின் மூலம் உணரலாம், நேற்றைய போட்டி முடிவு நேரத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பிரதிபலிப்பாக இன்றுகாலை சாம் கொன்ஸ்டாஸின் மீது இந்தியணி வீரர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர், முன்னெப்போதும் இல்லாத அளவில் அவர்கள் ஒரு இளைஞனுடன் தீவிர வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.

மைதானத்தில் ஒரு ஒற்றுமையான குழுவாக தோன்றும் விதமாக தமது பொது எதிரியாக ஒருவரை சித்தரித்து அதற்கெதிராக தாம் ஒரு குழுவாக ஒற்றுமையாக செயற்படுவதாக எண்ணுகிறார்கள்.

இந்தியணியின் பிரச்சினையாக அணியின் அதன் பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் கால இடைவெளி பிரச்சினை (tranfermaion period) என கூறும் நிலையில் இந்தியணி ஒரு உள்வீட்டு பிரச்சினைக்குள் சிக்கித்தவிப்பது போல காணப்படுகிறது.

அணியில் உள்ள மூத்த வீரர்கள் அணிக்கு பாரமாக உள்ள வேளையில் ரோகித் சர்மா தான் தொடர்ந்து விளையாட உள்ளதாக கோடி காட்டியுள்ளார், செயற்பாடற்ற வீரர்களை கொண்ட இந்தியணியினால் போட்டிகளை வெல்ல முடியாத நிலையில் இந்தியணியின் முகாமைத்துவம் மீது இரசிகர்களின் வெறுப்பு திரும்புகின்றது.

பல் மில்லியன் ஆதரவாளர்களை கொண்ட செயற்பாடற்ற மூத்த வீரர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத கோழைகளாக இந்தியணி முகாமைத்துவம் உள்ளது.

இதனால் இந்தியணி தனது நாட்டிலேயே தொடரினை இழந்து தற்போது போடர் கவாஸ்கர் தொடரை காப்பாற்ற போராடுகிறது.

இதுவரை காலமும் ICC போட்டிகளில் மட்டும் நத்தை போல ஓட்டுக்குள் சுருளும் இந்தியணி தற்போது புதிதாக  சிறிய வருமானம் குறைந்த கிரிக்கட் நிர்வாகத்தினை கொண்ட நாடுகளிடமும் மண்டியிட  தொடங்கியுள்ளது, இதற்கு தீர்வுதான் என்ன?

இந்தியணி இன்னுமொரு பாகிஸ்தான் அணி போல மாறுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, vasee said:

மெல்பேர்ன் டெஸ்ட் போட்டி போல இந்த ஆட்டமும் இரு புறமும் வெற்றிவாய்ப்புக்கள் கை மாறி வருகிறது, தற்போது இந்தியா 145 அ ஒட்டங்கள் முன்னிலையில் உள்ள, 4 விக்கெட் டுக்களை அவுஸ்ரேலியா கைப்பற்ற வேண்டும் இந்தியணியினை 15 ஓட்டங்களுக்குள் அவுஸ்ரேலியா நாளை சுருட்டி விட்டால் வெற்றி வாய்ப்பு அவுஸ்ரேலியாவிற்கு உள்ளது ( 160 ஓட்டங்களுக்குள்), 200 ஒட்டங்களுக்குள் இந்தியாவினை ஆட்டமிழக்க செய்தால் அவுஸ்ரேலியாவிற்கு வெற்றி உண்டு என ஜஸ்ரின் லாங்கர் (முன்னால் அவுஸ்ரேலிய பயிற்றுவிப்பாலர்) தெரிவித்துள்ளார்.

 

இன்று வெப்பம் அதிகமாக உள்ளது, வெப்ப அதிகரிப்பினால் பிட்சில் எவ்வாறான மாற்றம் ஏற்படும் என யாராலும் எதிர்வு கூற முடியவில்லை, சாதாரணமாக பிட்ச் காயும் போது 2, 3 ஆம் நாள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக காணப்படும் ஆனால் இந்த பிட்சில் ஆரம்ப நாளிலேயே ஈரப்பதன் அதிகமாக காணப்பட்டதாக முன்னர் பதிவிட்டேன் அதனை உறுதி செய்வது போல இரண்டாம் பிட்ச் ஆடுவதற்கு கடினமாக மாறியது, அதேநிலை நீடித்தால் இன்றைய நாள் நேற்றை விட மோசமாகலாம், அவ்வாறில்லாமல் அதிக வெப்பம் ஆடுகளம் துடுப்பாடத்திற்கு சாதகமானால் அவுஸ்ரேலியாவிற்கு வெற்றி கிடைக்கும், ஆனால் அப்படி நிகழ்வதற்கான சாத்திய கூறு மிக மிக சொற்பமாகும், இந்தியாவிற்கே ஆடுகளம் தற்போது அதிகளவில் சாதகமாக உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.