Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
யாழில் பேரிடர் பணியில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் களத்தில்!

Published By: DIGITAL DESK 7

28 NOV, 2024 | 05:31 PM
image
 

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் பல பிரதேசங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கள் முகாம்களில் தஙகவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உடனடி தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஸ்ரீபானந்தராஜா அவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நலன்கருதி நடமாடும் மருத்துவ சேவைகளை ஒழுங்குப்படுத்தி நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றார். தற்போது முதல் கட்டமாக யாழ் இந்து மகளிர் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான மருத்துவ சேவை வழங்கப்பட்டுவருகின்றது."

அதே வேளை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களும் இடைத்தங்கல் முகாங்களில் உள்ள மக்களை சந்தித்து மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றார்.

அதே போன்று வடமராட்சி பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அவர்களும் களப்பணியில் நின்று மக்களுக்கு தேவையான உதவிகளை களத்தில் நின்று புரிந்து வருகின்றார் .

https://www.virakesari.lk/article/199941

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காணவில்லை

(அ)கெளரவ சாராயக்கடை சிறி பா.உ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, goshan_che said:

காணவில்லை

(அ)கெளரவ சாராயக்கடை சிறி பா.உ

ஊடகங்களின் சதி 😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, பெருமாள் said:

ஊடகங்களின் சதி 😄

யூடியூபர்களின் சதியென்றும் சொல்லலாமே..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

காணவில்லை

(அ)கெளரவ சாராயக்கடை சிறி பா.உ

large.IMG_7817.jpeg.771df201b7c266e4e936

  • Like 1
  • Haha 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ளூராட்சி தேர்தலில் எதிரொலிக்கும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

காணவில்லை

(அ)கெளரவ சாராயக்கடை சிறி பா.உ

அன்று தொடக்கம் தமிழ் அரசியல் தலைவர்கள் எதை செய்தார்களோ அதையே சாராயக்கடை அண்ணலும் செய்கின்றார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாவம் கிழக்கு மக்கள், பொருளாதாரத்திலும் நலிந்தவர்கள்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.