Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 Less than a minute
wp-content/uploads/2024/11/img_6488-1-780x976.jpg.webp

முஸ்லிம்கள் ஒஸாமா பின்லாடனை நினைவுகூர்ந்தால் தலை மிஞ்சாது ! ஆனால் இங்கே பிரபாகரனின் புகைப்படத்தையும் கொடியையும் வைத்து நினைவுகூர்கின்றனர் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் “ சிவாஜிலிங்கம் உங்களுக்கு ஒரு போதும் இந்த நாட்டை பிடிக்கவும் முடியாது பிடிக்கவும் விடமாட்டோம்” என கூறினார்.

 

https://madawalaenews.com/9360.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

பத்தரமுல்ல சீலரத்ன தேரர் - ஹம்மாதுருவனி
ஹுத்த பெத்தக தியலா பகஉட வாடிவென்ன மமா ஓயாகே அ...ட ஹுக்கலா  என்னங்  .

 

  • கருத்துக்கள உறவுகள்

பத்தரமுல்ல சீலரத்ன தேரர் இன்று யாழ்ப்பாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.!!  #election2024

பத்தரமுல்ல சீலரத்ன தேரரருக்கு... யாழ்ப்பாணத்து வாக்குகளும் வேணுமாம். 😂
பிற்குறிப்பு: பழைய படம். புதிய கருத்து. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of motorcycle, car, road and text

 

May be an image of text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒசாமா பின்னலேடனுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும்  என்ன தொடர்பு? அவரை ஏன் இலங்கை முஸ்லிம்கள் நினைவு கூரவேண்டும் என்றும் விளக்கி தொடர்பு படுத்தலாமே? நல்லிணக்கம் என்றால் என்ன என்று தெரியாதவர்களெல்லாம் பாடம் எடுக்கிறார்கள், அதுதான் கொடுமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஒசாமா பின் லேடனையும் அனுஷ்டிக்க நேரிடும் - பொதுஜன பெரமுன

 

விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வரையறைகளுடன் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க எவ்வாறு இடமளிக்க முடியும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் மனோஜ் கமகே (Manoj Gamage) கேள்வியெழுப்பியுள்ளார்.

 

இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இலங்கையில் ஒசாமா பின் லேடனையும் அனுஷ்டிக்க நேரிடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கயைில், 

 

”வரலாற்றில் என்றுமில்லாத வகையில் இம்முறை வடக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுபாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதியளித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

 

ஆனால் வடக்கு மக்கள் இம்முறை போராளிகளையும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனையும் பகிரங்கமாக நினைவு கூர்ந்துள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உலகில் 32 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை எவ்வாறு வரையறைகளுடன் அனுஷ்டிக்க இடமளிக்க முடியும்.

 

இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் ஒசாமா பின் லேடனையும் இலங்கையில் அனுஷ்டிக்க நேரிடும். தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். தமிழ் மக்களின் ஆணையை அரசாங்கம் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.

 

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கம் நாட்டு பற்றுள்ள இலங்கையர்களுக்கு கிடையாது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கையர்கள் என்ற அபிமானத்துடன் வாழ்வதற்கே விரும்புகிறார்கள். பிரிவினைவாத கொள்கையுடைய தமிழ் அரசியல்வாதிகளே நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

 

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி அக்காணிகளை உரியவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன் எதிர்வரும் மாதமளவில் பெருமளவான இராணுவ முகாமைகளை வடக்கில் இருந்து அகற்றுவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

 

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றி, காணிகளை பகிர்ந்தளித்தல் தொடர்பில் பாதுகாப்பு தரப்புடன் விரிவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய மீளாய்வுகளுக்கு பின்னர் பொறுப்புடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

 

இச்செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்பு சிறிதளவேனும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பது எமது நிலைப்பாடாகும். இலங்கையில் 30 ஆண்டுகள் நீடித்த பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களும் இன்று சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

 

வடக்கிலும், கிழக்கிலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இருத்தல் வேண்டும் என்பதை அரசாங்கமும் அரச தலைவர்களும் மறக்க கூடாது“ என தெரிவித்தார்.

https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_706.html

  • கருத்துக்கள உறவுகள்

போரில் இறந்த மக்கள் , போராளிகளுக்காக தமிழ் மக்கள் மாவீரர் நாளை கொண்டாடுகிறார்கள். உலகின் பல நாடுகளில் கொண்டாடுகிறார்கள். 
அதெப்படி ஜே வி பி கொண்டாட ஒரு தடையும் இல்லை.( மகிந்த அரசில்) தமிழ் மக்களுக்கு மட்டும் தடை?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.